Advertisement

                    அத்தியாயம் 44

கதிரவன் உச்சியில் நின்று தீயாய் தகித்துக்கொண்டிருந்த வேளையில் கண்களை கசக்கியபடி எழுந்த ஆராத்யா, சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தை பார்க்க, அதுவோ பன்னிரெண்டு மணியை கடந்திருந்தது.

இரவு வெகு நேரம் தன்னவனின் நினைவுகளில் மூழ்கி இருந்தவள் உறங்கியது என்னவோ பொழுது விடிந்த பின் தான். நிலாவும் அவளை தொந்திரவு செய்யாமல் விட்டுவிட, அடித்து பிடித்து எழுந்தவள் தன் அலைபேசியை எடுத்து பார்க்க, அதில் பத்திற்கும் மேற்பட்ட தவறவிட்ட அழைப்புகள் இருந்தது. அனைத்தும் ஜெயபிரகாஷின் எண்ணிலிருந்து இருக்க, யோசனையுடன் அவருக்கு அழைத்தவள் என்னவென்று வினவ, அவரோ “ஆராத்யா.. இன்னிக்கு முடிக்க வேண்டிய ப்ரொஜெக்ட் ஒன்னு இன்னும் பெண்டிங்லயே இருக்கு.. அதை முதல முடிச்சு கொடுங்க.. இட்ஸ் அர்ஜெண்ட்” என்று பரபரக்க, “ஓகே சார்” என்றவள் அழைப்பை துண்டித்துவிட்டு குளியலறைக்குள் புகுந்தாள்.

பத்தே நிமிடத்தில் குளித்து முடித்து வந்தவள், மடிக்கணினியை எடுத்துக்கொண்டு அமர்ந்த சமயம் அவள் அறைக்கு வந்த நிலா, “எப்போடி எழுந்த.. ஆபிஸ் போலயா இன்னிக்கு” என்று வினவ, அவரை முறைத்தவள் “என்ன எழுப்ப வேண்டியது தானம்மா.. இன்னிக்கு முக்கியமான வேலை ஒன்னு இருக்கு” என்று எரிந்து விழ, நிலா “நான் எழுப்பி விட்டேன்.. நீ தான் கும்பகர்ணி மாதிரி தூங்கிட்டு இருந்த” என்று நக்கல் குரலில் கூறியவர், “அக்னி கம்பெனிக்கு போலயா” என்று கேள்வியெழுப்ப, “ஜெபி சார் ஒரு வேலை கொடுத்திருக்காரு.. அதை முடிச்சிட்டு தான் போனும்” என்றவள் அவர் கொடுத்திருந்த வேலையில் கவனம் செலுத்தினாள்.

இன்றே முடித்து கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தவள், நேரம் பார்க்காது உழைக்க, காலதேவனோ அவளுக்கு காத்திருக்காமல் வேகமாக நகர்ந்தார்.

வேலையை முடித்துவிட்டு அதை ஜெபிக்கு மின்னஞ்சல் செய்தவள் மணியை பார்க்க, மாலை மூன்றை கடந்திருந்தது. நேரத்தை பார்த்து அதிர்ந்தவள் வேகமாக தயாராக, அவளுக்கு பழச்சாற்றை எடுத்து வந்த நிலா “இந்த நேரத்துல எங்கடி போற” என்று கேட்க, “ஆபீசுக்கு ம்மா.. முக்கியமான வேலை” என்றவள் அவர் பதிலுக்கு கூட காத்திருக்காது கிளம்பினாள்.

இங்கு இவ்வாறு இருக்க, அங்கு அக்னியின் அலுவலகத்தில் ஆருவிற்காக காத்துக்கொண்டிருந்த ரேயனின் பொறுமையா காற்றில் பறந்துக்கொண்டிருந்தது. காலை முதல் தன்னவளின் பதிலுக்காக காத்துக்கொண்டிருந்தவனுக்கு மிஞ்சியது என்னவோ ஏமாற்றமே.

