Advertisement

               அத்தியாயம் 11

            ஆய்வகத்தில் ஸ்வேதாவின் பேச்சினால் அக்னி ஒரு பக்கம் டம் டம் என்று டெஸ்ட் டியூப்களை உடைத்துக்கொண்டிருக்க மறுபக்கம் நேஹா டம் டம் என்ற சத்தத்துடன் உடைத்துக்கொண்டிருந்தாள்.

கதிர் “அட ச்சீ.. இங்க என்ன கச்சேரியா நடக்குது தாளம் போடுறீங்க ரெண்டு பேரும்” என முறைக்க, அக்னி குழப்பி நேஹாவை பார்த்தான்.

அவள் முகமே அவள் கடுப்பில் இருப்பதை பிரதிபலிக்க,

அக்னி “ஹே உனக்கு என்ன” என்றான்

“எனக்கு என்ன” என சிடுசிடுத்தவளை பரிவாய் பார்த்தவன்,

“ஏதோ மூட் ஆப்ல இருந்த மாதிரி இருந்தியே அதான் கேட்டேன்.. அதுக்கு ஏன் கடுப்படிக்கிற” என்று அவன் முகம் சுருக்கி கேட்க, அவன் முகம் சுருக்கியதில் தன்னை நொந்தவள் எப்போதும் போல் கோபத்தை கைவிட்டாள். அது என்னவோ அக்னி எவ்வளவு திட்டினாலும் வாங்கிக்கொள்பவளுக்கு அவனை திட்டவோ எதிர்த்து பேசவோ மனம் வருவதில்லை.

நேஹா “சாரி.. வேற ஏதோ நினைப்புல கத்திட்டேன்”

“ஏன் சாரியெல்லாம் சொல்ற.. லூசு.. என்னனு தான கேட்டேன்.. சரி விடு நான் பண்றேன் உனக்கு” என்றவனை  தடுத்தவள்,

“வேண்டாம் டா.. மேம் பார்த்தா திட்ட போறாங்க”

“அதெல்லாம் ஒன்னும் தெரியாது.. நீ விடு” என்றவனை இப்போது தடுத்தது ஸ்வேதா.

அக்னி அவளை ‘என்ன’ என்பது போல் பார்க்க,

ஸ்வேதா “அக்னி எல்லாரும் தனி தனியா தான் பண்ணனும்.. மேம் மார்க் பண்ணுவாங்க” என்று வாய்க்கு வந்ததை கூற,

அக்னி “எனக்கு என்ன பண்ணனும்ன்னு தெரியும்.. நீ சொல்ல தேவையில்ல” என்றான் முகத்தில் அறைந்தாற்போல், அதற்கெல்லாம் அசருப்பவளா அவள்.

ஸ்வேதா “இப்போ ரிசல்ட் காட்டும் போது அவகிட்ட கேள்வி கேட்டா என்ன பண்ணுவ”

“அதெல்லாம் அவ சொல்லுவா.. அவளுக்கு தெரியும்” என்றவன் அதோடு விடாது “நீ ஒன்னும் அவளுக்காக கவலைப்பட தேவையில்ல.. அதுக்கு நான் இருக்கேன்” என்று பொரிந்துவிட்டு தன் வேலையை பார்க்க,

கதிர் “மச்சா நீ வேற எரிய விடாத.. சும்மாவே பர்ன் ஆகுது” என்று அவன் ஸ்வேதாவை கலாய்க்க,

ஸ்வேதா “ஹே மைண்ட் யூர் வர்ட்ஸ்” என்றாள். அதை கேட்டு அக்னி இன்னும் முறைக்க,

“சாரி” என்றாள் கதிரிடம்.

கதிர் “அது” என்றான். அதில் அவனை முறைத்துவிட்டு அவள் சென்றிட, கதிர் தன் வேலையை தொடங்கினான்.

நேஹா “ஹே என்னடா.. அவ பண்றது கடுப்பாகுது தான் ஆனா இப்படி முகத்துல அடிக்கிற மாதிரி பேசாத.. ரொம்ப ஹர்ட் ஆகும்” என்று அக்னியிடம் கூற,

அக்னி “அவள பார்த்தா ஹர்ட் ஆகுற ஆள் மாதிரியா இருக்கு.. ஒருதங்களை பிடிச்சா இப்படி இருக்க மாட்டாங்க.. இதெல்லாம் நடிப்பு”

“ஹ்ம்ம்”

“ஆமா கடுப்பாகுதுன்னு சொன்னியே யாருக்கு” என்று அவன் தெரியாதது போல் கேட்க,

நேஹா “ஹான்.. உனக்கு தான்.. அதன் தெரியுதே பார்த்தா” என்று சமாளித்துவிட்டு கதிரிடம் சென்றிட, அக்னிக்கு தான் அவள் செய்கை சிரிப்பை வர வைத்தது.

