Advertisement

                                                                          6
     “இப்போ செய்த பயிற்சியெல்லாம் சாயந்திரம் ஒருமுறை செய்யனும். அதோடு, அதிகாலையில எழுந்தும் செய்யனும்” என்று அவன் கட்டளை இட,
     “ஹென்!” என முகம் சுருக்கி, கண்கள் விரித்து விழித்தாள் மைத்ரேயி.
     அவள் விழித்த விழியில் அவனுக்கு சற்றே சிரிப்பு எட்டிப் பார்க்க, அதைக் கட்டுப்படுத்தி,
     “ஒழுங்கா எக்செர்சைஸ் பண்ணனும்! சரியா!” என,
     “ம்!” என்று தலையசைத்தாள் மனதில் அவனை வசைபாடிக் கொண்டே.
     ‘ரியாக்ஷனைப் பாரு இவளுக்கு!’ என்று எண்ணியபடியே வெளியேறியவனை,
     “ஹெலோ டாக்டரே!” என்று விளித்து நிறுத்தியவள்,
     “ப்ரியாக்கா எப்போ வருவாங்க?!” என்றாள்.
     “ம்! தெரியலை!” என்றவன், வரும் போது சலித்துக் கொண்டே வந்ததை மறந்து,
     “அவங்க குணமானாலும் இனி நான்தான் வருவேன்” என்று அலுங்காமல் குண்டைத் தூக்கிப் போட்டுவிட்டுப் போக, அவள்,
      ஐயோ என்று தலைமீது கைவைத்துக் கொண்டாள்.
     அவன் ஒரு பேச்சிற்காய் அந்நேரத்திற்கு அவளை வெறுப்பேற்ற மட்டுமே, அப்படிச் சொன்னான். ஆனால் காலமெல்லாம் அவளை யாரிடமும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்காது வாதாடப் போகும் நிலையும் வரும் என்று அவன் அறிந்திருக்கவில்லை!
     ‘என்ன?!’ என்று அவள் தன் விழிகளை விரித்து திகைக்க, லேசாய் திரும்பிப் பார்த்தவன், மென்மையாய் சிரித்தவாறே அங்கிருந்து நகர்ந்தான்.
                               ******
     மாலை ஊரிலிருந்து வீடு திரும்பிய சாந்தி, “என்னடி! அதிசயமா இந்நேரத்துக்கே இழுத்து போர்த்திட்டு படுத்துக் கிடக்க?! ராத்திரி ஒரு மணிக்கு மேலதானே உனக்கு உறக்கமே வரும்!” என்று மைத்ரேயியின் அருகே வந்து தொட்டுப் பார்க்க, உடம்பு நெருப்பாய் கொதித்தது.
      “என்னடி?! இப்படிக் காய்ச்சல் அடிக்குது?! காலையில ஊருக்குக் கிளம்பும்போது நல்லாதானே இருந்த?!” என,
     “ம்மா நான் சாயந்திரம் வரும் போதே அக்கா குளிரு தாங்காம போர்த்திட்டு தான் படுத்துக் கிடந்தா” என்றாள் காயத்ரி.
     “என்னடி ஆச்சு திடீர்னு? நான் வீட்ல இல்லைன்னதும் அந்தக் குட்டி வானரங்களோடு சேர்ந்து ஐஸ்கியிசு ஏதாச்சும் வாங்கி சாப்டியா?!” என்று சாந்தி கத்த,
     “ஆமாம்! நீ அப்படியே நூறு ஐம்பதுன்னு கொடுத்துட்டு போன பாரு! நான் ஐசு வாங்கி சாப்பிட!” என்றவள்,
     “எல்லாம் அந்தப் பாழாப் போன டாக்டரால வந்தது! உடம்புல ஒரு இடம் இல்லாம வலிக்குது!” என்று அவள் புலம்ப,
     “என்ன?!” என்று காயத்ரி சாந்தி இருவருமே வாய்பிளக்க,
     “அடச்சே! புத்தி போகுது பாரு! ப்ரியா அக்கா அடிபட்டு ஹாஸ்பிட்டல்ல இருக்காங்களாம்! அதனால அவங்களுக்கு பதில் அவங்க தம்பியை எனக்கு பயிற்சி எடுக்க அனுப்பி வச்சிருந்தாங்க! அந்த ஆளு எனக்கு குடுத்த பயிற்சியில எனக்கு ஜீரமே வந்துடுச்சு! மனுஷனா அவன்! டாக்டர் மாதிரியா நடந்துக்குறான் சரியான காட்டுமிராண்டி!” என்றாள் கடுப்புடன்.
