Thursday, May 23, 2024

    புயல் காற்றில் விளக்காகவே

    அழகுக்கலை நிபுணர்களை வீட்டுக்கே வர வைத்து சல்மாக்கு அலங்காரம் செய்ய வைத்த கரீமா, ருஹானா பார்ட்டிக்கு வர முடியாதபடி தான் செய்த சதியை தங்கையிடம் பகிர்ந்துக் கொண்டாள். “ஒரு சாதாரண பொண்ணுக்கு நீ இவ்வளவு வேலை செய்யணுமா, அக்கா? என் அழகிலேயே நான் ஆர்யனை மயக்கிடுவேன், பார்” என்று தற்பெருமை அடித்துக்கொண்டாள். “சரி, சீக்கிரம் ரெடியாகி...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 21  ஆர்யன் ருஹானாவை பிடிவாதமாக அழைக்க, அதற்கும் மேல் பிடிவாதமாக ருஹானா வர மறுக்க, இருவரும் ஒருவரையொருவர் முறைத்து நிற்க, ஒரு தீர்மானத்துக்கு வந்த ருஹானா ஆர்யனை விட்டு விலகி தான் வைத்த பீங்கான் தட்டுக்களை எடுத்தாள். “நாம இப்போ போலாம்ன்னு சொன்னேன்” ஆர்யன் வலியுறுத்தினான். “நான் இங்க வேலை செய்றேன். என்...
    கண்களை உருட்டி யோசித்தவள் “சித்தப்பாக்கு சோர்வா இருந்திருக்கலாம். நிறைய வேலை பார்க்கறார் தானே!” என அவனை சமாதானப்படுத்தி “செல்லம்! என்ன வரையற?” என அவன் கவனத்தை மாற்றினாள். இவானுடன் சேர்ந்து படங்களுக்கு வர்ணம் பூசினாலும், அவள் நினைப்பு ஆர்யன் உடல்நிலையை எண்ணி கவலை பூசிக்கொண்டது. இவானை வரைய சொல்லிவிட்டு அவள் அறைக்கு போக இருந்தவள் திரும்பி...
    “சரி தான் கரீமா மேம்! அது ஒரு விபத்து. அதுக்கு நாம என்ன செய்ய முடியும்? ருஹானா மேம்! என் கவலையெல்லாம் நீங்க பிறந்தநாள் பார்ட்டிக்கு அதை போட வச்சிருந்தீங்களே!” என சாரா கரீமாவிடம் தலையாட்டி ருஹானாவின் நிலைக்கு வருந்தினார். “அது பரவாயில்ல. நான் பார்த்துக்கறேன். என்னால உங்க துணி போய்டுச்சே!” என ருஹானா மனதார...
    புயல் காற்றில் விளக்காகவே                                                                            அத்தியாயம் – 20 தொலைவிலிருந்து ஆர்யன் பார்வையால் தங்களை எரிப்பது தெரியாமல் மிஷாலும், ருஹானாவும் சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். துணிப்பெட்டியை திறந்து பார்த்த ருஹானா அதில் ஒரு அழகிய ஏப்ரன் இருப்பதை பார்த்தாள். அதை வெளியே எடுக்காமல் அப்படியே தடவி பார்த்தாள். “நல்லா இருக்கே, மிஷால்!” என பாராட்டினாள். புன்னகையுடன் அதை ஏற்றுக்கொண்ட மிஷால்...
    -------- காலையில் அலுவலகத்துக்கு கிளம்பிய ஆர்யன்  செல்ல முடியாமல் தன் அறை சோபாவில் சாய்ந்து அமர்ந்து வேகமாய் மூச்சிரைத்தான். முதுகு புண்ணும், உள் காயமும் முள்ளாய் குத்த நெற்றி முழுதும் முத்துமுத்தாய் வேர்த்தது. நெற்றியை துடைத்தவன் கதவு தட்டப்படும் ஓசை கேட்டதும் சற்று சிரமப்பட்டு எழுந்து நின்றுக்கொண்டு யாரென கேட்டான். ருஹானா மருந்துகளுடன் வரவும் கடுமையான முகத்துடன்...
    ------- சமையலறைக்கு வந்த ருஹானா சாராவிடம் “எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. எனக்கு நானே பானம் தயார் செஞ்சிக்கிறேன். அது குடித்தா உடம்பில் ரத்தம் ஊறும்” என்று சொல்லி அவளே செய்து எடுத்துக்கொண்டு மாடியேறினாள். ஆர்யனின் மேசை அருகே வந்து நின்ற ருஹானா அவன் உள்ளறையிலிருந்து வெளிவருவதற்காக தயக்கத்துடன் காத்திருந்தாள். கழுவிய முகத்தை துடைத்துக்கொண்டே வெளியே வந்த...
