Advertisement

                      அத்தியாயம் 7

அக்னியுடன் வந்த ஆருவை ஆத்ரேயன் உணர்ச்சிகளற்று பார்த்துக்கொண்டிருந்தான். கிஷோர் ஆத்ரேயனிடம் “மச்சா உன் பட்டத்துராணி எதிரி நாட்டு இளவரசி போல” என நக்கலடிக்க,
ஆத்ரேயன் அவனை தீயாய் முறைத்தான். கிஷோர் ‘அவளை இவன் கூட சேர்த்துவச்சு பேசுனதுக்கு முறைகிறானா இல்ல அவன் கூட சேர்த்துவச்சு பேசுனதுக்கு முறைகிறானா’ என தீவிர சிந்தனையில் இறங்கினான்.

அன்றைய நாளின் காலை வகுப்புகள் அமைதியாகவே செல்ல மாலை வந்த குமரன் அவர்களை ஆய்வகத்திற்கு வருமாறு கூறிவிட்டு சென்றார். ஆரு அக்னியை ஒரு பார்வை பார்த்துவிட்டு செல்ல, அக்னிக்கு தான் காதில் புகை வந்தது.

தங்களை நோக்கி வரும் ஆருவை கவனித்த கிஷோர் ஆத்ரேயனிடம் “மச்சா ஐ திங்க்” என ஏதோ கூற வரும் முன் ஆரு அவர்களை நெருங்கி “ஹாய்” என்றாள்,
கிஷோர் சிரித்துக்கொண்டே “இதை தான் நினைச்சேன் மச்சா” என்றவன் அவளிடம் “ஹாய்” என்றான்..
அதுவரை கோபமாக இருந்த ஆத்ரேயன் கூட அவள் வரவில் அதை மறந்தே போயிருந்தான் ஆனால் அவளிடம் அவன் எதுவும் பேசவில்லை.

ஆத்ரேயன் “யாரெல்லாம் நம்ம குரூப்” என கிஷோரிடம் கேட்க, ஆரு முந்திக்கொண்டு “நீங்க.. அப்பறம் நீங்க.. ஸ்ருதி அப்பறம் நானு”என இருவரையும் சுட்டிக்காட்டி கூறினாள்.
கிஷோர் “அப்படியா.. நானுக்கு பெயர் என்ன”
“உங்க பெயர் என்னன்னு உங்களுக்கே தெரியாதா.. அப்போ கிஷோர்ன்னு யார் அட்மிஷன் போட்டா அப்பாவா..” என அவள் பொறுப்பாக சந்தேகம் கேட்க,
கிஷோர் அவளை காட்டி “இந்த நானுக்கு பெயர் என்னன்னு கேட்டேன் டா அறிவு குழந்தையே”
ஆரு “ஓ.. என் பெயரா.. ஆரா.. ஆராத்யா” என கை நீட்ட,
“ஹாலோ குழந்தை.. நான் கிச்சா.. கிஷோர்”
“ஓ.. கிச்சா சுதீப் மாதிரி கிச்சா கிஷோர்ரா.. நல்லா இருக்கே”
“கிஷோர்.. சுருக்கமா கிச்சா”
“ஆன் அது” என இவர்கள் பேசிக்கொண்டிருக்க, ஆத்ரேயன் தான் அவள் தன் பெயரை கேட்பாளா என எதிர்பார்த்துக்கொண்டிருந்தான்.

ஆருவின் வெகுளித்தனம் கிஷோருக்கு பிடித்திருந்தது, அதுவும் அவள் பேசும் போது ஆத்ரேயனை பார்த்துக்கொண்டே பேசியது அவனுக்கு சிரிப்பை தான் உண்டாக்கியது.

