Sunday, April 28, 2024

    Saththamindri Muththamidu

    அத்தியாயம் பதினேழு : சீரும் சிறப்புமாய், யாரும் சீர் செய்யாமலேயே மீனாக்ஷியின் விஷேஷம் எந்த வித பிரச்சனைகளுமின்றி சௌக்கியமாய் நடந்து முடிந்தது. கணவனும் மனைவியும் அகத்தின் அழகை முகத்தினில் காண்பிக்காமல் இருப்பதில் கை தேர்ந்தவர்கள் என்பதால் விஷேஷம் நன்றாகவே நடந்தது. விருந்தினர்களை உபசரிப்பதிலேயே நேரம் சென்று விட்டது. வேறு எதுவும் ஞாபகத்திலேயே இல்லை. அதுவும் ஏன் சீர்...
    ஃபிரிட்ஜில் இருந்து துளசி பால் எடுத்து காய்ச்சும் வரை கதவில் சாய்ந்து அவளை பார்த்து நின்றிருந்தான். இதற்கு பால் எடுக்கும் போதே “நான் பால் காய்ச்சட்டுமா?” என்று கேட்டும் இருந்தான். சமையலறையும் திருவும் எதிர் எதிர் துருவங்கள்! கேட்டது அவனா என்ற சிந்தனை இருந்த போதும் அமைதியாய் அவனை தலையசைத்து மறுத்தவள், அவளே செய்தாள். அவளுக்கு மட்டுமல்ல, அவனுக்கும்...
    அத்தியாயம் ஐந்து :   ஆம்! திருவை இன்னும் அது துரத்துகின்றது.  அவனின் கடந்த கால காதல். இப்போது நிச்சயம் அவனுக்கு காதல் இல்லை. ஆனால் குற்ற உணர்ச்சி அதிகம் இருக்கிறது.    மேகநாதனை பார்த்து திருவிற்கு தான் பயம். அவளுக்கு இல்லை, ஷெரினா, அவளின் பெயர். அவளுடைய குடும்பத்தில் அப்பா, அவள், தம்பி மட்டுமே! மேகநாதன் மூன்று பேரையும்...
      “எதுக்கு துளசி இவ்வளவு பிடிவாதம்” என்று அகிலாண்டேஸ்வரி பேச, “அதுதானே எப்பவும் வாங்கற பேச்சு தானே, இப்போ மட்டும் புதுசா என்ன வீராப்பு!” என்று ஷோபனா வெளியே வந்து வாயை விட்டாள். “நீ உள்ள போ முதல்ல” என்று அகிலாண்டேஸ்வரி பொறுக்க முடியாமல் அதட்டினர். ஃபோன் பேசி வந்த திருவிடம் அவனின் முகம் பார்த்தாள். அவன் கோபமாக எங்கோ...
                             கணபதியே அருள்வாய்                            சத்தமின்றி முத்தமிடு அத்தியாயம் ஒன்று : துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும் மெல்லிய குரலில் மீனாக்ஷி பாடிக் கொண்டிருந்தாள் பூஜையறையில். தினமும் கந்த ஷஷ்டி கவசம் முழுதாக சொல்ல வேண்டும் அவளின் அம்மாவின் கட்டளை அது. “மீனா ஸ்கூல்க்கு டைம் ஆச்சு” என்ற துளசியின் குரல் கேட்க, “மா, இப்போ தான்...
    அமைதியாய் அமர்ந்திருந்தாள். “அதுக்காக அவளோட பேசிட்டு இருந்தேன், தொடர்புள இருந்தேன் நினைக்காதே, அப்படி எதுவுமே இல்லை. அவங்கப்பா தம்பி மூலமா அவளுக்கு உதவி செஞ்சேன் அவ்வளவு தான்!” “நீ என்னை விட்டு போயிட்ட, அதுக்கு அப்புறம் ஒரு பத்து பதினஞ்சு நாள்ல தான் அவ இறந்து போயிட்டா. எனக்கு அதுக்கு பிறகு உன்னை வந்து கூப்பிடறதை...
    Tamil Novel அத்தியாயம் மூன்று : அதுவரை வேடிக்கை பார்த்திருந்த கமலநாதன் “நீ என்ன சொல்ல வர்ற திரு, தெளிவா சொல்லு!” என்று வாய் திறக்க, “என்ன சொல்லன்னு தெரியலை சித்தப்பா அதுதான் அவளை அடிச்சேன், நீங்க என் மேல உள்ள அக்கறைல தான் பேசறீங்க இல்லைன்னு சொல்லலை, ஆனாலும் இப்படி பேசறது சரி கிடையாது சித்தப்பா” “இவளை எங்கப்பா...
