Advertisement

பிரபல துணிகடை ஒன்றிற்கு திருமணத்திற்கான ஷாப்பிங் செய்ய வந்திருந்தனர் அத்விக் வீட்டினர். ரூபா அழைத்தபோது “இதற்கெல்லாமா வருவார்கள்… உங்களுக்கு பிடித்ததை வாங்கிவிடுங்கள் அம்மா ” என்று அந்த வாரநாளில் சென்னை செல்ல மறுத்திருந்தான் அத்விக்.

பட்டுபுடவை தளத்தில் தங்கள் முன் பரப்பி வைக்கப் பட்டிருந்த நூறு புடவைகளை அலசிய தோழிகள் இருவரும் “இந்த கலர்ல அந்த மேங்கோ டிஸைன் இருந்திருந்தால் நல்லாயிருக்கும்ல…. பிங்க் கலர் செக்ஸ் பார்டர் சாரீ இருந்தா காட்டுங்க …. மல்டி கலர் சாரில ஆரஞ்ச் ப்ளவுஸ் இருக்கா…. ப்ளயின் லெமன் யெல்லோ சாரில முந்தி மட்டும் ஃபான்ஸியா இருக்கணும் …. அப்படி இருந்தா எடுத்து போடுங்க ” என்று கடைகாரர்களை ஒருவழியாக்கி கொண்டிருந்தனர்.

“ஏன்டி இன்னுமா செலக்ட் பண்றீங்க” என்றபடி இருமணி நேரம் கழித்து வந்த பிருந்தாவிடம் “இன்னொரு ரவுண்டு போய்விட்டு வாம்மா. அதற்குள் எடுத்துவிடுவோம் ” என்ற ஹர்ஷிதா “இந்த பீக்காக் டிஸைன் எப்படி அத்து?” என்றாள் தோழியிடம்.

அதர்வனாவிடம் பதிலில்லாது போக அவளை திரும்பி பார்த்தால் தலையை நிலத்துக்கடியில் புதைத்தபடி நின்றிருந்தாள்.
‘இவ்வளவு நேரம் நல்லாத்தானே பேசிட்டுருந்தாள்’ என்ற யோசனையுடனே ஹர்ஷிதா தன் தலையை எட்டி பார்க்க அவளுக்கு இடதுபக்கம் விக்னவ் வந்து நின்றது தெரிந்தது.

“நான் செலக்ட் பண்ணவா ஹர்ஷி?” என்ற அண்ணனின் கேள்விக்கு “டேய் கல்யாணத்திற்கு பிறகும் இப்படி தான் என்னை நடுவில வைச்சுகிட்டே பேசுவீங்களா … ஸப்பா ராமா என்னால முடியாது… நான் கிளம்புறேன்… என்னமோ பண்ணுங்க ” என்று கூறிவிட்டு நகர்ந்த ஹர்ஷிதா “இவனுங்க ரவுஸும் லவுஸும் தாங்கலபா …. போன்ல இருபத்திநாலு மணி நேரமும் பேசுவாங்களாம் நேர்ல பார்த்தா வார்த்தை சிக்கிக்குமாம்…. என்ன கொடுமை ஹர்ஷிதா இது” என்று தனக்குள்ளே புலம்பியபடி பக்கத்திலிருந்த ப்ரைடல் கௌன்ஸை பார்வையிடலானாள் .

“எக்ஸ்க்யூஸ்மீ….. அந்த ஸ்கை ப்ளூ டிரஸ எடுங்க ” என்று சேல்ஸ்மேனிடம் ஹர்ஷிதா கேட்டபோது “இல்லை வேண்டாம்… அதற்கு பக்கத்தில் இருக்கும் பீச் கலர் டிரஸை எடுங்க ” என்று அவள் காதருகில் ஒரு குரல் கேட்டது.

திரும்பி பார்க்காமலேயே தன் பின்னால் நின்றவனை அடையாளம் கண்டு கொண்ட ஹர்ஷிதா “எனக்கு அந்த ப்ளூ டிரஸ் தான் வேண்டும்” என்றாள் அழுத்தமாக.