இங்கு ஆத்ரேயனுக்கு ஆருவுடன் பேச வேண்டும் என்றிருந்தாலும் அவள் அக்னியின் மீது அத்தனை அன்பாக இருப்பது ஏனோ அவனுக்கு பிடிக்கவில்லை. இப்படி இரு பெண்கள் அவனுடன் இந்தளவு நட்புக்கொள்ளும் அளவிற்கு அவன்  பார்த்தவரை அக்னி  நல்லவனல்ல என்று ஏதேதோ சிந்தித்தவன் சிறிது நேரத்திலேயே அந்த சிந்தனையை கைவிட்டான். ஆனால் ஆருவின் நிலமையோ அப்படியே நேரெதிராக இருந்தது. அக்னியின் வார்தைக்காக அமைதியாக இருந்தாள் தான், ஆனால் ஆத்ரேயன் தானே வந்து பேசிய பிறகு அவளின் தயக்கம் மறைந்திருந்து. அவனிடம் பேசவேண்டும் என்று தான் இருந்தது அவளுக்கு. ஆனால் அவன் தான் அக்னி மீதிருந்த கடுப்பில் மீண்டும் ‘ம்ம்’ மோடிற்கு சென்றுவிட்டான்.

ஏதோ வேலை செய்துக்கொண்டிருந்த ஆரு “ஆத்ரேயன்.. இந்த கெமிக்கல்ல எதுல போடணும்”

“டியூப் 1”

“அப்போ இது” என மறு கரத்திலிருந்த இரசாயநத்தை காட்ட,

“டியூப் 3” என்றான். வகுப்பில் நன்றாக பேசியவன் மீண்டும் இப்படி பேச, ஆருக்கு  வெறுப்பாகியது.

‘சில நேரம் நன்றாக பேசுகிறான் சில நேரம் மௌனிக்கிறான்..’ அவனை புரிந்துக்கொள்ள முடியாமல் இவள் தான் முற்றிலுமாக குழம்பி நின்றாள்.

ஆத்ரேயன் அமைதியாக வேலை செய்வதை பார்த்து அங்கு வந்த ரீனா,

“ஆத்ரேயன்.. என் சொல்யூஷன் காலி ஆகிடுச்சு.. உங்ககிட்ட எக்ஸ்டரா இருக்கா” என்று நல்ல பிள்ளை போல் கேட்க, ஆத்ரேயன் ஏதோ கூற எத்தனித்தான் அதற்குள் அவன் முன் வந்து ஆரு, “அதெல்லாம் இல்ல.. எங்க மூணு பேருக்கு வேணும்” என்று மறுக்க,

அதை பார்த்த ஆத்ரேயனிற்கு சிரிப்பு தான் வந்தது ஆனால் எப்போதும் போல் அவன் அதை காட்டிக்கொள்ளவில்லை. ரீனா கேட்ட இரசாயனமுன் கிஷோர் வராததால் மீதமிருக்க அவளிடம் “இல்ல வி கென் மேனேஜ்.. இந்தாங்க” என்று அதை எடுத்துக்கொடுக்க, ரீனா ஆருவை நக்கலாக பார்த்துக்கொண்டே அதை பெற்றாள்.

ஆத்ரேயனிடம்  இரசாயனம் வாங்கியவள் அதோடு நிறுத்தாமல் ஆருவின் கையிலிருந்த டியூபையும் தட்டிவிட்டு சென்றிட, ஆரு “ஐயோ போச்சு போச்சு.. எல்லாம் போச்சு” என்று முகம் சுருங்க, ஆத்ரேயன் அமைதியாக நின்றான்.

அதில் இன்னும் கடுப்பானவள் “எதுக்கு இப்போ அவளுக்கு எடுத்துக்கொடுத்தீங்க.. இப்போ நான் எப்படி பண்ணுவேன் திருப்பி.. இதுவும் போச்சு.. டைமும் இல்ல” என பன்மையில் அவனை பொரிந்தாள் (ஆரு கோபம் வந்துவிட்டான் இப்படி தான் பன்மையில் விளிப்பாள்).

ஆத்ரேயான் “நீ கீழ போடுவன்னு எனக்கு எப்படி தெரியும்” என்று நியாயமாக கேட்க, அவனை இன்னும் நன்றாக முறைத்தவள் “நான் ஒன்னும் கீழ போடல.. அவ தான் தள்ளி விட்டா” என்றாள் குற்றம் சாட்டும் தொனியில். ஆத்ரேயன் எதுவும் பேசாது அவளை அமைதியாய் பார்க்க அதில் வெறுப்பானவள் அக்னியிடம் கேட்கலாம் என்று நினைக்க, அதற்குள் ஷாலினி சோதனைக்கு வந்திருந்தார். தன்னை நொந்துக்கொண்டு ஆரு நின்றிருக்க, ஷாலினி இவர்கள் மேசை நோக்கி வந்திருந்தார்.

