Advertisement

அத்தியாயம் 1

தனது சைக்கிளுக்கு புது ஸ்டான்ட் போடுவதற்காக சைக்கிள் கடைக்கு காலை 8 மணிக்கெல்லாம் நிஷா வந்துவிட்டாள்.

“என்னமா? ஒரு வழியா ஸ்டான்ட் போட முடிவு பண்ணிட்டியா? ஒரு வருஷமா ஸ்டான்ட் மாத்தாமலேயே கடத்திட்டியே? சைக்கிளுக்கு காத்தடிக்கும்போது எத்தனை நாள் புது ஸ்டான்ட் போடுன்னு கேட்டுருப்பேன்… இன்னிக்கி தான் நல்ல நாளா?”

“நேரமாகுமாண்ணே?”

“அரை மணி நேர வேலை தான். 900 ரூபா ஆகும்னு சொன்னேனே?”

“இந்தாங்கண்ணே…” என்று அவரது கையில் 900 ரூபாயைக் கொடுத்தாள் நிஷா.

“வெயிட் பண்ணுமா… நீ தான் முதல் கிராக்கி…” என்று கூறியவரின் அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்த நிஷாவின் கைபேசி அடித்தது.

அவளது அன்னை விசாலம் தான் அழைத்தது.

“என்னமா?” – கைபேசியில் நிஷா கேட்டாள்.

“வீட்டுக்கு வந்து சாப்டிட்டு கடைக்குப் போடா…”

“இல்லமா.. நான் நேரா சு+ப்பர் மார்கெட்டுக்குத் தான் போறேன்… வீட்டுக்கு வரல…”

“என்னடா நிஷா… இப்படி பண்ற? நாலு நாளா காலைச் சாப்பாடே சாப்பிடல…”

“லன்ச் பேக் எடுத்துட்டு வந்துட்டேன்ல மா? இப்ப பசிக்கல. சைக்கிளுக்கு ஸ்டான்ட் போட்டுட்டு சு+ப்பர் மார்கெட் போனா சரியா இருக்கும். வீட்டுக்கு வந்துட்டுப் போனா லேட் ஆகிடும்…”

“லேட்டா போனா பாலன் அண்ணே ஒண்ணும் சொல்ல மாட்டாரு நிஷா… வந்து ஒரு வாய் சாப்பிட்டுப் போயேன்…”

‘இப்ப நான் அவர் கடையில வேலை பார்க்கலயே?’ என்று மனதுக்குள் நினைத்த நிஷா, “அம்மா நாளைக்கு கண்டிப்பா காலச் சாப்பாடு சாப்பிடறேன்… சைக்கிள் ரெடியானதும் கடைக்கு கிளம்பிடுவேன். மதியம் கால் பண்ணவா?” என்றாள் தனது அன்னையிடம்.

“சரி டா… மதியம் கூப்பிடு.” என்று கைபேசியை விசாலம் வைத்துவிட நிஷாவும் கனத்த மனதுடன் இணைப்பில் இருந்து விடைபெற்றாள்.

தான் சு+ப்பர்மார்கெட் வேலையில் இருந்து நின்றுவிட்டது தனது அன்னைக்கு தெரியும்போது அவரது நடவடிக்கை எப்படி இருக்கும் என்று நிஷா நன்கு அறிந்திருந்தாள்.

“நாலு நாளையே சமாளிக்க முடியல… இன்னும் எத்தனை நாள் அம்மாவை சமாளிக்க முடியும்னு தெரியல…” என்று மனதுக்குள் நிஷா சலனப்பட்டுக்கொண்டிருந்தபோது, “பாப்பா சைக்கிள் ரெடி.” என்றார் சைக்கிள் கடைக்காரர்.

தனது சைக்கிளை பெடல் செய்த நிஷா சேலத்தின் முக்கியமான ரத வீதியில்; செல்ல ஆரம்பித்தாள்.

அவளது சைக்கிள் மெயின் ரோட்டில் நின்றது.

வரிசையாக எட்டு கடைகள் கொண்ட தெரு அது.

அதில் 4வது கடையில் தான் வேலவன் சு+ப்பர் மார்கெட் என்ற போர்ட் போடப்பட்டு இருந்தது.

