Monday, July 20, 2026

    விலகி இருந்திட கூடுமோ?!

    அத்தியாயம் – 10 நாட்கள் வேகமாய் நகர்ந்துகொண்டு இருந்தது. அப்படித்தான் தங்கமீனாளுக்குத் தோன்றியது. ஆனா ப்ரித்விக்கும், பிருந்தாவிற்கும் நாட்கள் ஆமை வேகத்தை காட்டிலும் மிக மிக மெதுவாய் நகர்வது போலத்தான் இருந்தது. சென்னையில் இருந்த, அவர்களின் கார் மற்றும் அவனின் யமகாவை வரவழைத்து இருந்தான் ப்ரித்வி. “ரெண்டு காரையும் வர வச்சிருக்கலாம் தானே ப்ரித்வி..” என்று ராதா...
    அத்தியாயம் – 9 தங்கமீனாளின் வார்த்தைகளை யாரும் அத்தனை ஒன்றும் தவறாய் எடுத்துக்கொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அவளின் விருப்பத்தினைக் கேட்டு, இந்த பெண்ணுக்குள் இப்படியொரு எண்ணமா, இக்கால யுவதிக்கு இப்படியொரு ஆசையா என்றுதான் எண்ணினர்.  ப்ரித்வி கூட அவளை வியப்பாய் பார்த்து வைத்தான். ‘இங்கேதான் பிறந்து வளர்ந்திருக்கிறாள். இங்கேயே காலம் தள்ள வேண்டும் என்று எப்படி நினைக்க...
    அத்தியாயம் – 8 ‘நம்ம எல்லாம் ஒரே பேமிலி..’ என்று ப்ரித்வி சொன்னதில், தங்கமீனாளுக்கு அப்படியே மனம் குளிர்ந்து போனது என்றுதான் சொல்லவேண்டும். மனதில் ஒட்டிக்கொண்டு இருந்த சிறு சஞ்சலமும் கூட இப்பொழுது எங்கோ ஓடிப்போனது. முறையில் இருப்பவர்களோடு சாதாரணமாய் இரண்டு வார்த்தை பேசினாலே கூட, கிராம புறங்களில் இன்றும் இந்த கேலி கிண்டல்கள் எல்லாம் உண்டுதான்....
    அத்தியாயம் – 7 வேம்பரசன் சொன்ன சங்கதி கேட்டு, யாருக்கு மகிழ்ச்சியோ இல்லையோ ராதாவிற்குத்தான் ஏகப்பட்ட மகிழ்ச்சி. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. அதை வெளிப்படுத்தவும் முடியவில்லை. வெளிப்படுத்தாமல் இருக்கவும் முடியவில்லை. தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த ஒருமாதிரி திண்டாடிக்கொண்டு இருந்தார். போஸ்ராஜனோ “நல்ல யோசனைதான் சித்தப்பா..” என்று தன் சம்மதத்தை இப்படிச் சொல்லிவிட்டார். மகன் புதிய வீடு என்று சொன்னதுமே, மனதில்...
    அத்தியாயம்  - 6 வேம்பரசன் மற்றும் காசிராஜனோடு ப்ரித்வி பேசிக்கொண்டு இருக்க “இந்தா இந்த டீ கொண்டு போய் குடு. வந்தவங்களுக்கு டீ போட்டுக் குடுக்கணும்னு கூட இல்லை. வாய் பார்த்து நிக்கிற?” என்று சொன்னபடி சந்திரா, அவளிடம் தட்டினை நீட்ட, “ம்மா.. என்ன தட்டுல வச்சு குடுக்குற?” என்றாள். “அவங்க மூணு பேரு டி. ரெண்டு கைல...
    ‘திமிரை பாரேன்..’ என்று பல்லைக் கடித்தவள் “நான் அப்புறம் சாப்பிடுறேன் ம்மா..” என்று சொல்லி உள்ளே எழுந்து சென்றுவிட்டாள். காசிரஜான் கூட “என்ன சந்திரா, உடம்பு சரியில்லையா மீனாக்கு?” என, சந்திராக்கு தான் மகள் ப்ரித்வியிடம் பேசியது எல்லாம் தெரியுமே. அதுவும் அவனே வீட்டிற்கும் மனதில் எதையும் வைக்காமல் வந்திருக்கவும், மனது அவருக்கு கேட்கவில்லை. அதனால் கணவர் கேட்ட...
    “பின்ன அவங்க சொன்னது மட்டும் சரியா?!” என்றாள் விசும்பலோடு. “அந்த பையன் தப்பாவும் ஒன்னும் சொல்லலையே மீனா. எப்பவும் போல வந்து போக இருன்னு, உன் மனசு நோகாமத்தானே சொல்லிருக்கான். இதுல நீ என்ன தப்பைக் கண்ட. அதைவிடு, நீ ஆச்சிக்கிட்ட கிண்டலா பேசினதைக் கேட்டும் கூட, அதை பெருசு பண்ணாம இப்படி சொல்லிருக்கான். அது...
