அத்தியாயம் 40:

எதுக்குடா இப்படி கத்துற…அவளே வரா பாரு என்றதும் தான் அந்த பக்கம் திரும்பி பார்த்தான்…

பாப்பா தூங்கிட்டா அவளுக்கு பெட்ஷீட் எடுக்க போனேன்…

Ohh அப்போ வழக்கம் போல் ஓடி போய்ட்டேன்னு நெனச்சிங்களா என்றதும் ,

அவன் ஆமா என்றான்…

போற ஒரு இடத்தையும்,போக முடியாத அளவுக்கு பண்ணி வெச்சிடிங்க இதுக்கு மேல எங்க போறது என்று சலித்து கொண்டாள் …

அஞ்சலி அண்ணா நான் இருக்கும்போது இப்படி ஒரு வார்த்தை நீ சொல்லவே கூடாது சரியா …

என்ன சொல்றிங்க அண்ணா!!

இங்கு இருந்து பக்கத்து வீடு தெரியுதா ??என்று கேட்டவனை முறைத்தாள்…

என்ன அஞ்சலி தெரிலையா சரி விடு என்றான்…

என்ன சொல்றிங்க தெளிவா சொல்லுங்க …

எப்படி தான் நீ collector ஆனாயோ??நம்ம தமிழ் நாடு GOVERNMENT ரொம்ப  பாவம் போ..

அண்ணா..

அட அஞ்சலி நாங்க பக்கத்து வீட்டுக்கு வந்துட்டோம் என்றாள் சம்யுக்தா…

நிஜமாவா…

இருவரும் ஆமா என்றனர்..

உன்னை வர வைக்க நாங்க எல்லாரும் மூளைய கசக்கி யோசிச்சி போட்ட பிளான் தான் இது சந்தோசமா என்றதும்,

அவள் கண்ணில் நீர் கோர்த்தது…

சம்யு நீ கூட சொல்லல போ..

சொல்லிருந்தா நீ எங்க கூட கிளம்பி வந்துருப்பியா ??கிழவி ஆகர வரை அங்கயே அழுதுகிட்டு தான் இருந்துருப்ப…

அது என்னமோ உண்மை தான் அஜய்..

அப்போது பிரகாஷ் அஞ்சலியை தாபமாக பார்ப்பது அஜய்க்கு நன்கு புரிந்தது…

இவனுங்க ஒரு விவஸ்த்தை கெட்டவனுங்க எங்க பார்த்தாலும் romance பண்ண வேண்டியது..

வா சம்யு நம்ம உள்ளே போவோம்…நம்ம ரொம்ப டிசென்ட் COUPLES ரூமுக்குள்ள போயிட்டு romance பண்ணலாம் என்றதும்,

சம்யு,நேத்து வாங்கின அடி நியாபகம் இல்லையா??திரும்பவும் வாங்குரியா??என்று அவனை துரத்தினாள்…

அவர்கள் இருவரும் உள்ளே அடித்து கொண்டே செல்வதை பார்த்தவர்கள்,இருவரும் ரூமுக்கு செல்ல எத்தனிக்கும்போது அஞ்சுவை தூக்கிக்கொண்டு ரூமிற்கு சென்றான்….

டேய் பிரகாஷ் அஞ்சலியை எறக்கி விட்டுட்டு என்னை காப்பாத்துடா என்ற அஜயை ,

நீ யாரு ?என்று கேட்டுவிட்டு ரூமிற்கு சென்று விட்டான்…

டேய் துரோகி …

இத பாரு சம்யு,இன்னொரு முறை என்னை அடிச்ச உன்னை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது?? என்றவனுக்கு அவள் நிதானமாக குழந்தையை படுக்க வைத்து விட்டு,

“என்ன” என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்டாள்..

