Advertisement

                 அத்தியாயம் 23

அவனின்றி நானில்லை என்றவள் இன்று அவன் யாரோ நான் யாரோ என்கிறாள்…

இரவு ஆத்ரேயனை தொடர்ந்து சென்றிருந்தனர் கிஷோரும் கதிரும். சரியாக இவர்கள் கடற்கரைக்கு செல்லும் போது ஆரு தன் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்புவது தெரிய,

கிஷோர் “என்னடா.. என்னாச்சு

இதுங்களுக்கு” என்று குழப்பமாக கேட்க

கதிர் “எதுவும் ஆகிருக்காது.. அவ பேசியிருக்க கூட மாட்டா.. அவளை பத்தி தெரியும்.. சோ இவன் கத்திருப்பான் அவ கிளம்பிருப்பா” என்று தோளை உலுக்க

கிஷோர் “இதுங்களுக்கு கலகம் மூட்டி அந்த பிரச்சனைய ஒரு முடிவுக்கு கொண்டு வரலாம்னு பாத்தா இதுங்க என்னடா இப்படி பண்ணுது” என்றபடி தலையை பிடிக்க அவன் தோளை தட்டி கொடுத்த கதிர் “விடுடா.. இனி எப்படியும் இவங்கள மீட் பண்ண வைக்க தான போறோம் அப்போ பாத்துக்கலாம்” என்று சமாதானம் செய்துவிட்டு அவனை விடுதிக்கு அழைத்து சென்றான்.

மறுநாள் காலை எப்போதும் போல் அழகாய் புலர, ஏ.ஆர். குரூப்ஸ் வழமை போல் பரபரப்பாக காணப்பட்டது ஆனால் இரண்டு ஜீவங்களோ ‘வாழ்வே மாயம்’ என்ற ரீதியில் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தது (வேற யாருமில்லங்க நம்ம ராகுல் சுஷ்மி தான்).

ஊட்டி பிரதேசத்தில் சிறகை விரித்து பறந்துகொண்டிருந்த இருவரை கை கால்கள் கட்டிப்போடாத குறையாய் சென்னை அழைத்து வந்திருந்தான் கிஷோர்.

ராகுல் “ஏன் டி.. ஏன் நமக்கு இந்த நிலைமை” என வராத கண்ணீரை துடைக்க, சுஷ்மியோ “சென்னை வெயில்ல நம்ம சிக்ஸ்டி ஃபை ஆகுறது உறுதி” என்று புலம்பினாள்.

ராகுல் “அதுமட்டுமில்ல.. இனி ஹாஸ்டல் சாப்பாடு.. நாக்கு செத்து போக போகுது” என்று வருந்த

“ஐயோ” என்று இருவரும் கோரசாக ஒப்பாரி வைத்தனர்.

சரியாக இவர்கள் புலம்பிக்கொண்டிருக்கும் போது அங்கு வந்தான் அவர்களின் ஆபத்பாண்டவன், கிஷோர்.

கிஷோரை கண்ட ராகுல் “அது எப்படி திமிங்கலம்.. எங்களுக்கு ஒரு பிரச்சனைனா கரெக்ட்டா வந்து நிக்குறீங்க” என்று அதிசயம் போல் கேட்க

கிஷோர் “எல்லாம் என் தலையெழுத்து.. சரி ஓகே நீங்க ஹாஸ்டல்ல தங்குறதுகான தேவையானதெல்லாம் முடிஞ்சிது.. இப்படி சடன்னா உங்களை டிரான்ஸ்பர் பண்ணதால உங்க முதல் மூணு மாசத்துக்கான ஹாஸ்டல் செலவை பாஸே பார்த்துக்குவாரு.. அண்ட் எல்லாம் செட்டில் ஆன அப்பறம் உங்களுக்கு போனஸ் கொடுக்குறேன்னு சொல்லிருக்காரு” என்று ரேயன் கூறியதை தெரிவிக்க

சுஷ்மி “யார் பெற்ற மகனோ அவர் யார் பெற்ற மகனோ” என்று சிலாகிக்க

“மிஸ்டர் கண்ணன் பெற்ற மகன்” என்றவன் “போய் வேலைய பாருங்க போங்க” என்று அவர்களை விரட்டிவிட

ராகுல் “அண்ணே.. உங்களுக்கு ஊட்டிய விட்டுட்டு இங்க வர்ரது பிடிச்சிருக்கா என்ன.. நீங்களும் டிரான்ஸ்பர் ஆகிருக்கீங்க” என்று என்று வினவ அதில் லேசாக இதழ் பிரித்தவன் “என் பேமிலி இங்க தான் இருக்காங்க” என்றான்

சுஷ்மி “அப்போ நீங்க சென்னையா” என்று அதிர்ந்தவளுக்கு இது புது தகவலே.

கிஷோர் “எதுக்கு இப்போ இவ்ளோ ஷாக் ஆகுற.. சண்டே உங்களுக்கு ஊர சுத்தி காட்டுறேன் இப்போ போய் வேலைய பாருங்க” என்றவன் ரேயனின் அறைக்கு சென்றான்.

ரேயன் கணினியை இயக்க அவன் முன் வந்த கிஷோர் “ஊட்டி ப்ரான்ச்சை மூர்த்தி சார் ஓவர்டேக் பண்ணிட்டாரு.. இனி நீங்க இங்க தான் இருக்க போறீங்கன்னு அபிசியலா இன்பார்மும் பண்ணியாச்சு” என்க

“குட்” என்றான்.

கிஷோர் “எவ்ளோ நாள் ஹோட்டல்யே இருக்க போறீங்க” என்று மரியாதையுடன் கேட்க ரேயன் அவனை நிமிர்ந்து பார்த்தான், ‘இந்த லுக்குக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல’ என மனதினுள் அவனை அர்ச்சித்தவன் ” சொல்லு ரேயா.. எங்க இருக்க போறோம்” என்று வினவ

“ஒரு வீடு வாடகைக்கு எடுத்திருக்கேன்” என்றான் சாதாரணமாக.

