Advertisement

சிறுப்பிள்ளையாய் உறங்கி கொண்டிருந்தாள்,ஆனால் உறக்கத்திலும் அவள் முகம் வேதனையை பிரதிபலித்ததுசொல்ல தெரியல ஆனா உனக்கு ஒரு கஷ்டம்னா என்னால தாங்கிக்க முடியாது நீ என்னோட பிரெண்ட் அவ்ளோதான்என்று கூறவும்

அவன் மனம்வெறும் பிரெண்ட் மட்டும் தானா?” என்று கேள்வி எழுப்ப விடையில்லா வினாவாய் முற்று புள்ளி வைத்தவன் அவள் நெற்றியில் இதழ்பதித்து போர்வையை போர்த்திவிட்டு கதவை பாதி சாத்திய நிலையில் வைத்துவிட்டு விஷ்ணுவின் அருகில் வந்து படுத்து கொண்டான்.

மறுநாள் காலை அவசர அவசரமாக கிளம்பி கொண்டிருந்தான் விஷ்ணு துவாரகா அலைபேசியில் அழைக்க அந்த அவசரத்திலும் அழைப்புக்கு பதில் கூறினான் விஷ்ணுசொல்லுடா! ம் கிளம்பிட்டேன் ஒரு அஞ்சு நிமிஷத்துல வந்துடுறேன்என்றவன்நீ எங்க இருக்க?” என்று கேட்க

மறுமுனையில்வீட்டுக்கு முன்னாடி தாண்டா இருக்கேன்என்ற பதிலில் கடுப்பானவன்

அட ச்சீ பக்கி உள்ள வா வாசலுக்கும் வீட்டுக்கும் ஒரு போன்என்றாவரே அழைப்பை துண்டித்துவிட்டு திரும்ப சபரி அரக்கப்பரக்க எழுந்தமர்ந்தான், அவன் பரபரப்பை கண்ட விஷ்ணுஏன் இவ்ளோ அவசரமா எந்திரிக்கிறீங்க இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தானேஎன்க

இல்ல விஷ்ணு இப்போவே டைம் ஆச்சு சீக்கிரம் எந்திரிக்கணும்னு தான் அலாரம் செட் பண்ணேன் ஆனா நல்லா தூங்கிட்டேன் போல எதுவும் கேக்கலஎன்று சங்கடமாய் புன்னகைத்து கூற

நீங்க தான் அலாரம் வச்சதா சாரி சத்தம் கேக்க முடியாம நான் தான் ஆப் பண்ணேன்” 

பரவாயில்ல விஷ்ணு உங்களுக்கு அலாரம் வைக்காமலேயே சீக்கிரம் எந்திருச்சு பழக்கம் நமக்கு அப்டியில்ல நைட் வேலைக்கு போய்ட்டு வந்தா பகல் எல்லாம் சாப்பிடாம தூங்க வேண்டியது பகல்ல வேலைக்கு போனா சீக்கிரம் தூங்கி மறுநாள் காலையில சீக்கிரம் எந்திரிக்கணும்னு அலாரம் செட் பண்ணி! பிடிக்குதோ இல்லையோ அவசர அவசரமா கிளம்பி டைம்முக்கு உள்ள போய் என்ட்ரி ஆகனும் ஐடி இல்லையா? சோ அலாரம் வச்சு எந்திரிச்சே பழக்கம்என்று தன்னிலை விளக்கம் அளிக்க

ம் ஓகே சபரி எனக்கு டைம் ஆச்சு வீட்டுல சொல்லிட்டு போறேன் உங்களுக்கு என்ன வேணுமோ தயங்காம கேளுங்க சங்கடபட வேண்டாம் இது உங்க வீடு மாதிரி நினைச்சுக்கோங்கஎன்று கூற

சிரித்து கொண்டேசரி விஷ்ணுஎன்றவன்விஜி எங்க ஆளையே காணோம் வெளிய எங்கயும் போயிருக்கானா?” 

அவன் ஆறு மணிக்கு எந்திரிச்சு ஜாகிங் போனான் இன்னும் வரல, எனக்கு டைம் ஆச்சு நா கிளம்புறேன் அவன் வந்தா எனக்கு கால் பண்ண சொல்லுங்கஎன்று கூறி விடைபெற்றவன் சமையலறைகுள் நுழைந்தான் 

அத்தைஎன்று அழைத்ததும் கேட்டும் கேட்காதது போல சமையல் வேலையை கவனித்து கொண்டிருந்த சாவித்ரியின் அருகில் சென்றவன் அவரை தன் புறம் திருப்பிஇங்க பாரு சவி குட்டிஎன்று அழைக்க