ஆரு “ஆமா இந்த ஸ்ருதி எங்க.. அவளும் நம்ம டீம்ல” என அவளை தேட,
“தெரியலையே” என உதட்டை பிதுக்கினான் கிஷோர்.
ஆரு சுற்றி பார்த்துவிட்டு சிவாவிடம் “ரெப் ஜி.. ஸ்ருதியை காணோம்” என கேட்க,
சிவா “அவ இன்னிக்கி வரல.. சோ அட்ஜஸ்ட் கரோ” என்றுவிட்டு சென்றிட,
“ஒகே ஜி” என்றவள் இவர்களின் புறம் திரும்பினாள்.
கிஷோர் “எம்மா.. எல்லார்கிட்டயும் பேசிட்டியா என்ன”
“இல்ல கிச்சா.. இவன் கிட்ட இன்னிக்கி காலைல தான் பேசுனேன்.. பேசிடலாம் எல்லார்கிட்டயும் என்ன இப்போ” என்றாள் அசட்டையாக.

இவர்கள் பேசுவதை கேட்டும் கேட்காதது போல் ஆத்ரேயன் நின்றுக்கொண்டிருக்க,
கிஷோர் “எப்பா இங்க நாங்க என்ன செவித்துகிட்டயா பேசிட்டு இருக்கோம்.. ஒரு புள்ள இவ்ளோ பேசுதே.. செவிடு மாதிரி இருக்கியே டா டேய்”
“எது.. என்ன” என அவன் பேசியது சரியாக கேட்காததால் அவன் கேட்க,
கிஷோர் “ஒன்னுமில்ல தங்கம்.. நாம் முன்னாடி இருக்க இந்த கிறுக்கு பயல சொன்னேன்” என்றவன் முன் மேசையை எட்டி உதைக்க, முன் மேசையில் அமர்ந்திருந்த ஆதி “ஏன் ப்ரோ.. ஏன் உதச்சீங்க”
“எனக்கு கழுத பால் கொடுத்தாங்க டா தம்பி அதான் இப்படி… மன்னிச்சிரு தம்பி”
“ஓ அப்படியா ப்ரோ.. இனி பசும் பாலே குடிங்க.. குட் கேல்சியம்” என அப்பாவியாக கூறியவனை கேட்டு ஆரு உருண்டு பிரண்டு சிரித்தாள்.

அவள் சத்தமாக சிரிப்பதை கேட்டு அக்னி திரும்பி பார்க்க, அவள் கிஷோருடன் தான் பேசிக்கொண்டு சிரிக்கிறாள் என புரிந்துக்கொண்டவன் சற்று நிம்மதியாகி முன் சென்றான்.
நேஹா “டேய் கதிரே.. இங்க எங்கயோ எரியுற வாசனை வரல” என அக்னியை பார்த்துக்கொண்டே கூற,
கதிர் “கொஞ்சம் இல்ல.. ஒரு காடே எரியுது” என அவனும் வார, ஸ்வேதா (அக்னியை சைட் அடிப்பவள்) “எனக்கு அப்படி எந்த வாசனையும் வரலேயே அக்னி”
நேஹா “சொன்னது நாங்க.. நீ  அவன்கிட்ட போய் தலைய விடுறியேமா”
“ஏன் அவர்கிட்ட பேச கூடாதா.. ஏன் நீங்க பேசவே மாட்றீங்க அக்னி” என இவர்களிடம் தொடங்கி அக்னியிடம் முடிக்க,
நேஹாவும் கதிரும் ஒரே குரலில் “சொல்லுங்க அக்னி..சொல்லுங்க” என்று அவனை கலாய்க்க,
அக்னி “இருக்குற கடுப்புல அரஞ்சிட போறேன்” என்று ஸ்வேதாவிடம் எரிந்து விழுந்தவன் லேப்பிற்கு சென்றான்.

இது தான் அக்னி கோபம் வந்தால் அதை உடனே காட்டிவிடுவான் அதன் பின் தான் யோசிப்பான். ஆத்ரேயன் அப்படியே நேரெதிர் கோபம் வந்தால் அமைதியாகிவிடுவான்.

