Advertisement

                          அத்தியாயம் 3

நட்சத்திர போர்வை போர்த்தி, நிலவின் மங்கிய ஒளியில் அந்த இரவு மிகவும் ரம்மியமாக காட்சி அளித்தது ஆனால் அதை ரசிக்கும் மனம் இல்லாது அங்கும் இங்கும் நடை பயின்றுகொண்டிருந்தாள் ஆராத்யா. அக்னியின் வீட்டிலிருந்து வந்தது முதல் இப்போது வரை (அதாவது இரவு பத்தரை மணி) அக்னி அவளுக்கு அழைக்கவில்லை அது தான் அம்மணியின் நடை பயிற்சிக்கு காரணம்.

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்தவள் அவன் இல்லத்திற்கு செல்ல முடிவெடுத்து கீழிறங்கினாள். அவள் அவசரமாக இறங்குவதை பார்த்த சிவா , “ஹே குட்டி பிசாசு எங்க போற”
“அந்த அகி பைய வீட்டுக்கு தான்.. இன்னும் அவன் என்கூட பேசவே இல்லை.. இன்னிக்கி அவனை ஒரு வழி பண்ணாம விட மாட்டேன்” என்க, நிலா “புள்ள தூங்கிருப்பான் டி” என்று நேரத்தை பார்த்து கூற, ஆரு “இங்க உன் புள்ள தூங்காம முழிச்சிட்டு இருக்கே அது தெரியலையா உனக்கு” என்று முறைக்க,
நிலா “அவன் நல்ல புள்ள டி.. நீ தான் அவனை படுத்துற.. சின்ன வயசுல இருந்து” என்று சலித்துக்கொள்ள,
சிவா “அதான் இப்போவும் உசுர வாங்க போற” என்று மகளை வாரினார்.

அவர்கள் கலாய்ப்பதை அமைதியாக பார்த்தவள் “உங்க காமெடியெல்லாம் முடிஞ்சிதா.. போங்க போய் தூங்குங்க.. நான் காலைல வரேன்”
சிவா “ஏன்மா எனக்கு பொறந்தது பொண்ணு மா.. இப்படி நைட் டைமல தனியாவா போற” என்று கலாய்க்க ஆரம்பித்து அக்கறையாய் வினவ,
ஆரு “அதெல்லாம் கவலை படாதீங்க சிவா ஒரு குரங்கை இழுதிட்டு தான் போறேன்” என்றவள் கதிரின் இல்லத்திற்கு சென்றாள்.

நன்றாக இழுத்து போர்த்திக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தவனை தண்ணீர் ஊற்றி எழுப்பியவள் “பத்தரை மணிக்கு என்ன தூக்கம் அதுவும் இழுத்து போர்த்திக்கிட்டு” என்று கண்களை உருட்ட, கதிர் தான் “அடி கிறுக்கி.. தூங்குறது ஒரு குத்தமா” என்றவன் உடை மாற்றிக்கொண்டு அவளுடன் அக்னியின் இல்லத்திற்கு சென்றான்.

ஆருவை எதிர்பார்த்தது போல் அக்னி சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தான். அக்னியின் வீட்டிற்கு வந்தவள் நேராக அவன் சட்டையை பிடித்து “என்னடா அவ்ளோ தைரியமா உனக்கு.. என்கூட பேச மாட்டியா” என்று கத்த அவள் சத்தம் கேட்டு வெளியே வந்த ஜெகதீஷ் (அக்னியின் தந்தை) “ஆரு குட்டி என்னடா இந்த நேரத்துல”
“எல்லாம் இந்த பையனால தான் டாடி.. இவன் என்கூட பேசவே இல்ல.. அதுவும் மதியத்துல இருந்து” என்று முகத்தை சுருக்க, ஜெகதீஷ் அக்னியை ஒரு பார்வை பார்த்தார்.

அவர் பார்வையை கண்டும் காணாதது போல் ஒரு தட்டில் உணவை எடுத்துக்கொண்டு ஆருவை அழைத்துக்கொண்டு மாடிக்கு சென்றான். கதிர் பாதி உறக்கத்தில் நின்றுகொண்டிருக்க அவனை பார்த்த ஜெகதீஷ் “என்னடா எப்படி படிக்கிற” என்று தன் கம்பீர குரலில் கேட்க, கதிர் மிரண்டு ‘ஆத்தி இவர்கிட்ட தனியா மாட்டிவிட்டுட்டு போய்ட்டாளே’ என நினைத்துக்கொண்டு “ஆன்.. நல்லா படிக்கிறேன்பா” என்றவன் நைசாக மாடிக்கு நழுவினான்.

