Advertisement

                   அத்தியாயம் 24

         ரயில் நிலையத்தில் மூன்றாம் நடைமேடைக்கு முன் நின்றுகொண்டிருந்த கிஷோர் ஆத்ரேயனுக்கு அழைத்து “டேய் அப்போ சும்மா சொன்னேன்டா ஆனா இப்போ நிஜமாவே பத்து நிமிஷம் தான் இருக்கு.. ஸ்டேஷனை சுத்தி பாக்குறியா நீ” என்று பதற, அவன் பதட்டத்திற்கு காரணமானவோ “புலம்பாத திரும்பி பாரு” என்றான். கிஷோர் திரும்பி பார்க்க ரேயனோ ரயிலை நோக்கி சென்றுகொண்டிருந்தான். கிஷோர் “அட பாவி.. ஒரு மனுஷன் நிக்கிறேன் மதிக்காம தாண்டி போறான் பாரு.. இருடா டேய் சைக்கோ” என்று கத்திக்கொண்டே அவனை நோக்கி சென்றான்.

ரேயன் “கோச் நம்பர் என்ன” என்று வினவ “S 2” என்றான் ஆனால் ரேயன் தலையை கூட அசைக்காது நடந்து செல்ல “ஓகேவாச்சு சொல்லுதா பாரு.. இருக்குற அறுபது கிலோவும் திமிரு” என அவனை அர்ச்சித்தபடி நடக்க அவன் அருகே நடந்துகொண்டிருந்த ரேயன் “என்ன தனியா பேசிட்டு வர” என ஒன்றும் தெரியாதது போல் வினவ “ஹான்.. நான் கொஞ்சம் லூசு.. அப்படிதான் பேசுவேன் வேற ஒன்னுமில்ல” என்று நக்கலாக கூற அவனோ “ஓ” என்றுவிட்டு நடந்தான், கிஷோர் தான் தலையில் அடித்துக்கொண்டு அவனுடன் நடக்கவேண்டியதாயிற்று.

கௌதம் மற்ற இருவருக்காக அவர்கள் கம்பார்ட்மெண்ட்டின் வாசலில் காத்துக்கொண்டிருக்க, அப்போது தான் ரயில் நிலையத்தினுள் நுழைந்த ஆராத்யா கம்பார்ட்மெண்ட் அறிவதற்கு சித்துவை அழைத்தாள்.

சித்து “சொல்லு ஆரா போயிட்டியா” என்று கேட்க, ஆரு “எது.. போயிட்டியாவா.. நீ இன்னும் வரலையா” என்று கடுப்படிக்க
“ஐயோ நான் வந்த ஆட்டோ பாதி வழில நின்னுடுச்சு அதான் வேற ஆட்டோ பிடிச்சு வரேன்” என்று விளக்க
“சரி கோச் நம்பர் என்ன” என்றாள். சித்து “ஆன் அதுவா.. S 4.. நீ போ கௌதம் இருப்பான்” என்று எரிகிற தீயில் அவன் எண்ணெய் வார்க்க, அழைப்பை துண்டிதவளோ “சே.. சைத்தான் இருக்கானா அங்க.. விதி” என அவள் புலம்பிக்கொண்டு அங்கு செல்ல அங்கு கௌதம் நின்றுக்கொண்டிருந்தான்.

ஆரு “வெளியவே நிக்குது” என முணுமுணுத்தபடி அவள் ராயிலினுள் நுழைய ஒரு நிமிடம் அவளை நிமிர்ந்து பார்த்தவன் மீண்டும் தன் அலைபேசியில் புதைந்தான். ஆராத்யா தன் உடைமைகளை வைத்துவிட்டு வரவும் சித்து வரவும் சரியாக இருந்தது.

ஆரு “டேய்.. உன் வீட்ல இருந்து இங்க வர இவ்ளோ நேரமா” என முறைக்க அதில் அசடு வழிந்தவன் “நான் சீக்கிரம் கிளம்பிட்டேன் ஆட்டோ சொதப்பிடுச்சு” என்று உதட்டை பிதுக்க அவனை நக்கலாக ஒரு பார்வை பார்த்த கௌதம் “டேய் அடங்கு.. நீ எப்போ கிளம்புனனு எனக்கு தெரியும்” என்று அவனை வார அதில் அவனை பார்த்து கை கூப்பி கும்மிடு போட்டவன் “எப்பா perfectionக்கு பொறந்தவனே.. என்னால உன்ன மாதிரியெல்லாம் இருக்க முடியாது” என்று பின் வாங்க ஆராத்யா தலையில் அடித்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

கௌதம் “நீ போ.. நான் சாப்பிட எதாச்சு வாங்கிட்டு வரேன்” என்க அவனை பார்த்து தன் முப்பத்தி இரண்டு பற்களையும் காட்டிய சித்து “என்ன பாசம் உனக்கு என்மேல” என அவனை தோளோடு அணைத்துக்கொள்ள, கௌதம் “அப்போ நீ எதுவும் எடுத்துட்டு வரல அப்படி தான” என்று மார்பிற்கு குறுக்கே கைகட்டி அவனை ஏறிட, “இருக்கு இருக்கு.. அது எப்படி எடுத்துட்டு வராமா இருப்பேன்” என்றான். கௌதம் “ஆஹான்..” என்று நக்கலடித்தவன் “எனக்கு தெரிஞ்சு அவ எதுவும் எடுத்துட்டு வந்திருக்க மாட்டா.. நான் போய் வாங்கிட்டு வரேன்” என்றான். சித்து அவனை மெச்சும் பார்வை பார்த்துவிட்டு “டேய் பண்றதெல்லாம் நீ பண்ணிட்டு, எதுவும் சொல்லவும் விட மாட்டுற.. எப்போ பாரு அவ கூட முட்டிட்டே இருக்க” என்று புரியாமல் கேட்க அதில் அழகாக புன்னகைத்தவன் “தெரியலையே” என்று உதட்டை பிதுக்கிவிட்டு உணவு வாங்க சென்றான். கௌதம் செல்வதை கண்டவன் “தெரியலையா.. அட அர லூசு.. சைக்” என்று தலையில் அடித்துக்கொண்டு வண்டியில் ஏறினான்.

