விலகி இருந்திட கூடுமோ?!
அத்தியாயம் – 24
பிருந்தாவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. வீட்டுப் பெரியவர்கள் பேசி முடிவு செய்துவிட்டார்கள் என்றால், என்ன அர்த்தம்?! மனது அதிலே நின்று நின்று அவளுக்கு மூச்சடைத்து போனதுதான் மிச்சம். போதாத குறைக்கு தங்கமீனாள் ஒரு நாள் இவளிடம் பேசியது எல்லாம் நினைவில் வந்துவேறு தொலைத்து.
“எங்கப்பா அம்மாக்கு தெரியாதா எனக்கு யார் சூட்டாவங்கன்னு....
போஸ்ராஜனுக்கு தன் பிள்ளைகள் மீது அழகரசியின் இந்த கரிசனம் கண்டதும் சிறு வயதில் தன்னிடமும் இப்படித்தானே இருப்பார் என்கிற நினைப்பு வந்து “இதெல்லாம் எங்க இவங்க சாப்பிட்டு இருக்காங்க சித்தி..” என்று சொல்ல,
“சாப்பிட்டு பார்த்தாதானே இதோ அருமை தெரியும் போஸு..” என்றவர் பேரனைப் பார்க்க,
அவனோ பெரியவர் கொடுக்கிறாரே என்று பெயருக்கு ஒருவாய் எடுத்து உள்ளே...
அத்தியாயம் – 23
காசிராஜன் அவரின் தோட்டத்திற்கு சென்றிருக்க, சந்திராவோ மகளிடம் வெந்தய களி கொடுத்துவிட்டவர், மற்ற வீட்டு வேலைகளை செய்துகொண்டு இருக்க, கணேசன் அந்த காலை பொழுதில் எவ்வித முன்னறிவுப்பும் இன்றி வீட்டிற்கு வந்தது கொஞ்சம் திகைப்புத்தான்.
இருந்தாலும் “வாங்கண்ணே...” என்று வரவேற்று தண்ணீர் கொடுக்க,
“வர்றேன் ம்மா.. சொல்லாம திடீர்னு வந்துட்டேன். காசி இல்லையா?” என்று...
அத்தியாயம் – 22
புதிய வீட்டின் கட்டிடம் உயர உயர, இரு ஜோடிகளின் காதலும் வளர்ந்துகொண்டே தான் போனது. ஆம்! காதல் என்றே இரண்டு ஜோடிகளும் முடிவிற்கு வந்து கூட மாதம் ஒன்றை கடந்துபோனது.
ப்ரித்வியும் – மீனாளும், இருவரின் மனதில் இருக்கும் நேசத்தை, காதல் தான் என்று வெளிப்படையாய் கூறவில்லை என்றாலும், தன் இணைக்கு பார்வையாலும்,...
ராதாவும், அழகரசியும் ப்ரித்வியை கேட்டிருக்க “தூங்குறான் அவன்..” என்றவனைத் தான் விசித்திரமாய் இருவரும் பார்த்தார்கள்.
அறைக்குள் வந்தவனோ நண்பன் அப்போது தான் எழுந்தமர்ந்து, அதுவும் அலைபேசியைப் பார்த்து தானாய், தனியாய் சிரித்துக்கொண்டு இருப்பவனைப் பார்த்து “டேய் மச்சா..” என்று அழைத்தபடி நெருங்க, ப்ரித்வி வேகமாய் அலைபேசியை கவிழ்த்து வைத்துவிட்டான்.
“டேய் டேய் போதும்டா போதும்..” என்ற ரித்திக்...
அத்தியாயம் - 21
எத்தனை முறை கண்ணிமைகளை சிமிட்டி சிமிட்டி, ப்ரித்வி கேட்டனுப்பியிருக்கும் கேள்வியை படித்திருப்பாளோ தெரியவில்லை. எத்தனை முறை படபடக்கும் நெஞ்சத்தினை நீவி நீவி, நீர் அருந்தி பெருமூச்சினை வெளியிட்டாளோ, அதுவும் தெரியவில்லை. வியர்க்கிறதா, வியர்க்கவில்லையா என்று தெரியாமலே, கழுத்தையும் நெற்றியையும் எத்தனை முறை துடைத்துக்கொண்டாளோ தெரியவில்லை.
கிட்டத்தட்ட ஒருமணி நேரமாய் தங்கமீனாள் இதனைத்தான் செய்துகொண்டு...
அத்தியாயம் – 20
பிருந்தாவிற்கு அன்றைய தினத்தில் அப்படியொரு சந்தோஷ பூரிப்பு. பின்னே வினோதனோடு சேர்ந்தாற்போல ஐந்து நிமிடங்கள் பேசியிருக்கிறாளே. அதிலும் அவளிடம் தெரிந்த அதே ஆர்வமும், ஆசையும், அவளோடு பேசிடவேண்டும் என்கிற துடிப்பும் அவன் கண்களிலும் தெரிய, பிருந்தாவின் சந்தோஷ அளவை, அளவிட முடியுமா என்ன?!
