Advertisement

நீயா வர்றயா இல்ல அடிச்சி இழுத்துட்டு போகவா நீயா வந்தா பிரின்சிபில் கிட்ட போலாம் இல்ல நா அடிச்சு இழுத்துட்டு போனேன்னா போலீஸ் ஸ்டேஷன் தான் லாக்கப் தான் களி தான்! ஈவ் டீஸிங் பண்ணா என்ன தண்டனை தெரியுமா? ஆயுள் தண்டனை,பணம் கொடுத்து வெளிய வந்திறலாம்னு மட்டும் நினைக்காத அது நடக்காதுஎன்று அழுத்தமாக திடமான பார்வையை செலுத்தி கூற அமைதியாக வந்தான் கார்த்திக்

கல்லூரி முதல்வர் சிவசுப்ரமணியம் கல்லூரி முடிந்து ஒரு மணி நேரமாகியும் கிளம்பி செல்லாமல் தனது அறையில் தான் இருந்தார் மாணவர்கள் சென்ற பின் காலியாக இருக்கும் கல்லூரி வளாகத்தை தன் பார்வையில் பதிய வைத்தே செல்வார் கல்லூரி முதல்வர் பதவி ஏற்றத்திலிருந்து தினசரி கடமையாக செய்து கொண்டிருக்கிறார் 

கல்லூரி வளாகத்தை சுற்றி பார்க்க கிளம்பியவர் வேகமாக உள்ளே நுழைந்தவனை மூக்கு கண்ணாடியை அரை இஞ்ச் இறக்கி புருவம் சுருக்கி பார்த்துவிட்டு அருகில் நின்றிருந்தவன் வாயில் ரத்தம் வருவதை கண்டுஎன்னாச்சு யார் நீங்க?” என்று கேட்க

என்ன சார் காலேஜ் நடத்துறீங்க ஒழுக்கமே இல்ல காலேஜ்ல போன் நாட் அலோவ்டு இல்லையா? இது தான் நீங்க காலேஜ் நடுத்துற லட்சணமாஎன்று எடுத்த எடுப்பிலேயே பொறிய

மிஸ்டர் என்ன பிரச்னைன்னு சொல்லுங்க அத விட்டுட்டு நீங்க பாட்டுக்கு உங்களுக்கு தான் பேச தெரிஞ்சவர் மாதிரி பேசுறீங்கஎன்று காரமாக கேட்க

இந்த காலேஜ் ஸ்டுடெண்ட்டே சொல்லுவா கேளுங்க உங்க காலேஜ் லட்சணத்தைஎன்று ரௌத்திரத்துடன் கூறியவன்சொல்லுஎன்று உடன் வந்திருந்தவளை பார்த்து ஊக்க நடந்ததை கூறினாள் சஞ்சளா

இடியட் படிக்க வந்த இடத்துல நீ இப்படியெல்லாம் பொறுக்கி தனம் பண்ணிட்டு இருக்கயாஎன்று பொங்கியவர் குற்றவாளியாய் நின்றிருந்தவனின் கன்னத்தை பழுது பார்த்துவிட்டு

உனக்கு கொடுக்குற பனிஸ்மெண்ட் இந்த காலேஜ்ல படிக்கிறவங்களுக்கு உதாரணமா இருக்கட்டும்!, இப்போவே உன்ன டிஸ்மிஸ் பண்றேன் ப்ளாக் மார்க் வச்சா எங்கயும் போய் படிக்க முடியாது நீயெல்லாம் படிச்சி என்னத்த உருப்பட போறஎன்று வேகமாக செயலில் ஈடுபட்டவர் டிசியை கிழித்து அவன் கையில் திணித்துவிட்டு

இனி இந்த காலேஜ் பக்கமே உன்ன பாக்க கூடாது கெட் அவுட்என்று கத்த 

கார்த்தியினால் மேற்கொண்டு எதுவும் பேச முடியவில்லை பிரன்சியின் கோபம் எந்த அளவுக்கு போகும் என்று அவன் அறிந்ததே, பல தருணங்களில் பல முறை எச்சரித்திருக்கிறார் ஆனால் இளம் வயது கேட்டால் தானே! என்றும் போல் அல்லாது இன்று சற்று அதிகமாகி போனது அவரது கோபம்! அதையெல்லாம் அவன் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை சட்டையில் படிந்த தூசை தட்டிவிட்டு நிற்பது போல தெனவெட்டாய் நின்று கொண்டிருந்தான் 

சாரி சார் எங்க தப்பு தான் செல்போன் அலோ பண்ணிருக்க கூடாது அவங்க அவசர தேவைக்காக தான்  அலோ பண்ணோம் ஆனாஅது இந்த மாதிரி வந்து நிக்கிது, இவனால இந்த காலேஜுக்கே கெட்ட பேர் பல முறை வான் பண்ணிருக்கேன் எரும மாடு மேல மழை பெஞ்சது மாதிரி தான் எந்த மாற்றமும் இல்ல சாரி சார்என்று மன்னிப்பு வேண்ட 