அக்னி திட்டியதில் ஸ்வேதா அமைதியாகிவிட நேஹாவும் கதிரும் சிரித்தனர்.
“என்ன சிரிப்பு இப்போ உனக்கு” என அக்னி நேஹாவை முறைக்க,
நேஹா “நான் எங்க அகி சிரிச்சேன்.. ச்ச ச்ச.. நான் போய் உன்ன பார்த்து சிரிப்பேனா” என முகத்தை பாவமாக வைத்துக்கொள்ள அடுத்து கதிரை பார்த்தான், அவனோ “மச்சா ஏன் முறைகிற.. வா லேப் போவோம்.. அங்க போய் இன்னும் நல்லா முறை சரியா.. வா செல்லக்குட்டி போவோம்” என அவனை இழுத்துக்கொண்டு சென்றான்.

ஆய்வகம் செல்லும் வழியில் கிஷோர் “ஆமா ஏன் பெயர் கேட்டியே.. நம்ம டீம்ல இருக்க இவன் பெயர் தெரியுமா” என முன்னே சென்றுக்கொண்டிருந்த ஆத்ரேயனை கைகாட்ட,
ஆத்ரேயன் மனதில் ‘அவ சும்மா இருந்தாலும் இவன் சும்மா இருக்க மாட்டான் போல’ என கிஷோரை அர்ச்சித்தான்.

ஆரு “ஹான் தெரியுமே.. அத்து” என்றவள் பின் நாக்கை கடித்துக்கொண்டு “ஆத்ரேயன்” என்றாள்.
கிஷோர் “முதலயும் சரியா தான் சொன்ன.. எப்படி தெரியும்” என சிரித்துக்கொண்டே கேட்க, அவன் பெயர் அறிய அவள் செய்த குரங்குத்தனங்களை சொல்லவா முடியும் அதனால் சமாளிப்பாக
“அது சார் கூப்பிடுற அப்போ கேட்டேன்” , இதுவரை பேராசிரியர் யாரும் அவனை பெயரிட்டு அழைக்கவில்லையே என கிஷோர் யோசிக்க,
ஆரு “ஏன் இல்லாத மூளைக்கு வேலை கொடுக்குறீங்க.. வாங்க பார்ட்னர் போவோம்”
“எதே பார்ட்னர்ரா.. சரி நல்லா தான் இருக்கு.. இருந்தாலும் கேப்ல என்ன ஏதும் கலாய்க்கலயே”
“ச்ச ச்ச நெவர்”
“அப்போ சரி” என கிஷோர் நடக்க, இவர்கள் அலப்பறையை தாங்க முடியாமல் ஆத்ரேயன் முன் நடந்தான்.

ஆரு “ஐயோ அவங்க போறாங்க.. வாங்க போவோம்”
“ஆமா ஆமா அவன் தான் எக்ஸ்பிரிமெண்ட்லாம் பண்ணனும்.. மச்சா இரு டா” என இருவரும் அவன் பின் விரைந்தனர்.

குமரன் “பசங்களா இவங்க தான் ஷாலினி மேம்.. இந்த லேப்ல எல்லாம் இவங்க தான்.. இது நமக்கு மெயின் லேப் இல்ல அதனால எதையாவது போட்டு உடைச்சு வைக்காதீங்க டா” என கூறிக்கொண்டிருக்கும் போதே சரியாக அக்னி ஒரு டெஸ்ட் டியூபை உடைத்தான், எல்லாம் அந்த ஸ்வேதாவின் நச்சரிப்பில் தான்.

குமரன் “சிங்கம் 2.. நோ டா கண்ணா.. அந்த அமௌண்ட் இப்போவே உன் கணக்குல சேருகிறது.. மொத்தமா எக்ஸாம்க்கு முன்னாடி கட்டிடு” என்றுவிட்டு சில பல அறிவுரைகளை கூறினார்.

