Advertisement

அவர் தலையில் பாரத்தை ஏற்றியதை போன்றிருந்தது. அவர் திகைத்து நிற்க, “எந்த நிலம்னு நினைக்குறீங்களா? என் கைக்குள்ள வரக்கூடாதுன்னு கதிர் அப்பா கடைசி வரைக்கும் போறாடுனாரே அதே நிலம் தான். நீங்க நல்லவங்க, நியாயமானவங்க, ஏற்கனவே அனுபவப்பட்டவங்க, பிரச்சனை வேண்டாம்னு நினைக்கிறவுங்க புரிஞ்சிப்பீங்க. பார்த்துச் செய்யுங்க” என்றார். 
ஏற்கனவே உயிர்ப் பலி கொண்ட நிகழ்வு மீண்டும் ஆரம்பமானது! ஒரு முடிவுப்புள்ளியானது வராது, நிகழ்வானது மீண்டும் மீண்டும் சுழலும் என்பது இயற்கை விதி தானே! தனவதிக்கு பெரும் அழுத்தமும் சற்றே பயமுமாக இருந்தது. எந்த பிரச்சனையாயினும் தனக்குச் சேதாரமில்லாமல் இருந்தால் போதுமானது என்றே நினைத்தார். 
“நீங்க அந்த நிலத்துல என்ன வேணா செய்யுங்க, சந்திரா கேட்ட மாட்டாள். அவ ஊர்லை இல்லை, நாங்களும் பிரச்சனை செய்ய மாட்டோம்” என்றார் முடிவாக. 
பிரச்சனையிலிருந்து நழுவும் எண்ணமே அவருக்கிருக்க, “இது.. இதைத் தான் நான் ஏதிர்பார்தேன் தனவதியம்மா, இந்த வார்த்தை போதுமே! அப்போ நான் வரட்டுமா” என்றவர் விடைபெற்றுக் கிளம்ப, நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டார் தனவதி. 
சந்திரா குளித்து வர, கதிர் சுடச் சுட தோசை ஊற்றித் தர, சமையலறை மேடையிலே அமர்ந்து உண்டாள். அவன் ஊற்றிய தோசையில் கூட அவள் குறை காண, “இந்தா வா, நீயே செய்..” என்றவன் அழைத்தான். 
மறுத்தவள், “நோ நோ நான் செய்வேன்னு எதிர்பார்க்காதே, ஒரு தடவை தட்டிவிட்டதுக்கு காலம் முழுக்க நீ தான் எனக்கு செய்யணும்” அது தான் தண்டனை என்பது போலே உரைத்தவள், “முறுகலா ஒரு நெய் தோசை” என்றும் ஏவினாள். 
ஓவரா பண்ற, எல்லாம் என் நேரம்! மனதில் புலம்பியவன், “நான் என்ன வேணும்னா தட்டிவிட்டேன்? நான் வேண்டாம்னு சொல்லியும் நீ தான் என்னைச் சாப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்தின?” என்றவன் தன்புற நியாயத்தைக் கேட்டான். 
“மாமா நினைவு நாள் நீ துக்கத்துல இருக்கேன்னு எனக்கு எப்படித் தெரியும்? யாருமே சொல்லையே? நான் செய்ததும் தப்பு தான் உங்கிட்ட உரிமை எடுத்துக்கிற அளவுக்கு எனக்கு உறவு இல்லைல?” என்றாள் தன்னிறக்கமாக. 
“ம்ச்.. ஏன் இப்படிப் பேசுற வது?” எனச் சலித்துக் கொண்டவன், நெய்தோசையை அவள் தட்டில் வைத்தான். 
அவள் ருசிக்க, “வார்த்தையில அடிக்கிறட்டி நீ, இப்படிப் பேசப் பேச தான் எனக்கு கில்ட்டியா பீல் ஆகுது. எங்கிட்ட உன்னைத் தவிர வேற யாருக்குல உரிமை இருக்கு சொல்லு?” என்றான் ஆதங்கமாக. 
