Advertisement

அத்தியாயம் 36

ஆத்ரேயன் “மாப்ஸ் நான் தான், இங்க பாருங்க” என்று கூற, அக்னியோ பல்லை கடித்துக்கொண்டு நின்றிருந்தான். ரேயனின் பின்னால் வந்த கிஷோர் ரித்துவை பார்த்து “ஹே..” என்று கத்த,
ரித்து “ஐயோ” என்று நேஹாவின் பின்னால் ஒளிந்தாள். கிஷோர் அவளை பிறகு கவனித்துகொள்வோம் என்று நினைத்து அமைதி காத்தான்.

அக்னி “எதுக்கு இங்க வந்திருக்க” என்று அடிக்குரலில் ரேயனிடம் சீற, ரேயன் “ஒரு பிஸ்சின்ஸ் மேன் இன்னொரு பிஸ்சின்ஸ் மேனை எதுக்கு பாக்க வருவாங்க”என்றான் கேள்வியாக. அக்னி ஏதும் கூறாமல் இருக்க, ரேயன் “அட, என்ன மிஸ் நேஹா எதுக்கு பாக்க வருவாங்கன்னு சொல்லுங்க” என்றிட,
நேஹாவோ “பிஸ்சின்ஸ் டீல்க்காக சார்” என்றாள், அக்னி அவளை முறைக்க, ரேயன் “ப்ரில்லியண்ட்.. ஐ ஹேவ் அ ப்ரொபோசல் பார் மிஸ்டர் அக்னி” என்றவுடன் அக்னி “எனக்கு உன் ப்ரொபோசல் தேவை இல்ல” என்றான் சற்றும் குறையாத கோபத்துடன்.

ரேயன் “ஓ.. யார் சொன்னாலும் கேட்கமாட்டீங்களா” என்று பவ்யமாக வினவ, “மாட்டேன்” என்றான் சிறிதும் யோசிக்காமல். ரேயன் “இவர் சொன்னாலுமா..” என்று வாசலை பார்க்க, அக்னி நிறுவனத்தின் ஆரம்பக்கால பங்குதாரர் கருணாகரன் நின்றிருந்தார்.

அக்னி அவரை பார்த்துவிட்டு ரேயனை பார்க்க, ரேயன் “உள்ளே போய் பேசலாம்னு நினைக்குறேன்” என்றிட,
அக்னி “மிஸ் நேஹா, கான்பரென்ஸ் ஹால் ரெடி பண்ணுங்க” என்று கூறிவிட்டு விறு விறுவென தன் அறைக்கு சென்றான். நேஹா ரேயன் கிஷோர் மற்றும் கருணாகரனை லாஞ்சில் அமரவைத்துவிட்டு ஹாலை தயார் செய்ய விரைந்தாள்.

அக்னியின் அலுவலகத்தை பார்வையிட்ட ரேயன் “பரவால்ல.. இட்ஸ் குட்” என்று மெச்ச, கிஷோர் “ரொம்பவே நல்லா இருக்கு.. யாரு பயரோடதாச்சே” என்று அவனும் மெச்ச
ரேயன் “ஹான் ஹான்.. போதும்” என்றான்.
கிஷோர் “ஹ்ம்ம் பொறாமை” என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் கூறியவன் தொடர்ந்து “சரி நீங்க பேமிலி எதாச்சு பேசிட்டு இருங்க எனக்கு வெளிய கொஞ்சம் வேலை இருக்கு.. பாத்துட்டு வரேன்” என்று எழ
ரேயன் “யார் அந்த பொண்ணு” என்றான் புருவமுயர்த்தி. கிஷோர் “எந்த பொண்ணு” என்று யோசனை செய்வது போல் பாவனை செய்ய,
ரேயன் “அதான் நீ ஒரு பொண்ண பாத்து ஹேன்னு வாய பிளந்தியே, அவ கூட உன்ன பாத்து நேஹா பின்னாடி ஒளிஞ்சாலே” என்றான்.