அக்னியின் கோபத்தில் முகம் சுருக்கிய ஸ்வேதா “இப்போ நான் என்ன தப்பா கேட்டுட்டேன்.. உங்க முழு பெயர் என்னன்னு கேட்டேன்.. அது தப்பா”
அக்னி பல்லை கடித்துக்கொண்டு “கொஞ்சம் சும்மா இருக்கியா..” என்று அதட்டினான். இவர்கள் இருவரின் நடுவில் புகுந்த நேஹா ஸ்வேதாவிடம் “எம்மா ஏன்மா.. அவன் முழு ஜாதகமே நான் தரேன்.. கொஞ்சம் சும்மா இரு” என்றிட, இப்போது அக்னியின் தீ பார்வை இவளை நோக்கி பாய்ந்தது.
நேஹா தான் தன்னை நொந்துக்கொண்டு “முறைக்காதா அகி.. உன் ஜாதகம் என்கிட்ட இல்லடா.. சும்மா சொன்னேன்” என முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு கூற, அக்னி சிரித்துவிட்டான். நேஹாவின் மூக்கை பிடித்து செல்லமாக ஆட்டியவன் “கோபப்படல போ”
“ஹப்பா.. உன்ன சிரிக்க வைக்கிறதுக்குள்ள.. முடியலடா சாமி” என்றவளின் முகமும் புன்னகையில் மலர்ந்திருந்தது. நேஹா பேசும் போது மட்டும் சிரித்த அக்னியை பார்த்த ஸ்வேதா “இப்போ மட்டும் சிரிக்கிறீங்க” என முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு கேட்க,
நேஹா “ஹான்.. தங்கதுர புக் படிச்சிட்டு வந்து ஜோக் சொல்லு சிரிப்பான்.. போ மா நீ வேற” என கூறியவள் கதிரை தேட, அவனோ முன் வரிசை மாணவிகளுடன் கடலை போட்டுக்கொண்டு இருந்தான்.

அதில் கடுப்பனவள் தன் பையை கொண்டு அடிக்க,
கதிர் “ஸ்ஸ்.. ஏன் டி.. எதுக்கு அடிச்ச” என தலையை தேய்துக்கொண்டே கேட்க, அவனை முறைத்தவள் “ஏன்டா இங்க ஒரு மனுஷி செத்து சுண்ணாம்பா போறேன்.. உனக்கு ரொமென்ஸ் கேட்குதா.. அதுவும் ரெண்டு பொண்ணுங்களோட”
“இட்ஸ் யூர் பேட் டா குட்டிமா”
நேஹா “செருப்பாலயே அடிப்பேன்.. இரு ஆசிட் எடுத்து வாய்ல ஊத்துறேன்” என அவனை முறைத்துக்கொண்டு திரும்பினாள்.

