Advertisement

அத்தியாயம் 5

காலை வேளை இனிதாய் புலர, அக்னி கதிரை அழைப்பதற்கு கிளம்பினான். அவர்கள் வீட்டினுள் நுழையும் முன் கதிரின் தாய் தேன்மொழி கதிரிடம் “அப்பாக்கு இன்னிக்கி தான் சம்பளம் போடுறாங்க டா.. அவர் வந்த அப்பறம் தான் சமைக்கனும்” என்றபடி அவனுக்கு காபி கொடுக்க, அதை வாங்கியவன் அமைதியாக பருகினான்.

கதிரின் குடும்பம் நடுத்தர குடும்பம் தான். கதிரின் தந்தை மாத வருமானத்தில் தான் அவர்கள் குடும்பம் வாழ்கிறது. என்னதான் ஏழ்மை நிலை வந்தாலும் கதிர் தன் நிலையை யாரிடமும் கூறியது இல்லை. இதனால் தான் அக்னிக்கு எப்போதும் அவன் மீது தனி அக்கறை உண்டு.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே அக்னி நுழைய, தேன்மொழி அமைதியாகினார். அக்னி “தேன்மா கதிரை அம்மா கூப்டாங்க”
“ஹான் கூட்டிட்டு போ தங்கம்” என்றவர் அடுக்கலைக்குள் நுழைய அவரை பார்த்து ஒரு பெருமூச்சுடன் கதிர் வெளியேறினான்.

கதிரை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றவன் “மா கதிரை கூப்பிடிங்கள” என்று கண் காட்ட அதை புரிந்துகொண்டவர் “ஆமா கதிரு.. நான் இன்னிக்கி ஒரு புது டிஷ் ட்ரை பண்ணேன் இந்த அக்னி பைய சாப்பிட்டு ஒன்னுமே சொல்ல மாட்றான் அதான் உன்ன கூப்பிட சொன்னேன்” என்றபடி காலை உணவை பரிமாறினார், கதிரும் “அவன் கிடக்குறான் டெஸ்ட்லெஸ் பாய்.. நீங்க கொடுங்க நான் சொல்றேன்” என்றபடி உண்டான்.
பின் கல்பனா ஒரு டப்பாவை அக்னியிடம் கொடுத்து “அக்னி இதை தேன் கிட்ட கொடுத்து எப்படி இருக்குன்னு கேட்டு சொல்லு” என்று அவனை அனுப்பிவைக்க அவனும் அதை பெற்றுக்கொண்டு சென்றான்.

செல்லும் வழியில் சில பொருட்களை வாங்கிக்கொண்டு சென்றவன் தேனிடம் “மா இதை அம்மா உங்ககிட்ட கொடுக்க சொன்னாங்கா.. அப்பறம் இது கதிரோட அப்பா கொடுத்தார்.. அவருக்கு ஏதோ வேலைக்கு சீக்கிரம் போகனுமாம் அதான் கொடுத்துவிட்டார்” என்றுவிட்டு தான் வாங்கிக்கொண்டு வந்த காய்கறிகளையும் சில பொருட்களையும் கொடுத்துவிட்டு சென்றான்.

______________

அவசர அவசரமாக கிளம்பிய ஆத்ரேயன் கிஷோரை அழைக்க அவன் இல்லம் சென்றான். வாசலில் வெகு நேரம் ஹாரன் அடித்தும் கிஷோர் வராததால் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றான்.

தேவன் சோபாவில் அமர்ந்து கிஷோரை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிக்கொண்டிருக்க, அவர்களை புரியாமல் பார்த்தவன் தேவனிடம் ஏதோ கேட்பதற்கு முன் கிஷோர் ‘கேட்காதே’ என்பதாய் கண் காட்ட, ஆத்ரேயன் அமைதி காத்தான்.