ஆராத்யா அக்னியை முறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். ஆரு “டேய் இப்போ பேசுவியா மாட்டியா”
அக்னி “ஆ காட்டு”
“ஆமா நான் சாப்பிட்டிருக்க மாட்டேன்னு தெரியும் ஆனா சார் பேச மாட்டாரு” என்று முறைத்துக்கொண்டே வாங்கியவள் “நீயும் சாப்பிட்டிருக்க மாட்டேன்னு தெரியும் இந்தா” என்று அவளும் அவனுக்கு உணவை ஊட்டினாள். கதிர் “மச்சா எனக்கு” என்று அவர்கள் அருகே அமர அவனுக்கும் உணவை ஊட்டினான்.

கதிர் “இங்க நம்ம ஜாலியா சாப்பிட்டு இருக்கோம் அங்க ஒருத்தி என்ன நடக்குதுன்னு தெரியாம மண்டைய பிச்சிட்டு இருப்பா” என்று கூற, அக்னி புன்னகையுடன் நேஹாவிற்கு அழைத்தான். முதல் ரிங்கிலே அழைப்பை ஏற்றவள் “அகி என்னடா ஆச்சு.. அவகிட்ட பேசுனியா.. அவ சாப்பிட்டாளா.. நீ சாப்டியா, இந்த கதிரோட வீட்ல வேற யாரும் இல்லை அவன் சாப்பிட்டானா.. நீ எங்க இருக்க” என்று படப்படத்தவளை நினைத்து உள்ளுக்குள் புன்னகைத்தவன் “ஒரு நேரத்துல ஒரு கேள்வியா கேளேன்டி..”
“ஹான் சரி.. சாப்டாச்சா” என்று கேட்க, “கொஞ்சம் பால்கனி வா” என்றிட, இவளும் வெளியில் வந்தாள். நேஹாவின் அறையியிலிருந்து பார்த்தாள் அக்னி வீட்டின் மாடி நன்றாக தெரியும். மூவரையும் அங்கு கண்டவள் “அகி ஸ்பீக்கர்ல போடு” என்றாள்.
ஆரு “சொல்லு கிட்டி”
நேஹா “செருப்பு நாயே என்ன விட்டுட்டு நீங்க மட்டும் ஜாலியா இருக்கீங்களா.. இரு நானும் வரேன்” என்று கிளம்பியவளிடம் அக்னி “நேஹா இப்போ வேண்டாம் நீ போய் தூங்கு போ”
“இதெல்லாம் நல்லா இல்ல.. நீங்க மட்டும் அங்க இருக்கீங்க”
“அதெல்லாம் எங்களை நாளைக்கு பார்த்துக்கலாம் ஒழுங்கா போய் தூங்கு” என்று கட்டளையாக கூற அவளும் மனமே இல்லாமல் அழைப்பை துண்டித்தாள்.

ஆரு “பாவம் அகி அவ”
அக்னி “ஹே அவளுக்கு இங்க வந்தா தூக்கம் வராது.. நைடெல்லாம் இங்க இருந்து கொட்ட கொட்ட முழிச்சிட்டு இருக்காம அங்கயாவது படுத்து தூங்கட்டும் விடு” என்றிட அவளும் சரி என்றாள்.

அக்னி “சரி வாங்க கீழ போலாம்” என்று எழும்ப ஆரு அமைதியாக அமர்ந்திருந்தாள். அவள் செய்கையை கண்டு புன்னகைத்தவன் அவள் அருகே சென்று அவளை தோளோடு அணைத்துக்கொண்டான். அக்னியை தொடர்ந்து கதிர் அவளின் மறுபக்கம் வந்து அணைத்துக்கொண்டான். இதை பார்த்த நேஹா அவளுக்கு அழைத்து “போங்க உங்க எல்லாருக்கும் பேய் கனவு தான் வரும்.. ஹேட் யூ ஆல்” என்க,
ஆரு “லவ் யூ டி கிட்டி.. மார்னிங் பார்ப்போம்” என்று அவளுக்கும் பறக்கும் முத்தத்தை கொடுத்துவிட்டு அழைப்பை அணைத்தாள்.

