Advertisement

அருகில் இருந்த ராகுலை அவள் நிமிர்ந்து பார்க்க அவனோ இடதிலிருந்து வலப்புறமாக தலையை ஆட்டி தன் மறுப்பு தெரிவிக்க “நோ சார்” என்று அவன் என் வயிற்றில் பாலை வார்த்த மறுநொடி “இப்படி நீங்க வாங்க போங்க என்று என்னை அழைத்தீர்களானால் முடியாது. நம் விக்டிமிற்கு டவுட் வந்துவிடும். ஒருமையில் அழைத்தீர்களானால் பிரச்சினை இராது என நினைக்கிறேன்” என்று தன் சம்மதத்தை தெரிவித்து ராகுலை அதிர்ச்சியடைய வைத்தாள்.

” தேங்க்யூ டார்லிங் இது ஓகேவா?’ என்று அத்விக் வினவ “இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை” யெனும் ராகுலின் புலம்பலை பொருட்படுத்தாது “நாளை மாலை தான் சென்னை சென்று அடைவோம் அதற்குள் எப்படி லவ் பண்ணுவது என்று கற்றுக் கொள்ளலாம்” என்று மேலும் அவனை வெறுப்பேற்றினான் அத்விக்.

“இது தப்புடா. அவள் உனக்கு தங்கச்சி மாதிரி” என்று எடுத்து கூறிய ராகுலிடம்
“சொல்ல மறந்துட்டேன் மச்சி…. எனக்கு ஒரே ஒரு தம்பி தான்…… ஒரு தங்கையும் இருக்கிறாள் …. சித்தப்பா பொண்ணு … அவள் பெயர் ரதி. அத்விஅண்ணா என்று தான் அழைப்பாள் சிறுவயதிலிருந்தே… “

“டேய் போதும் நிறுத்து… நான் மிருதுளாவை பற்றி பேசி கொண்டிருக்கும் போது சம்மதமில்லாமல் உளறாதே ” சிடுசிடுத்தான் ராகுல்.

“கூல் மச்சி…  நானும் மிருதுளாவை பற்றியே பேசுகிறேன். அதோ டிரெயின் வந்து விட்டது. சரி மச்சி நான் என் டார்லிங்கை பத்திரமாக பார்த்து கொள்கிறேன் நீ மும்பையை பத்திரமாக பார்த்து கொள்டா பை” என்று கைகாட்டிவிட்டு புறப்பட்டான் அத்விக் மிருதுளாவுடன்.

சென்னை ரயில் நிலையத்தில் இறங்கியவளிடம் எங்கே எப்போது என்று அடுத்த நாள் தெரிவிக்கிறேன் என்றும் தற்போது ஒரு காபி குடித்து விட்டு அவரவர் வீட்டிற்கு செல்லலாம் என்று கூறி அருகில் இருந்த காபி ஷாப்பிற்கு மிருதுளாவை அழைத்து கொண்டு சென்ற அத்விக்குடைய மொபைல் ஒலித்தது.

எடுத்துப் பார்த்தவன் சிரித்தபடியே “சொல்லு மச்சி” என்றான்.
……
“ஒரு காபி ஷாப்பில்”
……
“ஏன்டா வரப் போகிறாயா? ஸ்டேஷன் பக்கத்தில் தான்” என்று கூறி முடிக்கவும்
என்று ராகுல் ஓடிவந்து அத்விக்கை கட்டிக் கொள்ளவும் சரியாக இருந்தது.

” இது சென்னையா மும்பையா என்று ஒரு செகண்ட் ஜெர்க் ஆகிவிட்டேன். நீ எப்படி மச்சி இங்கே?” ஆச்சரியத்தை வெளிக்காட்டியபடி கேட்டான் அத்விக்.

” உன்னை பார்க்காமல் இருக்க முடியவில்லை மச்சி”

” சென்னையில் வந்து என்னிடம் சாகணும் என்று உன் விதி இருக்கும்போதும் ஒழுங்கான காரணத்தை சொல்லுடா”

“இரு தினங்களில் சென்ட்ரல் மினிஸ்டர் தர்மதுரை ஸ்டெர்லைட் பிரச்சினையின் தீர்வுக்காக ஒரு பெரும் மாநாட்டை கூட்டி போராட்டத்தை கொஞ்சம் பெரிய அளவில் நடத்தப் போகிறாராம். அனைத்து மாநிலங்களிலிருந்தும் போலீஸ் இறக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை கைட் பண்ணுவதற்கு என்னை தேர்வு செய்து ஃப்ளைட்டில் அனுப்பி வைத்தார்கள்” என்றான் ராகுல்.

