Advertisement

                 அத்தியாயம் 26

ஆத்ரேயன் “தேங்க்ஸ்” என்று மென்னகை புரிய

ஆரு “ஏன்” என்று கேள்வியாக புருவமுயர்த்த

ரேயன் “என் லைஃப்ல இன்னும் ஹாப்பினெஸ் கொண்டு வந்ததுக்கு” என்றான் புன்னகையுடன்.

ஆத்ரேயன் கூறியதை கேட்டு அவனை பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு ‘விளையாட்டுக்கு பேச போய் நம்மளே தெரியாம எதாச்சு பண்ணிட்டோமோ’ என்று சிந்திக்க, அவள் முன் சொடுகிட்ட ஆத்ரேயன் “ஓய் என்ன சைலேண்ட் ஆகிட்ட” என்று புருவமுயர்த்த

“இல்ல அப்படியெல்லாம் எதுவும் இல்ல” என்றாள். ரேயனோ சிறு புன்னகையுடன் “இல்லையே.. ஏதோ பலமான யோசனையா இருக்கே” என்று கூற அதில் விழி சுருக்கியவள் “யோசனையா.. அப்படியெல்லாம் இல்ல” என்று மறுக்க அவளை உன்னிப்பாக கவனிதவன் “ஹ்ம்ம்.. நான் என்னன்னு சொல்லவா” என்று குறும்பாக கேட்க, ஆரு “எங்க சொல்லு பார்ப்போம்” என்றாள்.

ரேயன் புன்னகைத்து “நம்ம ஏதோ விளையாட்டுக்கு பேச ஆரம்பிச்சோம் இவன் என்னடான்னா என்னென்னமோ பேசுறான்.. வசமா மாட்டிக்கிட்டோம் போலயேன்னு தான நினைக்கிற” என்று சரியாக யூகிக்க ஆரு தான் அவன் கூறியதை கேட்டு அதிர்ந்துவிட்டாள்.

அவள் விழி விரித்ததை பார்த்த ஆத்ரேயன் “அடிப்பாவி.. அப்போ நிஜமா அதான் நினைச்சியோ” என்று அதிர அதில் வாய் விட்டு சிரித்தவள் “ஐய்.. இந்த பார்த்திபன் வடிவேலுவ போட்டு வாங்குற மாதிரி பண்ணுறியா.. என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலயே” என்று  கேட்க மறுப்பாக தலையசைத்தவன் “சே சே காமெடியா.. ஐ அம் டேம் சீரியஸ்” என்று தீவிரமாக முகத்தை வைத்துக்கொண்டு கூற ஆரு அவனையே குறுகுறுவென பார்த்தாள்.

அவள் பார்வையில் பக்கென சிரித்தவன் “சரி சரி ரொம்ப பயப்படாத.. நான் கொஞ்சம் நல்லவன் தான்” என்று புன்னகைக்க,

ஆரு “ஆன் அதான் தெரியுமே.. ஜூஸ் மாத்திரலாம் வாங்குன நல்லவன்” என்று பேச்சை மாற்ற

ரேயன் “இருந்தாலும் என்ன அவ்ளோ கேவலமா நினைச்சுட்ட பாரு” என்றவன் தொடர்ந்து “பரவால்ல அப்படி நினைச்சும் எதுவும் சொல்லாம என்கூட வந்தியே” என்று மெச்ச

ஆரு “ஆன் அப்படி எதாச்சு நடந்திருந்தா ஒப்பாரி எல்லாம் வைக்க மாட்டேன்.. தலைல கல்லை தூக்கி போட்டுட்டு உன்ன கொன்னுட்டு தான் போவேன்” என்று கண்களை உருட்டி கூற அதில் வாயை பிளந்தவன் “அவ்வ்..கொலைகாரி” என்றுவிட்டு  சிரிக்க அவளும் அவனுடன் இணைந்துகொண்டாள்.

ஆரு “நிறைய மாறிட்டீங்க மிஸ்டர் ஆத்ரேயன்” என்று புன்னகைக்க ரேயன் தோளை உலுக்கிக்கொண்டு “எல்லாம் ஒருதங்களாள தான்” என்றான். ஆரு “யாரது” என்று யோசிப்பது போல் பாவனை செய்ய அவனோ “வேற யாரு ரீனா தான்” என்றான். அதை கேட்டு காதை பொத்தியவள் “அவ பெயர மட்டும் சொல்லாத.. வேற யார வேணா சொல்லிக்கோ” என்க, “சரி ஸ்ருதி” என்றான். ஆரு “ஏன் உனக்கு பசங்க பெயரே வாயில வராதா” என்று முறைக்க அதில் நன்றாக புன்னகைத்தவன் “சரி கூல்.. நான் இப்படி இவ்ளோ பேசுறது உன்னாலதான் அண்ட் உன்கிட்ட மட்டும் தான்” என்றிட அதில் ஆர்வமானவள் “அது ஏன் என்கிட்ட மட்டும்”  என்று ஹஸ்கி குரலில் கேட்க ரேயன் “ம்ப்ச்.. தெரியலயே” என்று அவளை போலவே கூறினான்.

ஆரு “ஏன் தெரியல.. நல்லா யோசிச்சு சொல்லு” என்க அவனோ சிறிது நேரம் யோசித்துவிட்டு “ஆன்.. காட் இட்” என்றிட ஆரு “ஆன் சொல்லு என்ன” என்றாள் குறையாத ஆர்வத்துடன்.

ரேயன் “நீ லோட லோடன்னு பேசிட்டே இருக்கியா எனக்கு அதை கேட்டு காதெல்லாம் வலிக்கிது.. அதான் நான் பேசுறேன் அப்போ தான் நீ அமைதியா கேட்ப.. இப்போ கேட்குறியே அதே மாதிரி” என்று கூற, முதலில் புரியாமல் விழித்தவள் பின் புரிந்தவுடன் “யூ.. யூ” என்று அவனை சரமாரியாக தாக்க அதை தடுத்தவன் “சரி போதும் வா.. சாப்பிடலாம்” என்று அழைக்க, “எனக்கு பசிக்கவே இல்ல அத்து.. நான் வீட்டுக்குப் போய் சாப்பிடுறேன்” என்று கூறியவள் அவன் முறைப்பில் “சரி சரி சாப்பிடலாம்” என்றிட

“குட் வா” என்று அவளை அழைத்துக்கொண்டு செல்ல

ஆரு “ரொம்ப தான் மிரட்டுறான்” என்றாள் முணுமுணுப்பாக, ரேயன் “என்ன” என்று அவளை புருவம் சுருக்கி பார்க்க அதில் இளித்தவள் “நீ ரொம்ப சுவீட்ன்னு சொன்னேன்” என்று சமாளிக்க அவளை ஒரு மார்க்கமாக பார்த்தவன் “எனக்கு தெரியும்” என்றுவிட்டு அவளை அழைத்து சென்றான்.