    ------------ வெட்டு வாங்கிய இடதுபுறத்தை கீழே அழுத்தாமல் வலதுபுறம் திரும்பி உறங்கிகொண்டிருந்த ஆர்யன் வலியால் புருவம் சுருக்கினான். வலியால் தூக்கம் கலைந்து எழுந்தவன் இடதுபக்கம் திரும்ப அவன் பார்த்த காட்சியில் திகைத்துப் போனான். அங்கே சோபாவின் கைப்பிடியில் தலை வைத்து ருஹானா உட்கார்ந்த நிலையில் உறங்கிக்கொண்டிருந்தாள். அவளை தலை முதல் கால் வரை பார்க்க பார்க்க வேதனையால்...
    புயல் காற்றில் விளக்காகவே                                                                            அத்தியாயம் – 19 சல்மா என்ன முயற்சித்தும் அவள் காதலன் பதிலளிக்காத காரணத்தால் லண்டன் செல்ல முடிவு செய்து அதை அவனுக்கும் செய்தியாக அனுப்பினாள். பெட்டியை அடுக்கிக்கொண்டு இருக்கும்போது அவனாகவே போனில் அழைத்து ‘நமக்குள் எல்லாம் முடிந்தது, இனி என்னை பார்க்க வராதே’ என்று சல்மாவை பேசவிடாமல் அவனே பேசி முடித்து...
    வாசலில் நின்று வேடிக்கை பார்த்த கரீமா சல்மாவையும் அழைத்தாள். “இந்த காட்சியை தவற விடாதே. உன் ஒளிமயமான எதிர்காலத்தை நான் உறுதிப்படுத்தறேன். நான் செய்த வேலையை இப்போ வேடிக்கை பார்க்குறேன். உனக்கும் ஆர்யனுக்கும் நடுவுல இனிமேல் யாரும் இல்ல” என கரீமா சொல்ல சுவையான நாடகம் பார்க்கும் ஆவலில் சல்மாவும் எட்டி பார்த்தாள். கரீமாவின் கையாளை...
    ருஹானா கண்களை மூடி, காயத்தை பிடிப்பதை பார்த்த ஆர்யன் வேகமாக அவள் அருகே நெருங்கினான். சாராவை பார்த்தவன் “என் ஆட்கள் கூட இருப்பாங்க. ஆனாலும் நீயும் ஜாக்கிரதையா இருக்கணும்” என்று மாற்றி சொல்ல அவளும் சரியென சொல்லவும் வெளியே சென்று விட்டான். “குக்கீஸ் கொண்டு போகலாமா?” என இவான் கேட்க “கண்டிப்பா, லிட்டில் சார். சின்ன...
    புயல் காற்றில் விளக்காகவே            அத்தியாயம் – 18 ‘இவானுக்கு எல்லாமாக நீ தான் இருக்கியே!’ என ஆர்யன் உணர்ச்சிவசப்பட்டு ருஹானாவிடம் சொல்லிவிட்டவன், அவள் விழிப்பதைக்கண்டு சுதாரித்துக்கொண்டு “இவானுக்காக தானே நீ இங்க இருக்கே” என்று குரல் இறக்கி சொன்னான். பின் கடுமையை சேர்த்துக்கொண்டு “அவனை கவனிக்கறதுக்கு தான் நீ இருக்கியே தவிர அவனை கல்லறைக்கு கூட்டிட்டு...
    ‘இப்போதான் ஆட்டம் சூடு பிடிக்குது’ என்று குதூகலமாக கரீமா பார்க்க, ‘மகளுக்கு என்ன ஆனதோ?’ என பர்வீன் கவலையுடன் பார்க்க, ஆர்யனும் மிஷாலும் முறைத்து நிற்க படிகளில் நடந்து வரும் ஓசை கேட்டது. மிஷால் நிமிர்ந்து பார்க்க, ஆர்யன் திரும்பி பார்க்க அவன் பின்னால் ருஹானா சிரிப்புடன் இறங்கி வந்தாள். ஆர்யனை தாண்டி சென்றவள், பர்வீன்...
