Advertisement

                   அத்தியாயம் 14

மதிலின் வெளியே நின்றவர்கள் பேசியதை கேட்டு ஆரு அதிர்ந்து நின்றாள். ஆம் அவர்கள் பேசியது என்னவோ
ஆத்ரேயனை பற்றி தான்.

ஒருவன் “டேய் அவன் இப்போ உள்ள தான் இருக்கான் டா.. எப்படி தூக்குறது” என்று கேட்க,
மற்றொருவன் “உள்ள ஏதோ கல்சுரல்ஸ் தான் நடக்குது… அப்படியே ஸ்டுடெண்ட்ஸ் மாதிரி உள்ள போய்டலாம்” என்று யோசனை கூற,
மூன்றாமவன் “அந்த பைய பெயர் என்ன டா சொன்னீங்க”
முதலாமவன் “அதான் சொன்னேன்ல.. ஆத்ரேயன்.. சிவில் பர்ஸ்ட் இயர்.. கண்ணனோட புள்ள.. அந்த கண்ணன் எங்க தலைவர் பிசினஸ்க்கு பண்ணத அவன் புள்ளைக்கு செய்யனும்” என்று வன்மமாக பேசிக்கொண்டிருக்க, அதை கேட்ட ஆருவின் மனமே பதறியது.

அங்கிருந்து அகன்றவள் அவசரமாக ரேயனுக்கு அழைப்பு விடுத்தபடி அவனை தேடி சென்றாள். ரேயனுக்கு அழைப்பு சென்றதே தவிர ஏற்கப்படவில்லை.
அலைந்து திரிந்து தேடியவள் இறுதியாக  ஒரு மரத்தின் அருகே அவனை கண்டு அவன் அருகே சென்றாள் வேக எட்டுக்களுடன்.

ஆத்ரேயனுக்கு இதுபோன்ற விழாக்களில் என்றும் நாட்டமிருந்தது இல்லை. இன்றும் அவன் கிஷோரிடம் கலந்துக்கொள்ள விருப்பமில்லை என்றிட, கிஷோர் ஆதி மற்றும் ராஜுடன் கிளம்பிவிட்டான்.

மரத்தின் கீழ் அமர்ந்து  மடிக்கணினியில் படம் பார்த்துக்கொண்டிருந்தவனின் அருகே சென்றவள், “அத்து.. அத்து.. உன்ன.. அங்க” என்று மூச்சிரைக்க ஏதோ கூற வர, அவளை புரியாமல் பார்த்தவன்
“ஹே என்ன.. என்ன உளறுற”
“ஐயோ இல்ல.. அங்க சில பேர்.. வால்(wall) கிட்ட” என்று கூற வந்தவளை தடுத்தவன்,
“இரு.. முதல அமைதியாகு.. அப்பறம் சொல்லு” என்க, அவளும் மூச்சு வாங்கிவிட்டு
“அத்து.. நான் அங்க வாஷ்ரூம் போய்ட்டு வந்தப்ப யாரோ உன்ன அடிக்க போறதா.. தூக்க போறதா பேசிட்டு இருந்தாங்க”
“என்ன உளறுற.. என்ன எதுக்கு தூக்கனும்”
“உன் அப்பா பிசினஸ் எனிமி யாரோ.. அப்படி தான் பேசிக்கிட்டாங்க”
“இப்போ எதுக்கு எதையோ கேட்டுட்டு வந்து என்கிட்ட சொல்லிட்டு இருக்க.. முதல இங்கிருந்து போ” என்று அவளை அலட்சியம் செய்தவன், மீண்டும் ஹெட் போன் போட்டுக்கொண்டு மடிக்கணினியுடன் அமர, ஆரு கடுப்பாகி அவன் ஹெட் செட்டை பிடிங்கி எறிந்து “இங்க ஒருத்தி என்ன சொல்லிட்டு இருக்கேன்.. நீ என்ன கூல்லா லேப் பார்த்திட்டு இருக்க” என்று அழுகுரலில் கத்த, அவள் கண்களோ கலங்கி இருந்தது.

அவள் வாடிய முகத்தை கண்டு தன்னை தானே கடிந்தவன் “சரி ஓகே.. நான் பார்த்துக்குறேன்.. நீ போ” என்றிட,
“பார்த்துக்குறியா.. முதல அப்பாக்கு கால் பண்ணி போலீஸை வர சொல்லு”
“இங்க பாரு தியா.. இப்படி எடுத்ததுக்கெல்லாம் அப்பாக்கு கால் பண்ற ஆள் நான் இல்ல.. எவன் வந்தாலும் நான் பார்த்துக்குறேன்.. நீ கிளம்பு” என்றான் சற்று கடினமாக.

ஆரு ஏதோ கூற வந்தவள் ஒரு நிமிடம் திரும்பி பார்க்க, அந்த இடமே அமைதியாக இருந்தது.
ஆரு “இங்க விளையாடிட்டு இருந்தவங்க எங்க.. திடீர்ன்னு எங்க போனாங்க” என்று பதற,
ரேயன் “இது என்ன கேள்வி.. முடிஞ்சிருக்கும் போயிருப்பாங்க”
“எப்படி எல்லாரும் ஒரே நேரத்துல போவாங்க.. நீ வா முதல.. இங்க இருக்க வேண்டாம்” என்று அவன் கைபிடித்து இழுக்க, ஆத்ரேயன் அதை தட்டிவிட்டு “ஹே.. நான் தான் சொல்றேன்ல.. எனக்கு என்ன பார்த்துக்க தெரியும்.. முதல இங்கிருந்து போ” என்று கத்திவிட, ஆரு அவனை முறைத்துக்கொண்டே கிஷோருக்கு அழைத்தாள்.