அக்னியும் ரேயனும் ஒரே அறையில் தான் அமர்ந்திருந்தனர். ரேயனின் பொறுமை காற்றில் பறப்பதை உணர்ந்த அக்னி “நான் அம்மாகிட்ட விசாரிக்குறேன்” என்றவன், நிலாவுக்கு அழைத்தான். அப்போது தான் ஆரத்யாவை வழியனுப்பிவிட்டு வந்தவர், அக்னியிடம் ஆராத்யா ஏதோ வேலை விஷயமாக ஜெபி அலுவலகத்திற்கு சென்றதாக தகவல் அளித்திருந்தார். அக்னியின் பதிலுக்காக ஆர்வமாக காத்திருந்த ரேயனின் பார்வையை புரிந்துக்கொண்ட அக்னி, அவனை ஏமாற்ற விரும்பாது “அவ வந்திடுவா.. கொஞ்சம் வெயிட் பண்ணலாம்” என்றான்.

அக்னியின் தடுமாற்றத்தை வைத்தே அவள் வரவில்லை என்பதை உணர்ந்தவன், இறுகிய முகத்துடன் அமர்ந்திருக்க, அந்நேரம் அவனுக்கு அழைத்த கிஷோர் “மச்சா இங்க ஒரு பிரச்சனை.. நீ உடனே கிளம்பி நம்ம ஆபிஸ் வா” என்றிட, எப்படியும் அவள் வர மாட்டாள் என்று தனக்கு தானே முடிவெடுத்தவன், “எனக்கு வேலை இருக்கு அக்னி.. இனியும் அவ வருவான்னு எதிர்பாக்குறது முட்டாள்தனம்” என்றவன் அக்னியின் பதிலுக்கு கூட காத்திருக்காது தன் அலுவலகத்திற்கு கிளம்பிச் சென்றான்.

ரேயன் கிளம்பிய சில நிமிடங்களுக்கு பின் அவசரமாக உள்ளே நுழைந்த ஆராத்யாவை வரவேற்றது என்னவோ ரீனா தான். ரீனாவை கண்டவுடன் ஆருவின் முகம் சுருங்கி விட, அப்போது தான் தன் வேலைகளை முடித்த ரீனா, “என்ன ஆராத்யா இவ்ளோ சீக்கிரம் வந்திருக்க” என்று கேலி செய்ய, அவளை எரிச்சலாக பார்த்தவள் “ஹான் வேண்டுதல்” என்றால் சிடுசிடுப்பாக.

ரீனா “ஓ ஓகே ஓகே.. உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன் பாரேன்.. இன்னிக்கி நானும் ரேயனும் டின்னருக்கு போறோம்.. அதான் சீக்கிரம் கிளம்புறேன்” என்றுவிட்டு எழுந்து செல்ல, ரீனாவை அதிர்ந்து பார்த்தவளின் மனமோ “கொஞ்சம் விட்டா போதும்.. எப்போடா சான்ஸ் கிடைக்கும்னு  இருப்பாளுங்க போல.. இவளை சொல்லி தப்பில்லை.. எல்லாம் அவன் கொடுக்குற இடம் தான்” என்று ரேயனை அர்ச்சித்தது.

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற யோசனையில் இருந்தவளுக்கு தலையோ வின்னென வலிக்க, மேசையில் தலை கவிழ்ந்து படுத்துகொண்டாள். அப்போது தான் ஆரு வந்ததை பணியாள் ஒருவரின் மூலம் அறிந்து அக்னி, அவளை தேடிக்கொண்டு அவள் அறைக்குள் நுழைந்தான். மேசை மீது தலை சாய்த்து அமர்ந்துக்கொண்டிருந்த ஆருவின் அருகே சென்றவன் “ஆரு” என்று மென்மையாக அழைக்க, சட்டென நிமிர்ந்தவளுக்கு அக்னியை கண்டு மனம் தடுமாறியது.