இருக்கையில் அமர்ந்திருந்த ரேயன் தன் மடிகணினியை இயக்கி அதில் ஏதோ பார்த்துக்கொண்டிருந்தான் ஆனால் அவன் இதயமோ நிம்மதியற்று ஒருவித படபடப்புடன் துடித்துக்கொண்டிருந்தது. ரேயனின் முகத்தை வைத்தே ஏதோ சரியில்லை என்றுணர்ந்த கிஷோர் “டேய் ஏன் உன் முகம் இப்படி இருக்கு.. என்ன ஆச்சு” என்று அவனிடம் கேட்க, “எனக்கு என்ன.. நல்லாதான் இருக்கேன்” என்றவனின் வாய் பொய்யுரைத்தாலும் அவன் கண்கள் ஒருவித பரிதவிப்புடன் அலைப்பாய்ந்து.

அதே கம்பார்ட்மெண்ட்டில் அவனுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த பெண்கள் அவனை விழியகாலது பார்த்துக்கொண்டும் அவனை பற்றி ஏதோ முணுமுணுத்துக்கொண்டும் அமர்ந்திருக்க அவனுக்கோ அவர்களின் செயலில் எரிச்சல் மூண்டது. அவர்களின் பார்வையை கவனித்த கிஷோர் “என்ன இவளுங்க இப்படி பாக்குறாலுங்க” என நினைத்துக்கொண்டான்.

ரயில் மெல்ல நகர தொடங்கியது, அப்பெண்கள் ரேயனுடன் பேச முயற்சிக்க அவனோ அவர்களை ஏறிட்டானில்லை. அந்த பெண்களும் ஏதேதோ பேச ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்தவன் சட்டென அவ்விருக்கையிலிருந்து எழுந்து கிஷோரிடம் “எந்திரி” என்றான், “என்னடா..” என்று கேட்ட கிஷோருக்கு அவன் செயலிற்கான காரணம் புரிந்தே இருந்தது.

ரேயன் “எனக்கு வேற சீட் வேணும்.. இது வேண்டாம்.. ஐ கான்ட் பீ ஹியர் எனிமோர்” என்றான் கடுகடுப்புடன்
கிஷோர் “டேய் எப்படிடா.. மாத்துறதெல்லாம் கஷ்டம்.. யார் மாத்திப்பா தெரியலயே”  என்று இவன் பேசிக்கொண்டிருக்கும் போதே டி.டி.ஆர் வர ரேயன் அவருடன் பேசினான்.

ரேயன் “சார் வேற எதாச்சு கோச்ல லோவ்ர் பேர்த் கிடைக்காம யாராவது இருக்காங்களா.. இல்ல சீட் மாத்த யாராச்சு ட்ரை பண்றங்களா.. ஐ அம் நாட் கம்பர்டபில் ஹியர்” என்று என்று முடிக்க, டி.டி.ஆர் “உங்க டிக்கெட் காட்டுங்க சார்” என்று அவன் பயணச்சீட்டை வாங்கி பார்த்தவர் ” S4ல ரெண்டு வயசானவங்க இருக்காங்க.. அங்க மாதிக்கிறீங்களா” என்றார் கேள்வியாக
“சியூர் சார்” என்றவன் தன் உடமைகளை எடுத்துக்கொண்டு நடக்க கிஷோர் அங்கு அமர்ந்திருந்த பெண்களிடம் “ஏன்மா.. எனக்குன்னே வருவீங்களா.. நல்லா இருந்தவன இப்படி பிசாசா மாத்தி விட்டுடீங்களே” என அவர்களை திட்டிவிட்டு செல்ல அப்பெண்களோ ஒன்றும் புரியாமல் அமர்ந்திருந்தனர்.

டி.டி.ஆருடன் சென்ற ஆத்ரேயன் பின் ஓடிய கிஷோர் “டேய் இருடா நானும் வரேன்” என்றான். ரேயன் “டிஸ்கஸ்டிங்” என்று முணுமுணுக்க, அவன் தோளில் தட்டியவன் “ஏன்டா இவ்ளோ டென்ஷனாகுற.. எப்போவும் கண்டுக்காம தான இருப்ப” என்று கேட்க
“என்னால முடியல.. யாரும் என்ன பாக்குறது எனக்கு பிடிக்கில” என்றவனின் மனக்கண்ணில் தோன்றியது என்னவோ அவனவளின் மலர் முகம் தான். அவன் கூறியதை கேட்ட கிஷோருக்கு ஒருபுறம் சிரிப்பாக இருந்தாலும் மறுபக்கம் சிறு வருத்தம் இருக்கவே செய்தது.

