Advertisement

 

                    அத்தியாயம் 2

        அரங்கத்திலிருந்து கேன்டீன் சென்ற கிஷோர், கேன்டீன் அக்காவிடம் “அக்கா எனக்கு ஒரு லெமன் ஜூஸ்” என்றுவிட்டு ஆத்ரேயனிடம் “மச்சா நீ என்ன சாப்பிடற”
” எதுவும் வேண்டாம்”
“ஹான் ஒகே டன். அக்கா ஒரு வாட்டர் மேலன் ஜூஸ்”
“நான் தான் எனக்கு எதுவும் வேண்டாம்னு சொல்றேன்ல”
“சாப்பிட்டு வந்த எனக்கே பசிக்கிது, சாப்பிடாம வந்த உனக்கு பசிக்காதா”
“நான் சாப்பிடலன்னு சொன்னேனா”
“இந்த நடிப்பெல்லாம் என்கிட்ட வேண்டாம், காலைல நான் கால் பண்ணும் போது தான் எழுந்த அடுத்த கால் மணிநேரத்துல என்ன பிக் பண்ண வந்துட்ட, இதுல எந்த கேப்ல சார் சாப்டீங்க” என்று கேள்வியெழுப்ப, ஆத்ரேயன் எதுவும் பேசாமல் பழரசத்தை அருந்தினான்.
கிஷோர் “அது” , ஆத்ரேயன் அந்த கோப்பையை கீழே வைக்க, கிஷோர் “சரி சரி கோப படாத, ஏதாவது சொன்னா போதும் மூக்குக்கு மேல கோபம் வருது” என்று தலையில் அடித்துக்கொண்டு பழரசத்தை அருந்தினான்.

ங்கு அரங்கத்தில்,

அக்னி “ஆரு நானும் கதிரும் கிளாஸ் பார்த்திட்டு வரோம், அதுவரை ரெண்டு பேரும் இங்கயே இருங்க.. இங்கயே சொன்னது புரியும்னு நினைக்கிறேன்” என்று அழுத்தி கூறியவன் கதிரை அழைத்துக்கொண்டு செல்ல, ஆரு மனதில் ‘ஆமா நினைச்சா காய வைக்க வேண்டியது தானே.. வர வர ஓவரா டயலாக் பேசுறேன்’ என அவனை அர்ச்சித்துக்கொண்டிருந்தாள்

அக்னி வெளியில் செல்லவும் ஆத்ரேயன் நுழையவும் சரியாக இருந்தது. ஆராத்யா  “வாவ், எவ்ளோ அழகா இருக்கான்” என அவனையே பார்த்துக்கொண்டிருக்க,
நேஹா “கிட்டி நீ சைட் அடிப்ப தான், ஆனா இது ரொம்ப ஓவரா இருக்கே”
“எனக்கும் தெரியல கிட்டி.. ஏதோ புல்லிங் மி”
“புல்லிங்லாம் இருக்கட்டும், அந்த ஆறடி பைல்வான் நிப்பானே” என்று அக்னியை குறிக்க, ஆராத்யா “ஓ மை காட் கருப்பசாமி” என்று தலையில் கை வைத்துக்கொண்டாள்.

அங்கு கிஷோருடன் பேசிக்கொண்டிருந்த ஆத்ரேயனின் அலைபேசி சிணுங்கியது, அதை எடுத்து பேசியவனின் முகம் கல்லென இறுகிவிட்டது. கிஷோரிடம் காத்திருக்கும் படி கூறிவிட்டு அவசரமாக வெளியில் சென்றான்.

ஆராத்யா அவன் செல்வதை பார்த்து “கிட்டி அவன் எங்கயோ போறான், அவன் முகமே சரியில்ல வேற, வாடி என்னனு போய் பார்ப்போம்”
“அவன் எங்க போனா உனக்கென்ன டி.. அமைதியா இரு”
“ப்ச், நேஹா அவன் முகமே மாறிடுச்சு, நான் போய் பார்க்க போறேன் நீ வரியா இல்லையா” என முறைக்க,
நேஹா “ஆரு, இன்னும் கொஞ்ச நேரத்துல அக்னி வந்திடுவான் அமைதியா இரு” என்றாள். ஆராத்யா இருப்பு கொள்ளாமல் கூட்டத்தில் எழுந்து சென்றிட, நேஹா தான் அவளை அந்த கூட்டத்தில் பின் தொடர முடியாமல் நொந்துபோனாள்.