    அத்தியாயம் பதினாறு : திரு அவளின் கை பிடித்து சில அடிகள் நடக்க வைக்க, தெளிந்தவள் அவனிடமிருந்து கைகளை விலக்கிக் கொண்டு அவளாக நடக்க ஆரம்பிக்க, பார்வை மகளின் புறம் தானாத் திரும்பியது. அடுத்த நிமிடம் உணர்வுக்கு வந்து விட்டாள். ஆம்! மகள் தான் அப்படி அழுது கொண்டிருந்தாளே, மகளை நோக்கி அப்படி வேகமாகச் செல்ல, எதற்கு இப்படி...
    புகழ் உண்ண வரவுமே, மங்கை ஒதுங்கிக்கொள்ள, பொன்னி பரிமாற, அவனோ உண்பதற்கு மட்டுமே வாய் திறந்தான்..  எதுவும் பேசவில்லை.. உண்டுவிட்டு எழுந்து போய்விட, அதற்குமேல் பொன்னியும் மங்கையும் சாப்பிட, மங்கையோ “நீ போ பொன்னி.. நான் முன்னாடி ரூம்ல கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன்..” என்றுவிட, பொன்னி திரும்பவும் அறைக்கு வர, அப்போதும் புகழேந்தியின் எண்ணம் எல்லாம்...
    துளசிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை, ஆனால் ஏதாவது செய்ய வேண்டும்! யோசித்தே ஒரு நிமிடத்தை ஓட்டினாள். திருவின் பொறுமை பறந்தது.   துளசி அடிக்கவாவது செய் இந்த இடத்தை விட்டு நகர்றேன். “அவனை பார்க்கணும்” என்று மகனை காண்பித்தான். “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீங்க தான் எங்களை கூட்டிப் போகலை சொன்னீங்க தானே!” என்று முறுக்கி நின்றாள். திருவும் பார்த்து...
    அத்தியாயம் இருபத்தி நான்கு: “பின்னே நான் விழுந்திருந்தா உங்களுக்கு மட்டும் தான் டென்ஷனா? எனக்கு இல்லையா? எதனால இப்படி ஆச்சு? உங்களால!  எத்தனை தடவை வீட்டுக்கு வாசலுக்கும் நடந்தேன் தெரியுமா? இனிமே இப்படி பண்ணுனீங்க..!” என்று சொல்லிவிட்டு அவனை ஒரு பார்வை பார்த்தாள். “அம்மாடி, என்னோட பல வருஷ கனவு நனவாச்சு! துளசி என்கூட சண்டை போடறா!...
    அத்தியாயம் இருபத்தி ஐந்து : இங்கே இருந்தால் அதையும் இதையும் செய்து கொண்டிருப்பாள் என்று திருநீர்வண்ணன் துளசியை ஹாஸ்பிடலில் இருந்து அழைத்து வந்த இரண்டே நாட்களில் புண்ணியாதானம் செய்து அவளின் அம்மா வீட்டிற்கு அனுப்பியிருந்தான். ஆனால் மகனுக்கு பெயர் மட்டும் இன்னம் சூட்டவில்லை. அதுவரை அவனை குட்டி திரு என்றே எல்லோரும் அழைத்தனர் குழந்தை அவனை போலவே...
    அத்தியாயம் பதினொன்று : அணைத்து இருந்தவளை மெதுவாக விளக்கியவன், “உங்க வீட்ல வேற இதுக்கு ஒரு டாக்டர் இருக்குறா? உங்கம்மாக்கும் தெரியலை?” என்று குறைபட்டான்.   “ரெண்டு மாசமா அவ வீட்ல இல்லை, எங்கயோ திருநெல்வேலி பக்கம் அவளுக்கு போஸ்டிங் போட்டிருக்காங்க, இதோட அவளுக்கு படிப்பும் முடியுது! எனக்கே தெரியலை அம்மாக்கு எப்படி தெரியும்!”    “நான் யாரையும்...