உணவு மேசையில் அமர்ந்திருந்த ஷோபனா அவர்கள் வருவதை கண்டு “நானே கூப்பிடனும்ன்னு நினைச்சேன்.. வா ஆரா உட்காரு” என்க

ஆரு “ஆன்டி என்ன லன்ச்” என்று இயல்பாக பேச ரேயன் ‘அவ அப்படி தான்’ என்று செய்கையில் கூற அதில் புன்னவைத்தவர் “உனக்காக ஸ்பெஷல்.. நான் பன்னீர் லேயர் பிரியாணி பண்ணேன், வேணி மட்டன் சுக்கா பண்ணா.. அது இல்லாம ரைஸ் சிக்கன் கிரேவி கூட இருக்கு.. சுவீட்ல ரசமலாய் அப்பறம் ராஜ்போக் இருக்கு.. டைம் இல்ல அதான் நிறைய செய்ய முடியல” என்று  பெரிதாக முடிக்க அவர் கூறியதை கேட்டே மலைத்தவள் “எது இது கம்மியா.. ஆன்டி என்ன பார்த்தா வீட்ல இருக்குற எல்லாத்தையும் காலி பண்ணுற மாதிரி இருக்க என்ன..” என்று கேலி செய்தவள் தொடர்ந்து “அதுசரி எப்படி இவ்ளோ சீக்கிரம் பண்ணீங்க” என்று வினவ

ஷோபா “அட அதெல்லாம் ஈஸி தான்டா” என்றார் (முன்ன பின்ன கிச்சன் பக்கம் போயிருந்தா தெரியும்.. கிச்சன்கே கூகுள் கிட்ட வழி கேட்குற ஆள் ஆச்சே நீ??‍♀️)..

வேணி “ஆரா வா சாப்பிடலாம்” என்றழைத்தார். ஆத்ரேயன் அவர்களின் சம்பாஷனைகளை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான். அவன் கலகலப்பானவன் கிடையாது அவன் கலகலப்பு சீண்டல்கள் எல்லாம் ஆருவிடம் மட்டும் தான் அதை அவளும் அறிந்திருந்தாள்.

ஆரு உணவை உண்டு “ஆன்டி நீங்க ரெண்டு பேரும் வேற லெவல்.. எல்லாமே செம்மையா இருக்கு” என்று உணர்ந்து கூற இருவரும் புன்னகைத்தனர். ரேயன் “அப்போ எங்க வீட்ல டெய்லி சாப்பிட்டா பலூன் மாதிரி ஆகிடுவ போலயே” என்று கலாய்க்க, ரேயனா பேசுவது என்பதை போல தாய்மார்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அர்த்தமாய் பார்த்துக்கொண்டனர்.

ஆரு “ஆமா அத்து.. கண்டிப்பா அப்படி நடக்க நிறைய வாய்ப்பிருக்கு” என்று இயல்பாக கூறினாள் ஆனால் ரேயன் அதை இயல்பாக கூறவில்லை என்றுணர்ந்த ஷோபனா வேணியை பார்க்க அவளோ மேலே கை தூக்கி “எல்லாம் அவன் செயல்” என்று வாயசைக்க ஷோபனா மெலிதாக புன்னகைத்தார்.

சிறிது நேரம் அவர்களுடன் பேசியவள் நேரமாவதை உணர்ந்து “சரி ஆன்டி நான் கிளம்புறேன்.. பை” என்று ரேயனுடன் நடந்தவள் ஒரு நிமிடம் திரும்பி அங்கு வேலை செய்யும் ராணியை பார்த்து “அக்கா நீங்க தான ஜூஸ் கொண்டு வந்தீங்க.. தேங்க் யூ” என்றுவிட்டு சென்றாள்.

ரேயன் காரில் அமர்ந்து தன் அன்னை மற்றும் சிற்றன்னையை பார்க்க இருவர் முகமும் மலர்ந்திருந்தது. ஆரு காரில் ஏறியவுடன் அவன் காரை கிளப்ப, ஷோபனா “ரொம்ப நல்ல புள்ள.. ராணி வரைக்கும் கவனிச்சு சொல்லிட்டு போறா பாரேன்” என்க வேணியும் அமோதிப்பதாய் தலையசைத்து அவருடன் உள்ளே சென்றார்.

ஆத்ரேயன் சாலையில் கவனம் செலுத்த, ஆரு “நல்லா போச்சுல உங்க வீட்ல” என்று கேட்க அவன் தலையசைத்தான். ஆரு “ஏன் சைலேண்ட்டா வர” என்று கேட்கும் போதே கிஷோர் அவளுக்கு அழைத்திருக்க அதை ஸ்பீக்கரில் போட்டவள் “சொல்லுங்க பார்ட்னர்” என்றிட மறுமுனையில் இருந்தவன் “என்ன பார்ட்னர் வீட்டுக்கு போயிட்டியா” என்று விசாரிக்க

ஆரு “உங்க பிரெண்ட் தான் கூட்டிட்டு போய்ட்டு இருக்கான்” என்று ஆத்ரேயனை பார்த்தபடி கூறினாள்.

கிஷோர் “நான் கொஞ்சம் வேஸ்ட் தான் ஆனா இதெல்லாம் சொன்னா நான் நம்ப மாட்டேன்” என்று நம்ப மறுக்க ரேயனோ ‘ஐயோ’ என தலையில் அடித்துக்கொண்டான்.

ஆரு சிரித்துக்கொண்டே “அத்து ஹாய் சொல்லு” என்க அவனோ பல்லை கடித்துக்கொண்டு “டேய் கிச்சா” என்றான் சற்று அதட்டலாக அப்போதும் அவன் நம்பாமல் “ஹே ஹே.. மிமிக்ரி பண்ணா நம்பிடுவென” என நக்கலாக கேட்க இங்கு ஆரு விழுந்து பிரண்டு சிரித்தாள். ரேயன் தான் கடுப்பாகி “டேய் கிச்சா லூசு பயலே.. நான் தான் அவளை வீட்ல விட போறேன்.. என்ன இப்போ” என்று பொரிய கிஷோருக்கோ நெஞ்சு வலியே வந்துவிட்டது.

கிஷோர் “எதே.. என் ரோபோ ஒரு பொண்ண வீட்ல டிராப் பண்ண போகுதா.. இல்ல இதை நான் நம்ப மாட்டேன்” என்று நாடக பாணியில் பேச

ஆத்ரேயன் “அடங்கு டா டேய்” என்றான்.

கிஷோர் “டேய் அத்து..நீயா டா.. நிஜமா நீயா..” என்றவன் தொடர்ந்து “ஹே குட்டி சாத்தான் நீதான ஆள வச்சு பேச வைக்கிற” என்று அப்போதும் நம்பாமல் கேட்க

ஆரு “வீடியோ கால் வரவா.. பாக்குறியா லைவ்வா” என்று கேட்க

“சரி என் மரியாதை குறையுது.. விடு” என்றான்.

ரேயன் “நீ எதுக்கு இப்போ அவளுக்கு கால் பண்ண” என்று வினவ அவனோ “அவ வீட்டுக்கு போயிட்டாளான்னு கேட்க தான்.. நேத்து சொல்லிட்டு இருந்தா இன்னிக்கு அஞ்சு வரை கிளாஸ்ன்னு” என்றவன் இன்று கல்லூரி வராததால் ஆத்ரேயன் வந்ததை அவன் அறிந்திருக்கவில்லை.

அவன் கூறியதை கேட்ட ரேயன் “ஆன்.. நீ மட்டும் போயிட்டாளா கேட்க கால் பண்ணுவ நான் அவளை வீட்ல விட மாட்டேன்னா.. அதுவும் இவளை அப்படியே விட்டுட்டு போயிடுவேனா” என்று கேட்க, ரேயன் இறுதியாக  கூறியதை கேட்டு கிஷோர் அதிர ஆருவும் அவனை தான் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆனால் தான் உலறியதை அறியாது அவன் காரில் கவனமாக இருக்க, கிஷோர் “மா ஆரா.. என் பிரெண்ட்ட பத்திரமா வீட்டுக்கு அனுப்பி வை.. எனக்கு இருக்க ஒரே பிள்ள மா அவன்” என்று நக்கலாக கூறினாலும் அதிலிருந்த உள்ளர்த்ததை புரிந்துக்கொண்டவள் வெளியில் எதுவும் காட்டிக்கொள்ளாமல் “அதெல்லாம் எங்களுக்கு தெரியும்.. வை போனை” என்றாள்

கிஷோர் “நன்றி மா.. எப்பா நல்லவனே பைடா” என்க

ரேயன் “ஆன்” என்றான்.

