Advertisement

ஹலோ சொல்லுங்க சார்என்றதும் மறுமுனையில் கூறிய செய்தியில் அவர் முகம் சப்பென்று ஏமாற்றத்தை அப்பி கொண்டது சற்றும் எதிர்பார்க்கவில்லை மேலிடத்திலிருந்து இப்டி ஒரு தகவலை,பேசி முடித்து விட்டு கூம்பிய முகத்துடன் எதிரில் நின்ற இருவரையும் பார்க்க 

பாவம் சார் நீங்க ரொம்ப எதிர் பார்போட இருந்திருப்பிங்க எங்கள சஸ்பெண்ட் பண்ணுவாங்கன்னு, என்ன பண்றது சார் நாம நினைக்கிறது எல்லாம் நடந்துருதா என்ன?” என்ற விஷ்ணுவை வெறுப்போடு பார்த்தவர் எதுவும் செய்ய முடியாத நிலையில் அமர்ந்திருக்க

அப்டியே நீங்க எதிர் பாக்காத ஒன்னும் இருக்கு சார் உங்க போன்ல நியூஸ் பார்க்க முடியுமா?” என்று கேட்க

டேய் அவரு கிட்ட ஏண்டா கேட்டுகிட்டு இருக்க அதான் என்னோட மொபைல்ல இருக்கே அத காட்டிட்டா போகுதுஎன்ற துவாரகேஷ் தன் அலைபேசியில் இருந்த வீடியோவை காண்பிக்க அவர் முகம் பீதியில் உறைந்து போனது சதீஷ் அளித்த பாதி வாக்குமூலம் அலைபேசியில் படமாய் தெரிய

என்ன சார் அப்டி பாக்குறிங்க! இத எப்டி எப்போ வீடியோ எடுத்தோம்னா? நேத்து இங்க வந்துட்டு போன பிறகு தான் எடுத்தோம் விசாரணை கமிஷனுக்கு நேத்து நைட்டே அனுப்பி வச்சுட்டோன் இன்னைக்கு காலையில இங்க வரும் போது தான் பத்திரிகைகாரங்களுக்கு சூடா பிரேக்கிங் நீயூஸ் கொடுத்துட்டு வந்தோம் எப்டி இருக்கு எங்க சர்ப்ரைஸ்என்று விஷ்ணு புருவம் உயர்த்தி புன்சிரிப்புடன் கேட்க கைலாசத்தின் முகத்தில் ஆடவில்லை அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருந்தார்

டேய் பாவம் அவரே அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி கொடுத்து அத தாங்க முடியாம உறஞ்சு போய் உக்காந்துட்டு இருக்காரு நீ என்னடான்னா பேசிட்டு இருக்க சார் ரொம்ப பயந்து போயிருக்காரு பாரு! இந்த ஏசி ரூம்லயும் எப்டி வேர்த்து ஊத்துதுன்னுஎன்ற துவாரகேஷ்தண்ணி குடிச்சா கொஞ்சம் பயம் பதட்டம் குறையும் சார்என்று தண்ணீர் கிளாஸை நீட்ட திகைப்பில் இருவரையும் மாறி மாறி பார்த்தார் கைலாசம்

என்ன சார் எங்களுக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சீங்களா? நா வந்த ரெண்டாவது நாளே கண்டுபிடிச்சிட்டேன் உங்களுக்கும் கருணாகரன் சார் கொலைக்கும் சம்பந்தம் இருக்கும்னு பட் இருந்தும் நா எதுவும் கண்டுக்காத மாதிரி இருந்தேன், ஏன்னா உங்கள வச்சு அந்த குற்றவாளிய பிடிக்காலம்ன்னு! எப்டியும் கண்டுபிடிச்சுறுவேன்என்று உறுதியுடன் கூறியவன்நேத்து சதீஷ் குற்றவாளிய பத்தி  சொல்ல வரும்போது அவன சூட் பண்ணிட்டாங்க பரவாயில்ல அவன் போனா என்ன? என்கிட்ட நம்பிக்கையும் என்னோட பிரெண்ட்ஸும் இருக்காங்க, இனி மேலாவது உங்க மனசாட்சிக்கு பயந்து வேலை பாருங்க சார் உங்களுக்கும் ஒரு பொண்ணு இருக்காங்க அத மறந்துடாதிங்கஎன்று கூறவும்