ஷாலினி “ஆராத்யா உன்னோட ரிசல்ட் காட்டு” என்று கேட்க,

ஆரு “மேம் அது வந்து” என்று கூறும் முன்

ஆத்ரேயன் “தியா இந்தா காட்டு.. நான் போட்டதுக்கு நீ ஏன் உன்னோடத காட்டாம இருக்கனும்” என்றான்.

ஷாலினி புரியாமல் “என்ன ஆச்சு ஆத்ரேயன்”

ஆத்ரேயன் “மேம் சாரி.. நான் பண்ண சொல்யூஷன் கை தவறி கீழ போட்டுட்டேன்.. அதான் ஆரா எனக்கு உடம்பு முடியலன்னு அவளோடது கொடுத்தா.. அதான் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்” என்று கூற ஆரு விழி விரித்து நின்றாள்.

ஷாலினி “அட ஆராத்யா இதுல என்ன இருக்கு.. இன்னிக்கி இல்லனா என்ன அடுத்த லேப்ல பண்ணிக்கலாம்.. பட் ஆத்ரேயன், பே யூர் ப்ரெக்கேஜ் ஃபீ” என்றுவிட்டு சென்றிட, ஆரு நடப்பவற்றை புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் என்றால் ரீனாவோ ஏக கடுப்பில் இருந்தாள். பின்னே அவள் ஒன்று நினைக்க அவன் செய்ததோ வேறொன்றாக அல்லவா இருக்கிறது.

ஆரு அவனையே பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்த ரேயன் “இப்போ எதுக்கு இப்படி சிலை போல இருக்க”

“இல்ல நீங்க..” என பன்மையில்  ஆரம்பித்தவள், “நீ ஏன் இப்படி மாத்தி சொன்ன” என்று ஒருமைக்கு தாவி கேள்வி எழுப்ப,

ஆத்ரேயன் “தோனுச்சு சொன்னேன்” என்றான் உதட்டை பிதுக்கி,

ஆரு “என்ன தோனுச்சு” என்று குறுகுறு பார்வையுடன் அவனிடம் கேட்க,

“உன்னால சமாளிக்க முடியாதுன்னு தோனுச்சு..  அதான் நான் பேசுனேன்” என்றான்.

ஆரு “அதெல்லாம் இல்ல.. நானும் சொல்லிருப்பேன்”

“என்ன சொல்லிருப்ப.. சொல்லிருப்ப” என்று அவன் எகிற, சட்டென அமைதியானாள் பெண்ணவள், அவளை போலியாக முறைத்து வைத்தான்.

ஆத்ரேயன் தன் பொருட்களை எடுத்துவைத்துக்கொண்டிருக்க,

ஆரு “தேங்க் யூ”

“ம்ம் பரவால்ல” என்றான் உணர்ச்சிகள் இல்லாமல். மேலும் ஏதோ பேச வந்தவள் வெளியில் அக்னியும் கதிரும் அவளுக்காக காத்திருப்பார்கள் என்று உணர்ந்து  “ஒகே பை” என்றிட,

அவனும் “ம்ம்ம்” என்றான் (எப்பா டேய் ம்ம் தவிர வேற ஏதாவது பேசுடா.. என்னையே கடுப்பு ஏத்துறான் மை லார்ட்?).

தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு இரண்டடி வைத்தவள் மீண்டும் அவன் அருகே வந்து “ஆமா மேம் வந்தப்ப என்ன எப்படி கூப்பிட்ட” என்று கேட்க,

“ம்ம்.. நியாபகம் இல்ல” என்றவனின் மனதில் ‘தியா’ என்ற பெயர் ஓர் இனிமையை பரப்ப தான் செய்தது.

ஆரு குழம்பி “எனக்கு ஏதோ கேட்டுச்சு ஆனா நியாகமில்ல” என்று யோசிக்க,

ஆத்ரேயன் “பை” என்று அங்கிருந்து நழுவினான். ஆருவும் எதுவும் நியாபகம் வராமல் குழப்பத்துடன் நடந்தாள்.

ஆருவிடம் பேசிவிட்டு தன் காரின் அருகே வந்த ரேயன் அஷ்வினை சந்தித்தான்.