தேவன் நேரமாவதை உணர்ந்து அவர்களை அனுப்பிவிட , விட்டா போதும் என கிஷோர் ஓடி சென்று காரில் ஏறிக்கொண்டான். ஆத்ரேயன் காரை கிளம்பினான். சில நிமிட மௌனத்திற்கு பிறகு, ஆத்ரேயன் “என்னடா ஏதாவது பிரச்னையா” என்று அக்கறையாக கேட்க, அவனை பாவமாக பார்த்தவன் “சட்டையோட மேல் பட்டன் போடல டா” என்றான், அவன் கூற்றில் புரியாமல் விழித்தவன்,
“அப்பா ஏன் திட்டுனாருனு கேட்டா என்னடா உளருற”
“உளறல மச்சான்.. சட்டை பட்டனை போடலன்னு தான் மனுஷன் அரைமணி நேரமா லெக்சர் எடுத்தாரு” என்றிட, ஆத்ரேயன் சிரித்தான்.
கிஷோர் “பார்த்தியா எப்படி போய் சிக்கிருக்கேன்னு..” என்று தலையில் அடித்துக்கொள்ள ஆத்ரேயன் கண்ணில் நீர் வரும் வரை சிரித்தான்.

கல்லூரி வரும் வரை சிரித்துக்கொண்டிருந்த ஆத்ரேயனை முறைத்த கிஷோர் “அவனவன் படுற கஷ்டம் அவனவனுக்கு தான் தெரியும்” என்று முணுமுணுக்க,
அப்போதும் ரேயனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

__________

கல்லூரியில் வண்டியை நிறுத்திவிட்ட கதிர் அக்னியிடம் “மச்சான் நீங்க முன்னாடி போங்க.. நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரேன்”
அக்னி “அதெல்லாம் எங்கேயும் போக வேண்டாம் உள்ள வா”
“இல்லடா அம்மா சிலது வாங்கிட்டு வர சொன்னாங்க” என்று பேசும்போதே தேன் அழைத்திருந்தார்,கதிர் அழைப்பை ஏற்ற போது அக்னி பெண்கள் இருவரையும் வகுப்பறைக்கு செல்லும்படி கூறினான். ஆரு நேஹா சென்றுவிட, அக்னி மட்டும் நின்றுக்கொண்டிருந்தான்.

கதிர், “ஹலோ மா.. இதோ வாங்கிட்டு வரேன்” என்னும்போதே தேன்மொழி “தம்பி நீ கொடுத்தன்னு அக்னி மளிகை பொருள் எல்லாம் கொடுத்திட்டு போச்சே”
“அக்னி கொடுத்தானா” என்று அவன் அக்னியை நிமிர்ந்து பார்க்க, அக்னி அவன் கையிலிருந்த அலைபேசியை பிடிங்கி “மா எங்களுக்கு நேரமாகுது வீட்டுக்கு வந்து பேசுறோம்” என்று அழைப்பை துண்டித்துவிட்டு கதிரிடம் அலைபேசியை கொடுத்தவன் “அவங்ககிட்ட எதுவும் சொல்லாத” என்று முறைத்துவிட்டு சென்றிட, கதிரும் அவனை மௌனமாக தொடர்ந்தான்.

அக்னி சென்று அமர்ந்துவிட கதிர் “டேய் வெளியா வா”
“முடியாது” என்று அக்னி அமர்ந்திருக்க,
கதிர் “ஏன் மச்சா இப்படி பண்ற.. எதுக்கு தேவையில்லாம செலவு பண்ணுற” என்று கேட்ட மறுநொடி அக்னி அவனை அறைந்திருந்தான்.
அக்னி “என்ன சொன்ன திருப்பி சொல்லு” என கண்ணில் அனல் பறக்க கேட்க,
கதிர் “தேவ இல்லாத செலவு தான” என்றபோது மீண்டும் அறைந்திருந்தான்.
அக்னி “என்ன சொன்ன” என்று அடிக்குரலில் கேட்க இம்முறை கதிர் பதிலளிக்கவில்லை.