இருக்கார்கள் தானே அவளொன்றும் சொல்லவில்லை. மௌனமோடு பார்த்தவள் அவனுக்கும் உணவு ஊட்டினாள். மறுக்காது வாங்கிக்கொண்டவன், “நான் உன்னைச் சரியா கவனிச்சிக்கில்லையா?  ஏதோ தப்பு செய்றேன், அதைத் திரும்பத் திரும்ப செய்யக்கூடாதுன்னு நினைக்கிறேன். சொல்லு கஷ்டப் படுத்துறேனா?” என்றான், அவள் விழிகளுள் ஊடுருவும் பார்வை வீசி. 
தரை நோக்கி பார்வை தாழ்த்தியவள், “அப்படிச் சொல்லிட முடியாது. இப்படியெல்லாம் இருக்கும் தெரிஞ்சே தானே உன் பின்ன வந்து பிடிவாதமா கட்டிக்கிட்டேன். அப்படி இருந்தும் ஏன் எதிர்பார்க்கிறேன்னு தான் தெரியலை. அதான் ஏமாந்து மனசொடைஞ்சி போயிடுதேன். என்ன செய்ய, பெண் மனசுல ஆசைகள் அதிகமா இருக்கும்” என்றவளின் குரலே உள்ளிறங்கியது. 
அவள் சண்டையிட்டதை விடவும், அவனைக் குறை கூறியதை விடவும் இப்போது தான் அதிகமாக வலித்தது. அவள் முகம் நிமிர்த்திப் பார்க்க, சிப்பி விழியிரண்டும் முத்து முத்தாய் நீர்க் கோர்த்திருந்தது. ஆதரவாய், ஆறுதலாய், நேசம் உரைக்கும் விதமாய், மெல்ல இமை இரண்டிலும் இதழ் ஒற்றினான். 
அவன் நெஞ்சில் புதைந்து அணைத்துக் கொண்டவள், “ஒரு வேளை மாமா உயிரோட இருந்திருந்தால் நம்ம வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? எந்த நெருடலும் இல்லாம உனக்கு என்னை இன்னும் பிடிச்சியிருக்குமில்ல?” எனக் கேட்டவளின் மனம் அவனுள்ளே தனக்கான நேசத்தைத் தேடியது. 
மறுக்கவே இல்லை, ஆமென்பதைப் போல் தலையசைத்தவன், “அப்போ, இப்போன்னு இல்லை எப்பவுமே உன்னை எனக்கு பிடிக்கும். அப்பா இருந்திருந்தால்.. இன்னும்  இரண்டு குடும்பமும் உறவா இருந்திருக்கும், நம்ம கல்யாணம் இப்படி நடந்திருக்காது, இதை விடச் சிறப்பா நடந்திருக்கும், ஏன் நமக்கு பிள்ளைங்க கூட இருந்திருப்பாங்க..” என்றான், கற்பனையில் காட்சி கண்டது போல் இளகிய முகமாக. 
அவன் கற்பனைக்குள் அவளால் ஊடுருவ இயலவில்லை, தன் கற்பனையாக, “ம்ம், நாங்க தப்பே செய்திருந்தாலும். மாமா எங்களை இந்த அளவுக்கு வெறுத்திருக்கவோ விலக்கி வைச்சிருக்கவோ மாட்டார் தானே?” என்றாள். 
“உண்மை தான் கடைசி நிமிடங்கள்ல கூட வருந்தினாரே தவிர, உங்களை வெறுக்கவோ விலக்கி வைக்கவோ இல்லை. இவ்வளவு ஏன் இப்போ இருந்திருந்தால் கூட உங்களை மன்னிச்சிருப்பார்! உங்களை வெறுக்க ஒரு போதும் அவரால முடியாது” என்றான் உளமார உணர்ந்து.
“உயிரோட இருக்கும் போது எங்களை மன்னிச்சிருப்பார்னா இப்போ தெய்வமா ஆன பிறகா எங்களை வெறுக்கப்போறார்? நம்ம கல்யாணத்தை எப்படி அவருக்கு செய்த துரோகமா நினைப்பார்? தெய்வமா இருந்து நம்மளை ஆசீர்வதிக்கத் தானே செய்வார்?” என்றாள். 