ஆரு கிஷோருக்கு அழைப்பு விடுக்க, பின்னிலிருந்து வந்த ஒருவன் அவள் அலைபேசியை பிடுங்கி எறிந்தான். அதில் அவள் அலைபேசி கீழே விழுந்து நொறுங்கிவிட,
அந்த தடியனோ “டேய் இவளை பிடி டா” என்றான் அவன் கூட்டாளி ஒருவனிடம்.
ஆரு “ஹெல்ப் ஹெல்ப்” என்று கத்த,
“நீ எவ்ளோ கத்துனாலும் யாருக்கும் கேட்காது.. ரொம்ப கஷ்டப்படாத பாப்பா” என்க,
ஆத்ரேயனை முறைத்த ஆராத்யா “நான் அப்போவே சொன்னேன்ல.. கேட்டியா பாரு இப்போ.. இந்த சொட்டலாம் டயலாக் பேசுறான்” என்று கத்திக்கொண்டிருந்தாள்.

ஒருவன் அவள் கையை பிடித்து இழுத்து அவளை வெளியே தள்ள முற்பட, அவளோ “ஹே விடுடா.. எருமை மாடே” என்று திமிர,
அக்கூட்டத்தில் இருந்த ஒருவன் ஆத்ரேயனை பார்த்து “டேய் உன் அப்பன் பண்ணதுக்கு இப்போ நீ வாங்க போற.. தேவையில்லாம என் தலைவன் மேல கை வச்சுட்டான் உன் அப்பன்” என்று கட்டமாக பேச அது எதுவும் அவன் செவிகளை எட்டவில்லை.

ஆரத்யாவின் கையை பிடித்து அலைபேசி வாங்கிய போதே உள்ளுக்குள் பொங்கிய ஆவேசத்தை அடக்கிக்கொண்டு நின்றவன் அவள் கையை பிடித்து தள்ளுவதற்க்காக இழுக்வும் தன் வசம் இழந்தான்.

தன் எதிரில் நின்றிக்கொண்டிருந்தவனின் நெஞ்சில் எட்டி உதைத்த ரேயனை பார்த்து அதுவரை கத்திக்கொண்டிருந்த ஆரு, அவன் அடிக்க தொடங்கியவுடன் வாயை பிளந்துக்கொண்டு பார்த்தாள்.
ஆரு ‘ஆத்தி.. அக்னியாவது கோபப்பட்டு கத்திட்டு அப்பறம் சண்டை போடுவான்.. இவன் என்ன இவ்ளோ நேரம் சைலேண்ட் மோட்ல இருந்துட்டு இப்போ இப்படி அடிக்கிறான்.. பயங்கரமான ஆள் தான் போல’ என தனக்குள்ளே பேசிக்கொண்டு அவனை பார்த்துக்கொண்டிருக்க, அங்கு ரேயனோ அந்த நால்வரையும் அடி வெளுத்துவிட்டான்.

கீழே விழுந்துகிடந்த ஆரத்யாவின் அலைபேசியை எடுத்தவன் அதை பார்த்து “டிஸ்பிளே போய்டுச்சுன்னு நினைக்கிறேன்.. நான் சரி பண்ணி தரேன்” என்றவன் மீண்டும் அந்த நால்வரை அடிக்க, அவர்களோ அவன் அடியில் தெறித்து ஓடினர்.

அவர்கள் ஓடவும் கிஷோர் வரவும் சரியாக இருந்தது.
கிஷோர் “ஹே பார்ட்னர்.. என்ன நடந்தது இங்க.. யார் அவனுங்க” என்று ஓடுபவர்களை பார்த்து கேட்க,
ஆரு “ஹான் என் மாமனுங்க.. எனக்காக அத்து அங்க சண்டை போட்டுட்டு இருந்தான்” என்று கடுப்புடன் பதிலளிக்க,
கிஷோர் “சரி ஸ்க்ரிப்ட் நல்லா இருக்கு.. இப்போ என்ன நடக்குதுன்னு சொல்லு” என்று கேட்க, ஆராத்யா ரேயனை முறைத்துக்கொண்டே நடந்தவற்றை கூறினாள்.

அலைபேசியை பார்த்துக்கொண்டே வந்த ஆத்ரேயனை முறைத்தபடி, ஆரு “ச்ச.. ஒரு மனுஷி சொல்றாளே.. மதிப்போம்ன்னு இல்ல..” என்று சிடுசிடுக்க,
ரேயன் “ஐ அம் சாரி” என்றான்.
ஆரு “நான் உன்கிட்ட சாரிலாம் கேட்கல.. நல்லவேளை எதுவும் ஆகல.. அவனுங்க வந்து அடிச்சிருந்தா” என்று கோபமாக கேட்க,
கிஷோர் “மச்சான் அவங்கள வெளுத்திருப்பான்” என்றான் அசால்ட்டாக.
ஆரு அவனை முறைக்க அதில் கிஷோர் அமைதியாகிவிட,
ரேயன் “அதெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது” என்றான்.
“இருந்தாலும்.. ஏதாச்சு ஒரு சூழ்நிலைல ”
“ஏன் இப்போ நான் அடி வாங்கனும்ன்னு உனக்கு ஆசையோ” என்று கேலி குரலில் ரேயன் கேட்க, அதில் பதறிவிட்டாள் பாவையவள்.