அவளை அழைத்த அக்னிக்கும் அதே தடுமாற்றம் தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றிருக்க, அங்கு மௌனத்தை கலைத்தது என்னவோ ஆரு தான். “ஐ அம் சாரி அக்னி.. உங்க யாரையும் புரிஞ்சிக்காம ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்.. இத்தனை வருஷம் ரொம்ப சுயநலமா யோசிச்சிட்டேன்” என்றவளுக்கு கண்கள் கலங்கிவிட, அவளை தோளோடு அணைத்துக்கொண்டவன் “யாரும்மா நீ” என்றான் குறும்பாக.

ஆருவோ அவன் கேலியை உணராது, அவனை குழம்பமாக ஏறிட, அக்னி “எங்க ஆருக்கு இப்படியெல்லாம் பேசவே தெரியாது.. தப்பே பண்ணாலும் அவ அடாவடியா தான் இருப்பா.. ஆனா பாரு.. நீ எப்படி கண்ணை கசக்கிட்டு நிக்குறன்னு” என்று புருவமுயர்த்தி கேலி செய்ய, அப்போது தான் அவன் கேலியை உணர்ந்தவள் “நான் ஒன்னும் அழல.. கண்ல தூசி விழுந்திடுச்சு” என்றாள் கண்ணை துடைத்தபடி. அவள் கண்ணீரை அழுத்தமாக துடைத்தவன் “இனிமே எக்காரணத்துக்கும் என் ஆரு அழவே கூடாது.. புரியுதா” என்று தலைசாய்த்து வினவ, அவனை பார்த்தவளின் கண்கள் மீண்டும் கலங்கிவிட, இதழ்களோ அதற்கு நேர்மறையாக புன்னகை ஒன்றை உதிர்த்தது.

அக்னி “உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன்” என்றிட, ஆரு “நானும் தான்.. ஐ மிஸ்ட் மைசெல்ப்” என்றவள் உண்மையில் தன் இயல்பை தொலைத்திருந்தாள் அல்லவா. அக்னி “சாரி” என்று மன்னிப்பு வேண்ட, “போதும் அகி.. இன்னும் எத்தனை முறை” என்றவள் மென்மையாக புன்னகைக்க, அவனும் புன்னகைத்தான்.

காதலில் மட்டுமல்ல நட்பிலும் பிரிவுகள் நரகமே.

அதுவரை அவளிடம் பேசிக்கொண்டிருந்தவன் அப்போது தான் நியாபகம் வந்தார் போல “ஹே ரேயன் கிட்ட பேசுனியா” என்று வினவ, மறுப்பாக தலையசைத்தவள் “அவன் தான் இங்க இல்லயே” என்றாள். அவள் கூறியதை கேட்டு மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டவன், “முதல அவன்கிட்ட பேசு.. இவ்ளோ நேரம் உனக்காக வெயிட் பண்ணிட்டு இப்போ தான் கிளம்புனான்” என்றான்.

ஆரு “அதான் அந்த ரீனா கூட போயிருக்கானே.. நான் எதுக்கு அவனுக்கு” என்று முறுக்கிக்கொள்ள, ‘இது என்ன புது கதை’ என்பதை போல் அவளை பார்த்து வைத்தவன் “என்னடி உளறுற.. அவன் ஏதோ வேலை விஷயமா ஆபீசுக்கு போயிருக்கான்” என்றவன் ரேயனுக்கு அழைக்க முயல, அவனை தடுத்த ஆரு “இல்ல.. நேர்ல பேசணும்” என்றாள் சற்றே தயக்கமாக.

“சரி வா” என்றவன் ஆருவை அழைத்துக்கொண்டு ரேயனின் அலுவலகத்திற்கு செல்ல, அவனோ ஆருவின் மீதிருந்த கோபத்தில் அங்கிருந்த அனைவரையும் ஒரு வழி செய்துக்கொண்டிருந்தான். கிஷோருக்கு தான் ஏன்னடா இவனை அழைத்தோம் என்றாகிவிட்டது.

