Advertisement

                   அத்தியாயம் 31

“வாழ்க்கையின் தடம் மாறிப்போனது

ஒரே இரவில்..

எண்ணங்கள் மாறிப்போனது

ஒரே இரவில்..

இன்பம் தொலைந்து போனது

ஒரே இரவில்..

ஆனால்,

உள்ளங்கள் என்றும் மாறா..”

தங்கள் வாழ்வில் நடந்த அனைத்தும் கண்முன் 2 நொடிகளில் வந்து செல்ல, ரேயனின் கையை பிடித்திருந்த ஆரு பட்டென்று எடுத்தாள், முகம் முழுவதும் ஏமாற்றம் மட்டுமே எஞ்சியிருந்தது அவளிடம், அதை கவனித்த ரேயனிற்கு தான் எப்படி உணர்கிறோம் என்றே விளங்கவில்லை. அவளுடைய பார்வையில் எந்தவித குற்றவுணர்வும் இல்லை மாறாகா அவள் கண்கள் ‘இப்படி செய்துவிட்டாயே’ என்று கேட்பது போல மட்டுமே இருந்தது.

அதற்கு மேல் அங்கிருக்காமல் விருட்டென்று அவள் அந்த இடத்தை விட்டு நகன்றுவிட்டாள், அவள் செல்வதையே பார்த்த ரேயன் “நான் தப்பு பண்றேனா” என்று தனக்கு தானே கேட்டுக்கொண்டான். நேரம் செல்வதுக்கூட தெரியாமல் அங்கேயே வாசற்படியின் அருகில் நின்றான்.

நடந்தவை அனைத்தையும் அலசினான் ஆனால் இப்போதும் இருக்கும் அலட்சியமின்றி மிக பொறுமையாக நடந்தவற்றை அசைபோட்டான். இதுவரை அவன் கண்ணோட்டத்தில் மட்டும் யோசித்தவன் முதல் முறை அக்னியின் கண்ணோட்டத்தில் சிந்திக்க, அக்னியின் வார்த்தைகள் அவன் காதில் ரீங்காரமிட்டது.

அக்னியின்,”ஒரு தடவை பொறுமையா அவன் யோசிச்சிருந்தா, விசாரிச்சிருந்தா எனக்கு இந்த அசிங்கம் கிடைச்சிருக்காது”

“நான் மட்டும்தான் இங்க ரெட் டீஷர்ட் போட்டிருக்கேனா?”

“நானும் சண்டை போட வந்தா கோச்க்கு யாரு நடந்தத சொல்லமுடியும், அதான் வரல”

தன் அவசர புத்தியால் தவறிழைக்காத ஒருவனுக்கு தீங்கு இழைத்துவிட்டோமா என்ற கேள்வி வர, தலையை பிடித்துக்கொண்டான். இப்போது இன்னும் தலை வெடிப்பது போல் ஆருவின் வார்த்தைகள் அவன் மனதில் சுழன்றது,

“என்மேல நம்பிக்கை இல்லையா அத்து?”

“நீ என்ன என்னவேணா சொல்லு, ஆனா அவனை சொல்ல உனக்கு உரிமை இல்ல அகி, ஐ நோ அபௌட் ஹிஸ் லவ்”

“ரெண்டு பேரும் உங்க மேன் பவர காட்டுறீங்களா, எனக்கு அசிங்கமா இருக்கு”

“குட் பை மிஸ்டர் ஆத்ரேயன்” என்று அவள் கூறி சென்றது என அனைத்தும் வர, தவறு தன்னிடத்தில் தான் உள்ளது என் உணர்ந்தான், இத்தனைஆண்டுகள்   கண்ணில் துணியை கட்டிக்கொண்டு எதுவும் பார்க்கமாட்டேன் என்றிருந்த தன் மடத்தனத்தை எண்ணி தன்னை தானே கடிந்து கொண்டான்.

ஓடும் ரயிலை வெறுத்தபடி நின்றுகொண்டிருக்க சூரிய கீற்றுகள் அவனை தொட்டு தழுவியது. வெளிச்சம் பரப்ப ஆரம்பிப்பதை உணர்ந்து தன் கடிகாரத்தை பார்க்க அதுவோ மணி காலை 6 என்று காட்டியது.

உறக்கம் கலைந்து வந்த கிஷோர் ரேயனை முறைத்த படியே, “டேய் என்ன கலக்க்ஷன் எவ்ளோ ஆச்சு?” என்று கேட்க,

ரேயன் “என்ன உலருற” என்றான் புருவம் இடுங்க. கிஷோர் “ஹான் இங்கையே ‘ஐ அம் அ பெக்கர் பாய்’ மாதிரி இருந்தல, அதான் எதாச்சு தேருச்சானு பாத்தேன்” என்று நக்கலாக கூற, அவன் கூறியதை கேட்டு மெலிதாக இதழ் விரித்தவன்  வெளியில் தெரிந்த புள் வெளியை ரசித்த்துக்கொண்டிருந்தான்.

கிஷோர் ரேயனின் முகத்தில் ஏதோ ஒருவித அமைதி தெரிவது போல் உணர்ந்தான், ஆனால் அவனுக்கு அது ஏன் என்றுதான் புரியவில்லை, அதை அவனிடமே கேட்டு விடலாம் என்றெண்ணியவன் “மச்சா” என்றழைக்க,  “சொல்லு டா” என்றான்.

கிஷோர் “இல்ல ஒன்னும் இல்ல” என்றுவிட, ரேயன் “வா போய் பேக் லாம் எடுத்துட்டு வரலாம்” என்றான். ரேயன் அவ்வாறு கூறியவுடன் கிச்சா அவசரமாக “இரு இரு நான் போறேன்” என்க

ரேயன் “என்ன இப்போ.. வா” என்றான் வெகு இயல்பாக ஏனோ ஆருவின் ஒற்றை பார்வை அவன் மனதை வெகுவாய் பாதித்திருந்தது.

