Advertisement

#ஒரு_காவ(த)லனின்_கதை_5
#episode_5
” ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது மச்சி. சரி இரு கமிஷனர் லைன்ல வர்றாரு நான் அப்புறம் கூப்பிடுகிறேன்” என்றவனை ராகுலின் அதிவேக “நோ” தடுத்தது.
” ஏன்டா” என்று அத்விக் வினவியதற்கு
” அந்த நற்செய்தியை என் திருவாயால் கேட்டுக்கொள் மகனே. யூ ஆர் கலெக்டிங் ‘சர்வோட்டம் யூத் சேவா அவார்ட்’ ஃப்ரம் பிரசிடெண்ட் நெக்ஸ்ட் வீக். யூ டன் இட் மச்சி. மை பெஸ்ட் அண்ட் ஹார்டி விஷஸ்”
ஆனந்த மிகுதியில் ராகுல் கூவினான் என்றே சொல்ல வேண்டும்.
 அவனது அதிமிகு மகிழ்ச்சிக்கான காரணம் அத்விக் தான் இவ்விருதை பெறும் இந்தியாவின் முதல் இளவயது ஐபிஎஸ் அதிகாரி. சுதந்திர தின குடியரசு தின விழாக்களில்  பத்மா விருதுகளும் சேவா பதக்கங்களும் இருநூற்றிற்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகள் சேவையின் அடிப்படையில் அவர்களது ஆற்றலை அதிகரித்து தெம்பூட்டும் விதமாக பரிசளிக்க படுகின்றனர். இந்தியாவின் உயர்ந்த முன்னுரிமை காவல்துறை விருதாக இந்த சர்வோட்டம் யுத் சேவா பதக்கம் வருடத்தில் ஒருவருக்கு கௌரவிக்கப்பட்டது. அவ்வகையில் இந்த ஆண்டிற்கான விருதை பெற தகுதி பெற்றிருக்கிறான் அத்விக். பெரும்பாலும் மிலிட்டரி அவார்டிற்கு நிகராக இப்பதக்கத்தை 40 வயதுக்கு மேல் உள்ள காவல்துறை தலைமை இயக்குனர் (டிஜிபி) காவல்துறை தலைவர் (ஐஜிபி) துணைத் தலைவர் (டிஐஜி) தான் பெறுவர். இதுவே முதன் முறையாக (ஏஎஸ்பி) காவல்துறை உதவி கண்காணிப்பாளருக்கு இவ்விருது கிடைத்திருக்கிறது.  அதிலும் 27 வயதில் அத்விக் இதை பெற்றிருப்பது இமாலய சாதனையாகவும் கருதப்படுகிறது .
இது அத்விக் முற்றிலும் எதிர்பாராத ஒன்று. அவனுள் ஏற்பட்ட பெருமிதம் அப்பா அவனை சிறுவயதில் அழைத்த ‘டேய் கண்ணா’வை போன்று தித்தித்தது. வேங்கை நாட்டு இளவரசி தன்னிடம் வேண்டி கேட்டுக் கொள்ளும் சமயத்தில் கூப்பிடும் ‘ப்ளீஸ் அத்தான்’ போன்று மயிலிறகால் வருடியது. ச்சு…. இப்போதும் வந்து விட்டாளா என்று அவளை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி கமிஷனரை காணச் சென்றான். 
“வெல்டன் மை யங் ஹீரோ. மிகவும் பெருமையாக இருக்கிறது” என்று அவனை கட்டியணைத்து  வாழ்த்தினார் ரமணன். முறுவலித்தபடி கம்பீரமாக தன் நன்றியை உறைத்தவன் “இருந்தாலும் சார் சர்வீஸ்ல என்னைவிட தகுந்த உயர்ந்த எத்தனையோ அதிகாரிகள் இருக்கும் பட்சத்தில் இதை என்னால் நம்ப முடியவில்லை” என்று தன் மனதில் பட்டதை வெளிப்படுத்தினான் அத்விக்.