கைலாசம் குற்றவுணர்வில் தலைகுனிந்து நின்றார்சார் காக்கி ட்ரெஸ்ஸ போட்டுக்கிட்டு தலை குனிஞ்சு நிக்காதிங்க ரொம்ப கஷ்டமா இருக்கு! கடந்த அஞ்சு வருசத்துக்கு முன்னாடி உங்க நேர்மை என்னன்னு எனக்கு தெரியும்? டிப்பார்ட்மெண்ட்ல உங்களுக்கு இருக்குற மதிப்பும் மரியாதையும் எனக்கு நல்லாவே தெரியும் சார் எதனால நீங்க இப்டி மாறுனிங்கன்னு எனக்கு தெரியல இனிமேலாவது பாக்குற வேலைக்கும் உங்க மனசாட்சிக்கும் நியாயமா நடந்துக்க பாருங்க நாம செய்யிற செயல் எதிர்கால சந்ததிகளை தான் பாதிக்கும் நாங்க கிளம்புறோம் சார் வந்த வேலை முடிஞ்சிருச்சுஎன்று கூறிவிட்டுவாடா போலாம்என்று துவாரகாவை அழைத்து கொண்டு வெளியேறினான் விஷ்ணு

அதுவரை கம்பிரமாய் இருந்த கைலாசம் ஒரு நொடியில் கீழே பாதாளத்தில் விழுந்தது போன்ற உணர்வில் தன் செயலை எண்ணி வெட்கி வேதனை கொண்டார் 

விஷ்ணுவின் செயலை கண்டு மெச்சுதலாய் பார்த்த துவாரகேஷ்எப்டி டா என்கிட்ட கூட சொல்லவே இல்ல இந்த மாதிரி பண்ண போறேன்னு அவரு முகத்தை பக்கணுமோ மனுஷன் ஆடி போயிட்டாருஎன்று சிலாகித்து கூற

எனக்கே காலையில தான் இந்த யோசனையே வந்துச்சு அவனே பப்ளிக்கா விஷயத்தை சொன்ன பிறகு நாம எதுக்கு மறைச்சு வைக்கணும் இப்போ பிரேக்கிங் நீயூஸ் நம்ம வீடியோ தான் அவனும் இந்நேரம் பாத்துட்டு தான் இருப்பான்! என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருப்பான்என்றவன்சரிடா ஸ்டேஷனுக்கு போலாம் கொஞ்சம் வேலை இருக்கு பெண்டிங் கேஸ் என்னென்னனு பாக்கணும்என்றதும் இருசக்கர வாகனத்தை உயிர்ப்பித்தவன் விஷ்ணு பின்னால் அமர்ந்து கொள்ளவும் வாகனம் வேகமெடுத்தது 

உள்கட்சிகளுக்குள் ஏற்பட்ட பூசலால் தன் பதவிக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் செய்யும் வழி தெரியாது ஆழ்ந்த சிந்தனையில் முழ்கி இருந்தார் உத்தமன் அலைபேசியை எடுத்து வந்து பவ்யமாய் அவரிடம் நீட்டிய செயலாளர் திருஞானம்சார் உங்களுக்கு போன் வந்துருக்குஎன்றதும் தவறிய அழைப்பில் சென்று பார்த்தவர்ப்ச் இவன் வேற நேரம் காலம் தெரியாம நச்சரிச்சுக்கிட்டுஎன்று சலித்து கொண்டே அழைப்பு விடுக்க

முதல் அழைப்பிலேயே எடுத்தவன் எடுத்த எடுப்பிலேயே பொறிய தொடங்கினான்மிஸ்டர் உத்தமன் என்ன நடக்குதுன்னு உங்களுக்கு ஏதாவது தெரியிதா இல்லையா? நியூஸ் பாத்திங்களா? அவன் இஷ்டத்துக்கு ஆதாரம்னு ஏதோ ஒரு வீடியோவ பப்ளிஷ் பண்ணி பேட்டி கொடுத்துருக்கான் நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க, நா என்ன சொன்னேன் நீங்க என்ன பண்ணி வச்சுருக்கிங்க இதுக்கு தான் என்கிட்ட பணத்தை லட்சம் லட்சமா வாங்குனிங்களா? மாட்டுனா நா மட்டுமில்ல நீங்களும் சேந்து தான் மாட்டுவிங்கஎன்று ஆவேசத்துடன் பேசி மிரட்ட 