அங்கு சித்து “டேய் அந்த  சொட்ட அங்கிள் ரொம்ப தான் பண்றான்டா.. பாவம் அந்த தாத்தா பாட்டி.. லோவர் பெர்த் கொடுத்தா தான் என்னவாம்” என்று அவனுக்கு எதிரில் ஜன்னலோரம் அமர்ந்திருந்த ஒருவரை பார்த்தபடி கௌதமிடம் சிடுசிடுக்க, “செல்பிஷ்டா இங்க எல்லாரும்” என்றான் அவன் சலிப்பாக தலையாட்டியபடி.

சித்து “டி.டி.ஆர் கிட்ட கேட்டல.. என்ன சொன்னாரு” என்று கேட்க
“இப்போதைக்கு முடியாது.. கேட்டுட்டு வேணா சொல்லுறேன்னு போனாரு” என்று பதிலளிக்க “சரி பாப்போம்.. இதோ பாரேன், இங்க இவ்ளோ பிரச்சனை நடக்குது, ஒருத்தி எதையாச்சு மதிக்கிறாளா பாரு” என கையில் ஒரு புத்தகத்துடன் அமர்ந்திருந்த ஆரத்யாவை பார்த்தபடி கூற, கௌதம் “வாய மூடிட்டு இருக்காளே அதுவே போதும்” என்றான் நிம்மதியாக. சித்து “மச்சான் அந்த சொட்டைய அவகிட்ட இருந்து திட்டு வாங்க வைப்போமா” என ரகசிய குரலில் கேட்க கௌதம் சிரித்துக்கொண்டே அமோதிப்பாய் தலையசைத்தான்.

ஆருவின் பக்கம் தள்ளி அமர்ந்த சித்து “எருமை..  இந்த ட்ரெயின் புரள போகுதாம் தெரியுமா” என்று நக்கலாக கூற
“ஆன் சரி” என்றவள் அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. சித்து “அட ச்சை.. சரி சாப்பிடுறியா டைம் ஆகுது” என்று வினவ மறுப்பாக தலையசைத்தவள் “வேண்டாம்” என்றாள். சித்து “ஏன் பசியில்லையா” என்று மீண்டும் வினவ அதில் தன் கையிலிருந்த புத்தகத்தை மூடியவள் “சித்து எனக்கு வேணும்னா நான் சாப்பிடுவேன்.. சும்மா கேள்வி கேட்டுட்டு இருக்காத” என்று சிடுசிடுக்க, கௌதம் “சித்து.. சும்மா அவளை கெஞ்சிட்டு இருக்காத.. நீ ஒன்னும் அவ வேலைக்காரன் கிடையாது” என்று கோபமாக உரைக்க அதில் அவனை முறைத்தவள் “நாங்க தான பேசுறோம்.. நீ எதுக்கு நடுவுல வர” என்றாள் கோபக்குரலில். கௌதம் “நான் சித்துகிட்ட பேசுறேன்.. நீ எதுக்கு எங்கிட்ட பேசுற” என்று அவனும் சண்டைக்கு வர
ஆரு “நீ என்கிட்ட பேசுனதால தான் நான் பேசுறேன்” என்று கத்த அதில் கடுப்பான அந்த சொட்ட அங்கிள் “ஹெலோ.. இது ட்ரெயின்னா இல்ல உங்க வீடா.. கத்திக்கிட்டே இருக்கீங்க.. நாங்களாம் இருக்கோம்ல” என ஆருவிடம் சத்தமிட, கௌதம் பக்கம் சரிந்த சித்து “வர்க் அவுட் ஆகுது” என்று ஹை பை அடித்துக்கொண்டான்.

ஆரு “ஹெலோ.. நாங்க என்ன வித்தவுட்லயா வறோம்.. நாங்களும் காசு கொடுத்து தான் வறோம்.. எங்களை பேச கூடாதுன்னு சொல்ல நீங்க யாரு.. அப்படி உங்களுக்கு பிரச்சனை இருந்தா நீங்க வேற சீட்டுக்கு மாறி போங்க” என்று பொரிந்தாள்.

ஆருவின் பேச்சில் கடுப்பானவர் “என்ன நினைச்சிட்டு இருக்க நீ”  என்று கத்த
“ஆராத்யா சிவகுமார், ஜிஎம் ஆப் ஜெபி கன்ஸ்ட்ரக்ஷன்.. அப்படி தான் நினைக்கிறேன்” என்றாள் திமிராக, சித்து சிரிப்பை அடக்கிக்கொண்டு அமர்ந்திருக்க அவரின் மனைவியோ “ஏங்க கொஞ்சம் சும்மா இருங்க” என்று அவரை அடக்க முயல அவரோ “யூ ஷட் அப்.. இப்போவே நான் டிடி கிட்ட கம்பலைன் பண்ணுறேன்” என்று எகிற ஆருவோ அசால்ட்டாக “ஆன் வர சொல்லுங்க.. அவர்கிட்டயே கேட்குறேன்” என்றவர் அவரை அலட்சியமாக பார்த்தபடி முகம் கழுவ எழுந்து சென்றாள்.

டி.டி ஆருடன் வருவதை பார்த்தவுடன் கௌதமிற்கு புரிந்துவிட்டது அவர் இடம் மாற்றுதல்பற்றி பேச தான் வந்திருக்கிறார்கள் என்று.

டி.டி.ஆர் “சார் இவங்க சேஜ் பண்ணிக்க ரெடி” என்க கௌதம் அவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு அந்த முதிய தம்பதியிடம் “லோவர் பெர்த் கிடைச்சிடுச்சு தாத்தா.. வாங்க நான் உங்க கூட வரேன்” என்றிட அவரோ “இருக்கட்டும் தம்பி.. நாங்க போயிக்கிறோம்” என்றவர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு இருக்கையின் எண் மற்றும் கோச்சின் எண்ணை கேட்டுக்கொண்டு தன் மனைவியுடன் சென்றார்.