ஆருவின் வீட்டின் முன் அவன் வண்டியை நிறுத்த, வண்டியிலிருந்து இறங்கியவள் “பை அத்து.. நாளைக்கு பார்க்கலாம்” என்று செல்ல, ரேயன் “தியா” என்றழைத்தான். அதில் திரும்பியவள் “சொல்லுங்க சார்” என்று ஜன்னல் மீது சாய்ந்து நிற்க சில நிமிடம் அவளை அமைதியாக பார்த்தவன் “இப்போ போ” என்றான். அதில் அவனை குறுகுறுவென பார்த்தவள் “உனக்கு எதாச்சு அம்னீஷியா பிராப்ளம் இருக்கா” என்று ரகசியம் போல் கேட்க, ரேயன் அவளை முறைத்தான். ஆரு “பின்ன என்ன.. இப்படி தான் கூப்பிட்டு ஏதோ சொல்ல வர மாதிரி வந்துட்டு.. பாத்துட்டு ஒன்னுமில்லன்னு சொல்லிடுற” என்று சிணுங்க, அவள் கேட்டதற்கு புன்னகையை பரிசாக வழங்கினான்.

ஆரு “வர வர உன் போக்கே சரி இல்ல அத்து.. லூசு தான் ஆக போற இப்படியே சிரிச்சிட்டு இருந்தா” என்றவள் உதட்டை சுழிக்க “பாத்துக்கலாம்.. பை” என்று கண்ணடித்துவிட்டு கிளம்பினான்.

நாட்கள் இவ்வாறு சென்றது, ஆரு எவ்வாறு ஆத்ரேயனுடன் பேச ஆரம்பித்தாளோ அதே போல் நேஹாவும் அவனுடன் பேச ஆரம்பித்திருந்தாள். இருவருக்குள்ளும் ஒரு அழகிய சகோதர பாசம் வளர்ந்து வந்தது. அக்னிக்கு அவர்கள் ரேயனுடன் பேசுவது தெரியும், அவனுக்கு பிடிக்கவில்லை என்றாலும் அவர்களை அவன் தடுக்கவும் இல்லை. அக்னி இல்லாத போது நன்றாக பேசும் ஆரு மற்றும் நேஹா அவன் முன் அளவோடு பேசுவதை ரேயனும் கவனித்திருந்தான் தான்.

பள்ளி காலத்தில் ரேயன் பிரச்சனை செய்த பிறகு அக்னி கிரிக்கெட் கோச்சிங் செல்வதை நிறுத்திருக்க அதே போல் ஆத்ரேயனும் கால்பந்து பயிற்சி செல்வதை நிறுத்தியிருந்தான்.

இரண்டாம் வருடம் படிக்கும் போது அக்னி  கிரிக்கெட் அணியில் சேர்ந்திருக்க, சீனியர்ஸின் வற்புறுத்தலால் ஆத்ரேயனும் கால்பந்து அணியில் சேர்ந்திருந்தான் வேண்டா வெறுப்பாக.

இப்போது அக்னி கிரிக்கெட் அணியின் தலைவனாய் போடப்பட்டிருக்க, ஆத்ரேயன் கால்பந்து அணியின் தலைவனாக நியமிக்கப்பட்டிருந்தான்.

அன்று மதியம் ஒரு மணிபோல் மைதானத்திலிருந்த ஸ்டோன் பெஞ்சில் அமர்ந்திருந்த ரேயனின் முன் வந்த கிஷோர் “டேய் சைக்கோ.. முதல விளையாடவே மாட்டேன்னு சொன்ன இப்போ என்னடான்னா இங்கிருந்து நகரவே மாட்டுற… ஏன்டா என் உயிரை வாங்குற.. பசிக்கிதுடா” என்று தன் போக்கில் புலம்பிக்கொண்டிருக்க

ரேயன் “பசிச்சா போய் சாப்பிடேன்டா.. எதுக்கு என்ன கூப்பிட்டு இருக்க” என்று கடுப்படிக்க, “காசு இல்ல” என்றான் அவன். கிஷோரை மேலிருந்து கீழ் பார்த்தவன் “கேவலமா நடிக்காத” என்க அப்போதும் அவன் நகராது “நிஜமா இல்ல” என்று அதே போல் கூற, ரேயன் “வேண்டாம் டா அடி வாங்கி சாகாத” என்று முறைக்க

கிஷோர் “அப்படி தான் பண்ணுவேன்” என்றான் பிடிவாதமாக. “அடிங்கு.. இரு உன்ன” என்று ஆத்ரேயன் தன் அருகிலிருந்த பையை அவன் மேல் வீச அதை லாவகமாக பிடித்தவன் “கொலை முயற்சி பண்ணாலும் நீ இல்லாம போக மாட்டேன்” என்றான். அதில் இன்னும் கடுப்பானவன் “டேய் நீ ஏன் என் பொண்டாட்டி மாதிரி பிஹேவ் பண்ணுற” என்று முறைக்க

கிஷோர் “அப்போ நான் இல்லையா கோபால்” என்று வாயில் கைவைத்து நாடக பாணியில் கூற அதில் ரேயனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. “அட சே வந்து தொல” என்று செல்ல “ஹான் அது” என்றபடி அவனுடன் சென்றான்.

உணவகம் செல்வதற்கு கிரிக்கெட் மைதானத்தை தாண்டி செல்ல வேண்டியிருக்க அங்கு அக்னி மற்றும் சிலர் அமர்ந்திருந்தனர்.

அக்னியுடன் கிரிக்கெட் அணியில் இருந்த சிலருக்கு ஆத்ரேயன் மீது தீரா வன்மம் இருந்தது. அனைத்திற்கும் ஆத்ரேயன் அல்லது அக்னியை மட்டுமே முன்நிறுத்தியதால் உண்டான வெறுப்பு தான் வன்மமாக மாறி இருந்தது. இப்போது உணவுண்ண சென்றுகொண்டிருந்த ஆத்ரேயனை பார்த்தவுடன் இவர்களுக்குள் ஏதேனும் சண்டை மூட்டி விடலாம் என்றெண்ணியவர்கள் சரியாக ஆத்ரேயன் வரும் போது “டேய் சில பேரெல்லாம் ரெகமென்டேஷன்ல தான் புட்பால் டீம்ல இருக்காங்களாம் தெரியுமா” என்று நக்கலாக ஆரம்பிக்க மற்றொருவன் “ஆமா மச்சா.. அந்த சீனியர் அஷ்வின் ரெகமென்டேஷன் தான்” என்றிட

மூன்றாமவன் “எப்படி தான் கூச்சமே இல்லாம கேப்டன்னா இருன்னு சொன்ன உடனே ஒத்துக்குறாங்களோ தெரியல..”

“டெலெண்ட்லாம் இல்ல பிரதர்.. கிருபா கிருபா கிருபா” என்று மூவரும் ஆட அக்னி அவர்களை அமைதியாய் பார்த்துக்கொண்டிருந்தான். இவர்களை தாண்டி சென்ற ரேயனின் காதிலும் இவை தெளிவாக விழ அவன் நடையின் வேகம் குறைந்தது. கதிர் தான் ‘இவனுங்க ஏன் அவனை வம்பிழுக்குறாங்கன்னு தெரியலயே’ என நினைத்துக்கொண்டிருந்தான்.

இங்கு கிஷோர் ரேயனின் கை பிடித்து “மச்சா வா போகலாம்.. டைம் இல்ல” என்று இழுக்க முற்பட அவன் கையை தட்டிவிட்டவன் அந்த மூவரையும் முறைத்துக்கொண்டே நடந்தான். அங்கு அக்னி இருந்தது வேறு அவன் இரத்த அழுத்தத்தை எகிற வைக்க, முயன்று தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு நடந்தான்.

