Advertisement

ஆருத்ரனும் அவன் நண்பன் ஜாவித்தும் ஒன்றாய் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க அப்போது சரியாய் உள்ளே நுழைந்தான் அர்ஜுன்.
ஜாவித்தை மட்டும் பார்த்திருந்தவன் அப்போது தான் அவனருகே அமர்ந்திருந்த ஆருத்ரனை பார்க்கவும் எப்போதும் போல முகம் கோணியது அவனுக்கு.
“இங்கயும் வந்திட்டானா” என்று வெளிப்படையாகவே அவன் முணுமுணுக்க ஆருத்ரன் மெல்ல சிரித்துக் கொண்டான்.
“யாரோட டென்டர் பைனலைஸ் ஆகியிருக்குன்னு இப்போ பார்க்கலாம். டெபொசிட் அமென்ட் கொண்டு வந்திருக்கீங்க தானே…” என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார்கள் அவர்கள்.
அங்கு ஒரு மருத்துவமனை கட்டுவதற்கான டென்டர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் கலந்துக்கொள்ளத்தான் அவர்கள் வந்திருந்தனர்.
“இளா இவங்க எப்போ சொல்லுவாங்க” என்று அருகில் அமர்ந்திருந்தவனை படுத்திக் கொண்டிருந்தான் அர்ஜுன்.
“பாஸ் அதோ சொல்லப் போறாங்க பாருங்க” என்று அவன் கையை காட்ட அர்ஜுனின் முகத்தில் ஏகத்துக்கும் டென்ஷன் ஏறியது.
ஆருத்ரன் முதன் முதலாய் சென்னையில் ஆரம்பித்த கன்ஸ்ட்ரக்ஷன் வேலையை தான் அர்ஜுனுக்கு விட்டுக் கொடுத்திருந்தான். அதன்பின் எதையும் அவன் விட்டிருக்கவில்லை. அவனுக்கானது அவனிடத்தில் வந்து சேரத்தான் செய்தது.
“ஏஜே கன்ஸ்ட்ரக்ஷன் கோட் தான் எங்களுக்கு ஓகேவா இருக்கு. ஆனா அர்ஜுன் கன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்த மாடல் தான் எங்களுக்கு சரியா வரும்ன்னு தோணுது. அதனால அவங்க கொடுத்த கோட் கொஞ்சம் கூடுதலா இருந்தாலும் அவங்களை நான் ப்ரோசீட் பண்ண சொல்லி கூப்பிடுறோம்” என்று சொல்ல அர்ஜுனின் முகத்தில் சொல்லொணாத மகிழ்ச்சி. 
ஆருத்ரனை வென்ற உணர்வு அவனுக்கு. திரும்பி ஆருத்ரனை பார்க்க அவன் முகத்தில் மெல்லிய முறுவல். ‘நீ ஜெயிச்சா எனக்கும் சந்தோசம் தான்’ எனும் பாவனையை தான் அவன் கொடுத்தான்.
—————–
“அருளு”
“இதோ வர்றேன் அத்தை” என்றவள் மகளை இடுப்பில் தூக்கிக்கொண்டு வந்தாள். இனியாளுக்கு பத்து மாதம் முடிந்திருந்தது. சின்ன சின்ன வார்த்தைகளை கிள்ளையில் அவள் பேசும் அழகே தனி.
“நீ இன்னும் கிளம்பலையா??”
“உங்க பேத்தி என்னை எங்க கிளம்ப விடுறா. எல்லாத்தையும் இழுத்து போட்டு வைச்சிருக்கா. இவளை கிளப்புறதுக்கே இவ்வளவு நேரமாச்சு. நீங்க இவளை பிடிங்க அத்தை நான் ஒரு அஞ்சு நிமிஷத்துல கிளம்பிடுறேன்” என்றவள் சொன்னது போலவே தயாராகி வந்தாள்.
அர்ஜுனின் திருமண வரவேற்பு அன்று. டெல்லியில் அவன் திருமணம் எளிமையாய் முடிந்திருக்க இதோ சென்னையில் வரவேற்பு வைத்திருந்தான்.
