Advertisement

                 அத்தியாயம் 34

ரேயன் செய்வது புரியாமல் குழப்பத்தில் நின்றுக்கொண்திருந்தனர் கிஷோரும் கதிரும். இருவரும் அவன் பதிலை எதிர்பார்த்து நின்றிருக்க, அவனோ மௌனம் சாதித்தான்.

கிஷோர் “டேய் இப்படியே நின்னா என்ன அர்த்தம்.. என்னடா பண்ணிட்டு இருக்க.. வேற எதாச்சு பிளான்ல இருக்கியா” என்று எரிச்சலாக கேட்க,
ரேயன் அவனை கண்டுக்கொள்ளாமல் கதிரை பார்த்து “ஆமா உன் ரெஸ்டாரண்ட்ல ஸ்டார்ட்டர்ஸ் செம்மையா இருக்குமாமே.. கேள்வி பட்டேன்.. கிச்சா போலாமா லஞ்ச்க்கு” என்று வினவ
கிஷோர் “ஏதே லன்சுக்கு போலாமாவா… என்னமோ வருஷக்கணக்கா பழகுன மாதிரி பேசுறியே டா… அநியாயம் டா டேய்” என்று தலையில் அடித்துக்கொள்ள
ரேயன் “டேய் அவன் என் வீட்டு மாப்பிள்ளை டா.. அவன்கிட்ட பேசாம எப்படி” என்றான் நல்ல பிள்ளையாக. கிஷோர் கதிரை நோக்கி “மச்சா தப்பிச்சிறு சைக்கோ ஏதோ பிளான் பண்ணுறான்.. நடு ரோட்ல நிக்க வச்சிருவான்” என்று கூற, கதிர் தான் இரண்டு பேரையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தான்.

ரேயன் “சரி ஒகே.. நான் ஜனாவ பாக்க போறேன்… வரியா” என்று கிஷோரிடம் கேள்வி எழுப்ப,
கிச்சா “சரி அப்போ சொல்லாமாட்ட அவ்ளோதான… ரைட்டு” என்றிட
ரேயன் “கதிர் நான் இந்துவ இப்போ கூட்டிட்டு போகல.. நீயே அவளை ட்ரோப் பண்ணிடு.. ஓகே” என்று கிஷோரை மதியாமல் அவன் பேசிவிட்டு அவனை பார்க்க, கிஷோர் “நான் கார் கிட்ட போறேன்” என்றான்.
ரேயன் சிரித்துவிட்டு “அறிவு கொழந்து… போடா செல்லம் போ” என்றிட,
கிஷோர் “ச்சை… வந்து தொல” என்று கூறியவன் கதிரிடம் விடைபெற்று கொண்டு கீழே இறங்கினான்.

கதிர் “அஹன் அது” என்று ரேயனிடம் ஏதோ கூற வந்தவன் பின் தயங்கி நிற்க,
ரேயன் “சொல்லு எதாச்சு சொல்லணுமா” என்றான் கேள்வியாக.
கதிர் “இல்ல.. அது வந்து” என்று தயங்க,
ரேயன் “நான் உங்க விஷயத்துல விளையாடல, இந்து மேல சத்தியம்” என்றிட கதிர் பதறி “ஐயோ அதுக்கு இல்ல…நான் சும்மா” என்று முடிக்கும் முன்,
ரேயன் “இல்ல எனக்கு தெரியும்… டிரஸ்ட் மீ.. அண்ட் சீக்கிரம் எல்லாம் சரி ஆகும்” என்று கூறி சிரித்துவிட்டு அவனும் கீழே செல்ல,
கதிர் “இவன் என்ன சர்ச் பாதர் மாதிரி பேசிட்டு போறான்” என்று இன்னும் ஏதும் விளங்காமல் குழப்பதுடனே அங்கிருந்து கீழிறங்கினான்.

கிஷோர் கீழே செல்ல அங்கு யாரும் தென்படவில்லை, அவன் பின் வந்த ரேயனும் கதிரும் அதை கவனிக்க,
கிஷோர் இந்துவிடம் “ஹை எங்க யாரையும் காணும்” என்று கேட்க,
இந்து “ஆரு அண்ணி மேல நடந்த கலவரத்துல கீழே இறங்கி அப்படியே கிளம்பிடாங்க.. சோ அங்கிள் ஆண்ட்டியும் அப்பறம் வரோம்னு போய்ட்டாங்க” என்க
கதிர் “அப்போ அக்னி” என்று நேஹாவை பார்த்து கேட்க, ரேயன் “அவனும் ஓடிருப்பான்” என்றான் இயல்பாக.

