Advertisement

பிரகதியின் அழுகையைக் கண்டு குடும்பத்தினர் அவளை சூழ்ந்து ”  ஹர்ஷிக்கு என்னாச்சு ?? நல்லா இருக்கா தானே ?? குழந்தை நல்லா இருக்கா ??? நீ ஏன் இப்படி அழுகிறாய் ” என்று கத்தி கூப்பாடு போட்ட போதும் அத்விக் அவன் நின்ற இடத்தை விட்டு அசையவில்லை .

பிருந்தா ” எதுனாலும் சொல்லு ரதி….. நீ இப்படி அழுகிறது தான் அப்படியே பிசையுது…..  ” என்று பிரகதியின் முகத்தை நிமிர்த்த

” ஹர்ஷிக்கு ஒன்றுமில்லைனு சொல்லிரு ரதி ” விக்னவும் அத்ரிஷும் ஒருசேர பதைபதைத்தனர் ….
பெரியவர்களும்  பிரகதியிடம் அவர்கள் கூற்றை ஆமோதித்து  எதிர்பார்த்த படி அவள் முகத்தை பார்க்க

நான் எப்படி சொல்வேன் என்பது போல தலையை இடதிலிருந்து வலது புறமாக ஆட்டியவளை ஆர்யனும் பார்த்து கொண்டு தான் நின்றான் .

“நீ இப்போ சொல்லவில்லை என்றால் நான் போய் பார்கிறேன்” என்று பிருந்தா தன்னை கட்டுபடுத்த முடியாத வண்ணம் ஆபரேஷன் தியெட்டருக்குள் செல்ல முயல “ஹர்ஷி நம்மை விட்டு ….”

“ரதி!!!!!!!!!!!!! ” என கத்திருந்தான் அத்விக் ரதியின் வாக்கியத்தை முடிக்க விடாமல்.

அவன் சத்தத்தில் அந்த தளமே பூகம்பம் வந்தது போல ஒரு நொடி ஆட்டம் கண்டது…

அத்விக்கின் அருகில் சென்ற பிரகதி “சாரி அண்ணா …. திடீரென ஹர்ஷியுடைய பல்ஸ் குறைய ஆரம்பித்து விட்டது……” பேச முடியாமல் விசும்பியவளின் கண்ணீரை துடைத்து விட்டவன்

“அவளுக்கு எதுவும் ஆகாது …. அவளால் என்னை விட்டு எங்கும் போக முடியாது …..  ” என்றான் ஆத்விக் ஸ்திரமாக.

இவ்வளவு உறுதியாக உரைப்பவனுக்கு உண்மை தெரிந்தால்????? என்று பிரகதி வெறித்து பார்க்க “ஒன்றுமில்லை ரதி…..
சிறு வயிலிருந்தே என்னை சற்று அலைய விட்டு பார்ப்பதே அவள் வேலையாகி விட்டது … இப்போதும் அப்படி தான் …. ஆனால் அப்போதே நான் கொஞ்ச நேரம் அதிகமாக வருந்தினால் பொறுத்து கொள்ள மாட்டாள்… நீ வேண்டுமானால் பாரு இப்போது கண்ணு முழிச்சு எனக்காக ஃபீல் பண்ணிட்டு வெளிய நின்றாயா??  இல்ல நிலா பேபிஸ்காக ஃபீல் பண்ணியானு சண்டை போடுவாள்!!!!! அப்படியே எமன் அவள் அருகில் வந்தாலும்  என்னை தவிர எவனாலும் இவளை வைத்து மேய்க்க  முடியாது என்று அவனே பயந்து ஓடி போய்விடுவான் ” சமாதானம் கூறி கொண்டு இருந்தான் அத்விக்.

“குழந்தை பிறந்து விட்டதா ரதி … ஆபரேஷன் முடிந்ததா ???” என்று அடுத்த கேள்வியை ரூபா பிரகதியை நோக்கி பாய்ச்ச

அப்போது தான் பிரகதிக்கு குழந்தை நினைவே வந்தது ….

ஹர்ஷிக்கு இப்படி ஆனவுடன் வெளியே ஓடி வந்திருந்ததால் பேபி  நல்லபடியாக பிறந்திருக்க வேண்டுமே என்று பயந்து மீண்டும் ஆபரேஷன் தியேட்டருக்குள் செல்ல முற்பட்டாள் .

அப்போது அங்கு ஏற்பட்ட இரைச்சல் பிராகதியின் வயிற்றில் புளியை கரைக்க  வேகமாக உள்ளே ஓடினாள் .

