Advertisement

விஜயன் தரையில் அமர்ந்திருக்க வைஷாலி வீம்புடன் முகத்தை திருப்பி கொண்டு கட்டிலின் மேலே அமர்ந்திருந்திருந்தாள்இவங்களுக்கு இதே வேலையா போச்சு! எப்ப பாரு ரெண்டும் சண்டை போட்டுக்கிட்டு எதிரும் புதிருமா தான் இருக்குதுக! இவங்கள என்ன தான் பண்றதுஎன்று தலையில் அடித்து கொண்டவன் விஜயனின் கெஞ்சல் குரல் கேட்டு என்ன நடக்கிறது என்பதை கேட்க தொடங்கினான்

சாரிடி ஏதோ கோபத்துல பேசிட்டேன் நீ இந்த அளவுக்கு ஃபீல் பண்ணுவன்னு எனக்கு தெரியாது ஒரு பிரெண்டா மட்டும் தான் உன்ன பாக்குறேன்  நீ காதல் பன்றேன் பேர் வழின்னு என்கிட்ட வந்து பேசுறது நிஜமாவே எனக்கு பிடிக்கல சாரிஎன்று கூற 

அவன் பேசியதை கேட்டு கொண்டிருந்தவள் வெடுக்கென முகத்தை திருப்பி கொண்டு எழுந்து செல்ல எத்தனிக்க வேகமாக அவளின் கைப்பற்றி நிறுத்தியவன்சாரி.. வைசு நீ பேசமா மட்டும் இருக்காத எனக்கு என்னவோ மாதிரி இருக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடி ஏதோதோ பண்ணுது ப்ளீஸ்டி வாயாடி என்கூட சண்டை போடு வேணுன்னா நா பேசுனதுக்கு நாலு அடிகூட அடிச்சிறு இப்டி பேசமா மட்டும் இருக்காதா ப்ளீஸ்என்று முகத்தை சுருக்கி மண்டியிட்டு  கெஞ்ச

அவன் அமர்ந்திருந்த கோலம் பேசும் பேச்சு என அனைத்தும் ஒன்று சேர்ந்து விவரிக்க முடியாத மகிழ்ச்சியை தருவிக்க  வெளியே அதுவும் அவன் முன்னிலையில் எதையும் காட்டி கொள்ள விருப்பமில்லாது கோபமாகநா போகணும் விஜயன் எனக்கு வேலை இருக்கு நீங்க தான் சொல்லிட்டிங்களே என்ன விட்டுருன்னு பின்ன எதுக்கு இந்த கரிசனம் கெஞ்சல் எல்லாம்!, உனக்கும் உன்னோட காதலுக்கும் பெரிய கும்பிடுன்னு போட்டுட்டு போனீங்களேஎன்று குத்தி காட்டியவள்எனக்கும் ரோஷம் இருக்கு நீங்க அப்டி பேசுனதுக்கு அப்றமும் உங்ககிட்ட வலிய வந்து பேசி அவமானபடுறதுக்கு எனக்கு என்ன கிறுக்கா பிடிச்சுருக்கு உங்க வேலைய போய் பாருங்க விஜயன்என்று உரிமையான அழைப்புகள் அன்னியமாகிட 

அவன் முகம் வேதனையில் துவண்டு போனது இதுவரை அவனை ஒருமையில் வா போ என்று அழைத்தவள் இன்று பன்மையில் அதுவும் மூன்றாம் நபரை போல பாவித்து பேசுவது அவனுக்கு வருத்தத்தை தருவிக்கசாரிடி  வேத்து மனுஷன் மாதிரி பேசாத ரொம்ப கஷ்டமா இருக்கு நா பேசுனது தப்பு தான் அதுக்கு நா என்ன பண்ணனும்னு சொல்லு பன்றேன்என்று இறைஞ்சினான்

அமைதியாக அவனை பார்த்தவள் அவன் கையை தன் கையில் இருந்து பிரித்து எடுத்துவிட்டு எதுவும் பேசாமல் வெளியேற வாசலில் நின்று விட்டத்தை பார்த்தவாறு இருவரும் பேசுவதை கேட்டு கொண்டிருந்த துவாரகாவின் தலையில் ணங்கென்று கொட்டு வைத்தவள்இப்டி ஒட்டு கேக்குறயே அறிவில்ல” 

ஆமா ரெண்டுபேரும் ரொமான்ஸ் பண்ணி காதல் ரசம் சொட்ட சொட்ட பேசிட்டு இருந்திங்க பாரு நா ஒட்டு கேக்குறதுக்கு போடி எரும, ஒரு மனுஷன் மன்னிப்பு கேட்டா மன்னிக்கிறத விட்டுட்டு பிகு பண்ணிட்டு வர்ற! இப்போ நீ பேசலன்னு அவன் உன் பின்னாடி கெஞ்சிக்கிட்டு நிக்கிறான் கொஞ்ச நாள் கழிச்சு அவன் பேசலன்னு நீ அவன் பின்னாடி மன்னிச்சிறு மன்னிச்சிருன்னு சுத்திக்கிட்டு இருப்ப என்னமோ.. நீங்க புதுசா.. சண்டை போடுற மாதிரியும், கடைசி வரைக்கும் நீ அவன்கிட்ட பேச மாட்டேன்ற மாதிரியும் நடந்துகிற! எப்டியும் ரெண்டு நாள் கழிச்சு நீயா தான் போய் பேசுவ அத இப்போவே பேசிட்டு போவயாஅத விட்டுட்டு ரொம்ப சீன் போடுற!” என்று அங்கலாய்த்து கொண்டு கூற

