Monday, May 6, 2024

    கட்டி முத்தமிடு

    மதியம் 3 மணி. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக ஜனா, ப்ரியா, செல்வலட்சுமி, ப்ரதீபா இவர்கள் நால்வரும் மதிய உணவை ஒன்றாகத் தான் சாப்பிட்டார்கள். அருண் எந்நேரமும் வெளி வேலைகளில் இருப்பதால் அவன் இவர்களுடன் இணைவதில்லை. மேலும் அவனது வீடு அடுத்த தெருவில் தான் இருந்தது. அதனால் மத்தியச் சாப்பாட்டு வேளையின்போது அவன் வீட்டிற்குச் சென்றுவிடுவான். அவன் அதிகம்...
    அன்று: வேலவன் சூப்பர்மார்கெட்டில் நிஷாவின் முதல் நாள்: நிஷாவின் முதல் நாள் வேலை அவளுக்கு சற்று கடினமாக இருந்தது. பலசரக்கு சாமான்களின் பெயர்களைப் படிக்கவும், அவற்றின் அளவுகளைத் தெரிந்து கொள்ளவும் அவள் கொஞ்சம் சிரமப்பட்டாள். முதல் இரண்டு நாட்கள் பாக்கெட் போடும் செக்ஷனில் சிறிது நேரம் பாக்கெட் போடச் சொன்னார் பாலன். அடுத்த இரண்டு தினங்களில் அவளுக்கு சரக்குகளுக்கு...
    சரியாக ஒரு வருடத்திற்கு முன்பாக…. ******* காலை ஏழு மணி: காய்கறி மார்கெட்... ப்ரதீபாவின் அன்னை தேவியும் செல்வலட்சுமியின் அன்னை திலகமும் இருவரையும் அழைத்துக் கொண்டு அன்று ஒரே ஆட்டோவில் காய்கறி மார்க்கெட் சென்றார்கள். வாரம் ஒருமுறை மொத்த மார்க்கெட்டிற்கு ஆட்டோவில் சென்று மொத்தமாக காய்கறி வாங்குவது அவர்களது பழக்கம். ப்ரதீபாவின் அன்னை தேவி அங்கு எல்லோருக்கும் நல்ல பழக்கம். அவரைத்...
    அத்தியாயம் 2 15 அரிசி மூடைகளை குடோன் வாசலில் வைத்தப்பிறகு தான் ப்ரதீபா இன்னொரு கம்ப்யூட்டரை ஆன் செய்தாள். ப்ரதீபா சடச்சடவென குமார் அண்ணன் சொன்ன சரக்குகளுக்கு பில் போட, செல்வி அக்கா அவரது சரக்குகளை எடைபோட்டு அவரிடம் கொடுத்தார். "தவுடு, புண்ணாக்கு எல்லாம் விற்கிறது இல்லையா?" என்று சிரித்துக்கொண்டே பில் போட்டுக்கொண்டிருந்த ப்ரதீபாவிடம் குமார் அண்ணன் கேட்க, "எங்க...
    "எனக்கு தெரியும் ஜனா அண்ணே. தினமும் சொல்லுவியா? இது என்ன மெட்ராஸ்ஸா? ரெண்டு பக்கம் கால் போட்டு ஜாலியா ஒரு பையன்கூட பைக்ல போறதுக்கு? நம்ம ஊர்ல எல்லாரும் 'ஆ'ன்னு பார்ப்பாங்கன்னு எனக்கும் தெரியும்..." என்று சலித்துக் கொண்டு அவனது பைக்கில் ஒரு பக்கமாக கால் போட்டு உட்கார்ந்தாள் ப்ரதீபா. ப்ரதீபாவும் இரவு முழுவதும் சரியாகத்...
    அத்தியாயம் 1 தனது சைக்கிளுக்கு புது ஸ்டான்ட் போடுவதற்காக சைக்கிள் கடைக்கு காலை 8 மணிக்கெல்லாம் நிஷா வந்துவிட்டாள். "என்னமா? ஒரு வழியா ஸ்டான்ட் போட முடிவு பண்ணிட்டியா? ஒரு வருஷமா ஸ்டான்ட் மாத்தாமலேயே கடத்திட்டியே? சைக்கிளுக்கு காத்தடிக்கும்போது எத்தனை நாள் புது ஸ்டான்ட் போடுன்னு கேட்டுருப்பேன்… இன்னிக்கி தான் நல்ல நாளா?" "நேரமாகுமாண்ணே?" "அரை மணி நேர வேலை...
    error: Content is protected !!