Advertisement

                   அத்தியாயம் 30

ஆத்ரேயன் மற்றும் ஆருவின் சைகை மொழிகளை கவனித்த அக்னிக்கு தன்னை அடக்கி கொள்ள முடியாத அளவிற்கு கோபம் வந்தது. கைமுஷ்டி இறுக நின்றிருந்த அக்னியை கவனித்த நேஹா, ‘இவன் ஏன் இப்படி பாக்குறான்’ என்று நினைத்துக்கொண்டே அவன் பார்வை செல்லும் திசையை பார்த்தவள் , “ஓ ஷிட்…. ஆரு ஸ்டாப்… ஐயோ” என்று புலம்பிக்கொண்டே அக்னியை திசை திருப்ப நினைத்தாள்.

நேஹா “அகி செம்ம டையர்டா இருக்கு.. வீட்டுக்கு போலாமா, இவங்க ப்ரோக்ராம் ரொம்ப நேரம் போகும் போல, என்னால முடில” என்று முகத்தை சோர்வாக வைத்துக்கொண்டு கூற, அக்னி தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு நேஹாவை கவனித்தான், “என்னாச்சு, எதாச்சு குடிக்க கொண்டு வரவா, குடிச்சிட்டு போலாம் வீட்டுக்கு” என்று அக்கறையுடன் கேட்க, நேஹாவிற்கு குற்றவுணர்வு தொற்றிக்கொண்டது, எங்கு அவனை தானும் உண்மை கூறாமல் ஏமாற்றுகிறோமோ என்று, ‘இன்னைக்கே நான் ரேயன் கிட்ட பேசுறத உன்கிட்ட சொல்லிடறேன் அகி’ என்று நினைத்துக்கொண்டவள் அறியவில்லை அவள் கூறும் போது காலம் கடந்திருக்கும் என்று.

அக்னி “நேஹா என்னாச்சு….வாங்கிட்டு வரவா?” என்று மீண்டும் கேட்க,
நேஹா அவனுடைய சோர்ந்த முகத்தை பார்த்து “இல்ல அகி, வீட்டுக்கு போலாம்”என்றாள். அக்னி ஒருமுறை ஆருவை பார்த்து விட்டு “வா டா” என்று நேஹாவின் கை பிடித்து செல்ல எத்தனிக்க,
கதிர் “எங்க போறீங்க.. இன்னும் முடியலயே” என்று புரியாமல் கேட்க
அக்னி “அவளுக்கு முடிலயாம் டா, அதான்” என்றான்.

கதிர் “நான் வேணா கூட்டிட்டு போறேன் நேஹாவ, அந்த அர லூசு உன்னதான் தேடுவா” என்று ஆருவை நினைத்து கூற
அக்னி ஒரு அலட்சிய புன்னகையை சிந்திவிட்டு “அவளுக்கு நான் கண்ணுக்கு தெரில டா கதிர்” என்று எதும் தெரியாமல் இருந்தபொழுதும் விரக்தியாக கூறினான்,
நேஹாவிற்கு அவன் இதை விட போவதில்லை என்று புரிந்தது.

அவர்கள் எழுந்ததை பார்த்த ஆரு அவர்களை நோக்கி சென்றாள், அக்னியின் கையை பிடித்து “டேய் எங்க போற, நேஹா எங்க போற?” என்று கேட்க,
நேஹா பேய் முழி முழித்துவிட்டு “இல்ல ஒருமாதிரி இருந்துச்சு அதான் வீட்டுக்கு போலாம்னு” என்றிழுக்க ஆருவின் முகம் மாறியது.

“என்ன கூப்பிடாம போறீங்க?” என்று சோகமாக கேட்க, அக்னி வார்த்தை விடவேண்டாம் என்று பல்லை கடித்துக்கொண்டு நின்றான், அது அவன் செயலிலேயே தெரிந்தது.
ஆரு “உன்ன தான் கேக்குறேன்….”என்று அக்னியை பிடித்து உலுக்க, அவனோ அவளை பார்க்காமல், “சொன்னாமட்டும் எங்கக்கூட வரவா போற?” என்று அடிக்குரலில் கேட்க
ஆரு “உன்கூட வராம யார்கூட வரப்போறேன் அகி, ஏன் இப்படி பேசுற” என்று அழும் குரலில் கேட்டாள், ஏனென்றால் அக்னி இதுவரை அவளிடம் இத்தனை கடினமாய் பேசியதில்லை. நேஹாவிடம் கூட உரிமையில் கத்துவான், ஆனால் ஆருவிடம் அதுகூட செய்தது இல்லை, எனவே ஆருவால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

ஆனால் அக்னிக்கோ, சில நாட்களாக அவள் அவனிடம் சரிவர பேசாததும், இன்று செய்ததும் என அனைத்தும் சேர்ந்து வெடித்துவிடுவது போல் நின்றான்.

அக்னி அவள் கேட்டதுக்கு பதில் கூறாமல் அமைதியாக நிற்க
ஆரு “நேஹா என்னச்சு, ஏன் இவன் ஒருமாதிரி பேசுறான்” என்று சிறுகுரலில் கேட்க,
நேஹா “ஒன்னும் இல்ல ஆரு, வா வீட்டுக்கு போலாம், அங்க போய் பாத்துக்கலாம்” என்று கூற, சரி செல்லலாம் என்று எண்ணியவளின் மனதில் வந்தது என்னவோ ரேயனின் முகம் தான். ஆரு “ஆன் அது..” என்று தயங்க, அக்னி நக்கலாக சிரித்துவிட்டு “என்ன, என்ன சாக்கு சொல்லலாம்னு யோசிக்கிறியா அவன்கூட வரதுக்கு” என்றே கேட்டுவிட, ஆரு அதிர்ந்து நின்றாள்.