    சையத் போனை மூடிவிட்டு “பிரச்சனைக்கான தீர்வு உன்கிட்டே தான் மறைஞ்சிருக்கு. உனக்கு அது இன்னும் தெரியல” என்று சொன்னார். சையத் சொன்னதை செயல்படுத்த கிளம்பிய ஆர்யன் கதவு தட்டப்படும் ஓசையில் நின்றான். தயக்கமாக ருஹானா உள்ளே வரவும், அவளை பார்த்து ஆச்சர்யப்பட்டான். “உங்களுக்கு நேரம் இருந்தா, நான் கொஞ்சம் பேசணும்” கதவருகில் நின்றே ருஹானா கேட்க லேசாக...
    புயல் காற்றில் விளக்காகவே                                 அத்தியாயம் – 17 ஆர்யன் உணவு மேசையில் அறிவித்தது மற்றவர்களை போல ருஹானாவிற்கும் திகைப்பாகவே இருந்தது. இமைகளை தட்டிக் கொண்டே ஆர்யனை பார்த்தவள் அப்படியே நின்றாள். இந்த வீட்டுக்கு உள்ளே வந்து இவானை பார்க்க அவள் பட்ட பாடு என்ன! கேட்டுக்கு வெளியே நின்று அவள் விட்ட கண்ணீர் என்ன! இப்போது...
    கரீமா தன் அடியாள் மூலம் ஆர்யன் மேல் தாக்குதல் நடந்ததும் ருஹானா அவனை காப்பாற்றி காயம் பட்டதும் தெரிந்து கொண்டதும் பெரும் திகைப்புக்கு உள்ளானாள். சல்மாவுடன் அதை பகிர்ந்து கொள்ள வந்தவள் தான் வந்தது கூட தெரியாமல் அவள் போனில் யாருடனோ தொடர்பு கொள்ள முயற்சிப்பது கொண்டு கடும் கோபம் கொண்டாள். வேகமாக வந்து அவள்...
    அம்ஜத் செடிகளிடம் சொல்லிக் கொண்டிருந்தான், “ஆர்யன் இன்னும் வரல. இப்போ வந்துட்டே இருப்பான். அவன் இல்லனா அமைதி இல்ல”. மண்ணை கொத்திக்கொண்டிருந்த அம்ஜத்தை பார்த்து கொதித்து போன கரீமா, “உச்சி வெயில்ல என்ன செய்றீங்க?” என கத்திக்கொண்டே வந்தாள். அவளை பார்த்ததும், “ஆர்யன்... ஆர்யன்.. ஆர்யன் வந்துட்டானா? என அம்ஜத் ஓடிவந்து அவளை எதிர்கொண்டான். “இன்னும்...
    புயல் காற்றில் விளக்காகவே                                                                            அத்தியாயம் – 16 ருஹானாவின் உடல் உதறல் நின்ற பின்னும் ஆர்யன் அவளை படுக்கையில் விடாமல் கைகளில் ஏந்தியிருந்தான். கொடும் பாலைவனத்தில் மழைத்துளி விழுந்தது போல இருந்தது அவன் நிலை. கவிழ்ந்திருந்த அவள் இமைகளையே பார்த்திருந்தவனுக்கு, சையத்தின் சொற்கள் எதிரொலித்தது. ‘மனசுல சில ஆழமான இரணங்கள் என்னைக்கும் ஆறாதுன்னு நீ நினைச்சிட்டு இருப்பே....
    திரும்ப திரும்ப ஆர்யனின் கைப்பேசிக்கு அழைப்பு விடுத்த கரீமா அவன் எந்த அழைப்பையும் ஏற்காததால் கடுப்பானவள் ரஷீத் போனுக்கு அழைத்தாள். "போலீஸ் ஸ்டேஷன் போய் கையெழுத்து போடனும்ன்னு காலைல கிளம்பினவங்க இன்னும் வரல. ஆர்யன் போனும் எடுக்க மாட்றான். இங்க இவானும் ரெண்டு பேரையும் கேட்டுட்டே இருக்கான். சொல்லு ரஷீத் எங்க ரெண்டு பேரும்?"  ஆர்யனின்...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 15  குண்டடிபட்ட ருஹானா ஆர்யன் தாங்கிப் பிடித்ததையும் மீறி கீழே நழுவினாள். மண்டியிட்ட ஆர்யன் அவளை அப்படியே மடி தங்கினான். 'ஆஹ்' என கத்தியபடி திரும்பவும் ஒருமுறை குண்டு வந்த திசை நோக்கி சுட்டான். கலங்கிப்போன ஆர்யன் ருஹானாவின் முகத்தை பார்க்க அவளுக்கு பெரிதாக மூச்சிரைத்தது. கண்களில் இருந்து கண்ணீர்...
    error: Content is protected !!