கிஷோர் தான் அதிர்ந்து “நீ பண்றது உனக்கே நல்லா இருக்காடா.. அங்க தான் அப்படி இருந்த.. இங்க வந்த அப்பறமும் அப்படி தான் இருப்பியா.. அவங்க கூட தான் இருக்க மாட்ட ஆனா உங்க வீடே எத்தனை இருக்கு.. அதுல ஒரு வீட்ல இருந்தா என்ன.. அப்படி என்ன அடம் உனக்கு” என்று கோபத்தை அடக்கிய குரலில் கேட்க

“ஏன் கிச்சா சென்னைல ஒரு வீடு வாடகைக்கு எடுக்குற அளவுக்கு எனக்கு வசதியில்லன்னு நினைக்கிறியா” என்று கோபம் கலந்த நக்கல் குரலில் கேட்க

கிஷோர் “எனக்கு என்னமோ நீ தப்பு..” என்று கூறி முடிக்கும் முன் ஒரு கரம் நீட்டி அவனை தடுத்த ஆத்ரேயன் “எடுத்த உடனே எதையும் தெரிஞ்சிக்காம அப்படி தூக்கி போடுற ஆள் நானில்ல.. அதுவும் என்ன பெத்தவர தூக்கி போடுற அளவுக்கு” என்று அடிக்குரலில் சீறியவன் கதவை அறைந்து சாத்திவிட்டு செல்ல அவன் செல்வதை வெறுமையாக பார்த்தவன் மனதில் ஒரு எண்ணம் தோன்ற உடனே அதை செய்து முடித்தவன் அங்கிருந்து அகன்றான்.

**************

காலை ஆறு மணிக்கே எழுந்த நேஹா கண்டது என்னவோ நீள்விருக்கையில் கைகளை கட்டியபடி உறங்கும் அக்னியை தான். போர்வை கூட போர்த்தாது குளிரில் உறங்குபவனுக்கு போர்வையை போர்த்தியவள் அவன் நெற்றியில் லேசாக இதழ் ஒற்றி ‘சீக்கிரம் பழைய அகியா மாறுடா’ என மானசீகமாக அவனிடம் பேசியவள் மெத்தையை சரி செய்துவிட்டு வெளியேறினாள். (குடும்பமே இப்படி தான் போல??‍♀️??‍♀️)

தோட்டத்திற்கு வந்தவளின் மனம் என்றுமில்லாது இன்று லேசாக இருந்தது. அது தன்னவனின் அருகாமை மட்டுமே தரும் நிம்மதி என்பதையும் அவள் அறிந்தே இருந்தாள்.

தோட்டத்தில் வேதாச்சலம் செடிக்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருக்க  ஜாக்கி ஒரு பந்தை முட்டிக்கொண்டு அதனுடன் விளையாடிக்கொண்டிருந்தான்.

செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருந்த வேதாச்சலம் நேஹாவை பார்த்துவிட்டு “நேஹாமா எழுந்துடியா.. இருமா நான் போய் டிப்பன் ரெடி பண்றேன்” என்று உள்ளே நுழைய எத்தனிக்க அவரை தடுத்தவள் “நான்.. நான் பண்றேன் இன்னிக்கி… நீங்க இருங்க” என்க அதில் சற்று தயங்கியவர் “இல்லமா.. தம்பி ஏதாவது” என்றிழுக்க

“அவன் எழுந்திரிகிறதுக்கு முன்னாடி நான் கிளம்பிடுவேன் ண்ணா” என்றவள் அவனுக்காக அவனுக்கு பிடித்த உணவை தயார் செய்தாள். தன்னவனுக்கு பார்த்து பார்த்து சமைத்தவள் உணவை தயார் செய்துவிட்டு தோட்டத்திற்கு வந்து வேதாச்சலத்திடம் “அண்ணா நீங்களும் சாப்பிடுங்க.. அப்பறம் அவனுக்கு ஜூஸ் போட்டு வச்சிருக்கேன் அதை முதல கொடுங்க.. நேத்து நைட் கொஞ்சமா தான் சாப்பிட்டான் அதான்” என்றிட வேதாச்சலம் அவளையே தான் பார்த்துக்கொண்டிருந்தார்,

நேஹா “என்ன ண்ணா.. ஏன் அப்படி பார்க்குறீங்க” என்று புரியாமல் கேட்க

“இல்லமா, தம்பி உன்ன போய் புரிஞ்சிக்காம இருக்கே” என்று உண்மையான வருத்ததுடன் அவர் கூற அவரை பார்த்து வலி நிறைந்த புன்னகையை சிந்தியவள் “என்ன புரிஞ்சிக்கிற ஒரே ஆள் அவன் தான் ண்ணா.. நான் தான் அவனை புரிஞ்சிக்காம கஷ்ட படுத்திட்டேன்” என்றவள் ஒரு பெருமூச்சுடன் “வரேன் ண்ணா” என்றுவிட்டு கிளம்பினாள்.

நேஹா பேசிய அனைத்தையும் கதவின் பின் நின்று கேட்ட அக்னி அமைதியாக அறைக்குள் முடங்கினான். எப்போதும் போல் அலுவலகம் செல்ல தயாராகி வந்தவனிடம் வேதாச்சலம் “தம்பி சாப்பாடு எடுத்து வைக்கட்டா” என்று வினவ “இல்ல ண்ணா.. வேலை இருக்கு” என்று மறுத்துவிட்டு கிளம்பியவனுக்கு அவள் செய்த உணவை சாப்பிடும் அளவிற்கு தைரியம் இருக்கவில்லை.

ஏ. ஆர். குரூப்ஸில் கணினியில் புதைந்திருந்த ஆத்ரேயனின் முன் வந்த விஷ்ணு “சார் உங்களை பார்க்க ரெண்டு மேடம் வந்திருக்காங்க” என்று தகவல் தெரிவிக்க அவனை குழப்பமாக ஏறிட்டவன் “ரெண்டு மேடம்மா.. யாரு” என வினவ உதட்டை பிதுக்கிய “தெரியல சார்” என்றவன் உண்மையாகவே அவர்களை அறிந்திருக்கவில்லை.

ரேயன் “சரி உள்ள அனுப்பு” என்றவன் தன் கணினியை அணைத்துவிட்டு அமர்ந்திருந்தான். விஷ்ணு சென்ற இரண்டு நிமிடங்களில் கதவு தட்டப்பட “எஸ் கம் இன்” என்று வரவேற்றவனுக்கு அதற்கு பின் வார்த்தைகள் எழவில்லை.