அவன் அலுவலகத்தில் வேலைப் பார்த்த பெண்ணையே திருமணம் முடித்திருந்தான். முன்பு அவனை காதலித்திருந்தவளை வேண்டாம் என்று மறுத்திருந்தவன் அவனாகவே தேடி வந்து அவளை மணமுடிக்க சம்மதம் தெரிவித்து இதோ வரவேற்பிலும் வந்து நின்றிருந்தனர் இருவரும்.
எப்போதும் போல ஆருத்ரன் அவர்களுடன் வரவில்லை. அருளாசினி தன் மாமியாருடன் கிளம்பி வந்திருந்தாள். “என்ன அருள் உன் புருஷன் வரலை. அவர்க்கு அர்ஜுன் மேல உள்ள கோபம் இன்னும் போகலையா??” என்றார் அர்ஜுனின் அன்னை.
“அதெல்லாம் இல்லைத்தை அவருக்கு கொஞ்சம் வேலை அதிகம், அதான் வரலை”
“வாங்க மேடம் எல்லாரும் கிளம்பற நேரத்துக்கு வர்றீங்க” என்று கேட்ட அர்ஜுன் தன் மனைவிக்கு அவளை அறிமுகம் செய்வித்தான்.
“எப்படி இவரை சும்மாவிட்டீங்க??” என்றாள் அவன் மனைவி சுனிதா.
“ஹேய் என்ன??” 
“என்ன என்ன?? நீங்க சொல்லுங்க அருள் எதுக்கு இவரை சும்மாவிட்டீங்க. இவருக்கு எப்பவும் ரொம்ப திமிர் தெரியுமா. ஒருத்தி லவ் பண்றேன்னு வாய்விட்டு சொல்லியும் கூட திட்டிட்டார். போய்யான்னு வேலையை விட்டு போயிட்டேன்”
“அதான் நானே உன்னை தேடி வந்திட்டேன்ல”
“எத்தனை வருஷம் கழிச்சு வந்தீங்க?? என்னைத்தேடி வர உங்களுக்கு மூணு வருஷம் ஆகியிருக்கு. உங்களை எல்லாம் அப்படியே விரட்டி விட்டிருக்கணும்”
“இப்போ மட்டும் என்ன விரட்டி விட்டிருங்க, நல்லா அனுபவிக்கட்டும்” என்றாள் அருளாசினி.
“ஏன் அருள் உனக்கு கொலைவெறி??”
“நாங்க பேசிட்டு இருக்கோம்ல நீங்க குறுக்க வராதீங்க… நீங்க சொல்லுங்க அருள் இவரை ஏன் சும்மா விட்டீங்க??” என்று அவள் மீண்டும் ஆரம்பித்தாள்.
“அவன் நல்லவன் தான் கொஞ்சம் புத்தி தான் அப்பப்போ தகராறு பண்ணும். சொன்னா புரிஞ்சுக்குவான் பாசக்காரன். அவனே தேடி வந்திருக்கான்னா உங்களோட அன்பு அவனுக்கு வேணும்ன்னு தான் வந்திருக்கான். திமிர் பிடிச்சவனுக்கு இப்போ உங்களையும் பிடிச்சிருக்கு. பார்த்துக்கோங்க” என்றாள் அவனின் தோழியாய்.
சுனிதாவிடம் எதையும் மறைக்க விரும்பியிருக்காததால் அவளிடம் அனைத்தும் பகிர்ந்திருந்தான் அர்ஜுன். அவன் செய்ததை ஒன்றுமே இல்லாது போல எப்படி அவர்கள் விட்டுவிட்டார்கள் என்ற கேள்வி அவளை குடைந்ததினாலேயே அருளாசினியிடம் நேரடியாகவே கேட்டுவிட்டாள்.
அவளின் பதிலே சொன்னது அவனை அவர்கள் மன்னித்துவிட்டனர் என்று. “ஆமா அந்த அண்ணன் ஏன் வரலை??” என்று தன் கணவனிடம் கேட்டாள் சுனிதா.
“எந்த அண்ணன்??”
“அருளோட ஹஸ்பன்ட் அவரை நீங்க இன்வைட் பண்ணலையா??”
