Wednesday, May 8, 2024

    AM 43 3

    AM 43 2

    AM 43 1

    AM 42

    Anbulla Maanvizhiyae

    AM 14 1

            14      ப்ரியாவின் திருமணம் நடந்து மித்ரனின் திருமணம் நின்று இன்றோடு பதினைந்து நாட்கள் கடந்திருந்தன.      திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் எல்லாம் ஓரிரு நாட்களில் கிளம்பி இருக்க, தங்கமலரும் இப்போது ஓரளவு உடல்நிலை தேறி இருந்தார். ஆனால் மனநிலை மட்டும் கொஞ்சமும் மாறாமல் அப்படியேதான் இருந்தது அவருக்கும், மித்ரனுக்கும். ராஜசேகரும், கிருஷ்ணனும் கூட ஓரளவு...

    AM 13

                                                                        13       ப்ரியா அவர்கள் கொடுத்த சீரை வேண்டாம் என்று மறுத்ததோடு அல்லாமல் கண்களில் கண்ணீர் வழிய விசும்பலோடு தங்கமலரையும், தம்பி மித்ரனையும் பார்த்தவாரே அங்கிருந்து சென்றது தங்கமலரின் மனதை வெகுவாய் நிலைகுலையச் செய்தது.      ‘தப்பு பண்றேனோ?! நான் தப்பு பண்றேனோ?! அவளை இப்படி ஒரே நொடியில நிராதரவா விட்டுடேனோ?!’ என்று மனம் அடித்துக்...

    AM 12

                                                                          12      தான் பெற்ற பிள்ளைகளை விட அதிகமாய் பாசத்தைக் கொட்டி வளர்த்தவள், இதோ தாங்கள் பார்த்து வைத்து ஏற்பாடு செய்திருந்த திருமணம் நடைபெற இன்னும் நான்கே நாட்கள் இருக்கையில் மாலையும் கழுத்துமாய் வேறொருவனோடு வாசலில் வந்து நிற்கையில் தங்கமலருக்கு உடல் வெலவெலத்துப் போய் தலை சுற்றியது என்று சொன்னால் மிகையாகாது.      டைனிங் ஹாலில்...

    AM 11 2

      “நிச்சயமா மேம்!” என்று அவன் ஆமோதிக்க,      “இப்போ நான் என்னதான் பண்றது?!” என்றாள் குழப்பமாய்.      “இதுக்கு ஒரே வழி நீங்களும், நானும் கல்யாணம் பண்ணிட்டு அவங்க முன்னாடி போய் நிக்கிறதுதான்” என்று அவன் சொல்ல அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது.      “என்ன?! கல்யாணமா?! அதுவும் வீட்டுக்குத் தெரியாமயா?!” என்று அவள் திகிலாய் கேட்க,      “இது...

    AM 10

                                                                      10      “அப்பா...! கொஞ்சமாச்சும் தண்ணி குடிங்க. பாருங்க எப்படி மூச்சு வாங்குதுன்னு!” என்றவள், தானே தந்தைக்கு நீர் புகட்டிவிட, அவள் கைகளில் கண்ணீர் துளி சிதறியது.      “அப்பா! என்னப்பா இது?! அவர் பேசினதுக்காகவெல்லாம் நீங்க கண்கலங்கிகிட்டு!” என்று அவள் வருந்த,      “அவர் பேசின விதம் வேணா தப்பா இருக்கலாம்மா. ஆனா அவர் கேட்ட...

    AM 9 2

         நாட்கள் வெகு வேகமாய் நகர்ந்தது. மைத்ரேயியின் தம்பி ஜீவாவிற்கும் அவளது மாமன் மகளான மங்கைக்கும் தான் நினைத்தது போல் ஒரே மாதத்தில் நிச்சயம் அல்ல, திருமணமே நடத்தி முடித்திருந்தார் சாந்தி. ஆனால் திருமணமான சில நாட்களிலேயே தெரிந்து விட்டது! சாந்தி நினைத்தது போல் மருமகள் தங்கமாய் இல்லை என்று. மாமன் மகள்தானே படுக்கையில்...

    AM 9 1

                                                                         9      “நேற்று இல்லாத மாற்றம் என்னது?! காற்று என் காதில் ஏதோ சொன்னது...” என்ற பாடல் வரிகள் அலாரமாய் ஒலிக்க, அதில் உறக்கம் கலைந்தவளுக்கு அந்தக் காலைப்பொழுது  பல வருடங்களுக்குப் பின் புதிதாய் ஒரு நம்பிக்கையான விடியலாய் விடிந்தது.      இத்தனை நாள் தன் வாழ்க்கை இப்படியே முடிந்துவிடும் என்று நினைத்திருந்தவளுக்கு அவனது...

    AM 8

                                                              8           ‘ம்ஹும்! இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை! இனி இவன் போன் பண்ணா கூட எடுக்கக் கூடாது!’ என்று முடிவெடுத்தவள், வீட்டில் அனைவரும் வந்துவிட்டதன் குரலொலி கேட்க, கையில் இருந்த கைப்பேசியைச் சட்டெனக் கீழே வைத்தாள்.      “அம்மா ப்ரியா.. என்ன யோசிச்சிட்டு இருக்க? வா. எழுந்து வெளில வரியா? வாங்கிட்டு வந்த நகை...

    AM 7

                                 7      “யாரு போன்ல?!” என்றபடியே அறைக்குள் நுழைந்தவன் கையில் தங்கமலர் சமைத்திருந்த சம்பாகோதுமை ரவை உப்புமாவையும் தேங்காய்ச் சட்டினியையும் சுடச்சுடச் தட்டில் வைத்து எடுத்து வருவதைப் பார்த்து,      “வாவ் சம்பா ரவை உப்புமாவா?! என்ன வாசம்!” என்றவள்,       “மையுதான்டா! நேத்து நைட் உன்னை அனுப்ப வேண்டாம்னு மெசேஜ் பண்ணி இருப்பா போல....

