Monday, July 27, 2026

    Oru Kaava(tha)lanin Kathai

    " நிஜமாகவே சொல்கிறீர்களா சார்" என்று தன் ஆச்சரியத்தை வெளியிட்டு உரிய நன்றியையும் தெரிவித்துக் கொண்டு அவனிடம் விடை பெற்றாள். அவள் செல்வதை பார்த்துவிட்டு எதிரிலிருந்தவனிடம் "ஐயோ மறந்துவிட்டேனே" என்றான் அத்விக்.  "நீயா டா இது!  இந்த சிக்கன் (காரமாக இருந்ததால்) செய்தவனை மன்னித்தாலும் மன்னிப்பேனே தவிர உன்னை ஒரு நாளும்" ராகுலின் வாக்கியம் முடியும் முன்னே...
    " சரி நான் என்ன செய்தால் இதற்கு நீ ஓகே சொல்வாய்" என்று மீண்டும் விட்டுக் கொடுக்கவும் கடுப்பானவன் "அந்த கிணற்றில் போய் குதி உடனே உன் சி . டி கையில் இந்த போனை கொடுக்கிறேன்" என்று சொன்னதும் நொடியும் தாமதிக்காது கிணற்றில் பாய்ந்தாள். அவர்கள் கத்தல் அவள் காதுகளில் விழுமுன்னே கிணற்றிலேயே...
    ராகுலின் பெயரை குறிப்பிடவும் மூன்று பேருக்குமே ஒருவித அதிர்ச்சி. முதலில் தெளிந்தது மிருதுளா தான். அத்ரிஷின் மூலம் நடந்தவற்றை அறிந்து இருப்பாள் என கணித்ததால் ராகுலை ஹர்ஷிதாவிற்கு தெரிந்திருக்கிறது என்று எண்ணினாள் . நண்பர்கள் இருவரின் குழப்பத்தை பார்த்ததும் "என்ன அத்விக் சார் ஒரு விருதை வாங்கி விட்டீர்கள் என்றால் உங்கள் பெயரை தான் ஜெபிக்க வேண்டும்...
    " என்ன சொன்னீர்கள் ?" தயக்கத்துடன் வெளிவந்தது அத்வியின் குரல். " எதை கேட்கிறாய்?" தெரிந்தும் தெரியாதபடி கேட்ட அதிர்ஷடம் "உனக்கு தெரியாதா?" காய்ந்தான் அத்விக். " என்ன சொல்லி இருப்போம் என்று நீ நினைக்கிறாய்?" மீண்டும் கேள்வியை திருப்பியவனிடம் "ஒழுங்காக சொல்லுடா" பொறுமை இழந்து கத்தினான் அத்விக். " என்ன முடிவு எடுத்துள்ளீர்கள்" என்று ஜெகன் தான்...
    விட்டுச் சென்ற போது எப்படி இருந்ததோ அதில் ஏதும் துளி மாற்றம் இல்லாமல் அப்படியே வரவேற்றது அவனது வீடு. மெயின் கேட்டிற்கும் வீட்டிற்குமே ஒரு ஏக்கர் அளவிற்கு இடைவெளி இருந்தது. அதில் பாஸ்கட் பால் கோர்ட் ஒரு ஓரமாக வளைக்குள் தடுத்திருக்க மறுபுறம் எப்போதும் அவர்கள் விளையாடும் கிரிக்கெட் வாசம் நிறைந்திருந்தது. வீட்டின் காம்பவுண்ட்...
    பிரபல துணிகடை ஒன்றிற்கு திருமணத்திற்கான ஷாப்பிங் செய்ய வந்திருந்தனர் அத்விக் வீட்டினர். ரூபா அழைத்தபோது "இதற்கெல்லாமா வருவார்கள்... உங்களுக்கு பிடித்ததை வாங்கிவிடுங்கள் அம்மா " என்று அந்த வாரநாளில் சென்னை செல்ல மறுத்திருந்தான் அத்விக். பட்டுபுடவை தளத்தில் தங்கள் முன் பரப்பி வைக்கப் பட்டிருந்த நூறு புடவைகளை அலசிய தோழிகள் இருவரும் "இந்த கலர்ல அந்த...