மூவரும் கீழே வர, எப்போதும் போல் அக்னி ஆருவிற்கு ஒரு அறையை கொடுத்துவிட்டு கதிருடன் தன் அறைக்கு சென்று படுத்துக்கொண்டான்.

மறுநாள் காலை ஐந்து மணிக்கே ஆருவை அவள் வீட்டில் விட்டவன் கதிரையும் வீட்டிற்கு அனுப்பினான்.

ஆரு தன் காலைக்கடன்களை முடித்துவிட்டு உற்சாகமாக கிளம்பிக்கொண்டிருந்தாள், அப்போது தான் முன்னாள் ஆத்ரேயன் ஒரு பெண்ணை அணைத்த காட்சி அவளுக்கு நினைவு வர ‘யாரா இருக்கும்.. அவ்ளோ உரிமையா கட்டிபிடிச்சா.. ஒருவேலை அவளோட தங்கச்சியா.. ஆனா தங்கச்சினா எப்படி இதே காலேஜ்ல பர்ஸ்ட் இயர் படிப்பா.. யாரா இருக்கோம்’ என தன் மூளையை கசக்கி பிழிந்து யோசிக்க,
சிவா “ஹே ஆரு அங்க பாரு பல்லி” என்று கத்த,
“எங்க இருக்குன்னு சொல்லுங்க பாகிட்ல போட்டுக்கிட்டு போறேன்” என்று அசட்டையாக கூறியவளை பார்த்த நிலா சிவாவிடம் “அவ என்னிக்கி இதுக்கெல்லாம் பயந்திருக்கா.. அவ பயப்படுறது ரெண்டே விஷயத்துக்கு தான் ஒன்னு பேய் அது ஊருக்கே தெரியும் இன்னொன்னு கண்ணாக்கு அதை காட்டி மாட்டா”
“ஆமா ஆமா அந்த வளந்து கேட்டவனை பார்த்து நான் நடுங்குறேன்.. போ மா போமா போய் அவனுக்கு பூஸ்ட் ரெடி பண்ணு..  அவன் வந்திடுவான் அலாரம் clock மாதிரி”.

சிவகுமார் “அவன் மட்டும் இல்லனா நீ சொர்ணா தங்கச்சி ஆகிருப்ப, இப்போவும் ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்ல தான் ஆனா ஏதோ கொஞ்சமே கொஞ்சம் கன்ட்ரோல்ல இருக்க” என்று அவர் ஆருவை வார,
ஆரு “அது என்ன சொர்ணா தங்கச்சி”
“அதான் உங்க அம்மா இருக்காளே சொர்ணாக்கா அதான் நீ சொர்ணா தங்கச்சி.. ஈஈஈ”, ஆரு தலையில் அடித்துக்கொண்டு “ஐயோ என்ன மூளை.. போங்க போய் ஆபீஸ் கிளம்புங்க.. இங்க யாரு எனக்கு அப்பானே தெரியல.. இவரா அவனானு” என்று முணுமுணுக்கும் போதே அக்னியின் வண்டி சத்தம் கேட்டது. சிவகுமார் “கண்டிப்பா அவன் தான்” என்று சிரிக்க, ஆரு “அய்யய்யோ இன்னும் சாப்பிட கூட இல்லை.. வந்தா திட்டுவான்” என அவசர அவசரமாக உண்ண அமர்ந்தாள்.
சிவா “ஹே காலேஜ்லயாச்சு கொஞ்சம் உன் வாலை சுருட்டிட்டு இரு.. இனிமேல் என்னால வாரத்துக்கு ஒருவாட்டி வந்து உனக்காக அப்பாலஜி லெட்டர் எழுத முடியாது” என்றுவிட்டு சென்றார்.

வாசலில் வண்டியை விட்டு இறங்கிய அக்னியை நோக்கி வந்த சிவா “டேய் அவளை பார்த்துக்கோ.. அப்பறம் என் பொண்டாட்டி உனக்காக பூரி சுடுறா சோ சாப்பிட்டு போ” என்றுவிட்டு அலுவலகம் கிளம்பிவிட்டார்.