ரேயன் கூறிய விதத்தில் நேஹாவிற்கு சிரிப்பு வர, “அவன் எங்க எதாச்சு பிரேக் ஆகிடபோறோம்னு ஆபீஸ்க்கு போய்ட்டான்.. உன்கிட்ட சொல்ல சொன்னான்” என்று தகவல் தர,
கதிர் “உன்கிட்டயா சொல்லிட்டு போனான்” என்றான் ஆச்சிர்யமாக.
நேஹா “ஹான் கிளிப்பான்.. ஆண்ட்டி கிட்ட சொல்லிட்டு போனான்” என்றிட,
ரேயனுக்கு அனைத்து சூழ்நிலையையும் முதிர்ச்சியாக கையாளும் நேஹாவை பார்த்து வியப்பாக இருந்தது.. அதே சமயம்  அவள் எதையும் காட்டிக்கொள்ளாமல் தன் உணர்வுகளை தனக்குள்ளே மறைத்து வைத்திருக்கிறாள் என்பதையும் அவன் அறிந்திருந்தான்.

ரேயன் “சரி இந்து.. நான் கிளம்புறேன்” என்று விடைபெற,
இந்து “அப்போ நானு” என்றான் கேள்வியாக. ரேயன் “நீ அப்புறம் வா.. அதான் லீவு போட்டல.. இருந்துட்டு வா” என்று கூறிவிட, அவளும் உற்சாகமாக சரி என்று தலையை ஆட்டினாள். ரேயன் ஒரு சிறு தலையசைப்புடன் அனைவரிடமும் விடைபெற்று, கிஷோரை அழைத்துக்கொண்டு நிரஞ்சனாவை காண சென்றான்.

தான் இயல்பாக பேசாமல் இருப்பதில் அதிகம் பாதித்த நபர்களில் ஜனாவும் ஒருவள் என்பதை ரேயன் அறிவான் அதனால் அவளை காண செல்லலாம் என்றெண்ணி கிளம்பிவிட்டான். போகும் வழி நெடுங்கிகுலும் கிஷோர் வித விதமாக கேட்டு பாத்தும் ரேயன் வாயை திறக்கவில்லை, ஆதாரத்துடன் தான் கூறுவேன் என்ற நினைப்பில் இருந்தான் அவன்.

கிஷோர் “மவனே ஏதாவது திருப்பி ஏடாகூடமா பண்ணு அப்போ இருக்கு உனக்கு” என்று எச்சரிக்க,
ரேயன் காரை ஸ்டியரிங்கை அங்கும் இங்கும் திருப்பி காட்டி “இப்படியாடா கிச்சா” என்று கண்ணடிக்க,
கிச்சா “மென்ட்டல் ஆகிட்ட அத்து நீ” என்றான் மிரண்ட குரலில்.

ரேயன் முகம் மலர “என்ன சொன்ன” என்று வினவ, கிஷோர் அதை உணராமல் “நான் என்னத்த சொல்லனும், நீதான் டா சொல்லணும் யூ பூல்” என்று தலையில் அடித்தான். ரேயன் “யாரு பா அது அத்து.. யாரையோ இப்போ அத்துன்னு கூப்பிட்டியே” என்று உல்லாசமாக புன்னகையுடன் வினவ, கிஷோர் சிரித்துவிட்டு, அவனிடம் காட்டிக்கொள்ளாமல் “வீடு வந்துருச்சு” என்று இறங்கிவிட, ரேயனும் பின் தொடர்ந்தான்.

அது மாலை நேரம் என்பதால் நிரஞ்சனா அவள் வீட்டின் முன் இருந்த லானில் மித்துவுடன் விளையாடி கொண்டிருந்தாள், அருண் அப்போது வீட்டில் இல்லை. ரேயன் வருவதை கவனித்த மித்து “ஹே ரே மாமா.. ரே மாமா” என்று ஆர்பரிக்க, நிரஞ்சனா இவள் ஏன் அவன் பெயரை சமந்தம் இல்லாமல் கூறுகிறாள் என்று திரும்பி பார்க்க ரேயனும் கிஷோரும் வீட்டினுள் நுழைந்தனர். நிரஞ்சனா அவனை ஆச்சர்யமாக பார்க்க, அவனோ ஓடி சென்று மித்துவை தூக்கிக்கொண்டான்.

ரேயன் “மித்து பாப்பா” என்று தூக்கி கொண்டு சுற்ற,
கிஷோர் பதறி “டேய் பிள்ளைய பறக்க விட்றாத” என்றான். மித்துவை கையில் வைத்துக்கொண்டு நிரஞ்சனாவை பார்த்த ரேயன், “என்ன அக்கா எப்படி இருக்க” என்று மலர்ந்த புன்னகையுடன் வினவ, நிரஞ்சனா கிஷோரை பார்த்து “என்னடா ஏதோ சரி இல்லையே” என்றாள் ஒரு மாதிரி குரலில்.