“மச்சி நான் உண்மையான ரீஸன் கேட்டேன்டா” என்று சந்தேகத்துடன் வினவ

“வாயை மூடிக்கொண்டு உள்ளே வா” என்று அத்விக்கை ஏவிவிட்டு மிருதுளா அமர்ந்திருந்த டேபிளில் சென்று அமர்ந்தான் ராகுல்.

தன் கருவிழிகளை அகலமாய் விரித்து தன் புருவத்தை உயர்த்தி நம்பாதத்தன்மையை வெளிபடுத்தியவள் ஏதும் பேசினால் இல்லை. மனதில் திட்டுவதாக எண்ணிக்கொண்டு அவன் கூறிய “அழுத்தக்காரி” சற்று அதிக அழுத்தத்துடன் வெளியே வந்து விழுந்தது. இப்போது இரு புருவத்தையும் ஒரு அடி நீளத்திற்கு உயர்த்திய மிருதுளாவிடம் தன் பற்களைக் காட்டினான் ராகுல்.

“ஏதாச்சும் சாப்பிட சொன்னாயாடா?” என்ற ராகுலின் கேள்விக்கு “ஆர்டர் கொடுத்துவிட்டு வருகிறேன் மச்சி” என்று எழுந்தான் அத்விக்.

அந்த காபி ஷாப் செல்ஃப் சர்வீஸில் இயங்கியதால் அங்குள்ளவரை தன் லேசர் பார்வையால் எடை போட்டபடி தன் வேலையை கவனிக்கலானான் அத்விக். தன் இருக்கையில் வந்து அமர்ந்தவனின் பார்வை இறுதியாக 4 டேபிள்கள் தள்ளி உட்கார்ந்திருந்த ஒரு ஸ்கை ப்ளூ டாப்ஸ் மற்றும் வெள்ளை லெகின்ஸ் அணிந்திருந்த பெண்ணின் மீது நிலை குத்தி நின்றது.

ராகுலின் “எவ்வளவு நேரம்டா ஆகும்?” என்ற கேள்வியையும் கவனிக்காது அப்பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தான் அத்விக்.

அந்த ஊதா கலர் டாப்ஸ் பெண் தன் பிளேட்டிலிருந்த சாண்ட்விச்சை காலி செய்ததோடு எதிரிலிருந்த பிளேட்டில் உள்ள கட்லெட்டிற்கான சொந்தக்காரர் இன்னும் வராததால் தன் பக்கம் நகர்த்தி டேபிளில் இருந்த சாஸை ஊற்றி அதையும் ரசித்து உண்ண ஆரம்பித்தாள்.

“ஐபிஎஸ் சாரின் கண்கள் குற்றவாளிகளை எடைபோட்டு பார்த்திருக்கிறேன் முதன் முறையாக ஒரு பெண்ணை அதுவும் வைத்த கண் வாங்காமல் பார்ப்பதை காண ஆச்சரியமாக உள்ளது” என்றாள் மிருதுளா.

“இந்த சைட் எவ்வளவோ பரவாயில்லை. மும்பை பிளாசாவில் இப்படித்தான் ஒரு பெண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த பெண்ணின் தோழி “நீ சாப்பிட்டது போதும் வா போகலாம்” என்றதும் சாப்பிட்டு கொண்டிருந்ததை அப்படியே விட்டு விட்டு எழுந்தாள் நம்ம ஆளு பார்த்த பெண். அப்போது நம் ஹீரோ வேகமாக அவள் அருகில் சென்று சாப்பிடும்படி கூறினான். யூனிபார்மில் இருந்ததால் பயத்தில் ஒரே வாயில் தட்டில் இருந்த மீதி உணவை சாப்பிட அதில் புரை ஏற அத்தோடு விட்டானா தண்ணீர் பாட்டிலை கொடுத்து “குடி” என்றான். கண்ணீர் வழிய வழிய அந்த தண்ணீரை காலி செய்துவிட்டு அரக்கப்பரக்க ஓடியதில் தடுமாறி தொப்பென்று அப்படியே அவள் கீழே விழுந்தாள். இதில் ஹைலைட் என்னவென்றால் கீழே கிடந்தவளை பேயறைந்தார் போல் பார்த்துக் கொண்டே நின்றான். அந்தப் பெண் பீதியில் கத்தி அழ ஆரம்பிக்க வேகமாக நான் ஓடி சென்று அவளை தூக்கி விட வேண்டியதாயிற்று” என்று ராகுல் சொன்னதும் அவனை நன்றாக பார்த்து முறைத்தாள் மிருதுளா.