ஆரு “அகி” என்று ஏதோ கூற வந்தவளை  தடுத்தது ரேயனின் குரல். அவர்களிடம் இருந்து 10அடி தூரத்தில் இருந்தவன் “தியா” என்று அழைக்க, அக்னி கோபமாக  தன் தலையை கோதிவிட்டு, “ஆரு நீ இப்படியே என்கூட திரும்பி பாக்காம வர” என்று அவள் கையை பிடித்த மறுநொடி, ரேயன் “எடுடா கைய” என்று கர்ஜித்து அவர்களை நெருங்க, கிஷோரும் அவனை தொடர்ந்து சென்றான். கதிரும் இங்கு இவர்கள் ஒன்றாக இருப்பதை கண்டு அங்கு விரைந்தான்.

அக்னியை பார்த்து ஏதோ கூற வந்த ரேயனை ‘எதுவும் கூறாதே’ என்று ஆரு தலையாட்ட, அவன் மெதுவாக “தியா அங்க” என்று ஏதோ கூற வாயெடுக்க, அக்னி “ஹே ஸ்டாப், யார் நீ அவளுக்கு, ஜஸ்ட் கிளாஸ்மேட் அவ்ளோதான், சும்மா உன் கேம் ஆடாத அவகிட்ட” என்று அனைவருக்கும் கேட்கும் வண்ணம் கத்த, நேஹா “அகி எல்லாரும் பாக்குறாங்கா கத்தாத ப்ளீஸ்” என்று அவன் கைபிடித்து கூற, அவன் கேட்டபாடில்லை.

ஏதாவது நடந்துவிடுமோ என்று கிச்சா ரேயனின் தோளில் தட்டி “மச்சா வேண்டாம்.. வா போலாம்.. ” என்று இழுக்க, ஆருவும் பாவமாக நின்றாள். அவளை ஒருமுறை பார்த்தவன் பின் அங்கிருந்து நகரப்போனான். முதல் முறையாக ஆத்ரேயன் இறங்கி போனான் அக்னி விஷயத்தில்.

அக்னி “எல்லாம் பண்ணிட்டு ஏதும் தெரியாதமாதிரி போறியாடா டேய்…” என்று ஆரம்பிக்க,
ரேயன் கிஷோரின் கையை தட்டி விட்டு “அவன் சும்மா இருக்கமாட்டான் கிச்சா” என்று மீண்டும் அவர்களை நோக்கி சென்றான்.

நேஹா “அக்னி இப்போ எதுக்கு தேவ இல்லாம ஆரம்பிக்கிற, பேசாம வா வீட்டுக்கு போகலாம்” என்று அதட்ட,
அக்னி “நீ கொஞ்சம் சும்மா இரு” என்று கூறிவிட்டு பார்வையை ஆருவின் பக்கம் திருப்பினான்.

“சொல்லு.. என்கிட்ட என்ன மறைக்குற” என்று நேரடியாக கேட்டுவிட, ஆரு தான் என்ன கூறுவது என்று தெரியாமல் விழித்தாள். பின் மெதுவாக “அகி அது.. நான்” என்றிழுக்க
ரேயன் “இப்போ எதுக்கு நீ ஏதோ தப்பு செஞ்சமாதிரி பேசுற அவன்கிட்ட, முதல அவன் எதுக்கு உன்ன நிக்க வச்சு கேள்வி கேக்குறான், நீயும் பதில் சொல்லிட்டு இருக்க” என்று அவனும் சீற,
“அத்து ப்ளீஸ் இரு.. எதுவும் பேசாத.. நான் தான் பேசிட்டு இருக்கேன்ல” என்று இறைஞ்சும் குரலில் கூற, அவன் கையை தன் தொடையில் அடித்துக்கொண்டு மிகவும் சிரமப்பட்டு கோபத்தை அடக்கி நின்றான்.

அக்னி “சொல்லு ஆரு, நான் அத உன் வாயால கேக்கணும்” என்று உண்மை அறிந்தும் கேட்டான்,
ஆரு “நான் அத்துவ லவ் பண்றேன் அகி” என்று கண்ணில் நீர் தளும்ப கூறினாள். அக்னி ஏளனமாக இதழ் வளைத்து “லவ் இல்ல, உன்ன ஏமாத்திருக்கான் ஏமாந்துட்டேன்னு சொல்லு” என்று கூற, ரேயன் அவனை அழுத்தமாக பார்த்தான் என்றால் ஆருவோ பொங்கிவிட்டாள்.

“அகி ப்ளீஸ், நீ என்னை திட்டு,அடி என்னவேனா பண்ணு, உனக்கு உரிமை இருக்கு, ஆனா அத்துவ எதுவும் சொல்லாத அதுக்கு உனக்கு எந்த ரைட்ஸூம் இல்ல” என்று கத்த,
அக்னி “ஆரு ஸ்டாப் திஸ், என்ன நினைச்சிட்டு இருக்க, இவன் உன்னை உண்மையா லவ் பண்றான் சொல்றியா, அறிவு கெட்டுபோச்சா உனக்கு, பழிவாங்க தான் பண்ணிருப்பான்னு உனக்கு கொஞ்சம் கூடவா தோணல” என்று பல்லை கடித்துக்கொண்டு கூற, ரேயன் அங்கு எல்லாரும் தங்களை பார்ப்பதை உணர்ந்து, எல்லாரையும் திரும்பி ஒரு பார்வை பார்க்க அனைவரையும் அங்கிருந்து நகர்ந்தனர், சிவா அதில் உதவி செய்து அனைவரையும் அங்கிருந்து போக செய்தான் கடமை மாறா ரெப்பாக.

ஆரு “இல்ல அகி.. நீ நினைக்குற மாதிரி இல்ல” என்று வாயெடுக்க,
ரேயன் “தியா.. நீ ஒன்னும் அவனுக்கு என்னப்பதியோ நம்மளப்பத்தியோ எக்ஸ்பிளேன் பண்ண தேவ இல்லை…” என்று அதட்ட
அக்னி “முதல நீ அவளை தியானு கூப்பிடறத நிறுத்து டா.. உனக்கு அவமேல எந்த உரிமையும் கிடையாது” என்றான் எரிக்கும் பார்வையுடன்.