    Anbulla Maanvizhiyae 6

                                                                              6      “இப்போ செய்த பயிற்சியெல்லாம் சாயந்திரம் ஒருமுறை செய்யனும். அதோடு, அதிகாலையில எழுந்தும் செய்யனும்” என்று அவன் கட்டளை இட,      “ஹென்!” என முகம் சுருக்கி, கண்கள் விரித்து விழித்தாள் மைத்ரேயி.      அவள் விழித்த விழியில் அவனுக்கு சற்றே சிரிப்பு எட்டிப் பார்க்க, அதைக் கட்டுப்படுத்தி,      “ஒழுங்கா எக்செர்சைஸ் பண்ணனும்!...

    Anbulla Maanvizhiyae 5 2

    பார்மாலிட்டியாய் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த நகுலனின் அம்மா,      “சரி நாங்க கிளம்பறோம் சம்மந்தி. உங்க பொண்ண இனியாச்சும் கவனமா இருக்க சொல்லுங்க” என்றுவிட்டு வெளியேற,      “டேக் கேர் ப்ரியா! நல்லா ரெஸ்ட் எடு!” என்றுவிட்டு பெரியவர்களிடமும் சொல்லிக்கொண்டு நகுலனும் கிளம்பிவிட்டான்.      நாள் முழுக்க விவரம் அறிந்து உறவினர் ஒவ்வொருவராய் ப்ரியாவை வந்துப்...

    Anbulla Maanvizhiyae 5 1

                                                                     5      ப்ரியாவின் பதிலில் தங்கமலர் மனம் அதிர அவளைப் பார்க்க, “வேற என் தங்கம்மாவுக்கு ஈடா இந்த உலகத்துல யாருமே எனக்கு இருக்க முடியாது!” என்று ப்ரியா அவரைக் கட்டிக் கொண்டு கண்ணீர் சிந்த அவளின் அன்பு அவரையும் ஆனந்தக் கண்ணீரைச் சிந்த வைத்தது.       “ம்மா! என்ன இது நீங்க அக்காவுக்கு ஆறுதல்...

    Anbulla Maanvizhiyae 4

                                                                     4      நிச்சய விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்க, அங்கு மைத்திரேயி,      “உன் உதடுகள் சிந்தும் புன்னகையில்,      வானிலவும் தோற்குமடி ப்ரிய நிலவே!      உன் அன்பின் உள்ளம்      அகண்ட ஆகாயத்தையும் விஞ்சும் அழகடி!      நின் நேசம் பேசும் மொழிகள்      மழலையின் தித்திக்கும் தேன்தமிழடி!      நின் எல்லா செயலிலும் உள்ளங்களை கொள்ளை கொள்ளும்     ...

    Anbulla Maanvizhiyae 3

                                     3      “இன்னிக்கு மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்குங்க! இத்தனை நாள் ப்ரியாக்கு முடியாம மித்ரனுக்கு முடிக்குறதுல விருப்பமே இல்லாமதான் பொண்ணு தேடிட்டு இருந்தேன். இன்னிக்கு அந்த மனக்குறை நீங்கிடுச்சு! அதுவும் இன்னிக்கே நல்ல வரன் ஒன்னு அமைஞ்சு, அது பிடிச்சுப் போய் விசாரிக்கவும் சொல்லிட்டோம். அவங்க குடும்பமும் நல்ல மாதிரி இருந்துட்டா பேசி...

    Anbulla Maanvizhiyae 2

                                                                      2      “ஹேப்பி அனிவேர்சரி...!!” என்று பிள்ளைகள் அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரத்தில் கத்த, தங்கமலர், ராஜசேகர் இருவரும் வெட்டி முடித்த கேக்கை எடுத்து ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொள்ள,      “வாரேவா!” என்றபடி விசில் பறந்தது அவர்கள் வீட்டுச் சின்ன வாண்டு கீர்த்தியிடமிருந்து.      அவள் அடித்த விசிலில் குடும்பம் மொத்தமும் அவளை அதிர்ச்சியாய் பார்க்க,      “அடி!...

    Anbulla Maanvizhiyae 1 2

    “என்ன சோஷியல் சர்வீஸ் எல்லாம் முடிஞ்சுதா மேடம்கு!” என்றான் தன் அறைக்குள் நுழைந்த  அக்காவிடம்.      “ஓ யெஸ்” என்றவள்,      “என் பேஷண்ட்ஸ் லிஸ்ட் எங்க?” என்று தேட,      “எல்லாம் அட்டென்ட் பண்ணியாச்சு” என்றவனைப் பார்த்து,      “யாரோ ஒரு பேஷன்ட் கூட அட்டென்ட் பண்ண மாட்டேன்னு சொன்னாரு” என்றாள் சிரித்தபடி.      “இப்போவும் நான் அட்டென்ட்...

    Anbulla Maanvizhiyae 1 1

                                    1      “அன்புள்ள மான்விழியே..,      ஆசையில் ஓர் கடிதம்..,      நான் எழுதுவதென்னவென்றால்..,      உயிர்க்காதலில் ஓர் கவிதை.        அன்புள்ள மன்னவனே…,      ஆசையில் ஓர் கடிதம்..,      அதைக் கைகளில் எழுதவில்லை,      இருகண்களில் எழுதிவந்தேன்…,” பாடல் முடியவும் அவனது மருத்துவமனை வந்து சேரவும் சரியாக இருந்தது.      செவிகளில் தேனாய்...
    error: Content is protected !!