நின் வசமானேன்
அடுத்த மூன்று நாட்கள் அமைதியாகக் கழிந்தது. வீடு , ஆஃபீஸ், இடையில் ஒரு முறை ரமா சித்தி வீடு என்று சென்றது தவிர்த்து ஒன்றும் நடக்கவில்லை.
அலுவலகத்திலும் அன்று நடந்ததைப்பற்றி எதுவும் பேசவில்லை. மதிய உணவின்போது அஞ்சலி அனத்தத் தொடங்கியிருந்தாள்.
“சொன்னேன்ல மாசக் கடைசில நீ ரிப்போர்ட் அனுப்பக்கூடாது, சிக் லீவ் எடுக்கணும்னு. செய்யப் போறியா இல்லையா?”
“அட...
“ஏன்மா? அப்படியெல்லாம் உன்னை நிர்பந்தம் பண்ண மாட்டேன். நீ தான் வேலை ஆஃபர் பத்தி யோசிச்சி முடிவெடுக்கறேன்னு சொல்லியிருந்தியே”, என்று சொல்லவும்,
“ஓ...அப்ப இன்னிக்கு எங்க ஆஃபீஸ்ல நடந்தது தெரியாதா சர்? நீங்க அங்க இருந்திருப்பீங்கன்னு நினைச்சேன்.”
“இல்லையேமா... இப்பதான் வரேன். என்ன ஆச்சுமா?”
முகத்தை சுளித்தவள், மீண்டும் ஒரு முறை நடந்ததைக் கூற, அஞ்சலிக்கு குறையாது குருபரனுக்கும்...
அத்தியாயம் – 2
ஜெயந்தி கண் விழித்த போது, சோஃபாவில் பாதி உடலும், கால்கள் தரையிலுமாக இருந்தாள். விலுக்கென்று நிமிர்ந்து பார்க்க, ஒற்றை சோஃபா காலியாக இருந்தது. மெல்ல எழுந்து அமர்ந்து ஹாலைச் சுற்றி பார்வையை ஓட்டினாள். பெரியவர் கண்களுக்குத் தட்டுப்படவில்லை.
‘போயிட்டாரா?’, வாயிற்கதவை நோக்க, அது பூட்டியிருந்தது. மெதுவாக எழுந்து, படுக்கையறை குளியலறை அவளது அலுவலக...
தீக்ஷனாவிடம் பேசச் சென்றவன் பத்து நிமிடத்தில் மறுபடியும் டெக்-டீம் இருந்த மீட்டிங் அறைக்குள் நுழைய, கடுகடுத்த முகத்தோடு வெளியே வந்த தீக்ஷனா, ஜெயந்தியை முறைத்துவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியேறினாள்.
பின் மதியம் அவள் மோகன் அறைக்குச் செல்ல, “வாங்க ஜெயந்தி. காலையில நான் இங்க இல்லாம போனதுல ஒரு குட்டிப் பிரளயமே நடந்திருக்கு போல?” என்று...
அத்தியாயம் - 8
திங்கள்கிழமை அலுவலகம் வழமையான பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது. சஞ்சய் டெக் டீமுடன் ஐக்கியமாகியிருக்க, மோகனைக் காணவில்லை. முக்கியமாக தீஷனாவையும் காணவில்லை.
நெட்டி முறித்து எழுந்த ராகினி, “ஜெய் வா, ஒரு காபி சாப்பிட்டு வரலாம், காலையில வந்ததுலர்ந்து பிசி”, என்று இழுத்துக்கொண்டு சென்றாள். அலுவலகத்திலும் பேச்சு சுற்றுலா பற்றியே சுற்றி வந்தது. வாலிபால் போட்டியில்...
அத்தியாயம் – 10
ரெட்மி டெண்டர் படிவத்தை மீண்டும் படித்து, அதில் கேட்டிருந்தவற்றுக்கான பதில்கள் எல்லாம் இருக்கிறதா, வேறு எதுவும் தரவுகள் எடுக்க வேண்டுமா என்று சரி பார்த்துக்கொண்டிருந்தாள் ஜெயந்தி. மாலை ஆறு மணி போல அலுவலகம் அனேகமாக காலியாகியிருந்தது.
“ஜெயந்தி… மீட்டிங் ரூம் வரீங்களா? எங்க பக்க டீடெயில்ஸ் ரெடி ஆகிருச்சு”, என்று மோகன் அழைத்தான்.