    அத்தியாயம் பதினைந்து : துளசி உள்ளே வந்து அவனுக்கு காஃபி கொடுக்கும் வரை கிட்ட தட்ட கால் மணிநேரம் அப்படியே அமர்ந்திருந்தான். அம்மா சொன்ன “கொஞ்சுவாங்களா” என்ற வார்த்தையை மனதிற்குள் அசை போட்டபடி, பல சமயம் தோன்றியிருந்த ஏக்கம் அவனுள் அப்போது ஞாபகம் வந்து அவனை அசைத்து இருந்தது.   அவள் வந்து காஃபி கொடுக்கவும் ஒரு முறைப்புடன்...
    “வெச்சிடாதடி” என்று கத்தியவன் கைகளில்  இருந்தது கேலண்டர்.  நாளை நல்ல நாளா என்று பார்த்துக் கொண்டிருந்தான் “வைக்காம என்ன பண்றதாம்” என்று திருவைப் போல முறைப்பாய் பேசினாள். “என்ன பண்ணவா? நான் பேசறதை கேளு!” “கேட்கற மாதிரியா பேசறீங்க” என சலிக்க, “ஏன்? ஏன் கேட்க முடியாது?” என்று எகிறினான். “ரகசியம் எல்லாம் இப்படி பப்ளிக்கா பேசுவாங்களா?” “நீயும் நானும் பேசினா அது...
    அத்தியாயம் இருபத்தி மூன்று : இரவு எட்டு மணியாகிவிட துளசி வாசலில் ஒரு பார்வை பார்ப்பதும், பின்பு உள்ளே செல்வதுமாக சமையலைறைக்கும் கூடத்திற்கும் நடந்து கொண்டிருந்தாள். ஒரு இடத்தில் தடுமாறி பின் தன்னை ஸ்திரமாக்கி கொள்ள, அப்போது பார்த்து அகிலாண்டேஸ்வரி அவளை பார்த்து விட்டார். அவருக்கு அப்படியே ரத்த கொதிப்பு எகிறி விட்டது. சிறிது நேரம் தன்னை...
    வீடு வந்து போது எட்டரை மணி, ஆட்டோவில் இருவரும் வந்து இறங்கிய போது வீடே அதிசயமாய் பார்த்தது. சாரதா, சித்ரா, ராதா என்று அந்த வீட்டின் பெண்கள் எல்லாம் வந்திருக்க, “வாங்க சித்தி, வாங்க அண்ணி” என்றாள் எதுவும் முகத்தினில் காண்பித்தது கொள்ளாமல். மேகநாதன் வீடு சென்று அழைக்கவில்லை என்றாலும், தொலைபேசியில் சொல்லியிருக்க, அவர்களும் உடனே வந்து...
    அத்தியாயம் பத்தொன்பது :    துளசியின் பிறந்த வீட்டினர் அன்று மாலை கிளம்பிவிட, இப்போது யாருமில்லை எப்போதும் போல வீட்டினர் மட்டுமே! திரு அவர்கள் கிளம்பியதும் மில்லுக்கு சென்று விட்டான். புது உத்வேகமே அவனிடம்! அங்கு சென்று வேலைகளை பார்த்து அவன் வீடு வந்த போது, இரவு வெகு நேரமாகிவிட்டது. துளசியை தவிர ஹாலில் யாருமில்லை. திரு வந்ததும் உணவு எடுத்து...
    அத்தியாயம் பன்னிரண்டு : நன்கு உறங்கிவிட்டவளுக்கு அர்த்த ராத்திரியில் விழிப்பு வர, விழித்து பார்த்தவளுக்கு சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்த திரு தான் கண்களில் பட்டான். வேகமாக எழுந்து அமர, “எதுக்கு இப்படி வேகமா எழற, மெதுவா பார்த்து எழணும்” என்று அதட்டினான். “ம்ம்” என்பது போல தலையாட்டியவள், எழுந்து வெளியே சென்று மகளை பார்த்து வந்து மீண்டும் படுக்கையில்...
    அத்தியாயம் பதினெட்டு : அருகில் வந்தவன் “என்ன” என்றான். துளசி என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் “ஒன்னுமில்லையே” என்றாள் அவசரமாக. சில நொடிகள் அவளை உற்று பார்க்க, துளசியின் தலை தானாகக் கவிழ்ந்தது. பின்பு மீனாவின் புறம் திரும்பியவன் “சாப்பிட போகலாமா” என்றான். “மா வா” என்று துளசியின் கைபிடித்தாள் மீனா. துளசி திருவின் முகம் பார்க்க, “போ” என்பது போல...
    error: Content is protected !!