வாசலில் நின்ற தன் அன்னை மற்றும் சிற்றன்னையை கண்டவன் இருக்கையிலிருந்து எழ அவனை முறைத்த வேணி “இந்த பேக் ரெஸ்பெக்டெல்லாம் வேண்டாம் எம்.டி. உட்காருங்க” என்று கூறவும் கிஷோர் ரேயனின் அறையினுள் நுழையவும் சரியாக இருந்தது.

ஷோபனா அமர்ந்திருப்பதை கண்டவன் “ம்மா.. சின்ன தாய்.. எப்படி இருக்கீங்க ரெண்டு பேரும்” என்றபடி அவர்கள் இருவரையும் தோளோடு அணைத்துக்கொண்டான்.

ஷோபனா “கிச்சா எப்படிடா இருக்க” என்று வாஞ்சையாக அவன் தலை கோத எப்போதும் போல் ரேயனை ஒரு பார்வை பார்த்தவன் “ஏதோ இருக்கேன் மா” என்றான்.

ரேயன் ‘ஓ இவங்களுக்கு தகவல் அனுப்பினது நீ தானா’ என்ற ரீதியில் கிஷோரை முறைக்க அவன் பார்வையை எதிர்கொண்ட கிஷோரும் ‘சாக்ஷாட் நானே’ என்ற ரீதியில் பார்த்து வைத்தான். பின் கிஷோரே “என்ன சின்ன தாயு பதிலே காணோம்.. என்ன ஏன் கண்ணாலயே எரிக்கிறாங்க” என்று கேட்க

“டேய் போதும்.. ஓவரா பொழியாத” என்று அவன் வாயை அடக்க முயல அதில் நெஞ்சில் கை வைத்தவன் “தாயே.. என்ன இப்படி சொல்லலாமா” என பாவமாக கேட்க

“போட டேய்.. போய் உட்காரு.. நாங்க இங்க டைம் வேஸ்ட் பண்ண வரல.. சில விஷயம் பேசிட்டு போக தான் வந்தோம்” என ரேயனை பார்த்தபடி கூற அவனும் இருக்கையில் சாய்ந்தபடி அவர்களை தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

ஆறு வருடங்களுக்கு முன் அவர்கள் பார்த்தவன் இவன் அல்ல, அவன் முகத்தில் தெரிந்த முதிர்வு அவன் செயலிலும் இருந்தது.

ரேயன் ஷோபனாவிடம் பேசாமலில்லை ஆனால் ரேயன் ஆறு வருடங்களாக வீட்டுற்கு வராமல் அவர்களை ஒதுக்குவது தான் அவர்களுக்கு வருத்தமாக இருந்தது.

ஷோபனா “எப்படி இருக்க ரேயா” என்று கலங்கிய கண்களுடன் கேட்க அவனோ அவர்களை காணாது எங்கோ பார்த்தபடி “நல்லா இருக்கேன் மா” என்றான்.

வேணி “செவுறுகிட்ட பதில் சொல்லுறீயா..நேரா பார்த்து பேசு” என்று அதட்ட உடனே அவரை பார்த்தான்.

கிஷோர் ‘அப்படி வாடா டேய்.. உனக்கெல்லாம் சின்ன தாயி தான் சரி’ என மனதில் நினைத்து சிரித்துக்கொண்டான்.

ரேயன் “சொல்லுங்க சித்தி.. என்ன விஷயம்” என தொண்டையை செருமியபடி கேட்க

“நீ ஒன்னும் என்ன அப்படி கூப்பிட வேண்டாம்.. இங்க வந்திருக்கிறது கே.எஸ் அண்ட் எஸ்.வி குரூப்ஸ் ஓட ஜி.எம் ரெண்டு பேர் அவ்ளோ தான்” என்று கண்டிப்பாக கூற அவரை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவன் மேசை நோக்கி முன்னுக்கு சாய்ந்து “சொல்லுங்க மேம்.. என்ன விஷயம்” என்று அந்த மேம்மில் அழுத்தம் கொடுக்க

வேணி ‘திமிரு பிடிச்சவன்’ என அவனை மனதில் வறுத்துவிட்டு “உங்க ஊட்டி பிரான்சை விட்டுட்டு இங்க வந்திருக்கீங்கல அதான் விஷ் பண்ணிட்டு போக வந்தோம்” என்க

“தேங்க்ஸ்” என்றான் மிதப்பாக.

ஷோபனா “அப்போ நாங்க கிளம்புறோம் ரேயா.. உன்ன பார்க்க வந்தேன் பார்த்துட்டேன்”  என்றவருக்கு தெரியும் இதற்கு மேல் அவன் பெரிதாக எதுவும் பேசிவிட்டு மாட்டானென்று. வேணி அவனை முறைத்துக்கொண்டே எழுந்துகொண்டார்.

ரேயன் “மா” என்றழைக்க, ஷோபனா அவனை திரும்பி பார்த்தார். தன் அன்னையை தோளோடு அணைத்தவன் “சாரி.. டேக் கேர்” என்க ஷோபனா அவனை பார்த்து சிறுநகை உதிர்த்தார்.

ரேயன் திரும்பி வேணியை பார்க்க அவரோ முகத்தை வெட்டி திருப்பிக்கொள்ள அவரை பார்த்து மென்னகை புரிந்தான்.

வேணியோ “வாங்க க்கா போலாம்” என்று ஷோபனாவை அழைத்துக்கொண்டு சென்றிட, அவர்கள் செல்வதை பார்த்த ரேயனின் மனமோ லேசாக இருந்தது.

