NEN
28
“டேய் காபி குடிக்கிறியாடா உனக்கு போட்டேன். அப்போவே எடுத்திட்டு வந்தேன், நீ போய் படுத்திட்ட, இப்போ குடிக்கிறியாடா??”
“அம்மா அண்ணாக்கு நீங்க போடுற காபிலாம் புடிக்காதும்மா. அண்ணா இப்போலாம் அய்யர் ஹோட்டல்ல தான் காபி குடிக்கிறார்ம்மா. நம்ம முக்கு கடை கணேஷ் கடையில தானே எப்பவும் குடிப்பார், இப்போலாம் பல்லு படாம டபரா செட் காபி...
27
“ருத்ரா எப்போ கிளம்ப போறே?? நாளைக்கு சீமந்தம் நீ இன்னும் வீட்டுக்கு வரலைன்னா எப்படி??” என்ற அன்னப்பூரணி காலையிலேயே அழைத்துவிட்டார் தன் மகனுக்கு.
“நாளைக்கு தானேம்மா சீமந்தம் காலையில அங்க இருப்பேன்”
“ருத்ரா உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கே நீ” என்றார் அவர் கோபமாய்.
“வர்றேன்ம்மா”
“எப்போ??”
“இன்னைக்கு வர்றேன் போதுமா”
“நான் சொன்ன மாதிரி கவிதா, சந்தோசு, கனகா எல்லாரையும்...
26
“எங்கடா இருக்கான் அவன்??”
“வீட்டில தான் இருப்பான் அண்ணா”
“வா வந்து வண்டியில ஏறு...”
“அண்ணா அவங்க பெரிய ஆளுங்க நமக்கு எதுக்கு வம்புண்ணா...”
“நேத்து ரோட்ல வைச்சு பேசினவன் நாளைக்கு உன் வீட்டுக்கே வந்து உன் பொண்டாட்டி கையை பிடிப்பான் பரவாயில்லையா உனக்கு” என்ற ஆருத்ரனின் கண்களில் கனலை காண முடிந்தது.
“நான் ஊரைவிட்டு போயிடறேன் அண்ணா”
“லோகு... லோகு... என்னைப்பாருடா”
அவன்...
25
இப்போதெல்லாம் ஆருத்ரனே அழைத்து வந்துவிடுவதால் அன்னப்பூரணி மருத்துவமனைக்கு உடன் வருவதில்லை. அருளாசினிக்கு ஐந்து மாதம் ஆகியிருந்தது, வயிறு மேடிட தொடங்கியிருந்தது.
மெல்லிய உடல்வாகுடன் இருந்தவள் லேசாய் பூசியிருந்தாள், கன்னத்தில் சதை வைத்திருந்தது. முன்பைவிட இப்போது இன்னும் லட்சணமாக தெரிந்தாள்.
“நீ இங்க உட்காரு நான் போய் மருந்து வாங்கிட்டு வர்றேன்” என்றவன் சிறிது நேரத்தில் மருந்து மாத்திரைகளுடன்...
24
திடிரென்ற அவளின் அணைப்பில் ஒரு நொடி அதிர்ந்தவன் பின் அவனும் அவளை சேர்த்தணைத்துக் கொண்டான்.
“ஏன் போன் எடுக்கலை??”
“நான் போன் எடுத்தேன்ல”
“இன்னைக்கு வர்றேன்னு சொல்லவே இல்லையே. அப்புறம் பேசறேன்னு சொல்லி வைச்சுட்டீங்க”
“வேலை இருந்ததால அப்புறம் பேசறேன்னு சொல்லிட்டு வைச்சுட்டேன். வேலை முடியவும் அங்க இருந்து கிளம்பிட்டேன்”
“கிளம்ப முன்னாடி போன் பண்ணி சொல்ல மாட்டீங்களா... அத்தையும் போன்...
23
ஆருத்ரன் வாரத்திற்கு ஒரு முறை ஸ்ரீரங்கம் சென்று இரண்டு நாட்கள் இருந்துவிட்டு தான் வருவான். அருளாசினியும் வேலைக்கு சென்று வர ஆரம்பித்திருந்தாள்.
வீட்டு வேலைக்கு நம்பிக்கையான ஆளாய் தேடிக் கொண்டிருந்தான். இதுவரை யாரும் கிடைத்த பாடில்லை. அதன் பொருட்டு தான் அவன் வார வாரம் வீட்டிற்கு ஓடி வந்துக் கொண்டிருந்தான்.
அவர்களை கடைக்கு எங்கும் அனுப்புவதில்லை. அவன்...
22
“ஆமா இப்போ எங்க போச்சு உங்க கோபம்??”
“அதான் பேசிப்பேசி என்னை டைவர்ட் பண்ணிட்டியே. இந்த மொட்டைமாடி கதை எல்லாம் சும்மா தானே”
“இல்லை அது நிஜம் தான்”
“அப்போ நீ என்னை டைவர்ட் பண்ணலை நான் அதை நம்பணும்”
“நம்ப வேண்டாம்” என்றவள் எழுந்திருக்க அவன் எழுந்து நின்றான்.