இவள் எதற்காக இப்படி பார்க்கிறாள் என்று ராகுல் யோசித்துக் கொண்டிருக்கும் போது அந்த டேபிளில் எதிரில் வந்து அமர்ந்த இளைஞன் ஒருவன் “அதற்குள்ளாக இதையும் முடித்து விட்டாயா! இதுதான் நீ கூப்பிட்ட போது நான் வர மாட்டேன் என்றேன். விட்டாயா?” என்று புலம்பிவிட்டு கையில் கொண்டு வந்திருந்த கூல்ட்ரிங்ஸை ” கண்டிப்பாக இதை உனக்கு நான் கொடுக்கப் போவதில்லை” என்று பேசிவிட்டு அதனை குடிக்க ஆரம்பித்தான் .

“நீ கொடுக்காவிட்டால் எனக்கு வாங்கிக்கொள்ள தெரியாதா” உதடுகளை சுளுக்கிவிட்டு அவள் எழுந்து நடக்கும் போது எதிரிலிருந்த நாற்காலி தடுக்கி விட்டு கீழே விழப்போனாள் அந்த புளூ டாப்ஸ் பெண்.

” ஐயோ” என்று தன் இரு கண்களையும் பொத்தியவளின் இடை தரையைத் தொடும் முன்னே அதனிடையே கைகொடுத்து லாவகமாக தூக்கினான் அத்விக்.

அவளை அதே இடத்தில் இறக்கி விடாமல் ரிசப்ஷனில் இருந்த ஒரு சோபாவில் அமர வைத்து ” உன் பிளேட்டில் இருக்கிறதை மட்டும் சாப்பிடாமல் அடுத்தவர்கள் பிளேட்டையும் காலி செய்தால் இந்த கனம் கனக்காமலா இருப்பாய் அரிசி மூட்டை” என்று வினவும் முகத்தை மூடிய கைகளை விலக்கி அவன் தோள்பட்டையில் நான்கு மொத்துகளை மொத்தியவள் “ஐ அம் நாட் அரிசி .ஹர்ஷி… ஹெச்-ஏ-ஆர்-எஸ்-ஹெச்-ஐ டெல் இட் ப்ராப்பர்லி” என்றாள்.

“அதேதான் அரிசி நானும் சொன்னேன். என்ன நான் தமிழில் சொன்னதை நீ சான்ஸ்கிரிட்டில் சொன்னாய் அவ்வளவுதான்” என்றதும் வெறி பிடித்தவள் போல் மீண்டும் செகண்ட் இன்னிங்சில் அத்விக்கை தாக்கலானாள் ஹர்ஷி எனும் ஹர்ஷிதா.

முதலில் அடித்தபோது அதிர்ச்சியடைந்த ராகுல் தற்போது “அவரை யார் என்று தெரியாமல் இப்படி செய்யாதே. முதலில் அடிப்பதை நிறுத்து” என்று ஹர்ஷிதாவை தடுக்க முயல “விடுடா” என்று கைகளில் சைகை காட்டி இருந்தான் அத்விக்.

“எனக்கென்ன இன்னும் நாலடி என் சார்பிலும் சேர்த்து போடுமா” என்று சொல்லிவிட்டு மிருதுளாவிடம் திரும்பியவன் “எத்தனை தாதாக்களை வெளுத்திருப்பான் இங்கு ஒரு சின்னப் பெண்ணிடம் எப்படி வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறான். இதையும் ஹின்ட்ஸ் எடுத்துக்கொள். படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும்” என்றான் ராகுல்.

அவளது முறைப்பு இன்னும் தொடரவே ஏன் அப்போதிலிருந்து இந்த பாசப் பார்வை என்று யோசித்தவனுக்கு அது புரிபட “பேபிமா நோ. நான் அந்தப் பெண்ணிற்கு ஜஸ்ட் கை கொடுத்து தான் லிஃப்ட் பண்ணினேன் இவனை போல அல்ல” என்று தலையாட்டினான் மிருதுளாவை சமாதானப்படுத்தும் தொனியில்.