    அத்தியாயம் – 5 நல்ல ஆழ்ந்த உறக்கம் தங்கமீனாளுக்கு. வீட்டினில் விடுமுறையில் இருக்கையில் தான் இப்படி உண்டுவிட்டு, நிம்மதியாய் உறங்கிட முடியும். சந்திராவின் சமையல் எப்போதுமே அருமையாய் இருக்கும். விடுமுறை நாளென்றால் போதும், தங்கமீனாள் ஒருபிடி பிடித்துவிடுவாள். இன்றோ ப்ரித்வி மீதிருந்த கோபத்தில் இன்னும் நன்றாய் உண்டுவிட்டு, ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றிருந்தாள். வீட்டின் பின் பக்கம் தனியாய்...
    அத்தியாயம் – 4 ப்ரித்வியைக் கண்டதும், தங்கமீனாளுக்கு உள்ளுக்குள்ளே ஒரு சிறு உதறல், பேசியதை கேட்டிருப்பானோ என்று. அச்சிறு தவிப்புடனே அவனைக் கண்டு லேசாய் புன்னகைத்தவள் “வாங்க.. நல்லாருக்கீங்களா?” என்று நலம் விசாரிக்க. “ராஜாக்களுக்கு என்ன குறை? ரொம்பவே நல்லா இருக்கேன்..” என்று அவனும் குறையாத புன்னகையோடு பதில் சொல்லியதிலேயே புரிந்துபோனது, அவளது வார்த்தைகள் அவன் செவிகளில்...
    லட்சக்கணக்கான பணத்தை வீட்டினில் முதலீடு செய்துவிட்டால், பின்னே மகளது திருமணத்திற்கு என்ன செய்வது? கையிருப்பில் தானே கை வைக்க வேண்டி வரும் என்று பதறிக்கொண்டு பார்க்க, பிருந்தாவோ “நல்ல ஐடியா அண்ணா..” என்று அண்ணனை பாராட்டிக்கொண்டு இருந்தாள். வேம்பரசனோ உடனே பதில் எதுவும் சொல்லாமல், சில நொடி மௌனங்களுக்கு பிறகு “போஸ் கூட கலந்து பேசினியா...
    அத்தியாயம் – 3 போஸ்ராஜன் குடும்பம் மதுராபுரி வந்து சேர்ந்திருந்தது. வந்தவர்களை இன்முகமாய் வரவேற்று, உபசரித்து, உணவுண்ண வைத்து வழக்கமாய் வரும்போது தங்குவதுபோல், இப்போதும் அவரவருக்கான அறைகளை ஒதுக்கிக்கொடுத்து, அழகரசியும், வேம்பரசனும்  நல்லபடியே கவனித்திருந்தார். போஸ்ராஜன் ஒருவிதத்தில் இறுக்கமாய் இருந்தார் என்றால், ப்ரித்விராஜன் அவன் ஒருபக்கம் முகத்தில் கல்லைக்கட்டிக் கொண்டுதான் இருந்தான். ராதா தான் அனைவருக்கும் சேர்த்து...
    ஆனால் விஷயம் அறிந்ததும் மீனாளுக்கு சும்மா இருக்க முடியவில்லை. என்னவோ கண்ணில் விழுந்த தூசிபோல, மனதினில் இவ்விசயம் நுழைந்து உறுத்திட தொடங்கியது. அவள் பிறந்ததில் இருந்து தாத்தா பாட்டி என்று உரிமையோடு சொந்தம் கொண்டாட்டிய மனிதர்கள். அவர்களின் அந்த வீடு, அவளது அப்பா சில வருடங்கள் வாழ்ந்த வீடு என்ற அடையாளத்தையும் கொண்டது. அத்தனை...
    அத்தியாயம் – 2 “மீனா.. மீனா.. எழுந்துக்கோ. இன்னும் எத்தனை நேரம் தூங்குவ நீ..?” என்று உறங்கும் மகளை எழுப்பிக்கொண்டு இருந்தார் சந்திரா. “ம்மா இன்னிக்கு லீவ் தான் ம்மா..” என்று கண்களை திறக்காமல், கட்டிலில் புரண்டவள் “மக டூர் போயிட்டு வந்திருக்காளே, கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டுமேன்னு நீ நினைக்கிறியா..?” என்று கேட்டபடி, சோம்பல் முறித்து எழுந்தமர, “அதுசரி.....
    ஆக, தன்னைப்போல் மனதினில் தான் சொத்துக்காரன். எல்லாம் நமக்குத்தான் என்கிற எண்ணம் நிறையவே உண்டு. அதனால் தான் இங்கே வந்து எங்களோடு இரு என்று அழைத்தமைக்கு கூட ‘எனக்கு உரிமையான இடம் தானே..’ என்ற எண்ணத்தில் தான் வந்ததே. எல்லாம் தாண்டி, சித்தி சித்தப்பா மீது அன்பில்லாமலோ, பற்று இல்லாமலோ எல்லாம் இல்லை. எது செய்தாலும்...
    அத்தியாயம் – 1 “மங்கள ரூபிணி மதியணி சூலினி...” என்ற பாடல் ஒலித்துக்கொண்டு இருக்க,  பொழுது புலர்ந்த அந்த காலை வேளையில், அழகரசி -  வேம்பரசன் தம்பதியினரின் இல்லமே தெய்வீக மனம் கமழ்ந்து கொண்டிருந்தது. தேனி மாவட்டத்தின் அழகிய கிராமங்களில் ஒன்றான மதுராபுரியில், அழகரசி – வேம்பரசன் தம்பதியினரை தெரியாதவர்கள் இல்லை. இருவருமே எழுபதுகளின் மத்தியில் இருக்க,...
    error: Content is protected !!