சித்து “ஒருவழியா மாத்திக்க ஆள் வந்துட்டாங்க.. சொட்ட அங்கிளுக்கு பல்பு தான்” என்று சிரிக்க அது அவர் காதில் தெளிவாக விழுந்தது. அவரோ அவனை எரிக்கும் பார்வை பார்த்துக்கொண்டு “என்ன.. என்ன சொன்ன நீ” கோபமாக கேட்க, சித்து “எங்க வீட்ல பல்ப் ஒழுங்கா எரியலன்னு சொல்லிட்டு இருந்தேன்” என்றான் ராகமாக அதில் கௌதம் பக்கென சிரித்துவிட சித்துவும் அவனுடன் சேர்ந்து சிரிக்க தொடங்கினான்.

டி.டி ஆர் கூறிய இருக்கையில் அமர்ந்திருந்த கௌதமை பார்த்த கிஷோர் “பாக்க நம்ம வயசு பையன் மாதிரி இருக்கான்.. இவன் எதுக்கு லோவர் பெர்த் கேட்குறான்.. ஒருவேளை முதுகுல பிரச்சனையா” என்று கேள்வியாக ரேயனை பார்க்க , “அதெல்லாம் உனக்கு எதுக்கு.. மூடிட்டு வா” என்றபடி அங்கு சென்றான்.

சித்து “S 2ல சீட் சேஜ் பண்ணவங்களா” என்று  ரேயனை பார்த்து கேட்க “ம்ம்” என்றான். கிஷோர் “ப்ரோ லோவர் பெர்த் உங்களுக்கா” என்று கௌதமை பார்த்து ஒரு மாதிரி குரலில் கேட்க அதில் லேசாக புன்னகைத்தவன் “இல்ல ப்ரோ.. வயசானவங்க ரெண்டு பேர்.. இப்போ தான் போனாங்க” என்று விளக்கமளிக்க கிஷோர் “ஓ” என கேட்டுக்கொண்டான். ரேயன் தன் உடமைகளை வைத்துவிட்டு அமர கிஷோரும் அவன் அருகில் அமர்ந்தான்.

கிஷோர் “ஹாய்.. ஏன் என்ன ஆச்சு.. அவர் சீட் மாத்த ஒத்துக்கலயா” என்று முணுமுணுப்பாக அந்த சொட்டை அங்கிளை காட்டியபடி கேட்க, சித்து “ஆமா ப்ரோ.. ஒத்துக்க மாட்டேனிட்டான்.. சொட்ட” என்றான் கடுப்புடன். கிஷோர் “இவங்கலாம் இப்படி தான்” என்றான் சலிப்பாக, சித்து “ஆமா உங்களுக்கு என்ன பிரச்சனை” என்று தீவிரமாக கேட்க கிஷோரும் அதே தீவிர குரலில் “அதோ என் பிரெண்ட்ட அங்க சில பொண்ணுங்க சைட் அடிக்குறாங்க அதான் கூட்டிட்டு வந்துட்டேன்” என்றிட அதை தலையாட்டி கேட்டுக்கொண்டிருந்தவன் அவன் கூறியதை கேட்டு வாய் விட்டு சிரிக்க கிஷோரும் அவனுடன் இணைந்துகொண்டான்.

அந்த அங்கிளோ “ஆல்ரெடி மூணு இருக்கு இதுல எக்ஸ்ட்ரா ரெண்டு வேற” என சத்தமாக முணுமுணுக்க ரேயன் அவரைதீயாய் முறைத்தான். அவன் பார்வையில் அவர் முதுகுத்தண்டு சில்லிட “இவன் என்ன இப்படி முறைக்கிறான்” என நினைத்தவர் அதோடு தன் வாயிற்கு பூட்டு போட்டுக்கொண்டார்.

ரேயன் அமர்ந்திருந்த இருக்கைக்கு எதிரில் இருந்த இருக்கையில் அலைபேசி மடிக்கணினி ஒரு பெண்ணின் ஸ்டோல் இருப்பது கண்ணில் பட்டது. அதையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த ரேயனுக்கோ பலவித உணர்ச்சிகள் தோன்றி அவனை அலக்கழித்தது.

கௌதமோ ரேயனின் பார்வையை கவனித்தும் கவனிகாதது போல் அமர்ந்திருக்க சித்து மற்றும் கிஷோர் தான் வளவளத்துக்கொண்டிருந்தனர்.

கிஷோர் “என்ன ப்ரோ.. நான் எப்படி ஒரு ரோபோ வளர்க்குறனோ நீங்களும் ஒன்னு வளர்க்குறீங்க போல” என கௌதமை காட்டியபடி கேலியாக கேட்க, ஆத்ரேயனை ஒரு பார்வை பார்த்த சித்து “அட ஆமா ப்ரோ.. ஆனா உங்க அளவுக்கு இல்லையோனு தோனுது” என்று சிரிக்க
கிஷோர் “ஆமா ஆமா.. இது ஒரே ஒரு பீஸ் தான்.. யூனிக் பீஸ்” என்று பேசிக்கொண்டிருந்தான்.

ஆரு இருந்த ரயில் பெட்டியில் கழிவறையில் ஆள் இருந்ததால் அடுத்த பெட்டிக்கு சென்றிருந்தாள். கழிவறை சென்றுவிட்டு வந்தவளை நான்கு பேர் வம்பிழுக்க அவளோ பிரச்சனை வேண்டாம் என்றெண்ணி அவர்களை முறைத்துவிட்டு சென்றாள்.