டேய் வேணாம் செம்ம கடுப்புல இருக்கேன் என்கிட்ட வாங்கி கட்டிக்கிட்டு போகாத அப்றம் நல்லா இருக்காது பாத்துக்கோ, நா பேசுவேன் பேசமா கூட போவேன் உனக்கென்ன வந்துச்சு ஃபீல் பண்ண வேண்டியவனே பேசமா இருக்கான் நீ ஏண்டா பேசுற போடா பக்கிஎன்று மேலும் ஒரு குட்டு வைத்துவிட்டு போக

தலையை தேய்த்து கொண்டேபோடி கிறுக்கி ஷ்ஷப்பா.. என்ன வலி வலிக்கிது பாக்குறதுக்கு தான் ஈர்க்குச்சி மாதிரி இருக்குறா அடியெல்லாம் மரகட்டைய வச்சு அடிச்ச மாதிரி வலிக்கிதுஎன்றவன் சுவற்றில் எறிந்த பந்தாய் ஏமாற்றத்துடன் வெளியே வந்த விஜயனை பார்த்துஉனக்கு வக்காலத்து வாங்கி பேசுனேன் பாரு என்ன சொல்லணும்என்று நொந்து கொண்டே

உன்ன விஷ்ணு கூப்பிட்டான் போய் என்னனு கேளுஎன்று கூறிவிட்டுஆன்ட்டி பசிக்கிது சாப்பாடு ரெடியாகிருச்சாஎன்று அறைகூவல் விடுத்து கொண்டே துவாரகேஷ் சமையலறை பக்கம் சென்றுவிட 

அறைக்கு சென்ற விஜயன் அமைதியாக கன்னத்தில் கைவைத்த வண்ணம் அமர்ந்திருக்க குளியல் அறையில் இருந்து வெளிப்பட்ட விஷ்ணுஎன்னடா எந்த கப்பல் கவுந்துருச்சுன்னு இப்டி கன்னத்துல கைவச்சுட்டு உக்காந்திருக்கஎன்று முகத்தை துடைத்து கொண்டே கேட்க 

ப்ச் சும்மா தாண்டா“, சுரத்தே இல்லமால் கூறியவனின் அருகில் அமர்ந்தவன் 

என்னாச்சு ரொம்ப டல்லா இருக்குற மாதிரி தெரியிது உன்னோட குரலும் சரியில்ல முகமும் சரியில்லஎன்று பரிவுடன் கேட்க

ஒன்னுமில்லடா சும்மா தான், இந்த வைசுவ புரிஞ்சுக்கவே முடியல நா எத்தனை தடவை கோபமா பேசிறுக்கேன் கேவலமா திட்டியிருக்கேன் அப்பல்லாம் இந்த அளவுக்கு அவ கோபபட்டதில்லை ஆனா நேத்து நைட்டு கோபப்பட்டு பேசுனதுக்கு முகத்தை தூக்கிவச்சுக்கிட்டு பேச மாட்டிங்கிறா என்ன தான் நினைச்சுட்டு இருக்கான்னு தெரியல? அவ பேசமா இருக்குறது எனக்கு தான் என்னவோ மாதிரி இருக்கு!” என்று தன் மனதின் நிலையை அறிந்து கொள்ளாது அவளை பற்றி குறையாய் கூறி அலுத்து கொள்ள

எப்பவும் எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க விஜி அவங்களுக்கும் தன்மானம் இருக்கு குட்ட குட்ட குனிய மாட்டாங்கடா, நான் சொன்னா நீ ஒத்துக்க மாட்டிங்கிற நீயாவும் புரிஞ்சுக்க மாட்டிங்கிற” 

புரியிது நீ சுத்தி எங்க வர்றன்னு இந்த எண்ணத்தை தவிர உனக்கு வேற எதுவுமே தோணாதா?” என்று ஏகத்துக்கும் சலித்து கொள்ள

நா சொல்றதுல தப்பில்லையே! உண்மை அது தானே! உன்னோட மனசுகிட்ட கேட்டுப்பாரு அப்ப தெரியும் நா சொல்றது உண்மையா? இல்லையான்னு?” என்று விடாமல் வாதம் செய்ய

ப்ச் யார்கிட்டயும் கேட்க தேவையில்ல அவ ஜஸ்ட் எனக்கு பிரெண்ட் அவ்ளோ தான்! அத தாண்டி வேற எதுவும் இல்ல எனக்கும் தோணல என்னோட வாழ்க்கையில  ஒருத்திய நினைச்சேன் காதலிச்சேன் முடிஞ்சிருச்சு அந்த நினைப்பே போதும் இந்த வாழ்க்கைக்குஎன்று தத்துவம் பேசியவனை முறைத்து பார்த்த விஷ்ணு

