மீண்டும் கேட்கும் குழலோசை
"ப்ச் இப்போ என்னாகிருச்சு? நாம நினைக்கிறது எல்லாம் நடந்துருச்சுன்னா அப்ப கடவுள்னு ஒருத்தன் ஏ இருக்கான் எனக்கு மட்டும் வருத்தம் இல்லையா என்ன? விடு, அதான் மாப்பிள்ளை பாத்தாச்சில்ல பின்ன என்ன நல்ல இடம் நல்ல பையன் குடும்பமும் நல்ல குடும்பம் ராணி மாதிரி வாழ போறா பின்ன என்னத்துக்கு அழுதுட்டு இருக்குற" என்று...
விஜயனின் பார்வை பதிந்திருந்த திசையை விஷ்ணு பார்க்க வைசாலியும் அவனை தான் பார்த்து கொண்டிருந்தாள் தொண்டையை கனைத்தவன் "போதும் போதும் சைட் அடிச்சது லவ் பண்ண மாட்டாங்களாம் ஆனா சைட் மட்டும் அடிப்பாங்களாம்! கேட்டா நா தரைய பாத்தேன் சுவர பாத்தேன்னு ரில் விடுறது" என்று பொதுவாக எங்கோ பார்வையை அலையவிட்ட படி விஷ்ணு...
"ப்ச் இப்போ என்னத்துக்கு அழுகுறவ விடு எதுவும் நம்ம கையில இல்ல நேரம் வரும் போது எல்லாம் நடக்கும்" என்றவர் "யார்கிட்டயும் சொல்லிட்டு இருக்க வேணாம் சரியா, வா வந்து சமையலுக்கு வந்து ஒத்தாசை பண்ணு உச்சி பொழுது ஆச்சு உங்க மாமா வந்தா சத்தம் போடுவாறு" என்று அவள் மனநிலையை மாற்ற வேண்டி உடன்...
"நீயா வர்றயா இல்ல அடிச்சி இழுத்துட்டு போகவா நீயா வந்தா பிரின்சிபில் கிட்ட போலாம் இல்ல நா அடிச்சு இழுத்துட்டு போனேன்னா போலீஸ் ஸ்டேஷன் தான் லாக்கப் தான் களி தான்! ஈவ் டீஸிங் பண்ணா என்ன தண்டனை தெரியுமா? ஆயுள் தண்டனை,பணம் கொடுத்து வெளிய வந்திறலாம்னு மட்டும் நினைக்காத அது நடக்காது" என்று...
பெண்கள் அனைவரும் டவுனுக்கு கிளம்பி சென்று விட துவாரகாவும் விஷ்ணுவும் பரமசிவனை காண வயலுக்கு சென்றனர் ஜெகநாதன் வைதேகி இல்லம் சென்று பெருமாள் சாமியுடன் பேசி கொண்டிருக்க விஐயன் மட்டும் வீட்டில் மடிகணினியில் மூழ்கி இருந்தான்
வரப்பின் மேல் நடந்து கொண்டே"டேய் விஷ்ணு எதுக்கு வர சொல்லிருகாருன்னு தெரியுமா? எதுனாலும் வீட்டுல வச்சு பேசலாமே தனியா...
பொழுது நன்றாக புலர்ந்திருக்க வைதேகி இல்லம் செல்வதாக கூறவும் நானும் வருகிறேன் என்று சாவித்ரியும் உடன் சென்றார் சஞ்சளா வைஷாலி இருவர் மட்டும் அறையில் தனித்திருக்க ஆண்கள் மூவரும் நடைப்பயிற்சியை முடிந்தது கொண்டு தோட்டத்திலேயே குளிப்பதற்கான உடைகளை உடன் எடுத்து சென்றுவிட பரமசிவமும் சந்தைக்கு கிளம்பி சென்று விட்டார் புவியரசன் பணிக்கு கிளம்பி கொண்டிருக்க...
"டேய் நீ எதுக்கு இன்னும் முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்க கொஞ்சம் சிரிச்ச முகமா இரு பாக்க சக்கிகல"என்று மூக்கை சுருக்கி கூற
"ப்ச் போடா" என்று சலித்து கொண்டவன் "ஜாகிங் போய்ட்டு வரலாமா? ரொம்ப நாள் ஆகுது கிராமத்து வாசம்பிடிச்சு"
"ம் சரி போலாம் நீங்க இருங்க நா கொஞ்ச நேரத்துல வந்துடுறேன் அம்மா கேட்டா...
