Advertisement

                     அத்தியாயம் 27

        கல்லூரி நாட்கள் இனிதே நகர்ந்தாலும் ஐ வி (இண்டஸ்ட்ரியல் விசிட்) என்பது அவர்களுக்கு ஒரு குறையாகவே இருந்தது. முதல் வருடம் அவர்களை அழைத்து சென்றதோடு சரி அதன் பிறகு அவர்களை கல்லூரியை விட்டு எங்கும் அழைத்து செல்லவில்லை அதற்கு காரணம் என்னவோ சில சீனியர் மாணவர்களுக்கு இடையே நடந்த கைகலப்பு தான். இதுபோல் சிலரின் தவறால் அனைவரும் பாதிக்கப்படுவது என்பது கல்லூரி வாழ்க்கையில் ஒரு இயல்பு தான்.

எப்போது மாணவர்கள் கேட்டாலும் ஏதேனும் காரணம் கூறி மறுப்பதால், சிவா “கைஸ்.. லிசென்” என்க, கதிர் “சொல்லுங்க ரெப்.. என்ன விஷயம்” என்று வினவ
சிவா “நான் இன்னிக்கி HoD கிட்ட ஐ வி பத்தி கேட்க போறேன்.. ஒருவேளை அவர் ஒத்துக்கலனா நம்ம எல்லாரும் ஒன்னா கேட்கலாம்” என்றிட அனைவரும் அதை ஆமோதித்தனர்.

சிவா செல்வதை பார்த்த ஆத்ரேயனின் முகம் சுருங்க, அதை கவனித்த கிஷோர் “என்னடா அவனை அப்படி பாக்குற.. அவனுக்கும் எதாச்சு பிளாஷ்பேக் வச்சிருக்கியா என்ன” என்று விழி விரித்து விசாரிக்க அதில் அவனை முறைத்த ரேயன் “அதெல்லாம் ஒன்னுமில்ல” என்றான்.

கிஷோர் “அப்போ என்ன யோசனை” என்று வினவ, ரேயன் “அவன் இப்படியெல்லாம் பண்ணுற ஆள் கிடையாது.. யாரோ இவன்கிட்ட சொல்லி கேட்க வச்சிருக்காங்க” என்று சரியாக யூகிக்க, கிஷோர் “ஏன்டா அவன் நல்ல திறமையான பைய தானே..” என்று கூற
ரேயன் “இல்ல கிச்சா.. அவன் திறமையான பையன் தான் ஆனா இப்படி போராட்டம் பண்ணுறதெல்லாம் அவன் கேரக்ட்டர் கிடையாது, எப்போவும் சேப்பா இருக்க தான் பார்ப்பான்.. சோ கண்டிப்பா அவன் இதை யோசிச்சிருக்க வாய்ப்பில்ல” என்று கூற, அதுவரை அவர்கள் பேசியதை கேட்டுக்கொண்டே வந்த குமரன் “ஆமா ரேயா.. வேற யாரா இருக்கோம்” என்று யோசிப்பது போல் பாவனை செய்ய அதில் மெலிதாக புன்னகைத்த ரேயன் “நினைச்சேன்.. உங்க வேலை தானா இது” என்று புருவமுயர்த்த
குமரன் சிரித்துக்கொண்டே ஆம் என்பதாய் தலையசைத்தார்.

கிஷோர் “எங்க குல தெய்வமே.. உங்களுக்கு நாங்க என்ன திருப்பி செய்ய போறோம்” என்று கும்மிடு போட அவரோ “நான் இதை உங்களுக்கு பண்ணேன்னு நினைக்கிறியா” என்று கேலியாக கேட்க
கிஷோர் “அப்போ இல்லையா” என்று வாயை பிளக்க
குமரன் “அதெல்லாம் கிடையாது.. மேனேஜமெண்ட் சார்பா ஒரு ப்ரீ ட்ரிப்க்கு பிளான் போடுறேன்” என்றார் அடக்கப்பட்ட புன்னகையுடன். அவர் கூறியதை கேட்டு ரேயனின் இதழும் விரிந்தது, அவன் அறிவான் குமரன் இதை மாணவர்களின் நலனுக்காக தான் செய்கிறார் என்பதை.

பேராசியரிடம் பேசிவிட்டு வந்த சிவா அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்று தெரிவிக்க, பின்னால் நின்றுகொண்டிருந்த குமரன் “அப்போ என்ன பண்றது சிவா” என்று கைகளை மார்பிற்கு குறுக்கே கட்டிக்கொண்டு கேட்க அப்போது தான் அவரை கவனித்த மாணவர்கள் எழுந்து நிற்க, கண்களாலே அவர்களை அமர சொன்னார்.