“ஒன்னும் இல்லமா தூங்காலமா” என்றான்…

அந்த பயம் இருக்கட்டும்…

ஏன் சம்யு நம்மளும் ஒரு ஜூனியர் ரெடி பண்ணா நல்ல இருக்கும்ல என்றதும் அவளுக்கு ஒரே சிரிப்பு ..இப்போது தைரியமாக அவளின் அருகில் சென்றவன் அவளை அள்ளி கொண்டான் …

அஞ்சலியை தூக்கி சென்றவன் அவளை அமர வைத்து, அவளின் காலுக்கு கீழ் அமர்ந்தவன் அவளின் கால் விரல்களை பிடித்து சொடுக்கு எடுத்து விட்டான்…

என்ன வேணும் பாவாக்கு …

உன்கிட்டா பாவ மன்னிப்பு கேட்கணும் அஞ்சு..

சரி ஓகே மன்னிச்சிட்டேன்…இனி இதை பத்தி நம்ம பேச வேண்டாம்..

PAST IS PAST பாவா…

அப்படியா!!!

இங்க வாங்க என்று இரு கைகளையும் அவனை நோக்கி நீட்டினாள் அதன் பிறகு அவளின் உலகம் அவனாகவும் ,அவனின் உலகம் அவளாகவும் தான் இருந்தது…

தாங்க்ஸ் அஞ்சு!! என்னை மன்னிச்சதுக்கு…

அம்முலு !! இனி என்னை விட்டு போக மட்ட தான!!என்று கேட்கும்போது அவனின் குரல் அழுகையில் கரைந்தது..

“இனி உங்கள விட்டு நான் எங்கயும் போக மாட்டேன்…”

இது சத்தியம் ஆனால் எங்க அண்ணா வீட்டுக்கு கண்டிப்பாக ஓடி போயிருவேன் என்றவளை அவன் மேலும் தன் உலகத்துக்கு அவளை அழைத்து சென்று விட்டான்…

நாட்கள் வேகமாக உருண்டது..இப்போது அஞ்சலி சென்னையில் மாவட்ட ஆட்சியராக இருக்கிறாள் … திருவண்ணமலையில் வேலை செய்து கொண்டு இருந்தவளை இங்கு கொண்டு வந்தது அவளின் அன்பான கணவன் தான்…

காலையில் அலவலகத்திற்கு கிளம்பும் மனைவியை வெச்ச கண்ணு வாங்காமல் கண்ணாடியில். அவள் தலை வாருவதக்கு சிரமப்படும் அழகை பார்த்து கொண்டு இருந்தான்…

முன்பே பேரழகி தான் ,ஆனால் இப்போது எட்டு மாதம் மேடிட்ட வயிற்ரோடு அவளை பார்பதற்கு ரொம்ப பயமாகவும் இருந்தது, ஆனாலும் அழகாக இருந்தாள்…

கஷ்டபடுரானே கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாம் இல்லயா..

ஆமாம் அவர்களுக்கு TWINS அதனால் அவளால் ஏதும் செய்யவே முடியவில்லை …இப்போது எல்லாம் அவனே ஆவளை அழைத்து கொண்டு செல்வதும் திரும்ப கூட்டி வருவதும் வேலையாக இருக்கிறான்..

இப்போது அஜய் பிரகாஷ் PAARTNERSHIP போட்டு வேலை செய்கின்றனர் …அதனால  வேலையை அவனிடம் ஒப்படைத்து விட்டு இவன் அஞ்சலியின் பின்னாலே சுத்தவதை வேலையாக பார்க்கிறான்…

அவளே பல வாட்டி கூறிவிட்டாள்,என்னை பார்க்காம உங்க வேலைய போயிட்டு பாருங்க பாவா …

அதான் சம்யு இருக்காளே!!!அதனால் என்ன நானும் பார்த்து கொள்கிறேன் என்பவனை என்ன செய்தால் தகும் என்று அவள் சென்று விடுவாள்…

அஞ்சலி குழந்தையயை நினைத்து சந்தோசமாக இருந்தாள் ,இருந்தாலும் இவனுக்கு பயம் இருந்து கொண்டே தான் இருந்தது..அதனால் அஜய் நீ போயிட்டு அவளோடு ஒரு மாதம் வீட்டிலே இரு,இந்த company பக்கம் வந்துறாத என்றதும் அவனுக்கு அப்படி ஒரு சந்தோஷம்..