காற்றில் அலைபாய்ந்த  அடர்ந்த கருங்கேசத்தை தன் விரல் கொண்டு ஒதுகியவாறே நுழைந்த அக்னியை கவனித்த ஆரு “குட் மார்னிங் அகி”
“ம்ம் குட் மார்னிங்.. சாப்டியா இல்லையாடி டைம் ஆகுது”
“அதெல்லாம் நாங்க சாப்பிடறோம் நீ போய்ட்டு உன் பூஸ்ட்டை குடி” என்று உண்ண தொடங்கினாள்.
நிலா “என்ன கண்ணா அவங்க ரெண்டு பேர் எங்க”
“நேஹாக்கு கால் பண்ணேன் அவ அப்போவே ரெடி ஆகிட்டேன்னு சொன்னா.. கதிரும் கிளம்பிட்டான்”
“சரி நீ சாப்டியா”
“ஹான் சாப்பிட்டேன் மா.. தோசை”
“உனக்கு தான் தோசை பிடிக்காதே.. இரு நான் உனக்கு சூட பூரி வைக்கிறேன்”
“இல்லாம இப்போ தான் சாப்பிட்டேன் சோ நீங்க அதை ஒரு டப்பால போட்டு கொடுங்க நான் அப்பறம் சாப்பிடுறேன்” ,
ஆரு “கொஞ்சம் வெயிட் பண்ணுங்க உங்க பூரியோட  வாசம் பிடிச்சே ஒருத்தன் பக்கத்து வீட்ல இருந்து வருவான் பாருங்க” என்று கூறும்போதே,
“மம்மி பசிக்கிது” என்று குரல் கொடுத்துக்கொண்டே நுழைந்தான் கதிர். அவனை தொடர்ந்து நேஹா வர, அக்னி “நேஹா சாப்டியா”
“ஹான் சாப்பிட்டேனே” என்று அவசரமாக பதில் கூறியவளை சந்தேகமாக பார்த்தவன், “நீ பொறுமையா பதில் சொல்லிருந்தா கூட நான் நம்பிருப்பேன் ஆனா நீ இவ்ளோ அவசரமா சொல்றியே அத தான் என்னால நம்ப முடியல.. ஆரு அவளுக்கு ஒரு பூரிய ஊட்டு” என்றிட,
ஆரு “எஸ் மை லார்ட்” என்றவள் நேஹாவிற்கு பூரியை ஊட்ட, நேஹா “அடியே வேண்டாம் டி” என மறுக்க முனைந்தவள் அக்னியின் அக்னி பார்வையில் அமைதியானாள்.
ஆரு “என் தலைவன் அக்னி பார்வைக்கு நாங்க அடிமை”
“யாரு நீ என் பார்வைக்கு.. நான் எதை செய்யாதன்னு சொல்றேனோ அதை தான் முதல செய்வ”
“ஈஈஈ” என்று இழித்தவளை பார்த்து தலையில் அடித்துக்கொண்டான்.

இவர்கள் இங்கு பேசிக்கொண்டிருக்க கதிர் சம்மந்தமே இல்லாமல் “மச்சான் நேத்து மேட்ச் பார்த்த” என கேள்வி கேட்க, ஆரு “இவன் என்னடா சீதைக்கு ராமன் சித்தப்பன் அப்படின்ற மாதிரியே எப்போவும் பேசுறான்”
நேஹா “அவன் அதுக்கும் மேல் ஆரு” , இவர்கள் பேசுவதை கவனிக்காமல் அவன் மீண்டும் நிலாவிடம் “மா பூரி சூப்பர்.. தயவு செய்து இதை என் தாய்க்கும் எங்க வீட்ல இருக்க பேய்க்கும் சொல்லி கொடுங்க” என்று பேச, ஆரு தான் அவனை வெறியாய் முறைத்தாள்.