சிவா “அடுத்து என்ன பண்ணலாம் சார்” என்று கேட்க, குமரன் ‘இந்நேரத்துக்கு எவனாவது ஸ்ட்ரைக்ன்னு சொல்லனுமே’ என்று நினைக்க, ஆதி “அப்போ நாங்க ஸ்ட்ரைக் பண்ணுவோம்” என்றான். ‘அப்படி வாடா என் செல்லக்குட்டி’ என அவனை மனதில் மெச்சியவர் வெளியில் விறைப்பாக “அதெல்லாம் பண்ண கூடாது பசங்களா.. அதனால உங்க படிப்பு தான் கெடும்” என்று அறிவுரை கூற அவர்கள் கேட்டால் தானே.

“நாங்களும் படிப்புக்காக தான் சார்  கேக்குறோம்” என்று ஒருவன் கூற, மற்றொருவனோ “ஆமா வாங்க போவோம்” என்றான்.
மாணவர்கள் பேராசிரியர் அறைக்கு செல்ல குமரனும் அவர்களை பின் தொடர்ந்தார்.

இங்கு இவ்வளவு கலவரம் நடந்துக்கொண்டிருக்க, அங்கு நடப்பவை பற்றி துளியும் அறியாமல் இரண்டு ஜீவங்கள் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தது. ஒன்று ஆரு மற்றொன்று நேஹா.

அக்னியும் கதிரும் கிளம்புவதை பார்த்த ரேயன் தயங்கி நிற்க, கிஷோர் “வாடா போவோம்” என்றான்.
ஆத்ரேயன் “டேய் இரு.. அவன் அவங்கள அப்படியே விட்டுட்டு போக போறான்.. கிளாஸ்ல வேற யாருமில்ல” என்றிட
கிஷோர் ‘இவன் வேற அநியாயம் பண்றான்’ என நினைத்தவன் அங்கு பார்க்க, அங்கு அக்னி கதிரிடம் “டேய் கதிர் நீ இங்கயே இரு.. தூங்குறாங்க ரெண்டு பேரும்.. நான் போறேன்” என்றிட, கதிர் “அடிங்கு.. இரு எழுப்பலாம்” என்று அவர்களை எழுப்ப வர அதற்குள் அவனை தடுத்த அக்னி “டேய் அவங்க எதுக்கு அங்க.. இங்கயே இருக்கட்டும்.. நானே எங்க எழுந்துவாங்களோன்னு நினச்சேன்.. கூட இரு” என்றுவிட்டு சென்றான்.

அதை பார்த்த கிஷோர் “வா பா.. அதான் காவலுக்கு வாட்ச்மேன் வச்சிட்டு போயிருக்கான்” என்க ரேயனும் அரை மனதுடன் சென்றான்.

சிவில் துறையின் கட்டிடத்திற்கு பக்கத்தில் அமைந்திருந்த மைதானத்தில் அனைவரும் அமர்ந்திருந்தனர். சிவா மற்றும் சில சீனியர் மாணவர்கள் முன்னாள் அமர்ந்திருக்க ரேயன் அக்னி கிஷோர் அனைவரும் இறுதி வரிசையில் அமர்ந்திருந்தனர்.

வகுப்பில், தூக்கத்திலிருந்து எழுந்த நேஹா யாருமற்ற வகுப்பறையை பார்த்துவிட்டு கதிரிடம் கேட்க அப்போது தான் ஆருவும் துயில் கலைந்தாள்.

கதிர் அலைபேசியை நோண்டிக்கொண்டிருக்க, நேஹா “எங்கடா மத்தவங்க” என்று புருவம் சுருக்க
“ஹான்.. காலேஜ கொளுத்த போயிருக்காங்க” என்றான் கேலியாக.
நேஹா “டேய்.. ஒழுங்கா சொல்லு” என்று அதட்ட,
கதிர் “கிரவுண்ட்ல” என்றான். ஆரு “ப்ரீயா.. சரி வாங்க நம்மலும் போவோம்” என்றவள் எழுந்து செல்ல நேஹாவும் அவளுடன் சென்றாள்.

