Advertisement

அத்தியாயம் ஏழு 
ஐபிஎஸ் தேர்வான பிறகு இரு வருடங்கள் டிரெய்னிங் பீரியடில் பங்கேற்க வேண்டும். அதில் முதல் மூன்று மாதங்கள் முஸோரியில் உள்ள ‘லால்பகதூர் சாஸ்திரி’ தேசிய கலைக்கழகத்திலும் அதன்பின் ஹைதராபாதில் உள்ள ‘சர்தார் வல்லபாய் பட்டேல்’ தேசிய கலை கழகத்திலிலும் தேர்ச்சி பெறவேண்டும். இறுதிகட்டமாக இரு வார ஆல் இந்தியா டூரில் கலந்துகொள்ளவேண்டும். பயணத்தின் போது ஏற்பட்ட நிகழ்வினை கூற முற்பட்டான் அத்விக்.

மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த மும்பை எக்ஸ்பிரஸ் 112 ஐபிஎஸ் அதிகாரிகளையும் சுமந்து சென்றது. மற்றொரு பெட்டியில் சந்தேகிக்கும்படி நால்வர் இருப்பது தெரியவர அனைவரும் அங்கு விரைந்தனர்.

தங்களை பார்த்ததும் அவர்கள் கையிலிருந்த சயானைட்டை விழுங்க அருகிலிருந்த ஒரு ஐபிஎஸ் ஆபிஸரின் சாமர்த்தியத்தால் வாயில் போடப்பட்ட ஒருவனது மாத்திரை கீழே விழுந்தது. மூவர் உயிரிழந்த பட்சத்தில் கிடைத்த ஒருவனது வாயிலிருந்து ஒரு வார்த்தை கூட பெற முடியவில்லை.

அடித்தடித்து ரத்த வெள்ளத்தில் ஓய்ந்துகிடந்தவனின் கண்கள் மட்டும் சோர்வடைய வில்லை.

மேலதிகாரியிடம் “சார் நான் டிரை பண்றேன்” அனுமதி கேட்டுக் கொண்டு அவன் எதிரே சென்று அமர்ந்த அத்விக் அனைவரையும் சற்று விலக சொல்லிவிட்டு அவனை ஏளனமாக பார்த்து சிரிக்க ஆரம்பித்தான். ஆரம்பத்தில்  கண்டுகொள்ளாதவன் அத்விக்கின் பேய் சிரிப்பை பார்த்து “நன்றாக சிரித்து கொள் உன் சிரிப்பு இன்னும் எத்தனை நிமிடங்கள் என்பது என் கையில்” என்றபடி அவனும் சிரிக்கலானான்.

தன் சிரிப்பினை தொடர்ந்தபடியே மேலும் அவனை வெறுப்பேற்ற “உன் கையில் என் சிரிப்பா நாங்கள் 100 பேர் இருக்கிறோம் நீ ஒரு ஆள்.. உன் பேச்சு உனக்கே வேடிக்கையாக இல்லை” என்றதும் எரிச்சலுடன் “என் பேச்சு வேடிக்கையா நாளை உன் சாவை ஊரே வேடிக்கை பார்க்கப் போகிறது அதுவும் பயத்தோடு அப்போது புரியும் வேடிக்கையானவன் யாரென்று” வார்த்தைகளை கடித்து துப்பினான் அந்த பிடிபட்டவன்.

சற்றும் அசராமல் “உனக்கு மூடு சரியில்லை என்று நினைக்கிறேன் நம் பேச்சினை நாளை லாக்கப்பில் வைத்துக்கொள்வோம்” என்றபடி எழுந்த அத்விக்கிடம் ” முட்டாள் நீ சாகப் போகிறாய் என்று சொல்கிறேன் அதை நம்பாமல் பயமில்லாமல் செல்கிறாயே உன் பயத்தை இப்போது பார்க்க துடிக்கிறேன் இந்த ட்ரெயினில் ஏழு வெடிகுண்டுகள் வைத்திருக்கிறோம். இன்னும் ஐந்து நிமிடங்களில் டிரெயின் சத்ரபதிசிவாஜி ஸ்டேஷனை அடைந்தவுடன் டம்மால்ல்ல்ல்….” இடியென சிரித்தான் அத்தீவிரவாதி.