ஆராத்யா “டேய் எதுக்குடா அவனை அடிக்கிற” என்று கண்கள் சுருக்கி கேட்க, அக்னி கதிரை இழுத்துக்கொண்டு வெளியே சென்றான்.
“டேய் சொல்லிட்டு போடா.. டேய்” என்ற ஆரத்யாவின் குரல் காற்றில் தான் கரைந்தது.
நேஹா “எதுக்குடி இப்படி கத்துற”
“இவ்ளோ கத்துறேன் மதிக்காம போறான் பாரு” என்று சிடுசிடுக்க,
நேஹா “கொஞ்சம் சுத்தி பாரு” என்றாள். அங்கிருந்த அனைவரும் அக்னி செல்வதை தான் பார்த்துக்கொண்டிருந்தனர்.
ஆரு “இருந்தாலும் அவன் என்கிட்ட சொல்லிட்டு போயிருக்கலாம்”
நேஹா “அப்படியே சொன்னா நீ அமைதியா கேட்டுக்குவ”
“…”
“அவன் முகமே சரியில்ல கிட்டி, ஏதோ டென்ஷன்ல இருக்கான்.. அவனே வந்து சொல்லுவான்” என்று சமாதானம் செய்ய ஆருவும் சரி என்பதாய் தலையசைத்தாள்.

அக்னி சென்ற சிறிது நேரத்தில் ஆத்ரேயன் வங்குப்பினுள் நுழைய,
ஆரு ‘ஐய் நம்ம ஆளு’ என குதூகளித்துக்கொண்டு நேஹாவிடம் “கிட்டி கிட்டி அவன் வந்துட்டான்.. நான் போய் ஒரு ஹாய் சொல்லிட்டு வரட்டா”
“மூடிட்டு இருந்தா சால சிறந்தது”
“முடியாது… நான் போவேன்” என்று அவள் எழும்போது குமரன் உள்ளே நுழைந்தார்.

குமரன் “வணக்கம் மக்களே” என்று ஆரம்பிக்க,
கிஷோர் “பார்த்தியா இவர ஏதோ பிரச்சாரம் பண்றதா நினைப்பு”
ரேயன் “……”
“நான் செவித்துகிட்ட பேசுறேன்ல”
“இல்லையே என்கிட்ட” என்றவனை பார்த்து தலையில் அடித்துக்கொண்டவன் “ச்சை இதுக்கு நான் அவரோட பிரச்சாரத்தையே கவனிப்பேன்”
“நல்லது”
“என்ன இவன் போற போக்குல நம்மள அசிங்க படுத்துறான்.. ஒரு போலீஸ் பிள்ளைக்கு மரியாதையை இல்ல”
“அவர் உன்ன பிள்ளையவே மதிக்கில”
“இது உச்சகட்ட அவமானம்.. நான் போறேன்” என்று ஒரு பேச்சிற்கு சொல்ல, ஆத்ரேயன் அவனை தள்ளிவிட்டான். அவன் அவ்வாறு தள்ளி விடுவான் என்றுதெரியாததால் கிஷோர் விழாமல் இருக்க எழுந்து நின்றான்.

கிஷோர் நிற்பதை பார்த்து குமரன் “என்னடா அறிவாளி எங்க போற.. கிளாஸ் ஏதாவது எடுக்க போறியா என்ன” என்று கேட்க,
கிஷோர் “எடுக்கவா.. ஐ டோன்ட் மைண்ட்” என்றவனை பார்த்து விழி விரித்தவர்,
“இதோ இரு.. hod கிட்ட நமக்கு ஒரு புது ஸ்டாப் கிடைச்சிருக்காங்கன்னு சொல்லிட்டு வரேன்”
“இல்ல இருக்கட்டும்.. ஏன் வயசானவரை அலைய விடுறீங்க.. நான் போய் என் இருக்கையில் அமருகிறேன்” என்றவனை பார்த்து அனைவரும் முகத்திலும் புன்னகை மலர்ந்திருந்தது.