மைதானத்திற்கு செல்லும் முன் ஆரு “நீங்க போங்க.. நான் ஐஸ் வாங்க போறேன்” என்றுவிட்டு செல்ல, செல்லும் அவளை விசித்திர ஜந்துவை போல் பார்த்து வைத்த கதிர் “இங்க என்ன நடக்குது.. இவ எங்க போறா” என்று தலையில் அடித்துக்கொள்ள
நேஹா “அவளை விடு.. நீ சொல்லு” என்று வினவ அவனும் நடந்தவற்றை கூறினான்.

பின் நேஹா அக்னிக்கு அருகே சென்று அமர, அக்னி “ஹே.. நீங்க இப்போதைக்கு எழுந்துக்க மாட்டீங்கன்னு நினைச்சேன்” என்று கேலி செய்ய அதில் அவனை போலியாய் முறைத்தவள் “டேய் நாங்க இந்த கிளாஸ் இல்லையா” என்று முறைக்க, அக்னி அவளை புரியாமல் பார்த்தான்.

நேஹா “சரியான கூமுட்டயா இருக்கியே . என்னதான் நாங்க வரலானாலும் பனிஷ்மெண்ட் எங்களுக்கும் சேர்த்து தான கிடைக்கும்” என்றிட அதில் அசடு வழிந்தான்.

ரேயன் நேஹாவை பார்த்து கையசைக்க அவனை பார்த்தவள் என்ன என்பதாய் விழியுயர்த்தி கேட்க அவன் “ஆரு எங்க” என்றான் செய்கையில்.

நேஹா கேன்டீனை காட்டி “வருவா” என்னும் போதே அக்னி மற்றும் ஆத்ரேயனுக்கு இடையே அமர்ந்திருந்த ஆதியை துரத்திவிட்டு அவர்கள் இடையே அமர்ந்தாள்.

ஆரு ஐஸ் க்ரீமுடன் வந்தமர அவளை மேலிருந்து கீழ் பார்த்த அக்னி “இங்க என்ன நடக்குது.. நீ என்ன பண்ணிட்டு இருக்க” என்று கேட்க,
ஆரு “என்ன நடந்தா எனக்கென்ன” என்று தோளை உலுக்கியவள் ஆத்ரேயனிடம் “வேணுமா” என்று கையிலிருந்த ஐஸ் க்ரீமை காட்டி கேட்க, அவள் கேட்ட விதத்தில் புன்னகைத்தவன் மறுப்பாய் தலையசைத்து “எனக்கு வேண்டாம்.. ஆனா உனக்கு போதுமா இல்ல வேணுமா” என்று கேட்க, தாடையில் கைவைத்து யோசித்தவள் “சாப்பிட்டு சொல்லுறேன்.. வாங்கி தா” என்றாள்.

அவள் அவ்வாறு உரிமையாய் கேட்டது ஆணவனுக்குள் சிறு கர்வத்தை விதைக்க செய்ய “சரி ஓகே” என்றான். கிஷோர் “அப்போ எனக்கும் ஒன்னு” என்க
ரேயன் “ஆன்.. ரெண்டு குழந்தைக்கும் வாங்கி தரேன்” என்றிட ஆரு மற்றும் கிஷோர் கையடித்துக்கொண்டனர்.

சீனியர் மாணவர்களும், ஆருவின் வகுப்பு மாணவர்களும் கத்திக்கொண்டிருக்க அது எதையும் பொருட்படுத்தாமல் இறுதி வரிசையில் ஐஸ் க்ரீமை ரசித்து ருசித்து உண்டு கொண்டிருந்த ஆராத்யாவின் அருகே வந்த குமரன் “ஏன் ஆராத்யா.. இங்க என்ன நடக்குது” என்று கேட்க அவரை ஒருமுறை பார்த்தவள் “யாருக்கு தெரியும்.. என்னமோ கத்திட்டு இருக்காங்க” என்று உதட்டை பிதுக்க, அவள் கூறியதை கேட்டு ஆத்ரேயன் அதிர குமரனோ மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டார்.

ஆரு “சார் வந்ததும் வந்தீங்க உங்க பவரை வச்சு ஐஸ் க்ரீம் வாங்கி கொடுங்க.. பாவம் அத்து நடந்து போய் வாங்கனும்” என்று கூற, குமரன் “ஏன்மா நான் என்ன பறந்து போவனா” என்று கேலியாக கேட்க
ஆரு “இல்ல.. நீங்க தான் சார் ஆச்சே.. எதாச்சு பசங்கள டேய் இங்க வாடா.. வாங்கி தான்னு சொன்னா வாங்கி தர போறாங்க” என்று கண்களை உருட்டி கூற அவளை வெட்டவா குத்தவா என்ற ரீதியில் முறைத்தவர் அமைதியாக நழுவிட விட ரேயன் தான் அடக்கப்பட்ட புன்னகையுடன் அவளை பார்த்துக்கொண்டிருந்தான்.