அஷ்வின் “என்ன ரேயா, இப்போ எப்படி இருக்கு”

“அதெல்லாம் ஓகே ண்ணா.. தேங்க்ஸ் பார் யூர் கன்சர்ன்” என்று கூற, அஷ்வின் சிரித்துவிட்டு “கன்சர்ன்னா.. actually ஐ லைட்” என்று உண்மையை ஒப்புக்கொள்ள,

ரேயன் “புரியல.. என்ன பொய் சொன்னீங்க” என்று குழப்ப குரலில் கேட்க,

அஷ்வின் “நீ தலைவலில இருக்க.. உன்ன எதாச்சு சாப்பிட வைக்க சொல்லி சொன்னது ஆராத்யா” என்று நடந்தவற்றை கூற, ஆத்ரேயன் விழித்துக்கொண்டு நின்றான்.

அஷ்வின் “சரி நீ இப்படியே திரு திருன்னு முழி அங்க என் ப்ரெசிடெண்ட் எனக்கு வெயிட் பண்ணுவா.. நான் வரேன்” என்று கிளம்பிவிட்டான்.

காரின் அருகே நின்று யோசனையில் இருந்த ரேயனிற்கு வாயிலின் அருகே நின்றுக்கொண்டிருந்த ஆரு தென்பட,  அவள் செய்த அனைத்தும் நியாபகம் வந்தது. அதை வைத்து அவள் என்ன செய்திருப்பாள் என்று யூகித்தவனின் முகத்தில் மென்னகை குடிக்கொள்ள, அதே மனநிலையுடன் வீட்டிற்கு திரும்பினான்.

இங்கோ வண்டியை எடுத்துக்கொண்டு வந்த அக்னி கேட்ட முதல் கேள்வி “நீ எதுக்கு அவனுக்கு கொடுத்த” என்றது தான்.

ஆரு “டேய் லூசு.. கொடுத்ததே அவன் தான் டா.. என்னோடது தான் கீழ விழுந்துச்சு”

“அவன் ஏன் உனக்கு கொடுத்தான்” என்றவவன் மீண்டும் கேட்க,

“அதை அவன்கிட்ட தான் கேட்கனும்” என்று அவள் தோளை உலுக்க, இப்போது யோசனையில் திரிவது அவன் முறையாயிற்று. ஆம் அவன் பார்த்தவரை ரேயன் தன்னுடயதை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டான் அப்படிப்பட்டவனின் இன்றைய செயல் அக்னியை வெகுவாய் குழப்பியது.

அன்றைய தினம் அனைவருக்கும் இவ்வாறு குழப்பத்திலேயே கழிந்தது.

மறுநாள் கல்லூரியில் ப்ரஷ்ஷர்ஸ் தினத்திற்காக கலை நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள தேர்வு நடைப்பெற்றது.

சிவா “பிரஷ்ஷர்ஸ் டேக்கு கல்சுரல்ஸ்ல கலந்துக்க விருப்பமுள்ளவங்க ஆடிட்டோரியத்துக்கு போய் பெயர் கொடுங்க” என்றிட,

ஆரு “வாங்க வாங்க போலாம்” என்று மூவரையும் கிளப்ப,

நேஹா “நான் வரல.. நீங்க போங்க” என்றாள்

அக்னி “ஏன்” என்ற கேள்வியுடன் அவளை நோக்க,

நேஹா “வேண்டாம் அக்னி.. எனக்கு ஸ்டேஜ்ல வந்து அசிங்க பட  ஆசையில்ல” என்றிட, அக்னிக்கு தான் அவளின் அப்பேச்சு மனதை வருந்த செய்தது. அதற்கு மேல் அவளை வற்புறுத்தாமால்,

அக்னி “சரி நாங்க பெயர் கொடுத்திட்டு வரோம்” என்றுவிட்டு செல்ல, கதிரும் அவனுடன் சென்றான்.

இங்கு கிஷோரோ ஆத்ரேயனின் காலில் விழாததே குறையாக கெஞ்சிக்கொண்டிருந்தான்.

கிஷோர் “மச்சா வாடா ஸ்கிட் ஆச்சும் போடலாம்”

ரேயன் “நான் எதுக்கும் வரல… நீ போறதா இருந்தா போ” என்று எரிந்து விழ, கிஷோர் தான் என்ன செய்வது என்று குழப்பத்தில் அமர்ந்திருந்தான்.

அக்னியும் கதிரும் முன்னே சென்றிட, பின்னால் வந்த ஆரு கிஷோரிடம் “பார்ட்னர் வாங்க போலாம்” என்றழைக்க,

கிஷோர் “நான் வரேன் பார்ட்னர். இவன் தான் எதுக்கும் வர மாட்றான்” என குறைப்பட,

“ஏன் வரல” என்று அவள் கேட்க

“விருப்பமில்லையாம்” என்றான் கிஷோர்.