எதனால் இப்படி சத்தம்???? அதுவும் ஆபரேஷன் தியேட்டருக்குள்!!!!!  குழந்தைக்கு ஏதேனுமா ?? ஹர்ஷியை மட்டும் கருத்தில் கொண்டு குழந்தையை அலட்சியப்படுத்தி வெளியே ஓடிவந்த தன் முட்டாள் தனத்தை எண்ணி தன்னை தானே திட்டிக் கொண்டாள் பிரகதி ….

அப்படி அவள் வெளியே சென்றதும் ஹர்ஷிதாவின் உயிர் பிரிந்து விட்டதை எண்ணி வருந்திய டாக்டர் சுலோச்சனாவும் அங்கிருந்த மற்றவர்களும் உடனே தங்களை மீட்டு கொண்டு குழந்தையில் கவனத்தை செலுத்தினர் .

அவர்கள் உதவியால் இவ்வுலகை கண்ட நிலன் தன்னைச் சுற்றி இருந்த அன்னையின் தொப்புள்கொடியை இறுகப் பற்றிக்கொண்டான் .

கடவுளின் செயலோ !!!!!!
இவ்வுலகிற்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று தான் நம்மை ஆட்டி படைக்கிறது என்கிற விந்தையோ!!!!!

அத்விக்கின் தினசரி அறிவுரையும் ஹர்ஷிதாவின் தளராத நம்பிக்கையும் குடும்பத்தினரின் ஒட்டுமொத்த கூட்டு பிரார்த்தனையும் ஒன்று சேர்ந்து பக்கபலமாய் உதவ மேலே ஒருத்தன் எழுதிய எழுத்தை மாற்றி

நிலன் அவனது பிஞ்சு கரத்தால் தொப்புள்கொடியை பற்றி இழுத்து அவன் அம்மாவின் உயிரை மீட்டெடுத்து புது விதி படைக்க ஜனித்திருத்தான்!!!

ஆம் குழந்தையை வெளியே எடுத்ததும் அதனை சுற்றியிருந்த கொடியை டாக்டர் விலக்க முயற்சிக்க ….. அவரது செயலை ஆட்சேபிக்கும் விதமாய் அதனை பற்றி இழுத்து கொண்டது சிசு .

அந்த நொடி தொப்புள்கொடி வாயிலாக குழந்தை அதன் தாய்க்கு இதய துடிப்பை செலுத்தி உயிர் பெற செய்திருந்தது .

கண் இமைக்கும் நேரத்திற்கும் குறைவான பொழுதில் நிகழ்ந்த அற்புத நிகழ்வில் ஹர்ஷிதாவின் உடல் தூக்கிவாரிப் போட்டு நின்று போயிருந்த அவளது பல்ஸ் மீட்டர் மீண்டும் செயலாற்ற தொடங்கியது .

நடந்தவற்றை கண்ட அங்கிருந்த மற்ற இரு டாக்டர்களும் நர்சுகளும் தங்களையும் அறியாமல் மகிழ்ச்சியில் ” ஹேஹஹ ” வென்று கத்தியிருந்தனர் .

அந்த சத்தத்தில் பயந்தபடி உள்ளே வந்த பிரகதி அங்குள்ளவர்களின் முகத்தில் தெரிந்த களிப்பை கண்டு குழம்பினாள் .

அவளது கையில் நிலனை ஒப்படைத்த சுலோச்சனா டாக்டர் ” தன் அம்மாவின் உயிரை மீட்டெடுத்த போர்வீரன்….  ” என்று கூறி குட்டிக்கு சல்யூட் அடித்தார் .

ஆச்சரியமடைந்த பிரகதியின் விழிகள் ஹர்ஷிதாவின் பல்ஸ் மீட்டரை அவசரமாக ஆராய அதில் தென்பட்ட சீரான கோடுகளை கண்டதும் எப்படி உணர்ந்தாள் என்று விவரித்துக் கூற முடியவில்லை .

மகிழ்ச்சியின் பிடியில் நின்றவள் அழுகையுடனே ” சூப்பர்டா நிலன் பேபி ” என்று குழந்தையின் நெற்றியில் முத்தம் ஒன்றை பதித்தாள் .

பின் ஹர்ஷிதாவையும் வென்டிலேட்டரில் வைத்து  தீவிர பரிசோதனை நடத்தி அவளுக்கு சுயநினைவு திரும்பியதும் தான் ரூமிற்கு மாற்றினர் .