ஆரு ‘என்ன’ என்று புருவமுயர்த்த, ரேயன் “என்ன பீஸ்டி நீ” என்று இதழ் விரித்து கேட்க, கண்களை சுருக்கி அவனை பார்த்தவள் “கொஞ்சம் லூசு மாதிரி நடந்துக்கிறனோ” என்று அவள் காதில் ரகசியம் போல் கேட்க அதில் நன்றாக புன்னகைத்தவன் “கொஞ்சம் இல்ல நிறைய” என்றுவிட்டு பின் “பரவால்ல இப்படியே இரு” என்றான். அக்னி பக்கத்தில் சிலருடன் பேசிக்கொண்டிருந்ததால் இவர்களின் சம்பாஷணை அவன் காதில் விழவில்லை.

ரேயனிடம் பேசிய பின் தான் அங்கு நடப்பவற்றை புரிந்துக்கொண்டாள் பெண்ணவள். நான்கு மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக அவர்களுக்கு நியாயம் கிடைத்தது.

அடுத்த வாரமே பத்து நாட்களுக்கு இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் பழமைவாய்ந்த கட்டிடங்களுக்கு அவர்களை அழைத்து செல்ல உத்தரவு வந்திருந்தது.

சுற்றுலாவிற்கான நாளும் வந்து சேர இரவு ஒன்பது மணிக்கு ரயில் என்றிருக்க ஆறு மணிக்கு கிஷோர் ரேயனை அழைத்தான்.

எப்போதும் கூட்டமாக செல்வதில் ஈடுபாடில்லாத ரேயனோ வரமாட்டேன் என்று மறுப்பு தெரிவித்துவிட கிஷோரோ அவனை சமாதானம் செய்ய அழைத்திருந்தான்.

ரேயனின் அலைபேசி விடாமல் அடித்துக்கொண்டிருக்க அங்கு வந்த நிரஞ்சனா “போன் அடிக்கிது எடுக்காம என்ன பண்ணுற” என்று அதட்ட
ரேயனோ “ஜனா வேண்டாம்.. எடுக்காத.. அவன் உலறிட்டு இருக்கான்” என்றான்.

ரேயன் கூறுவதை கேட்டுவிட்டால் அது நிரஞ்சனா அல்லவே வேண்டும் என்றே அழைப்பை ஏற்றவள் “சொல்லு கிச்சா” என்று வினவ, நிரஞ்சனாவின் குரலை கேட்டு நம்பிக்கை பிறந்தது அவனுக்கு.

கிஷோர் “அக்கா அந்த சைக்கோ ஐ வி வரமாட்டேன்னு சொல்லுறான்” என்று புகார் வாசிக்க
“அடடா வழக்கம் போல” என்றவள் தொடர்ந்து “அவன் தான் எப்போவும் வர மாட்டானே” என்று தம்பியின் குணத்தை பற்றி நன்கறிந்ததால் அவள் கேட்க, கிஷோர் “அக்கா.. இது ட்ரிப் இல்ல.. ஐ வி.. இதுக்கு மார்க் இருக்கு” என்றான்.

நிரஞ்சனா ரேயனை பார்க்க அவனோ அழுத்தமாக தலையசைத்தான். கிஷோர் “என்ன சொல்லுறான்” என்று சலிப்பாக கேட்க அவளோ “ம்ம் ம்ம்” என்றபடி முகப்பிற்கு சென்றவள் அவனிடம் சிலதை கூறிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.

பின் ரேயனின் அறைக்குள் வந்தவள் “ஏன்டா இதெல்லாம் மிஸ் பண்ணுற.. போயிட்டு வந்தா தான் என்ன” என்று கேட்க அவனோ “உன்கிட்ட சொல்ல என்ன.. எனக்கு அப்படி போக பிடிக்கில.. கிளாஸ் பரவால்ல ஆனா இதெல்லாம்.. வேண்டாம்” என்று முகத்தை சுருக்கியவன் கட்டிலில் சாய்ந்துவிட்டான்.

இப்போது ஆருவிடமிருந்து அழைப்பு வர ஜனா அதை ரேயனிடம் காட்டினாள். ரேயன் “ஐயோ.. எடுத்திடாத.. வேண்டாம்” என்று பலமாக தலையசைக்க, அவளோ அழைப்பை ஏற்று ஸ்பீக்கரில் போட்டுவிட்டாள்.