ஆத்ரேயன் கூற்றில் அவசராமக அவனை தடுத்தவள், “நான் எப்போ அப்படி சொன்னேன்” என்று பதற, அவள் பதட்டம் கூட ஆணவனின் மனதை இதமாக தாக்கியது.
ரேயன் “வேற எப்படி” என்று புருவமுயர்த்த,
ஆரு “அது நான்..” என்று தடுமாறினாள்.
ரேயன் “என்ன நீ” என்று பதிலுக்கு பதில் கேட்க, அதில் ஆரு சோர்ந்து அமைதியாகிவிட,
ஆத்ரேயன் “சாரி நீ சொன்னதை நம்பாம விட்டதுக்கு” என்றான் சிறு குரலில். அதில் ஆருவின் குறும்புத்தனம் தலைதூக்க, அவள் காதில் கைவைத்து “ஹான் கேட்கல கேட்கல” என்றிட,
ரேயன் மீண்டும் “சாரி.. நீ சொன்னதை நம்பாம விட்டதுக்கு” என்று கொஞ்சமே கொஞ்சம் சத்தமாக உரைக்க,
ஆரு “இல்ல இல்ல.. இன்னும் சத்தமா” என்றாள்.
கிஷோர் “அட பிகில் பைத்தியமே” என தலையில் அடித்துக்கொள்ள,
ரேயன் இரு கையையும் தலைக்கு மேல் கூப்பி “எம்மா தாயே மன்னிச்சிரு.. போதுமா” என்று சிறு புன்னகையுடன் மன்னிப்பு கேட்க,
ஆரு “ஆன்.. அப்படி சொல்லிட்டு போ” என்று சிரிக்க, ரேயனும் புன்னகையுடன் திரும்பினான்.

கிஷோர் ஏதோ கேட்க, அவனிடம் பேசிக்கொண்டிருந்த ரேயன் கையை நீட்டி மடக்கிக்கொண்டிருந்தான்.

ரேயனின் செயலை கவனித்த ஆரு, “கை வலிக்கிதா என்ன.. நா வேணா ஸ்ப்ரே கொண்டு வரவா” என்று கேட்க,
ரேயன் “இல்ல இல்ல ஒன்னுமில்ல” என்று கையை பார்த்துக்கொண்டே கூறியவன் நிமிர்ந்து பார்க்க, அங்கு அவள் இல்லை.

ரேயன் “எங்கடா போனா” என்று கிஷோரிடம் கேட்க, கிஷோர் அவள் செல்வதை கை காட்டி, “அவ உன்கிட்ட பர்மிஷன் கேட்கல.. இன்போ கொடுத்திட்டு போயிடுச்சு” என்று கூற, ஆத்ரேயன் அவளை நினைத்து சிரித்துக்கொண்டான்.
கையில் ஸ்ப்ரே மற்றும் ஐஸ் பேக்குடன் வந்தவள் ஆத்ரேயனிடம் “வா கை காட்டு.. இது வச்சா சரியாகிடும்” என்றிட, ரேயன் கையை நீட்டாமல் நின்றிருந்தான்.

ஆரு கிஷோரிடம் “கஷ்டப்பட்டு கொண்டு வந்தேன் பார்ட்னர்” என்று உதட்டை பிதுக்கினாள் அதில் கிஷோர் ஆத்ரேயனை திரும்பி பார்க்க, ஆத்ரேயன் ஒரு பெருமூச்சோடு கை நீட்டினான்.

ஆரு அவன் கை பிடித்து அதில் ஸ்ப்ரே அடித்துக்கொண்டே “ஒரு நாள் ரெஸ்ட் எடு.. சரியாகிடும்” என்றாள். அவள் செய்கைய்யும் அவள் வார்த்தைகளும்  அக்னியை நினைவூட்ட, ரேயன் உடனே தன் கையை உருவிக்கொண்டான்.
கிஷோரும் ஆருவும் என்னவென்று பார்க்க,
ரேயன் தொண்டையை சரி செய்துவிட்டு “நான் வீட்ல போய் பார்த்துக்குறேன்.. தேங்க்ஸ்” என்றுவிட்டு நடக்க,
கிஷோர் “டேய் இரு டா.. என்ன இப்போ” என்று முறைக்க, ஆரு அதே இடத்தில் நின்று அவனை தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஒரு நிமிடம் கண் மூடி தலைக்கோதியவன் என்ன நினைத்தானா ஆருவின் அருகே சென்று “இங்க பாரு தியா, நீ என் மேல காட்டுற அன்பு வேண்டாம்ன்னு நினைக்கிறேன்.. அது தேவையில்லாம உன்ன தான் கஷ்டப்படுத்தும், இப்போ மாதிரியே… இனி நீ என்கிட்ட பேசாத.. நானும் பேச மாட்டேன்” என்றவன் அவள் கை பிடிக்க, ஆரு என்னவென பார்த்தாள். அவள் உடைந்த அலைபேசியை அவளிடம் கொடுத்தவன் “புரிஞ்சுக்குவன்னு நினைக்கிறேன்” என்று இறுகிய குரலில் கூறிவிட்டு சென்றிட, ஆரு தான் அவன் கூற்றில் மனதில் எழுந்த வலியோடு அங்கிருந்து அகன்றாள்.

