Saturday, May 25, 2024

    கட்டி முத்தமிடு

    அத்தியாயம் 5 மதியத்திற்குப் பிறகு சூப்பர்மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது. தொடர்ந்து கஸ்டமர்கள் வந்துகொண்டே இருந்தார்கள். ப்ரதீபா பில் போட, தரையில் அமர்ந்தபடி ஷாம்பு பாடில்களுக்கு ரேட் ஸ்டிக்கரை sticker gun கொண்டு ஒட்டிக் கொண்டிருந்தாள் செல்வலட்சுமி. சரியாக மாலை 6 மணிக்கு வேலவன் சூப்பர் மார்க்கெட்டுக்குள் கிருஷ்ணமூர்த்தியும் அவரது மகனும் நுழைந்தார்கள். கிருஷ்ணமூர்த்தியின் மகனின் கையில் நீளமான...
    மதியம் 3 மணி. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக ஜனா, ப்ரியா, செல்வலட்சுமி, ப்ரதீபா இவர்கள் நால்வரும் மதிய உணவை ஒன்றாகத் தான் சாப்பிட்டார்கள். அருண் எந்நேரமும் வெளி வேலைகளில் இருப்பதால் அவன் இவர்களுடன் இணைவதில்லை. மேலும் அவனது வீடு அடுத்த தெருவில் தான் இருந்தது. அதனால் மத்தியச் சாப்பாட்டு வேளையின்போது அவன் வீட்டிற்குச் சென்றுவிடுவான். அவன் அதிகம்...
    அத்தியாயம் 4 ஒரு வருடம் முன்பாக… காலை 10 மணி. கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை எண்ணிப் பார்த்த முதலாளி பாலன், "அருண்ணு... அருண்ணு..." என்று பில் கவுன்டரில் இருந்தபடியே அருணை அழைக்க... "நீங்க தான அவன்கிட்ட பாய்ஸ் ஸ்கூலுக்கு சரக்கு கொடுத்து அனுப்பினீங்க?" - செல்வலட்சுமி கேட்டாள். "ஆமா... மறந்தே போச்சு." என்று கூறிய பாலன், "ஜனா... ஜனா எங்கயிருக்க?" என்று ஜனாவை...
    அத்தியாயம் 6 ஒரு வருடத்திற்கு முன்பாக… மதியம் 2 மணி. வாடிக்கையாளர்களே இல்லாமல் கடைவெறிச்சோடிக் கிடந்தது. சூப்பர்மார்கெட்டின் லான்ட்லைன் போன் அடித்தது. ப்ரதீபாவும் செல்வலட்சமியும் பில் போடும்போது அடுத்தடுத்த கணினியில் தான் அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்கு அடுத்து தான் கல்லாப்பெட்டி இருக்கும். அதாவது அவர்களுக்கு அடுத்ததாகத் தான் கேஷ் கவுன்டர் (cash counter) இருக்கும். பாலன் கேஷ் கவுன்டரில் தான் அமர்ந்திருப்பார். மூவருக்கும்...
    அத்தியாயம் 7 நிஷாவை நந்தினி பேக்கரியில் பார்த்தப்பிறகு குமார் அண்ணனிற்கு மனமே கனத்துவிட்டது. குமார் அண்ணன் அன்று முதல் வேலையாக நிஷாவைப் பார்க்க நந்தினி பேக்கரிக்குத் தான் சென்றார். "என்னமா நிஷா? நீ எதுக்கு இங்க வேலை பார்க்கிற?" என்று குமார் அண்ணன் கேட்டுக்கொண்டிருந்தபோது ப்ரதீபாவும் செல்வலட்சுமியும் நந்தினி பேக்கரிக்குள் நுழைந்தனர். அவர்கள் குமார் அண்ணனைப் பார்த்து திருதிருவென...
    இரவு 10 மணிக்கு ப்ரதீபாவை தனது பைக்கில் ஜனா அழைத்துச்சென்றபோது, "ஜனா அண்ணா என் மேல கோபமா இருக்கியா?" என்று ப்ரதீபா கேட்டதற்கு பதிலே சொல்லாமல் அமைதியாக இருந்தான் ஜனா. சைலன்ட்டில் இருந்த  கைபேசி வைப்ரேட் ஆனதும் யார் அழைப்பது என்று எடுத்துப் பார்த்தான். ஜனாவின் அண்ணன்தான் அழைத்தது. உடனே அழைப்பை ஸ்பீக்கரில் போட்டுக்கொண்டே பைக்கை...
    அத்தியாயம் 10 "காசிம் எங்க போய்ட்டான்?" - ஜனா கேட்டான். "அருண் கூட மகாலட்சுமி மஹால்ல கல்யாண சரக்கை இறக்கி வைக்கப் போயிருக்கான்." என்றாள் ப்ரதீபா. "சரி அப்ப நானும் மண்டபத்துக்குப் போறேன். அவங்க ரெண்டு பேரும் தனியா அவ்வளவு சாமானையும் இறக்கிட்டு இருப்பாங்க." என்ற ஜனா தனது பேட்டரி வண்டியை ஸ்டார்ட் செய்தான். நேராக மண்டபத்திற்குச் சென்ற ஜனா...