கிஷோர் “அட போக்கா.. சும்மா.. அந்த சைக்கோ ஏதும் சொல்லாமாட்டிக்கிறான்.. காலைலலாம் என்ன பண்ணான்னு தெரிஞ்சா ஹார்ட் அட்டாக் வந்துரும் உனக்கு” என்று சலித்துக்கொள்ள,
நிரஞ்சனா “அப்படி என்ன டா ஆச்சு” என்றாள். ரேயன் “என்கிட்ட கேளு” என்று ஆஜராக, கிஷோர் “ஆன் கேளு.. உடனே சொல்லிடுவான்” என்று அங்கலாய,
ரேயன் “க்கா உள்ளே கூட்டுட்டு போவியா இல்ல இங்கையே உட்கார்ந்துரவா” என்று கேட்க,
நிரஞ்னா ” வா டா வா ரொம்ப பண்ணுவான் உடனே” என்று கூறிவிட்டு இருவரையும் உள்ளே அழைத்து சென்றாள். அங்கு ரேயன் சிறிது நேரம் நிரஞ்சனாவுடன் பேசிக்கொண்டிருக்க,
மித்து “ரே மாமா ரே மாமா… வா போத்தோ புக் பாக்கலாம்” என்று தன் மழலை குரலில் கூற, அவள் கூற வருவது புரியாமல் “எது போட்டோ புக்கா…. அப்படினா” என்று புருவம் சுருக்க,
நிரஞ்சனா “அவ எங்க கல்யாண ஆல்பம்ம தான் அப்படி சொல்றா” என்றாள், இதழில் உறைந்த புன்னகையுடன்.

ரேயன் “அடடே.. போங்க பொய் கொண்டு வாங்க செல்லம்.. பாக்கலாம்” என்று கூற, மித்து அதை எடுத்து வர ஓடினாள். ரேயன் “நான் அது பாக்கவே இல்லல” என்று நிரஞ்சனா பார்த்து கேட்க,
அவளோ “ஆமா நீதான் வீம்புக்கு பாக்கமாட்டேன்னு இருந்த” என்றாள் முறைப்புடன். ரேயன் “ஹாஹா.. இப்போ பாக்கலாம் வா வா” என்று தன் பக்கத்து இருக்கையை காட்ட, நிரஞ்சனா அங்கு அமர்ந்துகொள்ள, மித்து குட்டியை தன் மடியில் அமர்த்திக்கொண்டவன் அந்த புகைப்படங்களை பார்வைவிட்டான். அதில் ரேயன் ஆருவுடன் இருந்த புகைப்படத்தை பார்த்ததும் அவன் நினைவுகள் அதைநோக்கி பயணித்தது.

அன்று காலை ஐந்து மணி அளவில் அனைவரும் மும்முரமாக தயாராகி கொண்டிருந்தனர் நிரஞ்னா அருண் திருமண விழாவிற்கு. அருண் ஒரு சிறந்த காவல்துறை அதிகாரி என்று நிரஞ்சனா வீட்டினர் அறிந்த ஒன்று, அருண் அவன் வீட்டினரிடம் பேசும் முன் நிரஞ்சனாவின் வீட்டாரிடம் பேசிவிட்டான்.

அவனுடைய மரியாதையான பேச்சும் கன்னியாமான தொழில்முறை அவர்களுக்கு பிடித்துபோக கண்ணன் அவர்களுக்கு பச்சை கொடி காட்டிவிட்டார்.  அதன் பிறகு பல வருடங்கள் கழித்து அருண் அவர்கள் வீட்டினுள் காலெடுத்து வைத்தான். அருணின் அம்மா மற்றும் நேஹா அவனை இன்முகத்தோடு  உற்சாகமாக வரவேற்க, அவர் தந்தையோ ஒரு சிறிய தலையசைப்புடன் முடித்துக்கொண்டார்.

அருண் நிரஞ்சனாவை பற்றியும் அவர்களின் காதலை பற்றியும் கூற, முதலில் மறுத்த அருணின் தந்தை, நேஹா மற்றும் அவள் அன்னையின் நச்சரிப்பில் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார். அதன் பிறகு அனைத்து வேலைகளும் துரிதமாக தொடங்க, இதோ திருமண நாளும் வந்து சேர்ந்தது. ரேயனின் அக்கா என்று தெரிந்த பின் திருமணத்திற்கு வர யோசித்த அக்னி, நேஹாவின் ஒற்றை பார்வையில் சரி என்றுவிட்டான்.

காலை மண்டபத்தில் ரேயனும் கிஷோரும் பெண் வீட்டு சார்பாக வேலைகள் செய்து கொண்டிருக்க, அக்னி நேஹாவின் வீட்டினர் தரப்பில் இருந்த வேலைகளுக்கு உதவி  கொண்டிருந்தான். ஆரு தயாராக நேரமாகும் என்று கூறிவிட, கதிர் அக்னி நேஹாவுடன் கிளம்பிவிட்டான்.