அவர்கள் செல்லும் வரை சிறு முறுவலை இதழில் படரவிட்டவன் அவர்கள் பின்பம் மறைந்த மறுநொடி முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு கிஷோரின் சட்டையை பிடித்து “எதுக்குடா அம்மாகிட்ட சொன்ன” என்று சீற

“என்ன சொன்னேன்” என்றான் கேள்வியாக

“எதுக்கு அம்மாகிட்ட நான் இங்க வந்ததை சொன்ன” என்று பல்லை கடித்துக்கொண்டு வினவ

“அம்மான்னு சொன்னல அதான் சொன்னேன்.. நீ வேணும்னா கல்லு மாதிரி அவங்கள பார்க்காம இருக்கலாம் ஆனா அவங்க பாவம்.. அதான் சொன்னேன்.. அவங்க சந்தோஷம் தான் என் சந்தோஷம்.. வேற எவன் எப்படி போனா எனக்கு என்ன” என்றவன் அவன் கையை தன் சட்டையிலிருந்து எடுத்து விட

ரேயன் “போடா வெளிய.. லூசு” என்று சீற

“இருக்கும் டா இருக்கும்.. லூசு மாதிரி தான் இருக்கும்.. பக்கி பைய” என்று முணுமுணுத்தபடி தன் சட்டையை சரி செய்தான்.

ரேயன் “ஒரு நிமிஷம்” என்க

“என்னவாம்” என்று கிஷோர் அவனை ஏறிட

“எனக்கு இந்துவ பாக்கனும்” என்றான் சிறு குரலில்.

கிஷோர் “பாக்கனும்னா போய் பாரு.. என்கிட்ட ஏன் சொல்லுற.. இந்துவ பாக்கனும் போந்துவ பார்க்கனும்னு” என்று நக்கலடிக்க

“எனக்கு அவளை பார்க்கனும்னு சொன்னேன்” என்றான் பல்லை கடித்து

கிஷோர் “லேக்ஸ் காலேஜ்ல ப்ரொபசரா இருக்கா.. காலேஜ் இங்கிருந்து ஒரு அஞ்சு கிலோமீட்டர்” என்று ஒப்பிக்க

“ம்ம்” என்றான்.

கிஷோர் “என்ன பார்த்த கூகுள் மாதிரி இருக்கு போல” என முணுமுணுக்க

“ஆமா” என்றவன் சிறு முறுவளோடு கணினியில் மூழ்க  கிஷோர் அவனை முறைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.

ஜேபி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. ஒன்பது மணிக்கு வரவேண்டியவளோ பத்தரை மணிக்கு தான் அலுவலகம் வந்திருந்தாள். கணினி முன் அமர்ந்திருந்தவளின் பார்வை என்றுமில்லாது இன்று வெறுமையாக தத்தெடுத்திருக்க நேற்றைய நிகழ்வுகளின் தாக்கத்திலிருந்து அவள் இன்னும் மீண்டாளில்லை.

வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்த ஆராத்யாவின் முன் வந்த சித்து “ஜிஎம் ஜி.எம்” என்க

“ஒருவாட்டி கூப்பிட்டாலே எனக்கு காது கேட்கும்” என்றாள் கணினியை பார்த்தபடி

“ஒரு வாட்டி தான் கூப்பிட்டேன்.. குட் மார்னிங்க்கு இன்னோரு ஜிஎம்” என்று பல்லை காட்ட

“சப்பா.. காலைலயே ஆரம்பிக்காத.. ஆல்ரெடி தலை வலிக்கிது” என்றாள் தலையை பிடித்த்துக்கொண்டு.

சித்து “தலைவலியா.. கௌதம் உன் கேபின் பக்கமே வரலையே ஆரா” என்று தாடையில் கைவைத்து யோசிப்பது போல் பாவனை செய்ய அதில் வெளிப்படையாகவே அவனை முறைத்தவள் “அவன் வந்தா என் தலை வலிக்காது.. வெடிச்சிடும்” என்று இருபக்கமும் சலிப்பாக தலையசைக்க அதை கேட்ட சித்து வாய் விட்டு சிரித்தான்.

அவன் சிரிப்பில் இன்னும் வெறியானவள் “இப்படி சிரிக்க தான் இங்க வந்தியா” என்று போலியாக முறைக்க அதில் தன் சிரிப்பை அடக்கியவன் “அதுக்காகவும் தான் ஆனா வேற ஒரு விஷயமும் இருக்கு” என்றான் பீடிகையுடன்.

ஆரு “என்ன விஷயம்” என விழி இடுங்க கேட்க சித்து “நான் வேலைய விட்டு போறேன்” என்றான் எவ்வித உணர்வுகளையும் முகத்தில் பிரதிபலிக்காது. இது தான் சித்து, எவ்வளவு கலகலப்பாக இருப்பானோ அதே அளவு தன் உணர்வுகளை பிறருக்கு வெளிகட்டாது மறைப்பதில் வித்தகன்.

ஆராத்யா தான் அவன் கூற்றில் அதிர்ந்து “ஏன்.. எதுக்கு” என்று கேள்வி எழுப்பியவாறு இருக்கையிலிருந்து எழ

சித்து “எனக்காக பீல் பண்றியா என்ன” என்றான் கேலியாக கை கட்டியபடி, ஆரு “பீல்லா.. அப்படியெல்லாம் இல்ல.. திட்ட ஆள் இல்லாம போயிடுமே அதான் கேட்டேன்.. நத்திங் மச்” என்று சாதாரணமாக அவள் கூறினாலும் இந்த சில ஆண்டுகளில் அவளை உயிர்ப்புடன் வைத்திருப்பவன் ஆயிற்றே அவன் அதுவுமில்லாமல் அவன் மீது அவளுக்கு தனி பாசம் இருக்க தான் செய்தது.

சித்து “உனக்கு இல்லாம இருக்கலாம்.. எனக்கு இருக்கு, கௌதம் கிட்ட சொல்லிட்டு உன்கிட்ட தான் சொல்ல வந்தேன்” என்றவனுக்கு ஆரு எப்போதும் நல்ல தோழியே.

ஆரு “இப்போ ஏன் போற.. அதை சொல்லு” என்று வினவ

“உண்மைய சொல்லனுமா” என்றான் கேள்வியாக அதில் அவனை முறைத்தவள் “பொய் சொன்னா பல்ல தட்டி கையில கொடுப்பேன்” என்றாள்.