நிலாவிடம் வாயோயாமல் பேசியனை ஆரு நன்றாக மொத்த, கதிர் “அடியே ஏன் டி இப்படி அடிக்கிற”
“ஹான் நேத்து நைட் எனக்கு பிடிச்ச ஹீரோ என் கனவுல வரல அதான்” என்று மீண்டும் அடிக்க, அக்னி வெடித்து சிரித்தான். நேஹாவும் நிலாவும் கூட அவள் கூறிய விதத்தில் சிரித்துக்கொண்டிருக்க, கதிர்  “என்ன மச்சான் இவ லூசு மாதிரி பேசுறா..”
“எல்லாம் ஒரு வேண்டுதல் தான்” என்று மீண்டும் அவனை மொத்திவிட்டு “மா நான் கிளம்புறேன். .இவனை நீயே சமாளி” என்றுவிட்டு வெளியில் செல்ல, அக்னி சிரித்துக்கொண்டே “சரிமா நானும் வரேன்.. சீக்கிரம் சாப்பிட்டு காலேஜ் கிளம்புங்க” என்று நிலாவிடம் கூறிவிட்டு வெளியேறினான்.

அக்னி வருவதர்குள் சிறிது தூரம் நடந்தவிட்டவளின் பையை பின்னிலிருந்து இழுக்க
“டேய் டேய் ஏன்டா இப்படி இழுக்குற”
“வாயாடி வா வந்து வண்டில ஏறு”
“ஹான் ஏறுறேன் ஏறுறேன்” என்று அவள் ஏறி அமர வண்டி கல்லூரியை நோக்கி சீறி பாய்ந்தது.

*************
ஆத்ரேயனின் இல்லத்தில் மெத்தையில் உறங்கிக்கொண்டிருந்த ஆத்ரேயனின் அலைபேசி அலற, தூக்க கலக்கத்திலேயே அதை ஏற்றான். மறுமுனையில் கிஷோர் “டேய் மச்சா சீக்கிரம் எழுந்திரி டா”
“ம்ம்ம்”
“டேய் லூசு பயலே எழுந்திரி டா.. லேட்டா போனா அவன் வெளிய நிக்க வச்சிடுவான்”
“ம்ம்ம்”
“ஐயோ ம்ம்ம் மோட்லயே இருக்கானே… நெக்ஸ்ட் சரி வரனும்.. அதுக்கு அப்பறம் தான் கிளம்புவான்.. டேய் ராசா எழுந்திரிடா” என்று கெஞ்ச அப்போதும் “ம்ம்ம்” என்ற பதிலே கிடைத்தது.
கிஷோர் “என் ராசா.. என் அப்பா வேற நைட் ஷிப்ட் முடிச்சி வீட்டுக்கு வந்துட்டாருடா.. மனுஷன் என்ன பாக்குறதுக்குள்ள கிளம்பனும் இல்லனா வச்சு அட்வைஸ் மழைய பொழிவாருடா” என்று தன் தந்தையை ஒரு சாக்காக வைத்து அவனை எழுப்பி,
“சரி ஒகே வரேன்” என்றான்.
கிஷோர் “ஹப்பா எழுந்துட்டான்” என்று அழைப்பை துண்டித்தான். இங்கு ஆத்ரேயன் எழுந்து குளித்து முடித்து கீழிறங்கினான்.

ஆத்ரேயனின் குடும்பத்தை பற்றி பார்ப்போம். ஆத்ரேயனின் தந்தை கண்ணன் கே. எஸ் குரூப்ஸின் எம் டி. பிள்ளைகளின் மேல் உயிரை வைத்திருப்பவர் ஆனால் அவர் பாசத்தில் சிறு கண்டிப்பும் இருக்கும், அவரை பற்றி இரு வார்த்தையில் கூற வேண்டும் என்றால் அவர் ஒரு Mr. perfect . ஆத்ரேயனின் கம்பீரம் யாரிடமிருந்து வந்தது என்று கண்ணனை பார்த்தால் புரிந்துவிடும் அத்தனை கம்பீரம் இருக்கும் அவர் பேச்சிலும் நடையிலும். கண்ணனின் காதல் மனைவி ஷோபனா, கண்ணனின் அலுவலகத்தில் ஜி எம்மாக பணிபுரிகிறார் ஆனால் குடும்பத்தை தாண்டி தான் அவருக்கு மத்ததெல்லாம்.
பெற்றோர்கள் பார்த்து தான் இவர்களின் திருமணம் நடந்தது. வேலை வேலை என்று எப்போதும் வேலையை கட்டிக்கொண்டு திரிந்துகொண்டிருந்த கண்ணனை தன் காதலால் மாற்றிருந்தார் ஷோபனா.