தன் முன் நின்றிருந்த மேலாளரை அழுத்தமாக பார்த்த ரேயன், “மொத்தமா இடிச்சுப் போடுங்க நரேன்.. ஐ டோன்ட் கேர்.. நான் என்ன சொன்னேன்.. நீங்க என்ன பண்ணிருக்கீங்க.. உங்க இஷ்டத்துக்கு பண்ணுறதா இருந்தா நான் எதுக்கு” என்று கத்தியவன் “கெட் லாஸ்ட்.. என் கண்ணு முன்ன இருக்காதீங்க” என்றான் சீறலாக. நரேனும் தலையை தொங்கப்போட்டுக்கொண்டு வெளியேற, நரேன் வெளியேறும் வரை காத்திருந்த கிஷோர், அவன் வெளியேறியதும் “டேய் சைக்கோ.. கொஞ்சமாச்சு அறிவிருக்கா.. பில்டிங்க மொத்தமா இடிக்க சொல்லுற.. அதனால எவ்ளோ லாஸ் ஆகும்னு தெரியாதா” என்று பொரிய, அவனோ அழுத்தமாக அமர்ந்திருந்தான். “உன்கிட்ட மனுஷன் பேச முடியாது” என்று முணுமுணுத்தபடி வெளியேறியவன், அங்கு ரீனா நின்றிருப்பதை கண்டு “இவ இங்க என்ன பண்ணுறா” என்று குழம்ப, அவளோ  கிஷோரை கடந்து முன்னே சென்றாள்.

ரேயனின் அறைக்குள் நுழைந்த ரீனாவை  கண்ட கிஷோர் “ஏற்கனவே பேயாட்டம் ஆடிட்டு இருக்கான்.. இவ வேற போய் அவனுக்கு சலங்கை கட்டி விட போறா” என்று முணுமுணுக்க, சரியாக அந்நேரம் அக்னியும் ஆருவும் அலுவலகத்தினுள் நுழைந்தனர்.

கிஷோர் “வாங்க” என்று வரவேற்க, ஆரு “பார்ட்னர்.. உன் கூடவே இருப்பானே ரோபோ.. அவன் எங்க” என்றாள் கேள்வியாக. வெகு நாட்களுக்கு பின்னான ஆருவின் பிரத்யேக அழைப்பில் முகம் மலர்ந்தவன் “உள்ள தான் இருக்கான் பார்ட்னர்.. போய் பாரு” என்றிட, இதழ் பிரித்து சிரித்தவள், அக்னியிடம் கண் காட்டிவிட்டு ரேயனின் அறைக்கு சென்றாள்.

அப்போது தான் ரீனா சென்றது நினைவில் வர, கிஷோர் “ஆத்தி.. அவளே இப்போ தான் சமாதானமா பேசுனா.. உள்ள போனா புதுசா ஒரு பூகம்பம் கிளம்புமே” என்று வாய் விட்டு புலம்ப, அக்னி “ஏன் இவ்ளோ கலவரமாகுற.. அவ சமாதானம் பேச தான் போறா” என்றான்.  அக்னியின் கூற்றில் அதிர்ந்து பார்த்தவன் “எதே.. இதுங்க எப்போடா சமாதானம் ஆச்சு” என்று கேள்வியெழுப்ப, அக்னியோ தோளை உலுக்க, கிஷோர் “ஹே.. இரு இரு.. முதல நீங்க எப்போ சமாதானம் ஆனீங்க” என்றான் கேள்வியாக. கிஷோரின் தோள் மீது கை போட்ட அக்னியோ “அதெல்லாம் அப்படி தான்” என்றிட, அவனை மேலிருந்து கீழ் பார்த்தவனோ “நீயும் அவன் கூட சேர்ந்து ஒரு மார்கமா தான் மாறிட்டு வர” என்றான்.