தன் இருக்கைக்கு வந்தமர்ந்த கிஷோர் “ஏன்டா.. எல்லாரும் சிரிக்கிறாங்க.. என் வைட் சுடி கூட சிரிக்கிறா” என வருத்தப்பட
ஆத்ரேயன் “மூடிட்டு இரு இல்லனா அடுத்து hod தான்”
“இருக்கட்டும்.. நான் இந்த செவுரு கிட்டயே பேசுவேன்.. ஹாய் செவிர் அண்ணே.. எப்படி ண்ணே இவ்ளோ வெள்ளைய இருக்கீங்க” என சுவருடன் பேசியவனை பார்த்த மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டான் ஆத்ரேயன்.

குமரன் “சரி நான் இன்னைக்கு ரெண்டு முக்கியமான விஷயம் பேச வந்திருக்கேன்”
அனைவரும் ஒன்று போல் “என்ன விஷயம் சார்” என்று கேட்க,
“சொல்றேன் சொல்றேன்.. முதல உங்க கிளாஸ்க்கு ஒரு ரெப் (rep) போடணும்.. ம்ம்ம்” என அங்கிருந்தவர்களின் மீது பார்வையை செலுத்தியவர் சிவாவை தேர்வு செய்தார்.

குமரன் “எடுத்து என்னன்னா.. அது ஒரு இடம்.. அங்க புகை எல்லாம் வரும்.. ஆல்கஹால் வசனை வரும்.. கலர் கலர் பொடி கூட வச்சிருப்போமே” என்று குறிப்பு கொடுக்க,
கிஷோர் “என்ன சொல்ல வராரு இவரு” என அவரை பார்க்க, அங்கிருந்த அனைவரும் அதே போல் அவரை பார்த்துக்கொண்டிருந்தனர்.
குமரன் “என்னப்பா அப்படி ஒரு இடம் இருக்கா இல்லையா” என்று கேட்க,
கிஷோர் “சார் என்ன ஏதாவது அய்யனார் கோவிலுக்கு கெடா வெட்ட போறோமா” என்று ஆவலாக கேட்க
குமரன் “ஏன் டா தங்கோ அப்படி சொல்றிங்க”
“பின்ன என்ன சார்.. சரக்கு.. கலர் பொடின்னு சொல்லிட்டு இருக்கீங்க.. ஆனா சிக்கன் தான் மிஸ்ஸிங்”
என வருத்தப்பட, குமரன் தலையில் அடித்துக்கொண்டு “உன் மூளை என்னைவிட மட்டமா யோசிக்கிது டா” என்று அவனை வார,
ஆத்ரேயன் “சார் லேப் பத்தி தான சொல்ல வரிங்க..” என்று அவர் கூற வந்ததை கேட்க,
குமரன் “இதுக்கு தான் கிளாஸ்ல ஒரு அறிவாளி வேணுங்கிறது.. டேய் கிஷோரே கத்துக்கோ அவன்கிட்ட” என்றார்.

இங்கு ஆரு “பாரு கிட்டி.. என்ன பிரில்லியன்ட் பெல்லோ” என ஆர்பரிக்க,
நேஹா “அவர் போடுற மொக்கை தாங்காம அவனே வெறுப்பாகி கேட்குறான் இதுல எங்க அவன் பிரில்லியன்சி உனக்கு தெரியுது”
“அதெல்லாம் என் கண்ணுக்கு மட்டும் தான் தெரியும்” என்றிட, நேஹா தலையில் அடித்துக்கொண்டாள்.

குமரன் “சோ இன்னில இருந்து உங்களுக்கு ப்ராக்டிகள்ஸ் இருக்கோம்.. நான் குரூப் பிரிக்க போறேன்.. இது randomஆ தான் நடக்கும், உங்களுக்கு யார் கூட வருதோ அவங்க கூட தான் நீங்க எல்லா லேப் அப்பறம் ப்ரொஜெக்ட் செய்வீங்க” என்றார்.