நன்றி நண்பா…ஒரு காலத்துல பிசினஸ் மட்டும் தான் வாழ்க்கை என்று இருந்தவனா இவன் என்று எல்லாருக்குமே சந்தேகம் அதிலும் அஞ்சலிக்கு ரொம்ப சந்தேகமாக இருந்தது..

அவள் பலமுறை இதை கேட்டும் விட்டாள்…

“உன்ன விட எனக்கு ஏதும் முக்கியமில்லை அம்முலு…”

அஞ்சலி அம்மா எதை எதையோ பேசி கணவரை சமாளித்து அவரையும் இவன் வீட்டிற்கு அழைத்து வருவார்..எல்லோரிடமும் பேசுவார் ஆனாலும் பிரகாஷ்கிட்ட பேசுவதில்லை…அவர் வந்ததே எனக்கு போதும் என்று தான் அவனுக்கு தோன்றும் …

அஞ்சலியின் தந்தைக்கே பலமுறை தோன்றும் இப்படி காதலித்தவர்களை நான் பிரித்து விட்டேனே என்று தான் தோன்றும்…ஆனாலும் அவரின் ஈகோ அவனிடம் பேச விடாமல் தடுத்தது…

இப்போது சம்யு நான்கு மாதம் ப்ரெக்னன்ட் ஆக இருந்தாள்…நம்ம ஆத்விகா குட்டி ஸ்கூல் போயிட்டு இருக்காங்க…எப்போதும் போல அஜய்க்கும் சம்யுக்கும் சண்டை தான்…

“ஆத்விகா அதிகமாக அத்தையிடமும் மாமாவிடமும் தான் இருப்பாள் …ஸ்கூல் முடித்ததும் இங்கு ஓடி வந்து விடுவாள்…காலையில் பள்ளி செல்வதற்கு முன்பும் அத்தையின் வயற்றில் முத்தமிட்டு ஹலோ ஜூனியர்ஸ் சீக்கிரம் வந்துடுங்க உங்களுக்காக தான் நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் என்று பேசிவிட்டு தான் செல்வாள்..”

அஞ்சலியை பொறுத்தவரை தன் குழந்தை வந்தாலும்,தனக்கு முதல் குழந்தை ஆத்விகா தான் என்பால் அந்த அளவுக்கு அவளை பிடிக்கும் …

ஒன்பது மாதத்தில்அஞ்சலிக்கு வளைகாப்பு ஏற்பாடு செய்து கொண்டு இருந்தனர் …அவளின் தாய் மட்டும் இரண்டு நாளுக்கு முன்பே வந்து விட்டார் ….அஞ்சலிக்கு வயிறு பெரிதாக இருப்பதால் ,ஒன்பது மாதம் தொடக்கத்திலே வளைகாப்பு அவளுக்கு வைத்து விட்டனர்..அஞ்சுவின் அப்பா இப்போ தான் வந்தார்…இவர்களின் கல்யாணத்தை வெளியே எப்படி சொல்வது என்று தெரியாமல் தெரிந்த நாலு பேரிடம் மட்டும் எளிமையாக திருமணம்  முடித்து விட்டோம் என்று அஞ்சலியின் அப்பா கூறிவிட்டார்..

மாப்பிள்ளை யாரு என்று கேட்ட அனைவருமே, அவரு உங்க மருமகனா என்று பெருமையாக தான் கூறினார்கள் அப்போது தான் அவர் மனம் கொஞ்சம் கெத்தாக இருந்தது …தங்களிடம் ஒரு நாள் கொஞ்சம் இழிவாக பேசியர்வர்கள் கூட இப்போது மரியாதையாக தான் பேசினார்கள்…

அஞ்சலியின் தாயிடம்,நம்ம மாப்பிள்ளை பெரியா ஆளு தான் போல என்று பெருமையாக கூறி கொண்டு இருந்தார்…

நீங்க ஏங்க அவருகிட்ட பேச மாற்றிங்க…தம்பி ரொம்ப பணிவானவர் தெரியுமா ??

