Arumpani
26
ஆத்திசூடி – கொள்ளை விரும்பேல்
பொருள் – பிறர் பொருளை கவருவதற்கு ஆசைப்படாதே
ஒரு வாரம் எப்படியோ பறந்திருந்தது. இந்திரசேனா அபராஜிதனிடம் பேசுவதையே முற்றிலும் தவிர்த்திருந்தாள்.
அவளால் அன்றைய நிகழ்வை மட்டும் மறக்கவே இயலவில்லை. அவன் தள்ளாட்டத்துடன் வந்ததும் அதன் பின்னே நிகழ்ந்தவைகளும் நிழலாய் கண் முன்னே ஓடியது.
அபராஜிதன் வாயிலிலேயே தள்ளாடிக் கொண்டு நிற்க இந்திரசேனாவிற்கு வந்த ஆத்திரத்திற்கு...
23
ஆத்திசூடி – நூல் பல கல்
பொருள் – அறிவை வளர்க்கும் நூல்களைப் படி
“டேய் அண்ணா என்னடா சொல்லாம கொள்ளாம வந்து நின்னு சர்பிரைஸ் கொடுக்கறே எனக்கு” என்றாள் இந்திரசேனா முகிலனை கண்ட உற்சாகத்தில்.
“ஏன் உன் வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடியே சொல்லிட்டு தான் வரணுமா??”
“நீ வர வேண்டாம்ன்னு யாரு சொன்னது... ஒரு வேளை நான் இந்த...
35
ஆத்திசூடி – பீடு பெற நில்
பொருள் – பெருமையை அடையும் படியான நல்ல நிலையிலே இரு.
வாசலில் அழைப்பு மணி ஒலிக்க ‘இந்த நேரத்துல யாரா இருக்கும். அண்ணாவும் இந்துவும் அப்போவே கிளம்பி போயிட்டாங்களே. சாயங்காலம் தானே வருவாங்க’ என்ற யோசனை ஓட கதவை திறந்த அகல்யா எதிரில் நின்றிருந்தவனை கண்டதும் ஒன்றும் சொல்லாது கதவை...
24
ஆத்திசூடி – இணக்கம் அறிந்து இணங்கு
பொருள் – ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்பு அவர் நல்ல குணங்கள் உள்ளவரா எனத்தெரிந்த பிறகு அவருடன் நட்புக் கொள்.
“உன் சித்தப்பனுக்கு என்ன பைத்தியமா ஏன் நான் அந்த பணத்தை கட்ட மாட்டேனா. அவ்வளவு கூட என்னால செய்ய முடியாதாமா. நீ தான் அவருக்கு போன் பண்ணி சொன்னியா...
21
ஆத்திசூடி – நேர்பட ஒழுகு
பொருள் – ஒழுக்கந் தவறாமல் நேர் வழியில் நட
கரிகாலன் சிவகாசிக்கு சென்று ஒரு மாதம் ஓடிவிட்டது. வீட்டில் இருவர் மட்டுமே தான். ஆனால் இருவருக்குள்ளான பேச்சுவார்த்தை என்பது எப்போதும் பச்சைமிளகாயை கடிப்பது போன்று காரசாரமானதாகவே இருக்கும்.
அபராஜிதனை பொருத்த வரை அவனுக்கு தான் செய்வது சரியே என்ற எண்ணம் எப்போதும். அவன்...
11
ஆத்திசூடி – சுளிக்கச் சொல்லேல்
பொருள் – கேட்பவருக்கு கோபம் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர்
கரிகாலன் மகளின் வீட்டிற்கு வந்து பவானியிடம் இந்திரசேனாவை பெண் கேட்டதும் அவருக்கு அப்படியொரு சந்தோசம். அவரிடம் தன் தங்கை வீட்டினரிடம் பேசிவிட்டு அவர்கள் அபிப்பிராயம் பற்றி சொல்வதாக சொல்லியிருந்தார்.
அவருக்கு அளவில்லாத சந்தோசம் இருந்தாலும் உரிமைப்பட்டவர்களிடம் கேட்கத்தானே வேண்டும். அவர் வந்து...
29
ஆத்திசூடி – சையெனத் திரியேல்
பொருள் – பெரியோர்கள் நம்மை வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே
அபராஜிதன் காலையில் நேரமாகவே பள்ளிக் கிளம்பிச் சென்றிருந்தான். இரண்டு நாட்களாகவே அவன் இப்படித்தான் கிளம்பிவிடுவதால் இந்திரசேனாவும் பெரிதாய் எதுவும் கண்டுக்கொள்ளவில்லை.