கிஷோர் “இல்ல டா, இவ்ளோ நேரம் இருந்துட்ட, இன்னும் கொஞ்ச நேரம் தான, நானே கொண்டு வரேன்” என்றிட, ரேயன் அவனையே ஆழமாக பார்த்துவிட்டு “நான் ஏதோ சரி இல்ல கிச்சா, சரி இல்லையோ சரியா பண்ணலையோ” என்றவன் தொடர்ந்து “சரி பண்ணனும்” என்றான் தீவிரமாக.

கிஷோர் “டேய் தூங்கம் இல்லாததால என்னலாமோ பெனாத்துறியா.. என்ன டா சொல்ற” என்றவனுக்கு அவன் பேசுவது ஏதோ வேற்று மொழி போல் தான் இருந்தது.

திறுதிறுவென முழித்துக்கொண்திருந்த கிஷோரை பார்த்தவன் “எல்லாத்தையும் திருப்பி தூசி தட்ட போறோம்” என்றுவிடு  இருக்கையை நோக்கி நகர, கிஷோர் தலையும் அல்லது வாலும் அல்லது அவன் கூறியவற்றை மனதில் போட்டு குழப்பிக்கொண்டே அவனை பின்தொடர்ந்தான்.

அங்கு கெளதம் தங்களின் உடைமைகளை எடுத்துவைத்துக்கொண்டு இருக்க சித்து அவனுக்கு உதவி செய்துகொண்டும் இருந்தான். ஆருவோ ஜன்னலின் பக்கம் அமர்ந்து வேடிக்கை பார்த்துகொண்டிருந்தாள் ஆனால் அவள் மனதை ஆட்கொண்டது என்னவோ அவளவனின் நினைவுகள் மட்டுமே.

உடைமைகளை எடுக்க வந்த ரேயன் ஆரு பார்க்காத சமயம் அவளை கண்ணுக்குள் நிறப்பிக்கொண்டு தன் பையை எடுத்தான். சித்து “ப்ரோ என்ன வேற சீட்ல இருந்திங்களா, நைட் ரெண்டு தடவ பார்த்தபோ நீங்க இல்லையே” என்று எதார்த்தமாக ரேயனிடம் கேட்க, ஆரு அப்போது தான் திரும்பி பார்த்தாள்.

தன்னெதிரில் நின்றுகொண்டிருந்த ரேயனை எரிட்டவளின் கண்களோ அவனை விட்டு விலக மறுத்தது. இவ்வளவு பட்டும் திருந்தாத தன் மனதை நினைத்து தன்னை தானே கடிந்துகொண்டவள் முகத்தை திருப்பி கொண்டாள், பெண்ணவளின் தடுமாற்றத்தை ரேயனும் கவனித்துக்கொண்டு தான் இருந்தான்.

பின் ரேயன் சித்துவிடம் “இல்ல அது” என்று கூறும் முன் கிஷோர் “அவனுக்கு ட்ரெயின்ல தூக்கம் வராது அதான் அங்க இங்கனு மாத்தி மாத்தி அலஞ்சிட்டு இருந்தான் ப்ரோ” என்று கூற, ரேயன் “இல்ல என்னால இங்க இருக்கமுடில அதான்” என்று பட்டென்று கூறிவிட்டான், அதை ஆரு கேட்டும் கேட்காதது போல்  அமர்ந்திருந்தாள். ஆனால் கௌதமால் மட்டும் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை, ஏதோ ஒன்று அவனை உறுத்திக்கொண்டே இருந்தது.

ரேயன் கூறியதை கேட்டு தலையில் அடித்துக்கொண்ட கிஷோர் “ரெண்டும் ஒன்னுதான் கொஞ்சம் சும்மா இரு.. ஸ்டேஷன் வந்துருச்சு வா போலாம்”

என்று அவனை இழுத்துக்கொண்டு செல்ல, ரேயன் ஒரு பார்வை ஆருவை பார்த்துவிட்டுதான் சென்றான்.

ஆரு பார்க்கவில்லை என்றாலும், போனவர்களை பார்த்துக்கொண்டிருந்த சித்து “ஆள் பாக்க செம்ம கம்பீரமா இருக்கான்ல” என்று ரேயனை பார்த்து கூற,

கெளதம் “ஆமா, ஆனா மர்மமாவும் இருக்கான்” என்றவன் அறியவில்லை மறுநாள் அவன் கம்ப்பெனி  முன்புதான் நிற்கப்போகிறார்கள் என்று.

சித்து “என்ன டா சீரியல் டயலாக் அடிக்கிற” என்று சிரிக்க,

கெளதம் “அவள பாரு” என்று ஆருவை காட்டினான். அவளோ வேறு உலகில் இருக்க, சித்து “அவளுக்கென்னடா” என்றான் புரியாமல், கெளதம் “என்ன பிராண்டோ நீ, நானும் பாக்குறேன் அவ ஏதோ மந்திரிச்சு விட்ட மாதிரியே இருக்கா, அவன பாத்ததுல இருந்து” என மிக துல்லியமாய் கணிக்க

சித்து “டேய் என்ன இப்படி சொல்ற, நம்ம எதர்ச்சியா பாத்தோம் அவங்கள.. அப்போ எப்படி” என்று கேள்வி எழுப்ப

கெளதம் “அதலாம் தெரியல.. அவன் இவளை பாத்ததும், இவ அவன பாத்ததும் ரெண்டு பேரையும் கிஷோர் திருட்டு முழில பாத்ததும் ஏதோ இடிக்கிது எனக்கு” என சந்தேகப்பட

சித்து “ஆனா இவ எப்போவுமே இப்படிதான இருப்பா” என்றான்.

கெளதம் “ஹ்ம்ம்.. ஆனா இது வித்தியாசமா இருக்கு” என்றிட

சித்து “என்னமோ சொல்ற.. பாப்போம்.. ஆனா எனக்கு இந்த கோயின்சிடென்ஸ்லலாம் நம்பிக்கை இல்லை” என்று முடிக்க “வில் சீ” என்றவன் ரயிலில் இருந்து இறங்கினான்.