அதே சமயம் ரேயனின் அறைக்குள் நுழைந்த ஆராத்யா கண்டது என்னவோ ரேயனின் தோள் மீது கை வைத்தபடி அவனை உரசிக்கொண்டு நின்றிருந்த ரீனாவை தான். அதை கண்டவுன் அவள் ரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிற, அவளை அங்கு எதிர்பாராத ரேயனோ விழி விரித்து அமர்ந்திருந்தான். அவள் வருகையே அவனுள் ஒருவித இதத்தை பரப்ப, அவன் விழிகளோ அவளை விட்டு  இம்மியளவும் நகரவில்லை.

ஆருவை கண்ட ரீனா, அவளை வெறுப்பேற்றும் விதமாக ரேயனை இன்னும் நெருங்கி நிற்க, தன்னவளை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த ரேயனோ ரீனாவின் நெருக்கத்தை உணரவே இல்லை ஆனால் ஆராத்யாவின் கண்களிலிருந்து அது தப்புமா என்ன.. பல்லை கடித்துக்கொண்டு தன்னை சமன் செய்தவள், ரீனாவிடம் “ஆத்ரேயன் கூட  கொஞ்சம் பேசணும்.. நீ வெளிய போ” என்றிட, ரீனா “அதை நீ சொல்லாத.. ரேயன் சொல்லட்டும்” என்றாள் மிதப்பாக. ரேயனை அழுத்தமாக பார்த்த ஆராத்யா “நான் உன்கிட்ட தனியா பேசணும்” என்றாள் பற்களுக்கிடையே வார்த்தைகளை கடித்து துப்பியபடி.

பார்வையால் அவளை களவாடியபடி அமர்ந்திருந்த ரேயனுக்கோ அவளை சீண்டு எண்ணம் துளிர்க்க, “தனியா பேச என்ன இருக்கு மிஸ் ஆராத்யா.. எதுவா இருந்தாலும் ரீனா முன்னாடியே பேசலாம்” என்றிட, அவனை ஏகத்துக்கும் முறைத்தாள் பெண்ணவள்.

ரீனாவோ மிதப்பான பார்வை ஒன்றுடன் நின்றிருக்க, ஆரு “ரீனா இப்போ நீ வெளிய போலன்னா பீல் பண்ணுவ” என்று எச்சரிக்க, அடக்கப்பட்ட புன்னகையுடன் ஆருவை பார்த்துக்கொண்டிருந்த ரேயன், “ரீனா கொஞ்சம் வெளிய வெயிட் பண்ணு” என்றிட, “நீ சொல்லுறதுக்காக போறேன்” என்றவள், ஆருவை முறைத்துவிட்டு வெளியேறினாள்.

ரீனா செல்லும் வரை அமைதியாக நின்றிருந்த ஆரு அவள் சென்ற பின் ரேயனை நெருங்கி அங்கிருந்து கோப்பு ஒன்றால் அவனை அடிக்க, இருக்கையிலிருந்து எழுந்தவன் “ஹே என்னடி பண்ணுற” என்று அலறியபடி அவள் கையை பிடித்து தடுக்க, “விடு.. விடு.. கையை விடு.. நமக்குள்ள பேச தான் ஒன்னுமில்லயே.. அப்பறம் என்ன.. கைய விடு” என்று அவன் கரத்தை தட்டிவிட, “ஸ்ஸ்.. வலிக்குதுடி ராட்சசி” என்று வலியில் முனகினான்.