ரேயன் கூறியதை கேட்டு நெஞ்சில் கைவைத்த கிஷோர் “டேய் எல்லா பக்கமும் கண்ணா உனக்கு” என்று அதிர,
ரேயன் “ஹாஹா.. போ போ.. உறுப்படு” என்று ஆசீர்வதிக்க,
கிஷோரோ உதட்டை சுழித்து “நீ நினைக்குறதுலாம் இல்ல..வரேன்” என்று வெளியேறினான்.

அவர்கள் ஹாலில் இருப்பதாக எண்ணி ரித்து அதன் வெளியே நின்று எட்டி பார்த்துக்கொண்டிருக்க, அதன் பின்னில் இருந்த லான்ஞிலிருந்து இருந்து வந்த கிஷோர் அவள் பின் நின்று “அங்க யாரா தேடுற பிராடு.. என்னையா” என்று கேட்டான். அவன் குரலை கேட்டு பதறியவள் “ஐயோ” என்று ஓட நினைக்க,
அவள் கையை பிடித்தவன் “அடிங்கு நில்லு.. எங்க ஓடுற” என்றான். ரித்து எதுவும் தெரியாதது போல “சொல்லுங்க சார், எனி ப்ரொப்ளம்?” என்று பவ்யமாக கேட்க,
கிஷோர் “அடிப்பாவி என்னமா நடிக்கிற” என்று வாயை பிளக்க, ரித்து “சார் ரெஸ்பெக்ட் குடுத்து பேசுங்க” என்றாள்.
கிஷோர் “ஓ அப்படியா மேடம்” என்றவன் ‘மவளே செத்த நீ’ என்று நினைத்துக்கொண்டான்.

சரியாக அப்போது அங்கு வந்த
நேஹா “கிச்சா கிச்சா.. என்னடா நடக்குது.. என்ன பண்ண போறீங்க” என்று ஆர்வமாக வினவ
கிஷோர் “இதோ பாரு பாப்பா நான் அவன்கூட இருக்கலாம் ஆனா அதுக்குன்னு அவன் என்கிட்ட சொல்லிட்டு செய்யுறான்னு இல்ல” என்றிட, நேஹா “ஹாஹா.. சரி வா உள்ளே போலாம்” என்றழைக்க
கிஷோர் “இல்ல எனக்கு இங்க ஒரு வேலை இருக்கு” என்றான் ரித்துவை ஓரக்கண்ணால் பார்த்தபடி.

நேஹா “இங்க என்ன வேலை” என்று வினவ,
கிஷோர் “ஆமா நேஹா பாப்பா இங்க அக்னி அவனோட ஸ்டாப் யாரையாச்சு ஏமாத்துறது, பொய் சொல்லுறது, திருட்டுத்தனம் பண்ணது தெரிஞ்சா என்ன பண்ணுவான்?” என்று கேட்க,
நேஹா “சோ சிம்பிள் தூக்கிருவான்.. அவ்ளோதான்” என்றாள்.
ரித்து அதை கேட்டு பேய் முழி முழிக்க, கிஷோர் சிரிப்பை அடக்கிக்கொண்டு “சரி பாப்பா எனக்கு வெளிய கொஞ்சம் வேலை இருக்கு, நான் அப்புறமா இங்க வரேன் சரியா” என்று ரித்துவை பார்த்துக்கொண்டே நக்கலாக கூற,
நேஹா “வா வா எப்போவேனாலும் வா” என்றிட, கிஷோர் கிளம்பிவிட்டான்.