எழுந்த சிரிப்பலையை அப்படியே உதடுகளில் மறைத்த மிருதுளா மறுபுறம் திரும்பி கொண்டாள்.

அடித்து ஓய்ந்திருந்த ஹர்ஷிதா “என் கைதான் வலிக்குது” என்றவாறு கைகளை உதறினாள். அதற்குள் அங்கு குழுமிய சிலரில் “எனி ப்ராப்ளம்” என்று ஹர்ஷிதாவிடம் கேட்க, அருகில் நன்கு நிமிர்ந்து அமர்ந்தவனை பார்த்தவுடனே அவர்களில் ஒருவன் “சார் நீங்க தானே அத்விக் ஐபிஎஸ்”என்ற வினா எழுப்ப அதற்கு அத்விக்கின் சிரிப்பு ஆம் என்று விடையளித்தது.

உடனே தன் பாராட்டு மழையை நிற்காமல் பொழிந்தவன் இறுதியில் “ஆனாலும் எல்லோராலும் இந்த மாதிரியான சூழ்நிலையை எளிதாக வென்றுவிட முடியாது. ரியலி யூ ஆர் ஆசம் சார்” என்று முடித்தான்.

உரிய நன்றியினை தெரிவித்ததோடு “உன்னால் முடியாவிட்டால் யாரால் முடிய போகிறது? பி ஸ்போர்டிவ் ஆல்வேஸ்” என்றான் அத்விக். அந்த வார்த்தைகள் அவனின் உடலில் புதிய ரத்தத்தை பாய்ச்ச ஒரு செல்பி எடுத்துக் கொள்ளலாமா சார் என்று கேட்டு எடுத்து கொண்டு கிளம்பினான். அதன் பின் அங்கிருந்த ஒரு சிலரும் அத்விக்கிடம் மரியாதையாக பேசிவிட்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு சென்றனர்.

ஹர்ஷிதா கூட வந்திருந்தவன் அவளை தூக்கி செல்லும் போதே “ஹலோ ஹலோ!” என்றபடி அத்விக்கை பின்தொடர்ந்து “எவ்வளவு தைரியம் இருந்தால்…” என்று வாக்கியத்தை  தொடங்கும் போதே அத்விக்கை பற்றி தெரிந்து கொண்டதால் போலீஸ் வம்பு நமக்கு எதற்கு என்று ஓடியும் விட்டான்.

அவனது ஓட்டத்தைக் கண்டு முகத்தில் கடுமை பரவ “உனக்கு டிரைவர் வேலை பார்க்கவே ஒருவன் பிறந்திருக்கிறானே அவன் எங்கே?” என்று உறுமினான் அத்விக்.

அவனை அலட்சியப்படுத்தி விட்டு எழுந்த ஹர்ஷிதாவின் கையை பிடித்து இழுத்து மீண்டும் சோபாவில் அமர வைத்தவன் “கேள்வி கேட்டால் எனக்கு பதில் வந்தாக வேண்டும்” என்றான்.

மை தீட்டிய தன் இரு பெரிய கருவிழிகளை அவன் கூர்மையான கண்களுடன் மோத விட்டவள் “எவ்ரிஒன் ஹேவ் தெயர் ஓன் ப்ரையாரிட்டீஸ். யாரும் யாருக்காகவும் இப்போதெல்லாம் காத்திருப்பதில்லை அத்வி” என்று கூறிவிட்டு தன் ஹாண்ட்பகை எடுக்க அவளது டேபிளுக்கு விரைந்தாள் ஹர்ஷிதா.

அவள் கூறிய வார்த்தைகள் கண்டிப்பாக அத்ரிஷிற்கானது இல்லை. தன்னை தான் குறிப்பிடுகிறாள். ஆனால் அதன் பொருள் தான் அவனுக்கு விளங்கவில்லை. “தெரிந்த பெண்ணாடா” என்று ராகுல் அவனிடம் வந்து கேட்டது காதில் விழுந்தாலும் பதில் சொல்லத் தோன்றவில்லை. அவள் போகும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தான்.

தன் பேக்கை எடுத்துக் கொண்டு வந்த ஹர்ஷிதா மிருதுளாவை கடந்து சென்று பின் ஏதோ தோன்றியவள் போல ” நீங்கள் மிருதுளா தானே “என்றாள்.