டேய் அந்த மாதிரி கூப்பிடாதா அது என்னோட வீட்டுக்காரர் செல்லாம கூப்பிடுறதுஎன்று முறைப்பு காட்டி கூற

பாருடா கோபத்தை இருந்தாலும் உனக்கு இவ்ளோ கோபம் ஆகாது சவி குட்டிஎன்று வம்பிலுத்தவன்நா எந்த காரியம் பண்ணாலும் அதுல ஒரு காரணம் இருக்கும்ன்னு எல்லாருக்கும் தெரியும்? ஆனா.. இந்த கல்யாண விஷயத்துல மட்டும் ஏன் என்மேல இவ்ளோ கோபப்படுறீங்க!, அப்பா அம்மாவ விடுங்க நீங்க தானே என்ன தூக்கி வளத்திங்க அப்றம் ஏன் அத்தை என்மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லாம போச்சு! உங்க வளர்ப்பு மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?” என்று வருத்தத்துடன் விளம்பியவனை இமைக்காது பார்த்தார் சாவித்ரி

காரணம் என்னன்னு இப்போ என்னால சொல்ல முடியாது அத்தை ஆனா சொல்ல வேண்டிய காலம் வரும் போது கண்டிப்பா சொல்லுவேன் அப்ப எல்லாரும் நா கல்யாணத்த நிறுத்தினது சரின்னு தான் சொல்லுவீங்க, என்கூட பேசாம மட்டும் இருக்காதீங்க அத்தை ரொம்ப கஷ்டமா இருக்கு நா அம்மா அப்பா கிட்ட இருந்தத விட உங்க கூட தான் அதிகமா இருந்துருக்கேன் நீங்க யாரும் பேசாம இருக்குறது நா  அனாதைன்ற மாதிரி ஃபீல் பண்ண வைக்கிது மனசு ரொம்ப வலிக்கிது அத்தைஎன்று வேதனை இழையோடும் குரலில் கூற

சாவித்ரியின் கண்கள் கலங்கி அடிவயிறு பதறி துடித்ததுசாரிடா விஷ்ணு நா உன்ன ரொம்ப கஷ்டபடுத்திட்டேன் அனாதைன்னு சொல்லாதடா மனசு வலிக்கிது, எனக்கு குழந்தை இல்ல ஆனா அந்த குறைய தீத்து வச்சது நீயும் வைதேகியும் தான் நீ என்னோட செல்லம்டா உன்மேல நம்பிக்கை வைக்காம போனது என்னோட தப்பு தான்

ஆனா அண்ணனும் அக்காவும் அன்னைக்கு தலைகுனிஞ்சு நின்னத நினைச்சு அவங்களுக்காக வருத்தப்பட்டேனே தவிர உன்ன நினைக்காம போய்ட்டேன் நீ எதுவும் சொல்ல வேணாம்! நீ எது பண்ணாலும் அதுல ஒரு காரணம் இருக்கும் இப்போ நா உன்ன முழுசா நம்புறேன்என்று அவனை அணைத்து கொண்டவரிடம் இருந்து விசும்பல் ஒலி கேட்டது

மாமியாரும் மருமகனும் சமாதானம் ஆகிட்டீங்கன்னா கிளம்பலாமா? டைம் ஆச்சு அந்த ஆளுவேற எங்கயோ கிளம்புறாராம் இப்போ தான் போன் பண்ணி சொன்னாருஎன்று அனுமதியில்லாமல் ஆஜரானான் துவாரகேஷ் 

கண்ணு வைக்காதடா கொள்ளி கண்ணா பொறுக்காதே உனக்குஎன்றவன்சரி அத்தை நா போய்ட்டு வறேன்என்று கன்னத்தை தொட்டு முத்தமிட்டவன்விஜியோட பிரெண்ட் வந்திருக்காங்க அவங்களுக்கு என்ன வேணும்னு கேட்டு செஞ்சு கொடுங்க கேக்குறதுக்கு கொஞ்சம் கூச்சபடுவான்என்று கூற

நா பாத்துகிறேன் நீ போய்ட்டு சீக்கிரம் வா அண்ணா உன்கிட்ட பேசணும்னு சொன்னாரு” 

அண்ணா…” என்று விஷ்ணு இழுக்க 

டேய் உன்னோட அப்பாடா எனக்கு அண்ணன் தானே! அத தான் சொன்னேன் அப்றம் மாமா டிக்கெட் நீ போடுறயா இல்ல அவரு போடவான்னு நேத்து நைட்டு என்கிட்ட கேட்டாரு காலையில உன்கிட்ட கேட்டுக்க சொன்னேன் நானே பேசிட்டேன்ல அப்றம் அவரு கேக்குறது என்ன? சொல்லு மாமா போடட்டுமா இல்ல நீயே புக் பண்ணிடுறியா?” 