ரேயன் “அத அவ சொல்லட்டும்” என்று நக்கலாக கூற,
அக்னி “ஆரு சொல்லு, உனக்கும் அவனுக்கும் எதுவும் இல்லைன்னு சொல்லு” என்று கத்த
ஆரு “ஏன் அகி இப்படி புரியாம பேசுற, நான் சொல்றேன்ல அவனை லவ் பண்றேன்னு, உனக்கு என்மேல் நம்பிக்கை இல்லையா” என்று ஆதங்கமாக கேட்க
அக்னி “உன்மேல இல்லன்னு யாரு சொன்னா, ஆனா இவன் வேணா உனக்கு” என்றான் அழுத்தம் திருத்தமாக.

ஆத்ரேயன் தன் காதலின் மீதிருந்த நம்பிக்கையில் கைகளை கட்டிக்கொண்டு நின்றான்,
ஆரு “ஏன்னு சொல்லு.. நான் கேக்குறேன்” என்று அழுத்தமாக கூற
அக்னி “ஏன் நான் சொன்னா நம்ப மாட்டியா” என்றான் கடுப்பாக
நேஹா “எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும்ல, அத சொல்லு” என்று அக்னியை அதட்ட, அவனோ அவளை இயலாத பார்வை பார்த்து வைத்ததில் நேஹாவிற்கு தான் ஏன்டா கேட்டோம் என்று ஆனது.

ஆரு “சொல்லு அகி, நானும் இதை பலநூறு தடவ கேட்டுட்டேன்.. உனக்கும் அவனுக்கும் என்னதான் பிரச்சனை.. ப்ளீஸ் சொல்லு” என்றாள் விடாப்பிடியாக. அக்னி வார்தைகளின்றி மௌனம் சாதிக்க, ரேயன் “அவன் எப்படி சொல்லுவான், தப்பு பண்ணிட்டு எப்படி சொல்லுவான்” என்றான் ஏளனமாக.

அக்னி அவனை தீயாய் முறைக்க, கதிர் பொறுக்காமல் “நிறுத்து, நடந்ததை சொல்றதுனா சொல்லு, அவன் தப்பு பண்ணான்னு சொல்லாத” என்று சீற
ஆரு “நீயாவது சொல்லு அத்து” என்று கேட்டாள் ஆயசமாக. அதற்கு மேல் மறைக்க முடியாமல் ரேயன் நடந்தவற்றை  தன் பக்கமிருந்து கூற, அவன் கூறியதை கேட்ட நேஹா பாதியில் கை நீட்டி தடுத்தாள்.

நேஹா”அதுக்குமேல ஒரு வார்த்தை அக்னியை பத்தி பேசாதிங்க” என்று முறைத்துக்கொண்டு கூறியவள் அதன் பிறகு அக்னியிடம் “இதை ஏன் என்கிட்ட இவ்ளோ நாள் சொல்லல” என்று கோவமாக கேட்க அப்போதும் மௌனம் காத்தான்.

ஆரு “நீ ஏன் சொல்லல” என்று ரேயனை முறைக்க,
ரேயன் “சொல்ல தோணல, என் தங்கச்சி விஷயம் தேவ இல்லாம பேச விரும்பல” என்றவன் பாவம் அவன் நிலையிலிருந்து மட்டுமே பேசினான்.
ஆரு “ஸ்டாப்.. ஜஸ்ட் ஸ்டாப்” என்று கத்த ரேயன் அவளை புரியாமல் பார்த்தான்.

ஆரு “நீ இதை சொன்னா உடனே அகி தப்பு பண்ணான்னு நம்பிடுவோமா, கனவுல கூட இல்ல” என்று கூறி அக்னியை பார்க்க, அவனோ அவளை பாராது நின்றான். அவள் தன்னிடம் இத்தனை பெரிய விஷயத்தை மறைட்தது மட்டுமே அவன் சிந்தையை ஆக்கிரமித்திருந்தது.

ஆரு “தப்பு பண்ணிட்ட அத்து… பெரிய தப்பு பண்ணிட்ட..” என்று கூற, முதல் முறையாக தான் செய்தது தவறோ என்று எண்ணினான், ஆத்ரேயன். ஆனால் அதை காட்டிக்கொள்ளவில்லை.
இப்போது அக்னியிடம் வந்தவள் அவன் கை பிடிக்க, அவனோ அவள் கையை தட்டி விட்டான்.
ஆரு “அகி அவன் பண்ணது தப்புதான், ஆனா அவன் என்மேல வச்ச லவ் உண்மை… உங்கிட்ட சொல்ல கூடாதுனு இல்ல, நான் நிறையவாட்டி ட்ரை பண்னேன், ஆனா முடியல.. ப்ளீஸ் டா” என்றாள் அவனுக்கு புரிய வைக்க வேண்டும் என்ற முனைப்பில்.
அக்னி “எதுனாலும் என்கிட்ட சொல்லுவல.. இத சொல்ல முடியலயா” என்று ஆதங்கமாக கேட்க,
ஆருவால் ஏதும் கூற முடியவில்லை.

அக்னி “இவன்தான், இவன்தான் எல்லாத்துக்கும் காரணம், என் மானம் போச்சு, என் அப்பா என்கிட்ட பேசல, இப்போ உன்னையும் என்கிட்ட இருந்த பிரிக்க பாக்குறான்” என்று கூறி ரேயனின் சட்டையை பிடித்தான் கோவத்தை கட்டுப்படுத்த முடியாமல்.

அக்னி “நீ என்ன பத்தி சொல்லியும் எப்படி சொன்னா பாத்தல, ஒழுங்கு மரியாதையா அவ லைப்ல இருந்து போயிடு” என்று அவன் சட்டையை பிடித்து உலுக்க, ஆருவின் அழும் முகம் கண்டு ஏதும் செய்யாது அமைதியாக நின்றான் ஆத்ரேயன்.
ஆரு “அகி ப்ளீஸ் விடு.. வேண்டாம்.. ப்ளீஸ்” என்று அவன் கையை எடுக்க முயல,
கதிர் “மச்சான் வேண்டாம் விடு.. விடு டா” என்றிட கிஷோரும் அவன் கையை எடுத்துவிட முயற்சித்தான். பின் ஒரு வழியாக எடுத்து விட்டனர்.