“வர மாட்டேன் என்று சொன்னாய்???” ஹர்ஷிதா தன் கணவனிடம் வினவி கொண்டிருந்த போதே அவர்கள் கேட்ட இரு துணிமணி செட்களையும் டேபிளின் மேல் வைத்தார் கடைக்காரர்.

“உனக்கு செலக்ட் பண்ண ஹெல்ப் பண்ணலாம் என்று தான் வந்தேன். கரெக்டா என்ட்ரி கொடுத்தேனா…. ” என்று கண்ணடித்த அத்விக் “இது சூப்பரா இருக்கு ஹர்ஷி” என்றதோடு இல்லாமல் “இதையே பேக் பண்ணிடுங்க ” என்றான் அவன் தேர்ந்தெடுத்த உடையை.

“இல்லை அந்த ப்ளூ கலரையே பேக் பண்ணிடுங்க” என்று எடுத்து கொடுத்தவரிடம் சொன்னவள் “போட போறது நானு… ” என்ற வாக்குவாதத்தை அத்விக்கிடம் தொடங்கி வைத்தாள்.

அவள் சொன்னதும் அவன் எண்ணத்தில் தோன்றிய வார்த்தைகளை மனதிலேயே மறைத்து “பார்க்க போறது நானு…” என்று மாற்றி சொல்லி வைத்தான் .

“நீ பார்த்தால் பாரு பார்க்காவிட்டால் போ” என்ற மனைவியிடம் “அங்க பாரு ” என்று தொலைவில் இருந்த ஒரு ஜோடி புறாவை காட்டினான் அத்விக்.

“உங்க அண்ணன் கண்ணால செலக்ட் பண்றதையே அத்து பேக் பண்ண கொடுக்கிறாள்”

‘இவனுங்க இன்னும் பேசிக்கவேயில்லையா’ மானசீகமாக தன் தலையில் அடித்து கொண்ட ஹர்ஷிதா ” நீயும் கண்ணுல செலக்ட் பண்றதை அக்ஸப்ட் பண்ணும் பொண்ணையே செலக்ட் பண்ணியிருக்கலாம்ல… அதைவிட்டுட்டு தேவையில்லாமல் மித்துவை கூட்டிவந்து நிறுத்தி…..அன்று என்ன சொன்னீங்க சாரு !!” என்று கேலி கொப்பளிக்க சிரித்து வினவினாள் ஹர்ஷிதா.

‘கடவுளே!!! இப்போது எங்கிருந்து மித்து வந்தாள்’ என்றிருந்தது அத்விக்கிற்கு .
“எனக்கு எந்த பொண்ணும் வேணாம் . நீ தான் வேண்டும் அரிசிமூட்டை” என்றவனிடம் “ஆனால் எனக்கு அந்த ப்ளூ கவுன் தான் வேண்டும்” என்றாள் அவன் ராட்சஸி.

அப்போது அத்விக்கை கவனித்துவிட்ட விக்னவ் “எப்போது மச்சி வந்தாய்?” என்றபடி அவனிடம் விரைய “உன் கண்ணு புடவையெல்லாம் பார்த்து பரதநாட்டியம் ஆடுச்சே அப்போதே வந்து விட்டேன் மச்சி ” என்று சிரித்தான் அத்விக்.

ஷாப்பிங் முடிந்து அனைவரும் பார்க்கிங் சென்றபிறகு “இதோ வந்துவிடுகிறேன் அம்மா. நீங்கள் முதல் காரில் புறப்படுங்கள்” என்று ரூபாவிடம் கூறிவிட்டு மீண்டும் கடைக்குள் சென்றான் அத்விக்.

“அந்த பீச் கலர் டிரஸ் எங்கே?” என்று அவன் கேட்டதற்கு “நீங்கள் போன பிறகு அந்த பொண்ணே வந்து அந்த டிரஸை வாங்கிட்டு போய்ட்டாங்க சார்” என்றார் சேல்ஸ்மேன்.