ஆனால் அவர்களை தாண்டி வந்தவளுக்கு திடீரென இதயம் படபடக்க “சே.. இந்த சல்லி பசங்கள பார்த்தாலாம் படபடப்பாகுது.. மானம்கெட்ட மனசு” என தனக்குள்ளே புலம்பிக்கொண்டு சென்றவளை இடித்துக்கொண்டு சென்றான் அந்த நால்வரில் ஒரு தடியன். பார்க்கவே பொறுக்கி போல் இருந்தவர்களை “பொறுக்கிங்க” என்று திட்டயபடி அவள் தன் பெட்டிக்கு வர அவள் வழியை மரித்தபடி நின்றவிட்டனர் அந்த நால்வரும்.

ஆரு “டேய் வழி விடுங்கடா” என்று கோபமாக சீற அவர்களில் ஒருவனோ “மச்சி உனக்கு எதாவது கேட்குதா” என்றான் நக்கலாக, எதர்ச்சியாக திரும்பிய கௌதம் ஆருவை கண்டு அவளை நோக்கி செல்ல சித்துவும் “எங்க போறான் இவன்” என அவனை பின் தொடர்ந்தான். கிஷோர் ‘ஏதோ பிரச்சனை போல’ என நினைத்தவன் ரேயனிடம் “மச்சா அங்க ஏதோ பிரச்சனை போல.. வா போய் பார்ப்போம்” என்றழைக்க, “இருக்குற பிரச்சனை பாக்கவே நேரமில்ல இதுல புதுசு வேறயா.. அமைதியா உட்காரு” என்றுவிட்டு அவன் தன் வேலையை பார்க்க கிஷோர் அவனை முறைத்துவிட்டு எழுந்து சென்றான்.

ஆராத்யா நின்ற இடத்திற்கு அருகே சென்ற கௌதம் “ஆரா வா” என்றழைக்க, அந்த நால்வரில் ஒருவன் “தோடா.. ஹீரோ வந்துட்டாரு” என்றான் நக்கலாக, கௌதம் அவர்களை முறைத்துக்கொண்டு நின்றக்க
சித்து “என்ன சீன் போடுறீங்களா.. ஆரா நீ வா இப்படி” என்று அழைத்தான். ஆருவும் அவர்களை தள்ளிவிட்டு போக பார்க்க ஒருவனோ அவள் கைபிடித்து தடுக்க அதில் அவனை சப்பென அறைந்தவள் “மேல கை வச்ச மூஞ்ச உடச்சிடுவேன்” என்றாள் சீறலாக. அவனோ “ஐயோ பயந்துட்டேன் பேபி.. என்னையே அடிக்கிறியோ.. இன்னிக்கி முழுக்க நீ என் கூட தான் இருப்ப” என்று அவள் இடையில் கைவைக்க முயலும் போதே ஆரத்யாவின் இடை பிடித்து அவளை சித்துவோட நிற்க வைத்துவிட்டு அவளிடம் தவறாக நடக்க முயற்சி செய்தவனின்  கையை பின்னிலிருந்து முருக்கியபடி அவன் முட்டியில் ஒரு குத்து குத்தி அவனை இழுத்து வெளியே தள்ளியிருந்தான் ஆத்ரேயன்.

நொடிகளில் நடந்திருந்த நிகழ்வை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. ரயில் சரியாக ஒரு நிறத்தில் நின்றதால் வெளியில் வீசப்பட்டவனுக்கும் அவ்வளவு அடி பட்டிருக்கவில்லை.

ஆத்ரேயனின் இந்த செயலை கண்ட கிஷோர் “அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே” என்று வாயை பிளக்க, தன் இடை பற்றியவன் யார் என்று நிமிர்ந்து பார்த்து ஆருவிற்கோ இதயம் தடதடக்க தொடங்கியது.

கிஷோர் எழுந்து சென்ற பின் ஆத்ரேயனுக்கு ஏதோ தோன்ற அவனும் எழுந்து சென்றான். கிஷோரின் பின் எழுந்து சென்ற போது தான் அவன் ஆராத்யாவை கவனித்தான். ஒருவேளை இது கிஷோரின் திட்டமா என்று அவன் முகத்தை பார்க்க அவனோ ஆருவை அங்கு சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை அவன் அதிர்ந்த முகத்தை வைத்தே கண்டுக்கொண்டான்.

ஏனோ அவனுக்கு எப்போதும் போல் அவள்மீது கோபம் எழவில்லை மாறாக அவள் கையை இறுக பற்றியிருந்த தடியன் மீது தான் கொலைவெறியில் இருந்தான் அதனால் தான் அவனை அடித்து வெளியில் தள்ளினான்.

அவன் கூட்டாளிகளோ ரேயனை முறைத்து “டேய் யார்மேல கை வச்ச” என்று எகிற தன் சட்டையின் கையை உயர்த்தியபடி அவனை நெருங்கியவன் அவனை ஓங்கி ஒரு அறை விட அவனோ கன்னத்தை பொத்தி இரண்டடி பின்னால் நகர்ந்தான் அவன் அடியின் விசையால். மற்ற கூட்டாளிகளோ “சாரி.. தெரியாம பண்ணிட்டோம்” என்று அவசரமாக மன்னிப்பு வேண்ட “இறங்குங்கடா கீழ” என்றான்,
“ண்ணா.. பேக் உள்ள இருக்கு” என்று அவர்கள் தயங்க “இறங்குங்க கீழ” என்றான் கர்ஜிக்கும் குரலில். அவன் குரலில் அரண்டது அவர்கள் மட்டுமல்ல சித்துவும் தான்.