அவள் சொல்லவும் தான் தோன்றியது ஏன் இந்த விதத்தில் யோசிக்காமல் போனேன் இத்தனை நாளும் என  விம்பினான்.  குற்றவுணர்வில் குறுகியதெல்லாம் முட்டாள் தனமானது.  தவறாயினும் தந்தையே ஏற்கும் போது நான் ஏன் ஏற்காமல் போனேன் என நொந்து கொண்டான். அவன் முகம் பெரும் யோசனையைக் காட்ட, அதைக் கண்டுகொண்டவள் சுணக்கமாக அணைப்பிலிருந்தது விலகினாள். 
அந்த அசைவிலே சிந்தை களைந்தவன், மீண்டும் அவளை இழுத்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டு அவள் தோளில் முகம் புதைத்து படுத்துக்கொண்டான். பெரும் மௌனம், நீண்ட மூச்சுக்கள், கழுத்தோரம் சுவாசிக்கும் அவள் வாசம் அவனை ஆசுவாசப்படுத்தியது. இன்னும் இன்னும் கண்மூடி உள்ளிழுத்துச் சுவாசித்தான். அவஸ்தையாக நெளிந்து கொண்டிருந்த சந்திரா அதற்கு மேலும் பொறுமையின்றி, அவனை விலக்கினாள். 
ஏக்கமோடு நிமிர்ந்தவன், “ம்ச், என்னலே..” என்க, “முதல்ல தள்ளி நில், இல்லை..” அணிந்திருக்கும் பனியனை கழட்டும் படி ஒற்றை விரலால் சைகை செய்தாள்.
அவன் முறைப்பாய் பார்க்க, “யாரோ தேய்த்த மஞ்சளுக்கும், தெரியாமல் கொட்டுன சாம்பாருக்கும் சாமியாடுனவன்ல நீ.. தள்ளியே இரு!” என்றவள் விரல்களால் விரட்ட, அதற்குள் பனியனை கழட்டி இருந்தவன், விரட்டிய கை பற்றி இழுத்து நெஞ்சோடு இறுக அணைத்தான். 
அவள் திமிற, விடாது கன்னத்தில் இதழ் பதித்தவன் முத்தமிட்டு அழுத்தக் கடித்தான். சிறு வலியோடு தோளில் அடித்தவள், தன்னிடையில் தவழும் ஐவிரல்களை பிரிக்க முயன்றாள்.இடை இறுக அணைப்பை இறுக்கியவன், “இப்படிப் பேசி பேசி தான் என்னை சீண்டுறட்டி நீ..” என்க, “அப்படியே நான் சீண்டி, நீ சீறிட்டாலும்..க்கூம், இப்போ தான் நான் இருக்கிறதே உன் கண்ணுக்குக் தெரியுதோ..?” என்றவள் உதடு சுளித்துச் சிலுப்பிக் கொண்டாள். 
இவனை கண்ணைத் திறக்க வைப்பதற்குள் சண்டை இழுத்து, வீட்டை விட்டுச் சென்று எத்தனை ஒரு போராட்டம் என்ற சோர்வு அவளுள். 
சிவந்த இதழ் சுளிப்பில் கவனம் ஈர்க்கப்பட, கன்னம் விட்டு இதழ்களைக் கவ்வினான். மின்சாரம் பாய்ச்சும் மின்னல் வேகம், வன்மையான வலியோடு ஒரு முற்றுகை! நொடியோடு நின்று விட்டுடவில்லை. என்னவோ தணியாத வேகம், அவள் துவள, அதன் பிறகே சற்று இளைப்பாறின சுவாசங்கள். 
கொஞ்சல் குரலில், “ஏதோ அருவிக்குளியல்ல அசதியா இருப்பேயேன்னு பாவம் பார்த்து விட்டால் ரொம்ப பேசுறல நீ..” என்க, அசதியா! என நினைத்தவள் சின்ன மூரல் அரும்ப, ஒற்றை புருவம் உயர்த்தி, “பார்த்தா எப்படித் தெரியுதேன்?” என்றாள். 
அவள் புருவம் உயற்றியத்தில் இடது கண் இமை மடிப்பில் மறைந்து கிடக்கும் மச்சம் எட்டிப்பார்க்க ரசித்தவன், ஒற்றை விரல் கொண்டு நீவியபடி, ஓரடி தள்ளி நின்று ஆராய்ச்சியாய் அவளைப் பார்த்தான். 