    ராகுல் போன் செய்தவுடன் நாகரீகமாக எழுந்து வெளியேற சென்றவனை தடுத்த ஹர்ஷிதா "இந்தா அத்வி இந்த தாலியை என் கழுத்தில் கட்டி விட்டு போய் அந்த போனை அட்டென்ட் பண்ணு" என்று நிறுத்தினாள். இவ்வளவு பாசமாக நேசமாக ஆசையாக பரிவாக மிருதுவாக காதலாக திருமணம் செய்து கொள்ள யாரும் கேட்டிருக்க மாட்டர்!!!! அவ்வளவு கடுமை குடிகொண்டிருந்தது...
    "நான் ஆத்ரிஷின் அண்ணன். என்னை அதிகம் பார்த்து இருக்க மாட்டீர்கள். ரொம்ப சந்தோஷம் சார் உங்களை சந்தித்ததில்" என்று ஒரு பெரிய கும்பிடு போட்டு பேச்சை முடிக்க விரும்பினான் அத்விக். அப்போது ஜெகன் அத்விக்கிற்கு போனில் அழைப்பு விடுக்கவும் எந்தவித கூச்சமுமின்றி "கொடு தம்பி... அப்பாகிட்ட நான் பேசுறேன்" என்ற தர்மதுரை சிறிது நேரம் உரையாடி...
    பிரகதியின் அழுகையைக் கண்டு குடும்பத்தினர் அவளை சூழ்ந்து "  ஹர்ஷிக்கு என்னாச்சு ?? நல்லா இருக்கா தானே ?? குழந்தை நல்லா இருக்கா ??? நீ ஏன் இப்படி அழுகிறாய் " என்று கத்தி கூப்பாடு போட்ட போதும் அத்விக் அவன் நின்ற இடத்தை விட்டு அசையவில்லை . பிருந்தா " எதுனாலும் சொல்லு ரதி........
    அத்விக் மும்பைக்கு செல்லும் முன்னே அவனுக்கு வேண்டிய ஆதாரங்களை ராகுல் திரட்டி வைத்திருந்தான். ஒரே நாளில் இந்தியாவின் அதிமுக்கிய தொழிலதிபரான தனபாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பது என்பது அவ்வளவு எளிதான ஒன்று அல்லவே. அவனின் ஆரம்பகாலத்தில் தள்ளுபடி செய்த வழக்குகளை மீண்டும் துருவி இருந்தான். தனபால் விட்டு வைத்திருந்த சிறு சிறு ஓட்டைகளையும்...
    தன்னிடம் பேசாவிட்டாலும் தன்னை தேடுகிறாள் என்று நினைத்ததும் ஒரு வித சுகம் தன் உடலெங்கும் பரவ "கொஞ்சம் பிஸி அரிசி மூட்டை... இப்போது கூட உனக்கு அழைத்தால் உன் தூக்கம் கெட்டு விடுமோ என்றுதான் கூப்பிடவில்லை" என்று சமாதானம் கூறினான். கணவனின் கூற்றில் ஹர்ஷிதாவின் மனம் சமாதானம் அடைந்தாலும் கெத்தை விட்டு தர முடியாமல் "அதை...
    அதிகாலையில் மும்பை வர வேண்டிய ரயில் இரு மணி நேரம் தாமதமாக வந்ததால் அத்ரிஷ் அவன் பெற்றோரிடம் தம்பதியினர் குறித்த கேள்விக்கு வீட்டில் இருப்பதாக தெரிவித்து விட்டு அங்கு சுற்றி இங்கு சுற்றி மூன்று மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்த பின்னும் அத்விக்கும் ஹர்ஷிதாவும் வீடு திரும்பி இருக்கவில்லை . "அவர்கள் எங்கே அத்ரிஷ்...
    அவள் எதற்காக குதிக்கிறாள் என்றெல்லாம் யோசிக்க நேரம் இன்றி ஆள் கிடைத்தால் போதும் என்று தனபாலின் ஆட்கள் ஹர்ஷிதாவை ஒரு ஆம்னி வேனில் உள்ளே தள்ளி விட்டு கிளம்பிச் சென்றனர். கயிற்றைக் கொண்டு அவளது கை கால்களை கட்டி விட்டு ஒரு துணி கொண்டு ஹர்ஷிதாவின் வாயையும் அடைத்தனர். ' டேய் நானே தான்டா வரேன்... எதுக்கு...