அவர்களும் ஏதேதோ பேசி இறுதியாக “என்ன அக்னி உனக்கு அவங்கள நல்லா தெரியும்ல” என்று ஒருவன் கேட்க, மற்றொருவன் “ஆமாடா.. அவனுக்கு நல்லா தெரியும்.. அவனுக்கு வர வேண்டிய ப்ரெசிடெண்ட் போஸ்ட்ட கூட அவனுக்கு கொடுத்திடுவாங்க போல” என்று ஏத்தி விட அப்போதும் அக்னி அவர்களை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தான். கதிர் தான் அக்னியிடம் “மச்சா வா நம்ம போலாம்.. இவங்க பேசுறதே சரியில்ல” என்று அழைக்க, அந்த மூவரில் ஒருவன் “டேய் அவனை ஏன் கூப்பிடுற.. நாங்க உண்மைய தான் சொல்லுறோம்” என்றனர். இப்போது அக்னியும் “அவங்க சொல்றது உண்மை தான்.. சுயபுத்தி இல்லாம சில பேர் சொல்லுறத கேட்டு பண்றவனுக்கு திறமை இருக்குறதெல்லாம் சந்தேகம் தான்” என்க அதை கேட்ட ஆத்ரேயனுக்கோ அதற்கு மேல் பொறுமை இருக்கவில்லை.

அக்னியின் அருகில் ஆக்ரோஷமாக வந்தவன் “என்னடா சொன்ன” என்று சட்டையை பிடிக்க, அக்னி நக்கலாக “ஏன் காதும் பிரச்சனையா உனக்கு” என்னும் போதே ஆத்ரேயன் அவன் முகத்தில் குத்தியிருந்தான்.

இப்படி அவர்களின் வாக்குவாதம் கைகலப்பாய் மாற இருவரும் சரமாரியாக மற்றவரை தாக்கிக்கொண்டிருந்தனர்.

அக்னி “எதுக்குடா திருப்பி திருப்பி வந்து என் முன்னாடி நிக்கிற.. நிம்மதியா விட மாட்டியா” என்று கத்த, ரேயன் “இப்போ என் பேச்சுக்கு வந்தது எவன் டா” என்று எகிற

அக்னி “உனக்கு உண்மைய சொன்னா கசக்குதா.. நீ கொஞ்சம் யோசிச்சிருந்தா எனக்கு அந்த அசிங்கம் நடந்து இருக்காது”

“பண்றத பண்ணிட்டு பேச்சு வேறயா உனக்கு.. அன்னிக்கே உன்ன ஜெயில்ல தள்ளியிருக்கணும்” என்றான். அதில் இகழ்ச்சியாக இதழை வளைத்த அக்னி “அப்படி பண்ணிருந்தா நீ தான்டா கம்பி எண்ணிருப்ப” என்று மாறி மாறி சண்டையிட இரண்டு பேருக்கும் பலமாக அடிப்பட்டது.

அதற்கு மேல் தடுக்க முடியாது என்றுணர்ந்த கிஷோர் கதிருக்கு கண் காட்ட கதிர் ஆரு மற்றும் நேஹாவிற்கு அழைத்து தகவல் தெரிவித்தான்.

ஆரு “வாட்” என அதிர்ந்து “என்னவாம்டா அவங்களுக்கு” என பொரிந்தவள் மைதானத்திற்கு சென்றாள்.

கிஷோர் அவர்களை வாசலிலே நிறுத்தி “நீங்க நடுவுல போகாதீங்க.. போய் சாரை கூப்பிடுங்க” என்றிட நேஹா “என்ன கிஷோர் நீயே சார கூப்பிட சொல்லுற” என்று அவன் முகம் பார்க்க, கிஷோர் “குமரன் சார் பார்த்துக்குவார்.. நீ கூப்பிடு” என்றான். ஆருவுக்கும் அதுவே சரியென பட “நான் கூப்பிடுறேன் பார்ட்னர்” என்றுவிட்டு அவசரமாக ஸ்டாப் ரூமிற்கு சென்றவள் குமரனிடம் “சார் அங்க.. அக்னி.. அத்து” என்று மூச்சிரைக்க பேச அவளிடம் தண்ணீரை நீட்டியவர் “முதல இதை குடிச்சிட்டு பேசு” என்க அதை வாங்கி பாருகியவள் “அங்க புல்லா ரத்தம்.. சண்டை போடுறாங்க” என்னும் போதே அவளுக்கு கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. பின் தன்னை சமாளித்தவள் அவரிடம் நடந்தவற்றை கூற குமரன் சிரித்துவிட்டார்.

அவர் சிரிப்பதை பார்த்து குழம்பியவள் “சார்.. ஏன் சிரிக்கிறீங்க” என்று புருவம் சுருக்க

அவரோ “அவங்க முறுகிட்டு திரியும் போதே நினைச்சேன் என்னிக்கி இப்படி பண்ண போறாங்களோன்னு.. யூ சில்.. பார்த்துக்கலாம்..” என்றவர் தொடர்ந்து “வேற யார்கிட்டயும் சொல்லல தான” என்று வினவ

“சொல்லல சார்” என்றாள்.

குமரன் “சரி வா” என்றுவிட்டு அவளுடன் சென்றார். அங்கு நேஹா இருவரிடமும் கத்திக்கொண்டிருக்க அக்னி அவள் கத்தியதை கேட்கும் நிலைமையில் இல்லை, ரேயன் அவள் சொல்லிற்காக சிறிதே அடங்கி போனான்.

அப்போது அங்கு வந்த குமரன் “ஸ்டாப்” என்று கர்ஜிக்க அவர் குரலில் தான் இருவரும் அடங்கினர். குமரன் “ஏன் இங்க நின்னு அடிச்சிக்குறீங்க.. கொஞ்சம் ரோடுல போய் அடிச்சிக்கிட்டா அங்க இருக்க மக்களுக்கு என்டர்டெயின் ஆகிருக்கும் அப்பறம் போலீஸ் கூட்டிட்டு போகவும் ஈசியா இருந்திருக்குமே” என்று  ஏளனமாக அவர்களை சாட, இருவரும் கை கட்டி நின்றனரே தவிர பதிலளிக்கவில்லை.

கதிர் “சாரி சார்.. அக்னி எதுவும் பண்ணல.. அவங்க தான் தேவையில்லாம ஆத்ரேயனை வம்பிழுத்தானுங்க” என்று அவர்கள் நின்ற இடத்தை கைகாட்ட அங்கோ ஸ்டோன் பெஞ்ச் மட்டும்தான்இருந்தது, குமரன் வந்த போதே அவர்கள் தப்பித்து ஓடியதை கதிர் கவனிக்கவில்லை. கதிர் காட்டிய இடத்தை எட்டி பார்த்த குமரன் “எது கதிர் பெஞ்சா” என்று நக்கலாக கேட்க

கிஷோர் “இல்ல சார், எங்க கிளாஸ் பசங்க மூணு பேர் தான்” என்று கதிருக்கு சாதகமாக பேச அவர்களை அழுத்தமாக பார்த்தவர் “அப்போ இவங்க ரெண்டு பேருக்கும் இதுல எந்த சம்மந்தமும் இல்ல.. அப்படி தான” என வினவ அங்கு அனைவரும் அமைதியாகினார்.

நேஹா “அது எப்படி எதுவுமில்லாம ரெண்டு பேர் அடிச்சிக்குவாங்க சார்” என்று அக்னியை கண்களால் எரித்தபடி கேட்க அவனோ அவளை பாராது தலை குனிந்து நின்றான்.