அரங்கத்திலிருந்து வெளியேறிய ஆத்ரேயன் நூலகத்தின் அருகே சென்றான். அங்கு ஒரு பெண் அழுதுக்கொண்டிருந்தாள், ஆத்ரேயனை கண்டவள் அவனை கட்டிக்கொண்டு அழ, ஆத்ரேயன் அவன் தலையை வருடி சமாதானம் செய்தான். சிறிது நேரம் அவளை சமாதானம் செய்தவன் அவளை அழைத்துக்கொண்டு பக்கத்து கட்டிடத்தினுள் நுழைந்தான்.

இதை கண்ட ஆராத்யா சில நிமிடம் உறைந்து நின்றாள், இங்கு என்ன நடந்து என்றே அவளுக்கு புரியவில்லை. அவன் சென்ற திசையை வெறித்துக்கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில் தன்னுணர்வு பெற்றவள் அரங்கத்தினுள் செல்வதற்கு திரும்ப, அங்கு அக்னி அவளை பார்த்தபடி கை கட்டிக்கொண்டு நின்றிருந்தான். அவன் முகம் இறுகி இருந்தது, அவனுக்கு பின்னால் நின்றுகொண்டிருந்த நேஹாவும் கதிரும் ‘நீ செத்த’ என்பது போல் செய்கை செய்ய, ‘என்ன செய்து தப்பலாம்’ என்ற யோசனையில் திருட்டு முழியுடன் அவன் முன் சென்றாள்.

இங்கு நின்றாள் நிச்சயமாக அக்னி பார்வையாலே அவர்களை எரித்துவிடுவான் என்றுணர்ந்த கதிர் தன் அலைபேசியை எடுத்து காதில் வைத்து “ஹான் அம்மா.. கோவிலுக்கா இதோ வரேன்” என்று நழுவ பார்க்க, நேஹா ‘ஆஹா ஏதோ பிளான் பண்ணிட்டான்.. நம்மலும் எஸ் ஆக வேண்டியது தான்’ என்று நினைத்தவள் “டேய் கதிரு இருடா நானும் வரேன்” என ஒரு அடி எடுத்துவைத்தவர்கள் அக்னியின் எரிக்கும் பார்வையில்  அசையாது அப்படியே நின்றனர். ஆரத்யாவை ஒரு முறை முறைத்து பார்த்தவன் கதிரிடம் “கதிர் போய் வண்டிய எடு” என்றவிட்டு நேஹாவை இழுத்துக்கொண்டு அங்கிருந்து அகன்றான்.

நேஹா “அடேய் இருடா அவளும் வரட்டும்.. எப்படியோ அவளை விட்டுட்டும் நீ போக மாட்ட” என்று நக்கலடிக்க அக்னி அவளை முறைத்தான். நேஹா “உண்மைய தான சொன்னேன்.. அவ்ளோ கோபம் இருக்குறவன் அவளை திட்ட வேண்டியது தான, நாங்க அப்பாவி அப்படின்றதால எங்களை முறைக்க வேண்டியது” என்று லேசாக முணுமுணுக்க,
அக்னி “எனக்கு யார்கிட்டயும் பேச பிடிக்கில ஆண்ட் நீ ஒன்னும் அப்பாவியும் இல்ல” என்றிட, நேஹா விழி விழித்து “எப்பா சரியான பாம்பு காது டா” என நினைத்துக்கொண்டு அவன் இழுப்பிற்கு இசைந்தாள்.

அக்னி விட்டு சென்ற இடத்தில் நின்றுகொண்டிருந்த ஆராத்யா “இவன் ரெண்டு அடி அடிச்சிருந்தாலும் பரவால்ல இப்படி அமைதியா போறானே.. இவன் போறதை பார்த்த ஒரு வாரம் அலைய விடுவான் போலயே.. அகி.. டேய் அகி” என அழைத்துக்கொண்டே அவன் பின் ஓடினாள்.