தனி அறைக்கு வந்ததும் திரையிட்டிருந்த விழிகளை திறந்தவளுக்கு அங்கிருந்தவர்களை ஆராய்ந்ததில் அவர்கள் கண்களில் தெரிந்த எல்லையில்லா வாத்யசால்யம் நிலா பேபிஸ் நலமாக இருக்கிறார்கள் என்பதை உணர்த்த கணவனை அங்கு காணாது ” அத்வி எங்க அம்மா???” என்றாள் பிருந்தாவிடம்.

“கண்ணு முழிச்சோனே பிள்ளைக என்ன பண்ணுதுனு கேட்பாளா ??? புருஷன தேடுறா!!!!!” வாய் பேச்சில் நொடித்தாலும் மரகதத்தின் கை பாட்டிற்கு செல்ல பேத்தியின் முகத்தை  நெட்டிமுறித்து திருஷ்டி சுற்றியது…

” நான் ஏன் பிக் பிரின்ஸஸ் கவலை பட போறேன்…. நிலா பேபிஸ பார்த்துக்க தான் நீ இருக்கியே….. ஆனால் கிழவி நிலானி பேபிக்கும் கறிவேப்பில்லைய அரைச்சு கொடுமை படுத்துன….” என்று மிரட்டியவள் யோசனையுடன்

“நிலானி பேபி பொறாந்தல்ல??? இரண்டுமே பசங்களா?? என்ன பேபிஸ் அப்பா பிறந்தார்கள்????” அருகில் நின்று தலையை கோதிய ஹரிஹரனிடம் குழம்பியபடி வினவினாள் ஹர்ஷிதா.

மூன்று மாதங்களுக்கு முன்பு பார்த்த ஃபுல் ஸ்கானில் “என்ன குழந்தைகள்னு நான் பார்த்துட்டேனே….. சொல்லவா???” என்று பிரகதி கேட்டதற்கு “வேண்டாம் ரதி…… பிறக்கும் போதே தெரிந்து கொள்கிறோம்” என அத்விக் மறுத்துவிட்டான்.

ஆசையாக இருந்த போதும் கணவனின் பேச்சை அவளுக்கு தட்ட மனம் வரவில்லை…..

ஹரிஹரன் பதில் அளிக்கும் முன்னே பொறுமையில்லாதவள் “பி.டி நீங்க சொல்லுங்க என்ன பேபிஸ் பிறந்தார்கள்????” அடக்கமுடியா ஆர்வத்தில் ஆராவாரம் செய்து எழ முயன்றாள்.

” அடியே ஒழுங்கா படு….. நீ கலங்கடிச்சு வைச்சதெல்லாம் போதும் ” என்று ரதி அதட்டும் சமயம் மருந்து மாத்திரைகளுடன் உள்ளே நுழைந்தான் அத்விக் .

வந்தவன் “இந்த டாப்லெட் மட்டும் ஸ்டாக் இல்லைனு மெடிக்கல சொல்றாங்க ரதி….. வேற பார்மஸிக்கு போய் வாங்கிட்டு வந்துடவா????” என பிரகதியிடம் விசாரித்தான்.

பிரகதியிடம் பதில் இல்லாது போகவும் நிமிர்த்து பார்த்தவனின் விழிகள் தன்னை முறைத்தபடி படுத்திருந்த மனைவியிடத்தில் தஞ்சம் புகுந்தது.

அவளருகில் சென்றவன் எந்தவித சங்கோஜமுமின்றி அந்த பிறை நெற்றியில் ஒரு முத்தம் பதித்ததோடு விடாமல் அவள் வயிற்றிற்கும் ஒன்றை வழங்கி  “இப்போ எப்படி இருக்கு?? வலிக்குதா???” என்றான்.

“நான் எதையும் பார்க்கலைபா….. ரதி நீயும் பேச்சிலர் தானே யூ டூ க்ளோஸ் யுவர் ஐஸ்” என்றபடி அத்ரிஷ் கண்களை மூட மற்றவர்களுக்கோ அத்விக்கின் செயல் புன்னகையை பூக்குவித்தது.

“உன் பேபிஸ் வரவும் அவங்க தானே பெருசா போய்ட்டாங்க!!!! நாங்க ஓ.டில இருந்த போது எனக்காக ஃபீல் பண்ணியா இல்லை அவங்களுக்காகவா????  நான் கண்ணு முழிக்கும் போது கூட பக்கத்துல  இல்ல….. அவங்க கூடவே இருந்தாயா???? ஆமா அவங்க பார்க்க எப்படி இருக்காங்க அத்வி??? என்னை மாதிரியா??? இல்லை உன்னை மாதிரியா??? நீயாவது சொல்லு அத்வி என்ன பேபிஸ் பொறந்தாங்கன்னு” கோபமாக ஆரம்பித்தவள்  ஏக்கத்தோடு நிறுத்தினாள்.