     “அது சரி! உனக்கு போனாப் போகுதுன்னு புண்ணியத்துக்கு காசு வாங்காம பயிற்சி கொடுக்க வந்தா, நீ அவுங்களையே திட்டுவியோ!”  என்ற சாந்தி,
     “சரி சரி. அரிசி கஞ்சி காய்ச்சு கொடுக்கறேன். குடிச்சிட்டு மாத்திரையைப் போட்டு தூங்கு! காலையில எழுந்திருக்கையில சரியாப் போயிடும்!” என,
     ‘ஐயோ! அதுக்கு இந்த ஜீரமே தேவலை! கஞ்சிங்கிற பேர்ல அம்மா கோந்தயில்ல கொண்டாரும்!’ என்று எண்ணியபடி பாவமாய் காயத்திரியைப் பார்த்தாள் தமக்கை.
     மையுவின் எண்ணம் புரிந்து, “ம்மா! நானே அக்காக்கு கஞ்சி வச்சுக் கொடுக்கறேன்!” என்ற காயத்ரி சொன்னதோடு நில்லாமல், தமக்கைக்கு கஞ்சி வைத்து புகட்டியும்விட,
     “நாளையில இருந்து எக்செர்சைஸ் பண்ண யாரும் வர வேண்டாம்னு சொல்லிட்டா. நானே தனியா செய்துக்கறேன்” என்று தங்கையை தாஜா செய்ய,
     “ஜென்சிம்மாக்கு போன் போடவா?!” என்றாள் ஒரே வரியில் அக்காவை அடக்கும் வழி தெரிந்தவளாய்.
     அதன்பின் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு கஞ்சியைக் குடித்து முடித்தவள், மாத்திரயை விழுங்கிவிட்டு அசதியில் படுத்ததும் உறங்கிபோனாள்.
     காலை எழும்போது ஜீரம் முழுதும் விட்டுப் போயிருந்தாலும் உடல்வலி அப்படியே தான் இருந்தது.
     அடித்துப் போட்டது போல் உடல் பயங்கரமாய் வலிக்க, மெல்ல திரும்பி கடிகாரத்தைப் பார்த்தவளுக்கு திக்கென்றது.
     ‘அய்யய்யோ, மணி எட்டாகப் போகுதே! அந்த டாக்டரை வரவேண்டாம்னு சொல்லனும்னு ப்ரியா அக்காக்கு மெசேஜ் போட்டிருந்தேனே, பார்த்தாங்களோ இல்லையோன்னு தெரியலையே!’ என்று பதறி மொபலை எடுத்து அவள் வாட்ஸ் அப்பைப் பார்க்க, ப்ரியா பார்க்காதது தெரிந்தது.
     ‘ஐயோ! ஸீன்னு காமிக்கலையே! போச்சு இன்னிக்கும் அந்த டாக்டர் வருவாரோ?! அடக்கடவுளே! நான் இன்னும் பல்லு கூட வெளக்கலயே! இந்த அம்மா வேற எங்க போச்சுன்னு தெரியலை!’
     “ஏ! அம்ம்மாஎன்ன பெத்த தெய்வமே! எங்க காணாம போயிட்ட?!” என்று அவள் கத்த, அவர்கள் வாயிலில் வந்து நின்றது அவனே.
     ‘போச்சு! அநியாயத்துக்கு சின்சியரா இருப்பான் போலவே!’ என்று எண்ணியபடி பேந்தப் பேந்த விழித்தவள்,
     “வ வந்து, நான் இன்னும் ப பல்லு, இல்லை, இல்லை! நீங்க உங்களுக்கு வேற வேலை இல்லையா?! இல்லை தப்பா எடுத்துக்காதீங்க! உங்க ஹாஸ்பிடலுக்கு போக வேண்டாமா, இ இல்லை வேற பேஷண்ட்ஸ் பார்க்க வேணாமா?! எனக்கு, நான், எனக்கு நேத்துல இருந்து ரொம்பபப ஜீரம்! பாருங்க முகமெல்லாம் எப்படி வேர்த்திருக்கு!” என்று தப்பு செய்து மாட்டிக் கொண்ட மாணவர்கள் தத்தக்கா பித்தக்கா என்று உளறுவது போல் அவள் உளறிக் கொட்ட, அனைத்தையும் கை கட்டியபடி வாத்தியார் தோரணையில் நின்றபடி அவன் பார்த்திருந்தான்.