ரித்து நேஹாவை பிடித்துக்கொண்டு “உங்களுக்கு இவங்களை எப்படி தெரியும்” என்று வினவ
நேஹா “என் கிளாஸ்மேட்.. என் பிரண்ட்” என்றாள்.
ரித்து “ஓ.. அவங்களுக்கு அக்னி அண்ணாவையும் தெரியுமா” என்று படபடப்புடன் கேட்க,நேஹா இனி சொல்வதில் என்ன, கூடிய விரைவில் அனைத்தும் சரி ஆகிவிடும் என்ற நம்பிக்கையில், “நாங்க எல்லாரும் ஒரே கிளாஸ்” என்று ரித்துவின் தலையில் குண்டை தூக்கி போட்டாள்.
நேஹா கூறியதை கேட்டு வாயில் கைவைத்துக்கொண்டு ரித்து “அப்போ நீங்க அக்னி அண்ணா அவங்க” என்று இழுக்க, நேஹா அவளை குறுகுறுவென பார்த்துக்கொண்டு “எவங்க” என்று கேட்க,
ரித்து “அதான் அந்த கோளாறு… ஐயோ கிஷோரு” என்றாள் இழுவையாக.
நேஹா “உனக்கு அவன” என்று முடிக்கு முன் அக்னி அழைக்க, “இதோ வந்திடுறேன்” என்றுவிட்டு செல்ல, ரித்து “ஐயோ இனி என்ன ஆகுமோ, ஒருவேளை உண்மையாவே அக்னி அண்ணா வேலைய விட்டு தூக்கிருவாங்களோ” என்று என்னென்னமோ நினைத்துக்கொண்டே பீதியில் தன் இருக்கையில் அமர்ந்துக்கொண்டாள்.

அங்கு அலுவலகத்திலிருந்து மதிய உணவிற்காக வீடு திரும்பிக்கொண்டிருந்த ஆரத்யாவின் கார் நடு வழியில் பன்ச்சர் ஆகிவிட
ஆரு “ஓ காட்” என்றவள், தெரிந்த ஒரு மெக்கானிக்கிற்கு அழைத்தாள். அவரும் அங்கு அருகில் இருந்ததால் பதினைந்து நிமிடத்தில் வந்துவிட்டார். காரை ஓரமாக நிறுத்திவிட்டு, அதன் அருகே நின்று நிலாவிற்கு அழைத்து வீட்டிற்கு வர தாமதம் ஆகும் என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.

பின் அலைபேசியை தன் பாக்கெட்டில் போட்டவள் எதர்ச்சியாக எதிரில் பார்க்க, அங்கு இந்து நடந்து சென்றாள். அவள் பின்னால் இருவர் தொடர்வது போல் தோன்ற ஆரு அவர்களை உன்னிப்பாக கவனிக்க தொடங்கினாள். அங்கு அவ்வளவு ஜன நடமாட்டம் இல்லாமல் இருக்க, அவர்கள் இந்துவை பின் தொடர்வது யார் கண்ணிலும் படவில்லை.

அந்த இருவர் இந்துவின் கையை பிடித்து இழுக்கும் நேரம் அவர்களை நெருங்கிய ஆரு “இந்து” என்றழைக்க, இந்து ஆருவை நோக்கி ஓட எத்தனிக்க, அவர்களோ அவள் கையை விடவில்லை. ஆரு “கைய எடுடா” என்று சீற, அவர்களின் ஒருவன் “இதோ பாருடா.. என்ன ஹீரோயின்னா.. உன்னையும் உள்ள தூக்கி போட்டுட்டு போயிட்டே இருப்போம்” என்று மிரட்டிவிட்டு இந்துவை அவர்களின் காரில் ஏற்ற பார்த்தனர். இங்கு ஒருவள் நின்றும், இப்படி பகலில் ஒரு பெண்ணை தூக்கி செல்ல துணிகிறார்கள் என்பதை நினைத்து கடுப்பானவள் இரண்டு நொடி யோசித்தாள். பின் அங்கு இருந்த மெக்கானிக்கிற்கு குரல் கொடுத்தாள், “அண்ணா..”
“என்ன மா.. ஏதாவது பிரச்சனையா…” என்றவர் அப்போது தான் அவர்களை கவனித்தார்.