அவள் கோபம் அங்கிருந்தோர் மென்னகையை விரிவடைய செய்ய ” நீ கேட்குற கேள்விக்கு அவனால பதில் சொல்ல முடியாது டார்லிங்” என்றான் அத்ரிஷ்……

“ஏன் சி.டி?” குழப்பத்துடனே வினவினாள் ஹர்ஷிதா.

“பேபிஸ பார்த்தா தானே சொல்லுவான்!!!” என்று அத்ரிஷ் கூறியதும் ஏன் என்ற கேள்வியை கண்களில் ஏந்தி கணவனை நோக்கினாள் ஹர்ஷிதா.

“இப்போது போய் பார்ப்போமா ?? உன்னால் முடியுமா??” குழந்தைகளின் மேலுள்ள கொள்ளை ஆசையை சுமந்து வந்த அவன் மொழிகளில் நீ வராமல் நான் எப்படி அரிசிமூட்டை பார்ப்பேன்???? மனைவியின் மேல் அவன் கொண்ட தீராத காதல் வரியும் ஒளிந்திருந்தது. 

ஹர்ஷிதா ரதியை “போய் பார்க்கலாமா?” என்பதுபோல் பார்க்க அவள்  வீல் சாரை எடுத்துவருமாறு ஒரு செவிலியரிடம் பணித்தாள்….

மனைவியை கூட்டிக்கொண்டு பலநூறு உணர்வுகளை தன்னுள் போட்டி போட விட்டபடி தன் நிலா பேபிஸை பார்க்கச் சென்றான் அத்வித் .

குழந்தைகளை பார்த்ததும் ஹர்ஷியுள் ஏற்பட்ட பரவசம்!!!

“அம்மாடி!!!!!!”

அத்விக்கை ஒரு கரத்தால் இறுக்க பற்றியவளின் மார்பகங்கள் தானாக முட்ட ” பேபிஸ்கு ஃபீட் பண்ணலாமா ரதி?? ” என்றாள் அவர்களை மற்றொரு கரம் கொண்டு மயிலிரகால் வருடியபடி.

“பண்ணலாம் ஹர்ஷி….. பம்ப் பண்ணி சில நாட்கள் கொடுக்கலாம்…இருவரும்  ஒரு கிலோ அதிகரித்தவுடன்  ப்ரஸ்ட் ஃபீடிங் பழக்கிவிடு”

“இப்பவாச்சும் சொல்லு என்ன பேபிஸ்னு??? இல்லாவிட்டால் டையாப்பரை கழற்றி பார்த்துவிடுவேன்” என ஹர்ஷிதா மிரட்ட

” வாயாடி…. உன் இன்ஸ்டிங்ட் கரெக்ட் தான்…. இதுல யாரு நிலன் யாரு நிலானினு கண்டுபிடி பார்ப்போம்…”

” இதற்கும் நான் டையாப்பருடைய ஹெல்ப்பில் தான் பதிலளிக்க முடியும் ….. ஒரே மாதிரி இருக்கிறார்களே !!!” பிரமித்தவாறே ஹர்ஷி செய்கையில் இறங்க

” அடியே இது என்.ஐ.சி.யு…. முதலில் கைய எடு …. நானே சோல்றேன் ….. ” குழந்தைகளை அடையாளம் காட்டினாள் பிரகதி.

வயிற்றில் இருந்தபோது குழந்தைகளிடம் தினமும் ஆயிரம் வார்த்தைகளை பேசிய அத்விக்கின் இதழ்கள் நேரில் கண்டதும் பசை போட்டு ஒட்டி கொண்டன போலும்!!!!

” தூக்கி தரவா அண்ணா ? ” என்று பிரகதி கேட்டதற்கு கைகளை நீட்டியவன் தன் மழலைகளை லாவகமாக பிடித்துக்கொண்டான் .

பனித்திருந்த கண்களை ஒருமுறை மூடி திறந்தவன் ” வெல்கம் நிலா பேபிஸ் ” என்று மட்டும் கூறிவிட்டு அவர்களையே நேரம் போவது தெரியாமல் பார்த்தபடி நின்றிருந்தான் .

ஹர்ஷிதாவின் உடல்நிலை சில நிமிடங்களுக்கு மேல் நிற்க முடியாமல் போக பிரகதியின் உதவியோடு ரூமிற்கு வந்து சேர்ந்தாள் .