அங்கு கதிரை அழைத்து சென்ற அக்னி அவனை தீயாய் முறைத்தபடி “என்னடா நினைச்சிட்டு இருக்க”
கதிர் “நான் என்ன பண்ணேன்”
“பல்ல கழட்டிடுவேன் ராஸ்கல்.. என்னடா அவ்ளோ பிரெஸ்டீஜ் உனக்கு.. என்கிட்ட சொன்னா என்னடா”
“இல்லடா அது..”
“என்னடா அது இது.. உன்னோட வீணா போன கௌரவத்தாலா அம்மவை பட்னி போடுவியா”
“இல்ல அக்னி அம்மாக்கு அது பிடிக்காது டா.. யார்கிட்டயும் உதவி கேட்குறது” என சிறுகுரலில் கூற,
அக்னி அவனை உறுத்து விழித்தான்.
கதிர் “ஏதாச்சும் பேசு டா”
“நான் என்னடா பேசணும்.. அதான் நான் யாரோ ஆகிட்டேன்ல”
“டேய் ஏன்டா இப்படி பேசுற”
“இல்ல பின்ன என்னங்குறேன்.. மத்தவங்களுக்கு நாங்களும் ஒன்னா.. ஒரு வார்த்தை என்கிட்ட சொல்றதுல என்னடா குறைஞ்சிட போற.. நான் மட்டும் இன்னிக்கு கேட்களனா அப்படியே இருந்திருப்பீங்களா ரெண்டு பேரும்.. பாவம் அப்பாவும் அப்படியே தான் போயிருப்பாருல” என்று முறைக்க, கதிர் தலை குனிந்து “சாரி டா”
“போடா.. போய்ட்டு.. எதுவும் பேச ட்ரை பண்ணாத இன்னிக்கு.. அப்பறம் கண்ணா பின்னானானு அடி வாங்குவ” என்றவன் தன் தலை கோதி தன்னை சமன் செய்தான். பின் “இன்னிக்கி நீ ஒன்னும் பாப்பாவை கூப்பிட வேண்டாம்.. நான் கூப்பிட்டு வந்துக்குறேன்.. அம்மாகிட்ட சொல்லிடு” என்றுவிட்டு விறுவிறுவென வகுப்பை நோக்கி சென்றான். அக்னி பாப்பா என்றது வேறு யாருமல்ல கதிரின் தங்கையை ஸ்மிருதியை தான்.

குமரன் குரூப் பிரிக்கவும் அக்னி உள்ளே வரவும் சரியாக இருந்தது.
அக்னி “excuse மீ சார்”
“யாரு பா அது சிங்கம் 2.. ஓ நீயா வா வா உள்ள வா”, அக்னியுடன் நுழைந்த கதிர்
“அது என்ன சார் சிங்கம் 2”
“இல்ல ஆல்ரெடி இந்த கிளாஸ்ல ஒரு சிங்கம் இருக்கு.. அதான் சிங்கம் 2”
“நீங்க சாரே இல்ல” என்று கதிர் கூற,
குமரன் “ஏன்டா எதாவது அசிங்கமா சொல்ல போறியா”
“தெய்வம் சார் நீங்க”
“நல்ல வேளை நேரடியா அசிங்க படுத்தல.. போ பா போ” என்றார். அக்னி எதையும் கண்டுகொள்ளது தன் இடத்திற்கு சென்று அமர்ந்தான்.

நேஹா அவ்வளவு கூறியும் கேட்காது, அக்னி வந்தவுடன் ஆரு “டேய் என்னடா சொல்ல சொல்ல கேக்காம போற”
நேஹா”ஹை சும்மா இருடி.. கத்த போறான்”
“நீ சும்மா இரு.. சொல்லுடா என்ன.. கூப்பிட கூப்பிட நிக்காம போற” என்றவளை அக்னி முறைக்க, அவள் முகம் சுருங்கிவிட்டது.
எப்போதும் போல் அவள் முகம் வாடுவதை காண சகிக்காது “வாயா மூடிட்டு இரு கொஞ்ச நேரம்.. நானே சொல்றேன்”
ஆரு “ஒகே”
“இதை தானடி நானும் சொன்னேன்”
“அதை அவன் தான் சொல்லணும்”
“ச்ச பைத்தியங்க” என நேஹா தலையில் அடித்துக்கொண்டாள்.