அங்கிருந்தவர்கள் அவனைத் தாக்கி பாம்ப் இருக்கும் இடத்தை அறிய முற்பட அவர்களை தடுத்த அத்விக் “உயிரே போனாலும் இனி ஒரு வார்த்தை அவனிடம் நாம் வாங்க முடியாது.

முதலில் ஸ்டே டு பி நார்மல். நம்மிடம் பொன்னான 5 நிமிடங்கள் இருக்கிறது. அதாவது 300 நொடிகள். கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ். அவன் சொல்வது போல் ட்ரெயின் ஸ்டேஷனை சென்றடையாது. இவர்களைப் பற்றிய சந்தேகம் ஏற்பட்டதுமே ஒரு ஃபாரஸ்ட் ஏரியாவை நோக்கி நாம் இப்போது பயணித்துக் கொண்டிருக்கிறோம். நாம் எங்கும் நிறுத்தப்பட போவதில்லை . பாம்பை வைத்த இடத்தையும் அதற்காக நிர்ணயத்த நேரத்தையும் எடுத்து கொடுத்திருக்கும் ஒரு முட்டாள்தனமான எதிரி கிடைக்க நாம் கொடுத்து வைத்திருக்கிறோம். இருபதை கூட தாண்டாத ஒரு அயோக்கியன் விட்ட சவாலில் 112 வெல் டிரெயின்ட் ஐபிஎஸ் ஆபீசர்ஸ் வெற்றிபெற மாட்டோமா? இதுவரையிலும் பார்த்திராத பெஸ்ட் பேட்ச் என்ற பெயர்பெற்ற நமக்கு கிடைத்திருக்கும் முதல் இலக்கே ‘டூ ஆர் டை ‘ ப்ராஜெக்ட். அக்கிரமத்தை வென்று நீதியை நிலை நாட்டாதா காவல்துறை? நம்மால் இதை செய்ய முடியாதா?” என்று அத்விக் கேட்டபோது “முடியும்” என்று 111 குரல்கள் ஒருசேர எதிரொலித்தது.

அத்விக்கின் பேச்சை கேட்டு அப்படியே ஆடிப் போய் விட்டான் அந்த பயங்கரவாத இளைஞன். “உடனே உங்கள் மொபைலை உள்ள ஊபர் கான்ஃபரன்ஸில் கனெக்ட் பண்ணுங்கள். இந்த ட்ரெயினில் மொத்தம் 72 கம்பார்ட்மெண்ட்ஸ் . நாம் 112 பேர். ஏசி பெட்டிகளுக்கு இரண்டு நபர்களாக கூடுதல் கவனத்தோடு வேட்டையில் இறங்குவோம். ஒரு குண்டூசியையும் விடாதீர்கள் அனைத்தையும் அலசி மேயுங்கள். கரண்ட்லி வி ஹேவ் த்ரி பிக் மினிட்ஸ். மூவ்” என்ற ஆணையை பிறப்பித்தபடி வேங்கையாய் சீறிப்பாய்ந்தான் அத்விக்.

அத்விக்கின் யூகம் படி ஐபிஎஸ் அதிகாரிகள் தான் தீவிரவாதிகளின் மிக முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். அதனால் அவர்கள் பெட்டியில் கூர்மையான கண்களை முதலில் அலைபாய விட்டான். அரை நிமிடத்தில் ஒரு அட்டைப்பெட்டி அவன் கைகளில் சிக்க அதற்குள் இருந்த ஹாட் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்தது ஒரு ஐ ஈ டி (இம்ப்ரூவைஸ்டு எக்ஸ்ப்ளோஸிவ் டிவைஸ்ஸ்) நவீன பிரத்தியேக அணுகுண்டு. நொடியும் தாமதிக்காமல் அதனை வெளியில் விட்டெறிந்தான். “கைஸ் பஸ்ட் ஒன் காட் அபார்டட் இன் கம்பார்ட்மெண்ட் நம்பர் 63 அண்ட் தி சோர்ஸ் இஸ் இன்சைடு ‘ஹாட் பாக்ஸ்'” என்று பேசிய 20 நொடிகளில் “செகண்ட் ஒன் அபார்டட் இன் கம்பார்ட்மெண்ட் நம்பர் 7” என்ற தகவல் கிடைத்தது .