     அதுவரை அவன் அவள் முகத்தை கூர்ந்து கவனித்ததில்லைதான்! ஆனால் பாருங்க முகமெல்லாம் எப்படி வேர்த்துக் கொட்டி இருக்கு என்று சொன்னதும், தன்னிச்சையாய் அவன் கண்கள் அவள் முகத்தை வட்டமிட்டன.
     அப்போதுதான் தூங்கி எழுந்திருப்பாள் போல். உறக்கத்தின் சாயல் தொலையாது மையிட்டு கலைந்திருந்த அவளின் மான்விழிகள் மருட்சியுடன் அவனைப் பார்த்திருக்க, அவளின் கலைந்த தலைமுடி மின்விசிறியின் உபயத்தில் அங்கும் இங்கும் அலைபாய்ந்தது மருளும் அவள் மான்விழிக்குப் போட்டியாய். கன்னம் ரெண்டும் பன் போல் புசுபுசுவென இருக்க, பன்னைக் கொஞ்சமாய் அலங்கரித்து பர்கராய் மாற்றி இருந்தது போல் பூத்திருந்தன அவளின் வியர்வைத் துளிகள். அதென்ன! அவளது கூர்நாசியின் மீது?!  ஓ! மூக்குத்தி நட்சத்திரமோ?! நாசியின் கீழே சின்னதாய் சொப்பு உதடுகள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டு இருக்க, அதன்மேலே இருந்த சிறு மச்சம் அவளின் கருநிறத்துக்கு போட்டியாய் நானும் இங்கே குட்டி கருப்பு நிலவாய் ஒட்டிக் கொண்டிருக்கேன் பார் என்று எட்டிச் சிரித்தது.
     “எ என்ன?! நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன். நீ நீங்க பாட்டுக்கு கைகட்டிப் பார்த்துட்டு இருக்கீங்க?!” என்று அவள் தந்தியடிக்க,
     “நீதானே பார்க்க சொன்ன?!” என்றான் அவன் இரு அர்த்தத்தோடு.
     ‘தோடா! பேச்செல்லாம் தினுசாதான் இருக்கு!’ என்று எண்ணியவள், அவன் பார்வையை ஆராய, அவன் பார்வை அவள் முகத்தை ஆராய்ந்து கொண்டிருந்ததை உணர்ந்து,
     “நான் நான் எக்செர்சைஸ் பண்றேன். ஆனா அம்மா வரட்டும்!” என்றவள்,
      “அம்மா எங்கம்மா போன?!” என்று பல்லை கடித்துக் கொண்டு கத்த,
     “ஏய்! முட்டக்கன்னி! எதுக்குடி அப்படி கத்துறவ?! மேல துணிதான துவச்சிக்கிட்டு இருக்கேன்!” என்று கத்தியபடி சாந்தி இறங்கி வர, புதியதாய் நின்றிருந்தவனைப் பார்த்து சட்டென வாயை மூடிக் கொண்டார் சாந்தி.
      “ஒ! டாக்டர் தம்பி வந்துடுச்சா?! இவளுக்கு நேத்தெல்லாம் ஜீரம் தம்பி. அதான் தூங்கட்டும்னு எழுப்பாம துணிதுவைக்க போயிட்டேன். இதோ இப்போ பல்லு தேய்ச்சிவிட்டு முகம் கழுவுவிட்டுடறேன். ஒரு அஞ்சு நிமிஷம் வெளியே உட்காருறீங்களா?!” என்று சாந்தி சொல்ல, இவளுக்கு கூச்சமாய் போனது.
     “எழுப்பி விடாததும் இல்லாம என் மானத்தை வாங்கிட்டியா? சந்தோஷமா?!” என்று முனக, அவளை ஒருமாதிரியாய் பார்த்தவாறே அவன் வெளியேறினான்.