அவள் கூறியதை கேட்டு சிரித்தவன் “அம்மா அப்பா ஊட்டில இருக்காங்கன்னு தெரியும்ல.. அப்பாக்கு இப்போ கொஞ்சம் உடம்பு சரியில்ல அண்ட் இனி பெட் ரெஸ்ட் தான் எடுக்கனும்னு டாக்ட்ர் சொல்லிட்டாங்க.. அதான் அப்பவோட பேக்டரிய பார்த்துக்க போறேன்.. இங்க ரிசைன் பண்ணிட்டேன்” என்று உதட்டை பிதுக்க

ஆரு “அதெல்லாம் சரி ஆனா இது உனக்கு பிடிச்ச வேலையாச்சே” என்று நல்ல தோழியாய் அவள் வினவ, சித்து பதில் கூற வாய் எடுக்கும் முன் அங்கு வந்த கௌதம் “வாழ்க்கைல முதல் முறை சென்சிபிலா பேசிருக்க” என்று அவளை வார, ஆரு அவனை அனல் தெறிக்க பார்த்தாள்.

எப்போதும் போல் அவள் பார்வையை அலட்சியம் செய்த கௌதம் “நீ அங்க போய் உன் அப்பா பேக்டரி பாரு ஆனா அதை மட்டுமே பார்க்கனும்னு அவசியமில்ல.. ஊட்டில ஒரு கம்பெனில வெகென்சி இருக்கு.. உன்னோட டிடெயில்ஸ் அனுப்பி அவங்க மேனேஜர்கிட்ட பேசிட்டேன்.. நீ அங்க போய் ஜாயின் பண்ணிக்கலாம்” என்று பெரிதாக கூறி முடிக்க சித்து அவனை விழி விரித்து பார்த்தான்.

சித்து “ஏன்டா இதெல்லாம்” என்று கேட்டாலும் நண்பன் தனக்காக இவ்வளவு செய்ததை நினைத்து அவன் மனம் நெகிழாமல் இல்லை.

கௌதம் “போடா டேய்.. நானும் வரேன் உன்கூட.. நானும் அப்பாவை பார்க்கனும்” என்று கூற ஆருவுக்கும் அவர்களுடன் செல்ல வேண்டும் போலிருந்தது ஆனால் அதை கூற தயக்கமாகவும் இருந்தது.

ஆருவின் முகத்தை வைத்தே அவள் எண்ணவோட்டத்தை கண்டு கொண்ட கௌதம், அவள் தயங்குவதை கண்டு “கூட வரேன்னு யாராச்சு சொல்லிட போறாங்க, இங்க இன்னும் பெண்டிங் வேலை நிறைய இருக்கு” என்று கூற அதில் கௌதமை முறைத்தவள் “நானும் வரேன் சித்து.. காலெல்லாம் பேசிட்டு வரலனா நல்லா இருக்காது.. அண்ட் சில பேருக்கு வேலை பெண்டிங்ல இருக்குன்னு தெரியுதுல.. அப்போ மூடிட்டு இங்க இருந்து வேலைய பார்க்க சொல்லு” என்றாள் நக்கலாக.

கௌதம் தோளை உலுக்கிக்கொண்டு “அப்போ மூணு டிக்கெட் போடுறேன்” என்று கூறிவிட்டு செல்ல, செல்லும் அவனை பார்த்தவள் “இரிடேட்டிங்” என்றாள்.

கௌதமை தடுத்த சித்து “டேய் ஒரு நிமிஷம்.. அந்த கம்பெனி பெயர் சொல்லவே இல்லையே” என்று அவன் முகம் பார்க்க

“ஏ.ஆர். குரூப்ஸ்” என்றான்.

ஏ.ஆர். குரூப்ஸ் என்ற பெயரை கேட்டவுடன் பெண்ணவளின் மனம் முழுவதும் ஒரு வலி பரவியது. யாரை அவள் வேண்டாம் என்று ஒதுக்கினாளோ அவனே மீண்டும் மீண்டும் அவள் சிந்தையை ஆட்கொள்கிறான் அல்லவா.

கௌதம் கூறியதை கேட்டு அதிர்ந்தவள் அதை வெளிக்காட்டி கொள்ளாது  “ஏன் வேற கம்பெனியே இல்லையா.. அதெல்லாம் நீ அங்க ஒன்னும் போக தேவையில்ல.. போய் உன் அப்பா பேக்டரிய மட்டும் பாரு” என்று மறுத்தவளை கேவலமாக ஒரு லுக் விட்ட கௌதம் “அவன் எங்க போகனும்னு நீ சொல்லாத” என்று கண்டிக்க

ஆரு “அதே தான் நானும் சொல்லுறேன்.. அவன் எங்க போகனும்னு நீ முடிவு பண்ணாத” என்று கத்தினாள் அதில் லேசாக இதழ் பிரித்த கௌதம் “ஏன் சித்து அந்த கம்பெனிக்கு போக மாட்ட” என்று வினவ

“அது நம்ம கம்பெனி மாதிரி பெரிய கம்பெனியாச்சே.. ஏன் ஆரா வேண்டாம்னு சொல்லுற” என்று புரியாமல் கேட்டான்.

ஆரு “அதெல்லாம் இல்ல.. உனக்கு அந்த கம்பெனி வேண்டாம்.  நான் சொன்னா கேட்க மாட்டியா சித்து” என்று கேள்வியெழுப்ப அதில் கடுப்பான கௌதம் “காரணம் சொல்லு.. சும்மா குதிக்காத” என்று கூற அவன் வார்த்தைகளோ தேவையின்றி அக்னியை நினைவு படுத்தியது. ஒரு நிமிடம் கண் மூடி திறந்தவள் “உனக்கு சொல்லவேண்டிய அவசியமில்ல” என்று கௌதமிடம் முகத்தில் அறைந்தார் போல் கூறிவிட அவன் தோளை உலுக்கிக்கொண்டு நின்றான்.

சித்து “ஆரா.. ரீசன் சொல்லு நான் போகல.. நான் கேட்ட வரை அது ஒன் ஆப் தி பெஸ்ட் கம்பெனிஸ்” என்றிட

ஆரு “அந்த கம்பெனி பாஸ் சரியான திமிர் பிடிச்சவன்.. இதுல அது நல்ல கம்பெனியாம்” என்று வசைப்பாட

சித்து “யாரு மிஸ்டர் ஆத்யன்னா.. ஐ மீன் ஆத்ரேயன்.. அவரு ரொம்ப நல்லவர்ன்னு கேள்வி பட்டேன்” என்று கூற அதில் பல்லை கடித்தவள் “வெளிய என்ன சொன்னாலும் நம்புவியா” என்றாள் சீறலாக. ஆரத்யாவையே பார்த்துக்கொண்டிருந்த கௌதம் “அப்போ உனக்கு அவரை பத்தி தெரியுமா” என்று எள்ளலாக வினாவ, அதில் தடுமாறி தான் போனால் பெண்ணவள். அவள் தடுமாற்றம் கூட சில வினாடிகளே..  உடனே தன்னை சமன் செய்தவள் “எனக்கு எப்படி தெரியும்” என்றாள்,

சித்து “அப்போ ஏன்டி வேண்டாம்னு சொல்லுற” என்று முறைக்க

ஆரு “ஏதோ பண்ணுங்க” என்றுவிட்டு அங்கிருந்து வெளியேறினாள்.