அடுத்த இரு நொடிகளில் 21 மற்றும் 49 வது பெட்டிகளில் இருந்த வெடிகுண்டுகளும் தூக்கி எறியபட்டன.

பிறகு கழிந்த ஒரு நிமிடத்திற்குள் முப்பத்தி ஐந்தாவது மற்றும் 70ஆம் பெட்டிகளில் இருந்தும் செய்தி வர “கைஸ் நவ் வி ஹவ் ஒன் ஃபுல் மினிட் டு டிஃப்யூஸ் ஒன் பாம்ப்” இதுவரைக்கும் நமக்கு கிடைத்த அணுகுண்டுகளின் வரிசைப்படி ஏழாம் எண்ணிக்கையின் அடிப்படையில் கடைசி பாம்ப் கிடைக்கலாம். நம் இலக்கு திசை திருப்பவும் பட்டிருக்கலாம் . கூடுதல் கவனத்தோடு அலசுங்கள்” என்று கூறும்போதே அத்விக்கின் மூளையில் ஒரு பொறி தட்ட முதல் அணுகுண்டை கண்டெடுத்த தங்களின் பெட்டிக்குள் ஓடினான்.

இன்னும் 20 நொடிகள் இருக்க அந்த கடைசி ஐ . ஈ . டியை தூக்கி வீசினான் அத்விக். ஆபரேஷன் சக்ஸஸ் பைனல் ஒன் இன் சேம் கம்பார்ட்மென்ட் நம்பர் 63 என்று தன் நண்பர்களுக்கு பகிரவும் “ஹூரே” என்று அவர்களின் ஆனந்த இரைச்சல் அடுத்தடுத்து வெடித்த அணுகுண்டுகளை விட பவர்ஃபுல்லாக எதிரொலித்தது.

சாதித்து விட்டோம் என்று அனைவரும் ஒருவருக்கொருவர் சந்தோஷத்தோடு கட்டியணைத்ததோடு அத்விக்கை உயரே தூக்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் .

“அத்விக் இல்லை என்றால் இன்று இது சாத்தியமாகி இருக்காது. அவனது இன்ஸ்பிரேஷனல் பேச்சே எங்களுக்கு ஊக்கமளித்து இதனை நடத்தி முடிக்க வித்திட்டது” என்று மற்ற அதிகாரிகள் கூறியபோது அதனை மறுத்ததோடு மீடியாவிற்கு இது ஒரு கூட்டு முயற்சி என்னும் அளவிலேயே தகவல் கொடுத்திருந்தான் அத்விக்.

இன்று அவனது உரையைக் கேட்டு விட்டு ஜனாதிபதி முதற்கொண்டு அனைவரும் எழுந்து நின்று அவனுக்கு சல்யூட் அடித்தனர்.

எப்பேர்ப்பட்ட தருணம்!!!

மரியாதைக்கு மறு சல்யூட் வைத்தவன் “ஜெய்ஹிந்த்” என்றபடி மேடையை விட்டு இறங்கினான்.

நண்பனொருவன் அத்விக்கின் பேச்சை வீடியோ எடுத்து நெட்டில் போட அதுவே கரன்ட் ஹாட் டாபிக் ஆக நாடு முழுவதும் கொந்தளித்தது .

அன்றிரவே மும்பைக்கு திரும்பிய அத்விக் இதனை பற்றி அறிந்திருக்கவில்லை. அடுத்த நாள் சென்னைக்கு கிளம்ப ரயில்வே ஸ்டேஷனை அடைந்தவனை “அத்விக் சார் யூ ஆர் ரியலி க்ரேட்… நீங்கள்தான் இன்றைய சமுதாயத்தின் எடுத்துக்காட்டு” என்று ஒரு கூட்டமே மொய்த்தது. அதிலும் ஒரு துணிச்சல்காரி “சார் ஐ அம் பாலிங் பார் யூ. ப்ளீஸ் மேரி மீ” என்று கத்தினாள் கூட்டத்தில் . அத்விக்கும் சிரித்ததோடு “பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்” என்றான். “என் காதல் நிராகரிப்பு பற்றி பெருமையாகவே என் ஸ்டேட்டஸில் போட்டுக் கொள்வேன் சார்” என்று பதிலளித்து விட்டு கிளம்பினாள் அந்த வாயாடி பெண்.