ஆரு “அதானா.. எவன் என்ன பேசுனாலும் அடிக்க போயிடுவாங்களா” என்று ரேயனை முறைத்தபடி நிற்க அவனும் அவளை பாராது தலை குனிந்து நின்றான்.

வேங்கைகளாய் சீறிக்கொண்டிருந்தவர்கள் இப்போது சிறு பெண்களின் முன் தலை தாழ்ந்து நிற்பதை எண்ணி புன்னகைத்தவர் “இப்போ மட்டும் ரெண்டு பேரும் ஒத்துமையா ஒரே போஸ்ல நிக்குறீங்க..” என்றவர் தொடர்ந்து “ஓகே, காலேஜ் கேம்பஸ்ல சண்டை போட்டுகிட்டதுக்கு உங்களை என்ன பண்ணலாம்” என்று மார்பிற்கு குறுக்கே கை கட்டியபடி கேட்க, கதிரும் கிஷோரும் ஒரு சேர “இந்த ஒரு வாட்டி” என்றிழுக்க அவர்களை முறைத்தவர் “நீங்க என்ன அவங்களுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டா.. நான் அவங்களை கேட்டேன்” என்று அவர்களை பார்க்க அவர்களோ அழுத்தமாக வாய் மூடி நின்றிருந்தார்கள்.

குமரன் “ஓகே.. நீங்க ரெண்டு பேரும் எதுவும் சொல்லுற மாதிரி தெரியல.. சோ ஒரு மூணு நாள் வீட்ல ரெஸ்ட் எடுங்க.. பாவம் அடி வேற பட்டிருக்குல” என்று கூற, அவர்களோ அவர் கூறியதை கேட்டு புரியாமல் விழித்தனர்.

குமரன் “சஸ்பெண்டட் பார் 3 டேஸ்.. இந்த வயசுல இதெல்லாம் சகஜம் தான் ஆனா இது கண்டிப்பா மத்த டிப்பார்ட்மெண்டுக்கும் தெரிய வரும்.. ஏற்கனவே சிவிலுக்கு ரொம்ப நல்ல பெரு..” என்றவர் “அவங்க எதுவும் பனிஷ் பண்ணுறதுக்கு முன்னாடி இட்ஸ் பெட்டர் ஐ டூ இட் வித் லெஸ் பனிஷ்மெண்ட்” என்றுவிட்டு சென்றார். (சே.. என்ன மனுஷன்டா?)

குமரன் சென்றவுடன் ஆரு நேஹா இருவரும் தத்தம் துணைகளை முறைத்தனர். ஆரு ரேயனை முறைத்துவிட்டு அக்னியிடம் சென்றவள் “வா போகலாம்” என்று கோபமாக அழைக்க அவனோ நேஹாவை பார்த்தான். ஆரு “என்ன அங்க பாக்குற.. அவ உன்கிட்ட பேசுறதே டபுட் தான் இதுல சார் இதெல்லாம் வேற எதிர்பார்க்குறாரு.. வா நல்லா டெட்டால் ஊத்தி எரிய விடுறேன்” என்று அழைத்து செல்ல

அக்னி “ஹே ஆரு நான் என்ன பண்ணேன்” என்றவன் நேஹா ரேயனுடன் செல்வதை பார்த்து “அவ ஏன் அவன் கூட போறா” என்று கேட்க அவனை மேலும் நன்றாக முறைத்த ஆராத்யா “ரொம்ப பொங்காத.. அவனும் மனுஷன் தான்.. அவனுக்கு மட்டும் என்ன தக்காளி சட்னியா வருது” என்க

“அதுக்கு வேற ஆளு” என்று தொடங்கியவன் ஆரத்யாவின் முறைப்பில் அமைதியானான்.

இங்கு நேஹா ஆத்ரேயனிடம் வந்து நிற்க அவனோ அவளை புரியாமல் பார்த்தான். நேஹா “என்ன பாக்குறீங்க” என்று புருவமுயர்த்த, “இல்ல அது” என்றிழுத்தான் அவன். அவளோ “என்ன அது.. வாங்க போய் தையல் போடுவோம்” என்றழைக்க அதில் அதிர்ந்தவன் “என்னது தையலா.. அம்மு அந்த அளவுக்குலாம் இல்ல” என்று மறுக்க, நேஹாவோ அவனை முறைத்து  “அந்த அளவுக்கு இல்ல தான் இருந்தாலும் போடலாம்.. அப்போ அடுத்தவாட்டி சண்டை வரும்போது அந்த  தையல் தான் நியாபகம் வரனும்” என்றாள் மிரட்டும் தோரணையில். ரேயன் அவளை பாவமாக பார்க்க, கிஷோர் “என்னமா இப்படி சொல்லிட்ட” என்று அதிர, நேஹா “எப்படி சொல்லிட்டேன்” என்று இடுப்பில் கைவைத்து முறைக்க கிஷோர் “சே சே ஒன்னுமில்லையே.. நீ சொன்னது தான் கரெக்ட்.. முடிஞ்சா ஒரு ஆப்ரேஷன் பண்ணிடுவோம்.. நான் போய் டாக்ட்ர் கிட்ட பேசுறேன்” என்று ஓடிவிட

ரேயன் “டேய் கிச்சா எருமை மாடு.. விட்டுட்டா ஓடுறா.. நடந்து வா இன்னிக்கி வீட்டுக்கு” என்று கத்த, அவனோ “ஹே ஹே கிச்சாக்கு மக்கள் இருக்காங்கடா.. லிப்ட் கேட்டு போவேன்” என்றுவிட்டு சென்றான்.

இப்போது ஆத்ரேயன் நிஜமாகவே பாவமாக முகத்தை வைத்துக்கொள்ள, நேஹா “என்ன பாவமா பார்த்தா, நீங்க தடுக்கி விழுந்து அடி பட்டதா நினச்சிக்கனுமா” என்று கேட்க, ரேயன் “இல்ல அம்மு நிஜமா நான் எதுவும் பண்ணல.. அவன்” என்று ஆரம்பித்தவன் அவள் முகம் பார்த்து  “வேண்டாம் விடு” என்றிட அவளோ “முடியாது” என்றாள் அழுத்தமாக.

பின் நேஹா அவனை கேன்டீன் அருகே அழைத்து சென்று ஒரு இருக்கையில் அமர வைத்தவள் “இப்போ சொல்லுங்க” என்று அவன் முகம் பார்க்க,

ரேயனோ “ஐ அம் சாரி” என்றான்.

நேஹா “நான் அதை கேட்கல” என்று அழுத்தம் திருத்தமாய் கூற

“சரி என்ன பண்ணனும் சொல்லு” என்றான் அவன். இதுவரை அவன் யாரிடமும் இப்படி கேட்டதில்லை, ஏனோ அவனுக்கு நேஹாவை பிடித்திருந்தது. அவனால் அவள் கோபப்படுவதை பார்க்கமுடியவில்லை எனவே தான் சரண்டர் ஆகிவிட்டான். ஆத்ரேயனின் குணத்தை நன்கறிந்த நேஹாவிற்கோ அவனின் பேச்சு அதிர்ச்சியாக தான் இருந்தது, அவன் அவ்வளவு எளிதில் யாருக்காவும் இறங்கி வர மாட்டான் என்பதும் அவள் அறிந்த ஒன்று.

நேஹா “ஏன் இப்படியெல்லாம் பண்ணுறீங்க.. இப்படி அடிச்சிக்கணுமா, நீங்க நல்லா அடிச்சிக்குவீங்க எங்களுக்கு தான கஷ்டமா இருக்கு” என்று பொரிந்தவள் “எப்படி அடிச்சு வச்சிருக்கான் பாருங்க” என்னும் போதே அவள் கண்கள் கலங்கியது.