ஆருவிற்கு அவனை வற்புறுத்தும் எண்ணமில்லை ஆதலால் கிஷோரிடம் “பார்ட்னர் விடுங்க.. கம்பல் பண்ணாதீங்க.. வாங்க நம்ம போவோம்” என்று அவனை மட்டும் அழைத்துக்கொண்டு சென்றாள்.

ஆத்ரேயனிற்கு அவள் அவ்வாறு புரிந்துக்கொண்டு பேசியது பிடித்திருந்தது.

இவர்கள் அனைவரும் சென்றிட, நேஹா மற்றும் சில ஆண்கள் மட்டுமே மீதமிருந்தனர்.

ரேயனிற்கு திடீரென்று இருமல் வந்தது, சிறிது நேரத்தில் அது அதிகமாகிட, அவனுக்கு பக்கத்து வரிசையில் அமர்ந்திருந்த நேஹாவிற்கு தண்ணீர் கொடுக்கலாமா வேண்டாமா என்று மனதில் ஒரு பட்டிமன்றமே நடந்தது.. இறுதியாக இதில் என்ன இருக்கிறது என்று தோன்ற, தன் கையிலிருந்த தண்ணீர் பொத்தளை அவனிடம் நீட்டி, “இதை முதல குடிங்க”

“இல்ல பரவால்ல இருக்கட்டும்”

“இருமல் குறையும்.. இதை பிடிங்க” என்று அவன் கையில் திணிக்க, அதற்கு மேல் அவளிடம் வாதிடாமல் அதை பருகினான்.

நீர் அருந்தியவுடன் அவனின் இருமல் சற்று மட்டுப்பட நேஹாவிடம் “தேங்க்ஸ்” என்றான்.

நேஹா “இட்ஸ் ஓகே” என்று புன்னகைத்துவிட்டு தன் இருக்கைக்கு சென்றாள். ரேயன் அவளிடம் பெயர் கேட்க எண்ணினான் ஆனால் கேட்கவில்லை.

ஆத்ரேயன் தன் மடிக்கணினியில் முழ்கிட, நேஹா புத்தகம் படித்தப்படி அமர்ந்திருந்தாள். அந்த நேரம் பார்த்து மூன்றாம் வருட மாணவர்கள் சிலர் பக்கத்து வகுப்பு மாணவிகளுடன் வம்பிழுத்துவிட்டு அடுத்ததாக நேஹாவை நோக்கி வர, ஆத்ரேயன் அதைகவனித்துவிட்டான்.

அவள் பெயர் தெரியாததால் அவள் அருகே சென்றவன் “அம்மு வா, உனக்கு சில நோட்ஸ் எடுக்கனும்ன்னு சொன்னல.. வா போலாம்.. என் வேலை முடிஞ்சிது” என்க,

நேஹா தான் அவன் பேசுவது புரியாமல் திருதிருவென விழித்தாள்.

அவள் முழிப்பதை கண்ட மூன்றாமாண்டு மாணவன் ஒருவன் “என்னடா சும்மா இருக்க பொண்ண எங்க கூப்பிடுற.. அவ எங்கயும் வர மாட்டா.. எங்க கூட தான் பேசிட்டு இருப்பா” என்றிட,

ரேயன் “அதை அவ சொல்லட்டும்” என்றான் திமிராக. அதில் அவனை முறைத்த சீனியர் மாணவர்கள் அவளிடம், “என்ன மா போவியா இல்ல சீனியர்ஸ் பேச்சை கேட்பியா” என்று மிரட்ட,

நேஹா “இல்ல ண்ணா.. நான் போனும்.. நோட்ஸ் எடுக்கனும்.. ரேயன் அவன் வர்க் முடிக்க தான் வெயிட் பண்ணேன்” என்று பொய் கூற, அப்போதும் அவர்கள் அவளை விட்டதாய் இல்லை.

“நீ சொன்னா நாங்க விடனுமா.. முடியாது.. டேய் நீ வேணா போடா.. அவ வரமாட்டா” என்று அவள் தோள் பற்றி இருக்கையில் அவளை அமரவைக்க, ஆத்ரேயனுக்கு கோபம் எல்லையை கண்டது. எனினும் அதை அடக்கிக்கொண்டு “நான் குமரன் சாரை கூப்பிட போறேன்” என்று ஆத்ரேயன் கூற, சீனியர் மாணவர்கள் நக்கலாக “என்ன பயம் காட்டுறியா” என்றனர்.

ஆத்ரேயன் குமரனை அழைத்து நடந்தவற்றை கூற, குமரன் “எந்த பெரியார் அது.. கொஞ்சம் போனை கொடு பா.. பேசலாம்” என்றிட, ஆத்ரேயன் இகழ்ச்சியாக உதட்டை வளைத்து அவர்களிடம் அலைபேசியை நீட்டினான்.