மதுரை மேலூர் அருகே சிறு கிராமம் வயல் வரப்பிற்கு செல்வோர் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து கிளம்பி கொண்டிருக்க பால்காரன் ராசு சைக்கிள் மணியை அடித்து கொண்டே பக்கத்து வீட்டின் முன் நிறுத்தினான் "ஏலே ராசு இங்க கறந்துட்டு போறது நீ வருவேன்னு திண்ணையிலேயே ஒரு மனுஷன் ஒக்காந்துட்டு இருக்கேன் ஓம்பாட்டுக்க பாத்தும் பாக்காத...
"அட போடா..! உன்னோட அன்பை பெற ஏதாவது வழி இருந்தா சொல்லி தொலை எதுவும் சொல்லாம இப்டி சாகடிக்கிறயே உன் மனசோட ஆழம் தான் என்ன! அதுல அப்டி என்ன ரகசியம் இருக்கு? அதை எப்போ தான் சொல்ல போற? தேடி வரும்போதெல்லாம் என்னை உதாசீனம் செய்யிற இருந்தும் உன்ன விட்டு விலகி போக...
நெடுஞ்சாலையில் சுங்கசாவடியை கடக்க வேண்டி வாகனங்கள் வரிசை கட்டி நிற்க சற்று நேரம் அவர்களின் வாகனம் நிறுத்தப்பட்டது திடீரென நினைவு வந்தவனாக "டேய் வீட்டு சாவிய கொண்டு வந்துட்டோம் சபரி என்ன பண்ணுவான்" என்று விஷ்ணு பதட்டத்துடன் கேட்க
"சபரி நீங்க வர்றதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் கிளம்பி போனான் நாளைக்கு போலாம்னு சொன்னான்...
அவனும் மனமும் ஒரு நிலையில் இல்லை அழுகை முட்டி கொண்டு வந்தது
கண்ணீர் விடுவது அவனுக்கு அறவே பிடிக்காது வாழ்வின் பல கட்டங்களில் கண்ணீர் மட்டுமே துணையாய் இருந்ததாலோ என்னவோ வேகமாக அதேநேரம் அழுத்தமாக விழிகளை துடைத்து கொண்டவன் தரையில் ஒருக்களித்து படுத்து கொண்டான், மனமோ ஆற்று
வெள்ளத்தில் நிலை கொள்ளாமல் அடித்து செல்லும் ஓடம் போல திசை...
சாவித்ரியும் வைதேகியும் விஷ்ணுவை நடுவில் அமர்த்தி விவாதித்து கொண்டிருக்க தென்றலின் அமைதியை தத்தெடுத்து கொண்டவளை அடிக்கொருமுறை பார்வையால் தீண்டினான் விஜயன் "ட்ரெயின்ல போலாம் அது தான் சிரமம் இல்லாம இருக்கும் எனக்கும் கொஞ்சம் நல்லா இருக்கும் எனக்கு பஸ் ஆகாது" என்று சாவித்ரி தன் அபிப்பிராயத்தை கூற
"ட்ரெயின் வேணாம் எனக்கு ஒத்துக்காது ஒரு மாதிரி...
மடியில் முகம் புதைத்து தேம்பி கொண்டிருந்தவளை நிமிர்த்தியவன் "இங்க பாரு! என்ன பாரு! எதுவா இருந்தாலும் சொல்லிட்டு அழு எதுவுமே சொல்லாம அழுதா என்னனு எடுத்துகிறது எதுக்காக அழுகுற யாராவது எதவாது சொன்னாங்களா?" என்று தணிவாக கேட்க
இல்லை என்று தலையாட்டியவள் கண்களை துடைத்து அழுகையை விழுங்கி கொண்டு "இன்னைக்கு லாஸ்ட் எக்ஸாம் சோ பிரெண்ட்ஸ்...
விஜயன் தரையில் அமர்ந்திருக்க வைஷாலி வீம்புடன் முகத்தை திருப்பி கொண்டு கட்டிலின் மேலே அமர்ந்திருந்திருந்தாள் "இவங்களுக்கு இதே வேலையா போச்சு! எப்ப பாரு ரெண்டும் சண்டை போட்டுக்கிட்டு எதிரும் புதிருமா தான் இருக்குதுக! இவங்கள என்ன தான் பண்றது"என்று தலையில் அடித்து கொண்டவன் விஜயனின் கெஞ்சல் குரல் கேட்டு என்ன நடக்கிறது என்பதை கேட்க...
