Advertisement

சாவித்ரியும் வைதேகியும் விஷ்ணுவை நடுவில் அமர்த்தி விவாதித்து கொண்டிருக்க தென்றலின் அமைதியை தத்தெடுத்து கொண்டவளை அடிக்கொருமுறை பார்வையால் தீண்டினான் விஜயன்  “ட்ரெயின்ல போலாம் அது தான் சிரமம் இல்லாம இருக்கும் எனக்கும் கொஞ்சம் நல்லா இருக்கும் எனக்கு பஸ் ஆகாதுஎன்று சாவித்ரி தன் அபிப்பிராயத்தை கூற

ட்ரெயின் வேணாம் எனக்கு ஒத்துக்காது ஒரு மாதிரி இருக்கும் பஸ்ல போலாம் அது தான் நல்லா இருக்கும் அதுவும் நைட் ட்ராவல் பண்றது சூப்பரா இருக்கும் என்ன மாமாஎன்று விஷ்ணுவை இடித்து கொண்டு வைதேகி கூற 

விஜயன் எதுவும் பேசமால் அமைதியாக தலை குனிந்த வண்ணம் அமர்ந்திருந்தான் அவனை கண்ட சாவித்ரிநீ ஏண்டா இப்டி சோகத்துல அடிப்பட்டவன் மாதிரி உக்காந்திருக்க நீயும் கூட வர்ற தானே?” என கேட்டதும்

எங்க!” என்று கேட்டு திருதிருவென விஜயன் விழிக்க 

அவன் கிட்ட என்ன கேட்டுகிட்டு அவன் வருவான் நம்ம என்ன முடிவு பண்ணாலும் சார் அதுக்கு மறுப்பு சொல்ல மாட்டாருஎன்று வைஷாலியை பார்த்து கொண்டே கூறினான் விஷ்ணு

உணவருந்தி முடித்து கைகழுவி எழுந்து கொண்டவளை பார்த்த சாவித்ரிஏய் நீ என்னடி ஒண்ணுமே சொல்லாம போற!” 

எல்லாரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க நீங்க எதுல போனாலும் சரி பின்னாடி எதுவும் பேசமா வருவேன் இப்போ கொஞ்சம் வெளிய வேலை இருக்கு நா போய்ட்டு வந்துடுறேன்என்று சாவித்ரியிடம் பதில் மொழிந்துவிட்டு அறைக்குள் சென்றுவிட

இது தான் சமாதானம் செய்ய சரியான நேரம் என்று பைக் சாவியை எடுத்து கொண்டு வேகமாக வெளியே சென்றவனை கண்ட விஷ்ணுஉள்ள அவ்ளோ பேசிட்டு இப்போ சமாதனம் பண்ண ட்ரை பண்றயா? இருடி உன்ன என்ன பண்றேன் பாரு!” என்று மனதில் கருவிக்கொண்டவன் அறையிலிருந்து வெளிப்பட்ட வைஷாலியை அழைத்து காதில் ஏதோ கிசுகிசுக்க 

புன்னகை புரிந்த முகத்துடன்நீ சொல்லிட்டல நா பாத்துக்கிறேன்என்று விட்டு சாவித்திரியிடம் விடை பெற்று கொண்டு கிளம்பினாள் 

இத்தனைக்கும் நடுவில் எதையும் உணராது கண்ணும் கருத்துமாக உணவில் கவனத்தை செலுத்தி கொண்டிருந்தான் துவாரகாபாரு! இங்க என்ன நடக்குதுன்னு கொஞ்சமாவது நிமிர்ந்து பாக்குறானா…! டேய் போதும் நைட்டு சாப்ட்டுக்கலாம் இப்போ கொஞ்சம் எனக்கும் மிச்சம் வை நா இன்னும் சாப்பிடவே ஆரம்பிக்கல”  

உன்ன யாரு சாப்பிட வேணாம்னு சொன்னது போட்டு சாப்பிட வேண்டியது தானே? பந்திக்கு முந்து படைக்கு பிந்துன்னு சும்மாவா சொல்லிருக்காங்க பசி இருக்கும் போது வெட்டியா என்ன பேச்சு வேண்டியது கிடக்குஎன்ற அதட்டல் குரலில் கூறியவன் வயிறு முட்ட உணவை விழுங்கிவிட்டு 

நா ஒரு ஐடியா சொல்றேன் பஸ் ட்ரெயின் எதுவும் வேணாம்” 

