Tamil Novels
அத்தியாயம் 06
அந்த முன்மாலைப் பொழுதில் நெல்லை மாநகரகாவல் கண்காணிப்பாளர் அலுவலகம் பரபரப்பாக இருந்தது. காரணம், ஒரு ஆள்கடத்தல் புகாரில் நாங்கள் தான் குற்றவாளிகள் என்று மூன்று நபர்கள் தாங்களாகவே வந்து சரணடைந்திருந்தது தான். இதில் சிறப்பு என்னவென்றால் இன்று காலையில் தான் அந்த வழக்கு பதிவாகியிருந்தது.
ஆமாம்… எங்கள் மகனைக் காணவில்லை கண்டுபிடித்து தாருங்கள் என்று...
அத்தியாயம் 05
வழக்கம் போல அதிகாலையிலேயே விழிப்பு வந்துவிட்டது நந்தினிக்கு. தன்னருகில் படுத்திருந்த அம்மாவையும் தங்கையும் பார்த்தாள். நிர்மலமான முகத்தோடு ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
இருந்த ஒற்றைப் படுக்கையறையில் தரையில் விரித்த பாயும் தலையணையும் தான் அவர்கள் படுக்கை. திலகத்தின் ஏனைய இரு பெண்கள் வீட்டில் இருக்கும்போதும் ஐவராக இதே படுக்கை அறையில் இப்படித்தான் வரிசையாக படுத்திருப்பார்கள்....
அத்தியாயம் 04
திருநெல்வேலி நகரை சுற்றி ரோந்து வந்து கொண்டிருந்த போலீஸ் வாகனத்தில் அமர்ந்திருந்தாள் நந்தினி. மாலை நான்கு மணிவரை அலுவலகத்தில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தவள், நகரின் மாலைநேர நடவடிக்கைகளை அவதானிக்கும் பொருட்டு கிளம்பி வந்திருந்தாள்.
முன்பக்கம் ட்ரைவர் சீட்டுக்கு அருகே நந்தினி அமர்ந்திருக்க, பின்னிருக்கையில் இன்னும் இரண்டு போலீஸ் அதிகாரிகள் அமர்ந்திருந்தார்கள். இருவருமே முப்பத்தைந்து...
அத்தியாயம் 03
“வாழ்த்துகள் மேடம், நீண்ட காலத்துக்கு பிறகு ஒரு பெண் ஐபிஎஸ் ஆஃபீஸரை நம்ம நெல்லை சீமை சந்திக்குது.” நந்தினி காவல்துறை கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்ததும் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஏற்பாடாகியிருக்க, நிருபர்கள் சார்பாக வாழ்த்துகள் வந்தது.
“தேங்க்யூ.” காக்கிச்சட்டைக்கென்றே பிறந்தவள் போல, அணிந்திருந்த சீருடை அத்துணை கம்பீரத்தைக் கொடுக்க தலையை லேசாக அசைத்து வாழ்த்தை ஏற்றுக்கொண்டாள்...
அம்மாவுடைய ஸ்கூட்டியில் வீட்டில் வந்து இறங்கினாள் நந்தினி. நேரம் பிற்பகல் இரண்டு மணி.
ஓய்வு எடு என்று காலையில் திலகம் எவ்வளவோ சொல்லியும் கேட்டுக்கொள்ளாமல் அவரோடு தையலகத்திற்கு கிளம்பி சென்றுவிட்டாள்.
சிறுவயதில் எத்தனையோ நாட்கள் தாயோடு கழித்த இடம். சீசன் நேரங்களில் அம்மாவுக்கு உதவி செய்தது எல்லாம் உண்டு. இவ்வளவு ஏன்? திலகத்தின் பெண்பிள்ளைகள் நால்வருக்கும் அடிப்படை...
அம்மாவுடைய ஸ்கூட்டியில் வீட்டில் வந்து இறங்கினாள் நந்தினி. நேரம் பிற்பகல் இரண்டு மணி.
ஓய்வு எடு என்று காலையில் திலகம் எவ்வளவோ சொல்லியும் கேட்டுக்கொள்ளாமல் அவரோடு தையலகத்திற்கு கிளம்பி சென்றுவிட்டாள்.
சிறுவயதில் எத்தனையோ நாட்கள் தாயோடு கழித்த இடம். சீசன் நேரங்களில் அம்மாவுக்கு உதவி செய்தது எல்லாம் உண்டு. இவ்வளவு ஏன்? திலகத்தின் பெண்பிள்ளைகள்...
அத்தியாயம் 02
ராஜவேலு. இதுதான் திலகத்தின் கணவனின் பெயர்.
இருவருக்கும் காதல் திருமணம் தான். அதுவும் கலப்புத் திருமணம். ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் வேறு.
திலகத்தின் திருமணத்தை ஏற்றுக்கொள்ளாத அவரின் பெற்றவர்களும், உடன்பிறந்தவர்களும் அவரைத் தள்ளிவைத்து தள்ளி நின்று கொண்டார்கள்.