     “எம்மா! உனக்குக் கொஞ்சமாச்சும் இங்கிதம் இருக்கா?! அவருகிட்ட போயி பல்லு வெளக்கல! மூஞ்சி கழுவுலன்னுகிட்டு!” என்று மெல்ல முணுமுணுத்தபடி திட்ட,
     “ஏன் நான் சொல்லாம அவர் கிட்ட வந்து அப்படியே எக்செர்சைஸ் பண்ண வந்திருந்தா அவருக்கே தெரிஞ்சிருக்கும் உன் போவுசு! உன் ஊத்த வாயுக்கு அவரே ஓடிப் போயிருப்பாரு!” என்று சாந்தி சத்தமாய் சொல்ல,
     தாயின் வாயைப் பொத்தியவள், “அய்யோ அய்யோ அய்யோ! என் மானத்தை வாங்க ஊருல எவனும் வேணாம் என்னை பெத்த நீயே போதும்!” என்று தலையில் அடித்துக் கொண்டு, அவன் போய்விட்டானா என்று எட்டிப் பார்த்து,
     “மொத கதவைச் சாத்து!” என,
     “ஆமா இவ பெரிய பேரழகி! எவானாச்சும் வந்து எட்டிப் பார்க்குறதுக்கு!” என்ற வார்த்தை அவள் மனதைச் சுருக்கென்று தைக்க, வெளியே அதைக் கேட்டிருந்தவனுக்கும் சுருக்கென்றது.
     ‘ச்சே என்ன பேச்சு இது!’ என்று அவன் கோபம் கொள்ள, இவளுக்கோ கண்ணில் நீர் துளிர்த்துவிட்டது. எப்போதும் அவள் கேட்கும் வார்த்தைதான். ஆனால் இன்று வெளியே ஓர் ஆண்மகன் நின்று கொண்டிருக்கும் போது இப்படிச் சொன்னது அவளை வெகுவாய் வருத்தியது,
     ‘எனக்கு உடல்நிலை தான் மா சரியில்லை. ஆனா மனநிலை நல்லா தான் இருக்கு! இதுக்கு பேசாம நான் மனநோயாளியா இருந்திருந்தா கூட எனக்கு நேர்ந்த கஷ்டங்கள் எனக்குத் தெரியாமயே போயிருக்கும்!’ என்று எண்ணியவள் கண்களில் கண்ணீர் வழிய,
     “இப்போ எதுக்குடி அழுவுற?!” இந்தா, பல்லை வெலக்கி வாயைக் கொப்புளி!” என்று சாந்தி மிரட்ட, சொன்னபடி செய்தவள்,
     “அம்மா! கொஞ்சம் உடம்பையும் தொடச்சி விட்டு நைட்டி மாத்திவிடுறியா?!” என்றாள் மெதுவாய் கெஞ்சலாக.
     “ஏன் முந்தா நேத்துதானா குளிச்ச பிறகென்ன?!” என்றவருக்கு அவளும் ஒரு பெண், அவளுக்கும் அச்சம் நாணம் இதெல்லாம் இருக்கும் என்பதை உணர மனமில்லை!
     நேற்று கடமைக்கென அக்காவிற்காய் பயிற்சி கொடுக்க வந்தவனுக்கு, இப்போது எப்படியாவது இந்தப் பெண்ணை சுயமாக அவளது வேலைகளை மட்டுமாவது செய்யும் அளவிற்குக் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற எண்ணம் எழ, பொறுமையாய் காத்திருந்தான்.
     சிறிது நேரத்தில், “உள்ள வாங்க டாக்டர் தம்பி” என்று சாந்தி அழைக்க, உள்ளே சென்றவன், அவள் தலைகவிழ்ந்து அமர்ந்திருப்பது கண்டு,
     “எக்செர்சைஸ் ஆரம்பிக்கலாமா?!” என்றான்.
     “ம்!” என்றவள் அம்மாவை அழைக்க எண்ணி வாய்திறக்க, அவர் அதற்குள் மாடிக்குத் துணிதுவைக்கச் சென்றிருக்க,
     “என் கையைப் பிடிச்சிட்டு இறங்குங்க!” என்றான் அவன்.
     “ம்!” என்று தலையசைத்து, அவன் சொன்னபடியே அவன் கைபற்றி எழுந்து அமர்ந்தவளுக்கு முன்பெல்லாம் பாதுகாப்பிற்காய் அப்பாவின் கைகளைப் பற்றி கொண்டு நடந்தது நினைவிற்கு வந்தது. அந்த எண்ணம் கொடுத்த தைரியத்தில்,
     “கொஞ்சம் மெதுவா சொல்லிக் கொடுங்க. ரெம்ப வலிக்குது கைகாலெல்லாம்” என்றாள் சன்னமான குரலில்.