கண்ணன் ஷோபனா காதல் வாழ்வின் சாட்சி தான் நிரஞ்சனா, வீட்டின் முதல் பெண் என்பதால் செல்லம் அதிகம். நிரஞ்சனா இருபத்தி இருபத்தி மூன்று வயது இளம் மங்கை, அவளின் தோழிகளை போல் காதல், கல்யாணம் என்று அந்த வயதிற்குரிய கனவுகள் காணாமல் தன் தந்தையை போல் தனித்து வளர வேண்டும் என்ற வாழ்க்கை இலச்சியத்தை கொண்டு வாழ்பவள். கண்ணனின் வீட்டிற்கு அடுத்த வீடு அவரின் தம்பி சுரேஷுடையது. சுரேஷ் வேணி தம்பதியரின் ஒரே மகள் இந்து, ஆத்ரேயனை விட ஐந்து மாதம் சிறியவள். அவர்கள் வீட்டின் செல்ல இளவரசி.

மாடியிலிருந்து இறங்கிய ஆத்ரேயன் முதலில் கண்டது கண்ணனை தான். கண்ணன் “மார்னிங் டா”
“மார்னிங் பா..”
“போய் சாப்பிடுடா டைம் ஆகுது… டெய்லி கிஷோர் தான் உன்னை எழுப்பனுமா”
ஷோபனா “அதுல அவனுக்கு ஒரு சந்தோசம்.. என்னடா”
“ஹாஹா.. ஆமா மா”
“சரி வா சாப்பிடு.. சாப்பிட்டு இந்த ஜூஸை கொண்டு போய் இந்துகிட்ட கொடு.. காலைல சாப்பிடாமலே கிளம்புவா.. வேணி சொன்னாலும் கேட்க மாட்டா” என்றுவிட்டு அவனுக்கு பரிமாற தொடங்கினார்.
கண்ணன் “இந்துவ சாப்பிட வைடா இனி.. நான் பேசுறேன் அவகிட்ட”
“நீங்க வேற.. சும்மா இருங்க.. உங்களை பார்த்தாலே பயப்படுவா.. இதுல நீங்க பேசுனா அவ்ளோ தன் அழுதிடுவா”
“ஆமா அப்பா.. நீங்க விடுங்க நான் பார்த்துக்குறேன்” என்றவன் உணவை அவசரமாக முடித்துவிட்டு இந்துவின் இல்லத்திற்கு சென்றான்.

ரேயன் நுழையும் போதே பார்த்துவிட்ட சுரேஷ் “வாடா வாடா.. வேணி ரேயன் வந்திருக்கான் பாரு”
வேணி “வாடா.. சாப்பிடு”
“இல்ல சித்தி.. சாப்பிட்டேன்.. இந்து எங்க”
“இந்து.. ரேயன் வந்திருக்கான் பாரு” என்று குரல் கொடுக்க, அவசர அவசரமாக கம்மலை மாட்டியபடி இறங்கினாள் அவள்.
ஆத்ரேயன் “மண்டைலயே போட போறேன் பாரு.. அது என்ன சாப்பிடாம போற பழக்கம்”
வேணி “நல்லா சொல்லுடா நாங்க சொன்னா எங்க மதிக்கிறா.. பெரிய மாமா வந்து பேசுனா தான் அடங்குவா”, கண்ணனின் பெயர் அடிப்படவும் மிரண்டவள் “ஹலோ மதர்லேண்ட் அதெல்லாம் நான் பாத்துக்குறேன்”
ஆத்ரேயன் “என்ன பார்த்துக்குவ”
“ஹான்.. டெய்லி சாப்பிடுவேனு சொன்னேன் ப்ரோ” என்று மழுப்ப,
“ம்ம் பாக்குறேன்” என்று அவளை அழைத்து சென்றான்.
வாசலுக்கு வந்தவுடன் “ப்ரோ ப்ரோ நான் ஸ்கூட்டில போறேன் ப்ளீஸ்”
“சரி இந்த வீக் மட்டும் தான்..”
“ஹான் ஒகே” என்றவள் வண்டியில் சிட்டாக பறந்துவிட்டாள்.

