Advertisement

தான் காண்பது உண்மை தானா என்பது போல் கண்களை கசக்கி விட்டு மீண்டும் பார்த்தபடி அப்படியே நின்றான் அத்விக்……
‘ நான் லண்டனுக்கே போகிறேன் ‘ என்று கோபித்துக் கொண்டு சென்றவளை ” நில்லு பிரகி ” என்றான் ஆர்யன் .
அதைக் காதில் வாங்கிக் கொள்ளாது முன்னேறியவளிடம் ” சொல்றேன்ல நிக்க மாட்டாயா ? ” என்று ஆர்யன் கத்த அந்த சத்தத்தில் அவன் கையில் வைத்திருந்த நிலன் அழ ஆரம்பித்தான் .
” என் மேல் உள்ள கோபத்தை பேபியிடம் ஏன் காட்டுகிறாய் ? ” என்று அவனருகில் வந்த பிரகதி அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து  அவள் கையில் வைத்திருந்த நிலானி பேபியை  மடியில் வைத்து கொண்டு நிலனை ஆர்யனிடமிருந்து வாங்கி தோளில் கிடத்தினாள்.
” அழாதீங்க லிட்டில் சாம்ப் …… நீங்க அழுதீர்கள் என்றால் உங்க அப்பாவுக்கு கோபம் வந்துடும் …. அப்புறம் இந்த அங்கிளை டாடி சூட் பண்ணிவிடுவார் . அப்புறம் உங்க ரதி அத்தை தான் ஃபீல் பண்ணுவேன் . நான் பாவம் தானே .. சோ ப்ளீஸ் அழாதீங்க பேபி ” என்று அவள் கெஞ்சி கொஞ்சி சமாதானப்படுத்த குழந்தை சிணுங்கியதை நிறுத்தியதுமில்லாமல் அவள் தோளிலே படுத்து தூங்கி இருந்தது .
“சமத்து பேபி ….. அத்தை சொன்னதும் கேட்டுடீங்களே ” என்று கொஞ்சியவளை இமைக்க மறந்து பார்த்தான் ஆர்யன் .
அவன் தன்னை பார்ப்பதை உணர்ந்து திரும்பிய பிரகதி ” நீ பயப்படாதே ஆர்யா உன்னைக் காப்பாற்றி விட்டேன் … எதற்கும் இவர்கள் அப்பா வருவதற்குள் ஓடிவிடு ” என்றாள் சிரியாமல்.
அவள் அருகில் அமர்ந்த ஆர்யன் அவள் கண்களை நேரே சந்தித்து ” கல்யாணம் பண்ணிக்கிறியா??? ”  என்று வினவினான்.
இவ்வளவு ஆழமான அழகான புதிதான வார்த்தைகளை எதிர்பார்த்திராதவள் ஆச்சரியத்துடன் அவனை ஏறிட்டாள் . தன் காதில் விழுந்தது சரி தானா என்று தெளிவுப்படுத்தும் பொருட்டு ” யாரை பண்ணிக்கணும் ? ” என்றாள் பிரகதி .
” எனக்கு தெரிந்த ஒரு பையன் இருக்கிறான் .. அவனும் டாக்டர்தான் .. லவ் ஃபெயிலியர் கேஸ் .. அவன் ஃப்ரெண்ட்காக என்ன பொய் வேண்டுமானாலும் சொல்வான் .. அது அடுத்தவர்களை எவ்வளவு பாதிக்கும் என்றெல்லாம் யோசிக்க கூட மாட்டான் “
” இவ்வளவு ட்ராபேக்ஸ் உள்ள ஆளை எப்படி கட்டிக்கிறது ? “
” என்ன பண்றது??? இவ்வளவு கெட்டவனை தானே உனக்கு பிடித்திருக்கிறது “
” எனக்கு பிடிப்பது இருக்கட்டும்….. அவனெல்லாம் திருத்த முடியாத கேசு … இதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள மாட்டான் “
” திருந்துவதற்கு நீ ஹெல்ப் பண்ண மாட்டாயா பிரகி ??? கல்யாணம் பண்ணிக்கொண்டு திருத்த முயற்சி செய்யேன் ” ஆர்யன் கேட்டதை நம்பமுடியாமல் பார்த்தவளின் விழிகள் கண்ணீரை அருவியாய் கொட்ட அதை துடைக்க மறந்தவள் ” என்ன திடீர்னு ஞானோதயம் ? ” என்றாள் .
