மங்கையின் தேடுதல் இன்னும் நிறைவு பெறாமல் நிற்க வரலக்ஷ்மியும் வெண்ணிலாவும் அமைதியாக அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டனர். ஷோரூமில் ஓடிக் கொண்டிருந்த தொலைக்காட்சியில் வந்த விளம்பரங்கள் கூட சுவாரசியமாக இருந்தது இருவருக்கும். அந்த அளவிற்கு மங்கை அவர்களை மட்டுமின்றி அங்கிருந்த கடை சிப்பந்திகளையும் சோதித்துக் கொண்டிருந்தார். அத்தனை கேள்விகள் அத்தனை வாக்குவாதம் மீண்டும் நீ கடைக்கு வந்தால் நான் வேலையை ராஜினாமா செய்து விடுவேன் என்ற ரீதியில் அந்த சிப்பந்தி முகத்தில் சிரிப்பை ஒட்ட வைத்தபடி பேசிக் கொண்டிருந்தார். ஆனால் உள்ளூர அவருக்கு இருந்த கடுப்பிற்கு மங்கையை தூக்கி மண்பானையில் போட்டு வேக வைக்கும் கோபம் குமிழ்ந்து கொண்டிருந்தது. பின்னே மீண்டும் மீண்டும் கேட்டதையே எத்தனை முறை கேட்க. அதற்கு எத்தனை முறை தான் பதில் தருவார் அவரும்.
“மேடம் உங்களுக்கு இந்த மெஷின் சாட்டிஸ்ஃபையா நிச்சயம் இருக்கும்”என்று காட்ட மங்கைக்கு அதிலும் திருப்தி இல்லை.
“நான் எதிர்பார்க்கிற குவாலிட்டியே இல்லையே”என்று அதிருப்தியுடன் சொல்ல
‘இதுக்கு மேல கையில தான் துவைக்கணும்’ என மாமியாரும் மருமகளும் மைன்ட் வாய்ஸ் பேசினர்.
“அதெப்படி வரா. இந்த கடை தான் பெஸ்ட் னு ஊர் முழுக்க விளம்பரம் பண்றாங்க அப்போ பெஸ்ட் இவங்க தந்து தானே ஆகணும்”என்று சொல்ல
“மங்கா பெரிம்மா இங்கே வாங்க”என்றழைத்த வெண்ணிலா அவர் அருகில் தானே சென்று “நீங்க பார்த்தீங்களே அந்த**** கம்பெனி மெஷின் அதை அந்த அம்மா செலக்ட் பண்றாங்க அது கூட ஒண்ணு தான் இருக்குன்னு அந்த அண்ணா சொன்னாங்க.”என்று கைகாட்டிய இடத்தில் ஒரு பெண்மணி அந்த மெஷினை திறந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
“பார்க்கட்டும் கடைனா பார்க்க தானே செய்வாங்க”என்றவரின் பார்வை மீண்டும் மீண்டும் அங்கேயே சென்று கொண்டிருந்தது.
“சரி பெரிம்மா எதுவும் பிடிக்கலைனா கிளம்புவோம் உங்களுக்கு பிடிச்சா மட்டும் தான் வாங்கித் தரச் சொல்லி அவர் ஸ்ட்ரிக்டா சொல்லி இருக்கார்”என்றவள் மெதுவாக அந்த பெண்மணியிடம் போய் பேசினாள்.
சற்று நேரம் கழித்து வந்தவள் “பெரிம்மா அந்த மெஷின் அவங்க ஏற்கனவே வாங்கி இருந்த மாடலாம். நல்ல குவாலிட்டி செம வொர்க் அதான் அதே மாடல் வாங்க வந்தேன்னு சொன்னாங்க. ப்ப்ச் பாருங்க நமக்கு தான் குடுத்து வைக்கலை. ஒரு மெஷின் தான் இருக்காமே”என்றவள் “அத்தை”என்று வரலக்ஷ்மியை அழைத்தபடி போய் விட்டாள்.
“தம்பி அந்த மெஷின் என்ன ரேட் சொன்னீங்க”என்ற மங்கையின் குரலில் வெண்ணிலாவிற்கு அத்தனை சிரிப்பு.
‘இவங்க பொறாமை குணம் மட்டும் மாறவே மாறாது’என்று நினைத்துக் கொண்டவள் கணவனின் பட்ஜெட்டிற்கு உட்பட்டே சலவை இயந்திரத்தை வாங்க வைத்து விட்டாள்.
அதில் வரலக்ஷ்மிக்குத் தான் ஏக பெருமை.
“சமத்துடா நீ “என்று மங்கை அறியாமல் மருமகளைக் கொஞ்சினார்.
“இருந்தாலும் அந்த 45000 மிசினை வாங்கி இருக்கலாம் காலத்துக்கும் கெடக்கும்”என்று ஒரு நொடிப்புடன் தான் இதனையும் வாங்கினார் மங்கை.
“அடேங்கப்பா வால்பாறை வா”என்று சொல்ல வந்தவன் “வெண்ணிலாவா கொக்கா”என்று சிரித்தான் மேகன்.