"ஹலோ சொல்லுங்க சார்" என்றதும் மறுமுனையில் கூறிய செய்தியில் அவர் முகம் சப்பென்று ஏமாற்றத்தை அப்பி கொண்டது சற்றும் எதிர்பார்க்கவில்லை மேலிடத்திலிருந்து இப்டி ஒரு தகவலை,பேசி முடித்து விட்டு கூம்பிய முகத்துடன் எதிரில் நின்ற இருவரையும் பார்க்க
"பாவம் சார் நீங்க ரொம்ப எதிர் பார்போட இருந்திருப்பிங்க எங்கள சஸ்பெண்ட் பண்ணுவாங்கன்னு, என்ன பண்றது சார்...
விஷ்ணுவும் துவாரகாவும் கிளம்பி சென்ற சிறிது நேரத்திலேயே விஜயன் உள்ளே நுழைய தலையில் கை வைத்த வண்ணம் தன் அறையில் இருந்து வெளிப்பட்டாள் வைஷாலி வியர்க்க விறுவிறுக்க உள்ளே நுழைந்தவனை கண்டவள் பார்த்தும் பார்க்காதது போல சமையலறைக்கு செல்ல
அமைதியாக செல்பவளை கண்டவனுக்கு நேற்று இரவு நடந்த நிகழ்வு நினைவில் வர குற்றவுணர்வு மேலோங்கியது அவளை...
சிறுப்பிள்ளையாய் உறங்கி கொண்டிருந்தாள்,ஆனால் உறக்கத்திலும் அவள் முகம் வேதனையை பிரதிபலித்தது "சொல்ல தெரியல ஆனா உனக்கு ஒரு கஷ்டம்னா என்னால தாங்கிக்க முடியாது நீ என்னோட பிரெண்ட் அவ்ளோதான்" என்று கூறவும்
அவன் மனம்"வெறும் பிரெண்ட் மட்டும் தானா?" என்று கேள்வி எழுப்ப விடையில்லா வினாவாய் முற்று புள்ளி வைத்தவன் அவள் நெற்றியில் இதழ்பதித்து போர்வையை...
விஜயன் கூறியதில் இருவரும் திகைத்து விழிப்பதை கண்டு "எதுக்கு இப்டி பாக்குறிங்க, ஊருக்கு போறத பத்தி யார்கிட்டயும் சொல்ல கூடாதுன்னு தானே பேசிட்டு இருந்திங்க?"என்று இருவரின் முகமாற்றத்தையும் கவனித்து சந்தேகமாய் இழுக்க
உண்மை தெரியவில்லை என்ற எண்ணமே இருவருக்கும் மூச்சு காற்றை இயல்பாக்கியது வைஷாலி எதுவும் பேசவில்லை இலக்கின்றி எதையெதையோ வெறிக்க தொடங்க விஷ்ணுவே பேச்சை...
அவள் அழுகை அடங்கும் வரை தலையை பரிவாக தடவிவிட்டவனிடம் "எப்டிடா உன்னால மட்டும் இப்டி இருக்க முடியுது யார்கிட்டயும் எதுவும் சொல்லாம இப்டி மனசுக்குள்ளேயே வச்சுக்கிட்டு!, எங்ககிட்ட சொல்லிருக்கலாமே ஏண்டா இப்டி பண்ண?" என்று ஆற்றாமையில் வெடிக்க
"பிழைக்கிற நிலைமையில இருந்தா சொல்லலாம் ஆனா முடியாதே சொல்லி என்ன பிரயோஜனம் என்னோட உயிர் போறது போறது தானே!...
தன்னையே பார்த்து கொண்டிருந்தவனை கண்டு சன்னமாய் புன்னகைத்த விஜயன் "என்னடா அப்டி பாக்குற!" என்று கேட்கவும்
"ஒன்னுமில்ல" என்று மறுப்பாய் தலையசைத்தவன் "நீ இன்னும் வைஷ்ணவிய மறக்கல! அப்டி தானே!" என்றான் ஆராயும் பார்வையோடு
கேள்வியை எதிர்பார்த்திருந்தவன் போல எந்தவித பாவனையும் காட்டது வெற்று புன்னகை புரிந்தவன் "டேய் அவ இப்போ வேற ஒருத்தனோட மனைவி அவள...