ஆரு “சித்து நான் இன்னிக்கே சென்னை கிளம்புறேன் அப்பா அம்மாவ பார்த்துட்டு, எனக்கு டிக்கெட் மட்டும் அரேஞ்சு பண்றியா” என்று இயல்பாய் கேட்க முயன்று தோற்றவளின் குரல் கமறியே வெளி வந்தது. ஆருவால் இயல்பாக இருக்க முடியவில்லை அதுவும் அவனை கண்ட பின்பு அவள் மனம் ஒரு நிலையில் இல்லை என்றே கூற வேண்டும்.

ஆரு கூறியதை கேட்டு கடுப்பான சித்து “ஹே என்ன இறங்குன உடனே போனும் சொல்ற, நாலு நாள் தான் நம்ம பிளான்.. அதலாம் எந்த டிக்கெட்டும் போடமுடியாது” என்று மறுத்துவிட

ஆரு “நீ போடலானா நான் போட்டுக்குறேன், இன்போர்ம் தான் பண்றேன்” என்றாள் இறுக்கமாக,

சித்து “அவ்ளோதான்ல.. போ இந்த ட்ரெயின்லயே கிளம்பி போ” என்று கோபமாக கூறிவிட்டு கீழிறங்க, ஆருவிற்கு அதை கேட்டு கஷ்டமாக இருந்தாலும், ரேயன் இங்கு எங்கயோ ஒரு இடத்தில இருக்கிறான் என்று நின்னைக்கும் போதே அவளால் அங்கு இருக்க முடியவில்லை.

அவனை காணாதபோது வேறு ஆனால் இப்போது வேறல்லவா, அது மட்டுமில்லாமல் அவளால் அவர்களுடன் இயல்பாக இருக்கமுடியும் என்று தோன்றவில்லை, இந்த சந்திப்பின் தாக்கம் குறைந்தது ஒரு வாரம் நீடிக்கும்  என்று அவள் அறிவாள் எனவே போகிறேன் என்று குதிக்குறாள் ஆனால் இவர்களும் அவளை விடுவதாய் இல்லை.

எப்போதும் எதிராக பேசும் கௌதம் கூட இன்று “ஏன் இப்போ போறேன் சொல்ற.. நீ எங்கையும் போல, எங்க கூடதான் ஒன் வீக் இருக்க போற, தட்ஸ் இட்” என்று முடிக்க, சித்து அதிசயமாக பார்த்தான் என்றாள் ஆரு எதுவும் பேசாது முன்னே சென்றாள்.

ஸ்டேஷனில் இருந்து கேபில் சென்றுகொண்டு இருந்த ரேயனும் கிஷோரும் பெரிதாக பேசிக்கொள்ளவில்லை, ஆனால் கிஷோருக்கு மண்டை பிய்த்தது கொள்ளலாம் என்பது போல் இருந்தது.

கிஷோர் “மச்சா என்னமோ தூசி தட்ட போறேன் சொன்னியே.. என்னது.. எதை தட்ட போறோம்” என்று பவ்யமாக கேட்க

ரேயன் சிரித்துவிட்டு “வெட்டயாபுரம் அரண்மனை வாங்கிருக்கேன், அத தான் தூசி தட்டபோறோம்” என்றான் நக்கல் குரலில்.

ரேயன் கூறியதை கேட்ட கிஷோருக்கு  மயக்கம் வராத குறைதான், “டேய் நீயா பேசுற.. நீயா இப்போ இப்படி பேசுனேன்” என்று வினவ

ரேயன் “அடிங்கு நான் என்ன இவ்ளோ நாளா  பேசமுடியாமலா இருந்தேன்” என்று கேலியாக கேட்க

கிச்சா “ஐயோ அப்படிலாம் இல்ல.. ஆனா”

ரேயன் “ரொம்ப குழம்பாத.. நான் சில விஷயத்தை தெரிஞ்சிக்க நினைக்குறேன் மறுபடியும்.. எனக்கு நான் ஏதும் தப்பா பண்ணிருப்பனோன்னு ஒரு யோசனை நேத்துல இருந்து.. அவ என்ன பார்த்த பார்வை ஏதோ ஏதோ யோசிக்க வச்சிது… அதனாலதான்.. அண்ட் நான் இப்படி யோசிக்க ஆரம்பிச்சதுலருந்து எனக்கு ஏதோ பாரம் இறங்குன மாதிரி இருக்கு அதே சமயம் பயமும் வருது.. சோ சீக்கிரம் தூசி தட்டியே ஆகனும்” என்று தீவிரமாக கூறிக்கொண்டிருக்க, கிஷோர் விழி விரித்து “நிஜமாவா” என்று சந்தோஷத்தில் அலற

ரேயன் “ச்ச ஏன் அலறுற” என்று காதை தேய்த்தன்.

கிஷோர் “ஐயோ நீயா பேசுற.. ஹப்பா.. அயோ.. அப்போ நீங்க” என்று ஆரம்பிக்கும் போதே கை நீட்டி தடுத்த ரேயன் “அதுக்குனு நான் அவ கூட சேர்ந்திடுவேன்னு நினைக்காத, இட்ஸ் அல்மோஸ்ட் ஓவர்.. அண்ட் ஒருத்தர் மட்டும் நினச்சா எதுவும் நடக்காது” என சத்தமாக ஆரம்பித்தவன் முணுமுணுப்பாக முடித்தான்.

கிஷோருடன் பேசிவிட்டு, ரேயன் ஜன்னலின் புறம் திரும்ப,

கிஷோர்

ஒரு பெருமூச்சுடன் “அப்போனா நீ ஆரம்பிக்க போற புள்ளி” என்று நிறுத்திவிட்டு ரேயனின் முகம் பார்க்க, ரேயன் சிறு இடைவேளை விட்டு “அக்னி” என்றான்.