ஆரு “அண்ணா நான் போலீஸ்க்கு கால் பண்ணிட்டேன், இவனுங்கள கொஞ்சம் பாத்துக்கோங்க, இவனுங்க இப்போ தப்பிச்சாலும் சாயங்காலத்துக்குள்ள கண்டுபுடிச்சி பல்ல ஓடச்சிருவாங்க, சாட்சி சொல்ல, இல்ல அடையாளம் காட்ட பாத்துக்கோங்க” என்று அடித்துவிட, மொபைலில் அவர்களுடன் தொடர்பில் இருந்த அவர்களின் தலைவன் “டேய் அவளை அப்பறம் பாத்துக்கலாம்.. இப்போ அங்க இருந்து கிளம்புங்க, இவ யாரு எங்க இருந்து வந்தா, இவ கூப்பிட்டாலா யாருகாச்சு” என்று அழுத்தமாக கேட்க,
“இல்லண்ணா இவ கூப்பிடல, அவளே தான் வந்தா” என்றிட,
“சரி அங்க இருந்து கிளம்பு.. இவ யாருன்னு கண்டுபுடிச்சி ரெண்டு பேரையும் நான் பாத்துக்குறேன்” என்று கட்டளையிட, இவர்களும் காரை எடுத்துக்கொண்டு தப்பித்திவிட்டனர்.

தன் கையை பிடித்துக்கொண்டு நின்ற இந்துவை கண்ட ஆரு “யாரு இந்து அவனுங்க… உனக்கு தெரியுமா” என்று கேட்டாள். இந்து “இல்ல அண்ணி.. சாரி ஆரு.. யாருன்னு தெரியல.. அடிக்கடி பாலோ பண்ணுவானுங்க, ஆனா இன்னைக்கு இப்படி வருவாங்கன்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணல” என்றாள்.
ஆரு “சரி ரிலாக்ஸ், வீட்ல யார்ட்டயாச்சு சொல்லிருக்கியா” என்று வினவ “இல்ல.. வீட்டுல யார்கிட்டயும் நான் இதெல்லாம் சொல்லமாட்டேன், ரேயன்கிட்ட தான் சொல்லுவேன், ஆனா அவனும் ஆறு வருஷமா எங்க கூட இல்ல, எங்க கூட பேசல, அதனால நான் எதையும் சொல்லமுடியல.. கதிர் கிட்ட சொன்னா தேவ இல்லாம டென்ஷன் ஆகுவான், அதான்..” என்றாள் இழுவையாக. ஆரு, ரேயன் ஆறு வருடங்களாக அவர்களுடன் இருக்கவில்லை என்று இந்து கூறியதை கேட்டு அதிர்ந்து நின்றாள்.

ஆரு அதிர்ந்து நிற்பதை கண்டு அவளை உலுக்கிய இந்து “ஆரு என்னாச்சு” என்று வினவ, “ஆன் இல்ல.. அது…” என்று தடுமாற
இந்து “பரவால்ல கேளுங்க நான் அண்ணா கிட்ட சொல்லமாட்டேன் யூ கேன் ட்ரஸ்ட் மீ” என்றாள்.
ஆரு “அது ஏன் ஆரு வருஷம் அத்து.. ஆத்ரேயன் உங்க கூட இல்ல” என்று கேள்வியெழுப்ப
இந்து “உங்க எல்லாரோட பிரச்சனை அப்போ அண்ணா ரொம்ப மோசமாகிட்டான், அவன் சிரிக்கிறத பார்த்தே பல நாள் ஆகிடுச்சு, அதுக்கு அப்பறம் பெரியப்பா கூட ஏதோ பிரச்சனை நடந்தது, அது என்னன்னு யார்க்கேட்டும் அவன் சொல்லல, அப்பறம் யார்கிட்டயும் சொல்லாம வீட்டை விட்டும் போயிட்டான்.. எவ்ளோ ரீச் பண்ண ட்ரை பண்ணியும் அவன் கேட்கலை, வரல.” என்று கண் கலங்க,
ஆரு “சாரி இந்து.. தேவயில்லாம கேட்டுட்டனா…” என்று பதற
இந்து “ஹை ச்ச ச்ச.. அதெல்லாம் ஒன்னுமில்ல.. அதான் இப்போ வந்துட்டான்ல.. முன்னாடி மாதிரி இருக்கான், அதுவே எனக்கு போதும்” என்றாள் முகம் மலர்ந்து.