சீனியர் “சார் அப்படியெல்லாம் இல்ல.. சும்மா தான் பேசிட்டு இருந்தோம்.. இதோ கிளம்புறோம்” என்றவர்கள் அடுத்த நிமிடம் இடத்தை காலி செய்ய, ஆத்ரேயன் செல்லும் அவர்களை தான் இளக்காரமாக  பார்த்துக்கொண்டிருந்தான். அவன் நினைத்திருந்தால் அப்போதே அவர்களை அடித்து வீழ்த்திருக்கலாம் ஆனால் இதனால் அவள் பெயர் அடிப்பட வாய்பிருப்பதை எண்ணியே அவன் குமரனை அழைத்தான்

அவர்கள் சென்றவுடன் நேஹா “தேங்க் யூ சோ மச் ஆத்ரேயன்” என்று உணர்ந்து கேட்க,

ஆத்ரேயன் “பரவால்ல.. பயப்படாத.. மேல கை வைக்கிறான் செவில திருப்பியிருக்க வேண்டாமா”

“ஐயோ நான் பயப்படுவேன் தான்.. ஆனா திட்டலாம் செய்வேன்.. பட் அவங்க சுத்தி நிக்கவும் ஒன்னும் பண்ண முடியல.. தேங்க் யூ சோ மச்”

“சரி ஓகே ரிலாக்ஸ்.. ஒன்னுமில்ல.. பட் போல்டா இரு”

“ஹ்ம்ம் ஓகே” என்றவுடன் ஆத்ரேயன் திரும்ப,

நேஹா “என் பெயர் அம்முன்னு யார் சொன்னா” என்று வினவ,

ரேயன் “அது.. உன் பெயர் தெரியாதா அதான் டக்குன்னு தோனுச்சு அப்படி சொல்லிட்டேன்” என்றான் அசடு வழிந்தபடி

“ஹாஹா.. என் பெயர் நேஹா”

“ஆத்ரேயன்”

“எனக்கு தெரியும்”

“ஹான்.. ஆத்ரேயன்னு சொன்னல.. உனக்கு கிளாஸ்மேட் பெர் தெரிஞ்சிருக்கு.. எனக்கு தான் தெரியல” என்றவனை பார்த்து புன்னகைத்தவள்,

“எனக்கு தெரிஞ்சது.. ஆருவால” என்று நேஹா கூற,

“ஓ” என்று மட்டும் கூறினான்.

நேஹா “சரி ரேயன் பை.. நான் அப்படியே கிளம்புறேன்.. ஒன்ஸ் அகைன் தேங்க் யூ” என்று விடைபெற, ஆத்ரேயனுக்கு இது தான் தானா என்று சந்தேகமே வந்துவிட்டது. ஆம் அவன் யாரிடமும் அவ்வளவு எளிதில் பேசிவிட மாட்டான், அப்படி பேசினாலும் இரண்டு வார்த்தையில் உரையாடலை முடித்துக்கொள்பவன் ஆயிற்றே அந்த அழுதக்காரன். அப்படிப்பட்டவன் தானாகவே சென்று அவளிடம் பேசியதெல்லாம் எட்டாம் அதிசயமாக நினைத்தான்.

அக்னி கதிர் ஆரு கிஷோர் நால்வரும் அரங்கத்திற்கு சென்றனர். அங்கு அஷ்வின் ஷக்தி ஒரு பக்கம் தேர்வு செய்ய, ஜீவா ஜோஷ் மறுபக்கம் தேர்வு செய்துக்கொண்டிருந்தனர்.

ஆடல் பாடல் போன்றவற்றிற்கு ஷக்தி தலைமை என்றிருக்க, நாடகத்திற்கு ஜீவா தலைமை பொறுப்பெடுத்துக்கொண்டான். அஷ்வின் ஷக்தியுடன் அமர்ந்து கதையளுத்துக்கொண்டிருக்க, அவர்களை கண்ட ஆரு “அட நம்ம சீனியரு” என்றிட, கிஷோர் “எது நம்ம சீனியரா.. உனக்கு தெரியுமா அவரை” என்று கேட்க,

ஆரு “தெரியுமே” என்றாள்.

அக்னி யோசனையாக “எப்படி” என்று கேட்க,

கதிர் அவளை முந்திக்கொண்டு “அவளுக்கு வாயா இல்ல.. அவர்கிட்ட போய் நீங்க அழகா இருக்கீங்க, வாங்க பழகலாம்ன்னு கேட்டிருப்பா” என்று கிண்டலடிக்க,

ஆரு வெகுண்டு “நான் என்ன உன்ன மாதிரியா.. அவர் தான் என்கிட்ட வந்து பேசுனார்” என்று கெத்தாக கூற, மூவரும் அவளை நம்பாத பார்வை பார்த்தனர்.