மென்மையான பெண்ணவளுக்கு அவர்களின் இந்த முரட்டு தனமான தாக்குதல்கள் பயத்தை விளைவித்தது.

அவள் தனக்காக மட்டுமல்ல அவளவனுக்காகவும் சேர்த்து தான் வருந்துகிறாள் என்பதை புரிந்துகொண்டவனுக்கு அவர்களின் நேசம் பற்றி தெரிந்தே இருந்தது.

அவள் கலங்குவது பொறுக்காமல் ரேயன் “நான்தான் அவனை முதல அடிச்சேன்.. சாரி அம்மு.. ஆனா அவன் அப்படி பேசுறத கேட்டு சும்மா இருக்க முடியல” என்று தலைகுனிய

நேஹா “அவன்தான் பேசுறான்னா நீங்க கண்டுக்காம போகலாம்ல.. ரெண்டு பேரும் இப்படியே இருந்தா என்ன பண்ண முடியும்” என்று கேட்க அவனோ அமைதியையே பதிலாக கொடுத்தான், அவனுக்கு நேஹாவிடம் வாதாடவும் மனம் வரவில்லை என்பதே அந்த அமைதிக்கான காரணம்.

நேஹா “எதாச்சு சொல்லுங்க” என்றிட அதில் அவளை நிமிர்ந்து பார்த்தவன் “சாரிடா.. உனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்குன்னு புரியுது, இனி நான் கன்ட்ரோல் பண்ண ட்ரை பண்ணுறேன்” என்று வாக்களிக்க

“நிஜமாவா” என்றாள் அவன் முகம் பார்த்து, அவனோ சிறு புன்னகையுடன் “நிஜமா” என்க அவளும் மெலிதாக புன்னகைத்தாள். அவள் புன்னகையை பார்த்தவன் “ஆன் இது தான் அழகா இருக்கு.. கோவமெல்லாம் படாதீங்க.. நல்லாவே இல்ல” என்றான். நேஹா “ம்ம்.. இருக்கும் இருக்கும்.. கொழுப்பு” என்று அவன் கையில் அடிக்க அதில் “ஆ” என அலறினான். நேஹா “ஐயோ சாரி சாரி” என்று முகம் சுருக்கினாள்.

இங்கு அக்னிக்கு முன் அனைத்து மருந்துகளையும் வைத்துவிட்டு கைகட்டிக்கொண்டு அமர்ந்திருந்த ஆரத்யாவை பார்த்தவன் “அடியேய் மருந்து போட தான கூட்டிட்டு வந்த.. இப்போ எல்லாத்தையும் பரப்பி வச்சிட்டு இப்படி உட்கார்ந்திருக்க.. போட்டு விடு” என்று கை நீட்டினான். அதில் அசையாது அமர்ந்தவள் “நீ தான சண்டை போட்ட.. நீயே மருந்து போட்டுக்கோ” என்றிட

கதிர் “அதான.. போட்றா டேய்” என்றான்.

அக்னி கதிரை முறைக்க அதில் மிரண்டவன் “இல்லடா போடுறதா இருந்தா போடு இல்ல நான் போட்டு விடுறேன்” என்க இப்போது முறைப்பது ஆருவின் முறையானது. கதிர் “அடச்சே.. சரியான பைத்தியங்க கிட்ட மாட்டிக்கிட்டேன்.. நான் போய் சாப்பிட போறேன்.. போய் தொலைங்க” என்றுவிட்டு செல்ல

அக்னி “ஹே இவளுக்கும் வாங்கிட்டு வாடா” என்று குரல் கொடுக்க அது காற்றில் கரைந்து போனது. ஆரு “நான் கேட்டனா உன்ன” என்று முறைக்க

அக்னி “சாப்பிடல தான நீ” என்று கேட்க அவளோ “அதுக்கு என்ன இப்போ.. சாப்பிட விட்டீங்களா இல்லல.. அதான் கிரவுண்ட்ல கதகளி ஆடிட்டு இருந்தீங்களே” என்றாள் கடுப்பாக,

அக்னி “சே சே நான் கிரிக்கெட் தான் ஆடுனேன்” என நேரம் காலம் தெரியாது காமெடி செய்ய அதில் அவனை அடிக்க சென்றுவிட்டாள்.

அக்னி “ஹே வேண்டாம் டி.. ஆல்ரெடி எரியுது” என்று அலற

“நல்லா எரியட்டும்.. உங்க மனசுல என்ன பெரிய நேருக்கு நேர் விஜய் சூர்யான்னு நினைப்பா.. எப்போ பார் முறைச்சிகிட்டே திரியுறீங்க” என்று பொரிய அவனோ எப்போதும் போல் அமைதியானான்.

ஆரு “அதான.. உடனே அமைதியாகிடவேண்டியது” என்று ஏச, அவனோ அமைதியாக மருந்திட ஆரம்பித்தான். ஆருவோ அதை பிடிங்கி “நான் அவ்ளோ கல் நெஞ்சுகாரி இல்ல” என்று மருந்திட தொடங்கினாள்.

அவளின் மௌனம் அவன் மனதை பிசைய, மௌனமாய் மருந்திட்டுக்கொண்டிருந்தவளிடம் “ஏன் அமைதியாகிட்ட” என்றான் கேள்வியாக, அவளோ “என்ன சொல்லனும்.. என்ன சொன்னாலும் கேட்டுடுவியா” என்று ஆதங்கமாய் கேட்க அதில் அவளின் மீது அழுத்தமான பார்வை ஒன்றை செலுத்தியவன் “என்னடா இப்படி சொல்லுற.. நான் என்ன கேட்கல” என்று அவள் முகம் பார்க்க அவளோ கலங்கிய கண்களுடன் “என்ன கேட்ட அகி.. எதுக்கு இந்த தேவையில்லாத பிரச்சனை உனக்கு” என்று கேட்க

“நான் ஒன்னும் பண்ணல ஆரு.. அவன் தான் அடிச்சான்” என்று எங்கோ பார்த்தபடி கூற அவனை முறைத்தவள் “ஓ நீ எதுவும் பண்ணாம தான் அவன் உன்ன இப்படி அடிச்சிருகானா” என்றவளுக்கு ஆத்ரேயன் மீதும் கோபம் அதிகரித்தது.

அக்னி “இப்போ எதுக்கு அவனுக்கு சப்போர்ட் பண்ணுற” என்று கேட்க, “கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு.. பேச்சை மாத்தாத” என்றாள் முறைப்பாக. இப்போதும் அக்னி அமைதியாய் அமர்ந்திருக்க, ஆரு “சொல்லுடா” என்று அதட்ட அவனோ “சாரி” என்றான்.

ஆரு “ஹான்.. அப்போ ஏதோ சொல்லிருக்க.. அப்படி தான” என்றிட அவனோ அவள் முகத்தை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தான்.

ஆரு “ஏன் அகி இதெல்லாம்.. நீ தேவையில்லாம எதுவும் சண்டைக்கு போக மாட்டேன்னு தெரியும்.. அப்பறம் ஏன் இவன் விஷயத்துல மட்டும் இப்படி பண்ணுற” என்று கேட்டவள் அறிவாள் அவன் நிச்சயம் இதற்கு பதிலளிக்க மாட்டானென்று.