வண்டியை எடுத்துக்கொண்டு வந்த கதிரை பார்த்து அக்னி “கிளம்பலாம்”
கதிர் “டேய் விளையாடுரியா, அவ கைல காசு வச்சிருகாலான்னு கூட தெரியாம எப்படி விட்டு போறது” என்று கேட்கும் போதே ஆராத்யா மேல் மூச்சு கீழ் மூச்சு  வாங்க அவர்கள் முன் வந்து நின்றாள்.

ஆராத்யா “டேய் என்ன விட்டுட்டு போற ஐடியா வா.. என்னாலலாம் தனியா நடந்து வர முடியாது.. கிட்டி நீ அந்த குரங்கு வண்டில ஏறு போ” என்றிட, நேஹாவும் அக்னியின் வண்டியிலிருந்து இறங்க போக, அக்னி accelerator ஐ அழுத்தினான். நேஹா “டேய் கொலகாரா” என்று மிரள, ஆராத்யா கோபமாக முறைத்தாள்.

கதிர் “ஹே லூசு அதான் அவன் கூட்டிட்டு போக மாட்டேன்னு சிம்பாலிக்கா சொல்றான்ல.. வா வந்து வண்டில ஏறு”

“அதெல்லாம் முடியாது.. என்ன விட்டுட்டு அவன் எப்படி போறான்னு நானும் பாக்குறேன்” என்றபடி வண்டியை மறைத்துக்கொண்டு நின்றாள்.

நேஹா “அக்னி நீ அவளை கூட்டிட்டு வா.. நான் கதிர் கூட வரேன்” என்றவளை முறைத்தவன் கைகட்டிக்கொண்டு ஆரத்யாவை அழுத்தமான பார்வை பார்க்க,
ஆராத்யா “இப்போ என்ன அகி.. நான் இது எப்போவும் பண்றது தான.. எதுக்கு இவ்ளோ கோபப்படுற”
“…..”
“நீ பண்றத பார்த்த, உனக்கு அவனை ஏற்கனவே தெரிஞ்சிருக்கனும்”
“…..”
“உங்களுக்குள்ள ஏதோ பிரச்சனைன்னு இருக்கு.. அது என்னனு சொல்லு நான் அவனை பார்க்க மாட்டேன்”
“….”, அக்னி எதற்கும் அசராமல் அழுத்தமான பார்வையுடன் அமர்ந்திருக்க,
ஆரு “நீ சொல்லாத.. நீ சொல்ற வரை நானும் அவனை பார்க்குறத நிறுத்த போறதில்ல.. இது எனக்கு அவனை பிடிச்சிருக்குறதால இல்ல.. உன் பிடிவாததுனால”,
நேஹா அக்னியின் பின்னிலிருந்து எட்டி “அப்படியா” என்று வாயசைக்க,
ஆரு கண்ணாடித்தாள்.
“அதானா பார்த்தேன்” என்று நேஹா தலையில் அடித்துக்கொண்டாள்.

ஆரு நேஹாவிற்கு கண் காட்ட, நேஹா வண்டியிலிருந்து இறங்கி கதிரின் வண்டிக்கு செல்ல, ஆரு அக்னியின் வண்டியில் ஏறி அமர்ந்தாள், அவள் அமர்ந்தவுடன் வண்டி சீறிக்கொண்டு கிளம்பியது.
கதிர் “அட பாவி.. இங்க ரெண்டு பேர் வராங்களா இல்லையான்னு கூட பார்க்காம எப்படி போறான் பார்” என்று நேஹாவிடம் புலம்ப, நேஹா “அதுங்க எப்போ நம்மள கண்டுகிட்டு இருந்துச்சுங்க.. நீ வண்டிய எடு” என்றிட, அவனும் வண்டியை கிளம்பினான்.