அவர் பிரகாஷை அபப்டி பார்த்ததை கடைசி வரை யாரிடமும் கண்டிப்பாக கூற மாட்டார்…

எப்போதும் போல் அஜய் அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தான் ….இவனை பார்த்த அண்ணனும் தங்கையும் “தூ” என்று துப்பி விட்டு தான் சென்றார்கள்..

அதையெல்லாம் துடைத்து போட்டவன்,மறுபடியும் நடந்து கொண்டு இருந்தான் வந்தவர்கள் அனைவரையும் இன்முகமாக சம்யுக்தாவும் அஜயும் வர வேற்றனர்…

சுமதி!! அஞ்சுவை கூட்டிகிட்டு வா நேரம் ஆகுது என்றதும் அவர் அவர்களின் ரூமிற்கு சென்றரார்…

அஞ்சலி அலங்காரம் எல்லாம் முடித்துவிட்டு புடவை கட்டலாம் என்றதற்கு,நானே கட்டி விடுறேன் எட்றவனை அவள் தடுக்கவில்லை,சீக்கிரம் கட்டி விடுங்க நேரம் ஆச்சு என்றவளுக்கு,

பொறுமையாக போலாம் அமைதியா இரு..

வழக்கத்தை விட கணவனின் முகம் சோகமாக இருந்தது அதற்க்கு காரணமும் அவளுக்கு புரிந்து தான் இருந்தது …அவனின் பாசம் கண்டு சிரிப்பதா? இல்லை அழுகுவதா? என்று தெரியவில்லை…

எல்லாரும் குழந்தை என்னை மாறி இருக்குமா இல்லை உங்கள மாறி இருக்குமா என்று சந்தோசமாக கேட்பார்கள் ஆனால் பிரகாஷ்க்கு அஞ்சலியின் நலன் அதிகம் தேவையாக இருந்தது…

புடவை எல்லாம் கட்டி முடித்தவான்,அவளின் வயிற்றில் புடவை நகர்த்தி விட்டு முத்தம் கொடுத்தவன் ,எழாமல் அழுது கொண்டு இருந்தான்…

என்ன பாவா !!

ஒன்னும் இல்லை அஞ்சு…

அப்போது அஞ்சலியின் அம்மா உள்ளே வந்தார்…

அஞ்சலியை இப்படி பார்ப்பதற்கு அவர் எவ்வளவு நாள் காத்திருந்தார்..பார்த்த அவருக்குமே அழுகை தான் வந்தது..

அஞ்சு என்று அவளை அணைத்து அவளின் கன்னத்தில் முத்தமிட்டார்…

என்னம்மா நீயும்,அவரும் மாத்தி மாத்தி அழுவுரிங்க என்றதும் தான் அஞ்சலியின் தாய் பிரகாஷை பார்த்தார் …

என்ன ஆச்சு மாப்பிள்ளை!! என்றதும் அவனுக்கு இன்னும் அழுகை வந்தது..

ஒன்னும் இல்லை அத்தை..

அஞ்சலியின் பக்கம் வந்தவன்,அவளின் வயிற்றில் கை வைத்து “அம்மாவை ரொம்ப கஷ்டபடுத்தமா சீக்கிரம் வெளிய வந்துருங்க உங்கள விட எனக்கு உங்க அம்மா அவ்வளவு முக்கியம் சரியா!! “என்றவன் அஞ்சலியின் நெற்றியில் இதழ் பதித்தான்…

இதை பார்த்த அஞ்சலியின் தாய்க்கு கண்ணீர் நிற்காமல் வந்து கொண்டே இருந்தது…

மேலே ,சென்றவள் என்ன தான் செய்கிறாள்! என்று பார்க்க வந்து அஞ்சலியின் தந்தையும் இதை பார்த்ததும் அழுது விட்டார்…

ஆனால் அஞ்சலியின் முகத்தில் குழந்தை பார்க்க போகிறோம் என்று ஆவல் இருந்ததால் அழவில்லை …

பிரகாஷின் கண்களை துடைத்து விட்டவள்,போலாமா பாவா??