ஆரு எதுவும் பதில் உரைக்கவில்லை,
ரேயனின் மாற்றத்திற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை, ஆனால் ஏதோ ஓன்று அவன் அறிந்திருக்கிறான் என்பது மட்டும் பால்காய்ப்பு தினத்திலிருந்து அவள் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.
இந்து “ஓகே.. நான் வீட்டுக்கு போகவா”
ஆரு “ஆன் இல்ல.. நீ தனியா போக வேண்டாம்… நான் உன்னை ட்ரோப் பண்றேன்.. அண்ட் வீட்டுல இதப்பத்தி சொல்லு, நானும் இவனுங்கள அருண் அண்ணா கிட்ட சொல்லி வைக்குறேன், எங்களுக்கு கிடைச்ச ஒரே பலி ஆடு அவன் தான்” என்று சிரிக்க
இந்து யோசனையாக “என்னனு சொல்லுவ.. எங்க இருந்து வரானுங்க யாருன்னு ஏதும் தெரியாதே” என்று உதட்டை பிதுக்க
ஆரு அவள் போனை காட்டி “ஆனா இந்த வீடியோல மாட்டிக்கிட்டானுங்களே” என்று கண்ணடிக்க, அவளை வியப்பாக பார்த்தவள் ‘சரியான ஜோடியா தான் புடிச்சிருக்கான் என் அண்ணன்’ என்று நினைத்து விட்டு “வேற லெவல் போ” என்று சிரித்தாள், அதன் பிறகு ஆரு இந்துவை அழைத்துக்கொண்டு சென்றாள்.

இங்கு கான்பரேன்ஸ் ஹாலில் அனைவரும் அமர்ந்திருக்க, ரேயன் தன் இருக்கையில் சாய்ந்துக்கொண்டு கால் ஆட்டிக்கொண்டு இருந்தான். அக்னி அவனை சிறிதும் சட்டை செய்யாமல் பேச்சை ஆரம்பித்தான். “சொல்லுங்க கருணாகரன்.. என்ன விஷயம்” என்று வினவ, கருணாகரன் “இல்ல அக்னி யு நோ என் கம்பெனி இப்போ கொஞ்சம் லாஸ்ல இருந்துச்சு.. சோ நான் அத சரி பண்ண எதாச்சு ஒரு கம்பெனி கூட என் ஷேர்ஸ் பாதி குடுத்து ஜாய்ன் பண்றத தவிர வேற வழி இல்ல, அப்போ தான் ஆத்ரேயன் வந்தார்” என்று கூறியதும் அக்னி ரேயனை பார்க்க, ரேயன் கண் சிமிட்டி சிரித்தான்.

அக்னி “சோ” என்று கருணாகரனை பார்த்து கேட்க
கருணாகரன் “ஆத்ரேயன் உன்கூட ஒரு ப்ராஜெக்ட் செய்யலாம்னு இருக்காரு, அதுக்காக தான் பேச வந்தோம்” என்றிழுக்க, சட்டென எழுந்த அக்னி “நான் யார்க்கிட்ட ப்ராஜெக்ட் எடுக்கணும்னு எனக்கு தெரியும் சார், நீங்க எனக்கு பண்ண உதவி என்னைக்கும் நான் மறக்கமாட்டேன் சார், ஆனா அதுக்குன்னு மிஸ்டர் ஆத்ரேயன் கூட என்னால ப்ரொஜெக்ட் செய்ய முடியாது. உங்களுக்கு இப்படி ஒரு லாஸ் வந்தப்போ நீங்க என்கிட்ட வந்துருக்கலாமே, ஏன் நீங்க அவரை தேடி போனீங்க…” என்று கேட்க
கருணாகரன் “இல்ல அக்னி, நானா போகல அவராதான் என்னோட ஒரு ப்ரொபெர்ட்டி வேணும்னு கேட்டார் அப்போ என் நிலைமையை சொல்ல அவர் இதை ஆப்பர் பன்னாரு, எனக்கும் வேற வழி தெரியாம ஓகே சொல்லிட்டேன். ப்ரொபெர்ட்டி வித்து மட்டும் என் கம்பெனி சரி ஆகாது, அதான், அண்ட் அக்ரீமெண்ட்டும் சைன் பண்ணிட்டேன்” என்றிட, “ஹாப்பி பார் யு சார்” என்று முடித்துக்கொண்டான்.