இருவரும் மற்றவரை முறைத்துக்கொண்டு நிற்க, என்ன செய்வது என்று அறியாமல் மற்றவர் விழிபிதுங்கி நின்றனர்.
ஆரு கண்களை துடைத்து விட்டு, “அத்து நீ கிளம்பு , நான் நாளைக்கு பேசுறேன்” என்று அவனை அனுப்பி விட,
இவ்வளவு சொல்லியும் அவனிடம் பேசுகிறாள் என்ற கோபத்தில் நின்றான் அக்னி, அதை இன்னும் ஏற்றும் வகையில், “யூ ஆர் அ லூசர் அக்னி” என்று ஏகத்துக்கும் நக்கலை தன் குரலில் தேக்கி அக்னியை பார்த்து அவன் அவ்வார்தைகளை உதிர்க்க,
அக்னியும் நக்கலாக “உன்னவிட இல்லன்னு நினைக்கிறேன்” என்று கூறிய மறுநொடி  அவன் சுதாரிக்கும் முன் ஆரத்யாவின் இடையை வளைத்து தன்னுடன் இறுக்கியவன் அவள் இதழை வன்மையாக சிறை பிடித்தான்.

ஆத்ரேயனின் செயலை சற்றும் எதிர்பாராத ஆராத்யா அவனை விட்டுவிலக முயற்சிக்க, அவளை இம்மியும் நகர முடியாத அளவிற்கு தன் கையினுள் சிறை பிடித்திருந்தான்.

அக்னி கோபத்தில் கைமுஷ்டி இறுக நிற்க, கதிர் கிஷோர் உச்சகட்ட அதிர்ச்சியில் நிற்க, நேஹாவோ கண்களில் நீர் தளும்ப தன் கண் முன் நிகழ்கின்றவற்றை நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவனை தனது முழு பலத்தை கொண்டு தள்ளி விட்டவள், என்ன செய்வது என்று புரியாமல், யாரையும் பார்க்க கூட முடியாது சங்கடமாக தலைகுனிந்து நின்றாள்.

அக்னி ஆராவை பார்த்து “ச்சீ” என்று கூறிவிட்டு விறுவிறுவென அங்கிருந்து வெளியேற, அவன் போவதை பார்த்து நின்ற நேஹா மற்றும் கதிர் ஆருவையும்  அவனையும் மாறி மாறி பார்க்க, ஆரு அவன் பின் செல் என்று கண் காட்ட அவர்களும் அங்கிருந்து அகன்றனர்.

இங்கோ ஆரு கடுங்கோபத்துடன் இருந்தாள், ரேயனின் புறம் திரும்பாமல்  செல்ல எத்தனிக்க,
ரேயன் “தியா.. ஐ அம் சாரி” என்று கூறும்பொழுதே அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தாள், “நான் உனக்குத்தான்னு ப்ரூவ் பண்ண இதான் உனக்கு கிடச்சிதா” என்று கண்ணீருடன் கேட்க, ரேயன் “இல்ல, அப்படி இல்ல” என்று தயங்கினான்.

ஆரு “ரெண்டு பேரும் உங்க மேன் பவர் காட்ட என்ன யூஸ் பண்றிங்களா” என்று கண்ணீருடன் கேட்க, ரேயன் “ஷட் அப் தியா.. என்ன பேசுற நீ” என்றவன் அவள் அருகே வர
ஆரு “பின்ன என்ன, இப்படி செஞ்சுதான் நீ நிருபிக்கணுமா, அப்போ நான் இதுக்காகதான்” என்று கூற விழைந்தவள் அதை முடிக்கமுடியாமல் நிற்க, கிஷோர் அங்கு அவன் நிற்பது சரி இல்லை என்றுணர்ந்து தள்ளி நின்னுகொண்டான்.

ரேயன் அவளை நெருங்கி, “தியா ஐ அம் சோ சாரி, நான் அப்படி நினைச்சு பண்ணல, அது ஏதோ தெரியாம, நீ எனக்கு மட்டும் தான்னு நினச்சு, அப்படி, சாரி டா” என்று அவள் கையை பிடிக்க, அதை தட்டிவிட்டவள் “தொடாத என்ன.. எனக்கு அசிங்கமா இருக்கு” என்றாள் நடுங்கும் குரலில்.
ரேயன் “என்ன பேசுற நீ” என்று அதட்ட அவளோ கண்ணீர் சிந்தயபடி தலை குனிந்தாள்.

ரேயன் “சாரி தியா, இனி இப்படி செய்யமாட்டேன், நான் என்ன செய்யணும் சொல்லு செய்யுறேன்.. நீ பேசாம மட்டும் இருக்காத டி.. எனக்கு நீ என்கூட இருக்கனும் அவ்ளோதான்.. வேற ஏதும் வேண்டாம்” என்று கெஞ்சும் நிலைக்கு வந்து விட்டான். அவன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் காதலின் ஆழத்தை காட்டியது.

ஆரு “என்ன சொன்னாலும் செய்வ அப்படிதான” என்று கைகட்டி கேட்க,
“செய்வேன்” என்றான்.
ஆரு “அப்போ அகி கிட்ட சாரி கேளு” என்று கூற, ஏதும் கூறாமல் நின்றான்,
ஆரு “முடியாதுல” என்று நக்கலாக கேட்க
ரேயன் “கேக்குறேன்” என்றான் சிறிதும் தயங்காமல்.
ஆரு அவனை பார்க்க, ரேயன் “கேக்குறேன்.. சாரி கேக்குறேன்.. ஆனா அதுவும் உனக்காக தான்” என்றான் கலங்கி கண்களுடன், அவனுடைய மானத்தை விட்டு அல்லவா மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறுகிறான். ஆனால் அவன் கண் கலங்கியது அதற்கல்ல, எங்கு அவனவள் அவனை விட்டு சென்று விடுவாளோ என்ற பரிதவிப்பில் தான்.