ஆனால் ராஜவேலுவின் திருமணத்தில் தங்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும், அவருடைய குடும்பத்தாரால் அவரிடமிருந்து தள்ளி நிற்க முடியவில்லை. காரணம்...
அத்தியாயம் 01
தன்னுடைய தொடர் ஓட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக்கொண்டு இளைப்பாறியபடி நின்றது அந்த சென்னை எக்ஸ்பிரஸ். இடம், திருநெல்வேலி ஜங்ஷன் ரெயில் நிலையம். நேரம் காலை ஏழு மணி.
இதுவரையிலும் பொறுமையாக இருந்ததே பெரிய விஷயம் என்பதுபோல அடித்துப் பிடித்துக் கொண்டு தொடர்வண்டியிலிருந்து இறங்கத் தொடங்கினார்கள் பயணிகள். அப்படி எந்த அவசரமும் இன்றி நிதானமாக இறங்கினாள் நம்...
மங்கையின் தேடுதல் இன்னும் நிறைவு பெறாமல் நிற்க வரலக்ஷ்மியும் வெண்ணிலாவும் அமைதியாக அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டனர். ஷோரூமில் ஓடிக் கொண்டிருந்த தொலைக்காட்சியில் வந்த விளம்பரங்கள் கூட சுவாரசியமாக இருந்தது இருவருக்கும். அந்த அளவிற்கு மங்கை அவர்களை மட்டுமின்றி அங்கிருந்த கடை சிப்பந்திகளையும் சோதித்துக் கொண்டிருந்தார். அத்தனை கேள்விகள் அத்தனை வாக்குவாதம்...
அத்தியாயம் 40:
எதுக்குடா இப்படி கத்துற...அவளே வரா பாரு என்றதும் தான் அந்த பக்கம் திரும்பி பார்த்தான்...
பாப்பா தூங்கிட்டா அவளுக்கு பெட்ஷீட் எடுக்க போனேன்...
Ohh அப்போ வழக்கம் போல் ஓடி போய்ட்டேன்னு நெனச்சிங்களா என்றதும் ,
அவன் ஆமா என்றான்...
போற ஒரு இடத்தையும்,போக முடியாத அளவுக்கு பண்ணி வெச்சிடிங்க இதுக்கு மேல எங்க போறது என்று சலித்து...
"என்ன நிலா தானா சிரிக்கிற"வரலக்ஷ்மியின் குரலில் சுயம் திரும்பியவள் "எதுவும் இல்லை த்தை"என்று வேலையை கவனித்தாள்.
வரலக்ஷ்மிக்கு அதில் நிறைவு தான். திருமணம் ஆகி வந்ததில் இருந்த வெண்ணிலாவின் முகம் தற்போது இன்னும் தெளிவாய் வால்பாறையில் இருந்தது போல இருக்க, தன்னை அதிரடித் திருமணத்தின் தாக்கத்தில் இருந்து மீட்டுக்...
அத்தியாயம் 21:
அவன் அப்படி அவளிடம் கூறிவிட்டு அவளை கடந்து ரூமிற்கு சென்று விட்டான்..நான் தான் இவங்களோடு இருக்க வேண்டும் என்று கேட்டேன் ஆனால், இப்போ எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லையே,வீட்டில் இருக்கும் எல்லோரையும் எப்படி சமாளிப்பது என்றும் அவளுக்கு புரியவில்லை..அனைத்தையும் யோசித்தவளுக்கு தலை பாரமாக இருப்பது போல் தோன்றியது..குளித்து விட்டு எதுவாக இருந்தாலும் பொறுமையாக...
சூரியன் 31
சஞ்சய் குளித்து ஆடையை போட்டு கண்ணாடியை பார்த்து தலைகோதிக் கொண்டிருந்தான்..
பிரியசகியை கண்ணாடியில் கண்டு புன்னகைக்க, அவள் எந்த உணர்வையும் காட்டாமல் பிரசாத்தும் ஜாவும் வந்திருக்காங்க...என்று சொல்லி விட்டு அவள் நகர, பெருமூச்சுடன் அவன் வெளியே வந்தான்.
பிரியசகி இருவருக்கும் காஃபி போட அடுக்கலைக்குள் செல்ல, அவர்களை அமர சொல்லி தன் பெற்றோரையும் அமர சொன்னான்....
சூரியன் 30
ராக்கி ஒருவனை கடிக்க, ஷ்ஷ்ஷ்ஆஆ.... அவன் அலறினான்.
“ஒரு குழந்தையை பார்த்துக்க முடியாதாடா?” தன் ஆட்களிடம் சத்தமிட்ட ஹர்சவர்தன், “ஓ! மாம்...உன்னோட மாம்மா? சஞ்சய் மகனா நீ?”
