Sunday, July 19, 2026

    Ithaiya Kilaiyil Pooththavalae

    இதய கிளையில் பூத்தவளே -13 அத்தியாயம் -13 ஊரில் நடைபெறும் வரவேற்புக்காக தாத்தா பாட்டி மனைவியோடு காரில் புறப்பட்டான் பார்த்திபன். அதிகாலை மூன்று மணிக்கு கிளம்பி வழியில் காலை உணவு முடித்துக் கொண்டவர்கள் பனிரெண்டு மணிக்குள் ஊர்ப் பக்கம் வந்து விட்டனர். கிராமப் புறத்தின் அழகை விழிகள் விரித்து ரசித்தாள் சுஹானா. தார் சாலையின் பக்கவாட்டில் சறுகலாக இருந்த...
    இதய கிளையில் பூத்தவளே -12 அத்தியாயம் -12 நட்சத்திர விடுதியில் பார்த்திபன், சுஹானா இருவரின் திருமண வரவேற்பு விழா நடந்து கொண்டிருந்தது.  வழக்கமாக திருமண நாளில் மணமக்களுக்கு ஏற்படும் சோர்வு ஏதுமின்றி, கிளிப் பச்சை வண்ண டிசைனர் புடவையில் சுஹானாவும் பிஸ்தா பச்சை வண்ண குர்தாவில் பார்த்தியும் எடுப்பாக, நேர்த்தியாக, அதை விட அடுத்தவரின் கண்களை பறிக்காத மலர்ச்சியோடு...
    மனதின் மகிழ்ச்சியெல்லாம் முகத்தில் பிரதிபலிக்க அவனை நிமிர்ந்து பார்த்தாள்.  திருமணத்திற்கு முழு சம்மதம் என்ற செய்தியை தாங்கி அவளைப் பார்த்திருந்தான்.  “இதுக்கு தேங்க்ஸ் எல்லாம் சொல்ல தோணல பார்த்தி, சொல்ல கூடாதுதானே? அந்த ஃபார்மாலிட்டி நமக்குள்ள இனி தேவையில்லைதானே?” எனக் கேட்டாள்.  ஒத்துக் கொண்டவன், “உங்க அப்பா சம்மதிக்கிறது கஷ்டம் ஆச்சி” என்றான்.  “தாத்தா பேசி சரி பண்ணிடுவாங்க பார்த்தி,...
    இதய கிளையில் பூத்தவளே -11 அத்தியாயம் -11 ‘தனசேகரன் ஐயாவிடம் சொல்லி விட்டு வந்தேனே, உன்னிடம் பேசினாரா, பெண் பார்க்க தொடங்கவா?’ என பார்த்திபனை நச்சரிக்க ஆரம்பித்திருந்தார் சரஸ்வதி. தாத்தா கெடு கொடுத்து நான்கு நாட்கள் ஆகி விட்ட பின்னரும் அவனை பார்க்கும் போதெல்லாம் “என்னடா?” என்பாரே தவிர, அவன் பதில் தர வேண்டும் என எதிர்பார்ப்பதில்லை.  பார்த்திபனால் எதிலுமே...
    “பிரிஞ்சு போயிட்டேங்கிறதுக்காக எப்படியோ போன்னு நினைக்கல, நல்லா இரு” என சொல்லி கிளம்பத் தயாரானாள். பதினைந்து நிமிடங்களை கூட தொட்டிருக்கவில்லை அவள் வந்து, அதற்குள் கிளம்பிச் செல்கிறாளே என வேதனை கொண்டாலும் அவளை தடுக்காமல் விடை கொடுப்பது போலத்தான் பார்த்தான். பழகும் போதே அவனது குணத்தை மாற்றியமைக்க நிறைய போராடியிருந்தாள் யாமினி. அதில் அவளும் அவளது கனவுகளும்...
    இதய கிளையில் பூத்தவளே -10 அத்தியாயம் -10 சுஹானா தன் காதலை அனைவரின் முன்னிலையிலும் வெளிப்படுத்தி இரண்டு வாரங்கள் ஆகி விட்டன. இன்று வரை தாத்தாவின் வீட்டிற்கு வராமலே இருந்தான் பார்த்திபன். சுஹானா பள்ளியில் ஆசிரியராக சேர்ந்து விட்டாள். முதல் நாள் அவள் புறப்படும் போது அபார்ட்மெண்ட் வாயிலில் வைத்து அவளை சந்திக்க நேர்ந்து விட்டது. அவள் அவனருகில்...
