Advertisement

விஜயனின் பார்வை பதிந்திருந்த திசையை விஷ்ணு பார்க்க வைசாலியும் அவனை தான் பார்த்து கொண்டிருந்தாள் தொண்டையை கனைத்தவன்போதும் போதும் சைட் அடிச்சது லவ் பண்ண மாட்டாங்களாம் ஆனா சைட் மட்டும் அடிப்பாங்களாம்! கேட்டா நா தரைய பாத்தேன் சுவர பாத்தேன்னு ரில் விடுறதுஎன்று பொதுவாக எங்கோ பார்வையை அலையவிட்ட படி விஷ்ணு கூற

அவிளிடமிருந்து வலுக்கட்டாயமாக பார்வையை விலக்கி முறைத்தவன்நா வெளிய வெய்ட் பன்றேன் நீங்க வாங்கஎன்று மீண்டும் ஓடுக்குள் அடைந்து கொண்ட ஆமையாய் மனதை மறைத்து கொண்டு சென்று விட

ம்ஹும் உனக்கு பொறுக்களையா? அவன் பாட்டுக்க பாத்துட்டு இருந்தான் அதையும் கெடுத்துவிட்டஎன்று சலித்து கொண்டவன்  “அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்னு ஒரு கெமிஸ்ட்ரி உருவாகிருக்கும் இப்டி கெடுத்துட்டயேடாஎன்று துவாரகா குறைபட்டு கொண்டான்

யாரு? அவனுக்கு கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகிருக்கும் போடாஅவன பத்தி எனக்கு தெரியாது! அப்டியே கெமிஸ்ட்ரி பிஸிக்ஸ் மேக்ஸ்ன்னு எல்லாம் உருவாகி ஹிஸ்டரி லெவலுக்கு போயிருக்கும்என்று நக்கலாக ஆருடம் போல கூறியவன்போ போய் வெளிய வெய்ட் பண்ணு எல்லாரையும் கூட்டிட்டு வறேன்என்று கூற

ஒன்னு சொல்ல விட மாட்டேங்கிறானேஎன்று நொந்து கொண்டே வந்தவன் திண்ணையில் அமர்ந்து கொள்ள 

என்னடா வந்துட்ட!” என்று அருகில் வந்து அமர்ந்தவனிடம்

ம் நீ தொலைஞ்சு போயிருவியாம் அதான் உனக்கு துணையா அனுப்பி விட்டுட்டான்என்று நொடித்து கொண்டதும்

நீ ரொம்ப கோபமா இருக்க அப்புறமா பேசுவோம்என்றவனை முறைத்து பார்த்தவன் அலைபேசியில் கவனத்தை பதித்தான்

என்னம்மா இன்னும் எவ்ளோ நேரமாகும் சீக்கிரம் கிளம்பி வாங்க எல்லாரும் வெய்ட் பண்ணிட்டு இருக்காங்கஎன்று அவசரபடுத்தினான் விஷ்ணு 

இதோ ஆச்சுப்பா நீங்க முன்னாடி போங்க நாங்க வறோம்என்ற அன்னம் தமயந்தியிடம்சீக்கிரம் கூட்டிட்டு வாம்மாஎன்க 

இதோ அவங்களே வந்துட்டாங்கஎன்றதும்சீக்கிரம் போய் வண்டியில ஏறுங்க நேரத்துக்கு போனா தான் கல்யாணத்தை பாக்க முடியும்என்று அவசரபடுத்தி கொண்டிருக்க வைதேகியும் வந்து விட்டாள் மூன்று பெண்களும் ஒரே மாதிரியான நிறத்தில் புடவை கட்டியிருக்க 

பாருடா செட்டு சேந்துட்டீங்க போலஎன்று புருவம் உயர்த்தி வியப்பை காட்டியவன்சரி சரி சீக்கிரம் வாங்கஎன்று விட்டு விஷ்ணு முன்னே சென்றுவிட 

பெண்கள் மூவரையும் ஒன்றாக நிற்க வைத்து திருஷ்டி கழித்தவர்போங்க நா வறேன்என்றுவிட்டுசாவித்ரிஎன்று குரல் கொடுத்தார்