ஆரு இன்னும் வராமல் இருக்க, ரேயன் அவளுக்கு அழைப்பு விடுத்தான். ஆரு “சொல்லு அத்து” என்றிட, அவனோ “என்ன சொல்லு அத்து.. என்ன பண்ணிட்டு இருக்க.. இன்னும் வரல” என்று கேட்க,
ஆரு “அட நான் என்ன பண்றது.. நீதான் சாரீ கட்ட சொன்ன.. வேணா சொன்னா கேட்டியா… அதான் லேட் ஆகுது” என்றாள்.

ரேயன் “ஒரு புடவ கட்டவா இவ்ளோ நேரம்” என்று கேலி செய்ய,
ஆரு “ஹலோ அந்த கஷ்டம்லாம் எங்களுக்கு தான் தெரியும்” என்றாள் மிதப்பாக. ரேயன் “இப்போ நீ கிளம்பி வரல, அஞ்சு நிமிஷத்துல நான் அங்க வந்திருவேன்.. அப்பறம் உன் இஷ்டம்” என்று மிரட்ட,
ஆரு “ஐயோ நீயா வேணா வேணா.. நானே வரேன்” என்றாள்.
ரேயன் “5மின்ஸ்” என்று கூறிவிட்டு வைத்துவிட, ஐந்து நிமிடம் என்றவள் சுமார் அரைமணி நேரம் கழித்து தான்
வந்து சேர்ந்தாள்.

ரேயன் வாசலில் வரவேற்பில் நின்று விருந்தினர்களை வரவேற்க, ஆரஞ்சு நிற பட்டில் தேவதையாய் வந்திறங்கினாள் அந்த அழகு பாவை. அவளை மெச்சும் பார்வை பார்த்தவன் “வாங்க” என்று வரவேற்க,
ஆரு “அதான் வந்துட்டனேங்க.. திரும்ப வாங்கன்னு வாங்கன்னு சொல்றிங்க” என்று வம்பிழுக்க, அவளின் புறம் குனிந்தவன் “அமைதியா உள்ளே போ.. இல்லனா எல்லாரும் நம்மள பாக்குற மாதிரி பண்ணிருவேன்” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கண்ணடித்து மிரட்ட, அதில் விழி விரித்தவள் “ஐயோ நான் போய்ட்டேன்” என்று ஓடிவிட்டாள்.

அங்கு பந்தியில் அக்னி, நேஹாவின் தந்தையுடன் சேர்ந்து உதவி செய்துகொண்டிருந்தான். காலை முதல் தன்னை கண்டுகொள்ளாமல் சுற்றிக்கொண்டிருக்கும் அக்னியின் மீது கடுப்பில் இருந்தவள் அவனிடம் பேசுவதற்காக அங்கு வந்தாள்.

நேஹா தன் தந்தையிடம் “அப்பா மேல அம்மா கூப்பிடுறாங்க” என்றிட, அவரும் பார்த்துவிட்டு வருவதாக அக்னியிடம் கூறிவிட்டு சென்றார். அவர் சென்ற பின் அக்னி “என்னங்க மேடம்… என்ன பண்றீங்க இங்க” என்று அவளை உரசியபடி கேட்க, நேஹா “சில பேரு ரொம்ப பண்றாங்க.. அதான் என்னனு பாக்க வந்தேன்” என்றாள் முகத்தை திருப்பிக்கொண்டு.

அக்னி “யார் அந்த சில பேரு” என்று யோசிப்பது போல் பாவனை செய்ய, அவன் முதுகில் ஒன்று வைத்தவள் “என் அண்ணன் கல்யாணம், எனக்கே அவ்ளோ வேலை இல்ல, நீ என்ன அங்க இங்கன்னு ஓடிட்டு இருக்க, உனக்கு பிடிக்குமென்னு புடவையெலாம் கட்டிட்டு ரெடி ஆனா.. நீ கண்டுக்க கூட இல்ல காலைல இருந்து..” என்று முகம் சுருக்க,
அக்னி “நீங்க வீட்டு மகாராணி.. உங்கள எப்படி வேலை செய்ய விடுவோம்.. நம்ம வீட்டு கல்யாணம் நான் செய்யாம வேற யாரு செய்வாங்க” என்று அவள் அருகில் நெருங்கி நின்று கூற,
நேஹா “ஹாஹா.. ரொம்ப தான்.. வந்து ஒரு வார்த்தை ஹாய்னு சொல்லிட்டு ஓடிட்ட” என்று முறைக்க,
அக்னி “பின்ன.. உங்கிட்ட இருந்து டைவெர்ட் ஆக என்னலாமோ பண்ணவேண்டி இருக்கு” என்றான் சலித்தபடி.