    “பொறுமைங்கிறதே கிடையாதா உங்களுக்கு? இவ நாம பெத்தெடுத்த பொண்ணு, நாமதான்…” காயத்ரி பேசிக் கொண்டிருக்கையிலேயே அங்கிருந்து வெளியேறி விட்டார் ஆஷுதோஷ்.  நெற்றியில் கை வைத்துக்கொண்டு அமர்ந்து விட்டார் காயத்ரி.  ஆஷுதோஷ் பார்த்தியை எப்போது அப்படி பேசினார் என சுஹானாவிடம் விவரமாக கேட்டறிந்து கொண்டார் தனசேகரன்.  “இதனால பார்த்திக்கு எந்த அவமரியாதையும் இல்லை ஆச்சி, சூரியன் போல அவன், யாரோட...
    இதய கிளையில் பூத்தவளே -9 அத்தியாயம் -9 ஆஷுதோஷ் பார்த்திபனை மோசமாக பேசி விட்டதில் அனைவருமே அதிர்ந்துதான் போயிருந்தனர்.  பேசிய பிறகு மாமனாரை எதிர்கொள்ள முடியாமல் பார்வையை தாழ்த்தியிருந்தார் ஆஷுதோஷ்.  அங்கிருந்து செல்ல முனைந்த பார்த்தியின் கையை பிடித்து நிறுத்திய தனசேகரன், “எங்க போற நீ, நில்லு இங்கேயே, இந்த வீட்ல எனக்கு என்ன உரிமை இருக்கோ உனக்கும் இருக்குடா”...
    “வர்றத முன்னாடியே சொல்லி என்னவோ ஏதோன்னு எல்லாரும் டென்ஷன் ஆக வேணாம்னுதான் நான் சொல்லலை” என அம்மாவிடம் சொன்னார் காயத்ரி.  “அடி போடி, இப்படி அவசரம் அவசரமா  செய்ய தேவையில்லாம முன்னாடியே மால்புவா செஞ்சு வச்சிருப்பேன், இப்ப ரிலாக்ஸா பேசிட்டு இருந்திருக்கலாம்” என குறை பட்டார் பத்மா.  அங்கேயே நாற்காலி எடுத்துப் போட்டு பாட்டியை அமரச் சொன்ன...
    இதய கிளையில் பூத்தவளே -8 அத்தியாயம் -8 தாத்தா பாட்டி சென்னைக்கு வந்து விட்டதும் சுஹானாவுக்கு ஆறுதலாக இருந்தது. தன் தந்தை பார்த்திபனிடம் நடந்து கொண்ட விதத்தை பற்றியெல்லாம் அவர்களிடம் அவள் பகிர்ந்து கொள்ளவில்லை. பார்த்தியை பெற்றெடுக்காத மகனை போல கருதி பழகும் அவர்களால் நிச்சயமாக அதை தாங்கிக் கொள்ள முடியாது.  பார்த்தி கல்லூரி செல்வதும் அவனுடைய ஆராய்ச்சிப்...
    பொருளாதாரம் பற்றிய சிந்தனைகள் ஏதும் அப்போது இருந்தது இல்லை. காசு கொடுத்து எந்த பொம்மைகளும் வாங்கியதில்லை. உச்சி வெயிலில் குச்சி ஐஸ் சாப்பிட கிடைத்தாலே இரண்டு நாட்களுக்கு அந்த சந்தோஷம் ஒட்டிக் கொண்டு நிற்கும். மிக மிக மகிழ்ச்சியான குழந்தைப் பருவம் திடீரென மாறிப் போய் விட்டது. வருடந்தோறும் வறண்டு போவதும் மீண்டும் வெள்ளம் பெருகி ஓடுவதுமாக...
    “அவங்க வேலை அப்படி ஆச்சி” என சமாதானமாக சொன்னான். “நிவாஸ் கூட ஒட்ட மாட்டான், வேற உலகத்துல இருப்பான்” “அவங்க குணம் அப்படி ஆச்சி” “உங்க சின்ன வயசு எப்படி பார்த்தி?” எனக் கேட்டாள். இரு கைகளையும் விரித்து  சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை என்றான். “கொஞ்சம் இருக்குதானே, அத சொல்லுங்க” என்றாள். ஆழ்ந்த மூச்சு எடுத்துக் கொண்டான். பார்த்திபனின் வீடு திருச்சிக்கும் தஞ்சைக்கும் இடையில்...
    இதய கிளையில் பூத்தவளே -7 அத்தியாயம் -7 சுஹானாவால் இன்னும்  அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. அதை விட உன் அப்பா என்பதற்காகவே அவரை மன்னித்து விடுகிறேன் என்ற பார்த்தியின் நிலைப்பாடு அவளை என்னவோ செய்து கொண்டிருந்தது. சுருண்டு படுத்திருந்தவள் அழைப்பு மணியின் ஓசை கேட்டு எழுந்தாள். பார்த்திபன்தான் மதிய உணவுக்காக கூப்பிட வந்திருந்தான்.  அவளின் சோர்ந்த முகத்தை பார்த்துக் கொண்டே...