இதோ கிளம்பிட்டோம் அண்ணி அவ்ளோ தான் வாங்க போலாம்என்று கணவன் மனைவி இருவரும் அறையில் இருந்து வெளியே வர 

அனைவரும் சுமோவில் ஏறினர் முன்னால் பரமசிவம் புவியரசன் ஓட்டுநர் மூவரும் அமர்ந்து கொள்ள நடு சீட்டில் சாவித்ரி அன்னம் ஜெகநாதன் அமர்ந்து கொண்டனர், பின்னால் வைதேகி வைஷாலி சஞ்சளா தமயந்தி நால்வரும் அமர்ந்து கொள்ள விஷ்ணுவும் உடன் இருந்த இருவரும் இருசக்கர வாகனத்தில் வருவதாக கூறவும் 

ஆமா மூனு பேரா போனா பாக்குறவங்களுக்கு மெதப்பா போயிறாது? போலீஸ் காரங்களே இப்டி போரானுங்கன்னு யாராவது ஒருத்தனை வண்டியில வந்து ஏற சொல்லுஎன்று மனைவியிடம் எரிச்சலை காட்ட 

டேய் விஷ்ணு அப்பா சொல்றது சரி தான் யாராவது ஒருத்தர் வண்டியில வந்து ஏறுங்கஎன்று கணவனை கண்ஜாடை காட்டி கூற

சரிம்மாஎன்று யோசனை செய்தவன் துவாரகாவை பார்க்கஎன்ன ஏண்டா பாக்குற?”

இல்ல யார்.. போறதுன்னு கொஞ்சம் யோசனையா இருக்கு” என்றதும் துவாரகா விஜயனை பார்த்தான் பார்வையின் அர்த்தம் புரிந்ததோ என்னவோசரி நானே போறேன்என்று அலுத்து கொண்டவன்ஆனா இடம் இருக்கான்னு தெரியலையே?” 

இடம் இல்லாமயா வண்டியில ஏற சொல்லுவாங்க போடா கேள்வி கேட்டுகிட்டுஎன்று சலித்து கொள்ள

எல்லாம் நேரம்என்று தலையில் அடித்து கொண்டவன் முன்னால் ஏற செல்லதம்பி நீங்க பின்னாடி போறீங்களா ரொம்ப இடைஞ்சலா இருக்க என்னால சௌகரியமா உக்கார முடியலைஎன்று சங்கடத்துடன் வந்து நின்ற தமயந்தியை பாத்தவன் ஏதும் கூறவில்லை அமைதியாக பின்னால் சென்று ஏறியவன் பேந்த பேந்த விழித்தான் வைஷாலியின் அருகில் காலியாக இருக்கும் இடத்தை கண்டு

இது தான் நடக்க போகிறது என்பதை அறிந்து கொண்ட இருவரும் தமயந்தியிடம்அக்கா நீங்க முன்னாடி போய் உக்காருங்க அவங்க இங்க வரட்டும்என்று என்ன சொல்வாரோ என்ற பயத்துடன் கூற 

இருவரையும் ஒருமாதிரியாக பார்த்தவள்என்னடி நடக்குது இங்க! அந்த தம்பி இவ ஜோடியா?” என்று சந்தேகமாய் கேட்கவும்

ஆமாஎன்று வைதேகி தலையை ஆட்டம் நடத்துங்கடிஎன்று புன்னகை மலர கூறிவிட்டு இறங்கி கொண்டாள் தமயந்தி

காத்திருந்தவள் போல ஏதுவாக அமர்ந்து கொண்டவள் கண்களில் சிரிப்புடன் எதிரில் இருந்தவளை பார்க்கம்ம்..” என்று புருவம் உயர்த்தி ஜாடை காட்டினாள் வைதேகி 

ஏப்பா ஏறியாச்சுன்னா கதவை சாத்துங்க கிளம்பலாம் நேரமாகுதா இல்லையா?” என்று முன்னால் இருந்து பரமசிவம் குரல் கொடுக்க