மதிய உணவை வெளியில் முடித்துவிடலாம் என்று பிரசித்திபெற்ற ஒரு ஹோட்டலில் தங்கள் வண்டிகளை நிறுத்தினர்.

முதல் காரில் பயணித்தவளின் அருகில் சென்று அமர்ந்த அத்விக் “நம்ம ஹனிமூனுக்கு எங்க போகலாம்னு ஏதாவது பிளான் பண்ணி வைத்திருக்கிறாயா அரிசி மூட்டை” என்றான்.

கணவனின் திடீர் கேள்வியில் புரை ஏற “டார்லிங் இதை குடி” என்று அவள் அருகில் வந்து தண்ணீர் பாட்டிலை நீட்டிய அத்ரிஷை முறைத்து “எனக்கு இதை எடுத்து கொடுக்க தெரியாதா” என்று அத்விக்கும் ஒரு பாட்டிலை நீட்டினான்.

அண்ணன் தம்பி இருவர்களது பாட்டிலையும் வாங்காது எதிரில் அமர்ந்து தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த அதர்வனாவின் பாட்டிலை பிடுங்கி நீரை பருகியவளிடம் “குட் டார்லிங்” என்று ஒருவன் நகர்ந்துவிட மற்றொருவன் முறைத்தபடி திருப்பிக்கொண்டான்.

வீட்டிற்கு சென்றும் தன்னிடம் சகஜமாக உரையாடாதவனிடம் ‘ஓவரா போறான்’ என்ற எண்ணம் எழுந்தாலும் “இப்ப என்ன…. நீ கொடுப்பதை தான் வாங்கியாக வேண்டுமா?” என்றாள் ஹர்ஷிதா.

” இல்ல வேண்டாம்…. என்னுடைய கேள்விக்கு விடை தந்தால் போதும்” என்றான் அத்விக்.

“என்ன கேள்வி ” என்று கேட்கும்போதே ஹோட்டலில் அவன் எழுப்பிய வினா நினைவிலாட “நான் எந்த பிளானும் போடலை” என்றாள்.

” நாம போடுவோமா இப்போ” ஆசையாக கேட்டவனிடம் “போட்டு என்ன பண்ண போறோம்” என்றாள்.

“அதை அங்கே போய் சொல்கிறேன்”

” ஆனால் மிஸ்டர் துரை சிங்கம் சார் ஏதோ ஒரு சபதம் எல்லாம் போட்டீர்களே… அதெல்லாம் என்ன ஆச்சு?”

“அதையெல்லாம் என் பொண்டாட்டி கரெக்டாக செய்து விடுவாள்”

“செய்வாள் செய்வாள் “

“எப்போ செய்வாள்” அவள் பாணியிலேயே அவளிடம் இழுக்க “அவ்வளவு ஈஸியாக செய்வாளா என்ன? வேண்டுமானால் அவளை இம்ப்ரஸ் பண்ணு . நீ கேட்டதை செய்தாலும் செய்வாள்” என்று பேரம் பேசினாள் மனைவி.

“ப்ப்பூ இவ்வளவுதானா ஜோராக பண்ணிடலாம்” என்றவனுக்கு தெரியவில்லை அவள் அவனை வைத்து செய்ய போகிறாள் என்பது .

அடுத்த அரை மணி நேரத்தில் அத்விக் நீட்டிய பாதுஷா டப்பாவை வாங்கி முழுதாக காலி செய்தவள் “டேஸ்ட்ஸ் ரியலி குட் அத்வி. ஆனால் நெக்ஸ்ட் டைம் கொஞ்சமாக வாங்கி வா. எனக்கே சுகர் வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. அப்புறம் ஒரு விஷயம் எனக்கு எது வாங்கி கொடுத்தாலும் சி.டிக்கு தெரியாமல் பார்த்து கொள். இப்போதெல்லாம் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆஃபிஸராட்டம் பிஹேவ் பண்றான் ” என்றாள்.

பதில் பேசாது குழம்பி நின்றவனிடம் “ஓ! இது என்னை இம்ப்ரஸ் பண்ணவா அத்வி” என்றவள் “பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் அத்தான்” என்றுவிட்டு சென்றாள்.

