Indru kanum nanum nana
அத்தியாயம் 41
ஆண்கள் இருவரும் தத்தம் துணையுடன் நுழைவதை கண்ட பெற்றோர்களின் மனம் குளிர்ந்திருந்தது.
சிடுசிடுப்பாக தன் பெற்றோர்களின் அருகே சென்று நின்றுக்கொண்ட ஆராத்யா "இங்க எதுக்கு வர சொன்னீங்க.. அவன் சும்மாவே ஆடுவான்.. நீங்க இன்னும் அவன் காலுக்கு சலங்கை கட்டி விடுற மாதிரி எல்லாம் பண்ணுங்க" என்று பொறும, அவர்கள் அவளை கண்டுகொண்டால் தானே.
சிவகுமாரும்...
அத்தியாயம் 16
எதிர்பாரா நிகழ்வுகள் நம் வாழ்வையே மாற்றியமைக்கும் வல்லமை பெற்றதல்லவா....
மலை பிரதேசங்களின் ராணி என்ற புகழோடு வானளவு உயர்ந்து நிற்கும் ஊட்டி பிரதேசத்தின் முக்கிய புள்ளியில் விண்ணை தொட்டது அந்த அலுவலக கட்டிடம்.
AR குரூப்ஸ் என்று வெள்ளி எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருந்த அந்த பெயர் பலகை கூட அத்தனை தனித்துவமாய் கம்பீரமாய் காட்சியளித்தது.
அங்கு வேலை...
அத்தியாயம் 9
கல்லூரி தொடங்கி இதோடு இரண்டு வாரம் கடந்திருந்தது, இந்த இரண்டு வாரத்தில் அக்னி ஆத்ரேயனிடம் பெரிய மாற்றம் ஏதும் நிகழ்ந்திருக்கவில்லை. இருவரும் பெரிதாக சண்டைப்போட்டுக்கொள்ளவில்லை என்றாலும் எப்போதும் விறைப்பாக தான் சுற்றிக்கொண்டிருந்தனர்.
அன்று மதிய உணவு இடைவேளையின் போது கதிர் மரத்தில் சாய்ந்துக்கொண்டிருக்க, நேஹா வண்டியில் அமர்ந்திருந்தாள், அக்னியும் ஆருவும் ஒரு...
அத்தியாயம் 28
ரயில் சென்னையை வந்தடைய அனைவரும் தங்களின் உடமைகளை எடுத்துக்கொண்டு தங்களின் வீடு நோக்கி சென்றனர்.
அக்னி ரயில் நிலையம் நெருங்கும் போதே தங்களுக்காக டாக்ஸி புக் செய்திருந்தான் எனவே இறங்கியவுடன் அவன் டாக்ஸி நோக்கி செல்ல அனைவரையும் அழைத்தான்.
அக்னி "வாங்க டாக்ஸி மெயின் கேட் கிட்ட நிக்குதாம், டிராபிக் வேற, சீக்கிரம் போனும்" என்று...
அத்தியாயம் 26
ஆத்ரேயன் "தேங்க்ஸ்" என்று மென்னகை புரிய
ஆரு "ஏன்" என்று கேள்வியாக புருவமுயர்த்த
ரேயன் "என் லைஃப்ல இன்னும் ஹாப்பினெஸ் கொண்டு வந்ததுக்கு" என்றான் புன்னகையுடன்.
ஆத்ரேயன் கூறியதை கேட்டு அவனை பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு 'விளையாட்டுக்கு பேச போய் நம்மளே தெரியாம எதாச்சு பண்ணிட்டோமோ' என்று சிந்திக்க, அவள் முன் சொடுகிட்ட ஆத்ரேயன் "ஓய் என்ன...
அத்தியாயம் 13
நிரஞ்சனாவை தேடி கிளம்பிய ஆத்ரேயன் அவள் தோழிகளிடம் விசாரிக்க, யாரிடமும் அவன் எதிர்பார்த்த பதில்கிட்டவில்லை. இறுதியாக ஜனாவின் நெருங்கிய தோழி கவியிடம் கேட்க, கவியோ அவள் ஒன்பது மணிக்கே கிளம்பிவிட்டதாக தகவல் தெரிவித்தாள். அப்போது தான் ஆத்ரேயனுக்கு பிரகாஷின் நியாபகம் வர, அவன் பெயரை தவிர்த்து வேறெதுவும் தெரியாமல் முழித்தவன் இறுதியில் அவள்...
அத்தியாயம் 22
அக்னியின் அறை முன் நின்ற நேஹாவிற்கு கதவை தட்ட தயக்கமாக இருந்தது. அதே சமயம் அறையினுள் உடை மாற்றிய அக்னிக்கு வேதாச்சலம் யாருடனோ பேசுவது போல் தோன்ற தன் அறை கதவை திறந்தான்.