அவள் கண்ணீரை துடைத்து விட்டவன் ” சாரி பிரகி … உன் மனம் பற்றி அப்போது எனக்கு தெரியாது , பிரஷனிடம் உன்னை காதலி என்று சொன்ன பொய் உன்னை எவ்வளவு ஹர்ட் பண்ணியிருக்கும் !!!
போன மாதம் நீ உன் காதலை வெளிப்படுத்தியதிலிருந்து சிறு உறுத்தல் . அதுவும் இன்று அங்கிளிடம் சண்டை போட்டாயா … என்னிடம் வேறு லண்டனிற்கே போகிறேன் என்றாயா … இனியும் உன்னை மிஸ் பண்ண கூடாது என்று தான் கேட்டேன் ” என்று விளக்கம் அளித்தான் ஆர்யன் .
பதில் பேசாது அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளிடம் ” ஆமா அந்த மண்டே லெட்டர்ஸ் எல்லாம் உன் வேலை தானா ? ” சந்தேகமாய் ஆர்யன் வினவினான்.
” அப்பாடா கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்தாவது கண்டுபிடித்தாயே … நம் சண்டைக்கு பிறகும் தொடர்ந்து நான் உன் கல்லூரி முடியும் வரை அனுப்பி கொண்டேதான் இருந்தேன்…..  வாத்து மடையன் என்று நினைத்தேன் …. பரவாயில்லை நீ சுமாரான மடையன் தான் ” என்றவளை ” ஏய் என்ன சொன்ன ” என்றபடி பிரகதியின் காதை திருகினான் ஆர்யன் .
” ஆ வலிக்குது வலிக்குது !! விடு ” என்று அலறியவளின் அருகே வந்த ரகுநாதனிடம்
” அங்கிள் அது வந்து … ” என்று ஆர்யன் தடுமாறினான்.
” உன் மாமனாருக்கு எல்லாம் தெரியும் … ரொம்ப பயப்படாதே ” என்று கண்ணடித்தாள் பிரகதி .
எப்போது என்பது போல் நோக்கியவனிடம் ” உன்னைப் பார்த்த முதல் நாளே டாடி கிட்ட சொல்லிட்டேன் . உன்னை பார்க்கிறேன் என்று அடிக்கடி நம்ம காலேஜ்க்கு வந்துவிடுவார் . சரி எதார்த்தமாக பேசுவார் என்று பார்த்தால் பிரஷன் கேட்கும் கேள்விகளுக்கும் சேர்த்து உன்னிடம் தான் சிரித்து சிரித்து பதில் அளித்து வைப்பார் . சரி இது சரிப்பட்டு வராது உன்னிடம் எதையாவது உளறி கொட்டிவிடுவார் என்று நான்தான் அவரை ரிஸ்ட்ரிக்ட் பண்ணினேன் ” என்றிருந்தாள்.
மகளின் வாழ்வில் நடக்கும் இந்த நல்ல திருப்பம் குறித்து மகிழ்ந்த ரகுநாதன் ” என் மாப்பிள்ளை நான் சிரித்து பேசுவேன் உனக்கு ஏன் ரதி பொறாமை ? ” என்றார் பிரகதியிடம்.
” சாரி அங்கிள் உங்களையும் ஹர்ட் பண்ணி இருக்கேன்னு புரியுது பட் .. ” பேச தடுமாறினான் ஆர்யன் .
” உன் நிலைமை புரியுது ஆர்யா . உன்னை பற்றி ஒரு வார்த்தை தப்பாக பேச விடமாட்டாள் ரதி ” என்று ரகுநாதன் கூற ” தேங்க்ஸ் அங்கிள் ” என்றான் ஆர்யன் உணர்ச்சியின் பிடியில் சிக்குண்டபடி……
” மாமானு கூப்பிடு மாப்பிள ” என்று ஆர்யனை அணைத்துக்கொண்டார் ரகுநாதன் .