அரங்கத்திலிருந்து வெளியில் வந்த ஆத்ரேயன் அழுதுக்கொண்டிருந்த இந்துவிடம் வந்தவன் “இந்து என்னடா என்ன ஆச்சு” என்று பரிவாக கேட்டவனை பார்த்து அவள் இன்னும் அழ, ஆத்ரேயன் அவள் தலையை ஆதரவாக வருடி “என்னடா ஏன் அழுற, என்னனு சொல்லு” என்று கேட்க இந்து கூற தொடங்கினாள். இந்து “அண்ணா, நான் கிளாஸ்க்கு போகும் போது நாலு சீனியர் பசங்க என் கை.. கைய பிடிச்சி” என்றது தான் தாமதம் ஆத்ரேயன் “யார் அவனுங்க” என்று கேட்க, அவர்கள் வகுப்பறை அருகில் சென்று அவர்களை காட்டினாள். அவர்களை பார்த்துக்கொண்டவன் இந்துவை ஓர் இடத்தில் விட்டுவிட்டு அந்த மாணவர்களின் வகுப்பறைக்கு சென்றான். அன்று சிறப்பு விழாக்கள் இருந்ததால் ஆசிரியர்கள் யாரும் அங்கு இல்லை. தன் சட்டையின் கையை மடித்துக்கொண்டு அவர்கள் வகுப்பறைக்குள் நுழைந்தான்.

தன்னை விட நான்கு மாதம் சிறியவளான சித்தப்பன் மகள் இந்துவின் மீது அவனுக்கு அலாதி பிரியம், அவளை விளையாட்டிற்கு கிண்டல் செய்பவர்களையே அடிப்பவன் இன்று அவள் கை பிடித்து இழுத்தவர்களை ஒரு வழி பண்ணாமல் விட மாட்டான் என்பதை அவன் இறுகிய முகமும், அவன் நடந்து வந்த வேகமும் தெரிவித்தது.

ஆத்ரேயனை அனைவரும் கேள்வியாக பார்த்துக்கொண்டிருக்க, அவன் நேராக வந்து அந்த நால்வரை
அடி வெளுத்துவிட்டான். அவன் அடித்ததை பார்த்து மற்ற மாணவர்கள் ஒதுங்கிவிட, எதையும் கண்டுகொள்ளாமல் அந்த நால்வரை மட்டும் சரமாரியாக அடித்து வெளுத்தான்.

மற்ற மாணவர்கள் தங்களுக்குள் சலசலக்க அடி வாங்கிய நால்வரும் இவன் எதற்காக அடிக்கிறான் என்பது புரியாமல் அவன் முகத்தை மட்டும் பார்த்து வைத்துக்கொண்டனர்.

அவர்களை அடித்துவிட்டு வந்த ஆத்ரேயனின் கையை ஓடி வந்து பிடித்துக்கொண்ட இந்து “செம்ம பைட் போல ரேயா”
“நானா இல்லையே” என இயல்பாக சிரித்தவனை பார்த்தவள் “எனக்கு என் அண்ணனை பத்தி தெரியும்” என்று கண்ணடிக்க, ஆத்ரேயன் “வாலு” என்று அவள் மூக்கை பிடித்து ஆட்டினான். சரியாக கிஷோரும் அங்கு வந்துவிட,
கிஷோர் “டேய் எங்கடா போன”, ஆத்ரேயன் நடந்தவற்றை கூற, கிஷோர் “உயிரோடவா விட்ட அவனுங்களை..” என்று கோபமாக கேட்டவனை பார்த்து மெலிதாக முறுவலித்தவன் “அதெல்லாம் அல்ரெடி நல்லா கொடுத்திட்டு தான் வந்திருக்கேன். இப்போ வாங்க கிளம்பலாம்” என்று அவர்களை அழைத்துக்கொண்டு வீட்டை நோக்கி சென்றான்.

அக்னியுடன் சென்றுகொண்டிருந்த ஆரு அருகில் இருந்த ஒரு கடையை பார்த்து “அகி அகி ஐஸ் வாங்கி கொடு” என்று கேட்க, அவன் ‘என்ன’ என்று கூட கேட்காமல் வண்டியை செலுத்திக்கொண்டிருந்தான்.
ஆரு “அகி.. செல்லம்ல தங்கம்ல ஐஸ் வாங்கி கொடு டா”
“….” , பதிலேதும் கூறாமல் அவன் வண்டியை ஓட்டுவதில் கவனமாக இருக்க, ஆரு வேறு வழி இல்லாமல் மௌனமானாள்.
ஆராத்யாவின் வீடு வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு அக்னி அவளை பார்க்க அவளோ அமர்த்தலாக “நான் உன்ன இங்கையா கூட்டிட்டு வர சொன்னேன்.. எனக்கு கல்லுவை பார்க்கணும்” எனும்போதே அவள் தந்தை சிவகுமரன் வெளியில் வந்தார்.
வண்டியை விட்டு இறங்காமல் அமர்ந்திருந்த மகளை பார்த்தவர் “வீட்டுக்குள்ள கூட வராம அங்க போய் என் நண்பன் உசுர வாங்குறதுல உனக்கு என்ன அவ்ளோ சந்தோசம்”, அவர் பேசியதை காதில் வாங்காது, ஆரு “ஹே சிவா எப்படி இருக்கீங்க”
“உன்ன பெத்துட்டு எப்படி நாங்க நல்லா இருப்போம் சொல்லு” என்று அவர் கலாய்க்க, அவரை முறைத்தவள் அக்னியிடம் “சரி நீ வண்டிய எடு” என்றாள் உத்தரவாக.