கருணாகரன் “அக்னி ஒரு ப்ராஜெக்ட் தான.. வை காண்ட் யு அக்ஸப்ட்” என்று வினவ, ஆத்ரேயன் “இட்ஸ் ஓகே கருணாகரன், மிஸ்டர் அக்னிக்கு இஷ்டம் இல்லன்னு இருக்குறப்போ கம்ப்பெல் செய்ய் வேண்டாம்.. நான் உங்ககிட்ட ஷேர் மட்டும் வாங்கிக்கிறேன், அவரு பயப்புடுறாரு போல விடுங்க ” என்றான்.
கருணாகரன் அவனை பாவமாக பார்க்க,
அக்னியிற்கு ஏன் நாம் இவனை கண்டு ஓடவேண்டும் என்று ஈகோ தலை தூக்க “ஓகே வில் டூ, பட் ” என்று நிறுத்த
ரேயன் “பட்” என்றான் புருவமுயர்த்த
அக்னி “ப்ராஜெக்ட் ஏ.ஆர். க்ரூப்ஸ் அண்ட் பியூரோ கன்ஸ்ட்ரக்க்ஷன் சேர்ந்து பண்ணுறதால எதுவா இருந்தாலும் என்னையும் கேட்டு செய்யணும்” என்று அழுத்தமாக கூற, ரேயன் மெலிதாக புன்னகைத்துவிட்டு அவன் முன் கை நீட்டி “டீல்” என்று கேட்க,
அக்னி நக்கலாக ‘மாட்டுன டா’ என்று நினைத்துக்கொண்டு “டீல்” என்று கை குலுக்கினான்.

கருணாகரன் அக்னியிடம் விடைபெற்று வெளியே செல்ல, அவரை தொடர்ந்த ரேயன், திரும்பி அக்னியை பார்த்து “மாப்ஸ்.. நாளைல இருந்து ஆரம்பிப்போம்” என்று கண்ணில் குளர்ஸை மாட்டிக்கொண்டு வெளியே செல்ல, அக்னி ஏகத்தாளமாக நின்றுகொண்டு இருந்தான்.

ரேயன் வெளியே வந்ததும் அங்கு வந்த நேஹா, “ரேயன் என்னாச்சு என்னாச்சு” என்று ஆர்வமாக வினவ,
ரேயன் “உன் விதி நாளைல இருந்து என்னையும் சமாளிக்கணுமே.. சோ சாட்” என்று உச்சுக்கொட்ட,
நேஹா சிரித்துவிட்டு “ரியலி” என்றாள் குதுகளமாக. ரேயன் “இன்னொரு சீக்ரெட் இருக்கு” என்று அவள் காதின் புறம் குனிய, அவளும் குனிந்து “என்ன என்ன” என்று ஹஸ்கி குரலில் வினவ
ரேயன் “உன் பிரண்ட் ஒருத்தி இருக்காளே.. அவளும் வருவா” என்று கூறி சிரிக்க, நேஹா அவனை விழி விரித்து பார்த்தாள்.

ரேயன் “ஓகே அம்மு நீ அப்படி உன் சீட்ல உக்காந்து ஷாக் ஆகு.. நான் போயிட்டு வரேன் சரியா” என்றுவிட்டு கிளம்பிவிட, நேஹாவால் தான் அவன் கொடுத்த அதிர்ச்சிலிருந்து மீள முடியவில்லை, அது அதிர்ச்சியாக இருந்தாலும் இன்பமான அதிரிச்சி அல்லவா…

தொடரும்…

Advertisement