அந்த பெயர் கொண்டவனோ சென்னை வெயிலை விட நெருப்பாக தகித்துக்கொண்டிருதான் “என்னால முடியாதுன்னா விடேன்” என்று தன் அலுவலகத்திற்கு வந்திருந்த கதிரிடம் கத்திக்கொண்டிருந்தான்.

கதிர் “உனக்கு என்ன இப்போ.. வீடு கிரகப்பிரவேசத்துக்கு வரமாட்டியா.. திஸ் இஸ் டூ மச்” என்றான் எரிச்சலாக. அக்னி சிறிது இடைவேளை விட்டு “கதிர் உனக்கு தெரியாதது இல்ல” என்று ஆரம்பிக்க, “இந்த பேச்சுல்லாம் பேசாத சும்மா.. நம்ம.. சாரி, எங்க காலனி கிட்ட வந்தா என்ன ஆகிடும் அப்படி.. நான் என்ன பண்றது லேண்ட் எனக்கு அது பக்கத்துலதான் கிடைச்சிது மச்சான்” என்று கோபமாக ஆரம்பித்தவன் நிதானமாக முடித்தான்.

அங்கு சென்றால் எங்கு மீண்டும் பலவீனம் ஆகிவிடுவோமோ என்று அந்த திசைக்கூட தலைக்காட்டாமல் இருந்தான்  அதனால் தான் இந்த அலப்பறை கதிரிடம், ஆனால் கதிர் அவனை வர வைக்கமால் ஓய்வதாக இல்லை ஏனெனில் இது கிஷோர் மற்றும் இவனுடைய அடுத்தகட்ட திட்டமாயிற்றே.

அக்னி “கிளம்பு நீ” என்று கதவின் புறம் கைகாட்ட

கதிர் “ஹான் சரி காலைல ஆறுக்கு வந்துரு” என்றுவிட்டு திரும்பினான்.  அக்னி “நான் வரேன்னு சொல்லல” என்று அழுத்தமாக கூறிவிட, கதிர் “வரலனா உனக்கு கதிர்னு ஒரு பிரண்ட் இருந்தான் அவன் செத்துட்டான்னு நினச்சுக்கோ சரியா” என்று கோபமாக கூற, அவனை அடிக்க கை ஓங்கிய அக்னி பின் தன்னை சமாளித்துக்கொண்டு “ஹே என்ன பேசுற.. சேவுல திருப்பிடுவேன்” என்றான் சீறலாக. கதிர் அவனை விட கோபமாக “பின்ன என்ன நினச்சுட்டு இருக்க, உனக்கு மட்டும் தான் சோகம் கவலை எல்லாமா, நாங்களும்தான உங்கக்கூட இருந்தோம் பல வருஷமா.. நாங்களாம் மனுஷங்க இல்லையா, இல்ல எங்களுக்குலாம் பீலிங்ஸ் இல்லனு நினச்சுட்டு இருக்கியா.. நீங்களாம் இருந்தும் இல்லாத மாதிரிதான இருக்கேன் நான் இந்த ஆறு வருஷமா.. என்ன பத்தி யோசிச்சிருக்கியா.. இவன் ஏதும் நம்மட்ட சொல்லாம செய்யமாட்டானே எப்படி இருக்கான், பேமிலி எப்படி பாத்துக்குறான், ஸ்ம்ரித்தினு ஒரு பொண்ண தங்கச்சினு சொன்னோம் அவ எப்படி இருக்கா எதாச்சு யோசிச்சியா.. நீ உன் வாழ்க்கை, உன் கஷ்டம் இதலாம் தான உனக்கு பெருசா இருந்துச்சு.. இப்போக்கூட நீ வரமாட்டேன் சொல்வனு தெரிஞ்சும் தான் கூப்பிட வந்தேன்.. உன்னலாம் விட்டா யாருடா இருக்கா எனக்கு” என்றவனுக்கு குரல் தழுதழுத்தது.

கதிர் தன் மனதில் இருந்ததை மொத்தமாக கொட்ட அதை கேட்ட அக்னி தான் ஸ்தம்பித்து நின்றான், பின் சுதாரித்தவன் தன் இருக்கையில் சென்று அமர்ந்துக்கொள்ள,

கதிர் “இதுக்குமேல உன் இஷ்டம்” என்று கதவருகில் செல்ல,

அக்னி “வரேன் கதிர்” என்றான் நலுங்கிய குரலில்.

கதிர் “என்ன” என்று மீண்டும் கேட்க

அக்னி “நான் வரேன் மச்சான்.. போ” என்றான். உள்ளுக்குள் குதித்து கொண்டு இருந்த கதிர் ‘ஹப்பா.. இந்த ஒரு வார்த்தைக்கு என்னலாம் டயலாக் அடிக்க வேண்டி இருக்கு.. சரி அப்படியே முகத்த சோகமா வச்சிட்டு கிளம்புவோம்.. இல்லனா மனசு மாறிடுவான்” என்று நினைத்துக்கொண்டு வெளியில் “தேங்க்ஸ்” என்றுவிட்டு சென்றான்.

அவன் சென்ற பிறகு கணினியில் இருந்து கண்னை எடுத்த அக்னி “யாரு டா சொன்னா நான் உங்களளாம் பாக்கலனு,யோசிக்கலனு.. வாரத்துல ரெண்டு நாளாவது ஸ்ம்ரித்திய காலேஜ்ல பாக்குறேன்.. அவளுக்கே தெரியாம, எங்க தெரிஞ்சா அவ வந்து பேசி அங்க வீட்டுக்கே திருப்பி கூப்பிடுவாளோனு நினச்சுதான் பேசாம இருக்கேன்.. அம்மா அப்பா, உன் ரெஸ்டாரண்ட்னு எல்லாம் என் கண் பார்வையில தான் இப்போவும் இருக்கும்னு உனக்கு தெரியாதுடா கதிரு.. உன்ன மட்டும் இல்ல, நேஹா அப்பறம்…” என்று கூறி ஆருவின் புகைப்படத்தை தனது போனில் பார்த்தவன் “யாரையும் நான் நினைக்காம இல்ல டா, ஆனா நீங்கதான் என்ன புரிஞ்சிக்கல..” என்று மனம் உடைந்து அவன் மேசையில் தலை சாய்த்தான்.