அது இறந்த காலம் எதிர்காலம்னு ஒன்னு இருக்குடா அத பத்தி யோசி, கிடைக்காம போன ஒன்ன நினைச்சுகிட்டு இருக்குறத கோட்டை விட்டுறாத கிடைக்கிறத தக்க வச்சுக்க பாரு இந்த உலகத்துல விலை மதிக்க முடியாத யாரலையும் அவ்ளோ ஈஸியா திருப்பி கொடுக்க முடியாத சிலர் ஏங்கிட்டு இருக்குறது அன்பு, அது தானா உனக்கு கிடைக்கும் போது வேணான்னு தூக்கி எறியாத விஜி சினிமா மாதிரி கடைசி வரைக்கும் முன்னால் காதலியோட நினைவலைகளே போதும்னு டயலாக் பேசாத உனக்கு அது செட் ஆகாது” 

சினிமா டயலாக் எல்லாம் பேசல உண்மைய சொன்னேன் நாளைக்கு என்ன நடக்க போகுதுன்னே தெரியாது? இதுல எதிர்காலத்தை பத்தி யோசிக்க சொல்ற?” என்று வெற்று புன்னகை புரிந்தான்

நீ எப்படா புத்தரோட சிஷ்யன் ஆனா தத்துவமெல்லாம் பயங்கரமா இருக்குஎன்று கேலி பேச

அது தாண்டா நிதசர்சனம்என்றவன்நாளைக்கு என்ன? அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்னு நமக்கே தெரியாது நாம நினைக்கிறது ஒன்னா இருக்கும் ஆனா நடக்குறது வேற ஒன்னா இருக்கும் உண்மைதானே!, அன்புக்கு நா ஏங்கல நீங்க எல்லாரும் இருக்கும் போது நா எதுக்கு கிடைக்கிறத கிடைக்காத மாதிரி நினைச்சு ஏங்கணும் இந்த குடும்பமே போதும் இந்த அன்பான கூட்டுக்குள்ள நானும் ஒருத்தன் இருக்கின்றதே எனக்கு சந்தோஷமா இருக்கு நா இப்டியே இருந்துட்டு போறேன், அவ பேசாட்டியும் பரவாயில்ல ஆனா நீ மட்டும் இப்டி எட்டு கட்டி பேசாதடாஎன்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு கூற

யாரு? நா எட்டு கட்டி பேசுறேன் போடா…!உண்மைய சொன்னா அதுக்கு உங்க பாஷையில இப்டி ஒரு பேரா இருக்கட்டும் நா எதுவும் சொல்லல ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன்” 

இப்போ தான் எதுவும் சொல்லலன்னு சொன்ன!” என்று கேலி செய்ய

இந்த நக்கல் நய்யாண்டிக்கு ஒரு குறைச்சலும் இல்லஎன்று நொடித்து கொண்டவன்சின்ன பிள்ளைக்கு மிட்டாய் கொடுத்து ஏமாத்துற மாதிரி வைஷ்ணவிய நினைச்சுக்கிட்டு கடைசி வரைக்கும் வாழ்ந்திருவேன்னு நீயே உன்னோட மனச ஏமாத்திட்டு இருக்க! இன்னைக்கு இல்லாட்டியும் என்னைக்காவது ஒருநாள் உனக்கு புரியும் நீ உணர்வ வைஷாலி மேல உனக்கு இருக்குற காதல!, நானும் பாக்குறேன் அப்ப இந்த முகத்தை எங்க வச்சுப்பேன்னுஎன்று சற்று கோபம் கலந்த குரலில் கண்டனமாய் கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறிட

இப்போ என்னாச்சுன்னு இப்டி பேசிட்டு போறான் ஒருவேளை அவன் சொல்ற மாதிரி இருக்குமோ..?” என்று தன் எண்ணத்தை உணர்ந்து திடுக்கிட்டவன் தலையை சிலுப்பி கொண்டுச்சே நம்மமேலேயே சந்தேகபட வச்சுட்டு போய்ட்டானேஎன்று அலுத்து கொண்டவன் நாளை செல்வதா அல்லது அதற்கு மறுநாள் ஊருக்கு செல்வதா என்று டைனிங் டேபிளில் நடந்து கொண்டிருந்த வட்டமேசை மாநாட்டில் விஜயனும் சென்று ஐக்கியமானான்

தொடரும்

கோலம் போட வாசல் உள்ளது

எந்தன் வீடோ வாசல் அற்றது

உந்தன் உள்ளம் கோயில் போன்றது

அதனால் தானே நான் தீபம் தந்தது

கண்கள் காணும் தூரத்தில்

வாழும் வாழ்க்கை போதும்

பாரம் கொண்ட மேகங்கள்

நீரால் மண்ணை தீண்டும்

எந்தன் காதல் ஒரு வழி

திரும்பி செல்லு கண்மணி

Advertisement