அத்விக் கண்களுக்கு மாமனாரும் மருமகனும் கட்டிப்பிடித்துக் கொண்டு நிற்கும் காட்சி தென்படவும் தான் அவ்வளவு அதிர்ச்சியை சுமந்து குழம்பியபடி நின்றான் .
பின் சற்று நேரம் ரகுநாதனிடம் பேசிய ஆர்யன் ” சரி மாமா வீட்டில்  பேசிவிட்டு அப்பாவை வந்து நேரில் பேச சொல்கிறேன். இப்போது ஹாஸ்பிடலுக்கு கிளம்பணும் ” என்று விடைபெற
பிரகதி ” என்னையும் டிராப் பண்ணு ஆர்யா … பேபிஸை கொடுத்துவிட்டு வருகிறேன் ” என்று எழ முயன்றாள் .
” இரு இரு ….. ” என்று நிலனை வாங்கிக் கொண்ட ஆர்யன் குழந்தைகளை ரூபாவிடம் ஒப்படைத்துவிட்டு ” உன் வெஸ்பா என்னாச்சு ? ” என்றான் பிரகதியிடம் .
“வீட்டில் இருக்கிறது…. நான் அப்பா கூட வந்தேன் “
“ஓ !! நான் வேண்டுமானால் விக்கியிடம் கார் வாங்கி வரவா??? “
ஏன் என்று புரியாமல் பார்த்த பிரகதியிடம் ” இல்லை நான் சிவிக்கில் தான் வந்தேன் . நீ தான் அதில் ஏற மாட்டாயே….. நாளை முதல் வேலையாக காரை மாற்றிவிடலாம் சரியா ” என்றான் ஆர்யா.
அவனை பார்த்து நன்றாக சிரித்த பிரகதி
” இப்போது தோஷம் எல்லாம் சரியாப் போச்சு ஆர்யா…… உன் சிவிக்கிலேயே நாம் போகலாம் …. எனக்கு எந்த பிரச்சனையுமில்லை” என்றவளை நம்பாமல் பார்த்தான் ஆர்யன் .
கல்லூரி சமயத்தில் ஒருநாள்கூட அந்த காரில் ஏறிராத பிரகதி “கார் வாங்கும் போது ஜோசியர் இந்த புளூ சிவிக்கில் நான் ஏற கூடாது என்று கூறவும் தான் அப்பா வைட் சிட்டி வாங்கினார் . அப்பா ஜோசியரின் பேச்சை அவ்வளவு நம்பும் போது எனக்கும் இதில் பயணிப்பது சரியாகப்படவில்லை ஆர்யா ” என்று அதற்கு ஒரு காரணம் வரைந்திருந்தாள் .
அப்போது வெளியே அவர்கள் செல்ல வேண்டுமென்றால் பிரஷனின் பைக்கில் தான் ஏறிக் கொள்வாள் .
அப்படிப்பட்டவளின் இந்த திடீர் மாற்றத்திற்கான காரணத்தை அறிய முற்பட்டவன் ” உன் ஜோசியர் கதையெல்லாம் எனக்கு வேண்டாம்…..  உண்மையை சொல்லு…. ஏன் அந்த காரில் ஏற மாட்டேன் என்றாய்???” நீ சொல்லாமல் எழ மாட்டேன் என்று சட்டமாய் அமர்ந்து கொண்டவனிடம்
  ” இந்த காரை முதல் முதலில் நம்ம காலேஜிற்கு நீ ஓட்டி வந்தபோது “என் காதலியுடன் இதில் போக மிகவும் ஆசையாக இருக்கிறது” என்று ஏக்கத்துடன் சொன்னாயா …. அப்போதே ஒரு சபதம் எடுத்தேன் உனக்கு பொண்டாட்டி ஆகிவிட்டு தான் இந்த காரில் ஏறுவேன் என்று …. எப்போது நம் கல்யாணத்திற்கு கேட்டாயோ அப்போதே பாதி பொண்டாட்டி ஆகி இந்த புளு சிவிக்கில் ஏறும் தகுதியை பெற்று விட்டேன்…. என்ன முழு பொண்டாட்டி ஆக்கி விடுவாய் தானே …… ” கடைசி வரியை கிட்டத்தட்ட மிரட்டும் தொனியில் மொழிந்தவளை பார்த்த ஆர்யனின் பார்வையில் காதல் வழிந்தோடியது .