மறுபக்கமிருந்த ஆரு “என்ன அத்து உனக்கு.. வந்தா என்ன இப்போ.. நாங்களாம் உன்ன கடிச்சா திங்க போறோம்.. நீ மட்டும் வரல அவ்ளோதான்.. உன்ன பேசியே கொன்னுடுவேன் பார்த்துக்கோ” என்று பொரிய அதில் தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான் அவன்.

நிரஞ்சனா “பேசமாட்டேன்னு சொல்றவங்கள பாத்திருக்கேன் பேசியே கொள்ளுவேன்னு சொல்ற பாரு.. நீ வேற மாதிரி” என்று மெச்ச
“ஐயோ.. ஹாய்.. ஜனாக்கா தான”
“ஆமா ஆமா” என்றாள் புன்னகையுடன்.

ஆரு “சரி இப்போ சார் வருவாரா மாட்டாரா” என்று கேட்க, ரேயன் அமர்ந்திருந்த நிலையை பார்த்தவள் “ரயில்வே ஸ்டேஷனுக்கு முதல் ஆளா வந்திடுவான்” என்றபடி அழைப்பை துண்டிக்க, ரேயன் “நான் அப்படி சொல்லவே இல்லையே” என்று புன்னகைக்க
நிரஞ்சனா “டேய் உன் அக்காடா நான்” என்றவள் அவனுக்கான உடைகளை எடுத்துவைத்தாள். ரேயனும் சிறு புன்னகையுடன் அவளுக்கு உதவி புரிந்தான்.

நிரஞ்சனா கூறியது போல் ரேயனும் கிஷோரும் முன்னரே வந்துவிட அவனின் இதயராணியோ எப்போதும் போல் தாமதமாக தான் வந்து சேர்ந்தாள்.

முதல் நாள் மைசூர் அரண்மனை சென்றவர்கள் அதன் கட்டமைப்பு பற்றியும் வரலாறு பற்றியும் அறிந்தனர், அடுத்ததாக ராஜஸ்தான், குவாலியர் என்று சென்றவர்கள் ஆறாவது நாளாக டெல்லி சென்றனர்.

உலக புகழ்பெற்ற காதலின் சின்னமாக முகலாய மன்னன் ஷாஜகானால் யமுனை நதிக்கரையில் பளிங்கு கற்களால் கட்டப்பட்டிருந்த தாஜ்மஹாலிற்கு தான் அவர்கள் அழைத்துக்கொண்டு செல்லப்பட்டனர். நேஹாவோ அதன் அழகில் விழி விரித்து நின்றுக்கொண்டிருந்தாள். ஆருவோ ரேயன் கிஷோர் மற்றும் குமரனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தாள்.

அன்று இரவு உணவு முடித்துக்கொண்டு அனைவரும் உறங்க சென்றிட நேஹாவிற்கு அழைத்த அக்னி “நேஹா லாபிக்கு வா” என்றான். ‘இந்த நேரத்துல எதுக்கு கூப்பிடுறான்’ என குழம்பியவள் ஆருவிடம் கூறிவிட்டு சென்றாள்.

வரவேற்பறையில் நின்றிருந்த அக்னியின் அருகே வந்தவள் “இந்த நேரத்துல எதுக்கு கூப்பிட்ட” என்று கேட்க அவள் கை பிடித்தவன் “என்கூட வா சொல்லுறேன்” என்று அழைத்து செல்ல அவளும் அவன் இழுப்பிற்கு சென்றாள். அவர்களுக்காக காத்துக்கொண்டிருந்த வண்டியில் அவளுடன் ஏறியவன் அவளுடன் பேசிக்கொண்டே வந்தான். இடம் வந்துவிட்டதாக ஓட்டுனர் கூற நேஹாவின் கண்ணை கட்டியவன் அவள் கை பிடித்து அழைத்து செல்ல அவளோ “கண்ண கட்டி எங்கடா கூட்டிட்டு போற” என்று சிணுங்க
“ஹான்.. உன்ன கடத்திட்டு போறேன்” என்று கேலியாக கூறியவன் ஒரு இடத்திற்கு வந்து அவள் கண் கட்டை அவிழ்த்தான்.