ஆராத்யா என்ன சொல்வது என்று தெரியாமல் நிற்க,
ரேயன் “அவன் என்ன விட சொல்லிட்டா என்ன பண்ணுவ தியா” என்று சிறு குரலில் கேட்க,
ஆரு “அப்படி சொல்லமாட்டான்” என்றாள் உறுதியாக,
ரேயன் “ஒருவேளை சொல்லிட்டா என்ன செய்வ” என்று புருவமுடிச்சோடு கேட்க
ஆரு “புரிய வைப்பேன்.. அப்படி சொல்லமாட்டான்” என்றாள் மீண்டும்.
ரேயன் சற்று அழுத்தமாக “புரிஞ்சிக்கலான” என்று கேட்க
ஆரு “அப்படிலாம் இல்ல” என்று வாதம் செய்தாளே ஒழிய உன்னை விட மாட்டேன் என்று கூறவில்லை.

அவளை அடிபட்ட பார்வை பார்த்தவன்  “அப்போவும் நான்தான் வேணும்னு சொல்லாமாட்டல அவன்கிட்ட, அவ்ளோதானா தியா நான் உனக்கு” என்று கேட்டவனின் குரல் உடைந்திருந்தது.

ஆருவோ அப்போதும் கோபத்தில் அவனை மறுக்காமல் “நான் அப்படி சொல்லலயே” என்று மட்டும் கூறினாள், இப்போதும் அவள் மறுக்காமல் தன் பிடியில் நிற்பதில் கடுப்பானவன்  “சொல்லு… உனக்கு நான் முக்கியமா இல்ல அவனா” என இறுகிய குரலில் கேட்க, சலிப்பாக தலையசைத்தவள் “இந்த கேள்வி எனக்கு புடிக்காதுன்னு உனக்கு தெரியும்” என்று அவனை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே கூற,
ரேயன் “இப்போ சொல்லு, நான் முக்கியமா இல்ல அவனா.. அவன் ஓகே சொல்லித்தான் என்ன ஏதுப்பனா, இப்படியே போயிடு, என் முஞ்சில கூட முழிக்காத” என்று கோபத்தில் கத்த, ஆருவோ அவனை அமைதியாக ஏறிட்டாள்.

அவளின் மௌனம் அவன் பொறுமையை சோதிக்க, “அதான.. டைம் பாஸ்க்கு சுத்திருக்கல, அவனும்.. நல்லா அவன ஏமாத்து, நல்லா அசிங்கபடுத்தலாம் சொல்லிருப்பான்.. நாடகம் ஆடுறீங்களா ரெண்டு பேரும்.. ச்ச, அவன் பிராண்ட்ல வேற எப்படி இருப்ப” என்று வார்த்தையில் அமிலத்தை வீச அவ்வளவுதான், அவன் டைம் பாஸ் என்ற வார்த்தையை கேட்டு சுக்கு நூறாக உடைந்துவிட்டாள் பெண்ணவள்.

கலங்கிய கண்களுடன் அவனை பார்த்தவள் “குட் பை ஆத்ரேயன்” என்று கூறி, நிற்காமல் சென்றுவிட ரேயனுக்கு தான் கூறிய வார்த்தைகளின் அர்த்தம் புரிவதற்கு சிறிது நேரம் எடுத்தது.

ரேயனோ கோபத்தில் அந்த இடத்திலேயே அமர்ந்துவிட, அதை பார்த்து பதறி வந்த கிஷோர் “மச்சான் மச்சான்.. என்ன டா” என்றிட, அவனை கட்டிக்கொண்டான்.

கிஷோர் “மச்சா ஏன் டா.. என்ன டா ஆச்சு.. நீ கடைசியா சொன்ன வார்த்தை எனக்கு கேட்டுச்சு.. இப்படியாடா பேசுவ” என்று கண்டிக்க,
ரேயன் “வேணும்னே பேசல கிச்சா, ஏதோ கோவத்துல பேசிட்டேன்.. ஆனா மனசுல இருந்து பேசல டா நிஜமா” என்றான் பாவமாக.

கிஷோர் “இதுக்குதான் டா அப்போவே போலாம் சொன்னேன்.. கேட்டியா…” என்று வருந்த
ரேயன் “குட் பை சொன்னா கிச்சா அவ என்ன பாத்து, என்ன பாத்து சொல்றாடா” என்று உடைந்த குரலில் கூறியவனின் கண்ணீர் கிஷோரின் சட்டையை நனைக்க, அதில் பதறிவிட்டான் அவன்.

ஆத்ரேயன் அழுவதை முதல் முறை பார்க்கிறான் அல்லவா. கிஷோர் “ஐயோ அத்து, ஏன் டா அழற.. மச்சா அழாத டா.. நான் நீ அழுது பாத்ததே இல்லையே.. வேண்டாம் டா” என்று சமாதானம் படுத்த முயற்சிக்க, ரேயனோ சொன்னதையே மீண்டும் மீண்டும் பிதற்றிக்கொண்டிருந்தான். அவளின் மீது அவன் வைத்திருந்த காதலை எண்ணி மலைத்து தான் போனான், கிஷோர்.

“நான் பாட்டுக்குதான டா இருந்தேன்.. எதுக்கு என்கிட்ட பேசணும், எதுக்கு என்மேல பாசம் காட்டனும்.. நான் கேக்கலயே.. இப்படி என்ன பைத்தியக்காரன் மாதிரி புலம்ப வைக்கணுமா.. நான் அப்படி என்ன பண்ணிட்டேன்” என்றவன் தொடர்ந்து “ஒருவேளை அந்த அக்னி ஏதும் தப்பு பண்ணலையா, ஆனா அந்த இடத்துல என்னால அப்படி தானடா நினைக்க முடியும், என் முன்னாடி இருந்த ஆதாரங்களை இல்லன்னு சொல்லமுடியதுல, அது ஏன் அவளுக்கு புரியல.. நீயும் என்ன கேவலமாதான் நினைக்குறல?” என்று குழந்தை போல் புலம்பி கொண்டிருந்தவனை பார்த்து கிஷோரின் கண்களும் கலங்கிவிட்டது. எப்போதும் கம்பீரமாக வலம் வரும் நண்பன் இப்படி உடைந்திருப்பதை அவனும் எங்கனம் காண்பான்.