மடிக் கணியுடன் செல்ல, அங்கே சஞ்சையும் கணினிக்குள் கவனம் பதித்திருந்தான்.
“இன்னும் ஒரு இரண்டு மூணு பாயின்ட் க்ளாரிட்டி வேணும் மோகன்”, என்று தன் கணினியை இணைத்து பெரிய திரையில் தெரியும்படி செய்ய, அடுத்த இரண்டு மணி நேரம் பறந்தது.
“போதும், இன்னிக்கு இங்க நிறுத்துவோம். லேட் ஆகிடுச்சு. நாளைக்கு காலையில அந்த இரண்டு எஸ்டிமேட்ஸ் மறுபடி செக் பண்ணிட்டு சாயந்திரம் ஃபைனல் பண்ணலாம். நாளைக்கு இராத்திரி பன்னெண்டு மணி வரைக்கும் டைம் இருக்கே”, என்று நெட்டி முறித்தபடி எழுந்தான் சஞ்சய்.
வேலை திருப்தியாக சென்றதில் மூவருக்குமே உற்சாகம். “யூ.எஸ் ப்ராஜெக்ட்ஸ் மாதிரி இந்த டெண்டர் வேல்யூ பெரிசில்லை. ஆனா கிடைச்சா அது லோக்கலா இன்னும் நமக்கு பல கதவுகளை திறக்கும். கவர்ண்மென்ட் ப்ராஜெக்ட்ஸ் பண்ற சான்ஸ் இருக்கும். பார்க்கலாம். சவுத்ல நம்ம கம்பனியை விரிவாக்கலாம்.”, என்று சஞ்சய் அதன் முக்கியத்துவத்தை விவரிக்க, மூலையில் அமர்ந்திருந்த குருபரனின் கவனத்தை அது ஈர்த்தது.
ஜெயந்தி கிளம்ப யத்தனிக்க, “இருங்க ஜெயந்தி டின்னர் எங்களோடவே சாப்பிடுங்களேன். வீட்டுக்குப்போய் இதுக்குமேல சமைச்சு சாப்பிட இன்னும் லேட்டாகுமே”, சஞ்சய் கேட்க ஜெயந்தி நிதானித்தாள்.
“இங்க பக்கத்துலயே போகலாம். என்னடா அன்னிக்கு சொல்லிட்டு இருந்தியே புதுசா எதோ மெஸ் நல்லாயிருந்துச்சுன்னு?”, மோகனை கேட்க, சட்டென்று சுதாரித்து, “ம்ம்… சேரன் மெஸ், கேரளா ஐட்டம்ஸ் ஸ்பெஷல், ஃபிஷ் அட்டகாசம் ஜெயந்தி. வாங்க, நம்ம இப்படி எக்ஸ்ட்ரா வேலை வாங்கினதுக்கு சஞ்சய் டின்னராவது வாங்கித் தரட்டும்”, என்று உந்தவும், சம்மதித்தாள்.
ராகினியும் முன்னமே கூறியிருந்தாள். ஒரு நாள் லன்ச் செல்வோம் என்று பேசிக்கொண்டிருந்தார்கள்.
சிறிய உணவகம். காலியாக இருந்த ஒரு சிறிய டேபிளில் மூவரும் அமர, மெனு வந்தது.
“எல்லாரும் விதவிதமா ஆர்டர் பண்ணிட்டு ஷேர் பண்ணிக்கலாம். வரைட்டியா டேஸ்ட் பண்ண மாதிரி இருக்கும்”, என்று சஞ்சய் சொன்னதும் ஜெயந்திக்கு பிடித்திருந்தது. அவளுக்கு அப்படி சாப்பிடத்தான் இஷ்டம். ஆனால் இவர்கள் அப்படி பகிர்ந்துண்ணுவார்களா என்று நினைக்கும் நேரமே அப்படியில்லை என்று உணர்த்தினான் சஞ்சய்.
“மச்சி…இறால் சொல்லவா?”, என்று மோகன் கண்ணடிக்க, “ஏண்டா? உங்க இரண்டு பேருக்கும் வேணா சொல்லு.”
சஞ்சய் இப்படி சொல்லவும், “உங்களுக்குப் பிடிக்காதா சஞ்சய்?” என்று ஜெய்ந்தி கேட்க, மோகனை முறைத்தான் சஞ்சய்.