ஒரு பெருமூச்சுடன் அந்த போர்ட்டை வாசித்துப் பார்த்தவள் அக்கடையின் இடதுபுறத்தில் இருந்த சிறிய சந்திற்குள் நுழைந்தாள்.

அந்த வீதியில் இருந்த அத்தனைக் கடைக்காரர்களும் ஊழியர்களும் தங்களது இரு சக்கர வாகனத்தை நிறுத்தும் இடம் இந்த அகலமாக சந்து தான். அந்த சந்து அனைவருக்கும் பொது.

அந்த சந்தில் ஒரு பத்தடி தூரத்தைக் கடந்தபோது அன்னிச்சையாக அவளது கண்கள் இடதுபுறம் திரும்பியது.

இடதுபுறத்தில் மிகவும் நேர்த்தியாக சென்டர் ஸ்டான்ட் போட்டு ஜனாவின் பைக் நிறுத்தப்பட்டிருந்தது.

ஸைட் ஸ்டான்ட்டோ… ஸைட் லாக்கோ ஜனா எப்போதும் போட மாட்டான்.

“சென்டர் ஸ்டான்ட் போட்டா தான மற்றவங்க அவுங்க வண்டியை நிறுத்த இடம் இருக்கும்? ஸைட் லாக் போட்டுட்டா நம்ம வண்டியை யாராலும் அவசரத்துக்கு நகர்;த்த முடியாதுல?” என்று எப்போதும் பொது நலத்துடன் சிந்திக்கும் ஜனா தன் விஷயத்தில் மட்டும் இப்படி சுயநலமாக முடிவெடுத்தது ஏன்? என்று நினைத்து நிஷாவின் மனம் அப்போதும் சுணக்கம் கொண்டது.

‘அவன் இவ்வளவு வெறுப்பை கொட்டினப்பிறகும் அவன்கிட்ட கெஞ்சிகிட்டு நிற்கப்போறியா நிஷா?’ என்று கேட்ட மனதிடம்,

‘நிச்சயமா ஜனாகிட்ட கெஞ்ச மாட்டேன்.’ என்று சொல்லிக்கொண்ட நிஷா ஜனாவின் பைக்கின் மேல் இருந்த பார்வையை திருப்பி அவனது பைக்கை தாண்டிச் சென்றாள். பத்தடி தூரம் நடந்தப்பிறகு இடது பக்கம் இருந்த காம்ப்பவுன்ட் சுவர் பக்கமாக தனது சைக்கிளை நிறுத்தினாள்.

சைக்கிளை நிறுத்திவிட்டு திரும்பி வந்தவளிடம், ‘பார்க்காத… பார்க்காத…’ என்று மனம் கட்டளையிட்டதையும் மீறி நிஷாவின் கண்கள் ஜனாவின் பைக்கை பார்த்திடத் தான் செய்தன. அந்த பைக்கிற்கும் அவளுக்கும் ஒரு வருட உறவு இருந்ததல்லவா? அத்தனை சீக்கிரத்தில் மறக்க முடியாது தான்.

****

காலை 9.20 மணி

“நாலு பட்டர் பன்.. மூனு பத்து ரூபா கேக்…” என்று கஸ்டமர் கேட்டதை உடனே பேக் செய்து கொடுத்து அவரது கையில் பில்லைக் கொடுத்தாள் நிஷா.

அப்போது கடைக்குள் பயந்து பயந்து நுழைந்த வானதி அட்டென்டன்ஸ் ரெஜிஸ்டரில் கையெழுத்துப் போடும்போது டேவிட் முதலாளியிடம் வசமாக மாட்டிக்கொண்டாள்.

“என்னமா 9.20 க்கு வந்திருக்க? நாளுக்கு நாள் உன்கிட்ட நிறைய முன்னேற்றம் தெரியுதே?” டேவிட் அண்ணனின் குரலில் கோபம் இருந்தது.

வானதி பேசாமல் நின்றாள்.

“நாலு நாளா லீவ்வு… இன்னிக்கி தான் வந்துருக்க… ரொம்ப சீக்கிரமா வந்துட்டியே??” என்று வானதியிடம் டேவிட் அண்ணன் கேட்க…

“சாரி அண்ணே… இனி லேட்டா வரமாட்டேன்.” என்று வானதி பயத்துடனே மன்னிப்பு கேட்டாள்.

