Paingili Paarvaiyilae
தனவதி மதிய உணவைக் கட்டி வைக்க, அதை ஒரு வாய்ப்பாக்கிக் கொண்டவள் கருப்பட்டிக்கு வேலையிருப்பதாகச் சொல்லிவிட்டு, அவளே எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
சந்திரா செல்லும் போதே எதிரே வந்த கருப்பட்டி, கவனித்து விட, அவளோ வண்டியைத் திருப்பும்படி சைகை செய்தாள். திருப்பியவன் அதே பாதையில் அவளுக்கு இணையாக ஓட்டிக்கொண்டு வந்தபடி, “ஏம் மதினி அண்ணனைப் பார்க்கத்...
அவர் தலையில் பாரத்தை ஏற்றியதை போன்றிருந்தது. அவர் திகைத்து நிற்க, “எந்த நிலம்னு நினைக்குறீங்களா? என் கைக்குள்ள வரக்கூடாதுன்னு கதிர் அப்பா கடைசி வரைக்கும் போறாடுனாரே அதே நிலம் தான். நீங்க நல்லவங்க, நியாயமானவங்க, ஏற்கனவே அனுபவப்பட்டவங்க, பிரச்சனை வேண்டாம்னு நினைக்கிறவுங்க புரிஞ்சிப்பீங்க. பார்த்துச் செய்யுங்க” என்றார்.
ஏற்கனவே உயிர்ப் பலி கொண்ட நிகழ்வு மீண்டும்...
அத்தியாயம் 21.1
அன்று சந்திராவுக்குக் காலையில் எழுந்ததிலிருந்தே சற்று சோர்வாகத் தான் தோன்றியது. வேலையில் ஒரு மந்த நிலையும் தடுமாற்றமுமாக இருக்க, பஞ்சாயத்து வரை சென்று வந்த அலைச்சல், என நினைத்துச் சுருண்டு படுத்துக் கொண்டாள். மாலை நேரம் எழுந்தவளுக்கு குமட்டிக் கொண்டு வர, வீட்டின் பின்புறம் சென்றாள்.
சற்றே நேரம் அங்கிருக்கும் கல்லில் அமர்ந்தவள் சுற்றலும்...
அத்தியாயம் 18
சந்திராவின் முகத்தில் புது பொழிவு, கதிரின் நடத்தையில் துள்ளும் உற்சாகம்! அனைத்தும் தனவதியின் கண்களுக்குத் தப்பவில்லை. திடீர் திருமணம் என்றே நினைத்திருந்த தனவதிக்கு தற்போது நம்ப இயலாது, சந்தேகம்!
சந்திராவின் மீது கதிருக்கு ஒரு வெறுப்புணர்வு வரும் என்றே எதிர்பார்த்திருக்க, அதை அவன் பொய்யாக்கி இருந்தான். தாங்கள் காட்டும் ஒதுக்கத்தில் தன்மானம் பார்த்து சந்திராவே...
“கேள்வி கேட்டா பதில் சொல்லணும் புரியுதா? சொல்லு” என்றவன் மிரட்ட, “நல்ல தான் இருக்காங்க, உடம்புக்கு பிரச்சனை எதுவுமில்லை. தென்னரசு அங்கிளும் தாத்தாவும் திட்டம் போட்டுத் தான் உம்மை எனக்குக் கட்டி வைச்சாங்க” என உண்மையை மறைக்காது உரைத்தவள், துல்லியமாக அவன் முகத்தையும் ஆராய்ந்திருந்தாள். கோபம் கொள்வானோ என்ற எதிர்பார்ப்பு!
“ஹோ..! எனக்கு சந்தேகமிருந்தது அதான்...
அத்தியாயம் 05
வழக்கத்திற்கு மாறாக உச்சியிலேறிய சூரியன் அக்கினி மழையாக வெப்பக்கதிர்களை வீச, ஆற்றக்கரையோரம் அமர்ந்திருந்தான் கதிர். பொதுவாகவே அப்பக்கம் அதிகம் ஆட்கள் நடமாட்டம் கிடையாது, அதிலும் நண்பகல் நேரம் புள்ளினங்கள் கூட புலப்படவில்லை. கண்ணெதிரே கையளவில் வான்தொடும் பச்சை மலை முகடுகள், அதில் ஒற்றை புள்ளியில் தொடங்கி, உருக்கி ஊற்றிய வெள்ளி நீராய் பெருக்கெடுத்து,...