அந்த நால்வரோ அவசரமாக வண்டியிலிருந்து இறங்க, வெளியில் விழுந்திருந்தவனோ “இவனை சும்மா விட கூடாது” என எழுந்து வர அவனை தடுத்த அவன் கூட்டாளிகள் “வாய மூடிட்டு வா.. ஏதோ உனக்கு நல்ல நேரமா இருக்க போய் பிளாட்பார்ம்ல விழுந்த..  ட்ரெயின் மட்டும் ரன்னிங்ல இருந்தா இந்நேரத்துக்கு பரலோகம் போயிருப்ப” என்று அவனை இழுத்து செல்ல அந்த தடியனோ “டேய் பேக் இருக்குடா” என்றான். மற்றொருவன் “ஆமா ஆமா கோடி கோடியா வச்சிருக்க பாரு.. நாலு கிழிஞ்ச துணி தான.. வா” என்று அங்கிருந்து அவனை இழுத்துக்கொண்டு சென்றனர்.

இங்கோ ரேயன் அவளை சிறிதும் கண்டுகொண்டானில்லை, தான் வந்த வேலை முடிந்தது என்பது போல் அவன் அவளை தாண்டி சென்றான். ஆரு தான் அவனை வெறித்துக்கொண்டிருந்தாள். அவளுக்கோ முதல் முறை ஆத்ரேயன் சண்டையிட்டது அவள் அவன் கையிற்கு மருந்திட்டது என அனைத்தும் நியாபகம் வந்து தொலைந்தது. ஆராத்யா அமைதியாக நிற்பதை கண்ட கௌதம் “தேங்க் யூ சோ மச்” என்று ரேயனிடம் நன்றியுரைக்க ஒரு தலையசைப்பை மட்டும் கொடுத்தவன் அங்கிருந்து சென்றான்.

கௌதம் “உன் பிரெண்ட்ட கூட்டிட்டு வா.. ட்ரெயின்ன சுத்தி பார்க்குறா போல” என முறைத்துவிட்டு செல்ல ஆரு அமைதியாக நின்றிருந்தாள். சித்து “வா ஆரா.. நல்லவேளை அவங்க உன்கிட்ட இருந்து தப்பிச்சிட்டாங்க” என்று கலாய்க்க அப்போதும் அவளிடம் பெரிதாக பதிலில்லை. கிஷோர் “உங்களுக்கு எதுவும் இல்ல தான” என்று கேட்டவன் அறிவான் அவள் இப்போது தன்னிடம் பேசும் நிலையில் நிச்சயம் இல்லையென்று. ஆருவிற்கு கிஷோர் மீது கோபமோ வருத்தமோ இல்லை ஆனால் ஏனோ அவள் யாரிடமும் பேசுவதில்லை.

கிஷோர் கேள்வியில் அவனை நிமிர்ந்து பார்த்தவள் “ஐ அம் பைன்” என்றுவிட்டு சென்றிட
சித்து “தேங்க்ஸ் ப்ரோ.. நல்லவேளை உங்க பிரெண்ட் ஹெல்ப் பண்ணாரு” என்று நன்றியுரைக்க
கிஷோர் “அவங்க உங்க பிரெண்ட்டா” என்றான் கேள்வியாக. சித்து “ஆமா ப்ரோ.. ஒன்னா வேலை செய்யிறோம்” என்றிட, கிஷோர் “ஓ.. சரி ப்ரோ.. நீங்க போங்க.. நான் ஒரு கால் பேசிட்டு வரேன்” என்றான்.

அடுத்ததாக ஆரு இங்கு தான் வருவாள் என்பதை உணர்ந்த ஆத்ரேயன் அந்த இடத்தை விடுத்து கதவின் அருகில் சென்று நின்றுகொண்டான். எனவே ஆரு வரும்போது அங்கு அவனில்லை ஆனால் அந்த முதிய தம்பதிகள் இல்லாததை வைத்தே இது ரேயனின் இருக்கை என்பதை அவள் புரிந்துக்கொண்டாள்.

இருக்கைக்கு வந்தமர்ந்த சித்து “எங்கடா அந்த ப்ரோ.. இங்க தான இருந்தாரு” என்று கௌதமிடம் வினவ அவனோ “தெரியலடா.. நான் வர்ரப்போ அவர் இல்ல.. ஆமா அவர் பிரெண்ட் எங்க” என்று கிஷோரை பற்றி விசாரிக்க “அதோ அங்க போன் பேசுராறு” என்றான். இவர்கள் பேசுவதை வைத்து அது தான் அவர்களின் இருக்கை என்பதை பெண்ணவள் உறுதி செய்தாள். ஆருவோ “எப்போவும் எனக்கு தான் இப்படி நடக்குது.. இது கோயின்சிடென்ஸா இல்ல பிளான்னா” என தனக்குள் சிந்தித்தவள் பின் அதை ஓரம் கட்டினாள்.

ஆருவின் செயல்களை கவனித்துக்கொண்டிருந்த கௌதமிற்கு ஏதோ சரியாக படவில்லை ஆனால் அவன் அதை காட்டிக்கொள்ளவுமில்லை. ஆருவின் இதய துடிப்போ தருமாறக துடித்துக்கொண்டிருந்தது அவளவனின் நினைவில்.