ஆருவிடம் பேசிவிட்டு வந்த ரேயன், தன் கார் சீட்டில் கண்மூடி அமர்ந்திட,
கிஷோர் “டேய்”
“ம்ம்”
“அத்து உன்ன தான்”
“சொல்லு கிச்சா.. என்ன.. ” என்று ஆத்ரேயன் சோர்வாக கேட்க,
கிஷோர் “ஏன்டா அப்படி சொன்ன”
“தோணுச்சு சொன்னேன்”
“இப்போ அவ பேசுறதுல என்ன உனக்கு.. ஏன் அப்படி மூஞ்சில அடிச்ச மாதிரி பேசுன” என்று முறையிட,
ரேயன் “அப்படி சொன்னா தான் கேட்பா” என்றான் நலுங்கிய குரலில்,
“அவ ஏன் கேட்கனும்” என்று கிஷோர் குதர்க்கமாக கேட்க,
ரேயன் “மச்சா நீயும் என்ன படுத்தாத டா” என்றான். அப்போதும் கிஷோர் விடாமல், “உன் மனச தொட்டு சொல்லு.  உனக்கு அவகிட்ட பேச பிடிக்கிலன்னு”
“……”
“சொல்லுடா” என்று கிஷோர் கேட்க,
ரேயன் “ஆமா பிடிச்சிருக்கு தான்.. ரொம்பவே பிடிச்சிருக்கு தான்.. அதான் வேண்டாம்ன்னு சொல்றேன்.. தேவையில்லாம அவள ஹர்ட் பண்ணிடுவேனோன்னு தோணுது… இதுக்கு மேல இதை பத்தி பேச வேண்டாம்” என்றவன் இருக்கையில் சாய்ந்துவிட்டான்.

கிஷோர் எதுவும் பேசாது வண்டியை செலுத்த அங்கு பலத்த மௌனம் ஆட்சி செய்தது. கிஷோர் தான் ஆத்ரேயனின் செயலிலும் வார்தையிலும் வெகுவாக குழம்பி போனான்.

_________________________

இங்கு தாமதமாக வந்தவளை அக்னி ஒரு பிடி பிடித்துவிட, ஆரு தான் ஏதேதோ காரணங்கள் கூறி அவனை சமாளித்தாள்.
ஆரு அவள் அலைபேசி உடைந்துவிட்டதை கூற, அக்னி அதை சரி செய்து தருவதாக வாங்கிக்கொண்டான்.

அன்று இரவு உறக்கம் வராமல் புரண்டுக்கொண்டிருந்த ஆரு “அவன் அப்படி சொல்லாம இருந்தா கூட நான் சும்மா கிளாஸ் பையன்னு இருந்திருப்பேன்.. ஆனா அவன் இப்படி சொல்லவும் தான் எனக்கு அவன்கிட்ட பேசணும்ன்னு தோணுது.. தப்பு பண்ணிட்டியே அத்து” என தன்னவன் நினைப்பில் விட்டத்தை பார்த்து தனியாக பேசிக்கொண்டிருந்தாள் அந்த மாது.

அங்கு ரேயனோ உறக்கம் வராமல் எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தான். அப்போது அவன் அறைக்கு தாய்க்குலம் இருவரும் வர,
ஷோபனா “என்ன ரேயா… சாப்பிட வரல” என்று அவன் தலை வருட,
“பசிக்கில ம்மா” என்றான்.
ஜனா “இது என்னடா உலக அதிசயமா இருக்கு.. பசிக்கிலனாலும் ஹெல்த்க்காக சாப்பிடனும்ன்னு யாரோ சொல்லுவாங்களே மா.. என்ன ஆச்சு இப்போ” என்று கேலியாக கேட்க,
ரேயன் “சாப்பிட தோணாலன்னு அர்த்தம்” என்றான்.
ஷோபனாவும் ஜனாவும் ஒருசேர “ஒருவேளை அதுவா இருக்குமோ” என்று கூற,
ரேயன் “எதுவா இருக்குமோ”
ஜனா “அட அதான் டா தம்பி அந்த பாழங்கிணறு”, அப்போதும் ஆத்ரேயன் புரியாமல் விழிக்க,
ஷோபனா “அதான்டா அந்த மாய உலகம்” என்று க்ளு கொடுக்க,
ரேயன் “ப்ச்.. என்ன உளறுறீங்க ரெண்டு பேரும்” என்று சிடுசிடுக்க,
ஜனா “அதான் டா.. நான் போய் ஏசிபின்னு ஒன்னுல விழுந்தேன்ல.. அந்த மாதிரி” என்று கேட்க, ரேயன் தன் தாயை பார்த்தான்.
ஜனா “அதெல்லாம் அவங்களுக்கு முதலயே தெரியும்.. நீ தான் லேட்” என்று அசட்டையாக கூற,
ஷோபனா “என் மாப்பிள்ளை சொக்க தங்கம் டி” என்றார். அவர்களை பார்த்து “அட பாவிங்களா” என அவன் தலையில் அடித்துக்கொள்ள,
ஜனா “ஹாஹா சொல்லு டா சொல்லு.. உன் முகத்தை பார்த்தா அப்படி தான் இருக்கு.. யார் அந்த பொண்ணு” என்று புருவமுயர்த்த,
ரேயன் “ஹான் என் காலேஜ்ல வேலை செய்யிற முப்பாத்தா” என்றான்.
ஷோபனா “யாரா இருந்தா என்ன.. என் ரேயனுக்கு பிடிச்சா போதும்.. சரி சரி சீக்கிரம் சாப்பிட வாங்க” என்றவர் இறங்கி சென்றுவிட்டார்.