அத்தியாயம் 15
மஞ்சள் ஒளி மங்கும் முன் மாலை நேரம். தனவதியின் அலைபேசிக்கு செந்திலிடமிருந்து அழைப்பு வந்தது. ரேவதி குறைவான இரத்த அழுத்தால் மயங்கி விட்டதாகவும் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் தெரிவித்தான். உடன் யாரும் பெரியவர்கள் இல்லாததால் தனவதியை உதவிக்கு வரும்படியும் வேண்டினான். சந்திரா வீட்டை விட்டுச் சென்று விட்டதும் நினைவிற்கு வர, உடனே கிளம்பினார் தனவதி.
கதிரின்...
இடிந்து போய் விழுந்த தனவதி பெரும் குரலில் ஒப்பாரி வைத்து அழ, ரேவதியும் மாலதியும் அன்னையின் பின்னே விசும்பிக் கொண்டிருந்தனர். கதிருக்குத் தந்தையோடு அவன் உயிரே போனது போலிருந்தது, அவனின் மொத்த தைரியமும் அவர் தான், அவர் இழப்பை அவன் நம்புவதற்கே நேரம் தேவையாகிப் போக, கண்ணீர் விடக்கூட இயலாது கல்லாய் இறுகிப் போனான்.
தந்தை...
பைங்கிளி பார்வையில் –மித்ரா
அத்தியாயம் 01
குற்றாலச்சாரலின் தூதாய் வந்த குளிர்காற்று அவன் தேகமெங்கும் ஸ்பரிசித்துச் செல்ல, புள்ளினங்களின் புள்ளுவமும் கறவை பசுக்களின் கதறலொலியும் விடியலின் நிசப்தத்தைக் கலைக்க, அவன் மட்டும் கலையாத உறக்கத்தில் கலைய விரும்பாத கனவோடு அமிழ்ந்திருந்தான்.
இன்னும் முழுதாய் வெண்ணிலவும் விடை பெற்றிருக்கவில்லை, பகலவனும் ஒளிபரப்பவில்லை. மங்கிய இருளொளியும் மார்கழி நிகர் குளிரும் தாலாட்டவே,...
அதற்குள் அடுப்படியிலிருந்து தோசை வார்த்து எடுத்து வந்து அவன் இலையில் வைத்தார் தனவதி. பார்த்திருந்த சந்திரா சட்னியையும் ஊற்ற, இடையில் கதிரின் அலைபேசி அலற, அதில் திடுக்கிட்டு அரண்டவள் சாம்பாரை கதரின் சட்டையில் ஊற்றியிருந்தாள்.
“ஏய்..” கத்தியபடியே எழுந்தவன், “கொஞ்சமாது அறிவிருக்காட்டி உனக்கு? உன் விளையாட்டுக்கு அளவே இல்லையா? அவசரமா கிளம்பும் போது தான் இப்படி...
“அதெப்படி வருவான், அவங்க அப்பா இறந்ததுக்கு நாம தான் காரணமுன்னு நினைக்கிறானே பின்ன எப்படி வருவான்? இந்த மாப்பிள்ளைக்கு என்ன குறை..” என்ற கலைவாணியின் புலம்பலுக்கும் பதில்லாது அமைதியாக இருந்தாள் சந்திரா.
வாசலில் வருவோரை வரவேற்றுக் கொண்டிருந்தனர் நாராயணனும், வரதராஜனும். முகூர்த்தத்திற்கு இன்னும் சில நிமிடங்களே இருக்க, சரியாகப் பாதுகாப்புப்படை காவலர்கள் சூழ வந்தனர் அமைச்சர்...
அத்தியாயம் 20
இளங்கதிர் பள்ளிப் பருவத்தின் மேல்நிலை முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்த நேரம். சந்திராவின் தாத்தா முதல் அனைவருமே சென்னையில் குடியேறி விட்டனர். பெரியவர்கள் கிளம்பும் நேரம் வரதராஜனும் நாராயணனும் வீட்டையும் நிலத்தையும் கவனித்துக் கொள்ளும் படி குலசேகரனிடம் வேண்டினர். அவர்கள் செல்லாவிடினும் அவர் பாதுகாப்பார் தான், பெரியவரே கேட்டுவிட, அது அவருக்கு தெய்வத்திற்கு ஆற்றும்...
அத்தியாயம் 11
முத்தாலம்மன் கோவில், அவ்வூரின் மேற்கு வயல்வெளிகளின் ஓரமிருந்தது. முன்பே வந்து விட்ட மாலதியும் தனவதியும் பொங்கல் வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்க, கேசவன் வருவோரை வரவேற்றுக் கொண்டிருந்தான். நெருங்கிய சொந்தம், பங்காளி மக்கள் என அருகிலிருக்கும் தங்கள் வகையறாக்கள் சிலரை மட்டும் அழைத்திருந்தாள் மாலதி.
கதிரோடு வருமாறு சொல்லி சந்திராவை விட்டு வந்திருக்க, அவளும்...