இவரு வேற அவசரத்துல பிறந்த மனுஷன் நேரம் காலம் தெரியாமஎன்று மனதில் அர்ச்சனை செய்தவன் வேறு வழியில்லாமல் வைஷாலியின் அருகில் சற்று ஒதுங்கி அமர்ந்தான் 

பாத்து நோய் எதுவும் வந்துற போகுதுஎன்று ஜாடைமாடையாக பேசியவள் முகத்தை திருப்பி கொள்ள 

ஏனோ அவஸ்தையாய் இருந்தது அவனுக்கு பெண்ணின் அருகாமை ஆண்மையின் படபடப்பை அதிகரிக்க செய்ய இதயம் வேகமாக துடித்தது முயன்று தவிப்பை அடக்கியவன் மறந்தும் அவள் புறம் திரும்பவில்லை, அவன் அருகாமையே அவளுக்குள் எழுதப்படாத மெல்லிய உணர்வுகளை தோற்றுவிக்க அவன் அருகில் இருக்கும் நிமிடங்களை உயிராணியாக உள்ளத்தில் பதுக்கி பத்திரபடித்தி கொண்டாள்

பெருமாள்சாமி இந்திராணி  இருவரும் அவர்களின் இருசக்கர வாகனத்தில் வருவதாக கூறிவிட சரியென்று விஷ்ணுவும் துவாரகாவும் முன்னே சென்றனர்

சற்று தூரத்திலேயே காரை நிறுத்தி விட்டு கோவிலுக்கு நடந்தே செல்லபாத்துவாங்க கூட்டம் அதிகமா இருக்கு அப்றம் யாரையும் தேடிட்டு இருக்க முடியாதுஎன்று அன்னம் எச்சரிக்கும் குரலில் கூற

வைதேகி விஷ்ணுவின் கையை பற்றி கொண்டாள் அதிர்வுடன் அருகில் வந்து கொண்டிருந்தவளை பார்த்தான் அவள் முகத்தில் தெரிந்த புன்னகையை கண்டு வெதும்பியவன் அதற்கு ஈடு இணை ஏதும் இல்லை என்று தோன்ற எதுவும் கூறாமல் அவளுடன் நடந்தான் 

புடவை வேற தடுக்குது நடக்கவே முடியல ப்ச் கூட்டம் வேற ரொம்ப கசகசன்னு இருக்குஎன்று சஞ்சளா புலம்பி கொண்டே வர

இப்போ எதுக்கு சரவெடி ரயில் எஞ்சின் மாதிரி சூடா இருக்க கொஞ்சம் நேரம் தானே பொறுத்துக்க மாட்டியா? நீ மட்டும் தான் அதிசயமா புடவை கட்டிருக்குற மாதிரி அலுத்துகிற” 

ம் நீங்க கட்டி பாருங்க அப்ப தெரியும் என்னோட கஷ்டம் என்னன்னுஎன்று சிலுப்பி கொண்டு பதில் அளிக்க

ஏய் சரவெடி யூ மீன் என்ன புடவை கட்ட சொல்ற? நா யாருன்னு தெரியும்ல போலீஸ்காரன் பாத்து பேசுஎன்றான் கண்களை உருட்டி மிரட்டியபடி

ம் போலீஸ்காரன்னு நீங்க தான் சொல்லிக்கிறீங்க ஆனா பாத்தா அப்டி தெரியலஎன்று மிடுக்குடன் கூறிவிட்டு முன்னே செல்ல

எல்லாம் என்னோட நேரம் இவகிட்ட எல்லாம் பேச்சு வாங்க வேண்டியது இருக்குஎன்று புலம்பி கொண்டே சென்றான் துவாரகேஷ்

நடக்கும் பொழுது தடுமாறி கொண்டே வந்தவள் ஒரு கட்டத்தில் கீழே விழ போக அவளை கைதாங்கலாய் தாங்கி பிடித்து நிறுத்தியவன்கட்டி பழக்கம் இல்லன்னா வேற ட்ரெஸ் போட்டுக்க வேண்டியது தானேஎன்று மென்மையாய் உரைத்துவிட்டு விறுவிறுவென முன்னே செல்ல 