” என் மேல் உள்ள கோபம் போயிடுச்சா ? ” என்று பிரகதி கேட்டதற்கு ” இல்லை இல்லை வீட்டிற்கு போனதும் மறுபடியும் கோபித்து கொள்வேன் ” என்றாள் ஹர்ஷிதா….

அவளை ” அடி ” என்று பிரகதி கையை ஓங்கிய போது ஆர்யன் உள்ளே நுழைந்தான் .

அவனைக் கண்டதும்
” நீ இன்னும் சாகலையா ? ” என்று கேட்ட பிரகதியை ” ரதி !! ” என்று ஹர்ஷிதாவும் ” பிரகி !! ” என்று ஆர்யனும் அதட்டினர் .

“சாரி ஆர்யா ” என்று ஹர்ஷிதா கூறும்போதே ” சாரி ஹர்ஷி ” என்ற ஆர்யன் ”  வா … ” என்று பிரகதியை இழுத்துக்கொண்டு போனான் .

” அறிவு இருக்கா உனக்கு !! என்னை பற்றி ஹர்ஷி என்ன நினைப்பாள் … பார்த்து பேச மாட்டாயா ? ” என்று கடிந்த ஆர்யனிடம்

” ஹோ அப்போ நான் கேட்டது உன் பிரச்சனை இல்லை .. ஹர்ஷி நினைப்பது பற்றி தான் உன் அக்கறை … என்னைப்பற்றி எப்பொழுதாவது எண்ணிப் பார்த்து இருக்கிறாயா … நான் என்ன நினைப்பேன் … நீ பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் எவ்வளவு கஷ்டப்படுவேன் என்றெல்லாம்…… என்ன தான் என்னை பற்றி தெரியும் உனக்கு ….

கல்லூரியில் காலடி எடுத்து வைத்தவுடன் உன்னை தான் பார்த்து தொலைத்தேன் … நீ என் ஃப்யூச்சராக இருந்தால் கண்டிப்பாக என்னை காப்பாற்றுவாய் என்று வேண்டுமென்றே தான் ராகிங் நடந்த இடத்திற்கு சென்றேன் ….. பெரிய ஹீரோ மாதிரி கண்ணில் இமாந்தண்டி கூலிங் கிளாஸை மாட்டி கொண்டு உன்னை யாரு வர சொன்னது???? 

எல்லாம் என் தலையெழுத்து …. நீ இன்னொரு பெண்ணை காதலிக்கிறாய் என்று தெரிந்தும் என் காதலை விட்டுக்கொடுக்காமல் உனக்காக காத்திருந்தேன் ……
ஆனால் நீ ப்ரஷனிற்காக … உன் நட்பிற்காக என் பெயரை யூஸ் பண்ணிக் கொண்டாய் … அந்த பொய்யை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை …

எப்படி உன்னால் என்னை காதலிப்பதாக பொய் சொல்ல முடிந்தது ????

சொல்லு !!! உன்னை உயிருக்குயிராய் காதலிப்பவளை போலியாக காதலி என்று எப்படி அடையாளம் காட்ட முடிந்தது ???

என்றாவது என் காதலை உனக்கு புரிய வைத்துவிடலாம் என்று நான் கடலளவு  நம்பியதற்கு நீ செய்த இம்மியளவு துரோகமும் உன்னை மன்னிக்க முடியாது போனது ……

இனியும் உன் பக்கத்தில் இருந்தால் உன்னை நோகடிக்காமல் இருக்க முடியாது என்றுதான் விலகியே இருக்க முடிவு செய்தேன் …

ஆனால் விதி மறுபடியும் சந்திக்க வைத்துவிட்டது … தயவுசெய்து இனி என் கண் முன்னே வந்து விடாதே . இருக்கிற கொலைவெறியில் உன்னை ஏதாவது செய்தாலும் செய்துவிடுவேன் ….
அப்புறம் என் டாடி தான் பாவம்….. “

நிறுத்தாது படப்பட பட்டாசாய் வெடித்தவள் ஆர்யனின் பதிலை எதிர்பாராது அவன் முகத்தை கூட ஏறிட்டு பாராது அங்கிருந்து சென்றிருந்தாள்…….

பிரகதி பேசப்பேச இன்னதென்று வரையறுக்க முடியாத இனம் புரியா உணர்வு ஒன்று ஆர்யனுள் நுழைந்து அவன் இதயக்கூட்டில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டது .

Advertisement