நடந்து போலாம்னு சொல்றியா?” என்று விஷ்ணு நக்கல் பேச

ப்ச் சொல்ல விடுடாஎன்றவன்ஒரு வேன் பிடிச்சு போகலாம் எல்லாருக்கும் சௌகரியமா இருக்கும்! நினைச்ச நேரத்துல வண்டிய நிப்பாட்டி டீ காபின்னு குடிச்சுக்கலாம் சொன்ன நேரத்துக்கு முன்னாடியே ஊர் போய் சேந்துறலாம் அதனால இப்போ நா சொல்ல வறது என்னன்னா..!இன்னைக்கு நைட்டே கிளம்புறோம் மதுரைக்கு சரியா!” என்று பயணத்திற்கான தீர்வை முடிவாக கூறிவிட

ம்ம்ம்இந்த யோசனை கூட நல்லா தான் இருக்கு அப்டியே பண்ணிறலாம்என்ற சாவித்ரிபரவாயில்லடா உனக்கு கூட மூளை வேலை செய்யிதுஎன்று மெச்சுதலாய் கூறியவரை முறைத்து பார்க்க

சரி சரி முறைக்காத மூளை இருக்குன்னு தானே சொன்னேன் இல்லன்னு சொல்லலயே!” என்றவர் விஷ்ணுவிடம் திரும்பிமாமாகிட்ட நா சொல்லிடுறேன் மத்த ஏற்பாடு எல்லாத்தையும் நீங்களே பாத்துக்கோங்க இன்னைக்கு நைட்டே இங்க இருந்து கிளம்பலாம் இப்போவே போன் பண்ணி மாமாவ வர சொல்லிடுறேன்என்று கூறியவர்நா கொஞ்சம் அமிர்தா வீடு வரைக்கும் போய்ட்டு வறேன் நீ அவனுக்கு சாப்பாடு போடும்மாஎன்று வைதேகியிடம் கூறிவிட்டு செல்ல

விஷ்ணு துவாரகாவின் கையை சுரண்டினான்என்னடா என்ன வேணும்?” 

சஞ்சு வர்றதுக்கு ஆன்ட்டி கிட்ட நீ தான் பர்மிஷன் கேட்கணும்என்று கெஞ்சலாக கேட்க

நீ கேட்டா அவள அனுப்ப மாட்டேன்னா சொல்ல போறாங்கஎன்று எகத்தாளமாக கேட்டவனை முறைத்து பார்த்த விஷ்ணு

ஆமா அனுப்ப மாட்டாங்க! எங்கயும் அவங்க பொண்ண தனியா விட்டதில்லை அதுவும் இல்லாம சஞ்சுவும் ஆன்ட்டிய விட்டுட்டு வர மாட்டா சோ…”என்று இழுக்க

நா கூப்டனுமாக்கும் அவ வரலன்னா ஊர்ல திருவிழா நடக்காத இல்ல நீங்க யாரும் போக மாட்டீங்களா?” என்று நக்கலாக கேட்டான் துவாரகேஷ்

எல்லாரும் போறோம் அவள மட்டும் தனியா எப்டிடா விட்டுட்டு போறது, காலேஜ் லீவ் தானே நாம எல்லாரும் ஒரு வாரம் அங்க தங்கியிருப்போம் அதுவரைக்கும் அவ மட்டும் இங்க தனியா இருக்கணும் அதான் சொன்னேன்! அதுமட்டுமில்ல ரொம்ப பயந்து போயிருக்கா வெளிய எங்கயாவது கூட்டிட்டு போனா அவளுக்கு கொஞ்சம் மைண்ட் ரிலாக்ஸ் ஆன மாதிரி இருக்கும்என்று விளக்கம் அளிக்க

இருவரின் உரையாடல்களை பொறுமையாக கேட்டு கொண்டிருந்த வைதேகி விஷ்ணுவை பார்த்துமாமா நீ பேசாத நா பேசிக்கிறேன்என்று விட்டுஒரு விஷயம் சொன்னா சரின்னு உன்னோட வாயில இருந்து வராதா..! என்னமோ நீதிபதி மாதிரி கேள்வியாகேட்டுகிட்டு இருக்க, அவள கூட்டிட்டு வர்றது உன்னோட பொறுப்பு சரின்னு சொல்லிட்டு போகுறது விட்டுட்டு ரொம்ப தான் பண்றஎன்று சலித்து கொண்டவள்