அத்தை ஈவ்னிங் வந்து சொல்றேன் இப்போ டைம் ஆச்சு நம்ம ரெண்டுபேரையும் முறைச்சு முறைச்சு பாத்துட்டு நின்னுகிட்டு இருக்கான் கோபம் வந்தாலும் வந்துரும்என்று சிரித்து கொண்டே கூற

டேய் நா பாட்டுக்கு சிவனேன்னு நிக்கிறேன் என்ன ஏண்டா கோர்த்து விடுற! எவ்ளோ நேரம் பேசனுமோ பேசுங்க நா வேணான்னு சொல்ல மாட்டேன் ஆனா இப்போ சீக்கிரம் போலாமேஎன்று கூறியவனை 

வழிவிட்டு நின்னாதான் என்னவாம்என்று இடித்து கொண்டு சமையலறைகுள் நுழைந்த சஞ்சளா 

மாடு மாதிரி வழியில நின்னுட்டு இருக்கிங்களே கொஞ்சம் வழி விட்டு நிக்க வேண்டியது தானே?” என்று சிடுசிடுத்துவிட்டு 

ஆன்ட்டி அம்மா மசால் பொடி கேட்டாங்க ஈவ்னிங் திருப்பி கொடுக்கிறேன்னு சொல்லிருக்காங்கஎன்று டம்ளரை நீட்ட 

அதெல்லாம் திருப்பி ஒன்னும் கொடுக்க வேணாம் வாங்கிட்டு மட்டும் போ உங்க அம்மாகிட்ட எத்தனை தடவை தான் சொல்றது இப்படியெல்லாம் பிரிச்சு பாக்கதன்னுஎன்று பேசி கொண்டே அவளுக்கு தேவையான பொருளை எடுத்து கொடுக்க

நா என்னடி பண்ணேன் வழி விடுங்கன்னு சொல்லிருந்தா விலகியிருக்க போறேன் அதுக்கு இப்டியா இடிச்சு தள்ளிட்டு உள்ள போவஎன்று பாவமாய் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறியவன் 

டேய் வாடா போலாம்என்று  அவளை பார்க்க கண்சிமிட்டி அவனுக்கு பழிப்பு காட்டினாள் சஞ்சளா அவள் செயலில் திடுகிட்டவன் வேகமாக முகத்தை திரும்பி கொள்ள 

இருவரின் செய்கையை பார்த்துவிட்ட விஷ்ணுபோதும் போதும் பச்ச பிள்ளைய பக்கத்துல வச்சுக்கிட்டு இப்படியெல்லாம் விளையாட கூடாது சொல்லிட்டேன் பாத்துக்கோங்கஎன்று பொதுவாக யாருக்கோ உரைப்பது போல கூறிவிட்டு முன்னே சென்றுவிட, தலையை சிலிர்த்து கொண்டு இதழில் உறைந்த புன்முறுவலை ஏந்தி கொண்டபடி துவாரகேஷ் ஓட்டமும் நடையுமாக விஷ்ணுவின் பின்னே செல்ல அவனின் செயலை கண்டு வாய் மூடி சிரித்தவள்என்னோட செல்ல மாமாஎன்று ஆசையோடு மனதில் கொஞ்சி கொண்டு திருப்பி பார்க்க சாவித்ரி விசித்திரமாய் பார்த்து கொண்டிருந்தார் 

அவர் பார்வையை கண்டு மலங்க விழித்தவள்என்ன ஆன்ட்டி அப்டி பாக்குறிங்க?” 

உனக்கு ஒன்னுமில்லையே நல்லா தானே இருக்கஎன்று பதட்டமும் பயமும் கலந்த குரலில் கேட்க

ஏன் கேக்குறிங்க எனக்கென்ன நல்லா தான் இருக்கேன்!” என்றவளிடம்

இல்ல தனியா சிரிச்சிட்டு இருந்தியே அதான் காத்து கருப்பு எதுவும் அடிச்சிருச்சோன்னு பயந்துட்டேன்என்றதும் சத்தமாக நகைத்தவள்போங்க ஆன்ட்டி உங்களுக்கு எப்பவும் விளையாட்டு தான்என்றுவிட்டு டம்ளரை வாங்கி கொண்டு விட்டால் போதுமென சென்று விட்டாள்

தொடரும்….

தூரத்தில் தோன்றிடும் மேகத்தை போலவே நான் உனை பார்க்கிறேன் அன்பே 

சாரலாய் ஓர் முறை நீ என்னை தீண்டினாய் உனக்கது தெரிந்ததா அன்பே 

என் மனம் கானலின் நீர் என ஆகுமா கைகளில் சேருமா அன்பே

Advertisement