“இல்லை…அது எனக்கு ப்ரான் மட்டும் அலர்ஜி”
“ஐ…அலர்ஜி இல்லை ஜெயந்தி… சாருக்கு அது செரிக்கற வரை சொரிய ஆரம்பிச்சிடும்”, என்று சிரித்தான்.
“ஒஹ்…அதுவும் ஒவ்வாமைதான். சரியாத்தான் சொல்லியிருக்கார். அப்போ அது ஆர்டர் பண்ண வேணாம். மத்த சீ ஃபூட் ஓகேவா?” இயல்பாக ஜெயந்தி கூற அவளும் எதாவது கலாய்ப்பாள் என்று எதிர்பார்த்திருந்த மோகன், அது நடவாமல் போக சஞ்சயைப் பார்க்க, சஞ்சயிடமிருந்து ஒரு பெருமிதப் பார்வை.
‘என்னடா நடக்குதிங்க…’ என்று சென்ற யோசனை முகத்தில் தெரியாதவாறு இருவரையும் கவனிக்கத் தொடங்கினான் மோகன். சஞ்சய் தீக்ஷனாவை திருமணம் செய்ய முடியாது என்று ஸ்ரீதரிடம் சொல்லிவிட்டதாக சொன்னபோது அவள் ஒத்துவர மாட்டாள், பணத்தைவிட வாழ்க்கை முக்கியம் என்று நண்பன் எடுத்த முடிவாகத்தான் பார்த்திருந்தான் மோகன். ஜெயந்தி பற்றி டின்னரில் என்ன நடந்தது என்று ஸ்ரீதரிடமிருந்து கேள்விகள் வந்த போதும், ஃபார்திங்க்ஸ் ஸ்ரீதரின் மூலம் வந்ததால், கிளையன்ட் தவறாக எதுவும் நினைத்துக்கொண்டார்களோ என்று கேட்கிறார் என்றுதான் நினைத்தான்.
ஆனால் இப்போது நண்பன் வலிய டின்னர் அழைப்பு விடுத்ததும், ஆர்வமுடன் மெனுவில் இருந்த ஐட்டங்களைப் பற்றி விவாதிப்பதும் இதற்கெல்லாம் வேறு ஒரு பரிமாணம் இருக்கிறதோ என்று நினைக்க வைத்தது.
சஞ்சயைப் பற்றி அணுஅணுவாக தெரிந்ததால், அவனது விருப்பம் மோகனுக்கு உடனே புலப்பட்டது. ஆனால் ஜெயந்தியிடமும் அது எதிரொலிக்கிறதா என்பதை அவனால் அறிய முடியவில்லை.
டின்னர் கலகலப்பாக சென்றது. ஜெயந்தி, “ம்ம், புதினாவும் மசால்ல சேர்த்து அரைச்சிருக்காங்க போல, நானும் ட்ரை பண்ணனும். டேஸ்ட் செம்மையா இருக்கு” என்று சிலாகிக்க,
“சமையல் நல்லா வருமா ஜெயந்தி உங்களுக்கு?” சஞ்சயின் கேள்வியில்,
“ம்ம்..அம்மா போனதும் நானேதான செய்யணும். அம்மா இருக்கும்போதே கூட சமைப்பேன். பேசிக்ஸ் எல்லாம் தெரியும். அப்பறம் நானே யூ-ட்யூப் பார்த்து பண்றதுதான். எனக்கு மட்டும் செய்யணும்னு ஒரு சோம்பேறித்தனம் அதனால அனேகமா சிம்பிளாவே முடிச்சிடுவேன்.”
“அஹ்… அம்மாக்கு என்ன ஆச்சு?”
உதடு குவித்தவள், “கோவிட்ல …இத்தனைக்கும் முதல் வாக்சீன் எடுத்திருந்தோம். இரண்டு பேருக்குமே வந்துச்சு. என்னை விட்டுட்டு, அம்மாவை பிடிச்சிட்டு போயிடுச்சு”, ஒரே மூச்சாக சொல்லி முடித்தவள், “நீங்க சமைப்பீங்களா?” என்று பேச்சை மாற்றினாள்.