    அத்தியாயம் 8 "ப்ரதீபா, வாட்ஸ் ஆப் ஆர்டர் பில்லுக்கு சரக்கெடுக்கறேன்... ஏதாவது டவுட் வந்தா கேட்கறேன்..." என்றபடியே கையில் இருந்த பில்லிற்கு சாமான்களை எடுத்துக்கொண்டிருந்தாள் நிஷா. "சரி நிஷா." – ப்ரதீபா. அப்போது ஒரு உப்பு பாக்கெட்டை கையில் எடுத்தபோது, "ஆஹ்..." என்று பலமாகக் கத்திவிட்டாள் நிஷா. "என்ன ஆச்சு?" என்று கேட்டு கம்ப்யூட்டரில் இருந்து எழுந்து வந்தாள் ப்ரதீபா. "நேத்து...
    "சிக்னல்ல இருந்து ஹார்ன் அடிச்சுகிட்டே வர்றேன்.... வண்டியை ஸ்லோ பண்ணி நிறுத்துறியாடா?" என்று கோபமாக கேட்டபடியே தனது வண்டியை சைட் ஸ்டாண்ட் மட்டும் போட்டு நிறுத்திவிட்டு வேகமாக இருவரின் தலைக்குள்ளும் இருந்து ஏணியை உயர்த்தினான் ஜனா. "நீ தானா அது? செம்ம டிராஃபிக்கா இருந்ததா... என்னால திரும்பிப்பார்க்க முடியல... சாரிண்ணா…" – காஸிம். "உனக்கு அறிவு இருக்காடா?...
    அத்தியாயம் 9 நிஷா வேலவன் சூப்பர்மார்கெட்டில் பணிக்குச் சேர்ந்து அன்றோடு சரியாக ஒரு மாதம் நிறைவடைந்துவிட்டது. ஜனாவை 'சார்' என்று அழைப்பதை அடியோடு விட்டுவிட்டாள் நிஷா. இந்த ஒரு மாத காலத்தில் ஜனா, நீ, வா, போ... என்று கூட அழைத்துப் பழக கற்றுக்கொண்டாள் நிஷா. செல்வலட்சுமி ஏதோ விவரம் கேட்பதற்காக ஜனாவை அழைக்க, தனது கைபேசியில் கஸ்டமருடன் பேசிக்கொண்டு...
    அடுத்த டிராலியை நிஷா எடுத்துக்கொண்டு வந்தாள். "இப்ப நான் வாசிக்கிறேன். நீ சாமான் எடு." என்று கூறி நிஷாவின் கையில் இருந்த பில்லை வாங்கிக்கொண்டான் ஜனா. "அச்சோ... எனக்கு பலசரக்கோட பேருகூடத் தெரியாதே?" "பழகிக்கோ. வா நான் சொல்லித் தர்றேன். தினம் இது மாதிரி ஒரு பத்து லிஸ்ட்க்கு சரக்கு எடுத்தீனா கடையே உனக்கு அத்துப்படி ஆகிடும்." "சரி ஜனா...
    அன்று மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை. வேலவன் சூப்பர்மார்கெட்டிற்கு விடுமுறை நாள். ஆனால் பணியாட்களுக்கு விடுமுறை இல்லை. அன்று தான் புது சரக்குகளுக்கு ரேட் ஸ்டிக்கர் ஒட்டுவார்கள். கடையில் ஒட்டடை எடுத்து ஒழுங்கு படுத்துவார்கள். காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை வேலை, வேலை, வேலை மட்டுமே இருக்கும். அனைவரும் புது சரக்குகளுக்கு ஸ்டிக்கர்...
    அத்தியாயம் 13 வேன் காலை 8 மணிக்கு குற்றாலம் வந்தடைந்தது. அனைவரும் ஐந்தருவிக்குச் குளிக்கச் சென்றபோது அங்கு ஜனக்கூட்டமே இல்லை. அருணும் ஜனாவும் அருவியில் ஆண்கள் பிரிவில் மணிக்கணக்காக குளித்துக்கொண்டிருக்க மற்றவர்கள் எல்லாம் பேயாட்டம் என்று கூறுவதுபோல அருவியில் பேய் ஆட்டம் போட்டனர். உண்மையைச் சொல்லப்போனால் அந்த அருவியில் பேய்களின் கூட்டத்தை இறக்கிவிட்டிருந்தால் அவைகள் கூட சற்று குறைவாகவே ஆட்டம்...