ஆமாடா பரதேசி..
உங்கள் இருவரையும் தான் சஞ்சய் தத்து எடுத்துருக்கானா? பசங்க இப்ப தான் சொன்னாங்க..
திமிருடனான பார்வையை ஹரிஹரன் அவனை நோக்கி வீசினான்.
உன்னை கட்டிப் போட்டு வச்சும் எவ்வளவு...
தாமரைக்கு கட்டுக்கடங்காத கோவம். கனியை பார்த்தவர், “சொல்லுடி, எதுக்கு கல்யாணம் வேணாம்னு சொல்ற, மனசுல உள்ளதை இப்பவே சொல்லணும்” என கட்டளையாக சொன்னார்.
பெரியவர்களுக்கு அடங்கியே வளர்ந்த கனியால் அத்தையை மீற முடியவில்லை.
“எனக்கு தர்மா மாமாவைத்தான் பிடிச்சிருக்கு, மாமாவைத்தான் கட்டிப்பேன்” என்றாள்.
தலையில் கை வைத்துக்கொண்டு அமர்ந்து விட்டான் தர்மா.
பேத்தி சொல்வதை கிரகித்துக் கொண்ட பாட்டி, அவளின்...
சூரியன் 29
“சஞ்சய், என்ன பண்ண?” சந்திரசேகர் சினமுடன் கேட்டார்.
சார்...அவன் தயங்கி அவனறையை பார்த்தான்.
பிரியா வெளிய வாம்மா. சஞ்சய் எங்கும் போக மாட்டான். அந்த ஹர்சா நம்ம சென்னைக்கு ஏற்கனவே கிளம்பீட்டான்..
“சார்...” திகைத்தான் சஞ்சய்.
ஆமா சஞ்சய், நாங்க அவனிடம் பேசினோம். அவன் சேதுவையும் சமரனையும் இங்கே அழைச்சிட்டு வாரானாம். அவனை டிராக் பண்ணீட்டு தான் இருக்காங்க...
சூரியன் 28
மறுநாள் காலை விடியலில் உடல் பாரமாக இருப்பது போல பிரியசகிக்கு தோன்றியது. விழிக்க முடியாமல் விழித்த அவளை அணைத்து படுத்திருந்தான் சஞ்சய்.
“சஞ்சய்...” கண்ணை கசக்கி அவனிடமிருந்து நகர முற்பட்டாள்.
ப்ளீஸ் சகி. கொஞ்ச நேரம் தூங்கலாமே!
நேரத்தை பார்த்தவள், அச்சோ! ஏற்கனவே நேரமாகிடுச்சு. நவீன் தயாராகி வந்துருவான் சஞ்சய். பிரேக்பாஸ்ட் ரெடி பண்ணனும்..
அம்மா பார்த்துப்பாங்க சகி....
சூரியன் 27
ரக்சன் சஞ்சயிடம் பேசி வெளியே வர, ஹரிஹரன் அவனை தள்ளி இழுத்து சென்றான்.
இனியவன் அவ்விடம் வந்து, “எதுக்கு வரச் சொன்ன?” ஹரிஹரனிடம் கேட்டான்.
தனியா பேசணும். உங்க அறைக்கு போகலாமா? அவன் ரக்சனை பார்க்க, போகலாம் என்று அவர்கள் சென்றனர்.
உள்ளே சென்றவுடன் ஹரிஹரன் அவன் பாக்கெட்டிலிருந்து அலைபேசியில் இருக்கும் கேலரி புகைப்படத்தை அவர்கள் முன்...
சூரியன் 26
“அம்மாவா? பிரியாவும் நீயும் போனால் அவளை அம்மானு யாராவது நம்புவாங்களாடா?” பிரசாத் சத்தமிட்டான்.
சகி கருவுற்று என்னோட அம்மாவை பார்க்க வரும் போது நான் சின்னப்பையன் தான். அந்த குழந்தை அன்று கலையாமல் இருந்தால் என்னை விட கொஞ்சம் சின்னவனா இருந்திருப்பான்..ஏன் சகி? நான் உன்னை அம்மான்னு யாரிடமும் கூறினால் உனக்கு பிடிக்காதா? அவளை...
சூரியன் 25
கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டிருந்த கடைவீதிகள் அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தது.
பணியின் காரணமாக பிரசாத் மட்டும் அவர்களுடன் வரவில்லை. உணவின் நறுமணத்தில், "அண்ணா" வயிற்றை தடவினாள் இந்துஜா.
பொறித்த மீன், ஸ்பிரிங் பொட்டேட்டோ, கார்ன், ஐஸ்கிரீம் இன்னும் பல வாங்கி ஓரிடம் அமர்ந்தனர்.
இந்துஜா அவளுக்குரிய உணவை தனியே எடுத்து நாகேந்திரன் கரத்தில் திணித்து நவீனை இழுத்து மோமோஸ்...