பட்டுப் புடவையில் இருந்து ஒரு காட்டன் சல்வாருக்கு மாறியிருந்த ஹர்ஷிதா பேயறைந்தது போல் நின்ற அத்விக்கை கண்டு அவனிடம் விரைந்து ” என்ன ஆச்சு அத்வி ? ” என்றாள் .
ஆனால் ஹர்ஷிதாவின் கேள்வி அவனை எட்டியதாகவே தெரியவில்லை .
எதை இப்படிப் பார்க்கிறான் என்று தன் கணவன் நோக்கிய திசையை பார்த்த போது சற்று தொலைவில்
” வண்டியை மாற்ற வேண்டாம் சிவிக்கே போதும் என்கிறாய் ! ” என்று ஆர்யன் வினவியதற்கு ” சிவிக்கை மாற்றினால் கல்யாணமே இல்லை என்கிறேன் ” என்று பிரகதி நமட்டு சிரிப்போடு பதிலளித்துக் கொண்டிருந்தாள் .
” ஒருவழியாக சேர்த்து வைத்து விட்டாயா அத்தான்???
நான் கூட சும்மா சொல்கிறாய் என்று நினைத்தேன்!!!! ஆனாலும் கமிஷனர் சார்னா சும்மாவா என்று ப்ரூவ் பண்ணி விட்டாய்!?!?  கிரேட் கிரேட் ” என்று கணவனை பாராட்டிய ஹர்ஷிதா
” இந்த ஆங்கிரி பேர்ட்ஸ் லவ்பேர்ட்ஸா மாறியதால் என் நிலா பேபிஸ் எங்கே போனார்கள் ? ” என்று குழந்தைகளை தேட ஆரம்பித்தாள் .
” அதெல்லாம் பத்திரமாக கொடுத்துவிட்டு தான் சொல்கிறார்கள் ….. அம்மாவும் அப்பாவும் இப்போது தான் நிலா பேபிஸை ரூமிற்கு அழைத்துச் சென்றார்கள் ” என்றான் அத்விக்.
பெயர் சூட்டும் விழா நல்லபடியாக நடந்தேறியமையால் குடும்பத்தினர் அனைவரையும் உட்கார வைத்து மரகதம் பெரிய பூசணிக்காயை சுற்றி திருஷ்டி கழித்தார் .
இரவு தூங்குவதற்கு ஹர்ஷிதா தன் பிறந்த வீட்டிற்கு செல்வாள் என்று வாசலில் காத்துக்கொண்டிருந்த டைகரிடம் ” இன்று இங்கே தூங்கலாம் டைகர் கம் இன்…. ” என்று அவள் அழைக்கவும் அத்விக்கிற்கு முன் அவன் அறைக்குச் சென்றான் டைகர் .
” டைகர் ஸ்டாப் நான் தான் ஃபர்ஸ்ட் போவேன் ” என்று போட்டி போட்டவனை ” ஒரு நிமிஷம் அத்தான் ” என்று நிறுத்தினாள் அவன் மனைவி .
” எதுனாலும் ரூமுக்குள்ள போய் பேசிக்கலாமே ஹர்ஷி பேபி ” என்றவனிடம் ” கண்ணை மூடு ” என்று சொல்லிவிட்டு ஒரு ரிப்பனை எடுத்து அவன் கண்களில் கட்டினாள் .