சித்து “என்னடா இவ இப்படி சொல்லிட்டு போறா” என்று புரியாமல் கேட்க

கௌதம் “அதெல்லாம் அவ புரிஞ்சிக்குவா.. நீ வா போலாம்” என்று அவனை அழைத்துக்கொண்டு சென்றான்.

இங்கு அலுவலகத்தில் அமர்ந்திருந்த அக்னியின் நிலையோ கவலைக்கிடமாக இருந்தது. மனம் முழுவதும் குழப்பமே எஞ்சியிருக்க அவன் தலையோ வெடித்துவிடும் அளவிற்கு வலித்தது. காபியாவது அருந்தலாம் என்று வெளியில் வந்தவன் அவன் முன் அரங்கேறிய காட்சியில் அக்னியாய் எரிந்துக்கொண்டிருந்தான்.

அக்னியின் அலுவலகத்தில் வேலை செய்யும் பிரணவ் நேஹாவின் மேசைக்கு அருகில் அமர்ந்துகொண்டு அவளிடம் வழிந்துக்கொண்டிருப்பதை கண்டு அவன் இரத்த அழுத்தமோ விண்ணை தொட்டது. நேஹாவின் மேசைக்கு இருபக்கமும் பெண்கள் அமரும் படி அமைத்ததே அவன் தான்.

பிரணவ் கடந்த ஆறு மாதங்களாக நேஹாவை ஒரு தலையாக காதலித்துக்கொண்டிருக்கிறான் என்பதை கடந்த சில நாட்களுக்கு முன் கண்டுக்கொண்ட அக்னிகோ அவனை பார்த்தாலே எரிச்சலாக இருந்தது.

நேஹாவின் மேசைக்கு முன் அமர்ந்திருந்த பிரணவின் பின் கை கட்டி நின்ற அக்னியின் வருகையை கவனிக்காமல் பிரணவ் “நேஹா சனிக்கிழமை ப்ரீயா இருக்கீங்களா.. வெளிய போலாமா” என்று கொஞ்சலாக கேட்க

நேஹா “சாரி.. ஐ ஹேவ் வர்க்” என்றாள்.

பிரணவ் “ஏன் அன்னிக்கு லீவ் தான.. ஏன் வர்க்.. வங்களேன் போலாம்” என்று கேட்க அவன் பின் நின்ற அக்னியோ “வேணும்னா நான் வரவா.. ஐ அம் ப்ரீ” என்று குரலில் கேலி இழைந்தோட கேட்க அவன் குரலில் திடுக்கிட்டு திரும்பிய “சார்” என்றான் மிரண்டு.

அக்னி “சொல்லுங்க மிஸ்டர்.. ஆன்.. பிரணவ், ரைட்” என்று வினவ அவன் தலையோ பயத்தில் தானாய் அசைந்தது.

பிரணவ் “சாரி சார்” என தலைகுனிய

“இங்க நீங்க வேலை பாக்க வந்தீங்க அப்படின்றத மறக்க வேண்டாம் மிஸ்டர்.. கோ மைண்ட் யூர் பிசினஸ்.. இன்னொருவாட்டி இப்படி பார்த்தேன் அது தான் உங்களுக்கு கடைசி நாளா இருக்கும்” என்று எச்சரிக்க

“சாரி சார்” என்றவன் அங்கிருந்து விட்டால் போதுமென ஓடிவிட்டான்.

அவன் குரல் கேட்டு நின்றுக்கொண்டிருந்த நேஹாவை  ஒரு பார்வை பார்த்தவன் “சிட்” என்றுவிட்டு “இனி அவன் ஏதாவது பண்ணா சொல்லு” என்று செல்லும் பிரணவின் முதுகை முறைத்தபடி கூற அதில் கஷ்டப்பட்டு புன்னகையை அடக்கியவள் ‘ம்ம்’ என்றாள் தலையசைப்புடன்.

அக்னி அங்கிருந்து செல்ல அவன் செல்வதை புன்னகையுடன் பார்த்தவள் “பொங்குறதுக்கெல்லாம் குறைச்சல் இல்ல.. ஆனா ஒத்துக்க மாட்டான்.. எருமை மாடு” என்று அவனை செல்லமாக கடித்துக்கொண்டவள் தன் இழுப்பறையிலிருந்த நால்வரின் புகைப்படத்தை எடுத்து ஆராத்யாவின் பின்பத்தை பார்த்து “ஏன் என்ன கூட பாக்க விட மாட்டுற கிட்டி.. இதெல்லாம் நார்மல் ஆகவே ஆகாதா” என்று எண்ணியவளுக்கு பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது.

இந்துவை பார்க்க கிளம்பிய ரேயன் அவள் கல்லூரியின் பார்க்கிங்கில் நின்றுகொண்டிருக்க தூரத்தில் இந்து நடந்து வருவது தெரிந்தது.

கருநீல நிற பருத்தி புடவையணிந்து கூந்தலை தூக்கி போனி டெயில் போட்டிருந்தவள் கையில் சில புத்தகங்களோடு வந்துக்கொண்டிருந்தாள். ரேயன் வண்டியிலிருந்து இறங்கி அவளை நோக்கி செல்ல அவளோ அங்கு பைக்கில் அமர்ந்திருந்த ஒருவனின் முன் சென்று நின்றாள். யாருடன் இவ்வளவு நெருக்கமாக நின்று பேசுகிறாள் என்று யோசித்துக்கொண்டே அவர்கள் அருகிலிருந்த மரத்திற்கு பின் நின்று பார்த்தவன் அங்கு வண்டியில் அமர்ந்திருந்தவனை பார்த்து அதிர்ந்து தான் போனான், அவன் இதழ்களோ தன்னிசையாய்”கதிர்” என்று  உச்சரித்தது.