ம்ம்ம் போலாம் அஞ்சு…

“நீங்க எதுக்கு மா இப்படி பார்க்குறிங்க உங்க வீட்டுகார்கிட்ட போயிட்டு துடைத்து விட சொல்லுங்க என்றவளை தலையில் செல்லமாக கொட்டினார்..”

என்ன எவ்வளவு தொல்லை பண்ண இப்போ என்னோட பேரனும் ,பேத்தியும் உன்னை ஓட  விட போறாங்க பாரு டி!! அப்போ இந்த அம்மாவோட அருமை புரியும்..

என் புருஷன் அதெல்லாம் பாத்துக்குவாரு நான் எதுக்கு கவலை படனும்…

அப்போ தான் அஞ்சலி தந்தயை ரூமிர்க்கு வெளியே நிற்பதை பார்த்தவள் ,அப்பா உள்ள வாங்க,என்றதும் உள்ளே வந்த அவரும் அஞ்சலியை இப்படி பார்த்த சந்தோசத்தில் அவரும் அவளை அணைத்து அழுது விட்டார்…

இப்படி எல்லாரும் அழுதுகிட்டே இருந்தா  என்னோட பிள்ளைக்கு யாரு தான் விழா நடத்துவிங்க! என்றதும்,

ஹ்ஹஹஹா என்று சிரித்துக்கொண்டே அஜய் உள்ளே வந்தான்…அண்ணன் நான் இருக்கும்போதோ நீ இந்த வார்த்தை சொல்லலாமா??? என்றதும்,

உடனே பிரகாஷ் “சம்யு இங்க வாயேன்” என்றதும் அவன் ஓடியே போய்ட்டான்…அனைவரின் முகத்திலும் அப்படி ஒரு சிரிப்பு…

கீழே அவளை அழைத்து சென்று,அவளுக்கு தலை நிறைய பூ வைத்து, சந்தனம் வைத்து கொண்டு இருந்த யாரையும் அவள் பார்க்காமல் கணவனை மட்டுமே பார்த்து கொண்டு இருந்தாள், அவனும் அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான் …

சிவப்பு நிற தங்க சரிகை வைத்த புடவை,தலையிலிருந்து கால் வரை தங்கத்தால் அவளை அலங்கரித்து விட்டனர் அவளின் பெற்றோரும்,அவளின் கணவனும் இது போதாதுன்னு அஜய், சம்யுக்தாவும் தங்க நகைகளை அவளிடம் குவித்தனர்…அவளை இப்படி பார்பதற்கு அவ்வளவு அழகா இருந்தாள்..யாரும் கண் வைத்து விட கூடாதென்று ரூமிலே அவன், அவள் வயிற்றில் திருஷ்ட்டி போட்டு வைத்து விட்டான்…

அவனின் அலுவலகத்தில் இருந்த அனைவருமே அவளுக்காக வந்தனர்…

ஒவ்வொருவராக அவளுக்கு சந்தனம் பூசி குங்குமம் வைத்தனர்…சம்யு அவளுக்கு குங்குமம் வைக்கும்போது அழது விட்டாள் …இந்த நான்கு வருடத்தில் அவர்களின் பாசம் அதிகரித்து கொண்டே தான் சென்றது…அஞ்சலியின் தாய் கூட அவள் என்னோடைய இன்னொரு பெண் என்று இருவருக்குமே அனைத்தையும் பார்த்து பார்த்து செய்வார்…

என்ன சம்யு நீயும் அழுகுற,

ஆனந்த கண்ணீர் அஞ்சலி!! என்றவள் அவளை கையால் திருஷ்டி எடுத்தாள்…

கடைசியாக அவளின் கணவன் சந்தம் பூசி,குங்குமம் வைத்து ஆசிர்வாதம் செய்யும்போது தான் அஞ்சலி அழுததும் அவனுக்கும் அழுகை வந்து விட்டது…

இப்படி பட்ட கணவனை விட்டு ஐந்துவருடம் தவிக்க விட்டுடனே!!