” ஹே அரிசி மூட்டை என்ன பண்ற ? “
” உங்களுக்கு மட்டும்தான் சர்ப்ரைஸ் கொடுத்த தெரியுமா துரைசிங்கம் சார் ?? உள்ள வாங்க  ” என்று அவர்கள் அறையினுள் கூட்டி சென்றாள்.
” என்ன ஹர்ஷி பேபி பண்ணி வச்சுருக்க??? அத்தானுக்கு சர்ப்ரைஸ் தாங்கலையே!!! நம்ம ஃபர்ஸ்ட் நைட்ட விட ஹெவி டெக்கரேஷனோ…. நான் இப்பவே பார்க்கணும்” என்று ரிப்பனை கழற்ற போனவனின் கைகளில் ஒன்றை போட்டவள்
” ஆசையை பாரு…..இப்போ நீ கனவு காணுற பெட்ல தான் நிலா பேபிஸ் தூங்கிட்டு இருக்கிறாங்க…. இது வேற … சம்திங் ஸ்பெஷல் கண்டுபிடி அத்தான்” என்றாள் அவன் ராட்சஸி ஆசையாக.
” இதைவிட வேற ஸ்பெஷல் என்ன அரிசி மூட்டை இருக்க போகிறது???” என்றவன் சிந்தைக்கு பாவம் எந்த ஒரு எண்ணமும் தோன்றவில்லை….
“தெரியல அரிசி மூட்டை…. ஐ ஹேவ் சம் அதர் வொர்க்ஸ் டு டூ…. ஸோ நீயே உன் சர்ப்ரைஸ ரிவீல் பண்ணிவிடு… அதுவும் இப்பவே….” என்றவனின் விழிகளை சிறை செய்திருந்த திரையை நீக்கினாள் மறுப்பேதும் சொல்லாமல்.
அங்கு அவன் பார்த்தது அவனையே!!!!
  ஆள் உயரத்திற்கு அவன் யூனிஃபார்மில் நின்ற போட்டோ ஒன்றை ஒரு பக்கச்சுவர் முழுவதையும் நிரப்பியபடி பிரேம் செய்து மாட்டி இருந்தாள் .
அந்த அறையில் மறுபக்க சுவரை அத்விக் அவள் வரைபடங்களை கொண்டு நிரப்பியிருக்க இப்போது நேர் எதிர் சுவற்றில் அவ்வோவியங்களை பார்த்து கம்பீரமாய் சின்ன சிரிப்பொன்றை உதிர்த்தபடி நின்றான் அவள் காவலன்.
இவ்வளவு பெருசா அழகா மாட்டி இருக்காளே !!!!!
ஆனால் இதுபோல் தான் ஒருமுறைகூட போட்டோ எடுத்ததாக ஞாபகத்தில் இல்லையே என்று திடீரென தோன்ற அப்படத்தை உற்றுப்பார்த்தான் அத்விக் .
அவளின் கை வண்ணம் ….
அவ்வளவு தத்ரூபமாய் வரைந்து இருந்தாள் …
கண்ணாடி கூட பொய் சொல்லும் ஆனால் அவள் கைகள் தீட்டிய ஓவியம் !!!!
அப்படியே தன்னை மறந்து நின்றான் அத்விக் .
பதில் ஏதும் சொல்லாது நின்றவனை பிடித்து உலுக்கி “பிடிச்சிருக்கா அத்தான் ? ” என்றாள் ஹர்ஷிதா அவன் காதருகில் சற்று எம்பியபடி .
ஆனால் அவனோ கேள்வியே தவறு என்பது போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு ” எப்போது இதை வரைந்தாய் ? ” என்று மறு கேள்வி கேட்டான் .
” அது …. சரியாக சொல்லபோனால் நம் ரிசப்ஷனுக்கு அடுத்த நாள் இரவு … அவர் செகண்ட் நைட் …. நீ பாட்டிற்கு அன்று ஒன்றும் சொல்லாமல் விட்டு விட்டு சென்றுவிட்டாய் …
இரவு தூக்கமே வரவில்லை தெரியுமா ??? உன்னை காணாமல் ஓட்டிய ஆறரை வருடங்களையும் விடவும் அந்த ஒரு மாதம் மிகவும் கொடுமையாக இருந்தது …
என்னுள் முழுவதும் நிறைந்துவிட்டாய் ….