அக்னியின்

அறையிலிருந்து வெளியே வந்த கதிர்காக காத்திருந்த நேஹா, அவன்கிட்ட ஓடி சென்று “என்ன டா வரானா?” என்று ஆர்வமாக கேட்க,

கதிர் முகத்தை தூக்கி வைத்து கொண்டு “இல்ல.. முடியாது சொல்லிட்டான்” என்றான். சட்டென நேஹா முகம்  வாடி போக “எவ்ளோ சொல்லியும் கேட்கலையா.. ஏன்டா இப்படி பண்றான்” என்றவளுக்கு அவனை நினைத்து கஷ்டமாக இருந்தது.

நேஹாவின் முகம் வாடியதை கண்டவன்  “ஹே ஹே.. உடனே பியூஸ் போகாத.. அவன் வரேன்னு சொல்லிட்டான்” என்றான் சட்டை காலரை தூக்கி, கதிர் கூறியதை கேட்ட நேஹா சிறகில்லாமல் வானில் பறந்தாள்.

“நிஜமாவா.. அவனே சொன்னானா.. ஐயோ.. அன்னைக்கு ஏதும் மீட்டிங் இல்லல.. ஆன் இல்ல.. இருந்தாலும் அவனுக்கு தெரியாம கேன்சல் பண்ணிடலாம்.. உண்மையாவா கதிரு.. வரேன் சொல்லிட்டானா.. வரேன் சொன்னானா. இல்ல வெறும் தலையை ஆட்டுனானா, அப்பறம் நான் சொல்லவே இல்லை சொல்லுவான்” என்று பேசிக்கொண்டே போக, கதிருக்கு ஒரு புறம் அவளின் சந்தோஷம் கண்டு ஆனந்தமாக இருந்தாலும், மறுபுறம் அக்னி எப்படி இவளை ஒதுக்குகிறானே என்று எரிச்சலாக இருந்தது.

அவள் தலையில் பிடித்து ஆட்டியவன்  “வரேன்னு சொன்னான் டா” என்றிட

நேஹா ஆபீஸ் என்றும் பாராமல் குதித்துக்கொண்டிருந்தாள் “வாவ் வாவ்… சூப்பர்… ஹே…” என்று.

கதிர் “நீ குதிச்சிட்டு இரு உன் பாஸ் வந்து வண்டி வண்டியா திட்ட போறான்” என்று கேலி செய்ய

நேஹா “பரவால” என்றாள் உதட்டை சுழித்து. கதிர் சிரித்துவிட்டு அங்கிருந்து செல்ல, இவை அனைத்தையும் அக்னி தன் கண்ணாடி கதவின் மூலம் பார்த்துக்கொண்டு தான் இருந்தான். அவள் தான் ஒப்புக்கொண்டத்திருக்காக தான் குதிக்கிறாள் என்று அவன் அறிவான், தன் தலையை கோதிவிட்டவன் “லவ் யு நேஹா…”.என்று தனுக்குள்ளே கூறிக்கொண்டான். அப்போது அவள் எதர்சியாக திரும்ப மறுபுறம் அவள் அறியாவண்ணம் தள்ளி நின்று கொண்டான். எவ்வளவு நாட்கள் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் என்று தெரியவில்லை.

இதில் என்னவென்றால்

கதிர் காதலிக்கிறான் என்றறிந்த அக்னி, அவன் இந்துவை தான் காதலிக்கிறான் என்று அறிந்திருக்கவில்லை. ஏன் நேஹாவிற்கு கூட தெரியாத ஒன்று தான் அது, அதிலும் அவள் ரேயனின் தங்கை என்றும் அக்னியின் கடந்த கால கசப்பிற்கு காரணமானவள் என்பதும் யாரும் அறியாதயொன்று. கல்லூரி நாட்களில் கதிர் காதலிக்கவில்லை அதன் பிறகே காதலித்ததால் யாரும் அதை பற்றி அறியவில்லை. அவனுக்கு தான் ரேயனின் தங்கையை தான் காதலிக்கிறேன் என்று கூற பயமாகவே இருந்தது, இந்த சந்தர்ப்பத்தில் கூறிவிடலாம் என்று நினைத்து தான் வலுக்கட்டாயமாக அக்னியை அழைத்தான், பாவம் அவனுக்கும் ரேயனின் அந்த தங்கை இவள் தான் என்று தெரியாது, அதை பற்றி அவன் கேட்டதும் இல்லை, இனி கிரகப்பிரவேசத்தில் என்ன நடக்கவிருக்கிறதோ?..

ஊட்டியில் சித்து வீட்டை வந்தடைந்த மூவரையும் சிந்துவின் தாய் நீலிமா  வரவேற்றார் “வா டா கெளதம், வா ஆரு… எப்படி இருக்கீங்க” என்று நலம் விசாரிக்க

கெளதம் “நல்லா இருக்கேன் மா…” என்றிட, ஆருவும் சிறிது தலையசைத்துவிட்டு அவரை விசாரித்தாள்.

சித்து “தாயே இங்கயே நிக்கனுமா நாங்க.. உள்ள விடமாட்ட போல” என்று நக்கலடிக்க

நீலிமா “அட வாங்க வாங்க…” என்று உள்ளே அழைத்து சென்றார். அங்கு ஒரு அறையில் சிந்துவின் தந்தை மேகநாதன் படுத்திருந்தார், அவரை சென்று பார்த்தனர்.

சித்து “அப்பா.. இப்போ எப்படி பீல் பண்றீங்க” என்று அடிக்குரலில் கேட்க

மேகநாதன் “அதலாம் நான் நல்லா இருக்கேன்.. ஏன் பேஸ் வாய்ஸ்ல கேக்குற” என்று அவனை வாற,

சித்து “ஆமா பின்ன நீங்க ஹாஸ்பிடல்ல என்னைவிட்டு எல்லா நர்ஸையும் சைட் அடிச்சிங்கலாமே.. அதான் அந்த பேஸ் வாய்ஸ்” என்றான் சிலுப்பிக்கொண்டு.