நேஹா இடுப்பில் கை வைத்து “பேச்சுல உன்ன ஜெயிக்க முடியாது அக்னி.. ஆள விடு” என்று நகர போக, அவள் கையை பிடித்து நிறுத்தியவன், “கோபப்படாதீங்க மேடம்.. வாங்க இப்படி” என்று அவன் முன் நிற்க வைத்து அவளை பார்க்க,
நேஹா “என்ன நிக்க வச்சுட்டு பாத்துட்டு இருக்க” என்றாள் கேள்வியாக.
அக்னி “உள்ள வந்ததில இருந்து இதை பண்ணதான் என் மைண்ட் சொல்லிட்டே இருந்துச்சு அதான் அங்க இங்க ஓடிட்டு இருந்தேன்… நீயே வந்துட்ட அப்போ எப்படி விடுறது” என்று மீண்டும் அவளையே பார்க்க,
நேஹா “போதும் போதும் நீங்க பாத்தது.. ஆள் வர ஆரம்பிச்சுட்டாங்க.. நான் போனும்” என்று அவனிடமிருந்து கையை உருவ, அவனோ பிடியை இன்னும் இறுக்கினான் “முடியாது” என்பது போல்.

நேஹா “இப்படி யாராச்சு பாத்தா என் அண்ணனுக்கு இல்ல, எனக்கு தான் கல்யாணம் நடக்கும்” என்று முறைக்க,
அக்னி “வாவ்.. செம்ம.. நான் பக்கத்துல இருந்து உனக்கு அட்சதை போடுவேன்” என்று கேலியாக கூற, உடனே பெண்ணவளின் மலர் வாடிவிட்டது. அதை கவனித்த அக்னி “சரி சாரி…வி ளையாட்டுக்கு தான் அப்படி சொன்னேன்” என்க அவளோ அமைதியாக நின்றுக்கொண்டிருந்தாள்.

அக்னி எவ்வளவு சமாதானம் செய்தும் அவள் முகத்தை நிமிர்த்தாது தலை குனிந்து நின்றிருந்தாள். நேஹா அமைதியான பெண் தான் ஆனால் அதே சமயம் மிகவும் அழுத்தமானவளும் கூட, ஒன்று முடிவெடுத்துவிட்டாள் என்றால் அதை அவ்வளவு எளிதில் யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டாள். பிடிவாதமும் உண்டு ஆனால் அது நியாயமான காரணத்திற்காக மட்டுமே இருக்கும்.

அவளை சமாதானம் செய்யும் பொருட்டு  அவள் முன் மண்டியிட்டு அமர்ந்த அக்னியை கண்டு நேஹா பதறி, “அகி.. என்ன பண்ற.. எந்திரி” என்றிட,
அக்னி “ம்ஹும்.. நோ… நீ சிரி எந்திருக்குறேன்” என்றான்.
நேஹா “முடியாது.. எந்திரி” என்று முறைக்க, அக்னி அவள் கையை பிடித்து, சுற்றிமுற்றி யாரும் பார்க்கவில்லை என்று உறுதி செய்து கொண்டு அவள் கையில் இதழ் பதித்தவன் “சாரி… ஐ அம் சாரி” என்று கூற, நேஹாவிற்கு வெக்கத்துடன் சிரிப்பும் வந்துவிட்டது.

அக்னி “ஹப்பாடா” என்று கூறி மறுமுறை அவள் இரு கைகளிலும் இதழ் பதித்து “செம்மையா இருக்க.. தேவதை போல” என்று வர்ணிக்க, நேஹா அவனை எழுப்பிவிட்டு “சரியான பிராடு நீ” என்க, அவளுக்கு வெகு அருகில் குனிந்தவன் “உனக்கு மட்டும் தான்” என்று கண்ணடிக்க,
நேஹா “வெளிய யார்கிட்டயும் நீ சும்மா தல குனிஞ்சு கூட நான் பாத்ததில்லையே” என்று கேள்வியெழுப்ப, அவளை தோளோடு அணைத்துக்கொண்டவன் “இதோ பாரு… நான் வெளிய யாருக்கு எப்படிவேணாலும் இருக்கலாம்.. ஆனா உன்கிட்ட எனக்கு எந்த மரியாதையும் தேவ இல்ல…. புரிதா” என்று புருவமுயர்த்த,
நேஹாவும் சிரித்துவிட்டு தலையாட்ட, “சரி நீ மேல போ.. எல்லாரும் வெயிட் பண்ணுவாங்க” என்று அனுப்பி வைத்தான்.

அங்கு இங்கும் அரட்டை அடித்துக்கொண்டு இருந்த ஆருவை கண்ட ரேயன் “அடங்குறாளா பாரு.. அங்க இங்கன்னு ஓடிட்டு.. காலேஜ் நினைப்புலயே இருக்கா” என்று தனக்குள் கூறிக்கொண்டு சிரித்துக்கொண்டவன் அவளிடமிருந்து பார்வையை நகர்த்தவில்லை.