“ஆமாம். பட் சாரி உங்களை எனக்கு தெரிந்த மாதிரி நினைவில்லையே”

“நான் அத்ரிஷின் கஸின். ஒருமுறை நாம் சந்தித்திருக்கிறோம் உங்கள் திருமண அழைப்பிதழ் கொடுக்க எங்கள் வீட்டிற்கு வந்த போது” என்று ஞாபகப்படுத்த முயன்றாள் ஹர்ஷிதா.

அத்விக்கும் ராகுலும் ரிசப்ஷனில் இருந்ததால் இவர்கள் உரை அவர்கள் செவிகளுக்கு எட்டவில்லை. வேகமாக அவர்களிடம் வந்த அத்விக் “மித்து டார்லிங் உனக்கு ஹர்ஷியை முதலிலேயே தெரியுமா?” என்று கேட்டு மிருதுளாவை பார்த்து கண்ணையும் அடித்து வைத்தான்.

மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள் மிருதுளா. ஐயோ இவள் தான் சார் சொன்ன பெண்ணா! மாட்டிக் கொண்டீர்கள் அத்விக் சார்…. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் நின்று கொண்டிருந்தவளை “நார்மலாக தானே இருக்கிறாய் மித்துமா” என்று அவளது தலையைத் தொட்டுப் பார்த்தான் அத்விக். இந்த ஓவர் பில்டப்பை பொறுக்க மாட்டாதவன் “மேடம் உங்களுக்கு இவர்களை முன்கூட்டியே தெரியுமா என்று சார் கேட்கிறார்” என்று அத்விக்கிற்கும் மிருதுளாவிற்கும் நடுவில் போய் நின்று கொண்டான் ராகுல்.

சுவாரசியம் பொங்க “எனக்கு தெரிவது இருக்கட்டும் உனக்கு எப்படி அத்வி மிருதுளாவை தெரியும்” என்றாள் ஹர்ஷிதா.

நோ சார். ப்ளீஸ்… யூ ஆர் அல்ரெடி காட் ரெட் ஹேண்டட்… என்பது போன்ற மிருதுளாவின் உடல் மொழி சொற்கள் யாவும் அத்விக்கு புரியாமல் போக ” ஷி இஸ் மை லவ்” என்று தன் அத்தை மகளுக்கு அறிமுகப்படுத்தியதோடு தன்னைத் திருமணம் செய்து கொள்ள மறுத்தவளிடம் “வீட்டில் பேசி நெக்ஸ்ட் மந்த் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம்” என்று அடுக்கினான்.

தன் சிரிப்பை மிகவும் சிரமப்பட்டு அடக்கி “ரொம்ப ரொம்ப சந்தோஷம். வாழ்க்கையிலேயே நீ இதுவரை அச்சீவ் செய்ததிலேயே இதுதான் பெஸ்ட். ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் மை ஹார்டி விஷஸ். நம்ம வீட்டில் உன் சார்பாக நானே இதை பற்றி பேசுகிறேன்” என்றாள் ஹர்ஷிதா.

சத்தியமாக இது போன்ற ஒரு ரியாக்ஷனை இந்த இரண்டு நாட்களாக எதிர்பார்த்திராதவன் தன் ஏமாற்றத்தை மறைத்து வீட்டில் ஏதேனும் குட்டையைக் குழப்பி விடக்கூடாது என்பதற்காக “என் வாழ்க்கைக்கான முக்கிய முடிவில் யாருடைய தலையீட்டையும் நான் விரும்ப மாட்டேன்” என்றான் கெத்தாக.

தரையில் விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை போலும்! “ஃபைன் அத்வி” என்றவள் “கங்கிராஜுலேஷன்ஸ். எனக்கு மறக்காமல் இன்விடேஷன் வைத்துவிடுங்கள் இந்தியா’ஸ் டுடேயின் பியான்சி” என மிருதுளாவிடமும் தன் வாழ்த்தை தெரிவித்தாள் ஹர்ஷிதா.

தலையை நிலத்தில் புதைத்து கொண்டிருந்த மிருதுளா நிமிராமல் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.

விடைபெறும் சமயம் ராகுலிடம் திரும்பிய ஹர்ஷிதா “ஐ அம் வெரி மச் ப்ரௌடு ஆஃப் யூ ராகுல் சார்” என்றாள்  சீரியஸாக.

ராகுலின் பெயரை ஹர்ஷிதா குறிப்பிடவும் மூன்று பேருக்குமே ஒருவித அதிர்ச்சி.

 

Advertisement