“ஆனாலும் உங்க புத்தி இருக்கே”என்று மூக்கை விடைத்தாள்களை இழுத்து தன் பக்கம் அமர வைத்தவன் “தேங்க் யூ சோ மச் இப்படி அடிக்கடி காப்பாத்தி விடு”என்றான்.
“பார்றா உராங்குட்டான் நன்றி எல்லாம் சொல்றாரு”என்றவளை கையில் நறுக்கென்று கிள்ளியவன் “உராங்குட்டான் னு சொல்லாத வானரமே”என்றான்.
“ஸ்ஸ் ஆஆஆ ஆளைப்பாரு”என்று கையை தேய்த்தவள் “இதை நீங்களே செஞ்சு இருக்கலாம் என்ன தலையை சீவிடுவாங்களா எதுக்கு தான் இன்னும் அவங்களுக்கு பயப்படுறீங்களோ”என்றாள் சலிப்பாக.
“இது பயம் இல்லை வெண்ணிலா. அப்பாவுக்கான மரியாதை அவருக்கு தன் நன்றிக்கடனை செலுத்த வழி தெரியலை. அவங்க அதை யூஸ் பண்ணிக்கிறாங்க”என்றவன் “சட்டுன்னு முகத்தில் அடிச்ச மாதிரி பேசிடலாம் தான். ஆனா அவங்க அப்பாவோட வளர்ப்பு படிப்பு னு எல்லாம் பேசுவாங்க”
“அதுக்காக இந்த மாதிரி எவ்வளவு தான் தருவீங்க. மாமாவை வளர்த்தாங்க தான் இல்லை னு சொல்லலை. செஞ்சதை சொல்லி சொல்லி காட்டி ப்ப்ச் எரிச்சலா இருக்கு இதுக்கு அவங்க அவரை கண்டுக்காம விட்டு இருக்கலாம் தனியாவே இல்லாட்டா சின்ன தாத்தா வீட்டிலாவது நிம்மதியா இருந்திருப்பார்”என்றாள்.
“எங்களுக்கும் புரியாம இல்லை. ப்ப்ச் அதை விடு. சஞ்சய் கிட்ட உன் பாஸ்போர்ட் கேட்டு இருந்தேன் நாளைக்கு கொண்டு வர்றேன் னு சொன்னான். அவனுக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு வை”
“என்ன சஞ்சு வர்றேன்னு சொன்னானா எனக்கு ஏன் கால் பண்ணலை அவன்”என்று எழுந்தவளை மீண்டும் அமர வைத்தவன் “நானே கால் மணி நேரம் முன்னாடி தான் ஃபோன் பண்ணேன். பண்ணுவான் அதுக்குள்ள உனக்கு அவன் கிட்ட சண்டை போடணுமா. சரியான சண்டைக்கோழி “என்றதில் மீண்டும் பழைய வெண்ணிலா சிலிர்த்தெழுந்தாள்.
“நான் சண்டைக்கோழியா”என்று மல்லுக்கு நின்றவளை சிரிப்புடன் பார்த்தவன்,”இப்படி அடிக்கடி சந்திரமுகி ஆகு அப்போ தான் நல்லா இருக்கும்”என்று சொல்லி விட்டு போய் விட்டான்.
“இவரை… ம்ஹூம் இவருக்கு இனிமே எந்த ஹெல்ப்பும் செய்யக் கூடாது”என்று முணுமுணுத்தவள் சஞ்சய்க்கு அழைப்பு விடுத்து அவனை ஒரு வழி ஆக்கி விட்டுத் தான் ஓய்ந்திருந்தாள்.
***********
மங்கையின் முகத்தில் அத்தனை பூரிப்பு. வீட்டில் ஒவ்வொரு பொருளாய் அதுவும் எந்த செலவும் செய்யாமல் சேர்வதில் அத்தனை பெருமிதம். வேலவனை அடக்கி ஆளும் கர்வம் என்று அவர் இருக்க தர்மதுரைக்குத் தான் இது எங்கே போய் முடியுமோ என்றிருந்தது. அவருக்கு நன்றாக தெரிந்தது வெண்ணிலா குறைந்த விலையில் சலவை இயந்திரம் வாங்க வைத்தது. ஆனாலும் மனைவியிடத்தில் மூச்சு விடவில்லை. நன்றாக உள்ளது என்றதோடு நிறுத்திக் கொண்டார். வெண்ணிலா தந்திரம் செய்தது அறிந்தால் மங்கையின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்குமோ என்ற அச்சம் அவருக்கு. அப்படியே விலை குறைந்தது என்று தெரிந்தாலும் வேறு ஏதாவது செய்து சமாளிக்கலாம் என்று எண்ணிக் கொள்ள மங்கைக்கு இது தெரிய வரும் போது வெண்ணிலாவின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை உணராமல் போய் விட்டார்.
எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்த வேளையில் மேகவர்மன் இன்னும் இரண்டு நாட்களில் ப்ராஜெக்ட் விஷயமாக அமெரிக்கா செல்ல வேண்டி இருக்க அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தான். வெண்ணிலாவையும் தன்னோடு அழைத்துச் செல்ல நினைத்தவன் அதனை வேலவனிடமும் வரலக்ஷ்மியிடமும் சொல்லி இருக்க அவர்களும் ஒப்புக் கொண்டனர். ஆனால் பாஸ்போர்ட்டில் ஏதோ பிரச்சினை என்று அவளால் கிளம்ப முடியாமல் போனது. பேரதிசயமாக மங்கை கூட ஹனிமூன் போல போய் வரட்டும் என்று சொல்லி இருக்க அது இறுதியில் நடக்காமல் போய் விட்டது.
“உங்களுக்கு தெர்மல்வேர் எடுத்து வைக்கவா இல்லை அங்கே போய் வாங்கிக்கறீங்களா”என்று கேட்டபடியே பீரோவை ஆராய்ந்து கொண்டிருந்தாள் வெண்ணிலா.
“எடுத்து வை எப்போதும் இங்கிருந்து கொண்டு போயிடுவேன்”என்றவன் தயக்கமாக “ஏன் வெண்ணிலா நீ தனியா இருந்துப்ப தானே.”என்று கேட்க அவளுக்கு சிரிப்பு பீறிட்டது.
“தனியாவா ஏன் அத்தை மாமா இவங்களை எல்லாம் பார்த்தா ஆளுங்களா தெரியலையா…அதோட உங்கத்தை பத்து ஆளுக்கு சமம் அவங்க மத்தியில் தானே விட்டுட்டு போக போறீங்க இதுல நான் தனியா எங்க இருக்கப் போறேன்”என்றவள் “ஆமா நியாயமா பார்த்தா நான் உங்க கூட வராததுக்கு நீங்க சந்தோஷம் தானே படணும் என்ன புதுசா ஃபீலிங்”என்று தாடையில் தட்டியபடி கேட்க
“ஆமா தான் ஆனாலும் பாவமே இந்த சண்டைக்கோழி பாட்டுக்கு பேசாம இருந்துச்சே. ஆன் சைட் அப்ராட் அமெரிக்கா னு சொல்லி இப்படி லாஸ்ட் மினிட் ல ஏமாத்திட்டோமேனு ஒரு ஃபீலிங்கு அதான் கேட்டேன்”என்று அவனும் பதிலுக்கு வாயாட
“அய்யே பெரிய அமெரிக்கா நீங்களே போங்க நான் எதுக்கு ஃபீல் பண்றேன் அப்புறம் அந்த ட்ரமை வேற எனக்கு பிடிக்காது ஸோ அந்த ட்ரம் நாட்டுக்கு எல்லாம் நான் போக மாட்டேன் ப்பா. ஏதோ பிள்ளை ஆசைப்பட்டு கேட்டீங்களேனு இதுக்கு சம்மதிச்சேன் பட் அமெரிக்காவுக்கு பேட் லக் என்னைப் பார்க்க குடுத்து வைக்கலை”என்றாள் மிதப்பாக.
“ஆளைப் பாரு”என்று சிரித்தவன் சற்று மெலிதான குரலில் “இதோட தேர்ட் டைம் அங்கே போறேன். பட் இந்த டைம்”என்று சொல்லி நிறுத்திக் கொண்டான்.
“ஓகே ஆல்மோஸ்ட் இந்த லிஸ்ட் ல உள்ள எல்லாமே எடுத்து வச்சுட்டேன் டவுட் னா செக் பண்ணிக்கோங்க”என்றவள் ட்ராலியை மூடி வைத்து விட்டு வெளியே சென்றாள்.
வர்மனுக்கு ஏனோ மனது அத்தனை தவித்தது.
மீண்டும் உள்ளே வந்தாள் வெண்ணிலா.
“உங்க பெர்ஃப்யூம் எடுத்து வைக்கலை”என்றபடி ட்ராலியைத் திறக்க அவளை தடுத்து தன் பக்கம் நிறுத்தினான்.
“என்னாச்சு ஏன்”எதுவும் புரியாமல் கேட்டவள் திணறலாய் அவனைப் பார்க்க
“நான் உன்னை விட்டுட்டு மூணு மாசம் போறேன் னு சொல்றேன். உனக்கு கொஞ்சம் கூட ஃபீல் ஆகவே இல்லையா”என்று கத்த வெண்ணிலாவிற்கு அவனின் நிலை புரியவே இல்லை.
“வொர்க் விஷயமா போறீங்க இதுக்கு ஏன் இவ்வளவு டென்ஷன்”என்றவளை தள்ளி நிறுத்தி விட்டு கோபத்துடன் வெளியேறினான். வெண்ணிலா திகைத்து நிற்க அவனுக்கோ உள்ளூர அத்தனை எரிச்சல்.
“எதுவுமே சொல்ல மாட்டேங்கிறா. எனக்கு மட்டும் இது கஷ்டமா இருக்கு இவளுக்கு எதுவுமே தோணலையா ஆனா எனக்கு தோணுதே”கை முஷ்டியை இறுக்கி வராண்டா காம்பவுண்ட் சுவரில் குத்தியவன் மேலே மாடிக்குச் சென்று விட்டான்.