ரேயன் “வர வர ஷோபனா கூட கலாய்க்கிது” என்றவன் ஜனாவை பார்க்க,
அவளோ தீவிரமாக முகத்தை வைத்துக்கொண்டு “என்ன ரேயா அந்த பொண்ணு தானா” என்று கேட்டாள்.
“எந்த பொண்ணு தானா” என அவளை போலவே அவனும் கேட்க,
“அன்னிக்கு மாடில நின்னு யோசிச்சிட்டு இருந்தியே.. அவ தான” என்று சரியாக கண்டுபிடிக்க, ரேயன் மனதில் அவள் முதலிலிருந்து செய்தவை எல்லாம் படம் போல் வந்து போனது. அதில் அவன் முகம் கூட மென்மையை தத்தெடுக்க, அவன் முகத்தில் வந்த மென்மையை கண்டுக்கொண்ட நிரஞ்சனா,
ஜனா “போச்சு.. நல்லவன் ஒருத்தன்னும் நாசமா போய்ட்டான்” என்று கூறிக்கொண்டே வெளியில் செல்ல,
ரேயன் “ஹே அதெல்லாம் ஒன்னுமில்ல டி.. நீ வேற” என்று மறுக்க
ஜனா “ரேயா எதுவா வேணா இருக்கட்டும் எமோஷன்ஸை மறைக்காத எப்போவும் போல.. அது இந்த விஷயத்துல நல்லது இல்ல” என்று உடன்பிறப்பாய் அவனுக்கு அறிவுரை வழங்கிவிட்டு சென்றுவிட, ரேயன் தான் யோசனையாக உறங்க சென்றான்.

மறுநாள் காலை ஆருவிற்கு உடல்நிலை சரியில்லை என்று மற்ற மூவரும் அவளை பார்க்க ஆஜராகினர்.
அக்னி “எப்படி மா.. இப்படி திடீர்ன்னு” என்று குழம்பி கேட்க,
நிலா “எங்க சொன்னா கேட்டா தான.. அப்பாவும் மகளும் நட்ட நடு ராத்திரி ஐஸ் கிரீம் சாப்பிட்டாங்க.. அதான்” என்று புலம்ப, அக்னி சிரித்துவிட்டு “அப்பா எங்க” என்று கேட்க,
நிலா “அவருக்கென்ன கிளம்பிட்டாரு..மேடம் தான் படுத்துட்டாங்க” என்றபடி அவள் குடிக்க கஞ்சி எடுத்து வைக்க,
அக்னி “கொடுங்க நான் கொடுக்குறேன்”
“இல்ல கண்ணா.. நானே கொடுத்துக்குறேன், டைம் ஆகுது” என்றிட அதை காதில் வாங்காமல் தானே எடுத்துக்கொண்டு சென்றான்.

ஆருவிடம் கஞ்சியை கொடுத்துவிட்டு, “சரி தூங்கு.. நான் காலேஜ் முடிஞ்சு வரேன்” என்றிட
நேஹா “பார்த்து கிட்டி.. நல்லா ரெஸ்ட் எடு” என்றாள்.
கதிர் தான் “ஹப்பா.. ஒரு தொல்லை இன்னிக்கி இல்ல” என்று ராகம் பாட
ஆரு “ச்சீ பே” என்றாள்.

ஆரு வராததால் அக்னி நேஹாவை எப்படி அழைத்து செல்லலாம் என்று சிந்தித்துக்கொண்டிருந்தான். பின் கதிரின் புத்தகம் ஒன்றை ஆருவின் அறையில் வைத்தவன் அமைதியாக இறங்கி சென்றுவிட்டான், அவனை தொடர்ந்து கதிரும் நேஹாவும் வந்துவிட்டனர்.

ஆருவின் வீட்டிலிருந்து சிறிது தூரம் சென்றவன் வண்டியை நிறுத்தினான். அவன் நின்றதை கண்டு கதிரும் வண்டியை நிறுத்த,
அக்னி “ஹே இன்னிக்கி சப்மிட் பண்ண வேண்டிய புக் கொண்டு வந்துட்டீங்க தான” என்று கேட்க
நேஹாவும் இருவரின் பைகளையும் ஆராய்ந்தாள்.

நேஹா கதிரிடம் “டேய் குரங்கு.. இன்னிக்கி சப்மிட் பண்ணவேண்டிய புக் இல்லையே” என்றிட, கதிர் தன் பையை பார்த்தான்.

கதிர் “உள்ள தான் டி வச்சேன்.. எங்க போச்சுன்னு தெரியல” என்க, அக்னி உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே வெளியே கதிரிடம் “டேய்.. ஆரு வீட்டுக்கு தான் கடைசியா போனோம்.. உன் வீட்டுலயும் அவ வீட்லயும் எதுக்கோ தேடி பாரு போ” ஈன்றிட,
“ஓகே டா.. ஹே லூஸே, அவன்கூட போ.. நான் பின்னாடியே வரேன்”
“ஹான் கிளம்பு கிளம்பு” என்றவள் அக்னியின் வண்டியில் ஏறினாள்.