“ம்.. சைன் பண்ணு… நாளையில இருந்து லேட்டா வந்தா அரை நாள் சம்பளம் தான்…” என்று டேவிட் அண்ணன் கறாராகச் சொல்ல வானதி வேகமாகத் தலையாட்டிவிட்டு பதிவு ஏட்டில் கையெழுத்துப் போட்டாள்.

டேவிட் அண்ணனின் தலை மறைந்ததும் நிஷாவின் அருகே வந்த வானதி,

“பாலண்ணா கடையில வேலை பார்க்கிறதை விட்டுட்டு திரும்ப பேக்கரிக்கே வந்துட்டியாமே?”

“ம்…”

“உனக்கு என்ன கிறுக்கு பிடிச்சிருக்கா? பேக்கரி வாடை ஒத்து வரலன்னு தான சு+ப்பர்மார்கெட் வேலைக்குப் போன? திரும்ப இங்கயே வந்துருக்க?”

“விடு வானதி… உனக்கு நடந்தது எதுவும் தெரியாது…”

“நாலு நாள் தான நான் கடைக்கு வரல? அதுக்குள்ள பெரிய பெரிய திருப்பம் எல்லாம் நடந்துருக்கு… சு+ப்பர்மார்கெட்டுல என்ன நடந்துச்சு நிஷா?”

“வானதி… ரொம்ப தலைவலிக்கிது… என்கிட்ட எதைப்பற்றியும் கேட்காத…”

“நீ இந்த பேக்கரிக்கு திரும்ப வேலைக்கு வந்ததுக்கு ஜனா தான காரணம்?”

நிஷா வானதியின் கண்களைப் பார்க்க முடியாமல் தலையை மட்டும் ஆட்டினாள்.

“அரசல் புரசலா உன்னைப் பற்றியும் ஜனா பற்றியும் கேள்விப்பட்டேன்… அந்த ஆசாமியை எதுக்கு குறி வச்ச? அது ஒரு களிமண்ணு நிஷா…. உன்கிட்ட சொல்றதுக்கு என்ன? நான் இந்த பேக்கரியில வேலைக்கு சேர்ந்த புதுசுல ஜனா மேல கண்ணு வச்சேன்… ஒரு வருஷமா அதை நான் ரூட் விட்டுட்டு திரிஞ்சேன்… ஆனா என்னிக்கி ஜனா என்னைப் பார்த்து, ‘வானதிக்கா 3000க்கு சில்லரை இருக்கா’-ன்னு கேட்டானோ அன்னிக்கி என் மனசை இரும்பாக்கி வாலிப பசங்களுக்கு ஹார்ட் விடுறதை நிறுத்தினவ தான்… இன்னிக்கி வரை வைராக்கியமா இருக்கேன்ல?” என்று கேட்டு வானதி நிஷாவைப் பார்க்க நிஷா தனது கவலையை மறந்து மெல்லியதாகச் சிரித்தாள்.

****

சேலம்.

தேவதாஸ் காலனியில் இருந்த அந்த கட்டிடத்தின் பெயர் விசாலம் காம்பவுண்ட்.

அந்த காம்பவுண்டில் வரிசையாக ஆறு வீடுகள் இருந்தன. ஒரு பிராமண குடியிருப்பு போல அகலத்தில் சிறியதாகவும் நீளத்தில் பெரியதாகவும் இருந்தது அந்த காம்பவுண்ட் வீடு.

ஆறு வீடுகள் அடங்கிய காம்பவுன்ட் வீடு அது. அனைத்து வீடுகளும் ஒற்றை அறை கொண்டவை. ஒரு வரவேற்பறை ஒரு அடுப்படி என்று சிக்கனத்திலும் சிக்கமாக வீடு கட்டி வாடகைக்கு விட்டிருந்தார் வீட்டின் உரிமையாளர். ஆறு வீடுகளுக்கும் பொதுவாக 3 குளியலறைகளும் 3 கழிப்பறைகளும் அந்த காம்ப்பவுன்டின் கடைக்கோடியில் இருந்தன.