    அத்தியாயம் 12 3 மணி நேரம் கழித்து தான் வருவேன் என்று சொன்ன ப்ரதீபா தான் சொன்னபடியே 3 மணி நேரம் கழித்து தான் கடைக்குள் வந்தாள். முகத்தை கழுவிக்கொண்டு தலையை பிண்ணிக்கொண்டு வந்த ப்ரதீபாவைப் பார்க்கும்போது ஜனாவிற்கு சிரிப்பாக இருந்தது. "பவுடர் பூசி கோபத்தை மறைச்சிருக்கியா ப்ரதீபா?" என்று கேட்டு அவளிடம் ஒரு இடியும் குத்தும்...
    அத்தியாயம் 11 அருண் திருமணம்... திருமணத்திற்கு சென்ற ஜனாவிற்கு அன்று தான் ஒரு விஷயம் தெரிய வந்தது. அதாவது அருணின் மனைவி மகாலட்சுமி ஜனாவிற்கு தூரத்து உறவு முறையில் உறவு என்ற விஷயமே ஜனாவிற்கு திருமணத்தன்று தான் தெரிந்தது. இன்னும் சற்று போனஸ் தகவலாக நிஷாவும் அவனுக்கு தூரத்து உறவு தான் என்று அன்று தெரிந்துகொண்டான். ஜனாவின் அன்னையுடன் பிறந்தவர்கள்...
    மறுநாள்... மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை. விடுமுறை தினம். ஆனால் அன்றைய தினத்தில் அவர்கள் வழக்கமாகச் செய்யும் வேலைகளுக்குகூட பாலன் விடுமுறை அளித்திருந்தார். "நாளைக்கு வெளியூருல முக்கியமான கல்யாண வீடு இருக்கு. நான் கண்டிப்பா போகணும். அதனால நாளைக்கு கடைக்கும் லீவு உங்க எல்லாருக்கும் லீவு... அடுத்த வெள்ளிக்கிழமை ரேட் அடிச்சி சரக்கேத்திக்கலாம்..." என்று பாலன் சொல்லவும்...
    "வீட்டுக்குள்ள வாங்கன்னு பாலண்ணா கூப்பிடுறாரு... ஆனா ஜனா உள்ளேயே நுழைய மாட்டேன்னு சொல்லிடுச்சு. அவர் மனசுல என்ன நினைப்பாரு? பாலண்ணாவோட ரெண்டாவது பையனுக்கு ஒரு வயசு தான் ஆகுது… எனக்கு அவன் கூட விளையாடனும்னு ஆசையா இருந்துச்சு. இந்த ஜனா தான் எங்களையும் பிடிச்சி இழுத்துட்டு வந்துருச்சு.." ப்ரதீபா நிஷாவிடம். "ப்ரதீபா போதும்... இந்தப் பேச்சை...
    அத்தியாயம் 14 நிஷா அந்த அறையைச் சுற்றிப் பார்த்தாள். அறை முழுவதும் வெள்ளை நிறத்தில் உயர்ரக பெயின்ட் அடிக்கப்பட்டு இருந்தது. அவளைச் சுற்றி நூத்துக்கும் மேற்பட்ட பிஸ்கட்டுகள் அட்டைப் பெட்டிகளுக்குள் இருந்தன. "இது எல்லாம் நம்ம சூப்பர்மார்கெட் சரக்குங்க." என்று தன்னிடமே பேசிக்கொண்ட நிஷா தன் எதிரே ஜனா நிற்பதைக் கண்டதும் இதயப்பகுதிக்குள் நடுக்கத்தை உணர்ந்தாள். "ஏய் நிஷா......
    ப்ரதீபா சொன்னது போல பிஸ்கட் குட்டவுனில் இருந்த அருண் அவனது தலைக்கு மேலே சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறியைப் பார்த்தபடி ஏதோ ஒரு யோசனையில் அமர்ந்திருந்தான். "அருண்ணு... டெலிவரிக்கு பேக் பண்ணலாமா? பத்து டெலிவரிக்கு மேல இருக்குடா... மஹாலெட்சுமி கல்யாண மண்டபத்துக்கு தான் முதல் டெலிவரி இருக்கு. போலாமா?" என்று ஜனா அவனது தோளைத் தட்டிக் கேட்ட பிறகு...
    அத்தியாயம் 15 இத்தனை நாளும் கண்களில் காதலோடு சுற்றித்திரிந்த நிஷாவிடம் நிறைய மாற்றங்கள். ஜனாவிற்கு திருமணத்தின் மீது இருக்கும் வெறுப்பைத் தெரிந்துகொண்டப்பிறகு காதல் ஞானிபோல் நடந்துகொண்டாள் நிஷா. வீட்டில் இருந்து லெமன் ரைஸ் செய்து கொண்டு வந்த நிஷா அதை ப்ரதீபாவிடம் பிடிவாதமாகக் கொடுத்து, "இதை ஜனாகிட்ட நீ தான் கொடுக்கணும்." என்றாள். "நீயே கொடு… அப்புறம் நாங்க...
    error: Content is protected !!