“மச்சான் சிக்கன் பிரியாணி பண்ணா, கூட்டம் சேரும் பாருங்க…காலேஜ் படிக்கறப்போ யூ.எஸ்ல ஒரு அப்பார்ட்மென்ட்ல நாங்க அஞ்சு பேர் தங்கியிருந்தோம். அப்போ ஒரு ரெஸ்ட்ராண்ட்ல சஞ்சயும் நானும் பார்ட்-டைம் வெயிட்டர்ஸ்சா வேலை பார்த்துக்கிட்டு இருந்தோம். எப்பவாச்சம் மிச்சம் சிக்கன் இருந்தா செஃப் குடுப்பார். மறு நாள் வீட்ல பிரியாணி களைகட்டும், எதிர் வீட்டு ஸ்பானிஷ் பொண்ணுங்க கூட மோப்பம் பிடிச்சிகிட்டு சஞ்சய் இஸ் குக்கிங்கின்னு வந்துடும்” என்று கதை கூற சஞ்சையும் மோகனும் அவர்களது தனிக்குடித்தனம், முதல் முறை வெளி நாடு சென்று அங்கே வாங்கிய பல்புகள் என்று பல சம்பவங்களை கூறக் கூற சாப்பிட்டு முடியும் வரையும் சிரித்துக்கொண்டிருந்தாள் ஜெயந்தி.
டின்னர் முடிந்து எப்போதும்போல மெட்ரோவில் சென்று விடுவதாக ஜெயந்தி கூற, அவளை அனுப்பிவிட்டு கார்-பார்க் வந்தனர் நண்பர்கள் இருவரும். மோகன் கார் அலுவலகத்தில் இருக்க, சஞ்சையுடன் அவன் காரில் ஏறினான்.
“மச்சி… தீக்ஷனா வேணாம்னது ஜெயந்தியை மனசுல வெச்சுதானா?”, மோகன் நேரடியாகவே விஷயத்திற்கு வர, சஞ்சய் அவனை ஏறிட்டான்.
“அப்படியா தோணுது?”
“டேய்..எங்கிட்டயேவா? உண்மையை சொல்லு. நீ அங்கிள் கிட்ட சொன்ன மாதிரி, ரிலாக்ஸ்டா பாட்டு, வீட்டு சாப்பாடுங்கறதெல்லாம், இப்ப ஜெயந்தியோட நீ இருந்ததுக்கு கரெக்டா செட் ஆகுது. இந்தளவு ஜாலியா நீ வேற எந்த பொண்ணுகூடவும் பேசி நான் பார்த்ததில்லை. லவ்வா?”
மெல்லிய ஒரு புன்சிரிப்புடன், “டேய் ! உடனே சினிமாட்டிக்கா லவ்வான்னெல்லாம் ஆரம்பிக்காதே. ஜெயந்தியோட அந்த அலட்டலில்லாத நிதானம், மெச்சூரிட்டி, அவங்க தன்மானத்தை காம்ப்ரமைஸ் பண்ணிக்காத குணம் எல்லாம் பிடிச்சிருக்கு. வழக்கமா நம்ம பார்க்கற அந்த போலி முகமூடி இல்லாம இயல்பா இருக்கற அந்த ரியாலிட்டி பழக நல்லாயிருக்கு”, என்று பேசிக்கொண்டிருந்த நண்பனைப் பார்த்து நமுட்டுப் புன்னகையுடன், “போதும் போதும் லிஸ்ட் பெரிசா போவுது”, என்று வடிவேல் பாஷையில் கலாய்த்தவன், “மிச்சம் சிஸ்டர்கிட்ட சொல்லு. முப்பத்தி இரண்டு வயசுல லவ் வந்தா தப்பில்லை மச்சான், அதை லவ்வுன்னு சொல்றதிலேயும் தப்பில்லை இந்த அளவுக்கு நீட்டி முழக்க வேணாம்”, என்று சஞ்சயின் விலாவில் குத்தினான்.
“அப்படீங்கற?” என்ற சஞ்சையின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.
வீட்டிற்குள் நுழைந்த ஜெயந்தியின் முகத்தில் இன்னும் சிரிப்பின் மிச்சம் இருந்தது. வெகு நாட்களாகியிருந்தது இப்படி அவள் சிரித்து. இரவு உடைக்கு மாறி வந்து அமர்ந்தவளை ரமா சித்தி அழைத்தார்.
“என்ன சித்தி? எப்படி இருக்கீங்க?”
“நல்லாருக்கேண்டி. டின்னர் முடிஞ்சுதா? வீட்டுக்கு வந்திட்டியா?”