பள்ளி ஆண்டு விழா வருவதாக ஒரு வாரம் முன்பே கூறியிருந்தான். ஆண்டு விழா அன்று இந்திரசேனா தன்னுடன் கட்டாயம் வர...
36
ஆத்திசூடி – மனந்தடு மாறேல்
பொருள் – எந்த சூழ்நிலையிலும் மனக்கலக்கம் அடையாதே.
“என்ன தம்பி எப்படியிருக்கீங்க??” என்றவாறே அபராஜிதனின் அருகே வந்து நின்றார் விநாயகம் நக்கலான சிரிப்புடன்.
“உங்க புண்ணியத்துல ரொம்ப நல்லாயிருக்கேன்” என்றான் அவன்.
“அப்புறம் என்ன விஷயமா இந்தப்பக்கம் உங்க பொண்டாட்டியை பார்க்க வந்தீங்களா??”
“என் பொண்டாட்டியை கோர்ட்டுக்கு வந்து பார்க்க என்ன இருக்கு. அவளை வீட்டில...
15
ஆத்திசூடி – கேள்வி முயல்
பொருள் – கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயற்சி செய்.
அபராஜிதன் சொன்னது தன் காதில் சரியாகத்தான் விழுந்ததா என்ற சந்தேகம் வேறு அவளுக்கு. கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்தவள் “என்ன சொன்னீங்க??” என்றாள் அதை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு.
“இனிமே நீ கோர்ட்டுக்கு போக வேண்டாம்” என்று ஒவ்வொரு வார்த்தையும்...
31
ஆத்திசூடி – நொய்ய உரையேல்
பொருள் – அற்பமான வார்த்தைகளை பேசாதே.
“இருங்க சார் நான் உள்ள போய் பேசிட்டு வந்திடறேன்” என்று வேகமாய் உள்ளே விரைந்தவன் சாவதானமாய் வெளியே வந்தான்.
அவனிடத்தில் ஒரு தயக்கம் தெரிந்தது. “சார் கொஞ்சம் வெளிய போக வேண்டிய வேலை இருக்குன்னு சொன்னார்” என்று விழுங்கி விழுங்கி அவன் சொல்ல மாணிக்கவாசகத்தின் முகம்...
38
ஆத்திசூடி – மேன்மக்கள் சொற்கேள்
பொருள் – நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட.
“யோவ் எதுக்குய்யா என்னய அடிச்சே?? ஒரு பெரிய மனுஷன் செய்யற வேலையா இது??” என்று அந்த ஆள் தாம்தூம் என்று குதிக்க “இப்போ நீ உண்மையை சொல்லலை நான் போலீசை இங்க வரவழைப்பேன் அவங்க கேட்கிற விதத்துல கேட்பாங்க”
“அப்போ நீ...
12
ஆத்திசூடி – நன்மை கடைப்பிடி
பொருள் – நல்வினை செய்வதை எவ்வளவு இடையூறு வந்தாலும் உறுதியாக தொடரவும்.
வீடே பரபரப்பாக இருந்தது, வீட்டில் உள்ள அத்தனை பேரும் அங்கு தானிருந்தனர். வீட்டின் செல்லச்சுட்டி அஸ்வினை கூட கிண்டர்கார்டன் அனுப்பவில்லை.
அகத்தியன் கிளினிக்கிற்கு விடுமுறை விட்டிருந்தார் காலை வேளை மட்டும். மாணிக்கவாசகமோ தான் அன்று செய்ய வேண்டிய வேலைகளைனைத்தும் கேசவனிடம்...
13
ஆத்திசூடி – பொருள்தனைப் போற்றிவாழ்
பொருள் – பொருள்களை வீண் செலவு செய்யாமல் பாதுக்காத்து வாழ்
எவ்வளவு பதட்டத்தோடு அறையில் இருந்து வந்தாளோ அதைவிட அதிகமாய் அவளுக்கு குதூகலமாய் இருந்தது. பதட்டமெல்லாம் தூரப் போயிருந்தது.
அவளின் மாற்றத்திற்கான காரணம் வேறு ஒன்றுமில்லை அவள் கண்ட காட்சி மட்டுமே. இந்திரசேனாவின் அண்ணி திவ்யா அவளை அழைத்துக்கொண்டு வெளியில் வர ஹாலில்...
4
ஆத்திசூடி – சொல் சோர்வு படேல்
பொருள் – பிறருடன் பேசும் போது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே
நீதிமன்ற வளாகம்
இந்திரசேனா கையில் சில கேஸ் பைல்களுடன் எதையோ யோசித்துக் கொண்டே நடந்து வர “ஹலோ ஒரு நிமிஷம்” என்று அவளுக்கு முன் இடையிட்டு தடுத்த கைக்கு சொந்தக்காரனை மெல்ல நிமிர்ந்து பார்த்தாள்.