ஏதோ வேலைகள் செய்துவிட்டு திரும்பியவனின் பார்வையில் அவள் சிக்காமல் போனாள். அவள் எங்கே என்று  தேடி சென்றவனின் கண்களில் அவள் சிக்கிவிட, மெல்லிய புன்னகையுடன் அவள் அருகே சென்றான். மண்டபத்தின் ஒரு ஓரத்தில் நின்று புடவையை சரி செய்து கொண்டிருந்தவளிடம் சென்ற ரேயன் தொண்டையை செரும, அதில் நிமிர்ந்து அவனை பார்த்தவள் “அத்து உன்னால தான் எல்லாம்” என்றாள் முகத்தை சுருக்கி, அதில் விழித்தவன் “ஏதே.. நான் என்ன பண்னேன்” என்று கைகட்டிக்கொண்டு கேட்க,
ஆரு “எல்லாம் இந்த சாரீயாலதான்” என்றாள் சிணுங்களுடன்.

அவள் தலையில் வலிக்காமல் கொட்டியவன் “ஏன் டி அங்க இங்க ஓடிட்டு என்ன சொல்லுறியா.. சாரீ மேனேஜ் பண்ண தெரியலல அப்போ ஒரு இடத்துல இருக்க வேண்டியது தான” என்று முறைக்க, “அது ரொம்ப கஷ்டம்.. கிளாஸ்லயே ஒரு இடத்துல இருக்க முடியாது.. இங்க எப்படி” என்றாள் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு.

ரேயன் “சரி இப்போ என்னாச்சு..” என்று அவள் மீது பார்வையை செலுத்த, அதில் உதட்டை பிதுக்கியவள் “பிலீட்ஸ் கலஞ்சிருச்சு” என்றிட,
ரேயன் “காட்டு” என்று சரி செய்ய போக,
ஆரு “என்ன பண்ற.. எல்லாரும் சுத்தி இருக்காங்க” என்றாள் கண்களை அகல விரித்து. ரேயன் சுத்திப்பார்த்துவிட்டு, “சரி வா” என்று அவளை இழுத்துக்கொண்டு செல்ல, ஆரு “எங்க கூட்டிட்டு போற.. கல்யாண பொண்ணோட தம்பின்னா இப்படி இழுத்துட்டு போவீங்களா” என்று கத்திக்கொண்டு வர,
ரேயன் “வாய மூடிட்டு வாடி” என்று மாடி படிகள் இருந்த பக்கம் அவளை அழைத்து சென்றான்.

அங்கு யாரும் வர வாய்ப்பில்லை என்று அறிந்தவன், மண்டியிட்டு அவள் மடிப்புகளை சரி செய்துவிட.. ஆரு நெளிய ஆரம்பித்தாள். ஆரு “அத்து விடு.. அது அப்படியே இருக்கட்டும்” என்றாள் அவஸ்தையாக. ரேயன்”எதுக்கு இப்போ டான்ஸ் ஆடுற, நான் பிலீட்ஸ் தான சரி பண்றேன், ஏதோ சாரீயே கட்டிவிடுற மாதிரி நெளியுற” என்று நேரடியாக கேட்டுவிட, “ஆசை தான்” என்று உதட்டை சுழித்தாள் நங்கையவள்.

அவள் பாவனையில் புன்னகைத்தவன் “அதைவிட அதிகமாவே ஆசை இருக்கு” என்று இரட்டை அர்த்தத்தில் பேச, அவன் தலையை தட்டியவள் “வாய் வாய்.. வாய பாரு, ஒரு பொண்ணுகிட்ட இப்படியா பேசுவாங்க.. பேட் பாய்” என்று அதட்ட,  அதில் பட்டென நிமிர்ந்தவன் “பொண்ணா… எங்க தியா.. யார சொல்ற” என்று கேலி செய்ய,
ஆரு “ஹப்பா செத்துபோன ஜோக்கலாம் தோண்டாத” என்றாள். அவள் சரவெடி பேச்சில் சிரித்தவன் தன் வேலையை நேர்த்தியாக செய்து முடித்தான்.

ரேயன் “இப்போ கரெக்ட்டா இருக்கு” என்று கூறிக்கொண்டே எழுந்தவன் அவளுக்கு நெட்டிமுறித்து “அழகா இருக்க” என்று உதட்டை குவித்து பறக்கும் முத்தத்தை வழங்க,
ஆரு “இனி யார் கண்ணும் படாதுன்னு சொல்லவேயில்ல” என்று வினவ, அதில் இருபக்கமும் தலையாட்டி சிரித்தவன்  “அதலாம் யாரையும் பாக்க விட்டாதான” என்று கண்ணடிக்க,
ஆரு “வர வர ரொம்ப படம் பாக்குற போல” என்று அவனை வாரினாள். ரேயன் “இல்ல இல்ல.. உன்ன சமாளிச்சே இதலாம் தானா வருது”
“சரி சரி தேங்க்ஸ்ங்க ஆத்ரேயன்”
ரேயன் “இருக்கட்டும் இருக்கட்டும்..வா போலாம்” என்றிட,
ஆருவும் சிரித்துவிட்டு “வா பிக் எடுக்கலாம்” என்றாள். ரேயன் அவன் போனில் செல்ப்பி எடுக்க, ஆரு ஒரு படி மேலேறி நின்று அவன் கழுத்தில் கையை இருப்புறரும் தொங்கவிட்டுகொண்டு நின்றாள், அந்த புகைப்படம் தான் அன்று கெளதம் சித்து பார்த்தது.