“ம்ம்…இப்பதான் வந்தேன் சித்தி. சொல்லுங்க?”
“என்ன விசேஷம் ஆஃபீஸ்ல? டின்னர் கூட்டிட்டு போயிருக்காங்க?”
“அட அதெல்லாம் ஒன்னுமில்லை சித்தி. இன்னிக்கு ஒரு டெண்டர் கோடேஷனுக்கு ரெடி பண்ணவும் நேரமாகிடுச்சு. அதான் அப்படியே இரண்டு பாஸ்ம் சாப்பிட்டே போகலாம்னு பக்கத்துல புதுசா திறந்த ஒரு ஹோட்டல் போகவும் என்னையும் அழைச்சிட்டு போனாங்க”, விவரம் கூறினாள்.
“ம்ம்.. இந்த ஆஃபீஸ்லதான் அடிக்கடி வெளிய போறீங்க போல? அன்னிக்கும் எதோ வெளினாட்டு கிளையன்ட்டுன்னு போயிட்டு வந்தல்ல? முன்னாடி இருந்த கம்பனிதான் பெரிய கம்பனின்னு பேரு. இப்படி ஹோட்டலுக்கெல்லாம் கூப்பிடவேயில்லை.”, ரமாதேவி குறைபட, நிரஞ்சன் பார்த்தி ஞாபகம் வர உதட்டை சுழித்தாள் ஜெயந்தி.
“அதை விடுங்க. எதுக்கு போன் பண்ணீங்கன்னு சொல்லுங்க சித்தி.”
“ஆங்… அதை மறந்துட்டேன் பாரு. மாப்பிள்ளை வீட்டுலர்ந்து போன் பண்ணி அவங்க அம்மா பேசினாங்க. நல்லா கலகலப்பாதான் பேசினாங்க. இரஞ்சித் ஒரு வாரம் ஆஃபீஸ் விஷயமா பெங்களூரு போறாராம். வந்தப்பறம் மீட் பண்ணி பேசலாம்னு சொன்னதா சொன்னாங்க. அவருக்கும் உன் போட்டோ பார்த்ததும் பிடிச்சுதாம்”, அதற்கே பெருமையாகக் கூறினார் ரமா.
“ஓஹ்… சரி. ஒன்னும் அவசரமில்லை சித்தி. பொறுமையா பார்த்துக்கலாம்.”
அவளது அசிரத்தையான பதிலில், ‘இந்தப் பொண்ணு என்ன கொஞ்சம் கூட ஆர்வமே இல்லாம பேசறா?’ என்று நினைத்தாலும், ‘ஒரு வேளை பிள்ளையை பார்த்து பேசி முடிவு பண்ற வரைக்கும் எந்த நினைப்பும் வேண்டாம்னு இருக்காளோ என்னவோ? இந்த காலத்து பொண்ணுங்க எப்படி யோசிக்கறாங்கன்னே தெரிய மாட்டேங்குது’, என்று தனக்குத் தானே ஆறுதலும் கூறிக்கொண்டார்.
அத்தியாயம் – 3
உற்சாகமாக வீட்டுக்குள் நுழைந்தாள் ஜெயந்தி. கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக்கொண்டதில் வந்த மகிழ்ச்சி. சேல்ஸ் ஹெட் மட்டுமல்ல, கிளையன்ட் கூட திடீரென்று வந்தாலும், எல்லா கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் உடனுக்குடன் விளக்கம் கூறியதை பாராட்டியிருந்தனர்.
சூட்டோடு சூடாக அவளைப் பற்றி நல்லவிதமாக ஒரு மின்னஞ்சலும் நிரஞ்சனுக்கும், அவன் உயர் அதிகாரிக்கும், ஹெச்.ஆர்க்கும் கூட எழுதியிருந்தார்...
அத்தியாயம் – 4
தி வால்ட் என்ற அந்த நிறுவனம் பிரம்மாண்டமான அந்த கட்டிடத்தின் ஒரு மாடியில் பெரிதான அரவமோ ஆடம்பரமோ இல்லாதிருந்தது.
குறித்த நேரத்திற்கு சற்று முன்னரே வந்தவளை ரிசெப்ஷனில் அமர வைத்திருந்தாள் ரிசெப்ஷனிஸ்ட். பத்து நிமிடம் சென்று ஒரு மீட்டிங் அறைக்கு அழைத்துச் சென்று அமரச் சொல்லி விடைபெற்றாள்.