சரி பாதுஷா சொதப்பினால் போகுது என்று தீவிரமாக யோசித்தவன் அடுத்த முறை சென்னை வந்த போது அவளது கண்களை ஒரு ரிப்பன் கொண்டு கட்டிவிட்டு தன் அறைக்கு அழைத்துச் சென்றான் .

அத்விக்கின் கைகள் ரிப்பனை அவிழ்த்து ஹர்ஷிதாவின் கண்களை விடுதலை செய்ததும் அவள் கண்ட காட்சி பிரமிக்க வைத்தது. சிறு வயது முதல் அவள் வரைந்த ஓவியங்கள் அனைத்தும் அவன் அறையின் ஒரு பக்கச்சுவர் முழுவதையும் நிரப்பிய வண்ணம் அழகுற காட்சியளித்தது .

கண்களில் காதலுடன் “எப்படி ?” என்றவனிடம் ” உன் சுவற்றுக்கு என் பெயிண்டிங்ஸை யூஸ் பண்ணியிருக்க.. பரவாயில்லை உனக்காக இதைக்கூட நான் தர மாட்டேனா என்ன!!” என்றவள் அவனது அதிர்ந்த பார்வையில் அவனிடம் நெருங்கி “அத்தான் இதெல்லாம் எனக்கு பிடிச்சிருக்கு. பட் என் எதிர்பார்ப்பு இது இல்லை. சோ பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்” என்றாள்.

மிக பிடித்த நடிகர் என்று மாதவனின் முன் தன் மனைவியை நிறுத்தினான் அத்விக்.
வீடு திரும்பியவள் கணவனை கண்டுகொள்ளாது நடிகர் மாதவனுடன் தான் எடுத்த செல்ஃபியை இன்ஸ்டாகிராமில் அப்லோட் செய்ய “அடியேய் இதற்கும் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் டயலாக்கை உன் திருவாயால் அடிக்காதே …. கடுப்பாகுது” என்றவன் கோபமாக சென்று விட்டான்.

தற்காலிக கோபம் மறைந்த பிறகு தன் அறையை விட்டு வெளியே வந்தவன் “அப்படி என்னதான் எதிர்பார்க்கிறாள் என்னிடம் ?? ” பலத்த யோசனையிலிருக்க “இந்த காஃபி ஆறியே போயிருக்கும். அப்படி என்னடா யோசனை ??” என்றார் ரூபா.

ஆஹா காஃபி !!!! இதை எப்படி மறந்தேன் !! என்று அவளுக்கு பிடித்த விதத்தில் காபி தயாரித்துக் கொடுத்தான் .

அத்ரிஷ் இருக்கிறானா என்று சுற்றும்முற்றும் பார்த்த ஹர்ஷிதா அத்விக்கை யையோடு அருகிலிருந்த அறைக்குள் கூட்டிசென்று கதவை மெதுவாக சாத்தி வைத்தாள்.

கடைசி சொட்டு வரை ருசித்து கொடுத்தவளை சற்று விசித்திரமாக பார்த்தவனிடம் “பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் சொல்ல எனக்கும் கஷ்டமாக தான் அத்தான் இருக்கிறது. ஆனால்…….. வேண்டுமானால் உனக்கு ஒரு க்ளூ தருகிறேன். உன்னால் இருமுறை தடை பட்ட ஒன்று உன் கையால் கிடைப்பதே என் டிமாண்ட்… அதை மட்டும் சீக்கிரம் கொடுத்து விடு அத்தான். அப்புறம் இந்த காஃபி செம்ம சூப்பர்.. தாங்யூ ஸோ மச் ” என்றாள் பல மாதங்களுக்கு பிறகு காஃபி பருகிய குஷியில்.

********

அப்படி இதுநாள்வரை தான் சப்மிட் பண்ணிய ப்ரூஃப்ஸையும் அவள் டிமாண்டையும் அவர்கள் முதலிரவில் நினைவுகூர்ந்தபடி சற்று நேரம் அமைதியாக நின்றவனிடம் “தூங்கலாமா அத்வி “என்று வினவினாள் ஹர்ஷிதா.