தம்பி கோபப்படாதீங்க! அவனுக்கு நீங்க யாரு என்னன்ற விஷயம் தெரியாது அதுவரைக்கும் நமக்கு பிரச்சனை இல்ல எந்த ஆதாரமும் சாட்சியும் இல்லாம எப்டி அடுத்தகட்டதுக்கு கேஸ்ஸை நகர்த்த முடியும்? நீங்க டென்ஷன் ஆகாதிங்க பொறுமையா இருப்போம்ஏதாவது பண்ணணும்னு அவசரத்துல ஏடாகூடமா ஏதாவது பண்ணி வச்சுறாதிங்க ஒளிய தெரியாதவன் தலையாரி வீட்டுல போய் ஒளிஞ்ச கதையா ஆகிற போகுது நா கமிஷ்னர் கிட்ட பேசுறேன் தம்பிஎன்று மறுமுனையில் இருந்தவனின் கோபத்தை தனித்தவர் 

அப்றம் இந்த மாதிரி அடிக்கடி போன் பண்ணாதீங்க தம்பி எலெக்சன் டைம் யாராவது கண்டுபிடிச்சா என்னோட அரசியல் வாழ்க்கையே போயிரும்என்று தயங்கி கொண்டே கூற

அது நீங்க நடந்துகிற விதத்துல தான் இருக்கு ஓல்ட் மேன்என்று திண்ணக்கமாய் பதில் உரைத்து விட்டு அழைப்பை துண்டித்துவிட்டான் மறுமுனையில் இருந்தவன்

போனை வேகமாக டேபிள் மேல் வீசியவர்இவன் சகவாசத்தை விட சனீஷ்வரன் தேவலாம் போல திமிரா பதில் சொல்லிட்டு கட் பண்றான், பணத்துக்காக எவன் எவன்கிட்டயோ பணிஞ்சு போக வேண்டியதா இருக்கு ச்சேஎன்று சிடுசிடுத்து கொண்டே கைலாசத்திற்கு அழைப்பு விடுக்க எந்த பலனும் இல்லை என்றதும் நேரில் சென்று விஷயத்தை பேசி கொள்ளலாம் என்று நினைத்தவர் தன் பதவி பறிபோகமல் இருப்பதற்கான வழியை பற்றி யோசிக்க தொடங்கினார் உத்தமன்

எதையும் உணரும் நிலையில் இல்லாது தரையை வெறித்தபடி உறைந்து போய் அமர்ந்திருந்தாள் சஞ்சளா சரியாக வீடு வந்து சேர்ந்ததே அதிசயம் தான்!, கல்லூரி சென்று வந்ததிலிருந்து பேயறைந்தார் போல அமர்ந்திருந்தவளை கண்டு அமிர்தாவின் மனம் என்னவோ ஏதோ என்று அடித்து கொண்டது அடிவயிற்றில் கலக்கம் உண்டாக என்னவென்று கேட்டு கேட்டு பார்த்து ஓய்ந்து போனவர் பதில் பேசாது இருப்பவளை கண்டு பயந்து போய் சாவித்ரியை அழைத்து விஷயத்தை கூற 

அவரும் சென்று அவளிடம்என்னாச்சும்மாஎன்று தணிவாகவே கேட்டு பார்த்தார் பலன் எதுவுமில்லை கண்களில் மட்டும் கண்ணீர் தாரைத்தாரையாய் வழிந்து கொண்டிருந்தது 

விஷ்ணுவும் துவாரகாவும் வீட்டின் உள்ளே நுழைய  பரபரப்புடன் எதிர்ப்பட்ட வைதேகியிடம்ஏய் என்னாச்சு தேவிம்மா? எங்க இவ்ளோ அவசரமா போற இன்னைக்கு உனக்கு ஸ்கூல் இல்லையா?” 