அக்னி “போலாமா”
“ம்ம் போலாம் டா” என்றாள்.
அக்னி ஏதோ பேச வாயெடுக்கும் முன் நேஹா அவன் முதுகில் சாய்ந்து  கண் மூடி கன்னம் பதித்தாள். அதில் அக்னி தான் ஒரு நிமிடம் ப்ரீஸ் மோடிற்கு சென்றுவிட்டான்.
நேஹா “அகி எனக்கு தூக்கம் வருது டா.. கொஞ்சம் மெதுவா போ” என்றிட,
அக்னி “அப்போ காலேஜ்க்கு பொறுமையா நாளைக்கு போவோமா தங்கம்” என்று கேலியாக வினவ வந்தவனின் குரல் எவ்வளவு முயன்றும் குழைந்தே வந்தது,
நேஹா “ஹான் சரி” என்று விளையாட்டாக கூறிவிட,
அக்னி மனதினுள் ‘நீ சொல்லி கேட்காம இருப்பேனா.. பொறுமையாவே போலாம்’
என்றெண்ணியவன் அதற்கேற்ப வண்டியை மெதுவாக செலுத்திக்கொண்டிருந்தான் இல்லை இல்லை.. உருட்டிக்கொண்டிருந்தான்.

சிறிது நேரம் கழித்து கண் விழித்த நேஹா பாதி தூரம் கூட செல்லாததை கண்டு அதிர்ந்தவள் “டேய் என்னடா.. உண்மையாவே உருட்டிட்டு இருக்க” என்று கேட்க
அக்னி “நீதான சொன்ன.. அதான்”
“லேட் ஆகிடுச்சு டா”
“ஆகட்டும் நீ தூங்குனியா”
“ஹான் தூங்குனேன்.. அட சே.. லூசு பயலே.. லேட் ஆகிடுச்சு” என்றவள் அவன் முதுகில் ஒன்று போட,
அக்னி “என்ன இப்போ.. செகண்ட் ஹார் போலாம்.. மணி அண்ணா ஒன்னும் சொல்ல மாட்டாரு” என்றான் சாவகாசமாக.
நேஹா .”அப்போ சரி.. வா இளநீர் குடிச்சிட்டு போவோம்” என்று அந்த சாலையோரம் இருந்த கடையை காட்ட,
“அடிப்பாவி” என சிரித்தவன் அவளுக்காக இளநீர் கடையின் முன் வண்டியை நிறுத்தினான்.

அக்னி இரண்டு இளநீரை வாங்கிக்கொண்டு வர,
நேஹா “ஹே ஏன் ரெண்டு.. ஒன்னே போதும்ல, என்னால ஒன்னே முழுசா குடிக்க முடியாதுடா” என்று சிணுங்க,
‘இவ தெரிஞ்சு பேசுறாலா இல்ல தெரியாம பேசுறாலா’ என முழித்தவன் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல், “குடி டி.. கேட்ட தான, குடி” என்றவன் குடிக்க போக, நேஹா “இரு இரு” என்றாள் அவசரமாக.

அக்னி புரியாமல் “என்ன டி” என்று கேட்க, தன் கையில் இருந்த இளநீரை குடித்து பார்த்துவிட்டு அக்னி கையில் கொடுத்தவள் பின் அக்னி கையிலிருந்ததை வாங்கி பருகினாள். நேஹா “ஹான் இது நல்ல ஸ்வீட்டா இருக்கு” என்றவள் அதை பருக அக்னி சிரித்துவிட்டு அவளினதை பருகினான்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது அங்கு வந்த பெண் ஒருவள் அக்னியிடம் “எக்ஸ்கியூஸ் மீ.. இங்க பக்கத்துல பெட்ரோல் பங்க் எங்க இருக்குன்னு தெரியுமா” என்று அவனை விழுங்கும் பார்வை பார்த்துக்கொண்டு கேட்க,
அக்னி “இங்கயா” என்று யோசிக்க,
அப்பெண்ணுடன் வந்த மற்றொருவள் “ஆமா வண்டி ஸ்டார்ட் ஆகல அதான்” என்று அவனை பார்த்துக்கொண்டே கேட்க
அக்னி “நேரா போய் லெப்ட் திரும்புனா அங்க முன்னாடியே இருக்கும்” என்றிட,
“அப்பறம்” என்று அப்பெண் ஏதோ கேட்க வருவதற்குள் அக்னியின் முன் வந்து நின்ற நேஹா “ஆன் அதான் சொல்லிட்டான்ல.. நேரா போய் லெப்ட்”
அப்பெண் “இல்ல இங்க” என்று மீண்டும் ஏதோ கேட்க வர
நேஹா “ஆன் சரி.. அப்படியே கேட்டுட்டே போங்க.. நீ வா காலேஜ்க்கு டைம் ஆகுது” என்று அவர்களிடம் தொடங்கி அவனிடம் முடித்தவள் அவன் கையை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றாள்.