கண்களை கசக்கியபடி திறந்தவள் அந்த இடத்தை பார்த்து பேசற்று நின்றாள். பௌர்ணமி நிலவொளியில் எழிலாய் வீற்றிருந்த தாஜ் மஹாலை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை. பகலில் காணும் போது இருந்ததை விட நிலவொளியில் இன்னும் அழகாய் மின்னிய அந்த கட்டிடத்தை பார்த்தவள் அதிலிருந்து விழியகற்றவில்லை. சிறு வயதில் யாரோ ஒருவர் இரவில் தாஜ்மஹால் அழகாய் தெரியும் என்று கூறியதை கேட்டவளுக்கு அப்போதிலிருந்தே இரவில் அதை காண வேண்டும்என்ற ஆசை இருக்க தான் செய்தது ஆனால் இதுவரை அவள் யாரிடமும் அதை கூறியதில்லை. தான் கூறாமலே தன் விருப்பத்தை நிறைவேற்றிய அக்னியின் மீது அவளுக்கு காதல் பெருகியது என்றால் அவன் எல்லையற்ற காதலின் மீது கர்வமும் வந்தது.

சிவப்பு நிற லாங் ஸ்கர்ட்டும் வெள்ளை நிறத்தில் சிவப்பு நிற பூக்கள் பிரிண்ட் செய்யப்பட்டிருந்த மேல் சட்டையும் அணிந்து கூத காற்றில் கைகளை மார்பிற்கு குறுக்கே கட்டியபடி நின்றவளை அங்குலம் அங்குலமாக ரசித்துக்கொண்டிருந்த அக்னியின் பார்வையில் நிச்சயம் கண்ணியமில்லை.

குளிரில் மெலிதாக நடுங்கியவளின் பின்னிலிருந்து அவள் இடையை பற்றியவள் அவள் செவி மடலில் இதழ் உரச “பிடிச்சிருக்கா” என்று கேட்க, அவன் கரங்களுக்குள் கரைந்தவள் “ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள் உள்சென்ற குரலில்.

மங்கையவளின் அருகாமையும் அவள் மீது வந்த பர்ஃபியும் நறுமணமும் ஆணவனின் உணர்ச்சிகளை கிளற அவள் செவி மடலில் தன் இதழ் பதித்தவன் அவள் கழுத்து வளைவில் தன் முகம் புதைத்தான். மன்னவனின் மீசை ஏற்படுத்திய குறுகுறுப்பில் உடல் கூச கண்களை இறுக மூடிக்கொண்டாள். அவள் கன்னங்களோ ரோஜாவை தோற்கடிக்க அவள் பட்டு கன்னத்தில் அழுத்தமாக தன் இதழ் பதித்தான் அவன், இதற்குமேல் இருந்தால் நடப்பவற்றுக்கு தான் பொறுப்பில்லை என்பதை உணர்ந்தவன் அவளிடமிருந்து விலகி “கிளம்பலாம்” என்றிட அவன் முகம் பார்க்க வெட்கியவள் தலையை மட்டும் அசைத்துவிட்டு அவனுடன் நடந்தாள்.

காரில் இருவரினிடையே பலத்த மௌனமே ஆட்சி செய்தது. உணர்ச்சிகளின் பிடியில் அவனிருக்க, கன்னம் சிவந்து அமர்ந்திருந்தாள் அவள். சொல்லப்படாத காதல் உணர்வில் விரும்பியே இருவரும் தங்களை தொலைத்துக்கொண்டிருந்தனர்.

உன் உள்ளம்
நான் காண
என்னாயுள் போதாது
என் அன்பை
நான் சொல்ல
உன் காலம் போதாது

என்காதல் இணையென்ன
உன் நெஞ்சு காணாது
ஆனாலும் என் முத்தம்
சொல்லாமல் போகாது

 கொண்டாலும் கொன்றாலும்
என் சொந்தம் நீதானே நின்றாலும் சென்றாலும்
உன் சொந்தம் நான் தானே
உன் வேட்கை பின்னாலே
என் வாழ்க்கை வளையுமே

அடுத்த இரண்டு நாட்கள் இப்படியே இனிதாக செல்ல நாளை மாலை சென்னை திரும்புவதாக இருந்த நிலையில் அன்று விஷாக்கப்பட்டினம் சென்றிருந்தனர். நீர்முழ்கி கப்பலை பற்றி கற்றறிதவர்கள் மாலை தாமதமாகவே அறைக்கு திரும்பினர்.