இதற்கும் அத்தனை பெரிதாக எல்லாம் ஒன்றும் பேசிடவில்லை. எல்லாமே...
அத்தியாயம் - 19
கிடா விருந்து தடபுடலாய் தான் நடந்துகொண்டு இருந்தது. காசிராஜனோடு வேலை செய்யும் ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என்று அனைவருமே பரிமாறும் வேலையில் இறங்கியிருக்க, மீனாளும் அவர்களுடன் தான் இணைந்து நின்று இருந்தாள்.
“என்னதான் ஆள் விட்டு சமையல் பண்ணாலும், நம்ம கையாள சாப்பாடு போட்டாதானே நல்லாருக்கும்..” என்று அழகரசி ராதாவிடம்...
‘ச்சே.. இனி எப்படி அவங்க முகத்துல முழிக்கிறது.. நேருக்கு நேரா பார்த்தா கூட, எப்படி கேசுவலா பேச முடியும்.. ரொம்ப ஓவரா பண்ணிட்டோம்..’ என்று நினைத்து நினைத்தே அவளுக்கு தன் மீது அத்தனை கோபம்.
இப்படி என்னென்னவோ சொல்லி சொல்லி அவள் எப்படியெல்லாம் தன்னைத் தானே திட்டி தீர்க்கவேண்டுமோ அத்தனையும் திட்டிக்கொண்டாள். எல்லாம் முடிந்து இருந்தியாய்...
அத்தியாயம் – 18
தங்கமீனாளின் “மாமா..” என்ற அழைப்பினை தாங்கிக்கொண்டு வந்த குறுந்தகவலைத் தான் குறுகுறுவென பார்த்துக்கொண்டு இருந்தான் ப்ரித்வி.
இதழ் மடக்கி, லேசாய் மீசையை லீவிக்கொண்டு ஒரு மெல்லிய நகைப்பை வெளியிட்டவனுக்கு அவள் எப்படியொரு பாவனையில் இந்த ‘மாமா..’ வை அனுப்பி இருப்பாள் என்று கண் முன்னே காட்சியாய் ஓடியது.
அவளோடு கொஞ்சம் விளையாடிப் பார்க்கும் ஆசையும்...
“டேய் உன்னோட ப்ளான் என்ன?!” என்று இப்போது ரித்திக் பேச்சினை மாற்ற,
“என்ன ப்ளான்?!” என்றான் ப்ரித்வியும்.
“உன்னோட பியூச்சர் ப்ளான்?!”
“வீடு கட்டி முடியவும், அடுத்து பிருந்தா மேரேஜ்.. எல்லாம் முடிச்சிட்டு ஆன்சைட் கொஞ்ச நாள் போகணும்.. அதுக்கு அப்புறம் என்னன்னு யோசிக்கணும்..”
“ஓஹோ.. சோ அதுக்கு அப்புறம் தான் உன்னோட மேரேஜ் இல்லையா?!“ என,
“அதெல்லாம் நான்...
அத்தியாயம் – 17
“டேய் மச்சா... நான் சொல்றதை கேளு..” என்று தன் முன்னே விரல்நீட்டி, ஆர்வமாகவும், அதிதீவிரமாகவும் பேசிக்கொண்டு இருந்த ரித்திக்கை நெற்றிக் கண் திறக்காத குறையாய் தான் பார்த்துக்கொண்டு இருந்தான் ப்ரித்வி.
இருந்திருந்து இவனுக்கு ஏன் இப்படியெல்லாம் புத்தி யோசிக்கிறது என்று நினையாமலும் இருக்க முடியவில்லை ப்ரித்விக்கு. நல்லவேளை வீட்டிலேயே இதனை எல்லாம் சொல்லாமல்...
அத்தியாயம் – 16
“மச்சா யார்டா இது?” என்று ரித்திக்கின் உற்சாக குரல் வந்து ப்ரித்வியின் செவியில் விழவும் “என்னடா?” என்று கேட்டுத் திரும்பினான்.
“டேய்.. டேய் இந்த பக்கம் பாருடா.. யாரு அந்த பொண்ணு?” என்று ரித்விக் ஆர்வமாய் கேட்க,
“யார்ரா?!” என்று சற்று எரிச்சலுடனே கேட்டவன், ரித்திக்கின் பார்வை சென்ற பக்கம் செல்ல, தங்கமீனாள் அழகரசியுடன்...