அவன் வண்டியின் அருகே சென்று அவன் கையை விட்டவள், “அவளுங்க தான் நயக்ரா பால்ஸ் கொட்டுறாலுங்க.. நீயும் ஈஈன்னு பேசிட்டு இருக்க” என்று முறைக்க,
அக்னி “நான் என்ன பண்ணேன் டி . கேட்டாங்க சொன்னேன்”
“ஓ யார் கேட்டாலும் சொல்லுவ அப்படி தான” என மேலும் முறைக்க, அவள் கன்னத்தை பற்றியவன் “பேசலடா போதுமா” என்று மென்மையாக கூறிவிட்டு வண்டியை எடுக்க, நேஹாவிற்கு தான் உள்ளுக்குள் ஏதோ புதுவித உணர்வு தோன்றி அலக்கழித்தது. அவள் முகத்தில் தோன்றிய கலவையான உணர்ச்சிகளை கண்ணாடியினூடு கண்டுக்கொண்ட அக்னியின் முகம் மென்னகையை தத்தெடுத்திருந்தது.

கல்லூரிக்கு வந்த ஆத்ரேயனின் கண்கள் அவனறியாமலே ஆருவின் இடத்தை தான் வருடியது ஆனால் அவள் இருக்கையோ காலியாக இருந்தது.
அவள் வரவில்லை என்பதை உணர்ந்தவன் அவள் ஏன் வரவில்லை என்று குழம்ப, ஆத்ரேயனின் முகபாவத்தை கண்டும் காணாதது போல் கிஷோர் தன் இருக்கையில் அமர்ந்தான்.

ஆத்ரேயன் “இன்னிக்கி ப்ராக்டிகள் இருக்கா” என்று கிஷோரிடம் கேட்க,
கிஷோர் “ஆன் இருக்கே”
“சரி குரூப்ல எல்லாரும் வர்க் முடிச்சாச்சா”
“முடிச்சாச்சே”
“சப்மிட் பண்ணனும்ல”
“ஆமா பண்ணனும்.. எல்லார் நோட்டும் இருக்கே.. இதோ” என்று நான்கு புத்தகங்களை நீட்ட அதில் ஆருவின் புத்தகம் இருப்பதை கண்ட ரேயன் அவள் இருக்கையை திரும்பி பார்த்து அவள் அங்கு இருக்கிறாளா என்று தேட, கிஷோர் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான்.

கிஷோர் “யார தேடுற”
“இல்ல இல்ல” என்று சமாளித்தான். எப்படியோ அவன் கேட்க மாட்டான் என்பதை அறிந்த கிஷோர்,
“அவ வரல.. உடம்பு சரியில்லையாம்” என்க
ரேயன் “நான் கேட்கலயே” என்று தோளை உலுக்க,
முன்னால் அமர்ந்திருந்த ஆதியை பார்த்த கிஷோர் அவன் தலையில் தட்டி “டேய் டேய் இன்னும் எவ்ளோ நாள் தான் நடிப்ப.. ச்சை” என்று தலையில் அடித்துக்கொள்ள ரேயனுக்கு தான் ஏதோ போல் ஆனது. இவர்களுடன் பழகியதில் ஆதிக்கு தான் இதெல்லாம் சகஜமாகிவிட்டது.

அன்று நாள் முழுவதும் முகத்தை இறுக்கமாக வைத்திருந்த ஆத்ரேயனுக்கு வெறுமையே மிஞ்சியது. என்ன செய்யலாம் என்று தீவிரமாக சிந்தித்தவன் வெகு நேரத்திற்கு பிறகு ஒரு அதிரடியான முடிவை எடுத்திருந்தான். அன்று மாலை கிஷோரை வீட்டில் இறக்கிவிட,
கிஷோர் “சரி மச்சா.. வீட்டுக்கு போய்ட்டு அந்த பிபிடி சென்ட் பண்ணு”
“கொஞ்சம் லேட் ஆகும் முடிக்க”
“ஏன்.. இன்னும் பென்டிங் கொஞ்சம் தான இருக்கு.. நான் மட்டும் பண்ணல.. குமரன் என்ன போட்டுடுவாரு” என்று மிரள,
ரேயன் “நான் வெளிய போறேன்” என்றான்.
கிஷோர் “இதோட.. எங்க.. எதுக்கு” என்று கேள்வி கேட்க,
ரேயன் “ஆராவை பார்க்க” என்று அலுங்காமல் ஒரு குண்டை தூக்கி எறிந்தான்.

ரேயன் கூறியதை கேட்டு நெஞ்சில் கை வைத்த கிஷோர் “அவள ஏன் பார்க்க போற நீ” என்று கேட்க,
“பார்க்கனும்ன்னு தோணுது” என்றான் அசட்டையாக
கிஷோர் நக்கலாக “எவனோ பேசமாட்டேன் இனின்னு சொன்னான்.. அந்த மானஸ்தானை பார்த்தியா டா” என்று கேட்க, ஒரு கீற்று புன்னகையுடன் வண்டியை திருப்பிக்கொண்டிருந்த ரேயன் “உனக்கு தேவையில்லாதது” என்க,
கிஷோர் “ஐயோ இது எங்க போய் முடிய போகுதோ.. அங்க அந்த ஃபயர் வேற இருப்பான்டா” என்று கத்த,
ரேயன் “நான் போக போறது நைட்டு” என்று மீண்டும் ஓர் இடியை அவன் தலையில் இறக்கியவன் வண்டியை சீறிக்கொண்டு கிளப்ப,
கிஷோர் “இவன் மனுஷனே இல்ல” என்று வாய்விட்டே புலம்பினான்.

தலைமை மாணவன் சிவாவிடமிருந்து ஆருவின் முகவரியை வாங்கியவன் பத்து மணிபோல் அவள் காலனிக்கு சென்றான்.
அவ்வளவு தூரம் சென்றவனுக்கு அவளிடம் என்ன பேச என்ற சிந்தனையே பெரிதாய் இருந்தது. அந்த தெருவே மக்கள் நடமாட்டமின்றி இருக்க, தன் தயகத்தை கைவிட்டவன் அவளுக்கு அழைத்தான்.