ஆயினும் அத்விக் முகத்தில் தோன்றிய அலாதியான நம்பிக்கை அவளை சற்று குழப்பியது. இன்றும் எதையாவது செய்து வைத்திருப்பானோ அல்லது தான் நினைத்தது கிடைத்துவிடுமா என்று யோசித்தபடியே கட்டில் அருகில் சென்றவளிடம் “அப்போ இது வேண்டாமா ஹர்ஷி பேபி?” என்று ஒரு பேப்பரை நீட்டினான்.

கண்களை அகல விரித்தபடி “என்னது இது?” என்று வினவியவளின் பேச்சுக்குழாய் வார்த்தைகளை வெளிவிடாது சிக்கிக் கொண்டது.

பள்ளி பருவத்தில் கோகுல் கொடுக்க வந்த போதும் சரி ஆர்யன் நீட்டிய போதும் சரி ஹர்ஷிதாவால் காதல் கடிதத்தை படிக்க முடியாது போனது . அப்படி என்ன தான் இருக்கும் இந்த லவ் லெட்டரில் என்று அவளுள் அழியா கேள்வி ஒன்று உருவாக காதல் கடிதத்தின் மேல் இருந்த மோகம் அவளிடத்தில் அதிகரித்திருந்தது.!!

இத்தனை நாளும் அதை மனதில் வைத்துக்கொண்டுதான் ‘என்னை இம்ப்ரஸ் பண்ணு’ என்று அவனை பாடாய் படுத்தியதும்.

அப்படிபட்டவன் ஒரு காகிதத்தை நீட்டவும் லவ் லெட்டரோ என்று அவளது இதயம் வேகமாக துடித்தது.

” என்ன என்று கேட்க கூட மாட்டாயா அரிசிமூட்டை??? சரி நானே சொல்கிறேன்…. இது லவ் லெட்டர் “

“வாட்ட்ட்ட்ட்ட்” இப்போது உச்சக்கட்ட அதிர்ச்சியின் வெளிப்பாடாக அவளின் சப்தம் அந்த அறையையே அதிரச் செய்தது.

இவளொருத்தி இப்படி வாத்து போல் முழித்தே ஏற்கனவே கவிழ்ந்து கிடக்கும் என்னை இன்னும் மூழ்கடிப்பாள் என்று நொந்து கொண்டவன்
“இதிலும் நீ இம்ப்ரஸ் ஆகவில்லையா? சரி விடு…. பெட்டர் ஐ ட்ரை நெக்ஸ்ட் டைம்” என்றான்.

“ப்ளீஸ் அதை கொடு அத்வி”

“அத்வியா…??? நெவர்”

“அத்தான் ப்ளீஸ் கொடு”

” இங்கே ஒன்னு கொடு தருகிறேன்”

“இது போங்காட்டம் போடா தடிமாடு”

“தடிமாடா இது வேலைக்காகாது. நான் வேற ட்ரை பண்ணி இம்ப்ரஸ் பண்ணிக்கிறேன். நீ போய் தூங்கு”

“அத்தான் ப்ளீஸ் அத்தான். இங்க வேண்டாம்” என்று அவன் கேட்ட இதழொற்றலை நிராகரித்தவள் கணவனின் கன்னத்தில் தன் முதல் முத்தத்தை பதித்தாள் அவன் ராட்சஸி.

அத்விக்கின் இமைகள் தானாக மூடிக்கொள்ள மெய்மறந்து நின்றவனின் கையிலிருந்த காகிதத்தை பிடுங்கிக்கொண்டு ஓடினாள்.

ஆசையாக அதை பிரித்து பார்த்தவளுக்கு வெறுமையாக அக்கடிதம் காட்சியளித்து அவளை ஏமாற்றிவிட “பிராடு … என்னது இது ??” என்று வேகமாக அவனது சட்டையை பிடித்திருந்தாள்.