ஆத்ரேயன் காரை எடுத்துக்கொண்டு கிஷோர் இல்லத்திற்கு சென்றான். வாசலில் நின்றபடி இவன் ஹாரன் அடிக்க, கிஷோர் அவசரமாக வந்து காரில் ஏறினான். அவன் பின்னே வந்த கிஷோரின் தந்தை தேவன் “ஏன் ரேயா, சார் பஸ்ல போக மாட்டாரா.. நீ வந்து கூப்பிட்டு தான் போகனுமா” என கேட்க, ஆத்ரேயன் சிரிப்பை மட்டும் பதிலாக அளித்துவிட்டு சென்றான்.

கிஷோர் “எப்பா ஒவ்வொரு நாள் இந்த மனுஷன்கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்குள்ள நாக்கு தள்ளுது டா..” என்று புலம்ப, ரேயன் “நல்ல மனுஷன் டா”
“ஆமா ஆமா நீ தான் மெச்சிக்கனும்” என்றிட ஆத்ரேயன் புன்னகையுடன் வண்டியை செலுத்தினான்.

வண்டியை நிறுத்திவிட்டு இறங்கிய இருவரும் கேட் அடைப்பதற்குள் உள்ளே ஓட கேட்டை மூடிய வாட்ச்மேன் மணி அவர்கள் இருவரையும் ஒரு மாதிரி பார்த்தார். கிஷோர் “என்ன அண்ணே நான் அம்புட்டு அழகாவா இருக்கேன்.. இப்படி வச்ச கண்ணு வாங்காம பாக்குறீங்க”
“டேய் போலே.. காலைல லேட்டா வந்திட்டு டைலாக் பேசுறான்.. தம்பி இவனை கூட்டிட்டு போங்க”
“அதெல்லாம் எங்களுக்கு போக தெரியும்” கிஷோர் தான்.
மணி “இனிமேல் சிக்காமலா போய்டுவ அப்போ இருக்கு உனக்கு”
“சில்வண்டு சிக்கும்.. சீட்டா சிக்காது..”
“லேய் போய்ட்டு.. இல்ல வங்குந்திடுவேன்”
“ஹாஹா பைண்ணே.. லவ் யூ”
“போடா கிறுக்கு பயலே”
அது என்னவோ கிஷோருக்கும் மணிக்கும் அப்படி ஒரு ஏழாம் பொருத்தம். முதன் முதலில் கல்லூரிக்கு வந்த போதிலிருந்து இவர்கள் இப்படி தான் முட்டிக்கொள்கின்றனர்.

சரியாக ஆத்ரேயனும் கிஷோரும் வகுப்பறையினுள் நுழையும் போது தான் ஆருவும் நேஹாவும் உள்ளே நுழைந்தனர். ஆத்ரேயனை பார்த்து ஆரா அதிர்ந்து நிற்க, நேஹா அவளை இழுத்துக்கொண்டு சென்றாள்.

ஆரு “கிட்டி அவன் நம்ம கிளாஸ் தான்.. எனக்கு அப்படியே ஒரு மாதிரி இருக்கு”
“எனக்கும் தான் ஒரு மாதிரி இருக்கு”
“அடிங்கு.. உனக்கு ஏன் டி ஒரு மாதிரி இருக்கு”
“எனக்கு இப்போவே அகி ஒரு அருவாளோட வர மாதிரி தெரியுது கிட்டி”
“ஐயோ அப்போ ஒரு மாதிரி தான் இருக்கோம்” என ஜெர்க் ஆனாள்.
“கிட்டி உனக்கென்ன அவன் உன்ன எதுவும் சொல்ல மாட்டான் என்ன தான் முறைப்பான்” என்று நேஹா தன் போக்கிற்கு புலம்ப, ஆரு அவளை கண்டுகொள்ளாமல் தன் வேலையை (சைட் அடிப்பதை) செவ்வனே செய்தாள்.

கதிருடன் ஏதோ பேசி சிரித்துக்கொண்டு வந்த அக்னி ஆத்ரேயனை கண்டதும் இறுகினான். கிஷோருடன் ஏதோ பேசி சிரித்துக்கொண்டிருந்த ஆத்ரேயனின் முகமும் இவனை கண்டதும் கோபத்தில் சிவந்தது.

ஒருவரை மற்றவர் வெட்டும் பார்வை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தனர்.  இனி இவர்களுக்கு இடையே நடக்கவிருக்கும் யுத்தத்தில் எத்தனை தலைகள் மாட்டிக்கொள்ள போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

தொடரும்…

Advertisement