அவன் இப்படி கதவை திறப்பான் என்று எதிர்பாராதவள் பேந்த பேந்த முழிக்க அக்னியோ அவளை அழுத்தமாக பார்த்துக்கொண்டிருந்தான்.
எப்போதும் கோபத்தை...
அத்தியாயம் 12
அக்னி, அந்த காட்சி எழுதிருந்த காகிதத்தை அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க,
ஜோஷ் ஜீவாவின் செவியில் "சீக்கிரம் பண்ண சொல்லுடா.. டைம் ஆகுது" என்க,
ஜீவா "எமோஷன்ஸ் வர டைம் ஆகும்.."
"ஓகே.. சாரி" என்று அவனும் அமைதியானான்.
அக்னி கையிலிருந்த தாளை ஜோஷிடம் கொடுத்துவிட, ஜீவா "ஸ்டார்ட்" என்றான்.
தன் முன் நின்றிருந்த ரம்யாவிடம் வந்தவன் கண்களில் அனல் தெறிக்க, "என்ன...
அத்தியாயம் 34
ரேயன் செய்வது புரியாமல் குழப்பத்தில் நின்றுக்கொண்திருந்தனர் கிஷோரும் கதிரும். இருவரும் அவன் பதிலை எதிர்பார்த்து நின்றிருக்க, அவனோ மௌனம் சாதித்தான்.
கிஷோர் "டேய் இப்படியே நின்னா என்ன அர்த்தம்.. என்னடா பண்ணிட்டு இருக்க.. வேற எதாச்சு பிளான்ல இருக்கியா" என்று எரிச்சலாக கேட்க,
ரேயன் அவனை கண்டுக்கொள்ளாமல் கதிரை பார்த்து "ஆமா உன் ரெஸ்டாரண்ட்ல...
அத்தியாயம் 2
அரங்கத்திலிருந்து கேன்டீன் சென்ற கிஷோர், கேன்டீன் அக்காவிடம் "அக்கா எனக்கு ஒரு லெமன் ஜூஸ்" என்றுவிட்டு ஆத்ரேயனிடம் "மச்சா நீ என்ன சாப்பிடற"
" எதுவும் வேண்டாம்"
"ஹான் ஒகே டன். அக்கா ஒரு வாட்டர் மேலன் ஜூஸ்"
"நான் தான் எனக்கு எதுவும் வேண்டாம்னு சொல்றேன்ல"
"சாப்பிட்டு வந்த எனக்கே பசிக்கிது, சாப்பிடாம...
அத்தியாயம் 39
அலுவலகத்தினுள் நுழைந்த ராகுல் சுஷ்மி கிஷோரின் விளிப்பை கேட்டு அதிர்ந்திருக்க, கிஷோர் "என்ன.. உங்கள யாரு கூப்பிட்டா" என்றான் யோசனையாக. ராகுல் "என்ன ண்ணா நீங்க தான கூப்பிட்டீங்க.. இப்போ இப்படி கேட்குறீங்க" என்று நெஞ்சில் கை வைக்க,
கிஷோர் "ஓ ஆமால.. போங்க போங்க" என்றான்.
சுஷ்மி "அண்ணா...." என்றிழுக்க
கிஷோர் "என்னா...." என்று...
அத்தியாயம் 14
மதிலின் வெளியே நின்றவர்கள் பேசியதை கேட்டு ஆரு அதிர்ந்து நின்றாள். ஆம் அவர்கள் பேசியது என்னவோ
ஆத்ரேயனை பற்றி தான்.
ஒருவன் "டேய் அவன் இப்போ உள்ள தான் இருக்கான் டா.. எப்படி தூக்குறது" என்று கேட்க,
மற்றொருவன் "உள்ள ஏதோ கல்சுரல்ஸ் தான் நடக்குது... அப்படியே ஸ்டுடெண்ட்ஸ் மாதிரி உள்ள போய்டலாம்" என்று யோசனை கூற,
மூன்றாமவன்...
அத்தியாயம் 25
ஆராத்யா உறங்க சென்றவுடன் கௌதம் மற்றும் சித்துவும் உறங்க சென்றனர், ரேயனும் எழுந்து கதவின் அருகே நின்றுகொண்டான். கௌதம், ஆத்ரேயன் வந்ததிலிருந்து அவனையும் ஆரத்யாவையும் கவனித்துக்கொண்டு தான் இருந்தான் அவர்கள் சரியில்லை என்பதையும் உணர்ந்தே இருந்தான் ஆனால் அவளிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.
ரேயன் எழுந்து செல்ல கிஷோரும் அவன் பின்...