நீலிமா தலையில் அடித்துக்கொண்டு “சும்மா இருங்க ரெண்டு பேரும் வந்த உடனே ஆரம்பிக்க வேண்டியது” என்று அதட்ட தந்தையும் மகனும் ஹைபை அடித்துக்கொண்டனர், அவர்கள் குடும்பம் அப்படி தான். சித்து ஒரே மகன், அதனால் செல்லம் அதிகம்.

கெளதம் இவர்களை அறிந்ததுனால் மென்னகையுடன் நின்னிருந்தான், ஆரு நடப்பதில் எதிலும் கவனம் இல்லாமல் நின்றிருக்க, அதை பார்த்த நீலிமா “என்ன ஆரு ரெஸ்ட் எடுக்குறியா.. வா உனக்கு ரெடி பண்ண ரூம்க்கு போலாம்” என்று அழைத்தார் அவளின் சோர்வான முகத்தை கண்டு,

ஆரு “ஐயோ இல்ல மா.. அப்படிலாம் இல்ல.. அப்பா எப்படி இருக்கீங்க.. சுகர் ஹை ஆகிருச்சாமே” என்று நலம் விசாரிக்க,

மேகநாதன் “அட அதலாம் இப்போ ஒகே ஆரு, உங்கள வரவைக்கதான் இந்த ட்ராமாலாம்.. எனக்கும் போர் அடிக்கிதுல.. நம்ம ஈவினிங் வெளிய போலாம் சரியா” என்றார்.  நீலிமா “மண்டையில போடுவேன்.. பசங்க போயிட்டு வருவாங்க.. நீங்க எங்கயும் போகல.. ரெண்டு நாள் ரெஸ்ட் தான்” என்று கூறிவிட, அவர் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டார், அதை பார்த்த ஆரு “பா.. ரெண்டு நாள் அப்புறம்கூட வெளிய போலாம்.. சோ சில்” என்றாள்.

அதன் பின் அனைவரும் பேசிக்கொண்டிருக்க கெளதம் ஆருவைதான் கவனித்து கொண்டிருந்தான். எப்போதும் திமிராக இருக்கும் ஆரு அன்று காணவில்லை. ஏதோ சரி இல்லை என்று அவன் மனம் கூறிக்கொண்டே இருந்தது.

அதன் பிறகு அனைவரும் சிறிது நேரம் ஓய்வு எடுக்க சென்றுவிட, ஆரு தனக்கு கொடுத்த அறையில் தனது உடையை கூட மாற்றாமல் அப்படியே தரையில் அமர்ந்து கட்டிலில் தலை சாய்த்து படுத்துகொண்டாள். அவள் எண்ணம் முழுவதிலும் ரேயனே இருந்தான், அவளால் முயன்றும் அதை தவிர்க்க முடியவில்லை.

அங்கு ஆத்ரேயன் வீட்டிற்கு சென்ற அடுத்த பத்து நிமிடத்தில் கிளம்பி இருந்தான். கிஷோர் “டேய் எங்க டா கிளம்பிட்ட அதுக்குள்ள… எங்க போற” என்று புரியாமல் கேட்க,

ரேயன் “கம்பெனிக்கு தான் போறேன்” என்றான்.

கிஷோர் “இப்பவே ஏன் டா.. நாளைக்கு மார்னிங் போலாம்ல” என்று கேட்க

ரேயன் “இல்ல.. இங்க வேலைய எவ்ளோ சீக்கிரம் முடிக்கணுமோ அவ்ளோ சீக்கிரம் முடிச்சிட்டு சென்னை போனும்” என்றிட

கிச்சா “ஏன் டா பறக்குற..”

ரேயன் “இல்ல இல்ல.. முடிக்கணும்” என்று பரபரத்துக்கொண்டு இருந்தான்.

கிச்சா “ரேயா இரு நானும் வரேன்”

ரேயன் “என்ன ரேயானு கூப்பிடுறனா கூப்பிடாத” என்றிட,

கிஷோர்

அவனையே பார்த்துக்கொண்டிருந்தான்.

ரேயன் “உன்ன சீக்கிரம் அத்துனு கூப்பிட வைக்குறேன்” என்றுவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.

கிஷோர்

“அப்படி வா டா வழிக்கு.. பரவால என்ன மதிக்குறான் இவானச்சு… சரி அவனுக்கு ஒரு கால் போடுவோம்” என்று கதிருக்கு அழைத்தான்.

கதிர் “சொல்றா டேய்..”

கிஷோர் “மச்சா டேய் ஒரு ஹாப்பி நியூஸ்” என்று ஆர்பரிக்க

கதிர் “டேய்.. இங்கேயும் டா…”

கிஷோர் “அப்படியா… நீ சொல்லு முதல…” என்றிட,

கதிர் “வீடு கிரகப்பிரவேசத்துக்கு அக்னி வரேன் சொல்லிட்டான் டா” என்று கத்த

கிஷோர்

“வாவ்.. அதிசயமே அசந்து போகும் இது 9வது அதிசயம்” என்று சிரிக்க

கதிர் “டேய் 8 டா” என்றான்.

கிஷோர்  “நோ நான் சொல்ல போறது தான் 8..” என்க

கதிர் “சொல்லி தோல” என்றான்.

கிஷோர் “இந்த அத்து பய ஏதோ நான் தப்பு பண்ணிட்டேன் நினைக்குறேன்.. எல்லாம் திருப்பி இன்வெஸ்டிகேட் பண்ண போறேன்.. எல்லாம் சரி பண்ணனும்னு சொல்லிட்டு திரியுறான் டா” என்றிட

கதிர் “எப்படி, எப்படி இந்த மாற்றம்.. நேத்து கூட கத்திட்டு தான் சுத்துனான்” என்று யோசிக்க

கிஷோர் “நைட் ஏதோ நடந்துருக்கு டா கதிரு.. என்னனு தெர்ல” என்றான்.