அதற்கு மேல் எதுவும் பேசாது மருந்திட்டவள் அவனுக்கு கட்டு கட்டிவிட்டு எழுந்து செல்ல, அக்னி “ஆரு” என்றான் கரகரப்பான குரலில். அவன் குரலில் திரும்பியவள் அவனை அமைதியாய் ஏறிட, அக்னி “நான் இனி அவன்கிட்ட வம்பு வச்சிக்கல” என்றான். ஆரு உடனே “சொல்லிட்டு அப்பறம் மாற மாட்டால” என்று வினவ அவனோ அவளை பார்த்து புருவமுயர்த்தினான் அதில் “இல்ல மாற மாட்டேன்னு தெரியும்.. இருந்தாலும் மாட்டேன்னு சொல்லு” என்று கேட்க “மாட்டேன் போதுமா” என்றவன் “ஆனா” என்றிழுக்க, அவளோ புருவம் சுருக்கி “என்ன ஆனா” என்று கேட்க

அக்னி “என் வழிக்கு வந்தா நிச்சயம் சும்மா இருக்க மாட்டேன்” என்றான் இறுகிய குரலில். அவன் இவ்வளவு இறங்கி வந்ததே போதுமென இருக்க “சரி சரி” என்றுவிட்டு சென்றாள் ஆனால் பாவம் அவள் அறியவில்லை அவன் இந்த வாக்கை நிச்சயம் காக்க போவதில்லை என்று.

அதன் பிறகு அனைவரும் வகுப்பிற்கு சென்றிட ஆரு கிஷோருடன் பேசி ரேயனை வெறுப்பேத்திக்கொண்டிருந்தாள் என்றால் நேஹா அக்னியின் பக்கம் கூட திரும்பவில்லை.

நேஹாவின் பாராமுகத்தை கண்ட அக்னி மனதில் ‘போச்சு.. பெரிய பஞ்சாயத்து இருக்கு போலயே’ என்று நினைத்துக்கொண்டான்.

இங்கு ரேயன் கிஷோரை அழைக்க, கிஷோர் “என்ன” என்றான். ரேயன் “இல்ல அவ கோவமா இருக்காளோ” என்று சந்தேகமாக கேட்க அவனை கேவலமாக ஒரு பார்வை பார்த்தவன் “அச்சோ உனக்கு தெரியவே தெரியாதுல” என்று நக்கலாக கேட்க, ரேயன் “டேய் அவன் தான் வம்பிழுத்தான்.. அப்போ அவன்மேல தான கோவப்படனும்” என்று முகம் சுருக்க, கிஷோர் “அதெல்லாம் அங்க சாமி ஆடிருப்பா.. உன்கிட்ட தான் இன்னும் ஆடல” என்று அப்போதும் நக்கலாக கூற

“என் மேல தப்பில்லை.. நான் எதுவும் விளக்கம் கொடுக்க மாட்டேன்” என்று முறுகிக்கொண்டான். கிஷோர் “நேஹாகிட்ட மட்டும் எவனோ பக்கம் பக்கமா பேசுனான்” என்று நக்கலடிக்க, ரேயன் “அவ என்ன புரிஞ்சிகல சோ சொன்னேன்.. சொல்லுவேன்.. இவ என்ன புரிஞ்சிக்க மாட்டாளா” என்று கேட்டான். கிஷோர் “இவ ஏன் தம்பி உன்ன புரிஞ்சிக்கனும்” என்று விஷம சிரிப்புடன் கேட்க

ரேயன் “ஏன்னா அவ என்” என்றவன் தன்னை சுதாரித்துக்கொண்டு “பிரெண்ட்” என்றான் (ஒத்துக்க மாட்றான் பா??‍♀️).

அவன் கூறியதை கேட்டு கிஷோர் “வேஷக்கார உலகம்” என்றான் நக்கலாக.

ஆரு “என்ன பார்ட்னர் சாப்டாச்சா” என்று கிஷோரிடம் கேட்க, “சாப்பிட்டேன் பார்ட்னர்.. நீ” என்றான் கேள்வியாக. ஆரு “நான் அகி கூட சாப்பிட்டேன்” என்று கூற, அவள் கூற்றில் ஆத்ரேயன் அவளை திரும்பி பார்க்க ஆரு அவனை முறைத்துவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டாள்.

ரேயன் “திமிரு.. அகியாம் அகி” என்று பொறுமிக்கொண்டிருந்தான். (பொறாமை மட்டும் படுவானாம்.. ஆனா லவ்வை ஒத்துக்க மாட்டானாம்?)

மாலை வகுப்பு முடிந்து வீட்டிற்கு கிளம்பும் போது அக்னி “ஆரு.. நேஹாவை என்கூட வர சொல்லு” என்று நேஹாவை பார்த்தபடி கூற

ஆரு “நீயே பார்த்துக்கோ.. நான் கதிர் கூட போறேன்” என்றுவிட்டு சென்றாள். ரேயன் அவளுக்கு அழைப்பு விடுக்க அதை அணைத்துவிட்டு கதிருடன் சென்றாள். செல்லும் அவளை பார்த்து முறைத்த ரேயன் “உன்ன பார்த்துக்குறேன்” என்று பொறுமிவிட்டு கிளம்பினான்.

இங்கு நேஹா அக்னியின் வண்டியில் ஏறாமல் பேருந்திற்காக செல்ல, ‘இவ வேற ஆண்டவா..’ என்று நொந்தவன் “ஹே இரு டி” என்று அவள் பின் சென்றான்.

நேஹா அவனை கொண்டுகொள்ளாமல் இருக்க அவள் முன் வண்டியுடன் நின்றவன் “வா வீட்டுக்கு போய் சண்டை போடு.. பஸ்லாம் வேண்டாம்” என்றான்.

நேஹா “உன்கூடலாம் வர முடியாது” என சிலுப்பிக்கொள்ள அவனோ அசையாது நின்றான். நேஹா “வீட்டுக்கு கிளம்பு போ” என்க, “எனக்கு தெரியும் நீ போ” என்றான்.

நேஹா தான் பொறுக்க முடியாமல் “எதுக்கு அவனை வம்பிழுத்த” என்று கேட்க அவனோ ‘அப்படி வா வழிக்கு’ என மனதினுள் சிரித்துக்கொண்டு  “சொல்றேன் வா” என்றான். அவளும் அவனை திட்டிக்கொண்டே வண்டியில் ஏறினான்.

இங்கு ரேயனோ எப்போதும் போல் இரவு அவள் வீட்டு வாசலில் நின்றான். அவன் அடிக்கடி வருவதால் ஆருவின் வீட்டிலும் அதை வாடிக்கையாகி போக அவர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அதன் பிறகு கெஞ்சி கொஞ்சி அவளை சமாதானம் செய்திருந்தான் அந்த கள்வன்.

இப்படியான ஒரு நாளில் நிரஞ்சனாவை வீட்டில் இறக்கிவிட்ட பிரகாஷ் “கொஞ்சம் ரெஸ்ட் எடுடி” என்று அவளை அதட்ட, இன்னும் ஒரு வாரத்தில் தன் நிறுவனத்தை தொடங்க இருந்தவளுக்கோ தலைக்கு மேல் வேலை இருந்தது. “ஹான் ஓகே ஓகே” என்றவள் இறங்கி சென்றுவிட செல்லும் அவளை சிறு புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தான். சரியாக அப்போது பிரகாஷின் அலைபேசி அலற அதை புருவம் சுருக்கி ஏற்றவன் “என்ன ஆச்சு சிஸ்டர்.. இந்த நேரத்துல போன் பண்ணுற” என்று வினவ மறுமுனையில் இருந்தவளோ “வீட்டுக்கு வா.. சொல்லுறேன்” என்க

பிரகாஷ் “வீடுக்கெல்லாம் வர முடியாது.. அப்படியே வந்தாலும் வெளிய தான் நிப்பேன்னு தெரியும்ல.. ஒழுங்கா அந்த பார்க்குக்கு வா” என்றிட

அவளோ “ஏன்டா இவ்ளோ பிடிவாதமா இருக்க” என்று கடிய

பிரகாஷ் “சரி வந்திடு” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தவன், கதவை மூட வந்த ஆத்ரேயன் பார்த்து “ஹே ஹாய் ரேயா” என்க, பிரகாஷ் செல்லாமல் இருப்பதை கண்டு புருவம்சுருக்கியவன்

‘அப்போவே கிளம்பிட்டாருன்னு சொன்னா.. இவர் இங்கும் இங்கயே இருக்காரு’ என்றெண்ணியவன் பிரகாஷின் வண்டி அருகில் சென்று “என்ன எங்க வீட்டுக்கு முன்னாடி நின்னுட்டு ஹாய் சொல்லுறீங்க” என்று கேட்க, அவனை பார்த்து புன்னகைத்த பிரகாஷ் “ஒரு கால் வந்துச்சு அதான் பேசிட்டு இருந்தேன்” என்றான்.