குமரன் குழுவை பற்றி கூறும் போதே கிஷோர் “ஆண்டவா அந்த வைட் சுடி என் கூட வரணும்.. இவன் என் கூட வரவே கூடாது”
ரேயன் “எதே”
“ஆமாடா நீ வந்தா நான் குரூப் மாத்திடுவேன்”
“யார் யாரை மாத்துறங்கன்னு நான் பாக்குறேன்”
“அய்யோ சைத்தான் ஏதோ முடிவெடுத்துட்டான் போலயே” என அமர்ந்திருக்க,
ஆரு தான் கடவுளிடம் பலத்த மனு வைத்தாள். ஆதாகப்பட்டது என்னவென்றால் ஆத்ரேயன் அவன் குழுவில் வர வேண்டுமாம் பா.

குமரன் “சரி நோட் பண்ணிக்கோங்க.. பிரகாஷ், மீனா, கீதா, சஞ்சீவ் குரூப் 1..
தேவ், நதியா, ஆதி, ரீனா குரூப் 2..
நேஹா, அக்னி, கதிர், ஸ்வேதா குரூப் 3..
ஆத்ரேயன், கிஷோர்,ஸ்ருதி லாவண்யா குரூப் 4”
“ஆராத்யா, நேத்ரன், விஷ்வா, காயத்ரி கிருத்திகா குரூப் 5..
கடைசி குரூப்ல மட்டும் அஞ்சு பேர்” என்றிட,
அக்னியின் முகம் சுருங்கியது. ஒரு பக்கம் ஆரு அவர்களுடன் இல்லையென வருந்தினாலும் மறுபக்கம் அவள் ஆத்ரேயனுடன் இல்லை என்ற நிம்மதி இருக்க தான் செய்தது.
ஆருவிற்கு தான் இதயமோ தூள் தூளாக உடைந்தது.
ஆரு “போயா யோவ்” என்று உணர்ச்சிவசத்தில் கத்திவிட
குமரன் “யாருமா அது.. என்ன சொல்லலையே”
ஆரு “உங்கள இல்ல போங்க”
“நல்ல ஸ்லாங்டா மா.. வந்து சேருங்க லேப்க்கு” என்றுவிட்டு திரும்ப, ஒரு பெண் எழுந்து “சார் லாவண்யா காலேஜ் லீவ் ஆகிட்டாங்க சார்”
“ஓ அப்படியா அப்போ குரூப் 5 யோட முதல் ஆளை அதுல சேர்த்திடுங்க” என்றுவிட்டு சென்றார்.