சிவா “கொழுப்பை பார்த்தியா அவளுக்கு.. அவ நடந்து போய்க்கட்டும்டா நீ உள்ள வா” என்று அவனை அழைக்க, அக்னி வண்டியை ஸ்டென்ட் போட்டுவிட்டு இறங்கி உள்ளே சென்றான். அவர்கள் பின் ஓடியவள் சோபாவில் இருந்த குஷனை எடுத்து அக்னியின் மீது ஏறிய அக்னி அதை லாவகமாக பிடித்துக்கொண்டான். ஆரு அவனை முறைத்துவிட்டு வெளியே சென்றாள்.

இவர்களின் பேச்சு குரல் கேட்டு வெளியே வந்த நிலா “வந்ததும் வராததுமா இவ எங்கடா போற” என்று அக்னியை பார்த்து கேட்க, அக்னி ஒரு சிறு முறுவளுடன் “அவ, அம்மாவை பார்க்க போயிருக்கா..”
“அப்படியா…சரி இருடா கண்ணா உனக்கு பூஸ்ட் எடுத்துட்டு வரேன்” என்று நிலா திரும்ப, சிவா “இந்த வளந்து கேட்டவனை கேட்குற.. புருஷனை கேட்க மாட்டேன்கிற” என்று குறைப்பட, அவரை சரமாரியாக முறைத்தவள் “குழந்தைய தான் கேட்க முடியும் கிழவன இல்ல” என்று மேவாயை இடித்து திருப்ப, சிவா ரகசிய குரலில் “அவ பார்க்க கிழவி மாதிரி இருக்கானு அவளுக்கு ஜோடியா என்ன கிழவன்னு சொல்றா பாரு” என்று நிலாவை வார, அக்னி “ஐயோ.. இப்போ புரியுது அவ ஏன் இவ்ளோ வாயாடுறான்னு”  என்று தலையில் அடித்துக்கொள்ள, சிவா
சிரித்தார். நிலா “போதும் போதும் அவனை குடிக்க விடுங்க” என்றவாறு அவனுக்கு குடிக்க கொடுத்துவிட்டு அவன் அருகில் அமர்ந்தார்.

சில நிமிடங்கள் அமைதியாக கழிய, சிவா “என்னடா ஏதோ சண்டை போல” என்று அவனை பார்க்க,
“சான்ஸ்லெஸ் பா நீ.. cbiல இருக்க வேண்டிய ஆளு தான்” என்று மெச்சும் பார்வை பார்க்க, நிலா “அதெல்லாம் அவ்ளோ வர்த் இல்ல.. வேணும்னா நோட்டம் பார்க்குற வேலைன்னு சொல்லலாம்” என்றிட அக்னியினால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

அக்னி சிரிக்கும் வரை அமைதியாக அமர்ந்திருந்த நிலா, அவனிடம் “கண்ணா நீ எதுவும் தப்பு பண்ணிருக்க மாட்டன்னு எனக்கு தெரியும், அந்த வாலு தான் ஏதாவது வம்பு பண்ணிருப்ப.. என்ன வாலுத்தனம் பண்ணாலும் அவ உன்ன மீறி எதுவும் செய்ய மாட்டா சோ ரிலாக்ஸ் ஆகு” என்று பொறுமையாக அவனுக்கு புரியவைக்க,
“அட அதெல்லாம் பெருசா ஒன்னுமில்ல, எப்போவும் போல தான் நீங்க கவலை படாதீங்க” என அவருக்கு ஆறுதல் கூறியவன் “சரிமா நான் கிளம்புறேன் அங்க அவ என்ன புகார் ஒப்பிச்சிட்டு இருக்காளோ” என்று புலம்பியபடி எழுந்து சென்றான்.