ஆத்ரேயன் “எதாச்சு பிரோப்ளேம்மா.. உங்க முகமே சரியில்ல” என்று கேட்க

பிரகாஷ் “இப்படி என் மாமனார் வீட்டு முன்னாடி நின்னே பேசனுமா” என்று வினவ “அப்போ வெளிய போலாமா” என்றான். பிரகாஷ் “உங்க வீட்ல எதுவும் சொல்ல மாட்டாங்களா” என்று கேட்க,

“அதெல்லாம் ஒன்னுமில்ல” என்றவன் நிரஞ்சனாவிடம் கூறிவிட்டு அவனுடன் சென்றான், பிரகாஷ் “சரி.. நான் போற இடத்துக்கு வா” என்க

ரேயன் “சியூர்.. மாமா கூட வராமலா” என்றிட அவனை அதிசயமாக பார்த்த பிரகாஷ் “ரொம்ப மாறிட்ட ரேயா.. முதல எல்லாம் எண்ணி பத்து வார்த்தை தான் பேசுவ.. ஆனா இப்போ” என்று சிரிக்க, ரேயனும் சிரித்துக்கொண்டே “அப்படியெல்லாம் இல்ல” என்றான்.

பிரகாஷ் “போச்சு.. இன்னொருத்தனும் நாசமா போக போறான்” என்று புன்னகைக்க ரேயனும் புன்னகைத்தான் பின் பிரகாஷின் வண்டி செல்லும் சாலையை பார்த்தவன் ‘இது ஆரா வீடு இருக்க ரோடாச்சே’ என்று அதிர்ந்தான்.

பிரகாஷ் வண்டியை ஒரு பூங்காவின் முன் நிறுத்த, ரேயன் “எப்போவும் வர இடமா இது” என்று கேட்க, உயிர்பில்லா புன்னகை ஒன்றை உதிர்த்தவன் ‘ஆம்’ என்றான். இவர்கள் வந்த அடுத்த சில நிமிடங்களில் பிரகாஷின் தங்கை வர ரேயன் அவளை பார்த்து புருவம் சுருக்கினான் அவன் இதழோ “அம்மு” என்று உச்சரித்தது.

பிரகாஷின் அருகே இருந்த ஆத்ரேயனை புருவம் சுருக்கி பார்த்த நேஹா “நீங்க என்ன பண்றீங்க இவன் கூட” என்று கேட்க,

பிரகாஷ் “ஹே உனக்கு ரேயனை முன்னமே தெரியுமா” என்றான்,

நேஹா “ஹான்.. என்னோட கிளாஸ்மேட் தான்” என்க, பிரகாஷ் “ரேயா நீயும் சிவிலா” என்று கேட்க அவனோ மேலும் கீழும் தலையசைத்தான்.

அதன் பின் பிரகாஷ் “நேஹா தனியாவா வந்த” என்று கேட்க அவளோ “இல்ல இல்ல.. அவங்க கூட தான் வந்தேன்” என்னும் போதே அக்னியும் ஆருவும் கையில் ஐஸ்க்ரீமுடன் வந்தனர்.

நேஹா பிரகாஷ் வருவதாக கூறியவுடன் ஆரு “நானும் வரேன்” என்றவள் துணைக்கு அக்னியை அழைத்தாள். பின் நேஹாவிடம் “நீ போய் அவன்கிட்ட பாச மழை பொழி நானும் அகியும் ஐஸ்வாங்கிட்டு வரோம்” என்றவள் அக்னியை அழைத்துக்கொண்டு சென்றாள்.

இங்கு ரேயனோ ஆருவை பார்த்து விழி விரித்து நிற்க அவளோ அவனை அங்கு எதிர்பாராது இன்பமாக அதிர்ந்தாள் ஆனால் அக்னியும் மட்டும் முறைப்போடு நின்றுக்கொண்டிருந்தான். ஆரு “டேய் அண்ணா நீ அத்து கூட என்ன பண்ணுற” என்று கேட்க, பிரகாஷ் “அவன் நிருவோட தம்பி” என்று அறிமுகப்படுத்தினான் பின் ரேயனிடம் “ரேயா இது தான் என் தங்கச்சி நேஹா” என்றான்.

ரேயனோ குழப்பமாக “அப்போ அருண்” என்று குழம்ப, நேஹா “இவன் தான் அது..  அருண் பிரகாஷ்” என்றாள். பிரகாஷ் “ஏன் ரேயா உனக்கு என் முழு பெயர் தெரியாதா” என்று கேட்க அவனோ மறுப்பாக தலையசைத்து “ஜனா பிரகாஷ்ன்னு தான் சொல்லுவா.. சோ தெரியாது” என்றான். ஆரு “சரி விடுங்க.. இனி தான் எல்லாரும் ஒரே குடும்பம் ஆகியாச்சே” என்று கூற அக்னியின் முகமோ இறுகியது அதே சமயம் ரேயனின் முகமும் அக்னியை நினைத்து சுருங்கியது.

பின் பிரகாஷ் “இந்த டைம்ல எதுக்கு கூப்பிட்ட” என்று நேஹாவிடம் கேட்க,

அவள் கூறும் முன் அக்னி “உன் தங்கச்சிக்கு பெஸ்ட் ஸ்டுடெண்ட் அவார்ட் கிடைச்சிருக்கு.. அதை சொல்ல தான் கூப்பிட்டிருப்பா” என்று கூற நேஹாவோ மென்மையாக புன்னகைத்தாள். பிரகாஷ் அவளை தோளோடு அணைத்து “செம்ம டா” என்று பாராட்டினான். பின் சிறிது நேரம் நேஹாவுடன் பேசிய பிரகாஷ் “அக்னி அவங்களை வீட்ல விட்டுட்டு போடா” என்றிட, அக்னி தலையசைத்துவிட்டு சென்றான். ஆரு ஆத்ரேயனிடம் கண்களாலே விடைபெற்றுக்கொள்ள அவனும் கண் மூடி திறந்து விடைபெற்றான்.

அவர்களிடம் விடைபெற்றுவிட்டு பிரகாஷ் ரேயனை வீட்டில் விட சென்றான். செல்லும் வழியில் ஆத்ரேயன் “மாமா நீங்க ஏன் உங்க வீட்ல தங்குறதில்ல” என்று கேட்க, பிரகஷோ “பெருசா ஒன்னுமில்ல.. எல்லா இடத்துலயும் நடக்குற மாதிரி தான்.. அப்பாக்கு நான் போலீஸ்ல ஜாயின் பண்ணுறது பிடிக்கில.. அதையும் மீறி சேர போறதா இருந்தா வீட்ட விட்டு போக சொல்லிட்டாரு  அதான்” என்றிட ரேயனும் அவற்றை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தான் ஆனால் அவன் மனமோ வேறு சிந்தனையில் உழன்று கொண்டிருந்தது.

Advertisement