அத்தியாயம் – 15
ப்ரித்வியை நேரில் கண்டு பேசும் வரைக்கும்தான் தங்கமீனாளுக்கு உள்ளுக்குள்ளே தடுமாற்றம் எல்லாம். இப்போது பேச்சு வளர்ந்து, நேரம் கடக்கவும் மனது கொஞ்சம் மட்டுப்பட்டது. உள்ளிருந்த உதறல்கள் எல்லாம் கொஞ்சம் அமிழ்ந்து போனது நிஜம். அதிலும் அவள் பேசியதை கேட்டு, அவன் சிரித்துவிடவும் ‘அப்பாடி...’ என்கிற ஆசுவாசம் அவளுள்.
அவன் கரத்தால் பூ வாங்கி,...
அத்தியாயம் – 14
கணேசன் ஐந்து வரைபடங்கள் கொண்டு வந்திருந்தார். அதில் இரண்டு தனி வீடு அமைப்பாய் இருந்தது. ப்ரித்வி சொன்ன பண அளவில் இருந்து கொஞ்சம் கூடுதல் செலவாகக் கூடும் என்றும் கணேசன் சொல்லிட, போஸ்ராஜன் பதில் எதுவும் சொல்லவில்லை.
மகன் எடுத்துச் செய்கிறான். அவனே முடிவு சொல்லட்டும் என்று ப்ரித்வியைத் தான் பார்த்தார்.
வேம்பரசனோ...
ஏற்கனவே நேரமாகிவிட்டது. இனி வீட்டு வேலைகள் ஆரம்பித்துவிட்டால் அடிக்கடி அவனுக்கு விடுமுறை எடுக்கும் சூழலும் கூட வரலாம் இல்லையா. பேசாமல் இரவு நேரத்திற்கு மாற்றிக்கொள்ளலாம என்றுகூட எண்ணம் போனது. அவன் இப்படியிருக்க, பேரனின் இந்த திடீர் மௌனம் கண்டு அழகரசி தான் ராதாவிடம் என்னவென்று வினவ, ராதாவும் போஸ்ராஜன் முன்னமே நடந்ததை எல்லாம் சொல்ல,போஸ்ராஜன்...
அத்தியாயம் - 13
ப்ரித்விக்கு உறக்கமே வரவில்லை. படுத்தான்.. எழுந்தான்.. நடந்தான்.. தலையை கோதினான்.. ஆழ மூச்செடுத்து விட்டான்.. ம்ம்ஹூம் என்ன செய்தும் அவனது மனதினில் உஷ்ணம் அடங்குவதாய் இல்லை.
அத்தனை கோபம். அதுவும் தன்மீதே அவனுக்கு. அவன் இப்படித்தான். பார்க்கத்தான் ஆள் சாதுபோல. அவனைப் பார்ப்பவர்கள் யாராகினும் எண்ணுவது இதைதான் ‘சாப்ட் நேச்சர்...’ என்று. பழகுவதற்கும்...
அத்தியாயம் – 12
நள்ளிரவு இரண்டு மணி...
இன்னும் எத்தனை மணித் துளிகள் நகர்ந்தாலும், என் கண்கள் உறக்கத்திற்கு செல்லாது எனும்விதமாய், கொட்ட கொட்ட கண் விழித்துக்கொண்டு இருந்தாள் தங்கமீனாள்.
என்ன முயன்றும் கூட அவளுக்கு உறக்கம் என்பது இல்லை. அலைபேசியை மீண்டும் எடுத்துப் பார்த்தாள். ஆம் மீண்டும் தான். அன்றைய தினம் வீடு வந்து சேர்வதற்கே...
“ஓ..!” என்றவள் அடுத்து பிருந்தாவோடு பேச்சினை ஆரம்பித்துவிட்டாள்.
“சூப்பாரா இருக்கும் பிருந்தா. அதுவும் திருக்கல்யாணம் அன்னிக்கு போகணும் செமையா இருக்கும். என்ன கூட்டம் தான் ஜாஸ்தி. அடுத்த வருஷம் அப்படி ப்ளான் பண்ணிப்போம்..” என்று பேச்சுக் கொடுக்க,
இதனை கேட்ட ராதாவோ “அடுத்த வருஷம், எல்லாம் அவங்கவங்க ஜோடியோட போகணும்னு ப்ளான் போடுங்க. வேண்டிக்கோங்க..” என்று சொல்ல,...
அத்தியாயம் – 11
காசிராஜனுக்கு அத்தனை சந்தோசம், கணேசனே மீனாளை தன் மகன் வினோதனுக்கு பெண் கேட்டது. தானே பேச்சினை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்திருந்தார் தானே. ஆனால் இந்த பெண்கள் எல்லாம் ஜாதகம் பார்க்கவென்று சென்று வந்ததில், தங்கமீனாளுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் கழித்தே திருமண பேச்சினை எடுக்கவேண்டும் என்று சொல்லியிருக்க, என்ன செய்வது...