கிஷோர் “ஏன் டா இப்டிலாம் பேசுற, எனக்கு தெரியாதா உன்ன பத்தி” என்று ஆதரவாக அவன் தோளில் கைவைக்க,
ரேயன் “என்னால அவ இல்லாம நார்மலா இருக்க முடியாதுன்னு தெரிஞ்சும் இப்படி சொல்லிட்டு போய்ட்டா கிச்சா” என்று பிதற்ற
கிஷோர் “அவளுக்கும் அப்படிதான அத்து” என்று உண்மையை கூற, அவனுக்கோ எல்லையில்லாத கோபம் வந்தது.

“இல்ல.. அவளுக்கு தான் அவ பிரண்ட் இருக்கானே.. அவ நல்லாதான் இருப்பா.. அவளுக்கு என்னைவிட அவன் தான் முக்கியம்.. நான் எதுக்கு அவளுக்காக வருத்தப்படனும்” என்று கண்ணை துடைத்தவனின் முகம் இறுகியது.

“என்ன நம்பாம, வேண்டான்னு விட்டுட்டு போன யாரும் எனக்கு வேண்டாம்.. இனி அவ பேச்ச எடுக்காத, அவ பெயர கூட நான் கேட்க விரும்பல.. போலாம்” என்று செல்ல,
கிஷோர் “அத்து ஒரு வாட்டி யோசிடா ”
என்று கூற, ரேயன் “பேசாதன்னு சொன்னேன்.. வா” என்று அவனை அழைத்துக்கொண்டு சென்று விட்டான்.

அக்னி நேஹா கதிர் பைக் ஸ்டாண்டில்  நின்றுகொண்டிருக்க அவனிடமாவது புரியவைக்கலாம் என்றெண்ணியவள் அவன் அருகே சென்று “அகி நில்லு” என்றழைக்க, அக்னியோ அங்கு அப்படி ஒருத்தி நிற்பதையே கண்டுகொள்ளாமல் நின்று “நேஹா ஏறு போலாம்” என்றான் அடிக்குறலில்,
ஆரு “அகி நீயாச்சு நான் சொல்றத கேளு” என்று சோர்ந்து குரலில் கூறியவளுக்கு நிஜமாக ஆயசமாக இருந்தது. அவள் அப்படி கூறியதை கேட்ட நேஹாவிற்கும் கதிருக்கும் பாவமாக இருந்தது, உடல்நிலை சரியில்லை என்றாலும் துறுதுறுவென காணப்படுபவள் இன்று நண்பன் மற்றும் காதலுனுக்கிடையே நடக்கும் யுத்தத்தில் புயலில் சிக்கிய கொடியாகி போனாள் அல்லவா.

ஆனால் அக்னி அவள் கூற வருவதை கேட்டும் நிலையில் இல்லை,
அக்னி “ஏறுன்னு சொன்னேன்” என்று நேஹாவிடம் சிடுசிடுக்க
நேஹா “ஒரு வாட்டி கேளு அகி.. பாவம் அவ” என்றாள் கெஞ்சும் குரலில்.
கதிர் “ஆமா டா ஒரு வாட்டி கேளு டா” என்று கூற,
அக்னி “என்னபாத்தா முட்டாள்னு எழுதி ஒட்டிருக்கா.. அவ சொல்லுற பொய்யெல்லாம் நம்பிட்டு இருந்த அக்னி செத்துட்டேன்” என்று இறுகிய குரலில் கூற, ஆரு “ஏன் அகி இப்படி பேசுற” என்று அவன் கையை பிடிக்க, அதை உதறியவன் “உனக்கு நான் அவ்ளோதான ஆராத்யா.. ஒரு வார்த்தை என்கிட்ட சொல்ல தோணல உனக்கு”
“ஐயோ அகி நான் ட்ரை” என்று தொடங்கும் முன் ஒரு கரம் நீட்டியவன் “நான் குழந்த இல்ல, ட்ரை பண்னேன் முடிலனு சொல்றத நம்ப.. ஒரு வாட்டி கூட முடிலயா.. நீ இந்த 6 மாசமா என்கிட்ட ஒழுங்கா பேசல, எப்படி இருந்துச்சு தெரியுமா எனக்கு, நான் நீ ஏதோ பைனல் இயர் ஸ்ட்ரெஸ்ல இருக்க நினச்சு நானா உன்கிட்ட பேசுனேன், ஆனா நீ.. அவன்கூட இருந்ததுனால தான் என்ன அவாய்ட் பண்ணிருக்க” என ஏளன குரலில் கூற
ஆரு “என்ன அகி இப்படி பேசுற….அப்படிலாம் எதுவும் இல்லை” என்றவளின் கன்னத்தில் கண்ணீர் வழிய
அக்னி “அழாத ஆரு, இப்போவும் நீ அழறத  என்னால பாக்க முடியல.. ஆனாலும் உன்மேல் தலைக்கு மேலே கோவம் வருது” என்றான்.

ஆரு “அகி….அவன்”
அக்னி “நிறுத்து.. ச்சி.. அவன் எல்லார் முன்னடியும் அப்படி பண்ணுறான், மறுபடியும் அவனுக்காக என்கிட்ட வந்து பேசுற, வெக்கமா இல்ல” என்று வார்த்தையை விட
நேஹா “அக்னி ஸ்டாப்” என்றாள் கண்டிக்கும் தோரணையில்.