குமரன் “பசங்களா இது நமக்கு மேஜர் கிடையாது அதனால ரொம்ப சிம்பிள்ளா தான் இருக்கோம் நல்லா கவனிச்சு பண்ணுங்க.. டிபார்ட்மெண்ட் மானத்தை வாங்கிடாதீங்க டா” என்றுவிட்டு செல்ல,
ஷாலினி “ஒகே எல்லாரும் வந்து இப்படி நில்லுங்க.. நான் பண்றத பார்த்துட்டு நீங்க பண்ணுங்க.. ஏதாவது சந்தேகம் இருந்தா கேட்டுக்கோங்க” என்றவர் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்க,
ஆத்ரேயன் மற்றும் கிஷோரின் நடுவே நின்றிருந்த ஆரு “பார்ட்னர் கெமிஸ்ட்ரி பிடிக்கும்”
“எனக்கு ஸ்டடீஸ்ல எஸ் கூட பிடிக்காது பார்ட்னர்.. எனக்கு மியூசிக் தான் இன்டர்ஸ்ட்”
“வாவ்.. செம்ம.. இன்ஸ்ட்ருமெண்ட்லாம் வசிப்பிங்களா”
“ஆன்.. கிட்டார், கீபோர்ட், வயலின்.. கொஞ்சம் பாடுவேன்”
“ஹைய்ய்ய் சூப்பர்.. அப்பறமா பாடி காட்டுங்க எனக்கு”
“கண்டிப்பா.. ஆனா நீ ஏன் என்ன வாங்க போங்கன்னு கூப்பிடுற”
“தெரியலயே.. ஏதோ உங்கள பார்த்தா பெரிய ஆள் மாதிரி இருக்கு”
“கிழவன் மாதிரியா இருக்கேன்”
“இல்ல இல்ல.. நான் அப்படியெல்லாம் யாருக்கும் மரியாதை தர மாட்டேன் ஆனா உங்களுக்கு மட்டும் தானா வருது.. ஏன்னு தெரியல”
“சரி விடு.. ஆனா போக போக போய்டும்”
“உண்மை தான்” என இவர்கள் வலவலத்துக்கொண்டிருக்க,
ரேயன் “கொஞ்சம் அங்கயும் கவனி” என்று கிஷோரிடம் கூறவிட்டு அவளை ஒரு பார்வை பார்த்தான் உடனே ஆருவும் அமைதியானாள்.
கிஷோர் ‘பார்ரா அவன் சொன்ன உடனே அமைதியாகிட்டா’ என அவளை பற்றி நினைத்தவன் அதை மனதில் குறித்தும் கொண்டான்.

ஷாலினி செயல்முறை விளக்கத்தை கூறிவிட்டு மாணவர்களை செய்து காட்டும் படி கூறினார். அனைவரும் அவரவர் இடத்திற்கு சென்றனர்.

நேஹா அவள் குழுவிலிருந்த நால்வருக்கும்  டெஸ்ட் டியூப் எடுத்துக்கொண்டு வர, ஆத்ரேயன் இரண்டு டெஸ்ட் டியூப் எடுத்துக்கொண்டு வந்தான்.

ஆத்ரேயன் வருவதை பார்த்து ஆரு “அப்போ எனக்கு” என வினவ
கிஷோர் “டேய் அவளுக்கு யாருடா எடுப்பா.. இரு மா நான் கொண்டு வரேன்” என்று ஒரு அடி எடுத்து வைக்க, ஆத்ரேயன் தன்  பாக்கெட்டில் இருந்ததை எடுத்துக்கொடுத்தான்.
“இதை முன்னாடியே கொடுத்திருக்கலாம்.. சரி ஹீரோ மெட்டிரியல்லாம் இப்படி தான் பண்ணும் போல”
“அதுயெல்லாம் உங்களுக்கு தெரியாது” ,நம்ம ஆரு தான்.
கிஷோர் “எது எது”
“இல்ல நீங்க மியூசிக் டைரக்டர்ல அதான் உங்களுக்கு தெரியாதுன்னு சொன்னேன்”
“இருந்தாலும் நீ சரியான கேடி தான்”
“ஈஈஈ”
“சரி ரொம்ப இளிக்காத.. வா பண்ணுவோம்” என்றவன் அதன் பின் செயல்முறையை தொடங்கினர்.

அக்னியின் மேசையும் ரேயனின் மேசையும் அருகருகே தான் இருந்தது ஆனால் ஆட்கள் செல்லும் அளவிற்கு பிரித்து வைக்கப்பட்டிருந்தது.