அத்தியாயம் 09
பொன் அந்தி மாலைப் பொழுது, இரு வீட்டு உறவுகளாலும் சுற்று வட்ட சொந்தங்களாலும் நிறைந்திருந்தது அந்த திருமண மண்டபம். வண்ண விளக்குகளும் வரவேற்பும் ஆடம்பரமாகக் காட்சியளிக்க, எங்கும் செழுமையே! சற்று முன் தான் அரவிந்தனுக்கும் சந்திரவதனிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நிகழ்ந்திருந்தது.
அனைவரும் உறவினரையும் விருந்தினரையும் கவனிக்க, உடை மாற்றுகிறேனென சந்திராவின் அறையில் அவள் மட்டும்...
சந்திரவதனி இதை நன்கு கவனித்திருந்தாள். இருந்தும் இவ்வெண்ணம் கதிரின் மனதில் எவ்வளவு ஆழம் பதிந்துள்ளது என்பதை அவள் அறிய முயல, அவன் ஒத்துழைக்காது நழுவியிருந்தான்.
குலசேகரனின் இழப்பு ஒரு எதிர்பாராத இழப்பு தான் எனினும் அதற்கு முழு முதற்காரணம் என அவள் குடும்பத்தைச் சொல்வதை அவளால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. கதிரிடம் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை எனினும் மனதில்...
“இடத்துக்கு எல்லாம் இராசி இருக்கா என்ன?” என்றவள், அவர் கலங்குவதைக் கண்டு, “அத்தை உங்க பயம் தேவையில்லாதது, இப்போ எந்த பிரச்சனையும் வராது. என்னை நம்புங்க” என்றாள் ஆறுதலாக.
தனவதியின் கண்ணீர் சந்திராவையும் பதற செய்தது. கதிரின் முகமும் கவலையுற, “அவளுக்குத் தான் தெரியலை, நீயாவது புரியுற மாதிரி எடுத்துச் சொல்லக் கூடாதா ராசா?” என...
அத்தியாயம் 07
இளம் பிஞ்சு கைகளை நொறுக்கிவிடுவது போல் அழுத்தப்பிடித்திருந்த மனோ, “சந்திரா என்னோட வா. நான் நீச்சல் சொல்லித் தாரேன், அவன் வேண்டாம்” என அழைக்க, அவளோ “ம்கூம்.. நீ அடிப்பே, நீ வேண்டாம் போ” என மறுத்தாள்.
“நான் உன் அண்ணன்ல அடிக்க மாட்டேன், நல்லா சொல்லித் தருவேன் வா” என கரங்களைப் பற்றி...
அத்தியாயம் 17
காலையில் சந்திரா விழிக்கும் முன் ஆலைக்கு கிளம்பியிருந்தான் இளங்கதிர். விழித்தாள் என்றால் விடமாட்டாள் என நன்கு அறிவான். கருப்பட்டி உணவு பார்சல் வாங்கி வந்திருக்க, அவளுக்கானதை படுக்கைக்கு அருகில் மேசையில் வைத்துவிட்டுச் சென்றிருந்தான். ஒருநாள் முழுவதுமே ஆலைப் பக்கம் சொல்லாதது என்னவோ போலிருந்தது. எழுந்ததுமே அதே எண்ணத்தில் கிளம்பி விட்டான்.
கருப்பட்டி, “என்ன முதலாளி நீங்க...
அத்தியாயம் 10
புலராத காலை பொழுதில் வரும் புது ஒளியும் வேண்டாமென்பதை போல் இமைகளை இறுக மூடியபடி அரிசியாலையில் ஒரு மரப்பெஞ்சில் படுத்திருந்தான் இளங்கதிர். சந்திராவின் கழுத்தில் தாலி கட்டி முழுதாக ஒருநாள் முடித்து விட, இன்னும் அவன் வீடு செல்லவில்லை. தனக்காகச் சந்திரா இருக்க வேண்டும், இல்லையென்றால் அந்த ஏமாற்றத்தை அவனால் தாங்க இயலாது!...
காலையிலே வேலையாட்கள் வேலை செய்ய, கதிர் மேற்பார்வை பார்த்து கொண்டிருக்க, சேர்மமூர்த்தி, அவர் உதவியாளர் மற்றும் இருவரோடு வந்தார்.
“கதிரு உடனடியா வேலையை நிறுத்து” என்றவர் அதிகாரமாகச் சொல்ல, “ஏன்? என் இடம் நான் செய்றேன், இதுல உங்களுக்கு என்ன இடைஞ்சல்?” என விஷயம் அறிந்தும் அறியாதவன் போலே கேட்டான்.
முகம் இறுகியவர், “ஏதா இருந்தாலும் உன்...