குமரன் கூறியதை ஆராத்யா உணரவில்லை, அவள் தன் பொருட்களை அடுக்கி வைக்க,
கதிர் “அடியே நீ குரூப் 4”
ஆரு “சரி இப்போ என்ன அதுக்கு.. அதான் சொல்லிட்டு போனாரே”
நேஹா “கிட்டி நீ குரூப் 4 டி”
“அடிங்கு என்ன.. அதான் தெரியும்ல.. என்ன இப்போ..எப்படியும் உங்கக்கூட இல்ல தான..ஜாலியா இருங்க மூணு பேரும் ஒன்னா”
“ஆரு நீ குரூப் 5 இல்ல குரூப் 4” என்று ஆத்ரேயனை பார்த்துக்கொண்டே அக்னி கூற, ஆருவிற்கே அதிர்ச்சி தான் ஆனால் அதை கட்டிக்கொள்ளாமல்
“சரி அதுக்கென்ன இப்போ.. எப்படியும் உங்கக்கூட இல்ல.. போங்க” என்றவளை அக்னியே ஒரு கணம் நம்பிவிட்டான்.
அக்னி “சரி இரு நான் அவர்கிட்ட பேசி குரூப் மாத்த சொல்றேன்” என்றவுடன் அவளுக்கு தூக்கி வாரி போட்டது.
ஆரு “ஐயோ இல்ல இல்ல.. அவர் நீங்க வரதுக்கு முன்னாடியே தெளிவா சொல்லிட்டாரு குரூப் மாத்த கூடாதுன்னு.. தேவையில்லாத பிரச்சனை வேண்டாம் விடு”
“சியூரா”
“ம்ம் ம்ம்” என்றவளை நேஹா வாயில் கைவைத்து “மஹா நடிகை கிட்டி நீ” என்றாள் கிசுகிசுப்பான குரலில். ஆருவும் கண்ணடித்துவிட்டு லேப் செல்ல போக, அங்கு வந்த குமரன், “பசங்களா கொஞ்சம் வார்க் போறதால நம்ம நெக்ஸ்ட் லேப்ல பார்த்துக்கலாம்” என்றிட,
ஆருவிற்கு ஐயோ என்றானது ஆனால் இன்று அவனுடன் பேசியே ஆக வேண்டும் என்று அவள் முடிவெடுத்து விட்டாள்.

ஆரத்யாவை போல் இன்னொரு ஜீவனும் ஆத்ரேயன் மீது சிந்தையை வைத்திருந்தது. அது வேறு யாருமல்ல ரீனா.

மாலை வகுப்புகள் முடிந்தவுடன் மாணவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் செல்ல, ஆராத்யா அக்னியை எப்படி அனுப்ப என்று தீவிர சிந்தனையில் இருந்தாள், சரியாக அவளுக்கு ஒரு திட்டமும் சிக்க, அக்னியிடம் சென்றவள் “அகி நீ கிளம்பு நான் கோவில் போய்ட்டு வரேன்”
“வா நானும் வரேன்”
“எப்படியோ நீ உள்ள வர மாட்ட, அப்பறம் எதுக்கு.. நான் கிட்டிய கூட்டிட்டு போறேன்.. நீங்க கிளம்புங்க” , அக்னியும் ஸ்மிருதியை அழைத்து வர வேண்டி இருந்ததால் அவனும் ஒத்துக்கொண்டான்.

நேஹா ‘ரைட்டு ஏதோ பிளான் போட்டுட்டா’ என்று நினைத்துக்கொண்டாள்.

அக்னியும் கதிரும் கிளம்பிவிட,
நேஹா “அவன் ஏதோ மூட் ஆப்ல இருந்ததால தப்பிச்ச மகளே.. அடுத்து என்ன அவன்கிட்ட பேசுறது தான”
“ஹே பிடி பிடி”
“எதை”
“உன் அறிவு தான் கிட்டி.. வழியுது பார்”
“போடி.. நீ என்னமோ பண்ணு.. போகும்ப் போது கால் பண்ணு.. நான் லைப்ரரி போறேன்”
“ஏன் ஏன்”
“அகிக்கு அவனை புடிக்கில.. சோ நான் அவன்கிட்ட பேச விரும்பல”
“….”
“என்ன கிட்டி சோகமாகிட்ட”
“எனக்கு அவனை பார்த்த தப்பா தெரியல.. ஆனா அகி”
“ஹே.. உனக்கு தோணுதுல.. அப்போ பேசு.. எதாச்சும் பிரச்சனை வந்தா அப்பறம் பார்த்துக்கலாம்.. அவன் பேசுறத வச்சு அவன் எப்படின்னு பாரு”
“ரைட்டு டி செல்லோ” என்றவள் ஆத்ரேயனை தேடி போகும் போது அவன் காரின் கதவை சாத்தினான்.
ஆரு “ஐயோ.. போச்சு.. சென்டிமெண்டா வசனம் பேசி டைம் வேஸ்ட் பண்ணிட்டியே டி” என புலம்பிக்கொண்டும் தன்னை திட்டிக்கொண்டும் பை எடுக்க வகுப்பிற்கு சென்றாள்.