இங்கு கிஷோர் கதிருக்கு அழைத்து “டேய் கதிரு.. என்ன ஆச்சு தெரியுமா” என்று குதூகளிக்க கதிர் தன் நெஞ்சை பிடித்துக்கொண்டு “டேய் செத்த பயலே.. எப்போ பாரு எனக்கு ஹார்ட் அட்டாக் வர மாதிரியே எதாவது சொல்லாத” என்று கேலியாக உரைக்க, கிஷோர் “டேய்.. முதல சொல்றத கேளுடா” என்றான். கதிர் “சொல்லும் சொல்லி தொலையும்” என்க கிஷோர் “நானும் ரேயனும் ஊட்டிக்கு போயிட்டு இருக்கோம்” என்று தொடங்க, கதிர் “சரி நீயும் உன் பிரெண்டும் ஹனிமூன் போறீங்க.. இதுல என்னடா இருக்கு” என அலுத்துக்கொள்ள,
கிஷோர் “டேய்.. சொல்லுறத கேளுடா” என்று கெஞ்ச கதிர் சிரித்துவிட்டு “சரி சொல்லு” என்றான் பெரிய மனதுடன்.

கிஷோர் “ஆரா இங்க இருக்கா டா.. அதுவும் எங்க சீட்டுக்கு எதிர் சீட்டு” என்று உற்சாகமாக கூற இப்போது நிஜமாகவே நெஞ்சில் கைவைத்த கதிர் “எதே.. எனக்கு தெரிஞ்சு நம்ம பிளான் பண்ணல.. ஒருவேளை நமக்கு தெரியாம ரேயன் இல்லனா ஆரு பிளான் பண்ணுறாங்களா” என்று யோசனையுடன் வினவ
கிஷோர் “என்னமோ.. எல்லாம் நமக்கு சாதகமா நடந்தா சரி” என்றான். கதிர் “சரி போய் எதாச்சு பண்ணு”
“ஹாஹா அடியேன் பார்த்து கொள்கிறேன்.. டாடா” என்று அழைப்பை துண்டித்துவிட்டு இருக்கைக்கு சென்றவன் சித்துவிடம் “ப்ரோ எங்க அவன்” என்று புருவம் சுருக்க, சித்து “தெரியல ப்ரோ.. நாங்க வரும்போதே அவர் இங்க இல்ல” என்றான்.

கிஷோர் ‘ஒருவேளை ட்ரெயின்ன விட்டு இறங்கிட்டானோ.. ஐயோ சைக்கோ பண்ணாலும் பண்ணுவான்’ என்று உள்ளுக்குள் பதறியபடி அவனை தேட அவனோ கதவின் ஒருகே மடிகணினியுடன் அமர்ந்திருந்தான். அவனை பார்த்து தலையில் அடித்துக்கொண்ட கிஷோர் “என்ன பண்ணுறான் பாரு.. பைத்தியம்” என முணுமுணுத்தபடி அவன் அருகில் சென்றவன் “டேய் இங்க என்ன பண்ணுற” என்று இடுப்பில் கை வைக்க
“பாத்தா தெரியல.. வேலை பாக்குறேன்” என்றான் கணினியிலிருந்து முகத்தை நிமிர்த்தாது. கிஷோர் “அதை அங்க வந்து பண்ணுடா.. ஏன் இங்க வந்து உட்கார்ந்திருக்க.. வா மச்சான்” என்று அவன் கை பிடித்த, அவன் கையை உதறியவன் “மாட்டேன்” என்றான் இறுகிய குரலில் ஆனால் கிஷோரும் விடாமல் “மச்சா சீட் கூட மாத்த முடியாது.. உன் நிலைமை புரியுதுடா.. இன்னும் கொஞ்ச நேரம் தான்.. பல்லை கடிச்சிட்டு இரு.. எவ்ளோ நேரம் இங்க உட்கார்ந்திருப்ப” என்று கெஞ்சும் குரலில் கேட்க, ரேயனோ கோபமாக “வர மாட்டேன்னு சொன்னேன்.. ஒரு நாள் இங்க உட்கார்ந்தா ஒன்னும் ஆகிடாது” என்றவன் மீண்டும் வேலையை தொடர கிஷோரும் அவன் அருகே நின்றுகொண்டான். ஆத்ரேயன் சலிப்பாக “நீ எதுக்கு இங்க இருக்க.. அங்க போய் உட்கார வேண்டியது தான” என்று கூற கிஷோரோ “அதை நீ சொல்ல தேவையில்ல” என்றான் பட்டுதரித்தார் போல்.

ஆத்ரேயனுக்கு அவனை வருத்த மனமில்லை அதே போல் அங்கு அவளை பார்த்தபடி அமரவும் அவனுக்கு தைரியம் இருக்கவில்லை. கணினியை அணைத்துவிட்டு அமர்ந்தவனை பார்த்த கிஷோர் “ஹப்பா.. சாமி மலை இறங்குது..  கொஞ்சம் ஆக்டிங போடுவோம்” என்றெண்ணியவன் காலை பிடித்து கொண்டு வலியில் முகத்தை சுருக்கினான். அலுவலகத்தில் பாதி நேரம் அங்கும் இங்கும் திரிந்துகொண்டிருப்பவனுக்கு இந்த பத்து நிமிடம் நிற்பதில் கால் வலி என்றால் குழந்தை கூட நம்பாது ஆனால் பாவம் ரேயனுக்கு தான் அவன் தனக்காக வருந்துவது பாரமாக இருந்தது. கிஷோரை ஒரு பார்வை பார்த்தவன் இருக்கைக்கு எழுந்து செல்ல, கிஷோர் ‘லவ் யூ டா மச்சான்’ என மனதில் நினைத்துக்கொண்டு அவன் பின் சென்றான்.