இந்த அழகான தருணங்களை கேமரா அழகாக பதிவு செய்து கொண்டது…

விழா சிறப்பாக முடிந்ததும்,அவளை அழைத்து சென்று,நகை எல்லாம் கழட்டி வைத்தவன்,அவளின் புடவையும் மாற்றி விட்டான்…

இப்போ தான் பாவா free ஆக இருக்கு…ஏதோ நகை கடை விளபரத்துல வரமாறி எல்லாரும் என்னை இப்படி நிக்க வெச்சிட்டிங்க!! என்றவள் காலை தூக்கி அவனின் மடியில் வைத்தாள்…

அவன் அவளின் காலை மென்மையாக பிடித்து விட்டான்…கால் வலிக்குதா அஞ்சு!!

அதனால தான உங்க மடியில கால் வெச்சிருக்கேன் என்று கூரியவள் காலை எடுத்து விட்டு,தலையை மடியில் வைத்து கொண்டு உறக்கத்திற்கு சென்று கொண்டு இருந்தாள்…அவளின் தலையை கோதிக்கொண்டே இருந்ததும் அவள் உறங்கிவிட்டாள்,அவளை தலையனையில் படுக்க வைத்து விட்டு அவளின் காலை பார்த்தான் அது வீங்கி இருந்தது,அதற்க்கு oinment எடுத்து பூசிவிட்டு நன்றாக நீவி விட்டவன் அவளின் காலில் இதழ் பதித்து விட்டு அவளின் அருகில் வந்து படுத்து கொண்டான்..

அவளின் முகத்தில் அப்படி ஒரு அசதி தெரிந்தது..ப்ரெக்னன்ட் ஆனதுல இருந்து ஒழுங்கா சாப்பிட முடியாமல், வொமிட் எடுத்து கொண்டு அவள் பட்ட கஷ்டத்தை பார்த்தவனுக்கும் ரொம்ப வேதனையாக தான் இருந்தது …

கடவுளே என்னோட பொண்டாட்டிக்கு நல்ல படியாக பிரசவம் நடக்கணும் சிவனே!!

அவன் கொஞ்சம் உறங்கியதும் அஞ்சலியின் குரல் அவன் காதுக்கு விழுந்தது ,வலியில் முனங்கி கொண்டு இருந்தாள்,கொஞ்சம் கொஞ்சமாக வலி அதிகரித்து கொண்டே இருந்ததும் அவளை தூகிகொண்டு காருக்கு சென்றவன் போகும் வழியில் தான் அனைவருக்கும் கால் செய்து சொன்னான் …அதற்குள் மருத்துவமனை வந்ததும் அவளை உள்ளே அழைத்து செல்லும் வரை அவன் அவனாகவே இல்லை …அவள் கத்தின கத்தில்  அவனுக்கு மரண பயமே வந்து விட்டது …அதற்குள் அனனைவரும் வந்து விட்டனர்,அழும் அவனை யாராலும் சமாதனம் செய்ய முடியவில்லை…

பிரகாஷின் அருகில் வந்த அவளின் தந்தை,அவனை அணைத்து சமாதனம் செய்தார்..சரியாக அந்நேரம் குழந்தை சத்தமும் கேட்டதும் விரைந்து உள்ளே சென்றவன் பார்த்தது அஞ்சலியை தான்…

அவள் நன்றாக இருக்கிறாள்,கொஞ்சம் மயக்கமாக இருக்கிறாள் அவ்வளவு தான் என்றார் மருத்துவர்..அப்போது அவனின் கையில் ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் கொடுத்தனர்…

பெண் குழந்தை அஞ்சலி போலும் ,ஆண் குழந்தை அவனை போலும் இருந்தது… இருவரின் கன்னத்திலும் குழி விழுந்தது…

குழந்தையை பார்த்தவனுக்கு,உடலில் அப்படி ஒரு சிலிர்ப்பு வந்தது…அவனின் உதிரத்தில் இருந்து வந்த குழந்தை அல்லவா…

அஞ்சலியின் தாயும், தந்தைக்கும் அஞ்சலியை திரும்ப கையில் வாங்கியது போல் இருந்தது ,அஜய் சம்யுயும் அதே தான் கூறினார்கள்…

ஆத்விகாவிர்க்கு ஒரே ஆனந்தம் என்கூட விளையாட தம்பி,பாப்பா வந்துட்டாங்க!! என்று குதித்தாள் …