அனைவரிடமும் விடைபெற்று வெயிட்டிங் ஹாலில் சென்று அமர்ந்தவன் “எப்படிடா இதெல்லாம்?” என்று ராகுலிடம் வினவினான். நம்ம ஆல்பர்ட்டின் சேவையினால் வந்த உபயம்” என்றவாறு யூடியூபை இயக்கி காண்பித்தான். 6 லட்சம் வியூஸ். ” ஓவர் நைட்ல ஒபாமா ஆகிறது கேள்விப்பட்டிருக்கிறேன் மச்சி. ஆனால் நானே அப்படி ஆவேன் என்று கனவில் கூட நினைக்க வில்லை” என்றான் அத்விக்.

“உன் கனவில் இனி நீ என்ன நினைப்பாயோ தெரியாது ஆனால் இளம்பெண்களின் கனவுகளில் டேட்ஸை பறித்து விட்டாய் என்று யாராவது கம்ப்ளைன்ட் கொடுத்தால் உன்னை தூக்கி நானே லாக்கப்பில் தள்ளுவேன்”

“டேய் ஏன்டா” என்று அத்விக் கூறும்போதே ஹாலின் வாசலில் இரு கல்லூரி பெண்கள் ” நீ பேசு இல்ல நீ போ” என்று தங்களுக்குள்  பேசிக்கொண்டு பயத்தில் அவனிடம் நெருங்காது சென்றுவிட்டார்கள்.

” போலீஸ் என்றாலே ஒருவிதமான பயம் தானாக குடியேறுகிறது பார்த்தாயா” என்றான் அத்விக்.

அத்விக்கை நடுவில் உட்கார வைத்து அவன் ஃபேன் கிளப் நான் தான் அத்விக் சாரை கட்டிக் கொள்வேன் இல்லை எனக்கு தான் அத்விக் சார் என்று சண்டை போட்டுக் கொள்ளும் காட்சியை டெமோ கொடுத்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்தான் ராகுல் .

அருகில் இருந்த அத்விக்கின் சத்தத்தை கேட்காததால் அவனை நோட்டமிட்டவன் தன் தலையில் அடித்துக் கொண்டு “போயும் போயும் ரயில்வே ஸ்டேஷன்ல உன் பீச் யோகாவை ஆரம்பித்து வைத்திருக்கிறாயேடா” என்று ராகுலின் வசைபாட்டு அத்விக்கிற்கு கேட்கவில்லை.
மாறாக அவன் காதுகளில் எதிரொலித்தது “நான் உன்னை கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் அத்வி.அது நீ எவ்வளவு பெரியவன் ஆனாலும் சரி” அவளின் கடைசி வார்த்தைகள்.

” ஹாய் சார் ! மெனி மோர் கங்கிராட்ஸ்.. நீங்க ஒரு சூப்பர் ஹீரோ தான். நான் முதலிலேயே சொன்ன மாதிரி யூ ஆர் சான்ஸ்லெஸ்” என்ற பாராட்டுகளை அடுக்கிக் கொண்டே ஒரு கையை அவன் முன்னே நீட்டினாள் மிருதுளா.

தன் முன் நீண்ட அவளது விரல்களையும் அவளையும் பார்த்த அத்விக் அப்படியே அமர்ந்திருந்தான் .

“அத்விக்” அருகிலிருந்த ராகுல் அவனை தட்டி சுய உலகிற்கு மீட்க மறுபடியும் மிருதுளாவை பார்த்துவிட்டு வேகமாக எழுந்து “ஓ சாரி! தேங்க்ஸ்” என்றபடி கை குலுக்கினான் .

“உங்க வீடியோ தான் சார் வைரல். இன்றைய இளைஞர்களின் ரோல்மாடல் நீங்கள்தான். உங்களின் தீவிர விசிறி ஆகிவிட்டேன். எனக்கு ஒரு ஆட்டோகிராப் ப்ளீஸ்” என்று தோளில் தொங்கிய ஒரு பெரிய சைஸ் ஹேண்ட் பேக்கிலிருந்து ஒரு நோட்டையும் பேனாவையும் எடுத்து நீட்டியவளை ஏற இறங்க பார்த்தவன் அவள் மற்றொரு கையில் இருந்த டராவல் பேக்கையும் நோட்டம் விட்டவாறு “எந்த ஊருக்கு?” என்றான் .