இரவு உணவு முடித்துவிட்டு அன்றைய களைப்பில் அனைவரும் உறங்கிவிட ஆரு மட்டும் கொட்ட கொட்ட விழித்திருந்தாள். ஏனோ அவளுக்கு அன்று தூக்கம் வரவில்லை, சரி கடற்கரைக்கு செல்லலாம் என்றெண்ணியவள் நேஹாவை பார்க்க அவளோ உறங்கிக்கொண்டிருந்தாள். அவள் உறக்கத்தை கெடுக்க வேண்டாம் என்றெண்ணியவள் ரேயனுக்கு அழைத்தாள், அக்னி இந்நேரத்தில் அழைத்து செல்ல மாட்டான் என்றே அவள் நேராக ரேயனுக்கு அழைத்தது.

விடியற்காலை ஒரு மணியளவில் அலறிய அலைபேசியை யோசனையுடன் எடுத்தவன் “சொல்லு தியா” என்று மென்மையாக கேட்க, அவளோ “அத்து பீச்க்கு போகலாமா” என்று ஹஸ்கி குரலில் கேட்டாள்.
நேரத்தை பார்த்தவன் “ஊருக்கு போய் கூட்டிட்டு போறேன் தியா.. இப்போ அமைதியா படுத்து தூங்கு” என்று கண்டிப்பான குரலில் கூற அதை கேட்டுக்கொண்டால் அது ஆரு அல்லவே.
“முடியாது.. நீ ஒன்னும் வரவேண்டாம் நானே போறேன்” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தவள் தனியே கிளம்பி சென்றாள்.

சாலை விளக்குகள் மெல்லிய ஒளியை பரப்ப, அடர்ந்த இரவின் இருளும் மேனியை தீண்டி சென்ற குளிர் காற்றும் அவள் இதழில் அழகிய புன்னகை ஒன்றை வரவைத்தது.

அலைகளில் காலை நனைத்து கொண்டிருந்தவள் கொஞ்சம் கொஞ்சமாக உள்நோக்கி சென்றாள். அலையில் விளையாடும் ஆர்வத்தில் உள்ளே சென்றவள் ஒருகட்டத்தில் அலைகளால் அடித்து செல்லப்பட, அதை எதிர்பாராதவள் நீச்சலடிக்க முயன்றும் தோற்றுதான் போனாள்.

விழிகளில் நீர் தலும்ப, கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவை இழந்தாள். அவள் சிறிது தூரம் சென்றபோதே வேக எட்டுகளுடன் வந்த ரேயன் அவள் அடித்துச்செல்லப்படவுடன் தானும் கடலில் குதித்தான். தாய்லாந்து கடலில் நீச்சல் கற்றுக்கொண்டவனுக்கு இதில் நீந்துவது ஒன்று பெரிய விஷயமாக இருக்கவில்லை . அவளை தூக்கிக்கொண்டு கரைக்கு வந்தவன் அவளை மணலில் கிடத்த அவளோ சுயநினைவின்றி கிடந்தாள்.

ரேயனின் மனம் படபடக்க அவள் கன்னம் தட்டி எழுப்ப முயற்சித்தவனுக்கு கிடைத்த பலன் பூஜ்யமே. இது போன்ற நேரத்தில் அவர்களுக்கு செய்யவேண்டிய முதலுதவி நினைவில் வர அவள் வயிற்றில் கைவைத்து அழுத்தினான். அப்போதும் அவள் அதே நிலையில் இருக்க வேறு வழியின்றி அவள் உதட்டருகே குனிந்தவன் “ஐ அம் சாரி” என்றவன் தன் மூச்சு கொண்டு அவள் மூச்சை சீராக்கினான். அதன் பின் அவள் உள்ளங்கையிலும் காலிலும் சூடு பறக்க தேய்த்தான். எவ்வளவு செய்தும் அவளிடம் அசைவு காணாதிருக்க அவளை கைகளில் அள்ளியவன் தனதறைக்கு அழைத்து சென்றான்.

ஆருவுடன் வந்த ரேயனை பார்த்து அதிர்ந்த கிஷோர் “என்னடா ஆச்சு இவளுக்கு” என்று கேட்க, நடந்தவற்றை கூறியவன் மருத்துவரை அழைத்தான். சிறிது நேரத்தில் அங்கு வந்த மருத்துவர் அது அதிர்ச்சியினால் ஏற்பட்ட மயக்கம் தான் என்றுவிட்டு அவளுக்கு ஊசி ஒன்றை போட்டுவிட்டு சென்றார்.