அக்னிக்கு கோவம் கண்ணை மறைத்தது,
“போடி.. இனி எந்த இடைஞ்சலும் இல்ல உன் காதலுக்கு, ஜாலியா அவன்கூட குடும்பம் நடத்து போ.. எனக்கு உன்ன பாக்க கூட பிடிக்கலை” என்றவன் தொடர்ந்து “நீ அவ்வளவு இடம் கொடுக்காம எல்லார் முன்னாடி அப்படி நடந்துக்குற தைரியம் அவனுக்கு எப்படி வரும்.. உன்ன பார்த்தாலே வெறுப்பா இருக்கு.. உன்ன என் பிரெண்ட்ன்னு சொல்லவே அசிங்கமா இருக்கு.. துரோகி டி நீ.. இனிமேல் வாழ்க்கைல எப்போவும் என் கண்ணு முன்னாடி வந்துடாத” என்றவன் கோபத்தில் வார்த்தைகளை விட்டுவிட, அதை கேட்டுக்கொண்டிருந்த ஆருவிற்கோ உடல் இறுகியது.

ஆருவை வார்த்தைகளால் குத்தி கிழித்தவன் பைக்கை எடுத்துக்கொண்டு சென்றுவிட, நேஹாவிற்கு அவன் பேசியது அதிகம் என்றே தோன்றியது.
ஆருவின் நிலைமையோ மோசமாக இருந்தது சிலையாகி நின்றாள் பெண்ணவள்.

நேஹா “ஆரு” என்று பேச வர,
ஆரு “வேண்டாம்.. நான் இப்போ பேசுற நிலைமைல இல்ல” என்றவளின் உடலும் மனமும் அதீத சோர்வில் இருந்தது.
கதிர் “ஆரு அவன் ஏதோ கோவத்துல” என்று புரியவைக்க முயல,
“நான்தான் சொல்றேன்ல ஏதும் பேசாதிங்க என்கிட்ட” என்று ஆக்ரோஷமாக கத்தியவள் அழுதுகொண்டே ஒரு ஆட்டோ பிடித்து வீட்டிற்கு செல்ல, கதிர் நேஹாவை அழைத்துக்கொண்டு சென்றான்.

ஆருவால் நடந்த எதையும் நம்ப முடியவில்லை, பித்து பிடித்தது போல் இருந்தது, தனக்கு அரணாக இருக்கும் அவனும், தனக்கு எல்லாமாக மாறி போன அவனும் இப்படி பேசுவார்கள், இப்படி புரிந்துகொள்ளாமல் நடந்துக்கொள்வார்கள் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.

ஆட்டோவில் சென்றவளை பின் தொடர்ந்தனர் கதிரும் நேஹாவும், அவள் வீட்டின் முன் வண்டி நிற்கவும், வேகமாக அவளின் அருகே சென்றனர்.

நேஹா “ஆரு சொல்றத கேளு, டென்ஷன் ஆகாத, உனக்கு தான் தெரியும்ல அவன் கோவத்துல பேசுறான்னு” என்று அவள் கூறிக்கொண்டு இருக்கும்போதே அவளை தடுத்த ஆரு “இப்படி பேசுவானா என்ன பாத்து, நான் அவ்ளோ கேவலமானவளா போயிட்டனா, அப்போ அவ்ளோதானா அவனுக்கு என்மேல இருக்க நம்பிக்கை” என்று கூறியவளால் எவ்வளவு முயன்றும்அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

கதிர் “நீ சொல்றது சரி தான் ஆரு, ஆனா நீ தேவயில்லாம உன்னையே கஷ்டப்படுத்திக்காத, அழுறத முதல நிறுத்து நீ” என்று அதட்ட, அவளோ விசும்பிக்கொண்டே “இல்ல கதிர்.. உனக்கு தெரியும்ல, நேஹா உனக்கும் தெரியும்ல நான் அப்படி இல்லன்னு, நான் அவ்ளோ மோசமானவ இல்லதான” என்று  சிறுபிள்ளை போல் கேட்டவளை பார்க்கவே பாவமாக இருந்தது.

நேஹா அவளை அணைத்து கொண்டு “ஏன் டி இப்படிலாம் பேசுற, நீ வா.. வீட்டுக்கு போகலாம்” என்றவள் அவளை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றாள். மாலை செல்லும் போது துள்ளலுடன் சென்ற மகள் இப்போது அழுது கன்னம் சிவந்து வருவதை பார்த்து பதறிய சிவகுமார் மற்றும் நிலா “ஆரு.. என்னடா ஆச்சு, ஏன் இப்படி வர” என்று கேட்க, பெற்றோர்களை பார்த்தவளுக்கு மீண்டும் அழுகை தான் வந்தது. சிவகுமாரை அணைத்துக்கொண்டவள் நடந்தவற்றை விசும்பலுடன் கூறி முடிக்க, அவருக்கு ஆருவின் நிலை தெளிவாக புரிந்தது.

“நீ போய் தூங்கு குட்டி.. மீதிய அப்பறம் பாத்துக்கலாம்” என்றவர் நேஹாவிடம் அக்னியை கவனிக்க சொல்லிவிட்டு ஆருவை அழைத்துக்கொண்டு சென்றார்.
அவர் மடியில் படுத்துக்கொண்டிருந்தவள் “நம்ம போயிடலாம் ப்பா.. எனக்கு யாரும் வேண்டாம்.. என்ன பத்தி முழுசா தெரிஞ்ச அவங்களே அப்படி பேசுவங்கன்னு நான் எதிர்பாக்கவே இல்ல.. நம்ம தூரமா போயிடலாம்” என்று மீண்டும் மீண்டும் கூறியவள், அழுததே உறங்கி போனாள்.

அவளுக்கு ஒரு இடமாற்றம்தேவை என்பதை புரிந்துகொண்ட சிவகுமாரும் அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

ஆருவை வீட்டில் விட்டவள் கதிரை அனுப்பிவிட்டு அடுத்ததாக அக்னியை காண சென்றாள். கல்பனா மற்றும் ஜெகதீஷ் உறவினர் திருமணத்திற்கு சென்றிருந்ததால் அக்னி மட்டுமே அங்கிருந்தான்.

அக்னியின் அறைக்கு சென்றவள் அறை இருந்த நிலையை பார்த்து அதிர்ந்து தான் போனாள். அறையிலிருந்த
பொருட்கள் அனைத்தையும் போட்டு உடைத்திருந்தவன் பால்கனியில் இருளை வெறித்தபடி நின்றிருக்க அவன் அருகில் சென்றவள் அவன் தோள் தொட்டு “அகி” என்றழைத்த மறுநொடி அவளை இறுகி அணைத்திருந்தான்.