” ஏன் நம்ப முடியாது இன்னும் சொல்லப்போனால் நீயே இவ்விருதினை பெற  அனைத்து தகுதிகளும் சற்றும் குறைவில்லா விதத்தில் பெற்றவன். இரு வருடங்களுக்கு முன்பு மும்பை ரயில் தீவிரவாத குண்டுவெடிப்பை சாமர்த்தியமாக கையாண்டதிலேயே இவ்விருதினை பெற்றிருப்பாய் அதில் நீ உன்னை வெளி காட்டிக் கொள்ளாவிட்டாலும் சட்டம் தன் கடமையை செய்யும் என்பதற்கேற்ப உன் இரு வருட சர்வீஸ் உனக்கு மென்மேலும் நட்சத்திரங்களை அள்ளிக் அழகுபடுத்தியமையால் இப்பதான் கிடைக்கப்போகிறது” என்று மீண்டும் ஒருமுறை அவனை தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
 தனக்கு கீழ் பணி புரியும் அதிகாரி என்பதையும் மீறி அத்விக்கிடத்தில் அவர் கொண்டுள்ள தனி பிரியத்திற்கான காரணம் ஒரு வருடத்திற்கு முன்பு மாஃபியா கொள்ளையர்களால் கடத்தப்பட்ட தனது மகளை மீட்டெடுத்ததில் அவன் செயல்பட்ட விதம். இரண்டு மாதங்களாக டிராக் செய்யப்பட்டு தனிக்குழு அமைத்து மும்பை மாஃபியா கொள்ளைக் கூட்டத் தலைவனை ஒரு லாட்ஜில் வைத்து கைதுசெய்தது காவல்துறை. அதன் விளைவாக அன்று மதியமே கமிஷனர் ரமணனின் மகள் அவள் படிக்கும் கல்லூரியில் இருந்து கடத்தப்பட்டாள். அவர்களது கோரிக்கை படி தலைவனை அவர்கள் கடத்திய அரைமணி நேரத்திற்குள் ஒப்படைக்கப்படவில்லை என்றால் அப்பெண்ணின் உடல் மிக மோசமான கோலத்தில் கிடைக்கப்படும்.
 ஒரு தந்தையாக ரமணன் துவண்ட சமயத்தில் சார் “உங்கள் நிலைமையை உணர முடிகிறது இருந்தாலும் சரியான தலைவன் இல்லாத எந்த குழுவும் அதன் வெற்றி இலக்கினை அடைந்திட முடியாது. இந்த கேஸில் நாம் வெற்றிப்படிகளில் பயணிக்க அந்த கேங்க் இரு செங்கல்களை நட்டுள்ளனர். முதலாவது அவர்கள் நமக்கு கொடுத்த நேரம் அரை மணி நேரம். அடுத்தபடியாக அவர்கள் தலைவனை கடத்திய அதே லாட்ஜிலேயே ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டது. அப்படி கடத்திய இடத்திலேயே ராஜ மரியாதையோடு அவனை நாம் திருப்பி அனுப்பி விட்டால் அவர்களை வெல்ல யாருமில்லை என்கிற முட்டாள் தனமே அவர்களை வேரோடு அழிக்க வழிவகுக்கிறது. இந்த அரை மணி நேரத்தில் அந்த லாட்ஜ் இருக்கும் ஏரியாவை முற்றிலும் நம் வசம் கொண்டுவரவேண்டும். இந்நேரம் என் கணிப்புப்படி அவர்கள் அந்த லாட்ஜில் தான் இருக்கவேண்டும் அங்கு செல்வதற்கு யாரையும் அனுமதிக்க மாட்டார்கள். எப்படியாவது முயன்று நம்மில் ஒருவன் அந்த லாட்ஜிற்கு சென்றிருக்கவேண்டும். நாம் அவர்கள் தலைவனைக் கூட்டிச் செல்லும் போதும் ஒருவரையும் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள் தலைவன் அவர்களிடம் சென்ற பிறகே உங்கள் பெண் எங்கே என்றும் சொல்வார்கள். பெண் நம்மிடத்தில் வந்த அடுத்த நொடி அவர்களை கூண்டோடு பிடிக்கிறோம் என்று ஊக்கப்படுத்தியதோடு அந்த லாட்ஜின் பின் பக்கமாக யாரும் அறியாத வழியில் உள்ளே நுழைந்தான் அத்விக்.  
அவர்கள் சொன்ன நேரத்தில் அந்த தலைவனை லாட்ஜிற்கு திருப்பி அனுப்பியதும் ஒரு வேன் கொண்டு மாஃபியா கொள்ளையர்கள் அந்த ஏரியாவை விட்டு சென்றனர். அடுத்த 15 நிமிடங்களில் கமிஷனர் பெண் இருக்குமிடம் அறிவிக்கப்பட்டது. பெண் பத்திரமாக மீட்கப்பட்டதும் இந்த கொள்ளையர்கள் சென்ற இடம் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்ததா என்று அத்விக்கிடம் கேட்பதற்காக லாட்ஜை  நோக்கி சென்றபோது அந்த கொள்ளையர்கள் 4 பேர் கால்களில் சுடப்பட்டு  தரையில் கிடக்க அத்தலைவன் அத்விக்கின் கைப்பிடியில் இருந்தான்.