இரண்டடி நடந்தவன் மீண்டும் அவர்களின் புறம் திரும்பி “ஆனா இதுல என் தப்பும் இருக்குமா..” என்று சிறுகுரலில் கூறிவிட்டு செல்ல, சிவாவும் நிலாவும் அவனை புரியாமல் பார்த்தனர்.

அக்னி நினைத்தது போலவே அங்கு அக்னியின் இல்லத்தில் கையில் ஒரு ஐஸ் க்ரீம் கிண்ணத்துடன் அமர்ந்து ஆராத்யா அக்னியை பற்றி குற்றப்பத்திரிக்கை வாசித்துக்கொண்டிருந்தாள். சரியாக அக்னி உள்ளே நுழையும் போது “பாருங்க கல்லுமா நான் எதுவுமே பண்ணலா ஆனா அவன் முகத்தை தூக்கி வச்சிக்கிட்டு விறப்பா சுத்துறான்.. என்ன ட்ராப் கூட பண்ணல தெரியுமா, இந்த வெயில்ல நானே நடந்து வந்தேன்.. பாருங்க என் முகம் எப்படி ரெட்டா மாறிடுச்சுன்னு” என்று வெயிலில் நடந்து வந்ததால் சிவந்திருந்த தன் கன்னங்களை அந்த பக்கம் இந்த பக்கம் என திருப்பி காட்டிக்கொண்டிருக்க, அக்னி அவளை முறைத்தபடி சோபாவில் அமர்ந்தான்.

கல்பனா “டேய் அவளை எதுக்குடா முறைகிற.. குழந்தை தப்பு பண்ணிருக்க மாட்டா, நீ தான் ஏதாவது திட்டிருப்ப” என்று ஆருவிற்கு சாதகமாக பேச, அக்னி அவரையும் முறைத்துவிட்டு “ஆமா அவ சொல்லுவா நீங்களும் அப்படியே நம்புங்க” ,
ஆரு “பாருங்க உங்க முன்னாடியே எப்படி திமிரா பண்ணுறான் பாருங்க” என்று உதட்டை பிதுக்க, கல்பனா “டேய் பாவம்டா அவ.. ஓவரா பண்ணாமா அவ கூட பேசு” என்றிட அவன் கண்டுகொள்ளாமல் உள்ளே சென்றான்.

ஆரு “பார்த்தீங்களா.. ஓவரா பண்றான்.. அவன் நைட்டுக்குள்ள என்கூட பேசணும்.. சொல்லி வைங்க” என்று சற்று குரலை உயர்த்தி கூறிவிட்டு அவள் திரும்ப, அறையிலிருந்து வந்தவன் அவள் கையில் ஒரு கிட் கேட்டை திணித்துவிட்டு அவள் அழைக்க அழைக்க திரும்பாமல் மாடிக்கு சென்றான்.
செல்லும் அவனை முறைத்துவிட்டு அவள் வெளியேற, மாடியிலிருந்து அவள் வீட்டிற்கு செல்லும் வரை அவளை பார்த்தபடி நின்றுக்கொண்டிருந்தான் அவளின் அகி.

மாடி தடுப்பு சுவரில் கைவைத்து சாய்ந்தபடி ஆருவை பார்த்துக்கொண்டிருந்த அக்னியின் அருகே வந்த கல்பனா “டேய் உனக்கு தான் அவங்க மூணு பேர் மேலையும் கோபமே வராதே.. அதுவும் ஆரு மேல கனவுல கூட வராது அப்பறம் எதுக்கு இதெல்லாம்”
“சும்மா தான்…. ஆனா இந்த முறை நிஜமாவே கோபமா தான் இருக்கேன்” என்றவனை ‘நம்பிட்டேன்’ என்ற ரீதியில் பார்த்தவர் “சரி அவ வீட்டுக்கு போய்ட்டா நீ சாப்பிட வா” என்று அவனை அழைத்துவிட்டு செல்ல, நேஹாவின் இல்லத்தையும் ஒரு முறை எட்டி பார்த்துவிட்டு கீழே சென்றான்.

தொடரும்…

Advertisement