நீ வா மாமா பெரிய மாமா உன்கிட்ட பேசணும்னு சொன்னாரு நாம போலாம்என்று இழுத்து கொண்டு செல்ல துவாரகாவை பார்த்து நமட்டு சிரிப்பை உதிர்த்து கொண்டே சென்றான் விஷ்ணு

வைதேகி ஒருமையில் பேசியதை கண்டு திகைப்பில் ஆழ்ந்திருந்தவன்நா என்னடா அப்டி தப்பா பேசிட்டேன் பொசுக்குன்னு அண்ணன்ற மரியாதை இல்லாம பேசிட்டு போறாஎன்று தனக்கு தானே போசி நொந்து கொண்டே எழுந்து கைகழுவ சென்றான்

வெளிய செல்கிறேன் என கூறிவிட்டு சென்றவள் இன்னும் வாசலில் அவனுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தாள் காரசாரமாகஇங்க பாருங்க விஜயன் உங்களுக்கும் எனக்கும் ஒன்னுமில்ல, வெறும் பிரெண்டா இருப்போம்னு சொல்லி என்னோட காதலை கொச்சை படுத்தாதீங்க விஜி காதலுக்கும் நட்புக்கும் வித்தியாசம் இருக்கு! காதல் நட்பா மாறலாம் ஆனா நட்பு எப்பவும் காதலா மாற முடியாது அப்டி மாறுனா அது உண்மையான காதலே இல்ல ஒருத்தர பாத்ததும் மனசுக்கு பிடிச்சு போய் இவங்க தான் நம்ம வாழ்க்கை துணை கடைசி வரைக்கும் இவங்க கூட தான் வாழப்போறோம்னு ஒரு எண்ணம் வரும் அது தான் காதல் அதுல சுயநலம் அடங்கி இருக்கும்!, ஆனா நட்புல அப்டி இல்ல எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாம வர்ற உறவு சுயநலமில்லாதது உங்க மேல நா வச்சுருக்குற சுயநலமான காதலை நட்புன்னு சொல்லி அதோட புனிதத்தை கெடுக்காதீங்க அது என்னால தாங்கிக்க முடியாது விஜிஎன்று அழுத்தமாக கூறியவள்எனக்கு டைம் ஆகுது ப்ளீஸ் வழிய விடுங்க!” என்று கூற 

கைகளை தடுப்பு சுவர் போல வைத்து வழிமறித்து நின்று கொண்டிருந்தவன்உன்ன மாதிரி என்னால பேச முடியாது யோசிக்கவும் முடியாது வைசு அந்த அளவுக்கு நா பக்குவப்பட்டவன் இல்ல வாழ்க்கையில நொந்துபோனவன் மறுபடியும் முதல இருந்து ஆரம்பிக்க எனக்கு விருப்பம் இல்ல அத தாங்கிக்கிற சக்தியும் எனக்கு இல்லஎன்றவன் பேச்சை இயல்பாக்கி கொண்டுநான் தான் மன்னிப்பு கேக்குறேன்ல ரொம்ப சீன் போடாத என்மேல உனக்கு கோபம் இல்ல சும்மா என்ன உசுப்பேத்தி என்னோட விருப்பத்தை சொல்ல வைக்க நீயும் விஷ்ணுவும் பிளான் பண்ணி நாடகம் நடத்துறீங்க, எனக்கு உன்மேல அந்த மாதிரி எண்ணம் வரலம்மா.. தயவு செஞ்சு என்ன புரிஞ்சுக்கோ, கட்டாயப்படுத்தி காதலை வரவைக்க முடியாது எனக்கும் மனசு இருக்கு அது உங்களுக்கு புரிய மாட்டிங்கிது விருப்பம் இல்லன்னு சொன்னா சரின்னு விட்டுற வேண்டியது தானே? நீ என்ன பத்தி என்ன நினைக்கிறேன்னு எனக்கு தெரியாது ஆனா நா உன்ன ஒரு பிரெண்டா அதுக்கு மேல…” என்றவனுக்கு வார்த்தைகள் வராமல் போக அமைதியாக முகத்தை திருப்பி கொண்டு முதுகு காட்டிய வண்ணம் நின்று கொண்டான்

