Sunday, April 28, 2024

    Saththamindri Muththamidu

    பிரசன்னாவின் கைபேசியில் இருந்து தான் அழைத்தால். பிரசன்னாவின் நம்பர் திருவிடம் இருந்தது. மனைவியின் நினைவில் வெகு நேரம் உறங்காமல் இருந்தவன், மூன்று மணிக்கு மேல் தான் உறங்கியிருந்தான். அதனால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். விடாமல் இரண்டு மூன்று முறை அடித்த பிறகு தான் எடுத்தான். “ஹல்லோ” என்ற குரலிலேயே அவன் உறக்கம் தெளியவில்லை என்று துளசிக்கு...
    “ம்ம், ஒட்டிக்கிட்டு படுத்து என்ன பண்ண? கட்டிக்கிட்டு படுத்தா கூட பரவாயில்லை!” என்று மெல்ல அவனுக்கு அவனே பேசிக் கொள்வது போல முனகினான். “ஒட்டிக்காம எப்படி கட்டிக்கறதாம்?” என்று மெல்லிய குரலில் துளசியும் முனக, “இப்படி!” என்று திரு திரும்பி அவளை அணைக்க, “ஒட்டிக்கிட்டு தானே கட்டிட்கிடீங்க!” என்று இன்னும் கிசு கிசுப்பாய் துளசி ரகசியம் பேசினாள். “நான் எங்க...
    அத்தியாயம் பத்து : துளசி வரும் போது காலை பத்து மணி, அதுவரையிலும் திரு மகளை பார்ப்பதும் பின் வந்து சோபாவில் அமர்வதுமாக இருக்க, “என்ன இது, இந்த அண்ணன் என்ன பண்றாரு? குட்டி போட்ட பூனை மாதிரி சுத்தறாரு!” என்று தனம் எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தாள். வெங்கடேஷ் வெளியே கிளம்பியிருந்தான், அவனுக்கு தெரியவில்லை, திருவும் சொல்லவில்லை!...
    அத்தியாயம் இருபத்தி ஒன்று:   திரு துளசியை கண்ணுக்குள் வைத்து தாங்கினான் என்று சொல்லவே முடியாது. ஏனென்றால் அவர்கள் முந்தைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி இருந்தனர். அதாகப்பட்டது முன்பு போல காலையில் எழுந்து திரு ஷட்டில் ப்ராக்டிஸ் சென்றான். ஆனால் நேரமாக வந்து மீனாக்ஷியை அவனே பள்ளிக்கு கொண்டு விட்டு வந்து குளித்து உண்டு மில்லுக்கு...
    பின் மகளை பார்த்து முறைக்க, மீனாக்ஷி வாய் மேல் சிரிக்க மாட்டேன் என்பது போல கைவைத்து அப்போதும் சிரித்துக் கொண்டிருக்க, அவளின் சிரிப்பு துளசியையும் தொற்ற, “போடி” என்று சலிப்பவள் போல அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டாள் புன்னகை முகத்தோடு. அவள் நடக்க, “மா, நீங்க சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்கீங்க” என்று மீனாக்ஷி...
    அத்தியாயம் பதினொன்று : அணைத்து இருந்தவளை மெதுவாக விளக்கியவன், “உங்க வீட்ல வேற இதுக்கு ஒரு டாக்டர் இருக்குறா? உங்கம்மாக்கும் தெரியலை?” என்று குறைபட்டான்.   “ரெண்டு மாசமா அவ வீட்ல இல்லை, எங்கயோ திருநெல்வேலி பக்கம் அவளுக்கு போஸ்டிங் போட்டிருக்காங்க, இதோட அவளுக்கு படிப்பும் முடியுது! எனக்கே தெரியலை அம்மாக்கு எப்படி தெரியும்!”    “நான் யாரையும்...
    ஃபிரிட்ஜில் இருந்து துளசி பால் எடுத்து காய்ச்சும் வரை கதவில் சாய்ந்து அவளை பார்த்து நின்றிருந்தான். இதற்கு பால் எடுக்கும் போதே “நான் பால் காய்ச்சட்டுமா?” என்று கேட்டும் இருந்தான். சமையலறையும் திருவும் எதிர் எதிர் துருவங்கள்! கேட்டது அவனா என்ற சிந்தனை இருந்த போதும் அமைதியாய் அவனை தலையசைத்து மறுத்தவள், அவளே செய்தாள். அவளுக்கு மட்டுமல்ல, அவனுக்கும்...