அபராஜிதன் நின்றிருந்தான் அவள் முன்பு. ‘இவனா!!...
30
ஆத்திசூடி – நாடு ஒப்பனை செய்
பொருள் – நாட்டில் (சமுதாயத்தில்) உள்ள மக்கள் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை செய்.
“வாப்பா மாணிக்கம் என்ன இந்த பக்கம் உன் காத்து வீசுது”
“இன்னைக்கு இங்க ஒரு ஹியரிங் இருக்குப்பா சக்தி. ஆமா உனக்கு எப்படி போய்கிட்டு இருக்கு”
“எங்கப்பா நமக்கெல்லாம் ஒரே சில்லறை கேசா தான் வருது. பெரிய பெரிய...
6
ஆத்திசூடி – தூக்கி வினை செய்
பொருள் – உபாயம் அறிந்த பின் காரியத்தை தொடங்கு.
இரவு வீட்டிற்கு வந்த அகத்தியன் கண்டது முகத்தை தூக்கி வைத்திருக்கும் மகளைத்தான். எப்போதும் கலகலவென்று இருக்கும் மகளின் முகம் வாடியிருப்பது பொறுக்கவில்லை அவருக்கு.
“என்னாச்சு உன் பொண்ணுக்கு??” என்றார் தன் மனைவியினிடத்தில் மெல்ல.
“தெரியலை வந்ததுல இருந்து இப்படித்தான் இருக்கா??”
“கேட்கலை நீ??”
“கேட்டேன் உங்க...
7
ஆத்திசூடி – நிலையிற் பிரியேல்
பொருள் – உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே.
இந்திரசேனாவிற்கு புரிந்தது மாணிக்கவாசகத்தின் கூற்று என்னவென்று. ஆனால் அதை ஏற்றுக்கொள்ள தான் அவளுக்கு மனதில்லை. அதற்கு காரணம் அபராஜிதன் தான்.
இதே விஷயம் தன்னால் நடந்திருந்து அதை பிறகு மாணிக்கவாசகம் அவளிடத்தில் சொல்லியிருந்தால் கூட அவளுக்கு எதுவும் தோன்றியிருக்காது போல....
18
ஆத்திசூடி – துன்பத்திற்கு இடங்கோடேல்
பொருள் – முயற்சி செய்யும் பொழுது வரும் துன்பத்திற்காக அஞ்சி அதனை விட்டு விடாதே.
இந்திரசேனாவின் வீட்டிற்கு அவர்கள் வந்து சேர பதினோரு மணியாகி இருந்தது. அவர்கள் வண்டியின் சத்தம் கேட்கவும் நளினா வேகமாய் ஓடிவந்தாள்.
“என்ன அண்ணி எதுக்கு வேகமா ஓடி வர்றீங்க??”
“வாசல்லவே நில்லுங்க அதைச் சொல்லத் தான் வந்தேன்”
“ஏன்??”
“ஆரத்தி எடுத்து...
25
ஆத்திசூடி – மண் பறித்து உண்ணேல்
பொருள் – பிறர் நிலத்தை ஏமாற்றி அதன் மூலம் வாழாதே
நீதிபதி அசோக்கின் வீட்டில் இருந்து வந்ததில் இருந்தே அபராஜிதன் அவளிடத்தில் ஒரு வார்த்தை கூட பேசியிருக்கவில்லை. வரும் வழியில் கூட இறுக்கமாகவே வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தான்.
அவனைப் பார்க்கவே அவளுக்கு அச்சமாக இருந்தது. தைரியமான பெண் தான் ஆனாலும்...
22
ஆத்திசூடி – ஊக்கமது கைவிடேல்
பொருள் – முயற்சியை எப்போதும் கைவிடாதே
நீதிமன்றத்தில் முக்கியமான வழக்கொன்று நடைப்பெற்றுக் கொண்டிருக்க கேசவன், மாணிக்கவாசகம் மற்றும் இந்திரசேனா மூவரும் அங்கு தானிருந்தனர்.
தீவிரமான விவாதம் அங்கு நடந்துக் கொண்டிருந்தது. மாணிக்கவாசகத்தின் மீது யாரோ சாய்வது போலிருக்க அவருக்கு புரிந்து போனது அது இந்திரசேனா என்று. யாரும் அறியாது அவள் தோளை தட்டினார்...