மருத்தவர் சென்ற அரை மணி நேரத்திற்கு பின் மெல்ல தன் மலர் விழிகளை விரித்தவள் எழுந்தமர, கிஷோர் “பார்ட்னர் கொஞ்ச நேரத்துல பயப்பட வச்சுட்ட” என்று முறைக்க அவ்ளோ அசடு வழிந்தாள். பின் ரேயனை பார்க்க அவனோ இறுகிப்போய் அமர்ந்திருந்தான். அவன் முகமே அவன் கோபத்தை பறைசாற்ற அவன் அருகே சென்றவள் “அத்து” என்றழைக்க,
ரேயன் “ரூம்க்கு போ” என்றான் புயலை உள்ளடக்கிய குரலில்
“அத்து சாரி” என்று அவள் இறைஞ்சும் குரலில் கேட்க
“ரூம்க்கு போ ஆராத்யா.. தேவையில்லாம என் கோபத்தை கிளப்பாத” என்று சீற
கிஷோர் “ஆரா நீ போ.. நாளைக்கு பேசுவோம்.. போய் ட்ரெஸ் மாத்திட்டு தூங்கு” என்று அவளை அனுப்பி வைத்தான்.

அவன் செல்ல சிறிது தாமதமாகி இருந்தாலும் இந்நேரம் அவளின் நிலைமை என்னவாயிருக்கும் என்று நினைத்தவனின் உடல் நடுங்கியது. ‘முட்டாள் முட்டாள்’ என அவளை அர்ச்சிதவனுக்கு அன்றைய தூக்கம் பறிபோனது தான் மிச்சம்.

இங்கு உடை மாற்றிக்கொண்டு கட்டிலில் அமர்ந்த ஆருவின் நினைவெல்லாம் அவளவனே. அவன் கோபம் ஏன் தன்னை இத்தனை பாதிக்கிறது என்ற ஆராய்ச்சியில் இறங்கியவள் விடிந்த பின்னே உறங்கினாள்.

மறுநாள் முழுவதும் ரேயன் ஆருவை தவிர்த்து வந்தான். ஏனோ அவள் மீது அத்தனை கோபம் வந்தது அவனுக்கு, அந்த கோபமும் அவள் மீதிருந்த அளவுகடந்த காதலால் தான் என்பதை உணர்ந்தே இருந்தான். ஆருவோ பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு அவனிடம் மன்னிப்பு வேண்ட அவனோ அவளை கண்டுகொண்டானில்லை.

இரவு ரயிலில் அக்னி நேஹா கதிர் கிஷோர் ஆகியோரின் இருக்கைகள் ஒரு பெட்டியில் இருக்க ரேயன் குமரன் ஆரு மற்றும் சிலரின் இருக்கை வேறு பெட்டியில் இருந்தது.

ரேயனோ கதவின் அருகே சென்று நின்றுக்கொண்டான். அவன் அருகே சென்ற ஆரு “அத்து.. ஏன் என்கிட்ட பேச மாட்டுற” என்று முகம் சுருக்கி சிறுகுரலில் கேட்க அவளை தீயாய் முறைத்தவன் “என்கிட்ட பேசாத ஆரா.. உன்மேல செம்ம கடுப்புல இருக்கேன்.. நேத்து நான் வர கொஞ்சம் லேட் ஆகிருந்தா கூட உன் நிலைமை என்ன ஆகிருக்கோம்” என்று கடிய அவளோ தலை குனிந்துநின்றாள்.

ஆம் நேற்று அவன் சரியான சமயத்தில் வரவில்லை என்றால் என்னவாயிருக்கும் என்றணர்ந்தவள் மௌனமாகிட அவள் கண்களோ கலங்கியது ஆணவனின் கோபத்தில்.

அவள் அழுகையை கண்டவனுக்கு அதற்கு மேல் கோபம் இருக்குமா என்ன, தன் கோபத்தை கைவிட்டவன் “இனிமே இப்படி பண்ணாதா.. புரியுதா” என்றிட வேகமாக தலையசைத்தவள் “இனிமே இப்படி பண்ண மாட்டேன்” என்றாள் சிறுபிள்ளை போல் அதில் அவன் கோபம் மொத்தமாக வடிந்துவிட “சரி வா” என்றவன் அவளை அழைத்துக்கொண்டு இருக்கைக்கு சென்றான்.

வார்த்தைகள் உதிர்க்கா காதலை
உன் கண்கள் காட்டிக்கொடுக்க
தீரா காதலில் என்னை
தொலைக்கிறேனடா நான்..

Advertisement