    அத்தியாயம் இருபத்தி ஐந்து : இங்கே இருந்தால் அதையும் இதையும் செய்து கொண்டிருப்பாள் என்று திருநீர்வண்ணன் துளசியை ஹாஸ்பிடலில் இருந்து அழைத்து வந்த இரண்டே நாட்களில் புண்ணியாதானம் செய்து அவளின் அம்மா வீட்டிற்கு அனுப்பியிருந்தான். ஆனால் மகனுக்கு பெயர் மட்டும் இன்னம் சூட்டவில்லை. அதுவரை அவனை குட்டி திரு என்றே எல்லோரும் அழைத்தனர் குழந்தை அவனை போலவே...
    ஏனோ அன்று மனதே சரியில்லை. துளசி மீனாட்சியை எழுப்பி நிறுத்த முயற்சி செய்து கொண்டிருப்பதைப் பார்த்து, விரைந்து வந்து மகளை நிறுத்தியவன். அவளின் இரண்டு முட்டியிலும் பெரிய கட்டை பார்த்ததும் டென்ஷன் ஆகிவிட்டான். திரும்பவும் அவளை திட்டினான், “நீ பார்த்து வராமா பாரு எவ்வளவு காயம்னு” என்று அதட்டினான். துளசி அவளின் இன்னொரு பக்கம் பிடித்திருப்பதை பார்த்து...
    அத்தியாயம் இருபது : அடுத்த நாளும் மீனாட்சியை திரு தான் பள்ளிக்கு கொண்டு போய் விட்டான். துளசியின் முகம் பார்த்தே அவளை எதுவும் பேசவில்லை, எதுவும் தொந்தரவு செய்யவில்லை. ஆம், இரவு சரியாக உறக்கம் இல்லாமல் முகம் ஒரு மாதிரி இருக்க கண்கள் சற்று வீங்கி இருக்க, பார்த்தவுடனேயே “உடம்பு சரியில்லையா துளசி” என்றான். “இல்லை” என்பது போல...
                             கணபதியே அருள்வாய்                            சத்தமின்றி முத்தமிடு அத்தியாயம் ஒன்று : துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும் மெல்லிய குரலில் மீனாக்ஷி பாடிக் கொண்டிருந்தாள் பூஜையறையில். தினமும் கந்த ஷஷ்டி கவசம் முழுதாக சொல்ல வேண்டும் அவளின் அம்மாவின் கட்டளை அது. “மீனா ஸ்கூல்க்கு டைம் ஆச்சு” என்ற துளசியின் குரல் கேட்க, “மா, இப்போ தான்...
    “பாட்டி கிட்ட சண்டை போடுவியா? எதிர்த்து பேசுவியா? அவங்க எவ்வளவு வருத்தப்பட்டாங்க தெரியுமா? வந்ததும் சாரி கேட்கற! என்ன பண்ணிட்டு இருக்க நீ?” என்று ஆரம்பித்து மீனாக்ஷியை ஒரு வழியாக்கி, திரும்பி துளசியை பார்க்க “எனக்கு ஒன்னும் ஆகலை” என்று அவள் அவசரமாய் சொல்ல, “எதாவது ஆகியிருந்தா என்னடி செஞ்சிருப்ப?” என்று அவன் கத்திய கத்தலுக்கு துளசியை...
    அத்தியாயம் இருபத்தி இரண்டு : அன்று கட்டடம் ஆரம்பிப்பதற்கான பூமி பூஜை, மேகநாதனின் குடும்பத்தில் எல்லோரும் ஆஜர்! துளசியின் வீட்டிலும் எல்லோரும் ஆஜர். ஒரு மாதத்திற்கு முன்பு துளசி பேரில் நிலம் பதிவாகியிருக்க, லோன் சேங்க்ஷன் ஆகியிருக்க, இதோ வேலை ஆரம்பிப்பதற்கான பூமி பூஜை. துளசிக்கு இப்போது ஏழாம் மாதம், வயிறு நன்றாகவே தெரிய ஆரம்பித்து இருந்தது. வேலவன், ரத்னா,...