அதில் நொந்தவள் “சரி சரி ஒத்துக்குறேன்.. நான் தான் போய் பேசுனேன்” என்று உண்மையை ஒப்புக்கொள்ள

கதிர் “நான் சொல்லல”

“வாயா மூடுடா குரங்கு” என்றாள் முகத்தை திருப்பிக்கொண்டு.

அக்னி அப்போதும் சந்தேகமாக “ஏன் பேசுன” என்று கேட்க, ஆரு திருதிருவென விழித்தாள். அவள் முழியை வைத்தும் ஆத்ரேயன் கூறியதை வைத்தும் முன்னாள் நடந்ததை கிஷோர் யூகித்திருக்க,

அவளோ “அட சும்மா தான்.. அன்னிக்கு ஸ்டேஜ்ல அவர் செம்மையா பேசுனார் அதான்.. நம்ம டிப்பார்ட்மெண்ட் வேற” என்று சமாளிக்க,

அக்னி “ஹ்ம்ம்” என்றான்.

கதிர் “மச்சா அங்க பாரு ஸ்கிட்க்கு ஜீவா நிக்குறார் டா”

“அதுக்கு”

“டேய் தங்கமே எதுவும் பிரச்சனை இழுக்காத டா”

“என்ன என்னை பார்த்தா பிரச்சனை இழுக்குறவன் மாதிரி தெரியுதா” என்று காட்டமாக கேட்க,

ஆரு “அதான.. அவன் கிடக்குறான் அகி.. நீ போ.. எதாவது பண்ணா என்கிட்ட சொல்லு” என்று இல்லாத காலரை தூக்கிவிட்டபடி கூற, அக்னி சிரித்துக்கொண்டே அவள் தலையை ஆட்டியவன், “நீ போய் நல்லா பண்ணு.. டேய் உனக்கும் தான்” என கதிரிடம் கூறியவன் ஜீவாவின் பக்கம் செல்ல, கிஷோர் தான் அவர்களை வியப்பாக பார்த்துக்கொண்டிருந்தான்

அக்னியும் கிஷோரும் ஜீவாவின் பக்கம் செல்ல, ஆருவும் கதிரும் அஷ்வின் பக்கம் சென்றனர்.

ஆரு “ஹாய் சீனியரே”

“ஹே ஜூனியர் வா வா” என்று அஷ்வின் வரவேற்க, ஷக்தி அஷ்வினிடம் “உனக்கு இவளை தெரியுமா” என்று கேட்க,

ஆரு “அட அக்கா உங்களுக்கு என்ன தெரியுமா” என ஆர்வமாக கேட்க அதை பார்த்து புன்னகைத்த ஷக்தி “ம்ம் நல்லாவே தெரியும்.. அஷ்வின் நான் சொன்னேன்ல அன்னிக்கு ஒரு பொண்ணு உன்ன சூப்பர்ன்னு சொன்னான்னு, அது இவ தான்”

“அட அப்படியா.. என்ன ஜூனியரே என்கிட்ட சொல்லவே இல்ல” என்று கேட்க, ஆரு நாக்கை கடித்துக்கொண்டு “ஈஈஈ.. உங்களுக்கு என்ன.. நீங்க ஒரு ஹீரோ மெட்டீரியல்” என்று புகழ,

ஷக்தி “அப்போ நான்”

“ஐயோ அக்கா.  நீங்க தான் லேடி சூப்பர் ஸ்டார் இந்த காலேஜ்க்கு” என்று அளந்துவிட, ஷக்தி சிரித்துக்கொண்டே “வாய் பயங்கரமா தான் இருக்கு” என்றாள் கிண்டலுடன்.

அஷ்வின் “ஆமா உன் ஆளு எப்படி இருக்காப்புல” என்று எதர்ச்சியாக கேட்டிட, ஆரு கதிரின் பின் நின்று ‘கேட்காதே’ என்று கண்காட்ட,

கதிர் அதை கண்டுக்கொண்டு “ஹே.. எதுக்கு இப்போ அவருக்கு கண் காட்டுற.. எந்த பையன் பின்னாடி போனா ண்ணா” என்று அவளை முறைத்தபடி அவன் அஷ்வினிடம் கேட்க,

ஆரு இப்போ பலமாக ‘வேண்டாம்’ என்று தலையசைத்துவிட்டு சமாளிப்பாக “ஹிஹி.. அது அன்னைக்கு பார்த்தோம்ல ஆர்க்கி பையன்.. அவனை தான் சொல்றாரு” என்றிட,

அஷ்வினும் ஷக்தியும் அவளிடம் பின்னர் பேசவேண்டும் என நினைத்துக்கொண்டு நின்றிருந்தனர்.