இந்து “என்ன லேட்.. எதுக்கு பார்க்கனும்னு கூப்டீங்க.. சார் இங்கயெல்லாம் வரமாட்டீங்களே” என்று புருவமுயர்த்த அதில் புன்னகைத்தவன் “ஒரு முக்கியமான விஷயம் சொல்ல தான் கூப்பிட்டேன்” என்றான் பீடிகையுடன். இந்து ஆர்வமாக “வாவ்.. என்னது” என்று விழி விரித்து கேட்க அதில் நன்றாக புன்னகைத்தவன் “ப்ரொபசர்டி நீ.. இப்படி குழந்தை சாக்லேட் பார்த்து குதிக்கிற மாதிரி குதிக்கிற” என்று கேலி செய்ய அதில் அவள் அவனை முறைக்க, அவள் கையில் அவளுக்கு பிடித்த சாக்லேட் ஒன்றை திணித்தவன் “நான் எல்லா சேவிங்ஸ்ஸையும் போட்டு ஒரு வில்லா வாங்கிருக்கேன்டா” என்ற செய்தியை கூற அதில் இன்பமாக அதிர்ந்தவள் அவனை வாயை பிளந்துகொண்டு பார்த்தாள். அவள் தாடை பற்றி அவள் வாயை மூடியவன் “ரொம்ப பொளக்காத..” என்க அதில் அசடு வழிந்தவள் “இப்போ என்ன திடீர்னு” என்று புரியாமல் கேட்க அவள் கையை தன் கைக்குள் புதைத்துக்கொண்டவன்  “நான் இப்போகூட உங்க வீட்ல பேச ரெடி ஆனா எல்லாம் நார்மல் ஆகணும்.. எல்லாரும் முன்ன மாதிரி ஆகணும்.. அது எப்போ நடக்கும்ன்னு தெரியல ஆனா சீக்கிரம் நடக்கும்னு நம்பிக்கை இருக்கு.. சோ எப்போவென கல்யாணம் ஆகலாம் எப்போவென என்னோட ஏஞ்செல் என் வீட்டுக்கு வரலாம்.. அதான் இப்போவே வாங்கிட்டேன்” என்று அவளை பார்த்து கண்ணடிக்க அவளுக்கோ வார்த்தைகள் வர மறுத்தது.

கதிர் “நீ இப்படியே பிரீஸ்ல இரு.. ஒரு வாரத்துல புது வீட்ல பால் காய்ச்சனும்.. அம்மா கையோட உன்கிட்ட சொல்லிட்டு வர சொன்னாங்க.. அன்னிக்கி நானே வந்து கூட்டிட்டு போறேன்” என்றவன் அவளுக்காக அவன் வாங்கி வைத்திருந்த பட்டு புடவையை கொடுத்து “அன்னிக்கி இதை கட்டிக்கோ” என்றவன் அவள் கன்னத்தில் தட்டிவிட்டு “காலேஜ் பஸ்ல தான போற.. பார்த்து போ” என்க அப்போது தான் அந்த சிலைக்கு உயிர் வந்தது போலும் “ம்ம்.. நீங்களும் பார்த்து போங்க.. டேக் கேர்” என்றாள். அவன் செல்லும் வரை அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் காரிகையவள்.

கதிர் பேசியதை கேட்ட ஆத்ரேயன் “நல்லவனா தான் இருக்கான்” என நினைத்துக்கொண்டே இந்துவை நோக்கி செல்ல அவளோ ஆத்ரேயனின் வருகையில் மீண்டும் சிலையென சமைந்தாள்.

கையிலிருந்த புடவையை சட்டென மறைத்தவளுக்கு எங்கு அவன் கதிரை கண்டுவிட்டானோ என்ற பதட்டம் வேறு அழையா விருந்தாளியாய் தொற்றிக்கொண்டது.

ரேயனை பார்த்து “அண்ணா” என்க அவளின் பதட்டத்தை கண்டுகொண்டவன் சிறு முறுவலுடன் “எப்படிடா இருக்க” என்று வினவ

இந்து ‘நல்லவேளை பார்க்கல’ என நினைத்துக்கொண்டு “நல்லா இருக்கேன்.. நீ” என்றாள் அவனை தோளோடு அணைத்து

ரேயன் “நான் நல்லா இருக்கேன்..  மேடம் ப்ரொபசராமே” என்று வினவ

“அதுகூட தெரியல தான உனக்கு” என்றாள் முணுமுணுப்பாக,

“சாரிடா” என்றவனாலும் அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை.

இந்து “சரி விடு.. என்ன சென்னை வந்திருக்க.. ஏதாவது மீட்டிங்கா” என்று கேட்க மறுப்பாக தலையசைத்தவன் “இல்லடா.. இனி இங்க தான்” என்று கூற அதில் குதூகலமானவள் “வாவ்” என்று குதிக்க அங்கு வந்த மாணவன் ஒருவன் “மேம்.. நீங்க மேம்” என்று அவளுக்கு நினைவு படுத்த

“போடா டேய்” என்றாள், அவனும் “ரைட்டு” என்று சென்றிட ரேயனோ சிரித்துவிட்டு “அவன் சொல்லுறது கரெக்ட் தான்.. நீ இப்போ ப்ரொபசர்.. சோ அடக்கமா இரு” என்றான்.

ரேயன் கூறியதை கேட்டவள் “அது அவங்களுக்கு.. உனக்கு இல்ல.. எங்க நீ சென்னை வரவே மாட்டியோன்னு பயந்தேன் ஆனா நீ வந்துட்ட.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. வீட்டுக்கு போனியா இல்ல இனிமே தானா” என்று கேட்க அவனோ தலை குனிந்து நின்றான்.

இந்து “அப்போ நீ வீட்டுக்கு வரல அப்படி தான..” என்றும் முறைக்க அப்போதும் அவனிடம் பதிலில்லை.