அடுத்து சில நொடிகள் அமைதியில், “நான்...
“உங்க சர்ப்பரைஸ் புரியுது”, அவள் முழிப்பதை தப்பர்த்தம் செய்து கொண்டவன், “ஆனாலும், இப்ப ஸ்ரீதர் அங்கிளோட ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு தெரியலை. இன் கேஸ் அவர் பார்ட்னர்ஷிப் விலகறதா சொன்னா, என்ன பே பண்ண வேண்டியிருக்கும். நம்ம ரிசோர்ஸ் என்ன, இருக்கற ப்ராஜெக்ட்ஸ்ல என்ன பாதிப்பு இருக்கும்னு அசெஸ் பண்ணி ரெடியா இருக்கணும் ஜெயந்தி.”
அவன்...
அத்தியாயம் - 5
அலுவலகம் அமைதியாக இருந்தது. நிரஞ்சனும் பார்த்தியும் இல்லாததில் மூன்று வாரங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த வேலைகளை முடிப்பதில் முனைப்பாக ஈடுபட்டிருந்தாள் ஜெயந்தி.
இருவரும் அவளிடம் நேற்றிலிருந்து பேசவில்லை. விட்டதடா தொல்லை என்று இவளும் கண்டுகொள்ளவில்லை. நிரஞ்சன் ஏதோ விவரம் ஈமெயில் வழியாக கேட்டிருக்க, அவளும் அதன் வழியே அனுப்பியிருந்தாள்.
பின் மதியம் போல் மீட்டிங் என்று...
“லுக்கிங் ப்யூட்டிஃபுல். வா வா”, என்றவன், உள்ளே அழைக்க, கவனமாக வலது கால் வைத்து கேட்டைக் கடந்தாள். ஒரு புறம் அவன் காரை பார்க் செய்திருக்க, மிச்ச இடம் விசாலமாக இருந்தது. தனி வீடு. முன்புறம் அலங்கார டைல்ஸ் ஒட்டி , சாம்பலும் வெள்ளையுமாக இரு வண்ணத்தில் பெயிண்ட் அடிக்கபட்டு கம்பீரமாக இருந்தது.
“முகப்பே அழகா...
அத்தியாயம் - 7
இரவு சாதமும் சாம்பாரும் வைத்தவள், சூடாக தட்டில் போட்டுக்கொண்டு வந்து அமர, “அம்மா ஜெயந்தி”, என்ற குருபரனின் குரல் சோஃபாவிலிருந்து கேட்டது.
“வாங்க சர். எப்படி இருக்கீங்க?”
“ஹ்ம்ம்... இருக்கேன்மா. நீ சாப்பிடு. ஆறிடப் போகுது”, என்றவர் குரலின் தொனியே கவலையாக உதிக்க,
“என்ன டல்லா இருக்கீங்க? உங்க ஆளோட சண்டையா?”
“அட... நான் ஏம்மா சண்டை...
“நீ ஓகேன்னா, மேற்கொண்டு போட்டோ பறிமாறிக்கலாம். அவங்களுக்கு ஜாதகம் பார்க்கற நம்பிக்கையெல்லாம் கிடையாதாம்”, என்று தகவல் சொல்ல, வேறு வழியில்லாது வரன் பற்றிய விவரத்தைப் பார்த்தாள்.
“ஏன் சித்தி..”, என்று முனக, “இந்தாடி… வயசு இருவத்தி எட்டாச்சு. நீயாவும் பண்ணிக்கற மாதிரி தெரியலை. இன்னமும் மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்காத. வேற வேலை மாறணும் செட்டாகணும்னு எல்லா...
ஆஃபீஸ் இந்த இரண்டு நாட்களாக எப்படி போனது என்று பொதுவாக கேட்டுவிட்டு, “இப்பவாவது என் மேல உங்க கோவம் போயிடுச்சா ?”, என்றான் ஒரு புன்னகையோடு.
“சாரி சஞ்சய். நீங்க அவங்க சீன் கிரியேட் பண்ற முயற்சியை தடுக்கத்தான் அப்படி செஞ்சீங்கன்னு, கொஞ்சம் யோசிச்ச அப்பறம் புரிஞ்சுது. ‘குரு சர் விம் போட்டு விளக்கின அப்பறம்,...