தன்னவளுடனான இனிய நினைவுகளின் தாக்கத்தில் அமர்ந்திருந்தவனை கலைத்தது மித்துவின் குரல். “ரே மாமா” என்று அவனை உலுக்க, பழைய நினைவுகளிலிருந்து மீண்டவன் “சொல்லு டா செல்லம்” என்க, அவனை அழைத்துக்கொண்டு தன் அறைக்கு சென்றவள் அவனுடன் விளையாட, சிறியவளின் மழலையில் தன்னை மறந்தவன் வெகு நேரம் அவளுடன் விடையாடி கொண்டிருந்தான்.

இரவு உணவை முடித்துக்கொண்டு இருவரும் கிளம்ப ஆயுத்தமாக,
நிரஞ்சனா “என்ன தம்பி எப்போ திருப்பி வருவீங்க” என்று வினவ,
ரேயன் “நாளைக்கு வருவேன்” என்றான்.
நிரஞ்சனா “எது” என்று விழி விரிக்க,
கிஷோர் “இப்படிதான் ஏதோ ஏலியன் மாதிரி பேசிட்டு இருக்கான்” என்றான் வடிவேலு பாணியில். ரேயன் “அட ஒருத்தன் நார்மல்லா பேசுனா பிடிக்காதே” என சலித்துக்கொள்ள,
கிஷோர் “நீ ஒரு சைக்கோ டா… நீ மனுஷன் மாதிரி பேசுனா சந்தேகம் வராதா” என்றான் நக்கலாக.

நிரஞ்சனா “நிஜமாவா சொல்ற” என்று ரேயனிடம் கேட்க, “டெய்லி வருவேன்.. மித்து குட்டி கூட டெய்லி வேலையாடனும்ல” என்றிட,
மித்து தான் “ஹே.. ரே மாமா சூப்பர்..” என்று குதித்து கொண்டிருந்தாள்.

நிரஞ்சனாவோ அப்படியே நிற்க, ரேயன் “ஆறு வருஷத்துக்கு முன்னாடி ரேயனை எப்படி பாத்தியோ அப்படி பாப்ப.. போயிட்டு வரேன்” என்று கூறிவிட்டு  செல்ல, ஜனாவுக்கோ மகிழ்ச்சி தாளவில்லை.

ஆரு கதிர் வீட்டிலிருந்து நேராக அலுவலகம் சென்றுவிட, சிவகுமார் நிலா அவள் காரை எடுத்துக்கொண்டு வீடு திரும்பினர். ஆரு கோபமாக தன் அறையினுள் நுழைய, அங்கு கெளதம் அவள் அலமாரியில் எதையோ தேடிக்கொண்டிருந்தான்.
ஆரு “இங்க என்ன பண்ற.. என் பெர்மிஸ்சன் இல்லாம எப்படி நீ உள்ள வரலாம்” என்று யார்மீதோ இருந்த கோபத்தை கௌதமின் மீது காட்ட, அவனோ அவளை அசட்டையாக பார்த்துக்கொண்டு நின்றான்.

ஆரு “உன்னதான கேக்குறேன்” என்று கூறி முடிக்கு முன் அங்கு வந்த ஜெயபிரகாஷ், “ஆராத்யா நான் தான் கெளதம ஒரு பைல் எடுத்துட்டு வர சொன்னேன், நீ கால் எடுக்கல அதான் பொய் எடுத்துட்டு வந்துட சொன்னேன்… ஏன் இவ்ளோ கோபம்” என்று வினவ,
ஆரு “சாரி சார்.. லேட்டா வந்ததுக்கும் சாரி” என்றாள்.

ஜேபி “என்ன ஆராத்யா நீ தான் லீவ் சொல்லிருந்த இப்போ லேட்டா வந்ததுக்கு சாரி கேக்குற.. ஆர் யு ஓகே” என்று கேட்க,  “யெஸ் சார்.. இ வில் பி பேக்” என்றவள் அங்கிருந்து விறுவிறுவென வெளியேறினாள். அவள் வெளியேறுவதை கண்ட ஜெயபிரகாஷ் “என்ன கெளதம் இன்னைக்கும் டாம் அண்ட் ஜெர்ரி சண்டை தானா” என்று சிரிக்க, கெளதம் “சார்.. நீங்க வேற” என்றவன்  அவரிடம் சரி கூறி விட்டு, ஆருவை பார்க்க சென்றான்.