அத்தியாயம் 5
காலை வேளை இனிதாய் புலர, அக்னி கதிரை அழைப்பதற்கு கிளம்பினான். அவர்கள் வீட்டினுள் நுழையும் முன் கதிரின் தாய் தேன்மொழி கதிரிடம் "அப்பாக்கு இன்னிக்கி தான் சம்பளம் போடுறாங்க டா.. அவர் வந்த அப்பறம் தான் சமைக்கனும்" என்றபடி அவனுக்கு காபி கொடுக்க, அதை வாங்கியவன் அமைதியாக பருகினான்.
கதிரின் குடும்பம் நடுத்தர குடும்பம்...
அத்தியாயம் 21
நிரஞ்சனாவின் அலுவலகத்திலிருந்து கிளம்பிய ஆத்ரேயன் டெண்டருக்கான கோப்பைகளை எடுக்க தன் அலுவலகம் வந்திருந்தான்.
ரேயன் அந்த டெண்டருக்கான வேலையை ராகுல் மற்றும் சுஷ்மியிடம் கொடுத்திருந்ததால் அவர்களும் சென்னை அலுவலகம் வந்திருந்தனர்.
ரேயன் அலுவலகத்தின் முன் வண்டியை நிறுத்த
கிஷோர் "மச்சா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் போயிட்டு வந்திடுறேன்" என்றவாறு கிளம்பிவிட ரேயன்...
அத்தியாயம் 31
"வாழ்க்கையின் தடம் மாறிப்போனது
ஒரே இரவில்..
எண்ணங்கள் மாறிப்போனது
ஒரே இரவில்..
இன்பம் தொலைந்து போனது
ஒரே இரவில்..
ஆனால்,
உள்ளங்கள் என்றும் மாறா.."
தங்கள் வாழ்வில் நடந்த அனைத்தும் கண்முன் 2 நொடிகளில் வந்து செல்ல, ரேயனின் கையை பிடித்திருந்த ஆரு பட்டென்று எடுத்தாள், முகம் முழுவதும் ஏமாற்றம் மட்டுமே எஞ்சியிருந்தது அவளிடம், அதை கவனித்த ரேயனிற்கு தான் எப்படி...
அத்தியாயம் 18
ஏ.ஆர் நிறுவனத்தின் பலகையை பார்த்த அக்னியின் மனம் சில வருடங்களுக்கு முன் பயணித்தது.
அன்று விளையாட்டு மைதானத்தில் அக்னிக்கு அடிபட்ட நிகழ்வு நடந்து சில நாட்கள் கழிந்திருந்தது. அந்த நாளுக்கு பின் அக்னியும் ஆத்ரேயனும் ஒருவரை ஒருவர் சந்திக்க நேரிடவில்லை ஆனால் சந்திக்கவேண்டிய நாளும் வந்தது.
எப்போதும் போல் தன் மைதானத்திற்கு சென்று...
அத்தியாயம் 43
இரவு உணவை அனைவருடனும் உண்டுவிட்டு தன் அறைக்கு வந்த ஆத்ரேயன் கதிருக்கு அழைக்க, ரேயனின் அழைப்பை ஏற்ற கதிர் "சொல்லு ரேயா.. இந்த நேரத்துல போன் பண்ணிருக்க" என்று வினவ, ரேயன் "ஒன்னுமில்ல கதிர்.. வீட்ல இந்துவோட கல்யாணத்தை பத்தி பேச்சு வந்தது.. உனக்கு ஓகேன்னா நாளைக்கு வீட்ல வந்து பேசுவோம்"...
அத்தியாயம் 24
ரயில் நிலையத்தில் மூன்றாம் நடைமேடைக்கு முன் நின்றுகொண்டிருந்த கிஷோர் ஆத்ரேயனுக்கு அழைத்து "டேய் அப்போ சும்மா சொன்னேன்டா ஆனா இப்போ நிஜமாவே பத்து நிமிஷம் தான் இருக்கு.. ஸ்டேஷனை சுத்தி பாக்குறியா நீ" என்று பதற, அவன் பதட்டத்திற்கு காரணமானவோ "புலம்பாத திரும்பி பாரு" என்றான். கிஷோர் திரும்பி...
அத்தியாயம் 29
கல்லூரியில் இறுதியாண்டிற்கான தேர்வுகள் நடந்துக்கொண்டிருந்தது. ஒரு குழுவிற்கு காலையிலும் மற்றொரு குழுவிற்கு மாலையிலும் தேர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்து.
அக்னி நேஹா கதிருக்கு காலையிலும் ரேயன் கிஷோர் மற்றும் ஆருவிற்கு மாலையிலும் தேர்வு நடைபெற்றது. இறுதி தேர்வை முடித்துவிட்டு ஆரு வெளியில் வர அதே சமயம் அங்கு வந்த கிஷோர் "என்ன பார்ட்னர் எக்ஸாம் எப்படி...