கதிர் “அப்போ ஆரு கிட்ட பேசப்போரானா..” என்று ஆர்வமாக கேட்க,

கிஷோர் “ம்க்கும் கிழிப்பான்.. அத கேட்டதுக்கு அதலாம் இல்ல ஆனா அப்படிதான்னு குழப்பிட்டு போறான் சைக்கோ” என்று தலையில் அடித்துக்கொண்டான். கதிர் “சரி பாப்போம்.. நெஸ்ட் வீக் வந்துருவல”

கிஷோர் “யெஸ் யெஸ்….ஆமா பார்ட்னர் இங்க இருக்கா, எப்படி அவளை கூப்பிட போற” என்று வினவ

கதிர் “ஹாஹா அவ அங்க இருக்கானா யாரு கூப்பிட போறாங்க இப்போ” என்று விஷம புன்னகையுடன் கேட்க,

கிஷோர்

“டேய் நோ டா.. நோ…” என்க

கதிர் “ஒதுக்க வைக்குற…பை” என்று போனை வைத்துவிட்டான்.

கிஷோர்

“பாவி பய.. சரி பாப்போம்.. என்ன ஆகபோதோ… இவனுக்கு தெரியாம எப்படி போக முடியும்.. போவோம்.. என்ன பண்ணிருவானுங்க” என்று வடிவேல் பாணியில் நினைத்தவன் திட்டங்கள் தீட்டியபடி அமர்ந்துவிட்டான்.

சித்துவின் வீடு மிக பெரியதல்ல ஆனால் ஊட்டியின் அழகை பிரதிபலிக்கும் பழங்காலத்து அழகிய வீடு. பச்சை பசலேன தோற்றமளிக்கும் அரிய வகையான பேப்பர் மரம், குரங்குகள் ஏற முடியாத மரம் என்று பல வகை மரங்கள் மற்றும் செடிகளை அவர்களின் வீட்டின் சுற்றி வளர்க்கப்பட்டிருக்க அது மிகவும் செழுமையான தோற்றத்தை தந்தது.
பல்வேறு வகையான பூக்கள், ஆர்சிட் பூக்கள், பெர்ன் ஹவுஸ் போன்றவைகளையம் வைத்திருந்தனர்.

அவர்கள் வீட்டின் வலதுபுறம் ஏரி ஒன்றும் இருந்தது, அது சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் மாதம் இல்லாததால் அங்கு அவ்வளவு மக்கள் கூட்டம் இல்லை, அந்த ஏரியின் அழகிய தெளிந்த நீரும், அதன் சத்தமும் ரம்மியமாக இருந்தது.

காலை ஏழு மணி இருக்க, ஆரு நீலிமா குடுத்த காபி கப்புடன் தோட்டத்திலிருந்து ஏரியை பார்த்துக்கொண்திருந்தாள். சித்து உள்ளே  அவன் அம்மாவிற்கு உதவி செய்ய, கெளதம் அவன் கப்புடன் அவளின் அருகில் வந்து நின்றான் ஆனால் அவன் வந்ததுக்கூட தெரியாமல் அவள் ஏரியையே வெறித்துக்கொண்டிருக்க, கெளதம் “என்ன அதுல போய் விழப்போறியா என்ன” என்று ஏரியை பார்த்து கொண்டே கேட்க,

ஆரு “ச்ச ச்ச… உன்ன எப்படி உள்ள தள்ளிவிட்டு நிம்மதியா இருக்கலாம்னு பாக்குறேன்” என்றாள்.

கெளதம் “ஆனா பாத்தா ஏதோ அந்த ஏரில எல்லாம் பறிகொடுத்த மாதிரில இருக்கு” என்று புருவமுயர்த்த, சட்டென அவனை திரும்பி பார்த்தாள் பெண்ணவள்.

கெளதம் “நீ பாக்குறத பாத்தா…நிஜம் போலயே” என்று கேலி செய்ய

ஆரு விரக்தி புன்னகையுடன் “பறிகொடுக்கலாம் என்கிட்ட எதுவும் இல்லைங்க” என்றாள்.

கெளதம் “ஜேபி கான்ஸ்ட்ரக்ஷன் ஜி.எம் கிட்ட என்ன இல்ல.. எல்லாம் இருக்கு” என்றான். ஆரு “ஜேபி கன்ஸ்ட்ரக்ஷன் ஜி.எம் கிட்ட எல்லாம் இருக்கு, ஆனா ஆராத்யா கிட்ட எதுவும் இல்லை” என்று கூறிவிட்டு நகர,

கெளதம் ‘என்னமோ இருக்கு.. கண்டுபிடிக்கணும்’ என நினைத்துக்கொண்டு போகும் அவளை அழைத்தான்.

ஆரு ‘என்ன’ என்பது போல் பார்க்க, கெளதம் “ஆராத்யா கிட்ட இப்போ எதுவும் இல்லாம இருக்கலாம், ஆனா எப்போவும் இல்லாம இருக்கும்னு இல்லல..” என்று மார்புக்கு குறுக்கே கை கட்டிக்கொண்டு நின்றபடி கூற, அவன் கூறியதை புருவ முடிச்சுகளுடன் கேட்டுக்கொண்டு சென்றுவிட்டாள் அவள்.