 அங்கிருந்து சென்றுவிட்டதாக அவர்கள் நடத்திய நாடகம் லாட்ஜில் இருந்தபடியால் அத்விக்கால் கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி 12 பேர் அந்த வேனில் சென்றதால் மீதமிருந்த 4 பேரையும் அந்த தலைவனையும் சுலபமாக பிடிக்க முடிந்தது.
 இது மட்டுமல்லாது இந்த இரு வருட சர்வீஸில் ஒரு காவலனின் டைரியாக பொறிக்கப்படும் அளவிற்கு அவனது ஈடுபாடும் திறனுமே இப்பதக்கத்தை பெற்றுத்தர வித்திட்டிருக்கிறது.
 “எனக்கு இருக்கிற சந்தோஷத்தில் பாதி அளவு கூட உனக்கு இல்லையடா ஏதோ யோசனையாகவே இருக்கிறாய்” விருதிற்கான ட்ரீட் என்று பிரபல உணவகமான சீசனல் டேஸ்ட்டிற்கு அத்விக்கை அழைத்து வந்திருந்தான் ராகுல் .
“ஒன்றுமில்லைடா”
“ஒன்றுமில்லாமல் தான் உன் மூஞ்சி அந்த பீச் யோகாவின் போது பிரதிபலிக்கும் நவரசத்தையும் பொழிந்து கொண்டிருக்கிறதா? என்னம்மா நீங்க இப்படி பண்றிங்களேமா?”
“டேய் சிரிப்பே வராமல் காமெடி பண்ணாதடா கடுப்பாகுது” என்று கூறும்போதே அத்விக் சிரித்தான் . ஆனால் அவன் சிரிப்பிற்கான திசையை திரும்பிப் பார்த்தபோது ராகுலின் முகம் இருண்டது.
“ஹாய் சார் எப்படி இருக்கிறீர்கள்? என்னை ஞாபகம் இருக்கிறதா?” என்று சிரித்தபடியே வினவினாள் முன்தினம் பார்த்த பத்திரிகையாளினி.
“வொய் நாட்? நான் நலம். நீங்க எப்படி இருக்கீங்க?”
(ரெண்டு பேரும் லெட்டர் ரைட்டிங்காடா எழுதுறீங்க… துரோகி இரண்டு நிமிடங்களுக்கு முன்னால் பார்த்த பெண்ணையே உனக்கு சரியாக நினைவில் இருக்காது அப்படி இருக்க இவளை மட்டும் எப்படிடா தெரிந்து கொண்டாய்? என்று மனதுக்குள் நொந்து கொண்டான் ராகுல்)
 அவனை மேலும் நோகடிக்குமாறு அவள் பின்னால் இருக்கும் நண்பர்கள் பட்டாளத்தை பார்வையிட்ட அத்விக் “பிரண்ட்ஸ் கூட அவுட்டிங்கா?” என்று பேச்சினை வளர்த்தான்.
” நண்பனின் பிறந்தநாளிற்கான விருந்து சார்” என்றவாறு தன் நண்பனை  அத்விக்கிற்கு அறிமுகம் செய்து வைத்தவள் “சார் இஃப் யூ டோன்ட் மைண்ட் ஒரு டென் மினிட்ஸ் உங்களுடன் பேசலாமா?” என்று பின்புறம் அமர்ந்திருந்தவனின் காதில் புகையை கிளப்பினாள். 
“ப்ளீஸ்” என்று கூறியவாறு தன் அருகில் இருக்கும் நாற்காலியைக் காட்டி அமரச் சொன்னான் அத்விக்.
( ப்ளீஸா… டேய் இதெல்லாம் ஓவர் டா… அன்றொருநாள் ஒருவனை போட்டு துவைக்கும்போது எத்தனை ப்ளீஸ் போட்டான். அவனது ப்ளீஸிற்கு பாராங்கல் கூட  கரையுமே என்று சொன்னதற்கு ‘ப்ளீஸ்னா என்னடா’ என்று கேட்டாயேடா பாவி)
நண்பர்களிடம் “சற்று நேரத்தில் வந்து கலந்து கொள்கிறேன்” என்று அவர்களை அனுப்பி விட்டு “தேங்க்யூ சார்” என்று மீண்டும் ஒரு புன்னகையை உதிர்த்தவள் அவனருகில் அமர்ந்தாள்.