அவன் கவலைகளின் வடிகால் அவள் மட்டுமே அல்லவா. அவனின் எதிர்பாராத அணைப்பில் திகைத்த பெண்ணவள் “அகி என்ன பண்ணுற.. யாராவது பார்க்க போறாங்க” என்று படபடக்க
“பாக்கட்டும்” என்றவன் அவள் தோளில் தன் முகம் புதைத்தான். நேஹா தான் “அகி ப்ளீஸ்” என்று நெளிய, “ப்ளீஸ் சொல்லாத” என்றான் அவளை போல்.

நேஹா “அப்போ விடு.. உள்ள போலாம்” என்றிட அமைதியாக அவளுடன் நுழைந்தவன் கட்டிலில் பொத்தென அமர அவன் அருகே சென்றவள் “எல்லாம் சரி ஆகிடும் அகி” என்றிட, மறுப்பாக தலையசைத்தவன் “எதுவும் சரியாகாது நேஹா.. அவ முகத்தை கூட பார்க்க பிடிக்கில” என்றவன் அவளை இடையோடு கட்டிக்கொண்டு கண்ணீர் சிந்த, அவன் கண்ணீரில் பதறியவள் “அகி இது என்ன சின்ன புள்ள மாதிரி.. அழாதடா.. ப்ளீஸ்” என்றவள் அவன் கண்களை துடைக்க அவள் கையை பற்றி கன்னத்தில் வைத்தவன் “எனக்கு நீ போதும் டி.. வேற யாரும் வேண்டாம்.. என்ன விட்டு போயிடாத” என்க, அவளோ மனதில் “நான் ரேயன் கூட பேசுவேனு தெரிஞ்சா என்னையும் வெறுத்துடுவியா” என்றெண்ணியவளுக்கு அந்த நினைப்பே கசத்தது. அவனை சமாதானம் செய்து உறங்க வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றவளின் தூக்கம் தொலைந்து போனது.

மறுநாள் அனைவருக்குமே சோர்வாகவே விடிந்தது. தன் பெற்றோரின் அறைக்கு வந்த ஆராத்யா “அப்பா” என்றழைக்க, சிவகுமார் “இன்னிக்கி சாயங்காலம் வேற வீட்டிக்கு போயிடலாம்டா.. உன்ன மிஞ்சி எங்களுக்கு எதுவுமில்ல” என்க அவரை கட்டிக்கொண்டவள் “யாருக்கும் நம்ம எங்க போறோம்னு தெரிய வேண்டாம் ப்பா.. யார்கிட்டயும் சொல்லாதீங்க” என்றிட அவரும் அதை ஒப்புக்கொண்டார்.

காலையில் தாமதமாக விழித்த அக்னி மனம் கேட்காமல் ஆருவிற்கு அழைக்க அழைப்பு ஏற்கப்படவில்லை. பத்து முறைக்கு மேல் தான் அழைப்பு ஏற்கப்பட்டது ஆனால் மறுமுனையில் இருந்தது என்னவோ சிவகுமார் தான். அக்னிக்கோ அவரிடம் பேச தர்மசங்கடமாக இருந்தது. சிவா “நாங்க வீடு ஷிப்ட் பண்றோம் அக்னி.. அவ இதை யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்னு தான் சொன்னா ஆனா எனக்கு மனசு கேட்கல” என்று முடித்துக்கொள்ள, ஆத்ரேயன் கூறி தான் இவ்வாறு தன்னை ஒதுக்குகிறாள் என்றெண்ணியவன் “இனி எப்போவும் அவ வாழ்க்கைல நான் வரமாட்டேன்” என்று அழைப்பை துண்டித்துவிட்டு அவள் எண்ணை பிளாக் செய்துவிட்டான்.

அன்று காலை அக்னியின் வீட்டிற்கு வந்த நேஹா அவனிடம் தான் ரேயனுடன் பேசியதை பற்றி கூற அவளை அடிபட்ட பார்வை பார்த்தவன் அவளிடமிருந்தும் ஒதுங்கினான். ஆனால் நேஹா தான் எக்காரணத்திற்காகவும் அவனை பிரிய கூடாது என்று முடிவெடுத்திருந்தாள்.

மறுபுறம் ரேயன் ஆருவிற்கு அழைக்க அவளோ அழைப்பை ஏற்றாள் இல்லை. அதற்கு மேல் முடியாமல் அவளை நேரில் சந்திக்க சென்ற போதும் அவள் அவனை பார்க்கவில்லை, அக்னிக்காக தான் தன்னை ஒதுக்குகிறாள் என்றெண்ணியவனோ அதற்கு மேல் அவளை தொந்திரவு செய்யவில்லை.

நாட்கள் நகர்ந்த நிலையில் தந்தையுடன் ஏற்பட்ட மன்ஸ்தாபத்தில் ஆத்ரேயன் தனியே சென்றுவிட, அக்னி மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றிருந்தான். இரண்டு வருடம் கழித்து மீண்டும் இந்தியா வந்தவன் அமெரிக்காவில் சம்பாதித்ததை வைத்து சிறிய அளவிலான நிறுவனத்தை தொடங்க, நேஹா அவன் நிறுவனத்திலேயே சேர்த்துக்கொண்டாள்.

ரேயனும் தனக்கென ஒரு நிறுவனம் தொடங்கி இருக்க, கிஷோர் அவனுக்கு பக்கபலமாக இருந்தான், இவர்களால் பாதிக்கப்பட்டது என்னவோ ஆராத்யா தான். ஆதீத மனஅழுத்தத்தில் இருந்தவள் அதிலிருந்து வெளி வரவே ஒன்றரை வருடம் ஆனது. அதன் பிறகு ஜேபி கன்ஸ்ட்ரக்ஷன்ஸில் சேர்ந்தவள் முற்றிலுமாக தன் இயல்பை தொலைத்திருந்தாள்.

தொடரும்…

Advertisement