    இதய கிளையில் பூத்தவளே -6 அத்தியாயம் -6 பார்த்திபனின் வீட்டில் குட்டித் தூக்கத்திலிருந்த சுஹானா விழித்துக் கொண்டாள். அவள் எழுந்த அரவத்தில் லேப்டாப்பில் வேலையாக இருந்த பார்த்திபன் அவளின் பக்கமாக திரும்பினான். “லஞ்ச் சாப்பிட்டு இப்படி தூங்கி பல நாள் ஆகிடுச்சு பார்த்தி, தேங்க் யூ!” என்றாள்.  “ஏதாவது உங்களை தொந்தரவு பண்ணுதா ஆச்சி?” எனக் கேட்டவன் அவளின் குழம்பிய...
    அவன் ஒன்றும் சொல்லவில்லை. என்னதான் செய்கிறான் என வேடிக்கை பார்த்தாள். பூண்டுகளை நசுக்கி வர மிளகாய் புளி உப்பு எல்லாம் மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைத்தான். வரமிளகாய் வறுத்து மிளகாய் ஃபிளேக்ஸ் தயார் செய்து கொண்டான். கோதுமை மாவு எடுத்துக் கொண்டவன் அதனுடன் சீரகத் தூள், உப்பு, மிளகாய் ஃப்ளேக்ஸ் சேர்த்து தண்ணீர் ஊற்றி...
    சிறு வயது நிகழ்வை நினைவு படுத்தியவன், “படிப்பே நீங்க கொடுத்ததுதான் ஆச்சி” என்றான். “ஓ கமான் பார்த்தி, தாத்தாதான் ஹெல்ப் பண்ணினாங்க, நான் எதுவும் செய்யல. அதுக்காக நீங்களும் அவங்களுக்கு எவ்வளவோ ஹெல்ப் செய்திருக்கீங்க. உண்மையை சொல்லணும்னா அன்னிக்கு நீங்க இல்லைனா இப்போ நான் இப்படி உயிரோட நிப்பேனாங்கிறதே டவுட்தான் இல்லையா?” எனக் கேட்டாள். “நான் வரலைனா...
    இதய கிளையில் பூத்தவளே -5 அத்தியாயம் -5 ரெபேக்காவின் திருமணத்திற்கு வந்த சுஹானா திடீரென கிளம்பிச் சென்றதில் அவளின் மற்ற நண்பர்களுக்கு ஒரே குழப்பம். திருமணம் முடிந்து பேசிக் கொண்டிருந்த நண்பர் பட்டாளம் சுஹானாவுக்கு காணொளி அழைப்பு செய்து, எங்கே சென்று விட்டாய் என விசாரித்தனர். பார்த்திபனுக்காக அங்கிருந்து கிளம்பும் படி நேர்ந்ததை  கூறினாள் அவள். அவளுடன் இளங்கலை படித்த...
    அப்பாவிடம் கேள்வி கேட்ட போது ஆம் என ஒத்துக் கொண்டார்.  இந்த சமுதாயத்தில் அவரது மகளுக்கு என ஒரு அந்தஸ்து இருக்கிறதாம், அதை கெட்டுப் போகாமல் பாதுகாத்தாராம். வேலை பற்றிய இவளது விருப்பத்தை அஜய்யிடம் சொன்னதால்தான் அவனும் இவளை மறுத்து விட்டான், இனியும் நல்ல வரன்கள் அமைவது கடினம், நான் சொல்வதை மட்டும் கேட்டு நடந்து...
    இதய கிளையில் பூத்தவளே -4 அத்தியாயம் -4 வாக்கர் உதவியுடன் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தான் நிவாஸ். தங்கையை பார்த்ததும் முகம் மலர்ந்தவன், “ஆச்சி தாத்தா பேசினாங்களா? அங்க போனதும்தான் அவங்க ஃபிரீயா இருக்க மாதிரி தோணுது” என்றான்.  ஆமோதிப்பாக தலையசைத்தவள், “தேர்ட்டீஸ் வரை ஓகே நிவாஸ், அதுக்கு மேல லைஃப்ல அடுத்த கட்டம் போயிடுறோம், அந்த சமயம் எங்க...
    சுஹானாவுக்கு இங்கு சில ஆண் நண்பர்களும் உண்டு, வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறாள், அவர்களுடன் வெளியில் சென்றிருக்கிறாள், அவர்களுடன் எடுத்த புகைப்படங்களை ஸ்டேட்டஸில் வைத்திருக்கிறாள், ஆஷுதோஷ் எதைக் குறித்தும் அவளிடம் கேள்வி கேட்டதில்லை, மறுப்பு சொன்னதும் இல்லை.  இப்போது திடீரென பார்த்திபனுடன் பழகவில்லை அவள். விடுமுறைக்கு சென்னை செல்லும் சமயமெல்லாம் இவனுடன் பழகியிருக்கிறாள். அப்பாவுக்கு என்னவானது என்ற...
    error: Content is protected !!