கதிர் “திருந்தாத.. என்ன டேஸ்ட்டோ.. என் ஆள பாரு.. தேவதை.. சுஜா” என்று கனவில் மிதந்தபடி கூற,

ஷக்தி “இந்த பெயரை நான் எங்கயோ பார்த்திருக்கேன்.. எந்த டிப்பார்ட்மெண்ட் டா” என்று கேட்க,

ஆரு “ஹான்.. அதெல்லாம் நம்ம டிப்பார்ட்மெண்ட் தான்”

அஷ்வின் “நம்ம டிப்பார்ட்மெண்ட்டா.. உங்க கிளாஸா”

ஆரு “ம்ம்.. எங்க கிளாஸ் தான் ஆனா ஸ்டுடெண்ட் இல்ல ப்ரொபசர்” என்றிட,

ஷக்தி அதிர்ந்து “டேய்.. சுஜாதா மேமையா சொல்ற.. பாவி”

“ஈஈஈ.. ஆமாக்கா” என்று வெட்கப்பட்டவனை பார்த்து தலையில் அடித்துக்கொண்டு அஷ்வின் “அட கருமம் பிடிச்சவனே.. யங் ஸ்டாஃப்ன்னு சொன்னா கூட ஒத்துக்கலாம்.. ஆண்டி டா” என்று அவனை பார்க்க,

கதிர் “இருந்தாலும் அழகு ண்ணா” என்றான். அதில் மற்ற மூவரும் தலையில் அடித்துக்கொள்ள, கதிர் அசடு வழிந்தான்.

ஆரு “அவனை விடுங்க.. நீங்க ரெண்டு பேரும் அப்பறமா உங்க லவ் ஸ்டோரிய சொல்லணும் சரியா” என்றிட, ஷக்தியும்  அஷ்வினும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு “கண்டிப்பா” என்றனர்.

அதன் பிறகு சில பல பரஸ்பர பேச்சுவார்த்தைகள் நடந்துக்கொண்டிருக்க,

பிரபு தான் தீனாவிடம் “இங்க ஆடிஷன் பண்ண சொன்னா அங்க நின்னு வெட்டி கதை அடிச்சிட்டு இருக்கான்” என தலையில் அடித்துக்கொள்ள, தீனா சிரித்துவிட்டு “அதான் அந்த ராங்கி கூட இருந்தா அவன் உலகத்தையே மறந்திடுவானே”

“ஹான்.. அதுவும் உண்மை தான்” என்றவன் ஆடிஷனை தொடர்ந்தான்.

ஜீவா மாணவர்களுக்கு ஒரு காட்சி கொடுத்து நடித்துக்காட்ட கூறி தேர்வு செய்துக்கொண்டிருந்தான்.

அக்னியும் கிஷோரும் வரிசையில் நிற்பதை பார்த்து,

ஜோஷ் “டேய் உன் xerox டா.. வச்சு செய்யலாமா” என்று கேட்க, ஜீவா அவனை முறைத்துவிட்டு “செலக்ஷன் பொறுப்ப என்ன நம்பி அஷ்வின் கொடுத்திருக்கான்..   இங்க வேற எதுவும் உள்ள வர கூடாது” என்று கண்டிப்பாக கூறிவிட, அவனும் அமைதியானான்.

சரியாக அக்னியின் முறை வர,

ஜீவா “அக்னி.. உனக்கான ஸீன் என்னனா.. நீ ஒரு பெரிய பிசினஸ் மேக்னட் ஆனா நீ காதலிக்குற பொண்ணு உன் கம்பெனில வேலை செய்யிற சாதாரண ஸ்டாஃப். உங்க அம்மா ஸ்டேட்டஸ் பார்க்குறவங்க.. ஒரு நாள் உன் ப்ரொஜெக்ட்டால பெரிய   லாஸ் ஆகிடுது, அந்த கோபத்தை நீ உன்னோட லவர் கிட்ட காட்டிடுற அதே நாள் உன் அம்மாவுக்கு உன் லவ் மேட்டர் தெரிஞ்சு  பிரச்சனை ஆகுது.. இப்போ நீ எப்படி ரியாக்ட் பண்ணுவ. ரம்யா உன் கூட நடிப்பா. உன் லவர் பெயர் கிருத்தி, அம்மா பெயர் ஷில்பா.. ரெண்டு ரோலும் ரம்யா பண்ணுவா” என்றிட, ஜோஷ் அவனிடம் ஸீன் பேப்பரை நீட்டினான்.

ஜோஷ்வா கிஷோர் அவனை ஆர்வமாக பார்க்க, அக்னி அமைதியாக அந்த காகிதத்தில் இருந்ததை உள்வாங்கினான்.

தொடரும்..

Advertisement