இல்ல மாமா இன்னைக்கு லீவ்என்றவள்சஞ்சுக்கு என்னாச்சுன்னு தெரியல காலேஜ் போயிட்டு வந்ததுல இருந்து எதுவும் பேசாமா அமைதியா உக்காந்திட்டுருக்கா, சித்தியும் அங்க தான் இருக்காங்க அதான் நானும் போறேன்என்று பதட்டத்துடன் கூற துவராகாவின் மனம் அடித்து கொண்டது என்னவாக இருக்கும் என்று, அவசரமாக மூவரும் அமிர்தாவின் இல்லம் விரைய

என்னடி ஆச்சு எதுக்கு இப்டி உக்காந்திருக்க வாய் திறந்து ஏதாவது சொல்லேன்! இப்டி கல்லு மாதிரி உக்காந்திருந்தா நா என்னன்னு நினைக்கிறது நெஞ்சு பக்குபக்குன்னு அடிச்சிகிது என்னவா இருக்கும்னுஎன்று தவிப்புடன் அமிர்தா கேட்க

மூவரும் உள்ளே நுழைந்தனர்என்ன ஆன்ட்டி ஆச்சு!” என்ற விஷ்ணுவிடம் 

தெரியலப்பா இன்னைக்கு இவளுக்கு எக்ஸாம் காலையில போகும் போது நல்லா தான் போனா காலேஜ் முடிஞ்சு திரும்பி வந்ததிலிருந்து இப்டி தான் உக்காந்திருக்கா வாயே திறக்க மாட்டிக்கிறா அழுதுட்டே இருக்கா ரொம்ப பயமா இருக்கு விஷ்ணுஎன்று அழுகையோடு கூறியவரை அமைதிபடுத்த வேண்டி

சித்தி ஆன்ட்டிய நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போங்கஎன்றவன்ம் கூட்டிட்டு போ தேவிம்மாஎன்று வைதேகியிடமும் கூறிவிட்டு துவாரகாவை பார்க்க அவன் முகத்திலும் தவிப்பின் அறிகுறி தென்பட்டது பெண்கள் மூவரும் வெளியேறிட

டேய் துவாரகா நீ பேசு நா வெளிய இருக்கேன்என்று விஷ்ணு கூறவும்

நானா..!” என்று தயங்கியவன்நா என்னன்னு பேச அவளுக்கு என்னாச்சுன்னே தெரியல? அவளோட அம்மா கேட்டே பதில் சொல்லாதவா நா கேட்டா சொல்ல போறா?” என்று  விவாதம் செய்ய

அவ உன்கிட்ட தான் கொஞ்சம் அதிகாமா பேசுறா நீ என்னன்னு கேட்டா கண்டிப்பா அவ சொல்லுவா நீ போய் பேசு ஏதோ நடந்திருக்குஎன்று கூறிவிட்டு விஷ்ணு வெளியேறிட 

அய்யோ இது வேறயா ஒருவேளை பேய் பிசாசு அந்த மாதிரி ஏதாவது இவ உடம்புல புகுந்திருக்குமாஎன்று பயத்தில் யோசனை செய்தபடி அவள் அருகில் சென்று தயக்கத்துடன் அமர்ந்தவன்சஞ்சும்மாஎன்று அழைக்க எந்த பதிலும் இல்லை அவள் கையை அழுத்தமாக பற்றியவன்இங்க பாரு! ப்ச் என்ன பாரு சஞ்சும்மா! அழுகுற என்னாச்சு? காலேஜ்ல யாராவது ஏதாவது சொன்னாங்களா? இல்ல பசங்க ஏதாவது கிண்டல் கேலி பண்ணாங்களா எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுஎன்று கேட்டதும் தான் தாமதம் சட்டென அவன் மடியில் தலை வைத்து உடல் குலுங்கி அழுக தொடங்கினாள்

அவள் செய்கையில் திடுக்குற்றவன்ஏய் என்னாச்சு இப்போ எதுக்கு அழுகுற எதுவா இருந்தாலும் சொல்லிட்டு அழுடி பயமா இருக்குஎன்று படபடப்புடன் கூறியவன்

பதில் கூறாமல் அழுது கொண்டிருந்தவளை தேற்றும் வழி தெரியாது தவிப்போடு விழித்தான்.

மனம்! தேடும் ஒருவரிடத்தில் உள்ளம் சிறுப்பிள்ளையாய் தஞ்சம் புகுந்து ஆறுதல் அடையும்! அவள் மனமோ அவனிடத்தில் அதை உணர்ந்து கொள்வானா அவன்?.

தொடரும்….

முழுசா உனக்கென நான் வாழுறேன்

புதுசா தினம் தினம் என பாக்குறேன்

அழுதா தோளுல நான் சாஞ்சுப்பேன்

அளவில்லாம ஆசை வெக்குறேன்

ஏனோ தானோ என்று போன நாளும்

எல்லாம் நீயே என்று மாறுதே

Advertisement