     “ஒ! அதான் நேத்து ஜீரம் வந்துடுச்சோ! நேத்தே சொல்லி இருக்கலாமே!” என்றான் மெல்ல பயிற்சி கொடுத்தவாறே.
      “சொல்லி இருக்கலாம்தான். ஆனா நேத்து பயமா இருந்துச்சு!” என்று அவள் உள்ளதைச் சொல்ல,
      “பயமா?! எதுக்கு?!”
      “அது நீங்க இன்னிக்கு பேசுற மாதிரி நேத்து பேசி இருந்தா நேத்தே சொல்லி இருப்பேன்! நீங்கதான் உம்முன்னு இருந்தீங்களே!”
     “ஒ!” என்று அவன் சிரிக்க,
      “நீங்க பிலிம் ஹீரோ மாதிரி செம ஹென்ட்சம்மா இருக்கீங்க?!” என்றாள் அவனை ரசித்தவாரே.
     “ஓ! எந்த ஹீரோவை ரொம்ப பிடிக்கும்” என்றான் அவனும் சதாரணமாய். [எனக்குன்னு வரப்போற ஹீரோவைத்தான் பிடிக்கும்னு மையு சொல்வான்னு தப்பு கணக்கு போட்டுடாதீங்க மக்களே!}
     “இவங்களைதான் பிடிக்கும்னு இல்லை! அழகா இருக்க எல்லா பசங்களையும் ரசிப்பேன்! அதிலும் தாடி வச்ச கேடி பசங்களை பயங்கரமா சைட் அடிப்பேன்!” என்றாள் ரசனையாய்..
      அவள் ரசித்து வெட்கச் சிரிப்புடன் சொன்னதில் அவன் வாய்விட்டுச் சிரிக்க, இவளுக்கு மேலும் வெட்கமாகிப் போனது.
     “அப்போ என்னையும் சைட் அடிச்சீங்க?!” என அவன் சரியாய்ச் சொல்ல,
     “ஈ!” என அசடு வழிந்தவள்,
     “அடிச்சீங்க இல்ல அடிக்கிறேன்!” என்று திருத்த, அவன் முறைக்க,
     “என்ன முறைக்கிறீங்க?! சும்மா கும்முன்னு குலோப்ஜாமுன் மாதிரி பார்க்கவே தித்திப்பா லவ்லியா இருந்தா சைட் அடிக்காம இருக்க முடியுமா என்ன?! ஏன் அடிக்கக் கூடாதா?! சைட் அடிக்கிறது என்ன பசங்களுக்கு மட்டும்தான் உரிமைன்னு எழுதி வச்சிருக்கா?! என்று கொஞ்சமும் பயமின்றி வம்பிழுக்க,
     ‘அம்மாடியோ! என்ன வாயி இவளுக்கு! ஒரேநாள்ல எனக்கு குலோப்ஜாமூன்னு பேரெல்லாம் வச்சிட்டா! எதுக்கு இவகிட்ட வாயைக் கொடுத்துக்கிட்டு!’ என்று எண்ணியவன், சட்டென அமைதியாகிவிட,
     “என்னங்க அடிக்கக் கூடாதா?!” என்றாள் மறுபடியும்.
     “தாராளமா அடிக்கலாம்ங்க!” என்றவன்,
     “அதே சமயம் நான் சொல்லி கொடுக்குற பயிற்சியிலயும் கொஞ்சம் கவனம் இருக்கணும்!” என்று நினைவுபடுத்த,
      “ம்!” என்று சிரிப்புடன் அவன் சொல்லியபடி செய்தாள் நல்ல பிள்ளையாய்.
     “இன்னிக்கு காலையில பயிற்சி பண்ணலைதானே?” என்று அவன் கேட்க,
     “ம்! உடம்பு சரியில்லைல!” என்று அவள் பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல,
     “சரி இன்னிக்கு இருந்து ஒழுங்கா பண்ணனும். சரியா” என்றான்.