ஆரு தனியாக கேன்டீன் பக்கத்திலிருந்த கார்டெனில் காப்பியுடன் அமர்ந்திருக்க,  அருகில் அமர்ந்தவன் “என்ன செம்ம ஹாப்பியா இருக்க போல.. பிரண்ட் என்கேஜ்மெண்ட் செம்மையா போச்சு போல” என்று கேட்க,
ஆரு “இங்க பாரு கெளதம் சீரியஸா நான் சண்டை போடுற நிலமைல  இல்ல.. ப்ளீஸ்” என்றாள். கெளதம் “என்ன தான் உனக்கு பிரச்சனை.. எனக்கு என்னமோ நீ உன் நேச்சர் மறச்சிட்டு மாஸ்க் போட்டுட்டு இருக்க மாதிரி இருக்கு” என்று  அவளை துளைத்தெடுக்கும் பார்வையுடன் கேட்க, அவளோ தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.

கெளதம் “ஆத்ரேயன லவ் பண்ணியா” என்று நேரடியாக கேட்க,
ஆரு “என்ன… என்ன சொன்ன” என்றாள் அதிர்ந்த பாவத்தோடு. கெளதம் “அப்போ நீ ஆத்ரேயனை லவ் பண்ணிருக்க” என்று அவளை ஆழமாக பார்த்துக்கொண்டே கேட்க, சட்டென எழுந்தவள்  “என்ன பேசிட்டு இருக்க” என்றாள் எரிச்சலாக.
கெளதம் “எதுக்கு எப்போ பாரு ஹை பிச்ல கத்திட்டு இருக்க.. பொறுமையா பேசு ஜிஎம்” என்று கேலி செய்ய,
ஆரு “கெளதம் என்ன சொல்ல வர.. உனக்கு என்ன தெரியும்” என்று தடுமாறியபடி கேட்க,
கெளதம் எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி  “எனக்கு இன்னும் எதுவும் தெரியாது.. அத நான் பாத்துப்பேன்.. பட் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்” என்று சிறு இடைவெளி விட,
ஆரு “என்ன சொல்லணும்” என்றாள் கேள்வியாக.

கௌதம் “நம்ம வாழ்க்கைல நம்ம கஷ்டப்பட்டிருப்போம், ஆனா அதுக்கு மத்தவங்க மட்டும் தான் காரணம்னு நினைக்குறது முட்டாள்தனம், நம்ம தப்பு இல்லாம நம்மள யாரும் காயப்படுத்த முடியாது.. அத புரிஞ்சிக்கோ.. நீ என்ன பண்ணன்னு யோசி, அதுக்கு அப்புறம்  வெறுப்ப வளக்குறதா வேண்டாமானு உன் மனசு சொல்லும், அப்போதான் உனக்கும் பாரம் குறையும்” என்று நீளமாக கூறி முடித்தான். அவன் கூறிய அனைத்தும் அவள் மனதில் பதிய, இப்போது புதிய கோணத்தில் அனைத்தையும் சிந்திக்க தொடங்கினாள். கௌதமும் அவளுக்கு தனிமை அளித்து அங்கிருந்து சென்றுவிட்டான்.

இரவு கதிர் வீட்டில் ஸ்மிருதியுடன் கதையடித்துக்கொண்டிருந்த நேஹாவிடம் வந்த கதிர் “ஹே நீ வீட்டுக்கு போ.. டைம் ஆகுது” என்றான்.
நேஹா “எனக்கு போக பிடிக்கல” என்றிட,
கதிர் “ஏன் என்னாச்சு” என்றான் புருவம் சுருக்கி. நேஹா “தெரியல.. எதுவும் பிடிக்கல எனக்கு” என்று கூறிவிட,
கதிர் “அடடா.. அப்போ உன் பூஸ்ட் கிட்ட பேசு, அப்போதான் நீ சரி ஆகுவ” என்றான். நேஹாவோ அவன் கூறுவது புரியாமல் “யார சொல்ற” என்று வினவ,
கதிர் “வேற யாரு, உன் பாஸ் தான்” என்றான். நேஹா “ஆமா ஆமா.. அப்படி இருக்கும்.. தேன் வந்து விழும் காதுல” என்று நக்கல் குரலில் கூற, அவள் கூறும் விதத்திலேயே அவளின் நிலமையை உணர்ந்த கதிர் “சரி அப்போ வரியா சும்மா வெளிய போய்ட்டு வருவோம்” என்றான் அவள் மனதை மாற்றும் பொருட்டு.

நேஹா “இல்ல கதிர்.. நான் வீட்டுக்கு போறேன்” என்று எழுந்துகொள்ள,
கதிர் “இரு வந்து விடுறேன்” என்றான். நேஹா “ரொம்ப பண்ணாத நானே போயிடுவேன்” என்றவள் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினாள்.

நேஹா வீட்டை நெருங்கும் போது, அவள் வீட்டின் அருகில் யாரோ நிறப்பது போல் தெரிய, யார் என்று பார்த்தவள் அங்கு நின்றுகொண்டிருந்த அக்னியை கண்டு விழி விரித்து நின்றாள்.

தொடரும்

Advertisement