இருக்கைக்கு வந்தமர்ந்த ஆத்ரேயனை பார்த்து தன் உணர்வுகளை வெளிக்காட்டாமலிருக்க  பெரும் பாடு பட்டுப்போனாள் பெண்ணவள். ஆத்ரேயனின் நிலையும் அதுவாக தான் இருந்தது. இருவரின் இதயமும் மற்றவரின் அருகாமையில் தாளம் தப்பிக்கொண்டிருந்தது என்னவோ அவர்கள் மட்டுமே அறிந்த ஒன்று.

சித்து “என்னாச்சு ப்ரோ.. ஏன் இவ்ளோ நேரம்” என்று கிஷோரிடம் கேள்வியெழுப்ப அவனும் சமளிப்பாக “சும்மா பேசிட்டு இருந்தோம்” என்றான்.

கௌதம் நேரத்தை பார்த்துவிட்டு “சரி சாப்பிடலாம்.. டைம் ஆகுது” என்று கூற சித்துவும் சரி என்று தான் வைத்திருந்த உணவை எடுத்தான்.

சித்து தான் வைத்திருந்த ப்ராங்கியை கிஷோரிடம் நீட்ட, கிஷோர் “ப்ரோ இப்போ நான் பரவால்ல இருக்கட்டும்ன்னு சொல்லாம உடனே வாங்கி சாப்பிட்டா என்ன அசிங்கமா நினைக்க மாட்டீங்களே” என்று தீவிரமாக தன் சந்தேகத்தை கேட்க அதில் வாய் விட்டு சிரித்தனர் சித்துவும் கௌதமும். கௌதம் “அதெல்லாம் ஒன்னுமில்ல ப்ரோ.. சாப்பிடுங்க.. உங்களுக்கு” என்று ஆத்ரேயனிடம் கேட்க “இல்ல எனக்கு பசிக்கில” என்றுவிட்டான். கிஷோரும் அதற்குமேல் எதுவும் கேட்கவேண்டாம் என்று தலையசைக்க அவர்களும் சரி என்றுவிட்டனர்.

சித்து “ஆரா இந்தா சாப்பிடு” என்று அவளிடம் ஒன்றை கொடுக்க அவளோ அதை வாங்க மறுத்துவிட்டாள், கௌதம் “டேய் என்ன.. அதான் வேண்டாம்னு சொல்றால.. பசிச்சா அவளே கேப்பா.. சும்மா தாங்காத” என்று எப்போதும் போல் கடுப்படிக்க ஆத்ரேயன் விலுக்கென நிமிர்ந்து அவனை ஒரு பார்வை பார்த்தான். கிஷோர் தான் ‘ஆத்தி.. நெக்ஸ்ட் அடி இவனுக்கோ’ என்று  அதிர அதற்குள் சித்து “ப்ரோ நீங்க ஷாக் ஆகாதீங்க.. இதுங்க எப்போவும் இப்படி தான் டாம் அண்ட் ஜெர்ரி” என்று கூற கிஷோர் நாலாபக்கமும் தலையாட்டி வைத்தான்.

ரேயனின் நிலை தான் மோசமாக இருந்தது அவளை பார்க்கும் போதெல்லாம் மனதில் சுருக்கென்ற வலி தோன்றுவதை அவனாலும் கட்டுப்படுத்த முடியவில்லை, அங்கு அமர்ந்திருப்பதே முள்ளின் மீது அமர்ந்திருப்பது போல் தோன்றியது. ஆராத்யாவின் நிலையை சொல்லவே வேண்டாம், கல்லூரியில் முதல் முறை அவனை பார்த்ததிலிருந்தே அவளுள் தடுமாற்றத்தை விதைப்பவன் அல்லவா அவன். அவளுக்கோ அங்கு அமர்ந்திருப்பதே மூச்சு முட்டுவது போல் இருந்தது. அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் எழுந்தவள் “நான் படுக்க போறேன்” என்று எழ, சித்து “அட்லீஸ்ட் பால் குடிச்சிட்டு படு” என்று கூற
“இல்ல வேண்டாம்.. குட் நைட்” என்றவள் எதிரில் அமர்ந்திருந்தவர்களை நிமிர்ந்தும் பார்க்காது மேலேறினாள். அவள் செய்கையை கவனித்த ஆத்ரேயனுக்கோ உள்ளுக்குள் எரிந்தது. நான் இங்கு உறக்கத்தை தொலைந்து அலைகிறேன் ஆனால் அவளோ நிம்மதியாக உறங்க சென்றுவிட்டாள் என்றெண்ணியவனின் இதழ்கள் விரக்தி புன்னகை ஒன்றை உதிர்த்து.

உன் ஞாபகம்
தீயிட..
விறகாயிரம் வாங்கினேன்…
அறியாமலே நான் அதில்
அரியாசனம் செய்கிறேன்..

 இலை உதிரும்
மீண்டும் துளிரும்
வெண்ணிலாவும்
கரையும் வளரும்
உன் நினைவும் அது போல்
மனதை குடையும்

 மேகமோ அவள்
மாய பூ திரள் தேன் அலை சுழல் தேவதை நிழல்

அள்ளி சிந்தும் அழகின் துளிகள் உயிரில் பட்டு உருளும்
வசமில்லா மொழியில்
இதயம் எதையோ உலரும்..

இல்லை அவளும்
என்றே உணரும்
நொடியில் இதயம் இருளும்
அவள் பாதசுவடில்
கண்ணீர் மலர்கள் உதிரும்…

Advertisement