அக்னி நேஹாவிற்கும் கதிருக்கும்  சேர்த்தே செய்து வைத்திருந்தான். நேஹா எப்படியோ தானே செய்துமுடித்துவிட அக்னி நேஹாவிற்கு செய்ததை ஸ்வேதாவிடம் கொடுத்தான்.
ஸ்வேதா “வாவ்.. ரொம்ப தேங்க்ஸ் அக்னி”
“நான் நேஹாக்கு பண்ணேன் உனக்கில்ல” என்றிட, அவளும் விடாது
“ஆனா இப்போ எனக்கு தான கொடுத்தீங்க”
“அவ பண்ணிட்டா அதான் எதுக்கு வேஸ்ட் பண்ணனும்ன்னு கொடுத்தேன்”. அப்போதும் அவள் அடங்காமல் “வேண்டாம்னா கீழ கொட்டிட வேண்டியது தான.. எனக்கு ஏன் கொடுத்தீங்க” என அவனை ஆழம் பார்க்க, அவள் கையிலிருந்ததை பிடுங்கியவன் அதை குப்பையில் கொட்டினான், இதை பார்த்த ஸ்வேதாவிற்கு தான் சப்பென்று இருந்தது, அக்னி அவளுக்காக தான் செய்தேன் என கூறுவான் என்று எதிர்பார்த்தவளுக்கு அவனின் செயல் கடுப்பை கிளப்பியது. அக்னி செய்ததை பார்த்த நேஹா “டேய் டேய் பாவம் டா அவ”
“அவள வாய மூட சொல்லு.. இல்லனா நடக்குறதே வேற” என்றுவிட்டு கதிரின் அருகே சென்று நின்றுக்கொண்டான்.

இங்கு ஆத்ரேயன் கிஷோரிடம் “டேய் எருமை ஒழுங்கா பண்ணுடா.. இப்படி பண்ணு” என அவனுக்கு அதை விளக்கிக்கொண்டிருந்தான். சரியாக அப்போது அங்கு வந்த ரீனா ஆருவை நக்கலாக பார்த்துக்கொண்டே அத்துவிடம் சந்தேகம் கேட்க, அவனும் அதை விளக்கினான்.

இதை பார்த்துக்கொண்டிருந்த  ஆருவிற்கு தான் இரத்த அழுத்தம் எகிறியது. ரீனாவை எரிக்கும் பார்வை பார்த்துக்கொண்டிருந்தாள். ஆருவின் பார்வையை கவனித்த கிஷோர் ரீனாவை பார்க்க, அவளோ ஆத்ரேயனை பார்வையால் விழுங்கிக்கொண்டிருந்தாள்.

கிஷோர் “பார்ட்னர் அவளை ஓட விடலாமா” என ஆருவிடம் கேட்க, அவளோ கண்களை விரித்து “நிஜமாவா” என கேட்க,
கிஷோர் “ஆமா”
ஆரு “ரெடி”
“பார்ட்னர் இந்த ரியேஜன்ட் எங்க போடணும்”
“இங்க” என ஆரு ஒரு டெஸ்ட் டியூபை நீட்ட,
கிஷோர் “ஓ.. சரி அப்போ நீ போடு நான் பிடிச்சிக்கிறேன்” என்றவன் அவள் ஊற்றும் வரை காத்திருந்தான் பின் ரீனாவின் பக்கம் சென்றவன் அதை வேண்டும் என்றே அவள் மீது தவரவிட்டான்.
ரீனா “ஓ சிட்”, கிஷோர் போலியாக பதறிக்கொண்டு “சாரிங்க நான் கவனிக்கில” என மன்னிப்பு வேண்ட, ஆத்ரேயன் இருந்ததால் அவர்களை எதுவும் செய்ய முடியாமல் முறைத்துக்கொண்டே சென்றுவிட்டாள்.

ரீனா சென்றதை பார்த்து கிஷோரும் ஆருவும் ஹை பை அடித்துக்கொள்ள, ஆத்ரேயன் அவர்களை புரியாமல் பார்த்தான்.
கிஷோர் “ரேயா இனி அவகிட்ட பேசுற வேலை வச்சிக்காதா”
“ஹே என்ன.. நான் ஒன்னும் அவகிட்ட பேசல.. பேசாம இருந்தா தேவையில்லாத பேச்சு வரும் அதான்”
“இருந்தாலும்”
“வாய மூடு” என்றவன் தன் வேலையை செய்ய தொடங்கினான்.