    அத்தியாயம் இருபத்தி நான்கு: “பின்னே நான் விழுந்திருந்தா உங்களுக்கு மட்டும் தான் டென்ஷனா? எனக்கு இல்லையா? எதனால இப்படி ஆச்சு? உங்களால!  எத்தனை தடவை வீட்டுக்கு வாசலுக்கும் நடந்தேன் தெரியுமா? இனிமே இப்படி பண்ணுனீங்க..!” என்று சொல்லிவிட்டு அவனை ஒரு பார்வை பார்த்தாள். “அம்மாடி, என்னோட பல வருஷ கனவு நனவாச்சு! துளசி என்கூட சண்டை போடறா!...
    அத்தியாயம் இருபத்தி மூன்று : இரவு எட்டு மணியாகிவிட துளசி வாசலில் ஒரு பார்வை பார்ப்பதும், பின்பு உள்ளே செல்வதுமாக சமையலைறைக்கும் கூடத்திற்கும் நடந்து கொண்டிருந்தாள். ஒரு இடத்தில் தடுமாறி பின் தன்னை ஸ்திரமாக்கி கொள்ள, அப்போது பார்த்து அகிலாண்டேஸ்வரி அவளை பார்த்து விட்டார். அவருக்கு அப்படியே ரத்த கொதிப்பு எகிறி விட்டது. சிறிது நேரம் தன்னை...
    “தெரியலை, மாமா ஒரு மாதிரி இருக்குன்னு போய் படுத்துக்கிட்டார்” என்று வசுமதி சொல்லவும்,   “ஏன், என்ன ஆச்சு?” என்றனர் இருவரும். நடந்தவைகளை சொல்ல “நேத்து தானே சொன்னோம் இவளுக்கு அறிவிருக்குதா இல்லையா” என்று எல்லோரும் நேரடியாக ஷோபனாவை திட்டினர். அதற்குள் நாகேந்திரன் சாரதாவோடு வந்திருந்தார், வந்தவரிடம் அகிலாண்டேஸ்வரி சண்டைக்கு கிளம்ப, திருவும் வெங்கடேஷும் அப்பாவிற்கு உடல் நிலை...
    அத்தியாயம் பதினெட்டு : அருகில் வந்தவன் “என்ன” என்றான். துளசி என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் “ஒன்னுமில்லையே” என்றாள் அவசரமாக. சில நொடிகள் அவளை உற்று பார்க்க, துளசியின் தலை தானாகக் கவிழ்ந்தது. பின்பு மீனாவின் புறம் திரும்பியவன் “சாப்பிட போகலாமா” என்றான். “மா வா” என்று துளசியின் கைபிடித்தாள் மீனா. துளசி திருவின் முகம் பார்க்க, “போ” என்பது போல...
    இவ்வளவு பேசும் போதும் நாகேதிரனும் தருணும் அங்கேயே தான் இருந்தனர். “அச்சோ, இந்த பெண் பேரிலா? வராமல் இருந்திருக்கலாமோ!” என்று தோன்றிய போதும் வராமல் இருந்திருக்க முடியாது என்று தெரியும். திரு இருவரின் தொழிலையே முடக்கி இருந்தான். “நீங்கள் என் பணத்தை திரும்ப கொடுக்காமல் செயல் பட முடியாது” என்பது போல, சத்தம் மட்டும் தான் போடுவான்...
    அத்தியாயம் ஒன்பது : “என்னவாகிற்று எனக்கு?” என்று துளசி நினைக்காத நாளே இல்லை. ஆம்! அந்த நிமிடம் என்னவாகிற்று என்று தெரியவில்லை வீட்டை விட்டு வந்து விட்டாள். வந்து இதோ மூன்று மாதம் ஆகிவிட்டது. வெங்கடேஷ் பின்னோடு வந்து அழைத்த போது கையினில் காசில்லாததால் “என்னை பஸ் வெச்சி விடுங்க” என்று மட்டும் சொல்ல, “சரி வாங்க” என்று...
    அத்தியாயம் பத்தொன்பது :    துளசியின் பிறந்த வீட்டினர் அன்று மாலை கிளம்பிவிட, இப்போது யாருமில்லை எப்போதும் போல வீட்டினர் மட்டுமே! திரு அவர்கள் கிளம்பியதும் மில்லுக்கு சென்று விட்டான். புது உத்வேகமே அவனிடம்! அங்கு சென்று வேலைகளை பார்த்து அவன் வீடு வந்த போது, இரவு வெகு நேரமாகிவிட்டது. துளசியை தவிர ஹாலில் யாருமில்லை. திரு வந்ததும் உணவு எடுத்து...
    error: Content is protected !!