நேற்றைய அருவி நீரில் ஊறிய தேகம் வழக்கத்தை விடவும் மேலும் வெளுப்பாகத் தெரிய, மூடிய இதழுள் இருக்கும் மோகனப்புன்னகையும் விழிகளில் தேக்கிய ஆசையும் அவனை மயக்கியது. 
மறு நொடியே பதிலின்றி அவளை அள்ளி எடுத்துத் தூக்கியவன், சமையலறையிலிருந்து வெளியேற, எதிர்பாராது தடுமாறியவள் பிடிப்பின்றி அவன் தோள்களை இறுகக் கட்டிக் கொண்டாள். மெல்லிய குரலில் காதோரம், “ரசகுல்லா மாதிரி தெறியுரே..” என்றபடி கட்டிலில் இறக்கிவிட, அவனையும் தன்னோடு இழுத்துக்கொண்டாள் அவள். 
அவனுள்ளும் அளவிட இயலா நேசம் அவள் மேல் உண்டு என்று அவளுக்குத் தெரியும். மீண்டும் துவங்கிய இதழ் முற்றுகை போராட்டம் மேலும் நீண்டது. கொஞ்சி கொஞ்சி முகமுழுவதும் முத்தமிட, சுகமாய் தாங்கியவள் உடலோடு அணைத்துக் கொண்டாள். 
இருவருக்குள்ளும் ஒரு மயக்கம் இன்னும் வேண்டுமென்ற ஏக்கம்! மனதில் எந்தவித சுமையோ குறையோ இன்றி நிறைந்த மனதில் எடையிட முடியாத நேசத்தோடு அவளை நெருங்கினான். அவளின் சில்லிட்ட உடலுக்கு அவன் தரும் வெப்பம் இதமாக, மேலும் மேலும் இறுக்கமாக தன்னுள் புதைத்துக் கொள்ளும்படியாக அணைக்க, அவளுள் புதைந்தவன் மெல்ல அவளை ஆண்டான். 
கழுத்தோரம் முகம் புதைத்தவன் அவளின் சுகந்தமான வாசத்தைச் சுவாசமாக இழுக்க, அவன் மீசை முடிகளின் குறுகுறுப்பு தேகமெங்கும் சிலிர்க்கச் செய்தது. இருவரும் தங்கள் உடலிலும் உள்ளுக்குள்ளும் வெப்பம் உணர்ந்தனர். 
அந்த புதுவித சுகமும் சுகந்தமும் அனைத்தையும் மறந்து அவனையே தொலைக்கும்படி கிறங்கி போதை ஏறச் செய்தது. ஆறுதலான அணைப்பும் மெல்லினமான முன்னெடுப்பும் அவன் மேல் அவளை பித்தாக்கியது. 
பூமியைத் தொட்ட முதல் மழைத் துளி எதுவோ? ஆனால், தொடும் ஒவ்வொரு துளியிலும் குழைவதைப் போல் ஒவ்வொரு தொடுகைக்கும், முத்தத்திற்கும்  சிலிர்த்தவள் மொத்தமாகச் செம்புலம் ஈர்க்கும் நீர்த் துளி தன்னுள் ஈர்த்துக் கொள்ள, இரண்டற இருவரும் கலந்தனர். 
முதல்முறை உணரும் புது உணர்வின் இனிமையும் தித்திப்பும் போதும் என நிறுத்தவில்லை. அவன் மீண்டும் மீண்டும் அவளிடம் சாய, ஆசையாய் இசைந்தாள் அவளும். தீராத மோகம், மிதமான வேகம், அணையாத ஆசைகள், முடியாத உறவாகியது அங்கு! 
இரவு அருவிக் குளியலின் ஆனந்தத்தை விட, வெப்பம் தணிந்து கலந்த வியர்வை துளிகளோடு இட்ட ஈர முத்தம் சில்லென்று நெஞ்சில் ஒட்டியது. உடல் அதிகம் சோர்ந்த பின்பே, திருப்தியற்ற மனநிலையில் இருவரும் கண்ணயர்ந்தனர். 

Advertisement