கிஷோர் பேசியதை கேட்டு ஆரு அவனிடம் “பார்ட்னர் எனக்கு ஒரு சந்தேகம்”
“ஆரம்பிச்சிடியா.. சரி கேளு”
“ஏன் அவர்கிட்ட பேச வேண்டாம்ன்னு சொன்னிங்க”
“நான் ஒன்னு சொல்றேன் ஆனா தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத” என்றவன் அன்று அவள் பேசியதை ஆத்ரேயன் கேட்டதாக கூற ஆரு திருட்டு முழி முழித்தாள்.
கிஷோர் “ஹே இப்போ எதுக்கு இப்படி பேயரஞ்ச மாதிரி இருக்க”
“போச்சா.. அப்போ நான் பேசுன எல்லாமே கேட்டுட்டானா”
“எஸ்.. இப்போ எனக்கு ஒரு சந்தேகம்”
“ம்ம் கேளுங்க”
“உனக்கு அவன் மேல க்ரஷ்ஷா.. அன்னிக்கும் நோட் பண்ணேன்”
“இல்ல இல்ல.. சும்மா தான்” என அவள் மழுப்பலாக பதில் கூறினாலும், ஆத்ரேயனின் மீதான ஆருவின் விருப்பத்தை அவன் அறிந்தே இருந்தான்.

ஒரு மணி நேரம் ஓடிவிட,
ஷாலினி “எல்லா குரூப்பும் உங்க ரிசல்ட்டை காட்டுங்க” என்றிட ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒருவர் வந்து முடிவுகளை காட்டினர். அக்னியின் குழுவில் அக்னியும் ஆருவின் குழுவில் ரேயனும் வந்து காட்டினர். என்னதான் அவர்கள் பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்தாலும்  அவர்கள் பார்வையில் அனல் தெறித்தது.

இவர்கள் முறைத்துக்கொண்டே திரிவதை பார்த்த ஆரு “ஏன் பார்ட்னர் இவனுங்க எதுக்கு இப்படி முட்டிக்கிறாங்க”
“அது வந்து” என இழுக்க
“அட சொல்லுங்க பார்ட்னர்.. எப்படியோ என்கூட இருக்குறவனும் சொல்ல மாட்டான்”
“அது” என கிஷோர் ஆரம்பிக்கும் முன் அங்கு வந்த ஆத்ரேயன்
“டேய் கிளம்பு, போலாம்”
“வாவ்.. அவ்ளோதானா.. சரி போவோம்.. பை பார்ட்னர்.. இன்னொரு நாள் சொல்றேன்” என்றிட, அவளும் பை என்றுவிட்டு டெஸ்ட் டியூபை சுத்தம் செய்தாள்.

ஒரு டியூபின் முனை சற்று கூர்ராக இருந்தது அதை கவனிக்காமல் ஆரு சுத்தம் செய்ய, அது அவள் கையை பதம் பார்த்தது.
“ஸ்ஸ்ஆஆ” என அவள் வலியில் முகம் சுருக்க,
கிஷோர் “பார்ட்னர் என்ன ஆச்சு” என பதற, ஆத்ரேயனும் அவளை தான் பார்த்தான்.

அவள் அலறும் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்னி அவள் விரலில் இரத்தம் வழிவதை கண்டு அவள் கையை தன் கைக்குட்டை கொண்டு பிடித்தவன் “அறிவில்லையா ஆரு.. பார்த்து பண்ண மாட்டா.. வா என்கூட”
“அகி ஒன்னுமில்ல டா.. லைட்டா தான்”
“வாய மூடிட்டு வா போலாம்” என அவளை அதட்டி இழுத்துக்கொண்டு சென்றான், அவளோ ஆத்ரேயனை பார்த்தபடி வெளியேறினாள்.

அவள் பார்வையின் அர்த்தம் புரியாமல் அவன் தான் குழம்பி நின்றான்.

Advertisement