“அவன் எதுக்கு இப்போ??” என்றான் அவன் கடுகடுவென்று.
“என் புருஷன் சரியா தான் சொன்னாரு…” என்றாள் அருளாசினி.
“என்ன சொன்னான்??”
“அவர் வந்தா நீ ஜெம்மாகிடுவேன்னு சொன்னாரு. ஆனா அவர் பேச்சை எடுத்தாலே நீ அப்படித்தான் ஆகிடுற. ஜெம்மா இருக்கும் போது உன் பிரண்டு மூஞ்சி பார்க்க சகிக்காதுன்னு வேற சொன்னாரு…” என்று அவள் விளக்க அர்ஜுனின் முகம் இன்னமும் கோணலாகியது.
———
இரவு தாமதமாகத்தான் அவர்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். வீட்டிற்கு வரவும் அருளாசினியின் தோளில் உறங்கிக் கொண்டிருந்த பேத்தியை வாங்கிக் கொண்டிருந்தார் அன்னப்பூரணி. 
“நீ போய் டிரஸ் மாத்திட்டு வா அருளு. பாப்பா என்கூட படுத்துக்கட்டும். பசிச்சா பால் ஆத்தி கொடுக்கறேன், நீ ரெஸ்ட் எடு” என்றார் அவர்.
“இருக்கட்டும் அத்தை இவ ரொம்ப படுத்துவா. நீங்க மாத்திரை போட்டு தூங்கணும்ல”
“இனியாள் வந்ததுல இருந்து மாத்திரை எல்லாம் குறைஞ்சு போச்சு. இவ இருக்கும் போது எனக்கு எந்த கவலையும் இல்லை. நான் நல்லாவே இருக்கேன், நீ போய் படுத்துக்கோ. அழுதா நானே உன்னை எழுப்பறேன்” என்று அவர் முடித்துவிட அருளாசினி அறைக்கு சென்றாள்.
சில மணித்துளிகளிலேயே ஆருத்ரன் வீட்டிற்கு வந்திருந்தான். அன்னப்பூரணி குழந்தையை அறையில் படுக்க வைத்துவிட்டு பாலை காய்ச்ச வெளியே வர ஆருத்ரன் அப்போது தான் நுழைந்தான்.
“நீயும் வந்திருக்கலாம் ருத்ரா. உன்னைய அவங்கம்மா கேட்டாங்க” என்றார் அவர்.
“அவன் கேட்கலைல்ல”
“சரி விடு” என்றவர் சமையலறை போக “என்னம்மா இன்னும் சாப்பிடலையா??”
“நாங்க சாப்பிட்டாச்சு உன் மகளுக்கு தான் பாலை காய்ச்சப் போறேன்”
“இனியாள் எங்கேம்மா??”
“என் ரூம்ல தான் படுத்திருக்கா. சத்தமில்லாம பார்த்திட்டு போ எழுந்தா அவளை சமாளிக்க முடியாது” என்றுவிட்டு அவன் தன் போக்கில் சென்றார்.
அன்னையின் அறைக்கு சென்று குழந்தையை பார்த்துவிட்டு அன்னப்பூரணி வரும் வரை அமர்ந்திருந்தவன் அவர் வரவும் குழந்தையை தூக்கப் போனான்.
“குளிச்சியா நீ முதல்ல??”
“ம்மோவ்”
“நீ ம்மோவ்ன்னு கூப்பிடும் போதெல்லாம் எனக்கு மியாவ்ன்னு கேட்குதுடா. இனிமே ஒழுங்கா கூப்பிடு”
“உன் பொண்ணு இன்னைக்கு இங்க தான் நீ போய் படு போ. நானே என் பேத்திக்கூட படுக்கலாம்ன்னு இருக்கேன். இவன் வந்து தூக்கிட்டு போக பாக்குறான்” என்று முனகியவர் மகனை வெளியே விரட்டினார்.
ஆருத்ரனும் சிரித்துக்கொண்டே அறையில் இருந்து வெளியில் வந்தவன் அவர்கள் அறைக்கதவை தள்ளித்திறக்க இன்னும் உடை கூட மாற்றாது அருளாசினி மகள் இழுத்து கீழே தள்ளியிருந்ததை எல்லாம் அடுக்கிக் கொண்டிருந்தாள்.