” ப்ளஷர் இஸ் மைன்” என்று பதிலுக்கு அத்விக் கூற ராகுலின் பாடுதான் பார்ப்பவர் சிரிக்கும்படி ஆயிற்று. 
பின்னே கோபத்தில் எழுந்து சென்றவன் இரண்டு அடி கூட எடுத்து வைத்திராமல் மீண்டும் அவர்களை முறைத்தவாறே வந்தமர்ந்தான். இதில் சிரிப்பு ஊட்டியது யாதெனில் இவனின் நடவடிக்கையை  எதிரில் இருந்தோர் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. பேச்சு சுவாரஸ்யத்தில் தான் ஒருவன் அங்கு இருக்கிறான் என்பதையே மறந்துவிட்டான் புரூட்டஸ்!
 வழக்குகளையும் அதை அத்விக் கையாளும் விதத்தைப் பற்றியும் தொகுத்து போன மாதம் தங்கள் பத்திரிகையில் ஒரு ஆர்டிகல் வெளியிட்டதாக கூறியவள் அதை கண்டிப்பாக படித்திருக்க மாட்டீர்கள் என்றும் உங்களுக்கு எப்போதாவது ஃப்ரீ டைம் கிடைக்கும் போது தவறாமல் படிக்குமாறும் கேட்டுக் கொண்டாள்.
‘ஒரு தமிழனின் பாதுகாப்பில் இன்றைய மும்பை’ என்ற தலைப்பில் இரண்டு பக்கங்களைக் கொண்டிருந்தது அக்கட்டுரை. “உங்கள் போட்டோ போடுவது பிடிக்காது என்பதற்காகவே கார்ட்டூன் படங்களை உபயோகிக்க வேண்டியதாயிற்று பட் மிஸ்டு யுவர்  பிக்சர் சார்” என்றாள் வருத்தமான குரலில்.
 அவளது வருத்தம் அவனை வாட்டியதோ என்னவோ “போட்டோவில் என்ன இருக்கிறது இவ்வளவு தூரம் என்னை பற்றி பெருமை பேசியது பத்தாதா” என்று அவள் தண்ணீர் அருந்திய ஒரு நிமிட இடைவேளையில் அவளது கட்டுரையை தன் மொபைலில் படித்துவிட்டு “தேங்க்ஸ் ஃபார் யுவர்  காம்பிளிமெண்ட்ஸ்” என்றான் அத்விக் பல்வரிசை தெரிய.
“அதற்குள் படித்துவிட்டீர்களா? சான்ஸே இல்லை சார் . யூ ஆர் டிராவலிங் இன் எ ஜெட் ஸ்பீடு”
” நம் உலகம்தான் ஜெட் ஸ்பீடில் சுழன்று கொண்டிருக்கிறது இதோ இந்த ஸ்மார்ட்போனின் உபயத்தால் இதைப் படிக்க முடிந்தது” என்று தன் மொபைலை டேபிள் மீது வைத்தான்.
 (அந்த போனை சற்று நேரத்திற்கு முன்பு “மச்சி இதுவரைக்கும் உன்னால் சேதமான 49 போன்களுடன் இதை சேர்த்து விடாதேடா” என்று பாசத்தோடு பரிசளித்த ராகுலே இப்போது அதை எடுத்து உடைக்கும் அளவிற்கு வெறியானான்)
 “இருக்கலாம் சார். ஆனால் அப்படி உலகத்தின் வேகத்திற்கு ஈடு கொடுத்து ஓடுபவனையே இவ்வுலகமும் திரும்பி பார்க்கிறது அண்ட் யூ ஆர் ஒன் ஸச். மென்மேலும் சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்”
” நன்றிகள். அப்போதும் என்னைப்பற்றி நீங்கள் கட்டுரை எழுதுவதாக இருந்தால்!”
” அதுதானே சார் எங்கள் பணியே. ஆனால் அதில் உங்கள் போட்டோவை போட அனுமதித்தால்!” என்று அவனைப்போலவே நிறுத்தினாள்.
 “ஆஸ் யுவர் விஷ்” என்று சிரித்தானே பார்க்கலாம் தன் அருகில் அமர்ந்திருந்தவளைவிட எதிரில் இருந்தவன் வாயை பிளந்து கொண்டு அதிர்ச்சியானான்.

Advertisement