அஞ்சலி முழித்ததும் அவளை சென்று பார்த்தவன்,

எப்படி இருக்க அம்முலு !!!உன்னை ரொம்ப கஷ்டபடுத்திடேனா என்றதும் அவள் “இல்லை “என்று தலை அசைத்தாள்…போடி உன்னை உள்ளே அனுப்பிட்டு எனக்கு உயிரே இல்லை தெரியுமா??என்று அழும் கணவனை பார்த்தவளுக்கும் அழுகை வந்ததும் ..அவளுக்குமே நமக்கு எதாவது ஆகிவிட்டால் கணவனை பிரிந்து விடுவோமா மறுபடியும் என்று பயந்து தான் இருந்தாள் …

இருந்தாலும் கொடுத்த வாக்கை காப்பாற்ற கடுமையாக போராடினாள்….

ஐந்து வருடங்களுக்கு பிறகு,

ஆகாஷ்,ஆத்விகா,அஞ்சலியின் செல்ல மகன் அர்ஜுன்,மகள் ஆஷிகா ஐவரும் மரத்தில் ஏரி மாங்காய் பறித்து கொண்டு இருந்தனர் …

டேய் பிரகாஷ்! இங்க பாருடா ஐந்து குரங்கு மேலே இருக்கு என்று காட்டியதும் அவனுக்கு ஒரே சிரிப்பு…ஆனால் ஒரு குரங்கு தான் குறையுது என்று தன்னை திரும்பி பார்த்த கணவனை அடிக்க துரத்தி கொண்டு இருந்தாள் சம்யு…

இப்போது தான் பிரகாஷின் வாழ்க்கை திருப்தியாக இருந்தது…மனைவி ,குழந்தை ,தங்கை ,நண்பன் ,அவனின் குழந்தை என்று அவ்வளவு அழகாக இருந்தது…இவர்கள் அனைவருக்கும் தான் ஒரு நாள் அங்கு இல்லை என்றாள் போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் கொடுக்கும் அளவுக்கு தன்னை தேடுபவர்களை நினைத்தவனுக்கு இப்போதும் சிரிப்பு தான் வந்தது

இவர்கள் அனைவரும் பிரகாசின் தாத்தா ,பாட்டி ஊருக்கு பொங்கல் வைத்து கொண்டாட தான் வந்தனர்…

அஞ்சலியும்,சம்யும் பொங்கல் வைத்ததும் அனைவரும் மரத்தின் கீழ் ஒரு பாயை போட்டு கொண்டு அனைவரும் சந்தோசமாக பேசிக்கொண்டு,மகிழ்ச்சியாக பொங்கல் சாப்பிட்டு கொண்டு இருந்தனர்…

உறவே இல்லாத பிரகாஷ்க்கும் இன்று இவ்வளவு உறவு வந்து விட்டது…

“கடவுள் எதை குடுக்க நினைத்தாலும் தாமதமாக இருந்தாலும் தரமானதாக தான் கொடுப்பார்” என்று பிரகாஷ்க்கு புரிந்தது..

அவனின் மனதில் “வானத்தை வசை படுத்தியது போல் ஒரு உணர்வு…”.

இதற்க்கெல்லாம் காரணம் என் தேவதை பெண்ணல்லவா என்று மனைவியை காதலாக பார்த்ததும் ,அவள் வெட்கத்தில் தலை குனிந்து கொண்டாள்…

“இது போல சொந்தம் தந்ததால்

இறைவா வா நன்றி சொல்கிறோம்

உனக்கேதும் சோகம் தோன்றினால்

இங்கே வா இன்பம் தருகிறோம்

சரவேடிப்போல் சேர்ந்து நாம் சிரிக்காலம்

அதிரடியாய் வாழ்ந்து நான் காட்டலாம்”

“இவர்களின் காதல் காலம் அழிக்க முடியாத காதல் காவியமாக இருக்கட்டும்….”

உங்களை அனைவரையும் அடுத்த புதிய கதையில் சீக்கிரம் சந்திக்கிறேன்….