எங்கு பார்த்தாலும் உன் ஞாபகம் !!!! யாரைப் பார்த்தாலும் நீதான் தெரிந்தாய் !!!!
விட்டால் பைத்தியம் பிடித்து விடும் என்று இதை வரைய ஆரம்பித்தேன் . முழுதாக முடிக்க மூன்று நாட்கள் ஆனது …..
நேரம் போவது தெரியாமல் இந்த படத்தின் முன்னே நிற்பேன் தெரியுமா ??
நீ என்னடா என்றால் நல்லா இருக்கு என்று கூட சொல்லவில்லை !?!? ” என்றுகணவனை பாராமல்  படத்தைப் பார்த்து பேசியவளை பின்னிருந்தபடி அணைத்தான் அத்விக் .
அப்படியே அவளது கைகளை சிறை செய்து அவற்றிற்கு முத்தமழையை பொழிந்தவன் ” ரொம்ப ரொம்ப அழகா இருக்கு ஹர்ஷிபேபி … இந்த சந்தோஷத்தை வார்த்தையால் விவரிக்க முடியாது செயலில் காட்டி கொள்ளலாம் என்று தான் ஒன்றும் சொல்லவில்லை ” என்றான். மேலும்
” அன்று ஒரு முக்கியமான போன் வந்ததால் தான் அவசரமாக சென்றேன் . ஆனால் அப்போதும் நீ முழித்திருந்தால் உன்னை விட்டு சென்று இருப்பேனா என்பது சந்தேகம்தான் ” என்று அணைப்பை இறுக்கியவன்
” எனக்கும் ஃபுல்லா உன் நியாபகமாக தான் இருந்தது . அதுதான் இடையில் ஒருமுறை போன் கூட பண்ணினேன் ” என்றவனை தன்னிடமிருந்து விலக்கி தள்ளினாள் அவன் மனைவி .
” ஆமா ஆமா போன் பண்ணி காதல் சொட்ட சொட்ட நீ பேசியது இன்றும் தேன் போல என் காதில் கொட்டுகிறதே ” என்று சண்டைக்கு ஆயத்தமானவளை
” சொல்றேன்ல ஹர்ஷிபேபி ரொம்ப முக்கியமான வேலை என்று ” சமாதானப்படுத்த முயன்றான் அத்விக்.
“ரொம்ப முக்கியமான வேலை தான். யார் இல்லையென்று சொன்னது…. உன் வேலை தான் உனக்கு முக்கியம் … இப்போதும் கூட அப்படி ஒரு ஃபோன் வந்தால் ஓடிவிடுவாய்”
” இப்போ எதுக்கு அரிசி மூட்டை சண்டைய ஆரம்பிக்கிறாய்??? இப்போ ஃபோன் வந்தால் அதை எடுக்க கூட மாட்டேன்” என்று அத்விக் கூறும் போதே அவன் மொபைல் ஒலித்தது அதுவும் ஸ்கிரீனில் “ரமணன் சார்” என்னும் பெயரை சுமந்தபடி.
“இப்போ மட்டும் அந்த ஃபோனை நீ எடுத்த அவ்வளவுதான் ” என்று கண்ணால் கண்டித்தவளை மீற முடியாமல் சில நொடிகள்  தாக்கு பிடித்தவன் ஏதோ எமர்ஜென்ஸியோ தன்னை கட்டு படுத்த முடியாமல் தொடர்பு துண்டிக்கும் அரை நொடிக்கு முன்பு அதை உயிர்பித்தான்.
மனைவியின் முறைப்பில் மறு புறம் திரும்பி கொண்டவன் ” ஹலோ சார்…. ” என்றான்.
………
” யெஸ் சார்…..”
……..
” நோ ப்ராப்ளம் சார்..”
………
” தாங்க் யூ சார்…. “
……….
“கண்டிப்பா… டேக் கேர் சார்” என்று  பேசிவிட்டு போனை அணைத்தான்.