    கணவனின் ஸ்பரிஸத்தில் சற்று நேரம் அமைதியாக இருந்தவள் அவனை விலக்கி "எனக்கு என்ன பிராப்ளம் அத்வி?" என்றாள் ஹர்ஷிதா யோசனையுடன் . எப்படி தெரிந்தது என்று அதிர்ந்து மனைவியின் முகம் பார்த்தவனை "குட்டீஸ்க்கு எந்த ஆபத்தும் இல்லையே? நல்லபடியா பிறந்துருவாங்க தானே? சொல்லு அத்வி.... எனக்கு ஏதாவது பெரிய பிரச்சனையா? என் குழந்தைகளை பத்திரமாக பெற்றுத்தர...
    ஏர்போர்ட்டிற்கு தன்னை அழைத்துச் செல்ல வந்திருந்த விக்னவை கட்டியணைத்து வாழ்த்திய அத்விக் பொதுவான விசாரிப்புகளை மேற்கொண்டான். " ரதி தான்டா ஸ்கேன் பார்த்தாள். 'இதுதான் அத்தான் உன் பேபி... பார்த்துக்கொள்'.. என்று மானிட்டரிரை காமித்தாள் பாரு.... வேற ஃபீல்.... நீங்களும் சீக்கிரம் குட் நியூஸ் சொல்லுங்க மச்சி" என்றான் விக்னவ். விக்னவ் பேசப்பேச தன்னுள் இனம்புரியாத சுகம்...
    " டேய் இது உன் வேலையா?" என்று விக்னவ் அத்விக்கிடம் சந்தேகமாய் கேட்டான். அத்வியிடம் பதில் இல்லாமல் போகவும் "அன்றைக்கு 'கொஞ்சம் தனியாகப் பேசவேண்டும்' என்று உன்னை தான் கோகுல் அழைத்துக் கொண்டு சென்றான். அடுத்த நாள் தான் அவன் அடிபட்டு வந்தது. இப்போது யோசித்துப்பார்த்தால் நீதான் அவனை தள்ளிவிட்டு இருப்பாயோ என்று நம்பத் தோன்றுகிறது"...
    பெரிய இடத்து சம்மந்தம் மீண்டுவந்த மகிழ்ச்சியில் தன் பெண்ணிற்கு எடுத்துக்கூறும் விதத்தில் சொல்லிப் பார்த்தார் வசந்தி. ரிஷி பற்றி கூறும் போது தன் மனம் ராகுலின் புறம் சாய்ந்திருப்பதை உணர்ந்து கொண்ட மிருதுளா சிறு காலம் அவகாசம் கேட்டு மும்பை பணிக்கு பயணித்தாள். அன்று தன்னை தேடி வந்த மிருதுளாவை கண்டு அதிர்ந்தாலும் அப்போது வேறு...
    " திஸ் இஸ் ஸோ அன் ஃபேர் சி.டி .... இந்தா இதையும் நீயே குடித்துவிடு" என்று மல்லுகட்டியவளிடம் "அப்பத்தா தான் வீட்டிற்கு சென்றவுடன் உனக்கு ஒரு டம்ளர் பால் கொடுக்கச் சொன்னது" என்றான் அத்ரிஷ் சமாளிப்பாய். " அப்படி பார்த்தால் மித்துவும் இன்றுதானே அவர்கள் புருஷன் வீட்டிற்கு முதன்முதலில் வந்திருப்பார்கள்... அவர்களுக்கு மட்டும் ஏன்...
    தடுத்த ஹரிஹரனிடம் "ப்ளீஸ் மாமா என் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து விட்டேன். அதை திருப்பி பெற முடியாது. ஆனால் சொல்லக்கூட கூடாது என்றால் எப்படி?? " அவரை அமர்த்திவிட்டு மேற்கொண்டு பேசலானான் அத்விக். ஹர்ஷிதாவின் இதழ்களும் "விடு அத்வி" என்று உதிர்த்ததே தவிர "விடு அத்தான்ஐ" உபயோகபடுத்த வில்லை. அவள் அவ்வாறு கூறியிருந்தால் கண்டிப்பாக அவள்...
    " என்ன செய்கிறாய் இறக்கி விடு அத்வி" என்று திமிரியவளிடம் "இப்போது கத்தினால் அப்படியே கீழே போட்டு விடுவேன்" என்று மிரட்டல் ஒன்றை அத்விக் விடுக்க உடனே " விளையாட்டிற்கு கூட அப்படி சொல்லாதே அத்வி" என்று அதட்டிய ரூபா அவளை வீட்டில் விட்டு விட்டு வருமாறு தெரிவித்தார். இவர்கள் திருமணம் சொந்தபந்தம் அனைவருக்கும் பரிச்சயம் தான்...
    error: Content is protected !!