இதெல்லாம் தேறாது வைசு இவனுக்காக தான் புடவையே கட்டுன பேசிட்டு போறத பாரு பார்வையில தான் காதல் மாத்த நேரத்துல எல்லாம் ஏதோ வேண்டாத பொண்டாட்டி கைபட்டாலும் குத்தம் கால்பட்டாலும் குத்தமன்ற மாதிரிதான் தத்தி தத்திஎன்று அர்ச்சனை செய்து கொண்டே நடந்தாள்

திருக்கல்யாணம் விமரிசையாக நடந்து கொண்டிருந்தது ஒரு பக்கம் மங்கள வாத்தியம் முழங்க மறு பக்கம் அர்ச்சகர்கள் மந்திரங்கள் ஓதி கொண்டிருந்தனர் அபிஷேகம் முடிந்து பட்டாடை உடுத்தி மாலை அணிவித்து மங்கள நாணை அர்ச்சித்து அர்ச்சகர் ஒருவர் தூக்கி காட்டி பின் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு மூன்று முறை மாலை மாற்றி, மங்கள நாணை அங்கயர்க்கண்ணியின் கழுத்தில் அர்ச்சகர் ஒருவர் சுந்தரேஸ்வரர் சார்பாக பூட்ட அதே சமயம் திருமணமான பெண்கள் அனைவரும் கணவரின் கையால் புது தாலியை கட்டி கொண்டனர் அனைத்தையும் பார்த்து கொண்டிருந்த வைதேகிக்கு உடல் சிலிர்த்தது

மாமா அடுத்த வருஷம் இதே மாதிரி நானும் உங்க கையால தாலி வாங்கிகிவேன்லஎன்றதும் விஷ்ணுவின் முகம் சுருங்கி போனது 

என்ன பதில் சொல்ல இன்னும் நான்கு நாட்களில் நிச்சயம் செய்ய வரவுள்ளனர் வேறு ஒருவனுடன் உன் வாழ்வு அரங்கேற போகிறது என்பதை அறியாமல் வெகுளியாய் கேட்கிறாளேஎன்று எண்ணி மருக

என்ன மாமா தாலி கட்ட மாட்டியா?” என்று ஏக்கம் நிறைந்த பார்வையில் கேட்டவள்இதோ இந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆசியோட இந்த வைதேகிக்கும் இந்த விஷ்ணுவுக்கும்என்று அவன் புஜத்தில் ஒற்றை விரலால் அழுத்திநின்னு போன கல்யாணம் மறுபடியும் நடக்கும் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு நா உனக்கானவ மாமா அவ்ளோ ஈஸியா என்கிட்ட இருந்து உன்ன பிரிக்க முடியாதுஎன்று நிதானமாக உரைத்துவிட்டு மனமார கடவுளை வேண்டிக்கொண்டாள்

திருக்கல்யாணத்தை மனம் குளிர கண்டு மூலவரையும் அன்னயையும் தரிசனம் செய்து விட்டு ஆயிரங்கால் மண்டபம் இசை மீட்டும் தூண்கள் பொற்றாமரை குளம் கோவிலின் பிரமாண்ட கட்டிட கலை என அனைத்தையும் பார்த்து பார்த்து அதிசயித்தவர்கள் அழியாத நினைவுகளாக இருக்க வேண்டி அனைவரும் ஒன்றாய் சேர்ந்து செல்பி எடுத்து கொண்டனர்  

ஒருவழியாய் கோவில் சென்று வீடு திரும்ப வயலில் வேலை இருப்பதாக கூறி பரமசிவம் சென்று விட்டார் மற்றவர்கள் அவரவர் அறைக்குள் சென்று முடங்கி கொள்ள சாவித்ரி இந்திராணி அன்னம் மூவரும் வருத்தத்துடன் பேசி கொண்டிருந்தனர்

என்ன அண்ணி பண்றது நாம ஒன்னு நினச்சோம் அது வேற மாதிரி நடந்து போச்சு இந்த வீட்டுக்கு மருமகளா வர மகளுக்கு குடுத்து வைக்கல அவ்ளோ தான் எத்தனை ஆசையோட இருந்தேன்என்று இந்திராணி மூக்கை உறிஞ்ச

Advertisement