மறு நாள் அலுவலகம் அதன் வழமையான பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. தீ்க்ஷனா வராததில் அவரவர் வேலையில் கவனம் வைத்திருந்தனர்.
சஞ்சையுடன் ஒரு மணி நேரம் அமர்ந்து டெண்டருக்கான மிச்ச சொச்ச விபரங்களை சரிபார்த்துக்கொண்டிருந்தாள். அவளே செய்துவிட்டு அவனுக்கு அனுப்பி சரி பார்த்திருக்க முடியும். என்னவோ, சஞ்சையும் உடனிருந்து செய்ய அழைத்திருந்தான். ஒரு வேளை இந்தக் கம்பனியில் இது...
“ஓ… ஒரு கைகலப்பே நடந்துச்சா? அப்பறம்?”
“அவ பிள்ளையை விட்டுட்டு நீ வேற மாப்பிள்ளை பார்க்க போனதுல, உன் மேலையும் கோவமாத்தான் இருக்கா.”, உர்ரென்று வந்த அவரது குரலில்,
“ஐயோ… சஞ்சய் அவங்க பிள்ளைன்னு நீங்க சொல்லி இப்பதான தெரியும்? நீங்க சொல்லி புரிய வைங்க, கோவத்துல என்னை அடிச்சாங்கன்னா நான் தாங்கமாட்டேன் சார்…”, அவர் நிஜமாகத்தான்...
“சித்தி... அவர் வேணும்னு செய்யலை. இந்த அளவுக்கு யோசிக்கவும் இல்லை. சும்மா அவரையே சொல்லாதீங்க”, குற்ற உணர்வில் சஞ்சய் நெளிவது பொறுக்காமல் அவனுக்காக பரிந்து பேசினாள்.
“அப்ப சட்டுனு பேசி ஒரு முடிவுக்கு வா! அவங்க வீட்டுலர்ந்து வந்து முறையா பொண்ணு கேட்டு ஆக வேண்டியதை பாருங்க!”, நெருக்கினார்.
அஞ்சலிதான் போன் செய்து விஷயத்தைக் கூறியிருந்தாள். இப்போது ...
அத்தியாயம் - 6
தி வால்ட்டின் புது ஃபனான்ஸ் சீஃப் பொறுப்பெடுத்து இரண்டு வாரமாகிறது. கங்காதரன் அவள் என்னவோ நேற்றுதான் காலேஜிலிருந்து வெளியே வந்த பெண் போல அரிச்சுவடியிலிருந்து ஒவ்வொரு விஷயமாக சொல்லித் தந்துகொண்டிருந்தார். ஒரு பக்கம் காமெடியாக இருந்தாலும், சில நேரம், சொல்லீட்டீங்களே, நான் பார்த்துக்கறேனே என்று சொல்ல வாய் பரபரக்கிறது.
மோகன் அவள் நிலைமை...
அத்தியாயம் – 9
ஈ.சி.ஆர் சாலையில் வழுக்கிக்கொண்டு ஓடியது சஞ்சயின் ஆடி கார். இரவு மணி பத்தரையை தாண்டியிருந்தது. காரில் மெலிதான பாடல் ஒலித்துக்கொண்டிருக்க, ஜெயந்தி,
“நீங்க சீக்கிரம் கிளம்பினதுல ஸ்டீவ் தப்பா எதுவும் நினைச்சுப்பாரா? ம்ப்ச், பேசாம நான் ஓலா எடுத்தே வந்திருப்பேன்.”
“ஷ்…அதெல்லாம் ஒன்னும் நினைக்க மாட்டாங்க. நான் பொறுப்புன்னு சொல்லித்தான் உங்களை டின்னருக்கு வர...
மறு நாள் காலை ஜெயந்தியை அழைக்க, அவள் எண்ணிற்கு அழைப்பு செல்லவில்லை. வாட்சப்பும் செல்லவில்லை. நம்பரை பிளாக் செய்திருந்தாள் என்று புரிந்தது.
உள்ளுக்குள் லேசாக உதைத்தாலும், கோவத்தில் செய்துவிட்டு மறந்திருப்பாள். நேராக சென்றுவிடுவோம் என்று நினைத்து பத்து மணி போல காரை எடுத்தான்.
இன்று அனேகமாக சஞ்சய் வரக்கூடும் என்று அனுமானித்திருந்த அஞ்சலி வெள்ளி இரவு அலுவலகம்...