பரவாயில்ல சார் டெக்னாலஜி எந்த அளவுக்கு வளந்துருக்கோ அந்த அளவுக்கு அதுல ஆபத்தும் இருக்கு! முதல பசங்களுக்கு தையிரியத்தை கத்து கொடுங்க எந்த சுச்சுவேஷன எப்டி ஹண்டில் பண்ணனும் அதுல இருந்து எப்டி மீண்டு வரணும்னு சொல்லி கொடுங்க, அட் சேம் டைம் ஒழுக்கத்தையும் கத்து கொடுங்க பொண்ணுங்களை மதிக்க கத்து கொடுங்க! அப்றம் பாடம் நடத்துங்க இது நா உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லஎன்றவன்சரிங்க சார் நாங்க கிளம்புறோம் இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேணாம்என்று கூற

ஓகே மிஸ்டர் …” என்று பெயர் தெரியாமல் தயங்கினார் சிவசுப்ரமணியம்

விஷ்ணுஎன்றான் புன்னகை மிளிர

ம் ஓகே விஷ்ணு யாருக்கும் தெரியாது எப்பவும் போல காலேஜுக்கு வர சொல்லுங்க வீட்டுல கூட சொல்ல வேணாம் ரொம்ப பயந்து போயிருவாங்கஎன்று கூற

ஓகே சார்என்றவன்வா சஞ்சு போகலாம்என்று அழைத்து கொண்டு செல்ல

அமைதியாக நின்றுகொண்டிருந்தவனை கண்டு ஆத்திரம் மேலோங்கியது பிரின்சிக்குநீயெல்லாம்…”என்று பல்லை கடித்தவர்போ வெளிய உன்ன பாக்க பாக்க கோபமா வருது உன்னோட பியூச்சர் ஸ்பாயில் ஆக கூடாதுன்னு தான் இத்தனை நாள் உன்ன வான் பண்ணி விட்டேன் ஆனா இன்னைக்கு நீ பண்ண காரியத்துக்கு..” என்று கோபத்தை அடக்கியவர்ரூமை விட்டு வெளிய போஎன்று கத்த 

போயா சொட்டஎன்று மரியாதை இன்றி உரைத்து விட்டு திமிர்கலந்த நடையில் காலரை தூக்கி விட்டு சென்றவனை பார்த்து கொண்டிருந்தவர் 

நீயெல்லாம் எங்க உருப்பட போறஎன்று முணுமுணுத்து கொண்டே வளாகத்தை பார்வையிட சென்றார்

கார்த்திக் வெளியே வர 

சார் இந்த பையன் தான்என்று விஷ்ணு கைகாட்ட

அவன் அருகில் வந்த காக்கி சட்டைகாரன் சட்டென கையை இறுக பற்றியதை கண்டு திடுக்கிட்டவன்என்ன சார் யார் வேணும்என்று பயத்துடன் கேட்க

உங்க மேல கம்பலைன் வந்துருக்கு உங்கள அரஸ்ட் பண்றோம்என்றான் காக்கி உடையில் இருந்தவன்

சார் நா என்ன தப்பு பண்ணனேன் யார் கம்பலைன் பண்ணாங்கஎன்று கோபத்தை அடக்கி கொண்டு கேட்க

ப்ச் உனக்கு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியமில்ல பொண்ணுகிட்ட தப்பா நடந்ததுகிட்டதுக்காக ஈவ்டீஸிங் கேஸ்ல அரஸ்ட் பண்றோம், நீயா வந்து ஏறினா நல்லது அடம்பிடிச்ச அடிச்சி இழுத்துட்டு போக வேண்டியது வரும்என்று மிரட்ட 

காக்கி சட்டைகாரன் அருகில் வந்த விஷ்ணுஎன்ன சார் பேசிட்டு இருக்கீங்க இழுத்துட்டு போங்க இப்டி எத்தனை பேரை என்ன பண்ணிருக்கானோஎன்று அடக்கப்பட்ட கோபத்துடன் கூற

கொஞ்சம் அமைதியா இருங்க விஷ்ணுஎன்று அடக்கியவன் கார்த்திக்கை பார்க்க

அவனுக்கு புரிந்து போனது விஷ்ணுவின் வேலை தான் என்று நயமாக பேசி ஏமாற்றி விட்டானே பாவி என்ற ஆத்திரம் எழ பல்லை கடித்தவன்சார் நீங்க தானே சொன்னிங்க பிரின்சிபில் கிட்ட வந்தா பேசி முடிச்சிறலாம்னு இப்போ போலீஸ கூட்டிட்டு வந்துருக்கீங்கஎன்று ஏமாற்றப்பட்ட கோபத்துடன் கேட்க