அதே இடத்தில் இன்னும் முறைத்து கொண்டு நின்றவளிடம் ” அது ஒன்னுமில்ல அரிசி மூட்டை…. பேபிஸ் பிறந்ததற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்… உன்னையும் கேட்டதாக சொல்ல சொன்னார்… மும்பைக்கு வந்தால் அவசியம் வீட்டிற்கு வர சொன்னார்” என்றான் சமாளிப்பாய்…
இப்போ ரொம்ப அவசியம் பாரு தன்னுள் என்று பொருமியவள்
அவனது விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாது ” நீ ரொம்ப கேட்டதால் தான் அம்மாவிடம் பர்மிஷன் வாங்கி இங்கே வந்தேன் . அதுவும் இன்று ஒரு நாள் தான் ….. உனக்கு என்ன சொல்லவேண்டுமோ அதை இப்போதே சொல்லு … பேபிஸ் தூங்கும் போது நாம் … ” என்று பேசியவளை இடை மறித்தான் அவள் கள்வன்.
” பேபிஸ் தூங்கும் போதே நாம் என்ன செய்யணும் ஹர்ஷி பேபி ? ” என்றபடி மனைவியை சரசமாய் நெருங்கினான் அத்விக் .
” நில்லு அங்கேயே நில்லு … பேபிஸ் தூங்கும்போது நாமும் தூங்கணும் என்று சொல்ல வந்தேன் … அப்போது தான் அவர்கள் முழித்தால் நாம் தூங்காமல் அவர்களைப் பார்த்துக் கொள்ள முடியும் ” என்றாள் அவசரமாக.
” அப்படியென்றால் என்னை எப்பொழுது பார்த்துக் கொள்வாய் ?? உன் அத்தானை பார்த்தால் பாவமாக தெரியவில்லை ???? “
” தெரியவே இல்லை ” என்று தலையாட்டியவளின் இடுப்பை ஒரே எட்டில் பற்றி
“இன்னைக்கு காலையில் பட்டு சாரியில் தான் நோட் பண்ணினேன் ஹர்ஷி பேபி இங்கு ஒரு மச்சம் இருப்பதை …… அன்று இரவு வேறொரு முக்கியமான வேலையில் பிஸியாக இருந்ததால் இந்த மச்சத்தை சரியாக கவனிக்க முடியவில்லை போலும்……  கன்னத்தில் இருக்கும் மச்சம் மாதிரியே இதுவும் என்னை பவர்ஃபுல்லா அட்டாக் பண்ணிவிட்டது . இப்போது அதுவா நானா என்று ஒரு கை பார்த்து விடட்டுமா ” என்று கேட்டவனை
” என்னை கொஞ்சம் நேரம் பார்த்துக்கொள்ளுங்கள் டாடி ” என்று நிலானி அழ ஆரம்பித்தாள் .
” இதோ வருகிறேன் பேபி ” என்ற அத்விக்
” வயிற்றில் இருக்கும் போது டாடி மம்மியுடன் பேசும் சமயம் டிஸ்டர்ப் பண்ணாதீங்க என்று சொல்லிக்கொடுக்க மறந்துட்டேனே ” என்று புலம்பியபடி குழந்தையை தூக்கினான் .
பேபி பசியில் அழுகிறதோ என்று ஹர்ஷியிடம் நீட்ட ” இப்போதுதான் ஃபீட் பண்ணினேன் . தோளில் போட்டு அழுகையை அமர்த்தி விடு அத்தான் ” என்றாள் அவன் மனைவி …
” பேபி டியூட்டியை சீக்கிரம் முடித்துவிட்டு வருகிறேன் அரிசி மூட்டை ” என்றவனுக்கு தெரிய வில்லை அடுத்த ஒரு வருடம் முழுவதும் காலையில் ஸ்டேஷன் டியூட்டியும் இரவில் நிலா பேபிஸ் டியூட்டியும் காத்துக் கொண்டிருக்கிறது என்பது !!!!!!!
முற்றும் . 

Advertisement