சித்து அவன் புது கம்பெனிக்கு நேர்காணலுக்கு செல்ல தயாராகிக்கொண்டு இருந்தான். கௌதமும் அவனுடன் செல்ல தயாரானான், அங்கு வந்த ஆருவிற்கு அப்போது தான் ஞாபகம் வந்தது அவன் செல்லவிருக்கும் கம்பெனி ஆத்ரேயனுடையது என்று. ஆரு எதுவும் கூறவும் முடியாமல், அறைக்குள் செல்ல

சித்து “ஜி.எம் ஆல் தி பெஸ்ட் கூட சொல்லமாட்டீங்களா” என்றான் நக்கல் குரலில்.  ஆரு கடுப்புடன் “நாசமா போனும்” என்றவன்

அதன் பிறகுதான் அங்கு நீலிமா நிற்பதை கண்டவள் “சாரி மா.. ஏதோ” என்று தயங்க

நீலிமா “ஐயோ ஆரு நானே அதான் சொல்லிட்டு இருக்கேன்.. பேக்டரி பாத்தா மட்டும் போதாதா.. வேலை கிடைக்க கூடாதுனு.. சோ நீ சொன்னது எனக்கு ஓகே தான்” என்று கூற ஆரு புரியாமல் விழித்தாள், அப்போது அங்கு வந்த மேகநாதன், “ஆமா டா, இவனுங்க ரெண்டு பேரும்தான் சும்மா புடிச்சிருக்கு போகணும்னு எங்களை ஒதுக்க வச்சானுங்க.. பட் எங்களுக்கு இஷ்டம் இல்ல” என்றிட

ஆரு “ஓ… ஓகே” என்று சிரித்தாள்.

சித்து “ப்பா.. என்ன ஒரு பொசிடிவ் வைப்.. ச்ச போங்க அப்படி.. வேலை கிடைக்கல” என்றிழுக்க

ஆரு “என்ன பண்ணுவ” என்றாள் திமிராக, சித்துவோ “என்ன பண்ணமுடியும் எதுவும் பண்ணமாட்டேன்.. அப்படியே சாக்லேட் பேக்டரி நிலா அவலாஞ்சினு போயிடுவேன்” என்று கூற,

கெளதம் தலையில் அடித்து கொண்டு “வா டா டேய்…”என்று அழைத்து சென்றான்.

AR குரூப் ஆப் காம்பனிஸ் உள்ளே சென்றவுடன் அவர்கள் கண்ணில் பட்டது என்னவோ கிஷோர் தான். எதர்ச்சியாக அவர்களை கண்ட கிஷோர் “ஐயோ இவனுங்க இங்க என்ன பண்றாங்க.. நான் வேற ட்ரெயின்ல அத்து கூட எப்பயும் போலல இருந்தேன்.. இங்க சார்னு கூப்பிடுறத பாத்தா ஏதாவது கேட்பானுங்களே” என்று நினைத்துக்கொண்டே நின்றிருக்க, அவன் அருகே சென்ற சித்து “ப்ரோ நீங்க என்ன இங்க” என்றான் ஆச்சிர்யமாக.

கிஷோர் “நான் இங்கதான் ப்ரோ முதல வர்க் பண்ணேன்” என்று இளித்து வைக்க,

கெளதம் “இப்போ இன்டெர்வியூக்கு எங்க போகணும்” என்றான்.

கிஷோர் “வாங்க” என்று அவர்களை அழைத்து சென்று ஒரு அறையின் வெளியில் மற்ற விண்ணப்பதாரர்களுடன் காத்திருக்கும் படி கூறினான்.

கிஷோர் ரேயனின் அறைக்குள் சென்ற பிறகு சித்துவின் பெயர் அழைக்க பட்டது. சித்து கதவை திறந்து உள்ளே செல்கையில் கதவின்புறம் நின்ற கெளதம் உள்ளே இருந்த ஆத்ரேயனை பார்த்து விட்டான். ரயிலில் கிஷோர் ரேயா என்று அழைத்தது,

ஆருவின் பார்வை, இந்த கம்பெனி வேண்டாம் என்ற அவளின் மறுப்பு என்று அனைத்தும் நொடிப்பொழுதில் அவன் மூலையில் வந்து சென்றது.

இங்கு இப்படி என்றால் உள்ளே சித்து கிஷோர் ரேயனை சார் என்று அழைத்தது ‘என்னடா இது’ என்று இருந்தது. சிந்துவின் ப்ரொபைல் நன்றாக இருக்க, ரேயன் உடனே வேலை கொடுத்துவிட்டான். வேலை அவன்  ப்ரொபைலுக்கா  இல்லை ஆருவுடன் இருந்தவன் என்றாலா என்று அவன் மட்டுமே அறிவான்.

வெளியே வந்த சித்து, “மச்சா என்ன டா அவன் உள்ள அவன சார்னு கூப்பிடுறான், கேட்டா வர்க்ல அப்படிதான் கூப்பிடுவேன் சொன்னான்.. பட் இட்ஸ் வியர்ட்” என்று கூற,

கெளதம் இன்னும் குழம்பினான். வெளியே வந்த கிஷோரும் ரேயனும்  அவர்களை தாண்டி சென்றனர்.

ரேயன் தன் பாக்கெட்டில் இருந்து போனை எடுக்க, அதிலிருந்து ஏதோ கீழே விழுந்தது, சரியாக கௌதமிற்கு இரண்டடி தூரத்தில் விழுந்ததை அவன் என்னவென்று எடுக்க, இருவரும் அவனை பேயறைந்தார் போல் பார்த்தனர். அதில் இருந்தது என்னவோ ரேயன் தோளில் ஆரு சாய்ந்தபடி இருந்த  புகைப்படம் தான். அதை கண்ட கௌதம் மற்றும் சித்து சிலையாகி நின்றனர்.

.

.

.

.

.

.

அந்த குளிரை கூட பொருட்படுத்தாமல்  புல் தரையில் மண்டியிட்டு தலையில் கை வைத்து அமர்ந்திருந்தான், ஆத்ரேயன்.

ரேயன் “என்னோட அவசரபுத்தியால எல்லாத்தையும் கெடுத்துட்டேன்.. எல்லாத்தையும் நானே சரி செய்றேன்.. ஐ வில் கம் டு யு சூன் தியா” என்றவனின் குரலில் தான் எத்தனை தீவிரம்.

“வேஷங்களில் பொய்யில்லை

உண்மைகளில் மெய் இல்லை

உன் எதிரில் நான் இல்லை

கண்ணே

வழி தாண்டி

என்னில் பாதி

கனவே….”

தொடரும்

Advertisement