சற்றே விசித்திர பார்வையுடன் “நம்ம சென்னைக்கு தான் சார் . மன்த்லி விசிட்.. வீட்டிற்கு” என்றாள்.

” எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணமுடியுமா?”

“இட்ஸ் மை பிளஷர் சார்”

” என்னை லவ் பண்ணுறீங்களா?” என்று அத்விக் கேட்டு முடிக்கவும் “டேய்ய்ய்ய்ய்” என ராகுலும் “சார்ர்ர்ர்ர்” என மிருதுளாவும் ஒருசேர கத்தினர்.

அவர்களின் திகைப்பை கண்டு தான் பேசியதை நினைவு கூர்ந்தவன் “ஐ மீன் என்னை லவ் பண்ணுவது போல் நடிக்கணும். அதுவும் ஒரு இரண்டு மணி நேரத்திற்கு மட்டும்” என்றான் அத்விக்.

அவசரமாக “என்ன கூத்துடா இதெல்லாம்” என்று ஆரம்பித்த ராகுலை “நீ போடா அந்த பக்கம். லைஃப்ல முக்கியமான விஷயம் பேசிக்கிட்டு இருக்கும்போது கூத்து கீத்து என்று” அவனை தள்ளிவிட்டு “உங்களுக்கு ஓகேவா? ப்ளீஸ். உங்களை மட்டும் தான் நம்பி இருக்கேன் என்னை கைவிட மாட்டீர்களே” என்ற வசனத்தையும் சிவாஜி ஸ்டைலில் அள்ளித் தெளிக்க குபீரென சிரித்து விட்டாள் மிருதுளா .

மாறாக முகத்தில் கொலைவெறி தாண்டவம் ஆட நின்றுகொண்டிருந்தான் ராகுல்.

“இதில் நிறைய ரிஸ்க் இருக்கிறது சார். முன் எப்படியோ… இப்போது நீங்கள் ஒரு விஐபி. டாக் ஆஃப் அவர் கன்ட்ரி. எனக்கு எந்த ஆப்ளிகேஷன்சும் இல்லை. ஆனால் பின்னாளில் உங்களுக்கு இந்த சிறு நாடகத்தினால் பெரும் பிரச்சினை வருவதற்கு வாய்ப்பு நிறைய இருக்கிறது. யோசித்து பாருங்கள்”

” இதில் மறு ஆலோசனைக்கு எல்லாம் அவசியமே இல்லை நீங்கள் பயப்படுகிற அளவுக்கு இது ஒரு பெரிய விஷயமே இல்லை. இன்னும் சொல்லப்போனால் உங்களை என் காதலியாக ஒருத்தியிடம் மட்டுமே அறிமுகப் படுத்தினால் போதும் . ஐ ஜஸ்ட் வான்ட் ஹெர் டு நோ மை வேல்யூ “

”  ஆர் யூ கிரேசி??உங்கள் வால்யூ பற்றி இந்த வீடியோ தான் பிட்டுப் பிட்டு வைக்கிறதே சார் . பிறகும் என்ன ?”

இந்த வீடியோவை அவள் பார்த்திருப்பது அதிசயம். அப்படியே பார்த்திருந்தாலும் அதை ஒரு விஷயமாகவே மதிக்க மாட்டாள் என்று நினைத்தபடி “உங்களால் முடியுமா முடியாதா” என்ற முடிவாக கேட்டான்.

அருகில் இருந்த ராகுலை மிருதுளா நிமிர்ந்து பார்க்க அவனோ இடதிலிருந்து வலப்புறமாக தலையை ஆட்டி தன் மறுப்பை தெரிவித்தான்.

“நோ சார்” என்று ராகுலின்  வயிற்றில் பாலை வார்த்த மறுநொடி “இப்படி நீங்க வாங்க போங்க என்று என்னை அழைத்தீர்களானால் முடியாது. நம் விக்டிமிற்கு டவுட் வந்துவிடும். ஒருமையில் அழைத்தீர்களானால் பிரச்சினை இராது என நினைக்கிறேன்” என்று தன் சம்மதத்தை தெரிவித்து ராகுலை அதிர்ச்சியடைய வைத்தாள் மிருதுளா.

Advertisement