இந்து “பெரியப்பா கூட உனக்கு என்ன தான் பிரச்சனை.. ஏன் இப்படி பண்ற” என்று ஆற்றமையில் கேட்க அவனோ அவள் கேள்விகளில் இறுகி நின்றான். இந்து “நான் போறேன்.. பை” என்று கோபமாக திரும்ப

“இந்து” என்று அவளை அழைத்தவன் அவள் கையில் சிறு பெட்டியை திணிக்க அவளோ ‘என்ன’ என்பது போல் அவனை ஏறிட்டாள்.

ரேயன் “உனக்கு தான்” என்க

“எனக்கு எதுக்கு” என்றாள் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு

ரேயன் “உனக்கில்ல.. என் தங்கச்சிக்கு.. அவளுக்கு கொடுப்பேன்.. எப்போவெனா பார்க்க வருவேன்.. சொல்லிடு” என்றான். அதில் லேசாக இதழ் விரித்தவள் அவன் கொடுத்த பரிசை திறந்து பார்க்க அதில் வைர பிரேஸ்லெட் ஒன்று இருந்தது.

இந்து “இப்போ எதுக்கு இது” என்று கேட்க

“நீ எப்பவும் ஒரு ஸ்டெண்டர்ட் முடிக்கும் போது உனக்கு நான் எதாச்சு கிப்ட் கொடுப்பேன்.. ஆனா நீ டிகிரி முடிக்கும் போது என்னால கொடுக்க முடியல அதான் இப்போ கொடுக்குறேன்” என்றான். அவன் கூறியதில் அவள் கண்கள் கலங்கிவிட “இன்னும் நீ அதை மறக்கலயா” என்றாள் அழுகையை சிரிப்புமாக, அவள் தலையை பிடித்து ஆட்டியவன் “எதையும் மறக்கமாட்டேன்” என்று கிளம்ப எத்தனிக்க, இந்து “என்ன பாக்கவாச்சு வா.. நானும் வரேன்” என்றாள் சோகமான குரலில். அவளை பார்த்து மெலிதாக புன்னகைத்தவன் அவளை அணைத்து விடுவிக்க அவளோ அவனை ஒரு அடி அடித்துவிட்டு தான் சென்றாள்.

மீண்டும் அலுவலகம் செல்ல காரில் ஏறிய ரேயனை அழைத்த கிஷோர் “ரேயா நாளிக்கு ஊட்டி போகணும்.. சில செட்டில்மெண்ட்ஸ் பண்ணனும்” என்று கூற

“நாளைக்கே போகனுமா” என்று வினாவினான் சோர்வாக.

கிஷோர் “ஆமா.. நாளைக்கே முடிக்கணும்” என்று தீவிரமான குரலில் கூற

“சரி ஓகே” என்றான்.

கிஷோர் “நாளைக்கு ஏழு மணிக்கு ட்ரெயின் புக் பண்றேன்” என்று தெரிவிக்க

ரேயன் “ட்ரெயின்ல ஏன்டா” என்று புரியாமல் கேட்க

கிஷோர் “வெதர் சரியில்லடா.. பிளைட் கேன்சல் பண்ண வாய்ப்பிருக்கு.. அதான்” என்றிட ரேயனும் சரி என்று ஒப்புக்கொண்டான்.

காலையிலிருந்து உணவுண்ணாமல் அமர்ந்திருந்த அக்னி எதையோ எடுக்க தன் இழுப்பறையை திறக்க அதில் ஆராத்யாவின் கல்லூரி ஐ டி கார்ட் இருந்தது. அதை கையில் எடுத்தவன் “என்ன தெரியாதா உனக்கு.. என்னையே தெரியாதுன்னு சொல்லிட்டல” என்று மீண்டும் மீண்டும் அதையே கூறியவன் “இனி உன்ன பார்க்கவே கூடாதுன்னு தான் நினைச்சேன்.. நீ அவன்கூட இருக்கேன்னு நினைச்சேன் ஆனா எல்லாம் தப்பாகிடுச்சு.. ஒருவேள நான் தான் உன்கிட்ட எதுவும் சரியா கேட்கலையா” என்று முதல் முறை ஆரத்யாவின் பக்கமிருந்து யோசித்தவன் “எனிவேஸ்.. நீ எங்கயிருந்தாலும் சரி.. என்ன மறந்திருந்தாலும் சரி.. நான் உன்ன மறக்க மாட்டேன்” என்றான்..

ஒருபுறம் ஆராத்யா கௌதம் மற்றும் சித்து ஊட்டி கிளம்ப மறுபுறம் ரேயனும் கிஷோரும் கிளம்பிக்கொண்டிருந்தனர்.

மறுநாள் காலை வீட்டிலிருந்து கிளம்பிய கௌதம் சித்துவிடம் “சித்து கிளம்பிட்டியா” என்று வினவ

“எஸ் டா.. ஆரா கிட்ட கேட்டியா” என்று கேட்க

“நான் ஏன் கேட்க போறேன்.. நீயே கேளு” என்று அழைப்பை துண்டித்துவிட்டான். ‘இவன் இருக்கானே’ என தலையில் அடித்துக்கொண்ட சித்து ஆருவிற்கு அழைத்தான்.

சித்து “கிளம்பிட்டியா”

“ஹான்.. இதோ அஞ்சு நிமிஷத்துல”

“சரி பிளாட்பார்ம் நம்பர் 3க்கு வந்திடு” என்று அழைப்பை துண்டிக்க ஆரு தன் கைப்பையுடன் கிளம்பினாள். வீட்டை விட்டு கிளம்பும் போதே அவள் இதயம் பலமாக அடிக்க தண்ணீர் அருந்தி தன்னை சமன் செய்தவள் ரயில் நிலையம் நோக்கி பயணித்தாள்.

கிஷோர் “ரேயா எங்க இருக்க.. இன்னும் பத்து நிமிஷத்துல ட்ரெயின்” என்று கத்த

“ஸ்டேஷன் வெளிய ஒரே ட்ராபிக்கா இருக்கு.. வந்திடுவேன்” என்றான்.

கிஷோர் “சீக்கிரம் வாடா” என்றுவிட்டு அழைப்பை துண்டிக்க, ரேயனும் நடைமேடை மூன்றை நோக்கி சென்றான்.

சந்திக்கவே கூடாது என்றிருக்கும் இருவர் மீண்டும் சந்திக்க நேர்ந்தால் ??

Advertisement