“நம்பலைன்னு தான் சொல்லிட்டு இருக்கேன்”
“ஹ்க்கும்... ஆமா நாளைக்கே நீங்க ஊருக்கு...
21
அவன் அமர்ந்திருந்த தோற்றம் அவளுக்கு வருத்தத்தை கொடுக்க அதிகமாக பேசிவிட்டோம் என்று உண்மையாகவே உணர்ந்து அவனைப் பார்த்தாள்.
கதவை மெதுவாய் சாற்றிவிட்டு அவனை நோக்கிச் சென்றாள். “இங்க என்ன பண்றீங்க??”
“நீ எதுக்கு இங்க வந்தே உள்ளே போ...”
“இல்லை நான் பேசினது...”
அவளை பேசாதே என்பது போல் கை நீட்டியவன் “அதைப்பத்தி பேச வேணாம்” என்றான் இறுக்கத்துடன்.
சில நொடி...
20
திருச்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற பெயர் பலகையை ஒருவித முகச்சுளிப்புடன் பார்த்துக் கொண்டே வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தான் ஆருத்ரன்.
அருளாசினி அவனருகில் இருந்த இருக்கையில் சாய்ந்து படுத்திருக்க அன்னப்பூரணி பின்னால் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தார்.
அருளாசினி அவள் வீட்டிற்கு வழி சொல்லிக் கொண்டிருந்தாள் அவள் கணவனிடம். அவள் சொன்ன வழி ஸ்ரீரங்கம் செல்லும் வழியாக இருக்க...
19
ஆருத்ரனின் கைபேசி ஒலியெழுப்பி கொண்டிருந்தது. அதை அவன் வைபிரேட் மோடில் வைத்திருந்தான். அது அந்த ஏரியா கவுன்சிலரின் வீடு. கவுன்சிலரின் அம்மா தவறியிருந்தார்.
அதற்குண்டான ஏற்பாட்டைத்தான் அவன் கவனித்துக் கொண்டிருந்தான். பேன்ட் வாத்திய சத்தம் காதை கிழிக்க அவன் போன் வைபிரேட் சத்தம் கூட அவனுக்கு கேட்கவில்லை.
ஒருவாறு சத்தம் ஓய அடுத்து ஒப்பாரி சத்தம் கேட்க...
18
“என்னம்மா எத்தனை நாள் தள்ளிப் போயிருக்கு சொல்லு” என்றார் மருத்துவர் மீண்டும்.
“சொல்லு அருளு...” என்றார் அன்னப்பூரணி வாயெல்லாம் பல்லாக. ஆருத்ரனுக்குள்ளும் அப்படியொரு சந்தோசமே, அப்படியும் இருக்குமா என்று அவளையே பார்த்திருந்தான்.
“தெ... தெரியலை டாக்டர்”
“என்னது தெரியலையா??” என்றவர் அம்மாவையும் பிள்ளையையும் பார்த்தார்.
“அருளு நிஜமாவே உனக்கு ஞாபகமில்லையா. கல்யாணத்துக்கு அப்புறம் நீ தலைக்கு ஊத்திக்கிட்டியா இல்லையா” என்று...
17
“என்னை எதுக்கு கூப்பிடுறே?? செஞ்சுட்டு சொல்லு வந்து டேஸ்ட் பண்றேன்” என்றுவிட்டு அந்த இடத்தை காலி செய்திருந்தாள் தாமரை.
வீம்பாக சொல்லிவிட்டோமே என்று யூடியூப்பை ஆன் செய்து செய்முறையை பார்த்தாள். ‘முடியுமா என்னால்’ என்று கேள்வி ஓடியது உள்ளே. ‘பேசாம போய் ஹெல்ப் கேட்டிருவோமா’ என்று கூட தோன்றியது.
சுயகவுரவம் வந்து தடுக்க இறால் இருந்த பாத்திரத்தை...
16
ஆருத்ரன் திரும்பி வந்த பின்னும் கூட அருளாசினி குளியலறையில் இருந்து வெளியில் வந்திருக்கவில்லை. அவள் ஒங்கரிக்கும் சத்தம் கேட்க அவனுக்கு குற்றவுணர்வாகிப் போனது. வெளியில் நின்று கதவை தட்டினான்.
ஒருவாறு தன்னை சரிப்படுத்திக்கொண்டு அவள் வெளியில் வர வெகுவாய் சோர்ந்திருந்தது தெரிந்தது அவனுக்கு.
“என்னாச்சு??”
“உமட்டிட்டு வருது”
“இந்த ஸ்மெல்னாலயா??”
“ஹ்ம்ம்...”
“நீ உட்காரு இதோ வர்றேன்” என்றவன் ரூம் ப்ரெஷ்னரை எடுத்து...
15
தாமரை தன் கணவர் இரு பிள்ளைகளுடன் மறுநாள் முன்பகலில் வந்து இறங்கியிருந்தாள். வந்ததுமே அவள் கண்கள் வீட்டைத்தான் முழுதுமாய் அலசியது.