ஆரு “ஆமா.. நான் ராட்சசி தான்.. போ அந்த ரீனா கூடவே போ” என்று பொரிந்தவள் அவன் அறையிலிருந்து வெளியேற முற்பட, அவள் கரத்தை பற்றிவன் அவன் விரலோடு தன் விரல்களை பிணைத்து, தன் அறையினுள் இருந்த ஓய்வறைக்குள் அவளை இழுத்துக்கொண்டு நுழைந்தான். பெண்ணவளோ அவனிடமிருந்து திமிர பார்க்க, அவள் கரத்தை பற்றி நோக்கி இழுத்தவன், நொடியில் அங்கிருந்த சுவரில் சாய்ந்து அவளை சிறை செய்திருந்தான். அவன் அப்படி இழுப்பான் என்று எதிர்பாராதவள் அவன் மீதே மோதி நிற்க, அவள் இடையில் கைகோர்த்து தன்னோடு இறுகிக்கொண்டவன், “என்ன பார்க்க வந்தியா” என்றான் ஹஸ்கி குரலில்.

அந்த குரல் ஒன்றே பெண்ணவளின் மனதை பாகாய் உருக்கிவிட, உதட்டை மடித்து புன்னகையை மறைத்தவள் “இல்ல.. சும்மா சுத்தி பார்க்க வந்தேன்” என்றாள் எங்கோ பார்த்தபடி. அவளை இன்னும் இறுக்கமாக அணைத்தவன் “ஓ.. பரவால்ல இப்படியே நின்னு சுத்தி பாரு” என்றான் மோகம் கலந்த விஷம குரலில். அவன் பார்வையோ பெண்ணவளை உரிமையாய் தீண்ட, தவித்துவிட்டாள் நங்கையவள்.

ஆரு “உங்க கம்பெனிக்கு யார் வந்தாலும் இப்படி தான் பேசுவீங்களோ” என்று திக்கி திணறி நக்கலடிக்க, ‘இல்லை’ என்பதாய் தலையசைத்தவன், “இந்த ஸ்பெஷல் கவனிப்பு உனக்கு மட்டும் தான்” என்றான்  அவள் கன்னக்கதுப்பில் இதழ் பதித்து. சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தவளின் மனமோ வலியில் துடிக்க, “உன்னயும் புரிஞ்சுக்காம ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல” என்றாள் குரல் தழுதழுக்க. பின் அவளே “உங்க எல்லாரையும் நான் தான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்.. சாரி” என்று குற்றவுணர்வில் தலை தாழ்த்த, அவள் முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தியவன் “சாரி சொன்னா போதுமா.. நஷ்ட ஈடு கொடுக்க வேண்டாமா” என்று தீவிரமான முக பாவனையுடன் கேள்வியெழுப்ப, ஆரு “என்ன பண்ணனும்” என்றாள் அவன் கூற்றில் விழித்தவாறு.

பெருவிரல் கொண்டு அவள் இதழை அழுத்தமாக வருடியவன் “நீ எதுவும் பண்ண வேண்டாம்.. எனக்கு தேவையானதை நானே எடுத்துக்கிறேன்” என்று சரசமாய் பேச, அவனை விழி விரித்து பார்த்தவள் “அத்து வேண்டாம்.. இது ஆபிஸ்” என்றது முடிவு பெற்றது என்னவோ அவன் இதழுக்குள் தான்.  விரிந்திருந்த அவள் இமைகளோ உணர்வின் பிடியில் தாமாக மூடிக்கொள்ள, அவர்களின் இதழ் யுத்தமோ முற்று பெறாமல் நீண்டுக்கொண்டே சென்றது.

ஆறு வருட பிரிவின் ஏக்கமது ஒரு இதழோற்றலில் முடிந்து விட கூடியது அல்லவே. மீண்டும் மீண்டும் அவளை நாடியவன் விலகியது என்னவோ அவள் மூச்சுக்காற்று தடைபட்ட பொழுதில் தான். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றிருந்தவளை பார்த்தவனின் பார்வையில் கன்னம் சிவந்துவிட, “அப்படி பார்க்காத அத்து” என்றவள் அவன் மார்பிலே முகத்தை புதைத்துக்கொண்டாள்.

தொடரும்..

Advertisement