     “ம்!” என்று சமத்துப்பிள்ளை போல் அப்போதைக்கு தலையசைத்தவள், எப்போதும் போல் அவன் எதிரே செய்ததோடு சரி. முகநூல், வாட்ஸ்அப், இன்ஸ்டா என்று நாள் முழுதும் தனது அன்ட்ராயிட் மொபைல் மூலம் வளம் வந்து பொழுதைக் கழித்தாள் தன் மனதின் கவலைகளை எல்லாம் ஒவ்வொரு போஸ்டிலும் சின்னச் சின்ன ஜோக்குகளாய் சிதறவிட்டுக் கொண்டே…
     அன்று மாலையே ப்ரியா இவள் அனுப்பி இருந்த குறுஞ்செய்தியைப் பார்த்துவிட்டு அவளுக்கு அழைக்க,
     “ரொம்ப சீக்கிரம் கால் பண்ணிட்டீங்க ப்ரியாக்கா!” என்றாள் அழைப்பை ஏற்ற மையு.
     “எங்க மையு போன் கையில் இருந்தா நோண்டிட்டே இருக்கேன்னு அம்மா கொடுக்கவே மாட்றாங்க!” என்ற ப்ரியா,
    “எதுக்கு அப்படி மெசேஜ் அனுப்பி இருந்த?! ஆண்பிள்ளையா இருக்கிறதுனால எக்செர்சைஸ் பண்ண சங்கோஜமா இருக்கா மையு? இல்லை அவன் கோபமா நடந்துக்கறானா?!” என்றாள் கவலையாய்.
     “ச்சே ச்சே! நல்ல மனிதர் அக்கா கோபம் எல்லாம் ஏன் படப்போறார்! நேத்து வரைக்கும் கொஞ்சம் உம்முன்னு இருந்தார்! ஆனா இன்னிக்கு நாங்க அவரை என் வழிக்கு கொண்டு வந்துட்டோம்ல!” என்று இவள் கெத்து காட்ட,
     “என்ன?! அவனையா?!” என்று ப்ரியா ஆச்சர்யம் கொள்ள,
     “அட எதுக்கு இவ்ளோ ஷாக்! நான் என்ன உங்க தம்பியை லவ் பண்ற ரேஞ்சுக்கா கொண்டு வந்துட்டேன்! சும்மா நேத்து சிடுசிடுன்னு பேசினவரை இன்னிக்கு லைட்டா சிரிச்சு பேச வச்சேன்! அவ்வளவுதான்!” என்று மையு விளையாட்டாய் சொல்ல,
     “டி அவனுக்கு நிச்சயம் ஆகிடுச்சு! இப்படியெல்லாம் பேசக் கூடாது சொல்லிட்டேன்!” என்று பிரியா மிரட்ட,
     “டமால்!” மையுவின் ஹார்ட் இரண்டாய் பிளந்தது போல் ஒரு சத்தம்.
     “மையு! மையு! என்னடி! பதிலே காணோம்?!” என்று இவள் கத்த,
     “நானே பல வருஷம் கழிச்சு ஒரு நல்ல பிகரை கண்ணுல பார்த்திருக்கோமே! கொஞ்ச நாள் ஆசை தீர சைட் அடிச்சுக்கலாம்னு நினைச்சா, இப்படி குண்டைத் தூக்கிப் போட்டுட்டீங்களே ப்ரியாக்கா?!” என்றாள் மையு சோகமாய்.
     அவள் சொன்ன பிகர் மாடுலேஷனில் ப்ரியா வாய்விட்டுச் சிரித்துவிட, “டி இருந்தாலும் உனக்கு ரொம்ப கொழுப்புடி! என் தம்பி உனக்கு பிகரா!” என்று மிரட்டும் குரலில் கேட்க,
     “சரி குலோப்ஜாமுன்னு வச்சிக்கோங்க!” என,
     “இருந்தாலும் உனக்கு வாய் ரொம்படி! அவன் முன்னாடி இப்படி எல்லாம் பேசி வச்சுடாத! நான் எவ்ளோ கெஞ்சி கூத்தாடி அவனை பயிற்சி கொடுக்க அனுப்பி வைச்சேன் தெரியுமா?! உன் வாயை கொஞ்சம் அடக்கி வை அவன் கிட்ட! எங்ககிட்ட பேசுற மாதிரி பேசாத! ஒருநேரம் போல ஒருநேரம் இருக்க மாட்டான்!” என்று ப்ரியா முன்னெச்சரிக்கையாய் சொல்ல, நம் ஆளுக்கு எல்லாம் விளையாட்டு எதிலும் விளையாட்டுதானே அவள் விளையாட்டு அவனிடம் எடுபடுமா அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்…
 
    
 
 
      
 
 

Advertisement