” நானும் ட்ரை பண்ணினேன் அரிசி மூட்டை. ஒரு குயர் நோட்டை கிழித்து போட்டதுதான் மிச்சம்”

” என்னை ஏமாத்திட்டில …. காதலை எப்படி எழுதி இருப்பாய் என்று எவ்வளவு ஆசையாக அந்த பேப்பரை ஓபன் பண்ணினேன் தெரியுமா”

” உன் அத்தான் தியரி பேப்பரில் தான் வீக் ஹர்ஷி பேபி….. பிராக்டிகல்ஸ்ல எப்படி என்று பார்க்கிறாயா” என்று அவனிடம் சிணுங்கிய அந்த செவ்விதழ்களை பற்றிருந்தான்.

அவளிடமிருந்து எதிர்ப்பு எதுவும் வராது போகவும் சில நிமிடங்கள் நீடித்து விடுத்த இதழ் யுத்ததை மீண்டும் தொடர்ந்தான்.

மனைவியின் உதட்டு ரேகையை முழுதும் பயின்று முடித்து தன்னை மீட்டெடுத்தவன் தன்னுள் கண்மூடி அவள் வசத்தை முற்றிலும் தொலைத்தபடி மோனநிலையில் நின்றவளை பிரிய மனமில்லாது போக அவளை தன் மஞ்சத்தில் கிடத்தி அங்கு அவள் தீட்டி வைத்திருந்த ஓவியங்களுக்கு போட்டியாய் அவளின் மேல் காதல் சித்திரங்களை வரையலானான்.
கணவன் உதடுகளால் கற்றுத்தந்த புதுவித வரைபட கலையை இமைகளை திறக்காது சமத்தாய் கற்றுக் கொண்டவள் விடியற்காலையில் தூங்கிப் போனாள்.

நொடியும் கண் இமைக்காது தீவிரமாய் பாடம் புகட்டியவனை உறக்கம் தழுவிய சமயத்தில் அவனது செல்போன் அழைத்தது. அதை எடுத்துப் பேசிவிட்டு வைத்தவன் தன்னருகில் ஆழ்ந்த நித்திரையில் இருந்தவளை பார்த்து ரசிக்கலானான்.

அவள் நெற்றியில் முத்தம் ஒன்றை பதித்து “ஐ அம் சாரி அரிசி மூட்டை. ஒரே ஒரு கிஸ் மட்டும் என்று தான் நினைத்தேன் . என்னையுமறியாமல்….” பேச்சை தொடர முடியாது சிலிர்த்தபடி அவளை நெருங்கியவனின் மொபைல் மீண்டும் இசைத்தது .

அதை எடுத்து அணைத்தவனின் மனசாட்சி ‘ரொம்ப ஓவரா போறடா அத்விக்கு நேற்று நடந்ததற்கே எத்தனை செக்ஷனில் உள்ளே போட போறாளோ தெரியல… இதுல அடுத்த இன்னிங்ஸிற்கு ரெடியாகுற’ என்று திட்ட தன்னை உலுக்கிக் கொண்டவன் “கடமை அழைக்கிறது ஹர்ஷி பேபி. நெக்ஸ்ட் வீக் வருகிறேன்” என்று தூங்கியவளின் கன்னத்தில் இருந்த மச்சத்தை ஒருமுறை வருடிவிட்டு அவளிடம் விடைபெற்றுச் சென்றான்.

அப்படி கிளம்பியவன் அதன்பின் ஒரு மாத காலமாய் போதை மருந்து கும்பல்களையும் அவர்களது தலைவனையும் பிடிப்பதில் மும்முரமாய் மூழ்கி விட கிடைத்த தகவலின் பேரில் கொல்கத்தாவிற்கும் சென்றிருந்தான்.

தன் பணியை சிறப்பாக நிறைவேற்றிய சமயம் விக்னவ் அழைக்கவும் தன்னவளை பார்க்கப் போகும் ஆவலில் சென்னைக்கு புறப்பட ஆயத்தமானான் அத்விக். 

Advertisement