வகுப்பில் பெண்கள் இருவர் அமர்ந்திருந்தனர் அதில் ரீனா ஒன்று.
ரீனா “ஹே அவன் செம்மையா இருக்கான்ல.. லைட்டா சிரிக்கிறான்.. யாரையும் ஓர கண்ணுல கூட பார்க்க மாட்டேன்கிறான்.. செம்ம ஸ்மார்ட்.. நான் பிக்ஸ் பண்ணிட்டேன் அவன் தான் என் ஆளு” என்று அவள் தோழியிடம் பேசிக்கொண்டிருக்க,
ஆரு “நம்மள மாதிரியே இதுவும் யாரையோ பத்தி பேசுது.. நீயாச்சு நல்லா இரு” என நினைத்துக்கொண்டு நிற்க,
கீதா “யாரை டி சொல்ற.. பெயர் என்ன”
ரீனா “ஆத்ரேயன் டி”,
ஆரு “எதே.. எடு செப்பல்ஸ்ஸ.. எவ அவ என் ஆளை அவ ஆளுன்னு சொல்றது” என பொறாமையில் பொங்கினாள், எல்லாம் மனதினுள் தான்.

ரீனா “இன்னிக்கி அவன்கிட்ட பேச போனேன்.. அவன் கண்டுக்க கூட இல்ல.. சோ திரும்ப வந்துட்டேன்.. நாளிக்கி தான் பேசணும்” என்னும் போதே உள்ளே நுழைந்த ஆராத்யா, “நீ நாளனிக்கி போனாலும் அவன் பேச மாட்டான்”
கீதா “ஹே யாரை பத்தி பேசுற நீ”
“நீங்க பேசுற ஆளை பத்தி தான்.. என் ஆளை பத்தி தான் பேசுறேன்.. என் அத்துவை பத்தி தான் பேசுறேன்” என்று ஒவ்வொரு வார்தையிலும் அழுத்தம் கொடுத்து பேச,
ரீனா “எது உன் அத்துவா.. சும்மா விளையாடாமா போ அப்படி”
“அட என்ன ரீனு நீ.. ஒரு பையன் இப்படி எந்த பெண்ணையும் பார்க்கலனா என்ன அர்த்தம்”
கீதா “என்ன அர்த்தம்”
“வேற எவளையாச்சு பார்த்தா.. கண்ணை நோண்ட ஒருத்தி இருக்கானு அர்த்தம் அண்ட் தட்ஸ் மீ புரிதோ”
“நீ அவன்கிட்ட பேசியே நான் பார்க்கல அப்புறம் எப்படி நீ சொல்றத நான் நம்பனும்”
அத்துக்கு எக்ஸ்போசிங் லவ் பிடிக்காது.. அவன் அப்படி பட்ட ஆளும் இல்ல.. இப்போ கூட என்ன கோவிலுக்கு வர சொல்லிட்டு தான் போனான்.. ஓ வெயிட்.. இதெல்லாம் நான் ஏன் உங்ககிட்ட சொல்லுறேன்… நான் ஏன் உங்ககிட்ட ப்ரூவ் பண்ணனும்.. சொல்றத சொல்லிட்டேன் அப்பறம் உன் இஷ்டம்” என தோளை உலுக்கியவளை பார்த்து ரீனா முறைத்துக்கொண்டே செல்ல ஆராத்யா உருண்டு பிரண்டு சிரித்தாள்.

ஆரு “ஹையோ ஹையோ.. யார் பெத்த பிள்ளையயோ நான் சொல்றதெல்லாம் அப்படியே நம்புது.. ஹாஹா… இதெல்லாம் அவனுக்கு தெரியனுமே” என அத்துவை நினைத்து சிரித்துக்கொண்டே திரும்ப அங்கு கதவில் சாய்ந்தபடி இவளை பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் ஆத்ரேயன்.

தொடரும்..

Advertisement