சத்தமில்லாது கதவை அடைத்தவன் பின்னால் சென்று அவளை இடையில் துள்ளிக்கொண்டு திரும்பினாள் அவள்.
“ஹேய் எதுக்கு இப்படி துள்ளுற??”
“நீங்க எப்போ வந்தீங்க??”
“அப்போவே வந்திட்டேன்”
“போன் பண்ணப்போ வர முடியாது வேலை இருக்கு நீ போயிட்டு வான்னு சொன்னீங்க”
“ஆமா சொன்னேன் இப்போ என்ன??”
“என்னமோ பண்ணுங்க போங்க” 
“உன் பிரண்ட் என்னை கேட்டானா என்ன??”
“அவங்கம்மா கேட்டாங்க”
“அவன் கேட்கலைல அப்புறம் எதுக்கு நானு”
“அவன் குணம் தான் உங்களுக்கு தெரியும்ல”
“அதுக்காக என்னை இறங்கி போகச் சொல்றியா. பிடிக்காத இடத்துல நான் இருக்க மாட்டேன்னு சொல்லியிருக்கேன்ல”
“சரி சரி விடுங்க. அப்புறம் அந்த ஆஸ்பிட்டல் கட்டுற வேலையை பத்தி பெருமையா சொல்லிட்டு இருந்தான். நீங்க எப்படி மிஸ் பண்ணீங்க??”
“அது அவனோட திறமைக்கு கிடைச்சது. இதுவரைக்கும் எதையும் அவன்கிட்ட நான் தட்டிப்பறிச்சதும் இல்லை எனக்கானதை விட்டுக் கொடுத்ததும் இல்லை”
“விட்டுக்கொடுத்தது மறந்து போச்சு போல”
“அது வேற நானோ இல்லை அவனோ யாரோ ஒருத்தர் தான் அதுல வந்திருப்போம். ரிசல்ட் தெரியறதுக்கு முன்னாடியே நான் விலகிட்டேன். ஒரு வேளை அவனே செலக்ட் ஆகியிருந்தா. அந்த நேரத்துல எனக்கு வேற எதுவும் தோணலை உன்னைத்தவிர. நான் விலகிக்கறேன்னு வார்த்தையை கொடுத்திட்டேன். சொன்ன சொல்லை காப்பாத்தணும்ல அதான்”
“என்னமோ போங்க” என்றவள் விட்ட வேலையை தொடர போக ஆருத்ரன் மனைவியை சீண்ட ஆரம்பித்தான்.
இடையில் அவன் விரல்கள் மீண்டும் ஊரவும் பட்டென்று தட்டிவிட்டாள். “என்ன பண்ணிட்டு இருக்கீங்க நீங்க?? பார்த்திட்டேய் இருக்கீங்க என் கூட ஹெல்ப் பண்ணலாம்ல”
“ஹெல்ப் தானே இந்த புடவையை கழட்டுறதுக்கு நான் ஹெல்ப் பண்ணுறேன்”
“ப்ச் உங்களை போங்க நீங்க… நான் வேலை முடிச்சுட்டு கூப்பிடுறேன்”
“அப்புறம் 
“அதெல்லாம் வேலைக்கு ஆகாது. இதெல்லாம் நாளைக்கு நானே உனக்கு அடுக்கி தர்றேன். இப்போ ப்ளீஸ்” என்றவனின் இதழ்கள் அவள் கழுத்தில் தன் ஊர்வலத்தை தொடங்கியிருக்க “ப்ளீஸ் நாளைக்கு பார்த்துக்கலாம்”
“நோ வே, நைட்ல இனியாள் தூங்க மாட்டேங்குறா, பகல்ல நான் இங்க இருக்க மாட்டேங்குறேன். ஏதோ சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு அதை யூஸ் பண்ணிக்க வேண்டாமா, ப்ளீஸ் ஆசினி” என்றவன்தன் கொஞ்சலை தொடங்க அவளால் அவனை தடுக்க முடியாது தானும் அவனுடன் ஐக்கியமானாள்.

Advertisement