இயல்பையும் மீறி வேதனையின் சாயல் அவன் முகத்தில் அப்பட்டமாய் தெரிய வலி நிறைந்த புன்னகை உதிர்த்தவள்உங்க மனச பத்தி மட்டும் பேசுறீங்க யோசிக்கிறீங்க! எனக்கும் மனசு இருக்கு அதுல உணர்ச்சிகள் இருக்கு சொல்ல முடியாத அளவுக்கு உங்கமேல காதல் அன்பு இன்னும் என்னென்னவோ இருக்கு அத நீங்க புரிஞ்சிக்க மாட்டிங்கிறீங்க!”, என்று தன் மனதின் வலியை வார்த்தைகளில் ஏற்றி கூறியவள்

எதுக்காக என்ன நிராகரிக்கிறீங்கன்ற காரணம் எனக்கு தெரியாது அந்த காரணத்தை நா கேக்கப்போறதும் இல்ல தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்ல!, உங்களோட ஒருத்தியா என்ன எப்போ நினைக்கிறீங்களோ ஏத்துகிறீங்களோ அப்ப உங்க மனசை சொல்லுங்க,

நீங்க என்ன விரும்புறதும் விரும்பாததும் உங்க விருப்பம்! அத நா குறை சொல்ல மாட்டேன், ஆனா! என்ன நேசிக்க வேணாம்னு சொல்லாதீங்க அந்த அளவுக்கு உங்களுக்கும் எனக்கும் நடுவுல இப்போதைக்கு நெருக்கமான உறவுன்னு எதுவும் இல்ல, பிரெண்டுன்னு சொல்றிங்க ஆனா உங்க மனசுகிட்ட கேட்டு பாருங்க அது வெறும் பிரெண்டா இல்ல வேற ஒரு உறவான்னு உங்களுக்கு தெளிவா சொல்லும்என்று மூச்சு விடாமல் தன் எண்ணத்தையும் ஏக்கத்தையும் அவன் மனதில் பாரமாக இறக்கி வைத்தவள்நா கிளம்புறேன்என்று உணர்ச்சி துடைத்த முகத்துடன் அவனை திருப்பி நேராக கண்களை பார்த்து உரைத்துவிட்டு அவன் மேல் உரசாத வண்ணம் விலகி சென்றவள் எதிரில் வந்த ஆட்டோ ஒன்றில் ஏறிக்கொண்டு இடத்தை கூற ஆட்டோ வேக மெடுத்தது 

அதுவரை அவள் பேசியதை அவன் மனம் கிரகித்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தது அவள் கூற்றில் தவறில்லையே? என்று அவன் மனம் நிதர்சனத்தை உரைத்தாலும் மூளை அவன் மனதை அடக்கி தன்னாட்சி செய்ய தொடங்கியது  “அவள் மேல் விருப்பம் கொள்ள வேண்டாம்  வைஷ்ணவி தான் உன்னுடைய வாழ்க்கை அவள் நினைவு தான் இருக்க வேண்டும் அவள் செய்த செயல்களை நினைவுகூர்ந்து பார்என்று இம்சிக்க

தலையை உலுக்கி கொண்டு ஒருவழியாய் சுயநினைவு பெற்றவன் எதிரில் வந்தவர்களை பார்க்க முடியாமல் மாடியில் இருந்த  சிறு அறைக்கு சென்று கதவை சாத்தி கொண்டு தலையை இருகைகளால் தாங்கியபடி தொப்பென தரையில் விழுந்து இருதலை கொள்ளியாய் தவித்து கொண்டிருந்தான்அவள் நினைவை அகற்றி இவள் நினைவை புகுத்தவா? அல்லது அவளை மறந்து இவளை ஏற்று கொண்டு ஆனந்த வாழ்வை அனுபவிக்கவா? இவள் இப்போது வந்தவள்! அவள் துன்பத்திலும் உடன் இருந்தவள்! அவளோ விரும்பவில்லை என விட்டு சென்றவள்! இவளோ எனக்காக அனைத்தையும் விட்டு கொடுப்பவள்! யாருக்கு முக்கியத்துவம் அளிக்க, அவளோ வேறு ஒருவனுடைய மனைவி அவளை நினைத்து கொண்டிருப்பது தவறு காம எண்ணம் கொண்டவனுக்கு தனக்கும் சிறிதும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும், இவளோ தனக்காக திருமணம் வேண்டாம் என்று வந்த வரன்களையெல்லாம் மறுத்து கொண்டு வருகிறாள் யாரை ஏற்பது எதை விடுவதுஎன்று சித்தம் கலங்கியவன் போல தனக்கு தானே எந்த வாழ்வை ஏற்று கொள்வது என பேசி கொண்டிருந்தான் 

Advertisement