இடது பக்கம் வரிசையாக ஆறு வீடுகள் இருக்க வலது பக்கம் அதாவது ஒவ்வொரு வீட்டின் வாசல் பக்கமாக அவரவர் வீட்டு வாகனத்தை நிறுத்திக்கொள்ள  இடம் ஒதுக்கி இருந்தார்கள்.

அதே இடத்தில் துணிகளை உலர்த்திக்கொள்ள கொடிக் கயிறுகளும் கட்டப்பட்டு இருந்தன. ஒவ்வொரு வீட்டின் எதிரே இருந்த அந்தக் கொடிக் கயிறுகளில் உலர்ந்து கொண்டிருக்கும் துணிமணிகளைப் பார்த்தே அந்த வீட்டில் எத்தனை நபர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

ஜனாவிற்கு இரவெல்லாம் சரியான உறக்கம் இல்லை.

இப்படி தூக்கம் இல்லாமல் அவன் தவித்ததே இல்லை. விடிய விடிய தூங்காமல் பல யோசனையில் இருந்தவன் விடியற்காலையில் தான் உறங்கவே ஆரம்பித்தான். அவன் காலையில் எழுந்தபோது மணி 7.45.

அரக்கப் பரக்க குளித்து முடித்து உடைமாற்றிவிட்டு பணிக்கு கிளம்பினான்.

“ஜனா சாப்பாட்டு பேக் எடுத்துட்டியா?” என்று ஜனாவின் அன்னையின் குரல் கேட்டது.

அந்த நீளமான காம்பவுண்ட் வீடுகளின் முன்பக்க பகுதியில் நின்று கொண்டு தனது பைக்கை துடைத்துக் கொண்டிருந்த ஜனா,

“சாப்பாடு பேக் எடுத்துட்டேன்மா… நான் போயிட்டு வர்றேன். ரொம்ப லேட் ஆச்சு… மணி 8.10” என்று சப்தமாக சொல்லிவிட்டு காம்ப்பவுன்டுக்குள் இருந்த பைக்கை அப்படியே உருட்டிக்கொண்டு வந்தவனின் நாசியில் ஒவ்வொரு வீட்டின் முன்னேயும் உலர்ந்துகொண்டிருந்த ஈரத்துணிகளின் சோப் மணம்.

‘சர்ஃப் வாசனை ஆளைத் தூக்குது… ஏரியல்கூட இவ்வளவு வாசம் இல்ல… சர்ஃப் தான் பெஸ்ட்’ என்று மனதில் தினம் கமென்ட் அடிக்கும் மனது அன்று வாயை மூடிக்கொண்டு இருக்க காம்பவுண்ட் வீடுகளை விட்டு வெளியே வந்தான் ஜனா.

“என்ன ஜனா வேலைக்கு கிளம்பியாச்சா?” என்று தெருவில் நின்றுகொண்டு கீரை வாங்கிக்கொண்டிருந்த ஜானகி பாட்டி கேட்டார்.

“ஆமா பாட்டி இன்னைக்கு ரொம்ப லேட்… ப்ரதீபாவை வேற கூட்டிட்டுப் போகணும்…” என்று கூறிக்கொண்டு தனது பைக்கை உயிர்ப்;பித்து தார் ரோட்டில் வேகமாகச் சென்றான் ஜனா.

“இந்த ஜனா எறும்பு மாதிரி… எப்பவும் பயங்கர சுறுசுறுப்பு.”- ஜானகி பாட்டி ஜனாவை பற்றி கீரை விற்கும் ஆசாமியிடம் மெச்சுதலாகச் சொன்னார்.

இரண்டு தெருக்கள் தள்ளி இருந்த ஒரு சிறிய பச்சை நிற வீட்டின் வாசலில் ப்ரதீபா ஜனாவுக்காக காத்துக் கொண்டிருந்தாள். கல்லூரிப்படிப்பு படிக்க வேண்டிய வயது அவளுக்கு. ஆனால் ப்ளஸ்டூவிற்குப் பிறகு படிப்பை நிறுத்திவிட்டு வேலவன் சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்குச் சேர்ந்திருந்தாள் ப்ரதீபா.

ப்ரதீபா ஜனாவின் பைக்கில் ஏறும் முன்,

“ரெட்டக் கால் போட்டு உட்காராத ஒரு பக்கமா உட்காரு.” என்று கறார் குரலில் ஜனா கூறிட,

Advertisement