‘நாங்க இங்க இருக்கோம் இவ என்ன தேடுறா’ என்று பார்த்த அன்னப்பூரணிக்கு மெதுவாய் விஷயம் புரிந்தது. லேசாய் சிரித்துக் கொண்டார் அவர். எதுவா இருந்தாலும் அவளே ஆரம்பிக்கட்டும் என்ற எண்ணம் அவருக்கு.
“வர்ஷினி பேபி என்ன...
13
அன்றைய நிகழ்வுக்கு மறுநாள் அவள் ஆருத்ரனுடன் வீட்டிற்கு வந்திருந்தாள். அவனின் தமக்கை தாமரை ஊருக்கு கிளம்புவதால் அவளுடன் அப்படியொரு ஒட்டுதலாக இருந்தாள்.
அவள் பிள்ளைகளுடன் பொழுதுபோக்குவது அவர்களுடன் வெளியே செல்வது ஊருக்கு செல்ல தேவையானது வாங்க என்று சுற்றினாள். காரணமில்லாமல் காரியமில்லை என்பதாகத்தான் இருந்தது அவள் செயல்.
அவர்களுடனே இருந்தவள் கணவனை ஒதுக்கியது யார் கண்ணிலும் படவில்லை....
12
“இல்லை இப்போ நீ தான் வேணும்” என்று அவன் சொன்னதும் அப்படியே அமைதியாகிப் போனாள் அவள். ஒன்றும் பேசாமல் அவள் திரும்பிப் படுத்துக் கொள்ள நொந்து போனான் ஆருத்ரன்.
‘ஒண்ணு சரின்னு சொல்லணும் இல்லை வேண்டாம்ன்னு சொல்லணும், ரெண்டும் சொல்லாம இப்படி திரும்பி படுத்தா நான் என்னன்னு நினைக்கிறது’ என்று பொருமினான் அவன்.
‘ஒருத்தன் நல்லவனா இருந்தா...
11
ஆருத்ரன் ஒரு இறுதிச்சடங்கிற்கு உறைவிப்பான் பெட்டியை (ப்ரீசர் பாக்ஸ்) அனுப்புவதற்காய் அதை வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தான். இன்னும் தேவையான சில பொருட்களை அவனும் மற்றொருவருமாக ஏறி முடித்திருந்தனர்.
“இஸ்மாயில் நீ அங்க போய் போட்டுட்டு எனக்கு கூப்பிடு. எம்எல்ஏ வீடு பார்த்துக்கோ. கூட ராகுலையும் கூட்டிட்டு போ, லோகு மின்ட் வரைக்கும் போயிருக்கான், வந்ததும் அவனையும்...
10
“நீ பண்ணது தப்பு ருத்ரா... அருளுகிட்ட நீ தானே சரின்னு சொல்லியிருக்க, அப்புறம் நீயே வேணாம்ன்னு சொன்னா என்ன அர்த்தம்??”
“அம்மா நான் எதையும் யோசிச்சு எல்லாம் சொல்லலை. அவளுக்கு நல்லதுன்னு நினைச்சு தான் போக வேணாம்ன்னு சொன்னேன்”
“அவ வேலைக்கு போறாளோ போகலையோ எனக்கு அதைப்பத்தி கவலையில்லை. உன் இஷ்டத்துக்கு அவளை ஆட்டி வைக்கிறதை எல்லாம்...
9
“என்ன!!” என்றாள் அவள் அதிர்ந்து.
“என்னமோ கேக்கணும்ன்னு தோணிச்சு கேட்டுட்டேன்”
“இங்க பாருங்க உங்க சூழ்நிலையை நான் பயன்படுத்திக்கறேன்னு நீங்க நினைக்கலாம். அது அப்படியில்லைன்னு நான் பொய் சொல்ல விரும்பலை”
“ஆமா எனக்கு சாதகமா யோசிக்கறேன். அதுல உங்களுக்கும் நன்மை நிச்சயமா இருக்கும். எங்க வீட்டுல உங்களுக்கு முழு சுதந்திரமும் பாதுகாப்புமும் கிடைக்கும். என்னைக்கு இருந்தாலும் நீங்க ஒரு...
8
“ஹலோ”
“ஹலோ ஆருத்ரனா” என்றாள் ரகசிய குரலில்.
“நீங்க யாரு?? ப்ரீசர் பாக்ஸ் எதுவும் வேணுமா??”
“இல்லை நான்... நான் வந்து இன்னைக்கு ஈவினிங் பார்த்தோமே என் அத்தை பையனை கூட அடிச்சீங்களே” என்று அவள் விளக்கவும் இவன் பரபரப்பானான்.
“என்னாச்சுங்க உங்க அத்தை பையன் எதுவும் கலாட்டா பண்றானா??”
“ப்ளீஸ் நீங்க இங்க கொஞ்சம் வரமுடியுமா” என்றவளின் குரல் உடைந்திருந்ததை...