அன்று மாலை தான் அக்னி அவள் அலைபேசியை சரி செய்து கொடுத்திருந்ததால் அதில் கேம் ஆடிக்கொண்டிருந்தாள் பெண்ணவள். அப்போது சரியாக ரேயனின் அழைப்பு வர,
‘இவன் எதுக்கு இப்போ கால் பன்றான்’ என்று சிந்தித்தவள் அழைப்பை ஏற்க,
ரேயன் “ஹலோ” என்றான்
ஆரு “ஆன்” என்க
“கீழ வா” என்றவன் அழைப்பை துண்டித்துவிட,
ஆரு தன் அலைபேசியை பார்த்து “கீழ வாவா.. என்ன உளறுறான்..” என்று குழம்பிவளுக்கு ஏதோ புரிய உடனே தன் அறை பால்கனியிலிருந்து எட்டி பார்க்க அங்கு அவன் நிற்பது நன்றாக தெரிந்தது.

ஆரு “ஆத்தி.. இவன் என்ன பண்றான் இங்க.. இன்னிக்கி ஏதாவது நடந்திடுச்சா.. ஆனா நம்ம தான் எதுவும் பண்ணலயே.. என்னவா இருக்கும்” என தனக்கு தானே வாய்விட்டு புலம்பியவளின் பின் வந்த சிவகுமார், “என்ன மகளே.. அவர் தான் என் மருமகனா” என்று முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு கேட்க, அவரை முறைத்த ஆரு “எப்பா கொஞ்சமாச்சு அப்பா மாதிரி நடந்துக்கோ.. அவன் என் கிளாஸ்மேட் அவ்ளோ தான்.. ஏதோ நோட்ஸ் கொடுக்க வந்திருக்கான்” என்றவளின் வாய் பொய்யுரைத்தாலும் அவள் கண்களில் மின்னல் வெட்டியது.

ஆரு கூறியதை கேட்ட சிவகுமார் “இந்த நேரத்துல நோட்ஸ்ஸா” என்று நக்கலாக வினவ,
ஆரு “அவன் வீடு அவுட்டர் சென்னை அதான்”
“ஓ ஓ..” என்று நம்பாத குரலில் சிவகுமார் கூற,
ஆரு “பாத்துட்டு வரேன் இருங்க”
“சரிங்க சரிங்க” என்றவர் புன்னகையுடன் தன் அறைக்கு செல்ல, ஆரு கீழே இறங்கி சென்றாள்.

காய்ச்சலால் சோர்வாக இருந்தவளை பார்த்த ஆத்ரேயனின் மனம் பிசைந்து. பார்த்த கணம் முதல் நேற்று வரை துறுதுறுவென வலம் வந்தவளின் அமைதி அவனையும் வெகுவாய் பாதித்தது.

ஆத்ரேயனின் அருகே வந்தவள் “என்ன.. இப்போ, ஏன் வந்தீங்க.. அதுவும் வீட்டுக்கு” என்று கேட்பதற்குள் அவள் இதயம் தாறுமாறாக துடித்தது. ஆனால் அவனோ அவளை கண்களால் அலசியபடி “பீவரா” என்று கேட்க, ஆருவிடமிருந்து ‘ம்ம்’ மட்டுமே பதிலாக கிடைத்தது.
ரேயன் “இப்போ ஓகேவா”
“ம்ம்ம்” என்றாள்.
‘எப்போவும் ம்ம் மோட் நீதான் பண்ணுவியா.. நானும் பண்ணுவேன்’ என நினைத்துக்கொண்டவளின் மனதில் அலை போல் ஆயிரம் எண்ணங்கள் சூழ்ந்திருந்தாலும் அவனை அமைதியாகவே பார்த்துக்கொண்டிருந்தாள் (கெத்தாமாம்).

ரேயன் “சரி நான் கிளம்புறேன்” என்றிட
“ம்ம் பை” என்றாள். வெளியே செல்ல எத்தனித்தவன் மீண்டும் அவள் அருகே நெருங்கி , “நான் ஏன் வந்தேன்னு கேட்க மாட்டியா” என்று ஏக்கமாக வினவ,
ஆரு “கேட்டா சொல்லுவியா” என்றாள் புருவமுயர்த்தி நக்கலாக.
ரேயன் “சொல்லுவேன்” என்று கூற,
ஆரு “ஆனா எனக்கு கேட்க தோணல..  சோ நீங்க கிளம்புங்க” என்று அவனை போல் உணர்ச்சிகள் காட்டாமல் கூறிட, ரேயன் எதுவும் கூறாது அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவன் பார்வை வீச்சை தாங்காது பெண்ணவள் முதன் முதலாய் நாணத்தில் நிலம் நோக்க, ஆருவை  நெருங்கியவன் அவளை இழுத்தணைத்துக்கொண்டு “இதுக்கு தான் வந்தேன்.. டேக் கேர்.. கெட் வெல் சூன்” என்றுவிட்டு அங்கிருந்து கிளம்பிட, ஆருவோ அவன் வார்த்தையில் செயலிலும் அதிர்ந்து அங்கேயே வேரூன்றி நின்றாள்.

Advertisement