இன்னும் கொஞ்ச நாள்ல போலீஸ் ஆக போறவன், உன்ன மாதிரி தப்பு பண்ணவங்க எல்லாம் ஈஸியா மன்னிப்பு கேட்டுட்டு போனா அப்றம் அவங்க பண்ண தப்புக்கு என்ன பனிஸ்மெண்ட்! யார் கொடுக்குறது?” என்றுவிட்டுசார் இழுத்துட்டு போங்கஎன்று அலட்சியமாய் கூற

காலரை பற்றி இழுத்து கொண்டு சென்றான் காவல் ஆய்வாளர் சிவராஜ் விஷ்ணுவை முறைத்து கொண்டே ஜீப்பில் ஏறிய கார்த்திக்நேரம் வரும் போது பாத்துக்கிறேன் நீ இதுக்கு கண்டிப்பா ஃபீல் பண்ணுவ விஷ்ணுஎன்று மனதில் கருவி கொண்டு வன்மத்துடன் சஞ்சளாவையும் விஷ்ணுவையும் பார்த்தான்

ஓகே சார் நா கிளம்புறேன்என்ற விஷ்ணு சிவராஜிடம் ஓரிரு விஷயங்களை பேசிவிட்டு சஞ்சளாவை அழைத்து கொண்டு கிளம்பி சென்றான்

அசையாமல் நின்று கொண்டிருந்தவனை உலுக்கியவர்கள்என்னடா என்னாச்சு கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம அப்டி என்ன யோசனை பண்ணிட்டு இருக்கஎன்று இருவரும் ஒன்றுபோல கேட்கவும் தான் நடபுலக்கிற்கு வந்தவன் இருவரையும் பார்த்தான்

தெரியும் ஒரு ஈவ்டீஸிங் கேஸ்ல பிடிச்சி கொடுத்தேன்என்று நடந்ததை கூற

இந்த மாதிரியெல்லாம் பண்ணிருக்கானா..?” என்ற அதிசயித்த விஜயன்இவன் மேல ஒரு கண் இருக்கட்டும் அதுக்கு வேண்டிய ஏற்பாட நீ பண்ணிருஎன்று கூற 

சரி அத நா பாத்துகிறேன் உன்னோட விஷயம் என்னாச்சுன்னு கேட்டயா?” என்று கேட்டான் விஷ்ணு

என்ன விஷயம்?” 

அதாண்டா உன்ன சஸ்பெண்ட் பண்ணாங்களே அது எந்த லெவல்ல இருக்குன்னு கேட்டேன்

ப்ச் அதுவா…” என்று சுவராஸ்யமில்லாமல் இழுத்தவன்என்ன எந்த ஊருக்கு ட்ரான்ஸ்பர் பண்ணலாம்னு பேசிட்டு இருக்காங்க பாப்போம் கமிஷ்னர்கிட்ட பேசிருக்கேன் அவரும் முடிஞ்ச அளவு பேசி பாக்குறேன்னு சொல்லிருக்காரு பெரிய இடத்துல கை வச்சதுனால அவரும் கொஞ்சம் யோசிக்கிறாருஎன்று விஜயன் கூற

சரிடா நீங்க ரெஸ்ட் எடுங்க நா கொஞ்ச நேரம் வெளிய போய்ட்டு வறேன்என்று விஷ்ணு சென்றுவிட இருவரும் சற்று அயர்ந்தனர் 

காலையில் சென்ற பெண்கள் கடைத்தெருவையே அலசி பார்த்துவிட்டு மதியம் உணவு வேளையில் இல்லம் வந்தனர் வைதேகி இரவு வருவதாக கூறி சாவித்ரியை அழைத்து கொண்டு தன் இல்லம் சென்றுவிட சஞ்சளா வைஷாலி இருவரும் அறைக்குள் நுழைந்த மாத்திரத்தில் அலைந்து திரிந்த களைப்பில் படுத்ததும் உறங்கி போயினர் 

தமயந்தியின் அறைக்கு வந்த அன்னம் அவள் முகம் வாடி போயிருப்பதை கண்டுசரி விடு இப்போ எதுக்கு முகத்தை தூக்கி வச்சுக்கிட்டு என்னவோ பறிபோன மாதிரி ஒக்காந்துட்டு இருக்க ரெண்டு வருஷம் தானே ஆகுது பாத்துக்கலாம் வயசா ஆகிருச்சுஎன்று தேற்ற

இல்ல அத்தை ரொம்ப ஆசையா எதிர்பார்போட இருந்தேன் இப்டி ஆகிருச்சே அத்தைஎன்று கண்களை கசக்கினாள்

Advertisement